வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, December 18, 2010

மனு சாகவில்லை! சோ ராமசாமி உருவங்களில் இருக்கிறது....

மனுதர்மத்தை மண்டைக்குமேல் தூக்கி வைத்து ஆராதனை செய்ப-வர்கள் இன்றைக்கும் இருக்கிறார்களா? என்று கேட்கலாம்.

இருக்கிறார்கள், நிச்சயமாக இதோ இருக்கிறார்கள் _ சோ ராமசாமி உருவங்களில் இருக்கிறார்கள்.

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பாக மனு போன்ற இப்படிப்பட்ட ஆழ்ந்த சிந்தனை இங்கே இருக்கிறது என்பதைக் கண்டு மேல் நாட்டு அறிஞர் கள்கூட வியந்து பார்க்கிறபோது, நாம்தான் மனுஸ்மிருதியை இகழ்ந்து பேசுவது பெருமை என்று நினைக் கிறோம். மனுஸ்மிருதியை இகழ முனைபவர்கள், அப்படிச் செய்வதற்கு முன்னால், அதில் என்ன கூறப்பட்டி ருக்கிறது என்பதைத் தெரிந்து கொண் டால் நல்லது!

(துக்ளக் 24.11.2010 பக்கம் 13) என்று எழுதுகிறார் திருவாளர் சோ ராமசாமி.

மேல்நாட்டு அறிஞர்கள் எல்லாம் கூடிக் கலந்து பேசி மனுவின் உத்தமத் தனம்பற்றி உச்சி மோந்து விட்டார் களாம்.

அப்படியானால் நாமும் சில வெளிநாட்டு அறிஞர்களை அறிமுகப் படுத்த வேண்டாமா? அதுவும் அந்த வெளிநாட்டு அறிஞர்கள் மனுதர்ம சாஸ்திரம்பற்றி என்ன கூறினார்கள் என்பதை சோ ராமசாமியின் அபிமானத்துக்குரிய இந்து ஏடே (8.11.1992) எடுத்துக் கூறியிருக்கும் பொழுது, அதனை எடுத்துக்காட்டி னால்தானே சோவுக்குக் குளிர் ஊட்டியது போல் இருக்கும் அது இதோ:

மனு, தன்னுடைய சட்டப் புத்தகத் தில், ஒரு சிலருக்காக -_ அவர்கள் ஆதிக்கம் செலுத்தவும், புனிதமானவர்-களாகக் கருதப்படவும் -_ சில நியதிகளை உருவாக்கியுள்ளார். உயர்ந்த வாழ்க்கை வாழவும் அவர்களுக்குச் சில கொள்கைகளை வகுத்திருக்கிறார். இது நிறைவேற வேண்டுமென்றால், சட்டத்தின் பிரிவுகள் மறைமுகக் கட்டளைகளாகத் தானிருக்க முடியும்; ஒவ்வொரு புனிதமான பொய்யின் நோக்கமும் இதுதான்...   - பிரடெரிக் நியட்சே

மனு, தன்னுடைய நூலில் இந்தி-யாவின் சமுதாய, ஒழுக்க நெறிகளைப் புனிதமான முறையில் தொகுத்து, மனித வர்க்கத்தின் மேம்பாட்டிற்காகவே, தந்திருப்பதாகக் கூறுகிறார். ஆனால் உண்மையில், இந்த மனு தர்ம நூல் ஜாதிவெறியும், ஆண் பெண் உறவு பற்றிய தவறான கருத்துகளையும் புகுத்தவே எழுதப்பட்டுள்ளது. பிற ஜாதியினருக்குக் கொடுமையான தண்டனைகளையும், குரூரமான சித்திரவதைகளையும், சமுதாய மக்களை ஒன்று சேரவிடாமல், சிலருக்கு ஏகபோக உரிமைகளையும் பலருக்கு அடிமை-களின் வாழ்க்கையையும் தந்து, எழுதி-யுள்ளார். மற்ற ஜாதிக்காரர்களை இழிவுபடுத்தியும், கண்டித்தும் பல பகுதிகளில் குறிப்பிடுகிறார். இந்த நூலை எழுத தன் சொந்த முடிவு-களையே எடுத்துக் கொண்டுள்ளார். இந்த முடிவுகள், உலகம் படைக்கப்பட்ட போதே கடவுள்களால் தரப்பட்ட, காலத்தால் அழியாத கட்டளைகள் என்கிறார். மனுஸ்மிருதி என்ற இந்த நூல், முதன்முதலாக மனிதர்களுக்குப் புரியும் மொழியான சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டதாகவும் கூறுகிறார்.

1794இல் ஆங்கில மொழியிலும், 1797-இல் ஜெர்மன் மொழியிலும், 1833-இல் பிரெஞ்சு மொழியிலும், 1859இல் போர்ச்சுக்கீசிய மொழியிலும் இந்த மனுதர்ம சாஸ்திரம் மொழிபெயர்க்கப்-பட்டது.

1886இல் ஜார்ஜ் பக்ளர் என்பவர் மனுவின் சட்டங்கள் என்ற தலைப்பில் (ஆக்ஸ்போர்டு பிரஸ்) இந்த நூலை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். மீண்டும் 1988இல் இந்த நூல் மோதி-லால் பனார்சிதாஸ் என்பவரால் பதிப்பிக்கப்பட்டது. மனுஸ்மிருதி முதலில் பிரம்மாவிடமிருந்து ஆரம்-பித்து அதன் சாராம்சங்கள் மனுவிடம் கூறப்பட்டதாகவும், அதை அறிந்து-கொண்ட மனு, அவற்றை முனிவர்-களிடம் கூறியதாகவும் எழுதப்பட்டுள்-ளது. மனுவில் மூளையிலிருந்து பிறந்த பத்து மக்களில் ஒருவரான பிருகு என்பவர் -_ உலக உற்பத்தி எவ்வாறு நடைபெற்றது என்பதைப்பற்றி மனுவின் விளக்கத்தை விரிவாகக் கூறுகிறார். பக்ளர் கூறுவதைப் போல, மனு முதலில் மன்வந்தராஸ் (ஏழு மனுமுனிவர்களின் காலம்) என்பது பற்றியும், யுகங்கள் (உலகத்தின் நான்கு காலங்கள் _ கிருத, திரேதா, துவாபர, கலி)யாவை என்பதைப்பற்றியும் கூறுகிறார். மேலும், யுகங்களின் மற்ற பிரிவுகளைப் பற்றியும், அடுத்தபடியாக முக்கியமான நான்கு ஜாதிகளைப்-பற்றியும் (வர்ணங்கள்), அதற்குப்பிறகு பார்ப்பனர்களின் மகாத்மியத்தைப்-பற்றியும் மனுவின் புனித சட்டமான மனுஸ்மிருதியைப்பற்றியும், தனக்கு நேரடியாகக் கூறப்பட்டதை அப்ப-டியே கூறுவதாகவும் ஒப்புவித்துவிட்டு நூலை முடிக்கிறார்.

1991இ-ல், வெண்பிடோனிகர், பிரியன் கே.ஸ்மித் ஆகியோரால் பதிப்பிக்கப்-பட்ட மொழிபெயர்ப்பில் 2685 செய்யுட்-ப-டல்கள் தரப்பட்டுள்ளன. பல ஜாதி மக்களுக்கு இடப்பட்டுள்ள கட்டளைகளைப்பற்றியும், வாழ்நாள் முழுவதும் அவர்கள் பின்பற்ற வேண்டிய கடமைகளைப்பற்றியும் கூறப்பட்டுள்ளன. ஓர்அரசன் எப்படி ஆட்சியை நடத்த வேண்டும் என்பதைப் பற்றியும், பல ஜாதிகளைச் சேர்ந்த மக்களிடையே உள்ள ஆண்களின் _ பெண்களின் உறவு முறைகளைப்-பற்றியும், இன்னும் அழுத்தமாகக் கணவன் _ மனைவி உறவைப்பற்றியும், பிறப்பு, மரணம், கர்மா, சடங்குகள், மறுபிறவி மற்றும் இறுதி வாழ்க்கைபற்றியும் கூறியுள்ள இந்த நூலை உலக வாழ்க்கையைப்பற்றியும், உலகத்தில் பல ஜாதியினர் எவ்வாறு வாழ வேண்டும் என்பதுபற்றியும் பல நெறிமுறைகளைத் தருவதாக மொழிபெயர்ப்பாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இவர்கள், தங்களுடைய மேற்கத்திய கண்ணோட்டத்தில், இதற்கு இணை-யான நூல் வேறெதுவும் இல்லையென-வும், பல நூற்றாண்டுகளாக இந்நூல் அதிகார பூர்வமான அரச கட்டளை என மதிக்கப்பட்டு வந்ததாகவும், முன்னுரையில் எழுதியுள்ளனர். மனுஸ்-மிருதி மற்ற மத நூல்களைப் போலவே, பிரெடரிக் நியட்சேவின் கண்ணோட்-டத்தில் படிக்கப்பட வேண்டும்.

ஒரு விஷயம் தெளிவாகிறது; பக்ளர் இந்த நூற்றாண்டிற்கு முன்பே குறிப்பிட்டுள்ளார்: படிப்பதற்கு ஒரு பள்ளிக்கூட புத்தகத்தைப் போலிருக்-கிறது; ஆனால், ஆரியர்களுக்கு ஏற்ற-வாறு எழுதப்பட்டுள்ளது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை

மேலும் குறிப்பிடுகிறார்: கற்பனை-யான பாரம்பர்யக் கதைகளையும், ஜோடிக்கப்பட்ட கட்டுக் கதைகளையும் தன் கருத்துக்கு ஆதரவாக சில விவாதங்களையும் முன் வைத்திருக்கிறார், இருப்பினும், அவைகளுக்கெல்லாம் ஆதாரமோ, அதிகாரபூர்வமான பதிவேடுகளோ எதுவுமில்லாமையால், வாதங்கள் அனைத்தும் பலவீனமாக உள்ளன. இந்துக்களின் மிதக்கும் நெறிமுறைகளில் மனு பல வடிவங்களில் தோன்றுகிறார். பிரம்மாவாக, அவரு-டைய மறுபிறப்பாக, மாமுனிவராக, முதல் அரசனாக, மன்னர்களின் முதல் மன்னனாக, மனித வர்க்கத்தின் முதல் தந்தையாக, அதன் சமுதாய, ஒழுக்க போதனைகளைக் கற்பித்தவராகக், காட்சியளிக்கிறார்.

வெண்டி, ஸ்மித் ஆகியோர் குறிப்பிடுவதைப்போல இந்தியாவின் பூர்வீக கால நூல்களில் நாங்கள் கண்-டதைப் போலவே இந்த மனுஸ்-மிருதியும் முனிவர்களால் (பார்ப்-பனர்கள்) இயற்றப்பட்டது என்பதை மட்டுமின்றி, இந்த மனுதர்ம சாஸ்திரம் அந்த முனிவர்களின் (பார்ப்பனர்கள்) சுயநலத்திற்காகவே எழுதப்பட்டது என்பதையும் விளக்கமுற அறிந்தோம். இந்தியாவின் பூர்வீக மக்களின் வாழ்க்கை நெறிகளுக்கும் கல்வியறி-விற்கும் தாங்களே முன்னோடிகள் என்பதைப் போலவும் சித்திரித்து, உலகத்துக்கே புத்திமதி கூறும் அள-விற்குத் தங்களை உயர்த்திக் காட்டி இந்த முனிவர்கள் (பார்ப்பனர்கள்) இந்த மனுதர்ம சாத்திரத்தை எழுதியுள்-ளனர். உண்மையான மனிதன் எப்படியிருக்க வேண்டும்? என்பதைப் பற்றியும் அதற்கு இந்த முனிவர்களே வழிகாட்டிகளாக விளங்கினார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

தகவல்: இந்து 8.11.1992 பி. இராதாகிருஷ்ணன்

மேனாட்டு அறிஞர்களே வியந்து பாராட்டி விட்டார்களாம். மேலே எடுத்துக்காட்டப்பட்ட அறிஞர்கள் பொட்டில் அறைவதுபோல ஆய்வு செய்து குவித்திருக்கிறார்களே -_ இதற்கு என்ன பதில்? எடுத்துக் கூறத் தயார்-தானா? வழக்கம் போல அய்ம்பொறி-களையும் மூடிக் கொண்டு, அடுத்த பிரச்சினைக்குத் தாவும் அனுமார் வேலைதானா?

மனுநீதி பிராமணர்களுக்குக் கூடுதல் சலுகை அளிக்கவில்லை என்பதற்காக முடியைப் பிளந்து சோ திணறுகிற திணறல் இருக்கிறதே _ நல்ல நகைச்-சுவைதான்! இதோ சோ விவாதங்களை படியுங்கள் (துக்ளக் 1.12.2010)

கேள்வி: மனு ஸ்ம்ருதியின் சில அம்சங்களைப்பற்றிச் சொல்வதற்கு ஆரம்பமாக, ஒரு விஷயத்தை விளக்குங்கள். மனு ஸ்ம்ருதியில் ஒரே குற்றத்திற்கு, வெவ்வேறு வர்ணத்த-வருக்கு வெவ்வேறு தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறதா, இல்லையா?

சோ: உண்மைதான். மனு ஸ்ம்ருதியில் -_ ஒரு குற்றம் _ ஒரு திருட்டு நடந்தால், குற்றம் செய்த-வனின் வர்ணத்தைப் பொறுத்து அவனுக்குத் தண்டனை விதிக்கப்பட்-டிருக்கிறது.

கேள்வி: அதாவது _ பிராமணனுக்-குச் சலுகை; ஒரு குற்றத்தை ஒரு பிராமணன் செய்தால் அவனுக்குக் குறைவான தண்டனை; அல்லது தண்டனையே கிடையாது. மற்ற வர்ணத்தவர் செய்தால் கடும் தண்டனை! இது என்ன நியாயம்?

சோ: நீங்கள் அவசரப்படுகிறீர்கள். வர்ணத்தைப் பொறுத்து தண்டனை மாறுபடுகிறது என்று நான் சொன்னேனே தவிர, பிராமணனுக்குக் குறைவான தண்டனை என்று சொல்லவில்லை.

கேள்வி: என்ன சொல்கிறீர்கள்? பிராமணனுக்கும் மற்றவர்களைப் போலவே தண்டனை விதிக்கப்-பட்டிருக்கிறதா?

சோ: இல்லை. மற்றவர்களைவிட, பிராமணனுக்கு -_ ஒரே குற்றத்திற்கு அதிக தண்டனை விதிக்கப்பட்டிருக்-கிறது.

அஷ்டாபத்யம் து சூத்ரஸ்ய
ஸ்தேயே பவதி கில்பிஷம்/
ஷோடசைவ து வைச்யஸ்ய
த்வாத்ரிம்சத் க்ஷத்ரியஸ்ய ச//
ப்ராம்மணஸ்ய சது: ஷஷ்டி:
பூர்ணம் வாபி சதம் பவேத்/
த்விகுணாவா சது: ஷஷ்டி:
தத்தோஷ குணவித்தி ஸ://

என்று மனு ஸ்ம்ருதி கூறுகிறது. இதன் அர்த்தம்.

குற்றம் புரிந்த சூத்ரனுக்கு (அவன் விதி முறையை அறிந்தவனாயின்), வழக்கத்தைவிட நான்கு மடங்கு அதிக தண்டனை வழங்கப்பட வேண்டும். குற்றம் புரிந்தவன் வைச்யனாக இருந்தால், பதினாறு மடங்கு தண்டனையும்; க்ஷத்ரியனாக இருந்தால், முப்பத்திரண்டு மடங்கு தண்டனையும் விதிக்கப்பட வேண் டும். குற்றம் புரிந்தவன் பிராமணனாக இருந்தால் -_ அவன் குற்றத்தின் தன்மையை உணர்கிற நிலையில் உள்ளத்தால் _ அவனுக்கு அறுபத்தி நான்கு மடங்கு அல்லது நூறு மடங்கு அல்லது நூற்றி இருபத்-தெட்டு மடங்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும்.

குற்றத்தின் தன்மையை உணர்ந்தவனாகவும், அது செய்யத் தகாத காரியம் என்பதை முழுமை-யாக அறிந்தவனாகவும், பிராமணன் இருப்பான் என்ற எண்ணத்தின் அடிப்படையில், அவனுக்கு மற்றவர்-களை விடப் பல மடங்கு அதிகத் தண் டனையை மனு ஸ்ம்ருதி விதிக்-கிறது.

உண்மை இப்படியிருக்க, தண்-டனை விஷயத்தில், பிராமணர்-களுக்கு மனு ஸ்ம்ருதி சலுகைகள் காட்டுவதாகச் சொல்வது தவறு அல்லவா? ஆனால், ஒரு விஷயம். பிராமணனுக்கு ஒரு தண்டனையில் மட்டும் வித்தியாசம் காட்டப்-பட்டிருக்கிறது. பிராமணனுக்கு மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. மரண தண்டனைக்குரிய குற்றத்தை ஒரு பிராமணன் செய்தால், அவனை நாடு கடத்த வேண்டும் என்று மனு ஸ்ம்ருதி கூறுகிறது.

பிராமணனுக்கு மரண தண்டனை-யிலிருந்து விலக்கு அளிக்கப்பட்-டதற்கு, பிரம்மஹத்தி _ அதாவது பிராமணனைக் கொலை செய்வது _ கொடிய பாவம் என்ற நம்பிக்கை காரணமாக இருந்திருக்கலாம்.

கேள்வி: அப்படி என்றால், மற்ற தண்டனைகளில் பிராமணனுக்குக் கூடுதல் தண்டனை என்றாலும் _ மரண தண்டனை என்று வருகிற-போது, அவனுக்கு ஒரு சலுகை இருக்கிறதே?

சோ: உண்மைதான். ஆனால், யாருக்கு இந்தச் சலுகை? பிராம ணனுக்கு. பிராமணன் என்றால் _ பிராமண குலத்தில் பிறந்த அனைவரும் அல்ல. இப்படி நான் சொல்வதற்குக் காரணமும் மனு ஸ்ம்ருதிதான்.

பிராமணனுக்குப் பல கட்டுப்-பாடுகளை மனு ஸ்ம்ருதி விதிக்கிறது. அவற்றிலிருந்து தவறுகிறவனை பிராமணனாக மனு ஸ்ம்ருதி ஏற்க-வில்லை.

இப்போது, அரசியல் சட்டம் இந்தியக் குடிமகனுக்கு சில உரிமை-களை அளிக்கிறது. ஆனால், யார் இந்தியக் குடிமகன்? அதையும் சட்டமே விளக்குகிறது. இந்தியாவில் குடியிருப்பதால், ஒருவர், நானும் குடிமகன்தான் என்று கூறிக் கொண்டு, அந்த உரிமைகளைக் கோர முடியாது.

அதேபோல், பிராமணன் யார் என்பதை மனு ஸ்ம்ருதி விளக்குகிறது. அந்த இலக்கணப்படி வாழாதவன், நானும் பிராமணன்தான் என்று கூறிக் கொண்டு, மரண தண்டனை-யிலிருந்து விலக்குப் பெற முடியாது. (துக்ளக் 1.12.2010)

இதில் நெளிந்தாடும் முரண்பாடு-களைக் கவனிக்க வேண்டும். உண்மை-தான். மனுஸ்ம்ருதியில் ஒரு குற்றம் _ ஒரு திருட்டு நடந்தால், குற்றம் செய்தவனின் வர்ணத்தைப் பொறுத்து அவனுக்குத் தண்டனை விதிக்கப்-பட்டிருக்கிறது என்று ஒப்புக் கொண்டு விட்டு அதற்கு முரணாக மனு நீதியில் கொலை செய்யும்
பிராமணனுக்குத்தான் அதிகத் தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதாகக் கதையைத் தூக்கிக் கொண்டு ஆடுகிறார். ஒன்று, மனு நீதி முரண்பாட்டின் மொத்தக் கூடை என்று ஒப்புக் கொள்ள வேண்டும்; இல்லையெனின், இவர் புரிந்து கொள்-வதில் தடுமாறுகிறவர் என்பதையாவது ஏற்றுக் கொள்ள வேண்டும்.

உண்மை இப்படியிருக்க, தண்டனை விஷயத்தில், பிராமணர்களுக்கு மனுஸ்ம்ருதி சலுகைகள் காட்டுவதாகச் சொல்வது தவறு அல்லவா! ஆனால் ஒரு விஷயம், பிராமணனுக்கு ஒரு தண்டனையில் மட்டும் வித்தியாசம் காட்டப்பட்டிருக்கிறது. பிராமணனுக்கு மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. மரண தண்டனைக்குரிய குற்றத்தை ஒரு பிராமணன் செய்தால் அவனை நாடு கடத்த வேண்டும் என்று மனுஸ்ம்ருதி கூறுகிறது.

பிராமணனுக்கு மரண தண்டனை-யிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதற்கு, பிரம்மஹத்தி அதாவது பிராமணனைக் கொலை செய்வது கொடிய பாவம் என்ற நம்பிக்கை காரணமாக இருக்கலாம் என்று நழுவுகிறார் சோ.

பிராமணனுக்கு மரண தண்டனை-யிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதற்குப் பிரம்மஹத்தி _ அதாவது பிராம-ணனைக் கொலை செய்வது கொடிய பாவம் என்ற நம்பிக்கை காரணமாக இருக்கலாம் என்று ஓடித் தப்பிக்கப் பார்க்கிறார்.

அது என்ன நம்பிக்கை? அந்த நம்பிக்கை எப்படி வந்தது? பிரம்ம ஹத்தி தோஷம் என்பது பார்ப் பனர்களின் சாஸ்திரத்திலிருந்து வந்ததுதானே? இந்த இடத்தைத் தம் சாமர்த்தியத்தால் காப்பாற்ற முடியவில்லை என்கிறபோது நம்பிக்கை என்னும் முக்காடுபோட்டு நழுவும் நாணயமற்ற தன்மையைத் தமிழர்கள் கண்டுகொள்ள வேண்டும்.

திருட்டுக் குற்றத்தைச் செய்கிற பிராமணனுக்குச் சூத்திரர்களைவிட அதிக தண்டனை அளிக்கப்படுகிறதே -என்பதைப் பிடித்துக்கொண்டு வெகு காலமாகத் தப்பிக்கப் பார்ப்பது இவரது குணம்.

வெறுக்கத் தக்கதா பிராமணீயம்? எனும் தொடரில் இவர் எழுதியதுண்டு. அதற்குப் பதிலடி கொடுத்து திராவிடர் கழகத் தலைவர் உண்மை இதழில் எழுதி _ பின்னர் வெறுக்கத்தக்கதே பிராமணீயம் எனும் நூலாக வெளி வந்துள்ளது. (அக்டோபர் 2001)

அந்தப் பதிலை மீண்டும் நினைவூட்டுவோம்:

அறிந்து திருட்டுக் குற்றத்தைச் செய்கிற சூத்திரனுக்கு வழக்கமான தண்டனையைவிட எட்டு மடங்கு அதிகமான தண்டனையை விதிக்க வேண்டும்; வைச்யனுக்கு பதினாறு மடங்கு; க்ஷத்திரியனுக்கு முப்பத்-திரண்டு மடங்கு; குற்றத்தின் தன்மையை அறிந்தவன் என்பதால் பிராமணனுக்கு அறுபத்து நான்கு மடங்கு தண்டனை அல்லது நூறு மடங்கு அல்லது நூற்றி இருபத்தெட்டு மடங்கு தண்டனை விதிக்க வேண்டும்.

பிராமணனுக்கு சலுகையை அளிக்கிற மனுநீதிதான் மேற்கண்ட விதிமுறையையும் வற்புறுத்தி இருக்கிறது என்று கூறி மனு தர்ம சாத்திரம் பிராமணர்களுக்குத்தான் அதிக சுமையைக் கொடுத்திருக்கிறது என்று சாதிக்க முயலுகிறார்.

இதில் எவ்வளவு பெரிய சாமர்த்தியம் இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். மனிதர்கள் யார் தவறு செய்தாலும் அதற்குரிய தண்டனையை அளிக்க வேண்டும் என்று கூறுவதுதான் சமதர்ம நோக்கு. இந்து மதம் கூறும் _ மனுதர்மம் வலியுறுத்தும் வர்ண தர்மத்தில்தான் கடுமையான ஏற்ற - _ தாழ்வுகள் உண்டே!

பிராமணர்களை உயர்வாக சமூக அமைப்பில் வைத்திருக்கிற காரணத்-தால்தான் _ மிக உயர்ந்த கவுரவம் அவனுக்குக் கொடுக்கப்பட்டு இருப்பதால்தான் அவன் தவறே செய்யக் கூடாது என்கிற எதிர்-பார்ப்பும் இருக்கிறது; சூத்திரனா, அவன் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்பது _ அவனுக்கு அதிக உரிமை அளிக்கப்பட்டதாகப் பொருளாகுமா? அவனை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என்பது தான் இதற்குப் பொருள்.

பொன்னைப் பூட்டி வைப்ப-தற்கும், துருப்பிடித்த பழைய இரும்பை வாசலில் தூக்கி எறிந்-திருப்பதற்கும் உள்ள வேறுபாடு தான் இதிலும்.

பொன்னுக்கு உரிமை இல்லை _ அது காற்றுப் புகாத பெட்டியில் வைத்துப் பூட்டப்பட்டு விட்டது; இந்த இரும்பை எடுத்துக் கொள்-ளுங்கள், எவ்வளவு காற்றோட்டமாக வெளியில் கிடக்கிறது என்று ஒருவன் சாமர்த்தியமாகப் பேசினால் எதுவோ _ அதுவேதான் சோ சொல்லும் சொல் ஜாலமும்!

இது ஒன்றும் சோவின் மூளையில் உதித்த பாணி இல்லை _ இவருக்கு வழிகாட்டி _ இவர்களின் குருநாதர் காஞ்சி காமகோடிதான்.

அவர் கூறுவதையும் கொஞ்சம் கேட்போமே!

இப்பொழுது ஏற்பட்டிருக்கிறபடி ஒரு பெரிய அபிப்பிராயம் என்ன-வென்றால் சாஸ்த்திரோத்தமான வர்ணாசிரம தர்மத்தில், பிராம-ணனுக்குத்தான் சௌகர்யம் ஜாஸ்தி, வருமானம் ஜாஸ்தி, சிரமம் குறைவு என்கிற எண்ணம், இது சுத்தப் பிசகு.

நம் சாஸ்திரம் பண்ணிக் கொடுத்துள்ள ஏற்பாட்டில், பிராமணன் சரீரத்தில் உழைத்த உழைப்பு, ஒரு குடியானவனின் உழைப்புக்குக் குறைச்சலானதல்ல. இவனுக்கு எத்தனை விரதானுஷ்-டானங்கள், உபவாசம் என்று எத்தனை நாள் வயிற்றைக் காயக் காயப் போட்டாக வேண்டும்? எத்தனை ஸ்நானம்? இந்த சிரமங்கள் இதர ஜாதியாருக்கு இல்லை. ஒரு குடியானவன் விழித்தெழுந்ததும், வயிறு ரொம்ப ஜில்லென்று பழையது சாப்பிடுகிறது மாதிரி செய்ய பிராம்மணனுக்கு ரைட் ஏது?

(காஞ்சி சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதியாரின் தெய் வத்தின் குரல் இரண்டாம் பாகம் பக்கம் 1013-_1014)

வஞ்சப் புகழ்ச்சி என்பார்களே _ அதற்கு எடுத்துக்காட்டுதான் இது.

பார்ப்பனரல்லாதாருக்கு ஜில்-லென்று பழையது சாப்பிடுகிற உரிமை இருக்கிறது _ அது பிராம்-மணர்களுக்குக் கிடையாதாம்!

ஏன் அந்த நிலை? அந்த விரத அனுஷ்டானங்கள் பார்ப்பான் அல்லாதாருக்கு ஏன் மறுக்கப்-பட்டது? அவன் பிறவியில் தாழ்ந்-தவன் _ விபச்சாரி மகன் _ நாலாஞ்-சாதி என்பதால்தானே? இந்த உணர்ச்சியை மறைப்பதற்கு சங்கராச்சாரி பார்ப்பனரிலிருந்து சோ பார்ப்பான்வரை பேசும் _ எழுதும் வஞ்சக வார்த்தைகள்தான் இந்த ஜில் ஜில் பழைய சோறு கதைகள். அறிந்து திருட்டுச் செய்கிற பிராமணனுக்கு நூற்று இருபத்-தெட்டு மடங்கு தண்டனை என்பதெல்லாம் வெறும் பகட்டுச் சொற்கள்தான் _ நடைமுறை சாத்தியம் இல்லாதது-தான். உண்மையான நடைமுறையை இதே மனுதர்மம் வேறு ஒரு இடத்தில் தெளிவுபடுத்தி விட்டது.

பிராமணனுக்குத் தலையை முண்டனஞ் செய்வது கொலைத் தண்டமாகும். மற்ற வருணத்தாருக்குக் கொலைத் தண்டமுண்டு என்கிறது மனுதர்மம் (அத்தியாயம் 8 சுலோகம் 379)

பிராமணன் கொடிய குற்றம் செய்தவன் ஆயினும் கொலை செய்யாமலும், துன்பப்படுத்தாமலும் அவன் பொருளைக் கொடுத்து அய லூருக்கு அனுப்ப வேண்டும். (மனு தர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 380)

இவற்றையெல்லாம் திட்டமிட்டு மறைப்பதில் சோ கெட்டிக்காரராக இருக்கிறார்!

மனுதர்மத்தையும் பார்ப்பன சாத்திரங்களையும், இதிகாசங்-களையும் வேத, உபநிசத்துகளையும் உயர்த்திப் பிடிக்க முயலும் சோ _ கூட்டம் ஒன்றே ஒன்றுக்கு மட்டும் பதில் கூறிவிட்டு, அடுத்த இடத்துக்கு நகரட்டும்!

மனுதர்ம சாத்திரம் எட்டாவது அத்தியாயம் 415 ஆவது சுலோகம்.

யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டு வரப்பட்டவன், பக்தியினால் வேலை செய்கிறவன், தன்னுடைய தேவடி-யாள் மகன், ஒருவனால் கொடுக்கப்-பட்டவன், குல வழியாக தொன்று-தொட்டு வேலை செய்கிறவன், குற்றத்திற்காக வேலை செய்கிறவன் என தொழிலாளிகள் எழு வகைப்-படுவர். சுலோகம் 417 என்ன கூறுகிறது?

பிராமணன் சந்தேகமின்றி மேற்சொன்ன எழுவித தொழி-லாளியான சூத்திரரிடத்தினின்று பொருளை வலிமையாலும் எடுத்துக் கொள்ளலாம். யஜமாநனெடுத்துக் கொள்ளத்தக்க பொருளையுடைய அந்தச் சூத்திரர் தன் பொருளுக்குக் கொஞ்சமும் சொந்தக்காரரல்ல.


மனுர்வையத் கிஞ்சிதவதக்

தக் பேஷஜம் (மனு எதைச் சொன்னாரோ அது மருந்தேயாம்)

இந்த மா மருந்தான மனுவின் வாசகங்களுக்கு மரியாதையாகப் பதில் சொல்லிவிட்டு, அதற்குப் பிறகு எதை வேண்டுமானாலும் கிறுக் கட்டும்!

சூத்திரர்களை ஏழு வகையாக பிரித்து அவர்கள் யார் யார் என்று பட்டியல் போட்டுக் காட்டுகிறதே மனுதர்மம். அதில் கூறப்படும் ஒவ்-வொன்றும் எவ்வளவு இழிவுபடுத்தக் கூடியது _ உச்சகட்டமாக விபசாரி மகன் என்கிற வரை நீண்டு போய் உள்ளதே என்று எழுதினார் தமிழர் தலைவர்.

எவ்வளவு துணிவும், பார்ப்பன ஆணவமும் இருந்தால் இத்தகைய ஒரு மனு தர்மத்தை இந்த 2010 ஆண்டிலும் தூக்கிப் பிடித்துக் காட்ட முயற்சி செய்வார் திருவாளர் சோ?

சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி என்று சுயமரியாதை இயக்கம் சொன்னதுகூட மிகவும் சொற்பமான பரிகாரம்தான் என்று எண்ணத் தோன்றவில்லையா?

ஏற்கெனவே சொல்லப்பட்ட அதே பதில்தான் இப்பொழுதும் -_ ஆனாலும் சோவிடமிருந்துதான் உருப்படியான பதில் இல்லை.

குறிப்பு: மனுநீதி சாஸ்திரத்தைப் படித்து விட்டுப் பேசட்டும் என்கிறார் திருவாளர் சோ. ஆம் படித்து விட்டுத்-தான் பேசுகிறோம். கேட்ட கேள்வி-களுக்குப் பதில் தேவை!

நன்றி  ஞாயிறு மலர், 18-12-2010


2 comments:

ELIYAVAN said...

What you have stated are very few. We need more.

நம்பி said...

//உண்மை இப்படியிருக்க, தண்டனை விஷயத்தில், பிராமணர்களுக்கு மனுஸ்ம்ருதி சலுகைகள் காட்டுவதாகச் சொல்வது தவறு அல்லவா! ஆனால் ஒரு விஷயம், பிராமணனுக்கு ஒரு தண்டனையில் மட்டும் வித்தியாசம் காட்டப்பட்டிருக்கிறது. பிராமணனுக்கு மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. மரண தண்டனைக்குரிய குற்றத்தை ஒரு பிராமணன் செய்தால் அவனை நாடு கடத்த வேண்டும் என்று மனுஸ்ம்ருதி கூறுகிறது.//

அப்ப சங்கர்ராமனை கொலை செய்த ஊத்த சங்கராச்சாரியாருக்கு மரணதண்டனையிலிருந்து விலக்கா...? அதனால தான் வழக்கிலருந்து தப்பிக்க முயலுகிறானா...? இல்லை நாடு கடத்தி விடுவார்களா...? இப்போது இந்திய பீனல் கோர்ட் என்ன செய்யும்...? பிறகு இந்தியன தாத்தா மாதிரி...இவன் இந்தியன் ஊத்தையா மாறி குத்துவ எனக்கு எதிரா பண்ணா பார்ப்பனனாயிருந்தாலும் குத்துவ என்று ஊடகத்திலே எல்லாம் சொல்லுவானோ....?

இந்து மதக்கடவுள் அல்லவா...? அது எது வேணும்னாலும் செய்யும்...? சரி கடவுளுக்கு ஜெயில்ல ஏன் குளிரெடுத்தது...? செத்தை கம்பளிப் போர்வை தரேளா...? நேக்கு பயத்துல வயித்தாலப் போறது...தயிர் சதாம் மட்டும் போதும்...சுத்தமான ஜலம் மட்டும் போதும்...இன்னைக்கு நான் விரதம்....என்று அங்கும் பணிவிடை பண்ண பார்ப்பன கைதியையே வர்டனாக தனக்கு அமர்த்திக்கிச்சே (பத்திரிகை செய்திகளில் வந்தது)...சுண்ணாம்பு கால்வாயில வைச்சு சுட்டாலும் திருந்தாத ஜென்மங்கள்.

பார்ப்பனரல்லாத சாதாரண கைதியை கூட ஒரு புடை புடைக்கும் தமிழக போலிஸ், கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு வந்த ஊத்தாச்சாரியாரை மட்டும் சாமி! சாமி! சரிங்க சாமி! வெறெதுனாச்சும் வேணுங்களா சாமி! என்று சாமரம் வீசியதை...என்ன சொல்ல....

//அறிந்து திருட்டுக் குற்றத்தைச் செய்கிற சூத்திரனுக்கு வழக்கமான தண்டனையைவிட எட்டு மடங்கு அதிகமான தண்டனையை விதிக்க வேண்டும்; வைச்யனுக்கு பதினாறு மடங்கு; க்ஷத்திரியனுக்கு முப்பத்-திரண்டு மடங்கு; குற்றத்தின் தன்மையை அறிந்தவன் என்பதால் பிராமணனுக்கு அறுபத்து நான்கு மடங்கு தண்டனை அல்லது நூறு மடங்கு அல்லது நூற்றி இருபத்தெட்டு மடங்கு தண்டனை விதிக்க வேண்டும்.//

காஞ்சி மச்சேஸ்வர கோயில் கருவறையில் காமலீலை பண்ணி, பெண்களின் வாழ்க்கையோடு விளையாடி...அவர்களை சீரழித்த பார்ப்பன தேவநாதனுக்கு....100 மடங்கு தண்டனையளிக்க பார்ப்பன நிர்வாகம் (சங்கரமடம்) நிர்பந்திக்குமா....? நீதிமன்றத்திடம். சோ இதை வலியுறுத்தி நீதிமன்றத்தில் வாதாடுவரா...?

கடவுள்னா என்ன பண்ண்ணும்... நேரா பார்ப்பனரல்லாத ஜட்ஜ் ஐய்யா கிட்ட போய், ''ஐய்யா நான் குத்தம் பண்ணிட்டேன், பெரிய பாவம் பண்ணிட்டேன்.... என்னை தூக்குல போடுங்க...நான் நல்லவ இல்லை''...என்று தன்னைத் தானே ஒப்படைச்சுக்கணும்..அதை விட்டுட்டு வழக்கிலேயிருந்து எஸ்கேப் ஆக ட்ரை பண்ணக்கூடாது...பண்ணிட்டு தெய்வத்தின் குரல் என்று பார்ப்பனர்களையும் சேர்த்து ஏமாற்ற புத்தகம் போடக்கூடாது. பார்ப்பனர்களும் அதை வைத்து பிறரை ஏமாற்றக் கூடாது. இப்படி எல்லாம் செஞ்சா சாமி கண்ணை குத்துதோ இல்லையோ மனுஷன் மூஞ்சி மேல குத்துவான். ஜோட்டாலேயே அடிப்பான்.

இதெல்லாம் தெரிஞ்சும் ஆதரிப்பான் பார்ப்பனன், ஆனால் மற்றவர்கள் செய்த சிறு குற்றத்தையைம் பெரிது படுத்துவான்....ஊழலைப் பற்றி வாய்கிழிய பேசுவான்...இவன் அப்படியே அரசாங்கத்துக்கு உண்மையாக எல்லா வரியையும் ஒழுங்க கட்டிடற மாதிரி...அரசியலைப்பற்றி பேசுவான்...கொலையே செய்தாலும்...எனக்கு அவர் தான் தெய்வம் என்றும் கூறுவான்...இதை மற்றவர்களும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் வற்புறுத்துவான். பார்ப்பன வாலி வற்புறுத்தல...பார்ப்பன எஸ்.வி.சேகர் பகிரங்கமாக வற்புறுத்தல என்னை பொருத்தவரை அவர் தெய்வம் தான். அப்புறம் என்ன மத்தவங்களை குத்தம் சொல்ல வர்றீங்க...

இந்த மனுதர்மத்தை கையில தூக்கிக்கிறது இதுக்குத்தான். இவ தப்பு செய்வநற்காகத்தான மக்களை ஏமாற்ற இதையெல்லாம் எழுதி வைச்சுகிட்டான். தண்டனையிலிருந்து எனக்கு மட்டும் (பார்ப்பானுக்கு) கடவுள் விலக்கு அளித்திருக்கார். என்று ஊர்ல உள்ள பிறரை, பார்ப்பனரல்லோதாரை ஏமாற்றுவதற்கு தான் இந்த மனுதர்மம். அவர்களுக்கு சாதகமாக சலுகை காட்டுவதற்காகத்தான் இது பார்ப்பனர்களாலேயே வஞ்சகமாக எழுதி வைக்கப்பட்டது. இன்னும் வஞ்சகமாக பார்ப்பன சோவினால் ஆதரவளிக்கப்படுகிறது.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]