நன்றி விடுதலை,18-12-2010
Saturday, December 18, 2010
பேராசைக்காரனடா பார்ப்பான் என்று பார்ப்பன பாரதியே பொறுக்க முடியாமல்தானே பாடினார்?
2ஜி அலைக்கற்றை தொடர்பாக விசாரணை தங்கு
தடையற்ற முறையில் தமிழ்நாட்டில் நடைபெற தி.மு.க. ஆட்சியை அகற்றி,
ஆளுநரிடம் ஒப்படைக்கவேண்டும் என்று கூறும் பூணூல் கழுகுகளை எச்சரித்து
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
2ஜி (ஸ்பெக்ட்ரம்) அலைக் கற்றைகள் பிரச்சினையை உச்சநீதிமன்றம்
- இதற்குமுன் எப்போதும் இல்லாத முன் மாதிரி - இல்லா முறையில், அதுவே
வழக்கினைக் கண் காணிக்கும் அமைப்பாகத் தன்னை மாற்றிக்கொண்டு (Monitering
the CBI to investigate the case) ஆணைகளை - உத்தரவிடுகின்றது! அதன்
ஆணைப்படி,
ஐ (1) 2001-லிருந்தே - அதாவது வாஜ்பேயி அவர்கள் பிரதமராக இருந்த பா.ஜ.க. ஆட்சிக்கால முதலே விசாரணை தொடங்க வேண்டும்.
(2) பிப்ரவரி 10-க்குள் விசாரணை - ஆய்வை முடித்து அறிக்கை தரவேண்டும்.
(3) ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு
சம்பந்தமாக வருமான வரித்துறையினர் தங்களது புலனாய்வு அறிக்கையை, மத்திய
உள்துறை அமைச்சகத்துக்கு வழங்கவேண்டும். அவர்கள் அதனை சி.பி.அய்.யிடம்
அளிக்கவேண்டும் என்றெல்லாம் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு
வலியுறுத்தியுள்ளது.
பல்வேறு விசாரணைகள்
ஐஐ இஃதன்றி, ஓய்வு பெற்ற
உச்சநீதிமன்ற நீதிபதி ஜஸ்டீஸ் சிவராஜ் பாட்டீல் தனி நபர் விசாரணைக் கமிஷன்
அமைக்கப்பட்டு, 2001 முதலே இப்பிரச்சினையை ஆய்வு செய்து 4 வாரங்களில் அதன்
விசாரணை அறிக்கையை மத்திய அரசுக்குத் தாக்கல் செய்ய ஏற்பாடாகி, அதன் பணி
தொடங்கிவிட்டது.
ஐஐஐ மக்களவையின் நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு (PAC) எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி தலைமையில் தனது விசாரணையைத் தொடங்கி நடத்தி வருகிறது.
- இவ்வளவுக்கும் பிறகும்கூட பா.ஜ.க.
மற்றும் இடதுசாரிகள், அ.தி.மு.க. போன்ற எதிர்க்கட்சிகள் ஜே.பி.சி. (J.P.C)
தான் விசாரிக்கவேண்டும் என்ற கிளிப்பிள்ளை பாடத்தையே திரும்பத் திரும்பக்
கூறி நாடாளுமன்றத்தை 22 நாள்கள் முடக்கி - நடத்தவிடாமல் செய்து, மக்கள்
வரிப் பணத்தை சுமார் 146 கோடி ரூபாய் கள் நட்டமேற்படுத்தி விட்டனர்.
ஸ்பெக்ட்ரம் தொகை போல வெறும் கற்பனைத் தொகை அல்ல இது. நடை முறையில் ஏற்பட்ட நட்டம்; காலமும், பணமும், பொது ஒழுக் கமும் விரயம் ஆக்கப்பட்ட வேதனைக் காட்சிகளாகும்!
ஜே.பி.சி.யில் உச்சநீதிமன்றத்தைவிட அதிகமாக சாதித்துவிட முடியுமா?
ஏன் இந்தப் பிடிவாதம் தெரியுமா?
பின் ஏன் இந்தப் பிடிவாதம் என்றால்,
தமிழ்நாடு, மேற்கு வங்காளம், அசாம், திரிபுரா, கேரளம் போன்ற மாநிலங்களில்
அடுத்த சில மாதங்களுக்குள் சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் வரவிருக்கின்றன.
அதற்காகவே, இந்தத் திடீர் ஆவேஷம்; தி.மு.க.வை எப்படியும் ஆட்சி பீடம் ஏறவிடக்கூடாது என்பதில் மும்முரமாக கோயபெல்ஸ் பிரச்சாரம் செய்துவரும் வாரம் இருமுறை வெளிவரும் பார்ப்பன ஏடு ஒன்றில்,
பிணந்தேடி அலையும் பூணூல் கழுகுகள் தங்களது இனந்தேடி ஒரு பேராசைத்
திட்டத்தை வெளியிட்டு தங்களை பச்சையாக அடையாளம் காட்டிக் கொண்டுள்ளன!
தமிழர்கள் - இன உணர்வாளர்கள்
மட்டுமல்ல, பொது நிலையாளர்களும்கூட; பார்ப்பன ஏடுகளால்
கட்டவிழ்த்துவிடப்பட்ட பச்சைப் புளுகுணித்தனத் தைப் புரிந்துகொள்ள வாய்ப்பு
ஏற்பட்டுவிட்டது இதன்மூலம்!
...இதுவரை நடந்த ரெய்டுகளில் யாரையும் கைது செய்யவில் லையே.... என்று கேட் டோம்.
ஆவணங்கள்தான் இந்த விவகாரத்தின்
ஹீரோ; வி.அய்.பி. அந்தஸ்தில் உள்ளவர்கள் எங்கே ஓடிப் போகப் போகிறார்கள்
(முன்பு சு.சாமி நெருக்கடி காலத்தில் நாட்டை விட்டே ரகசியமாய் ஓடிப் போனதை
மக்கள் மறந்தா விடுவார்கள்?).... என்றார்கள்.
தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஆளுநரிடம் ஒப்படைக்கவேண்டுமாம்
டெல்லி அரசியல் வட்டாரத்தில் ஒரு
விஷயம் பர பரப்பாய்ப் பேசப்படுகிறது. தமிழகத்தில் தி.மு.க. ஆளுங் கட்சியாக
இருக்கும் நிலையில்... ஸ்பெக்ட்ரம் பற்றிய விசாரணையை தடங்கல் இல்லாமல்
நடத்த முடியுமா?
தமிழகத்தின் ஆட்சிப்
பொறுப்பை ஆளுநர் வசம் ஒப்படைத்தால் மட்டுமே விசாரணையைத் தொய்வில்லாமல்
நடத்த முடியும் என்று சி.பி.அய். தரப்பு தங்கள் மேலதி காரிகளிடம் ஒரு
கருத்தைச் சொல்லியிருக்கிறதாம்!
எப்படி இருக்கிறது பார்த்தீர்களா? அக்கிரகாரக் கழுகுகளின் கற்பனை வளம் - கப்சா விடும் திறமையைப் பார்த்தீர்களா?
சி.பி.அய். அதிகாரிகளை உச்சநீதிமன்றம்தான் இப்பிரச்சினையில் கண்காணித்து உத்தரவு போடுகிறது என்பது உலகறிந்த உண்மை.
இந்தப் பார்ப்பன ஊடகத்தினர்
சி.பி.அய்.க்கு உத்தரவு போடும் அதிகாரத்தை எவ்வளவு நாளாக எடுத்துக்
கொண்டார்களோ தெரியவில்லை. எந்த அதிகாரி அவர் என்பதை
பகிரங்கப்படுத்துவார்களா?
சட்டமன்றத் தேர்தல் வருவதற்கு
முன்னர் இப்படி ஒரு வதந்தீயை கிளப்பிவிடுவது இந்த கோயபெல்சின்
குருநாதர்களின் வேலை என்றாலே, அவாளுக்குத்தான் எவ்வளவு பேராசை!
பேராசைக்காரனடா பார்ப்பான் என்று பார்ப்பன பாரதியே பொறுக்க முடியாமல்தானே பாடினார்?
மீண்டும்
தி.மு.க. ஆட்சியே!
அரசியல் சட்டத்தின் எந்தப்
பிரிவின்கீழ் எதனை செய்ய முடியும்? அட புத்தி கெட்ட பூணூல் மண்டூகங்களே,
போதும் உங்கள் அறியாமைக்கு வெளிச்சம்! அப்படி உங்கள் ஆசை நிறைவேறினால்,
தி.மு.க.வின் மிகப்பெரிய வெற்றிக்கு அதைவிட எளிதான வழி வேறு கிட்டவே
கிட்டாது! தி.மு.க. 1971 இல் வென்ற இடங்களைவிட அதிக இடங்களில் வந்து,
உங்களை புறமுதுகிட்டு ஓடச் செய்யும்!
தலைவர்,
திராவிடர் கழகம்நன்றி விடுதலை,18-12-2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment