வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Tuesday, December 21, 2010

ராகுல் பேசியது நூற்றுக்கு நூறு சரியே!

இந்து தீவிரவாதத்தைப்பற்றி காங்கிரஸ் பொதுச்செயலாளர் இராகுல்காந்தி பேசிவிட்டா ராம். ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்க் கூட்டம் பூமிக்கும் ஆகாயத்துக்குமாகத் தாவிக் குதிக்கிறது. லஷ்கர்-இ- தொய்பாவின் பயங்கரவாதத்தைவிட இந்து தீவிரவாதத்தால்தான் இந்தியாவுக்குப் பேராபத்து என்று வெளிப்படையாகக் கூறியிருக்கிறார் இராகுல் காந்தி.

அவர் அவ்வாறு கூறியது தவறு என்றால், காரணா காரியத்தோடு மறுப்புக் கூற வேண்டியது தானே? அதைவிட்டுவிட்டு ஆகா, எப்படி சொல்ல லாம் அப்படி? என்று ஆத்திரப்பட்டால் அவர் களுக்குப் புத்தி மட்டு; பதில் சொல்ல அவர்களிடம் நியாயமான சரக்கு ஏதுமில்லை என்று இரு கைகளையும் உயரே உயர்த்தி ஒப்புக்கொண்ட தாகத்தான் பொருள்.

இந்துத் தீவிரவாதத்தின் காரணமாகத்தானே 450 ஆண்டு கால வரலாறு படைத்த முசுலிம் மக்களின் வழிபாட்டுத் தலத்தை அயோத்தியில் ஒரு பட்டப் பகலில் இடித்துத் தரைமட்டமாக்கினர் - இல்லை என்று மறுக்க முடியுமா?

குற்றங்கள் என்றால் சாதாரணமா? கொலைக் குற்றம், கொள்ளை அடித்தல், சதி செய்தல், மதக் கலவரத்தை உண்டுபண்ணுதல் உள்ளிட்ட குற்றங் களுக்கு அடிப்படை ஆதாரம் உண்டு என்ற அடிப் படையில்தானே வழக்குப் பதிவு செய்யப்பட் டுள்ளது?

ஆமாம், அயோத்தியில் பாபர் மசூதியை நாங்கள் தான் இடித்தோம் என்று பா.ஜ.க.வின் நாடாளு மன்றக் குழுத் தலைவர் திருமதி சுஷ்மா சுவராஜ் மிகமிக வெளிப்படையாக - பச்சையாகவே மக் களவையில் ஒப்புக்கொண்டாரா - இல்லையா?

இந்தக் குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அற்ப சப்பைகளா? இந்துத்துவா கட்சிகளின் மிகப்பெரிய பெரிய தலைவர்கள் ஆயிற்றே!

எல்.கே. அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, அசோக்சிங்கால், உமாபாரதி, வினய் கட்டியார் போன்ற முன்னணித் தலைவர்கள் ஆயிற்றே!

குஜராத்தில் என்ன நடந்தது? பா.ஜ.க. அரசு இயந்திரத்தை முற்றாகப் பயன்படுத்தி இரண்டா யிரத்துக்கும் மேற்பட்ட முசுலிம் மக்கள் கொன்று குவிக்கப்படவில்லையா? நரேந்திர மோடி தலைமை யில் அமைந்த பா.ஜ.க. ஆட்சி இதற்குப் பொறுப்பு இல்லையா?

உச்சநீதிமன்ற நீதிபதிகள் அந்த நபரை நீரோ மன்னன் என்று அடையாளம் காட்டவில்லையா? அதனைத் தாண்டியா இராகுல் காந்தி கூறி விட்டார்?

குஜராத்தில் நடைபெற்ற மனிதவேட்டையைத் தொடர்ந்து அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ் பேயி என்ன சொன்னார்? எந்த முகத்தை வைத் துக்கொண்டு நான் வெளிநாடு செல்லுவேன்? என்று புலம்பினாரே - அதற்கான விளக்கத்தைத் தானே இராகுல் காந்தி இப்பொழுது கூறியிருக் கிறார்?

கடந்த நாடாளுமன்ற தேர்லின்போது - நேரு குடும்பத்தைச் சேர்ந்த - இன்னொரு வகையில் இராகுல் காந்திக்குத் தம்பியான வருண் காந்தி பொதுக்கூட்டத்தில் பீலிபட்டில் என்ன பேசினார்?

இது எனது கை (தனது கையை உயர்த்தியபடி) காங்கிரஸ் கட்சியின் சின்னமான கை அல்ல. இது தாமரையின் சக்தி. இது தலைகளைத் துண்டிக்கும் ஜெய் ஸ்ரீராம்! யாராவது இந்துக்களை நோக்கி விரலை நீட்டினால், யாராவது இந்துக்கள் பலகீன மானவர்கள் என்று நினைத்தால், கீதையில் சொன்னபடி அவர்கள் தலையை நான் வெட்டுவேன் என்று பேசினாரே (17.3.2009) இந்தப் பேச்சுக்கு என்ன தலைப்பு?

விசுவ இந்து பரிசத் என்ற இந்துத் தீவிரவாத அமைப்பு திரிசூலங்களை பொதுக்கூட்டத்தில் மக்களுக்கு வழங்கி, ஒரு சூலம் கிறித்தவர் களையும், இன்னொரு சூலத்தின் முனை முசுலிம் களையும், மூன்றாவது சூலம் மதச் சார்பின்மையைப் பேசும் இந்துக்களைக் குத்திக் குடலைக் கிழிக்கும் என்று மிக வெளிப்படையாகப் பேசுகிறார்களே - இது இந்துத் தீவிரத்தின் வெறிபிடித்த போக்கு அல்லவா!

இராகுல் பேசியது நூற்றுக்கு நூறு சரியே!

இராகுல் பேச்சுக்குக் காரணமான இந்துத்துவா வெறியர்களைச் சட்டத்தின் முன்னிறுத்தி, உரிய தண்டனையை அளிக்காவிட்டால் நாடு மதவெறி யின் கொடுங்காடாக மாறிவிடும் - எச்சரிக்கை!
---- விடுதலை தலையங்கம் (21-12-2010)

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]