வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Monday, December 13, 2010

ராஜபக்சேவுக்கு மொத்து என்பது கிடைத்துக் கொண்டேதான் இருக்கப் போகிறது

சிங்கப்பூர் அதிபராகவிருந்து ஓய்வு பெற்ற லீகுவான்யூ சொன்னதுபோல இலங்கை அதிபர் சிங்கள வெறியர் ராஜபக்சே திருந்துவார் என்று எதிர் பார்ப்பதைவிட அறியாமை வேறு ஒன்றும் இருக்கவே முடியாது.

லண்டன் சென்று தமிழர்களின் உணர்வை நேரில் அறிந்து அவமானப்பட்ட பிறகும்கூட, பட்டும் புத்திவர வில்லை என்பதுதான் அந்தப் பாசிஸ்டின் நிலை.

இலங்கையில் சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளில் தேசிய கீதம் இதுவரை நடைமுறையில் இருந்து வந்தது. இனி தமிழில் கிடையாது - சிங்களத்தில் மட்டும்தான் என்று அறிவித்துள்ளார். இதற்கு அமைச்சரவைக்குள்ளேயே ஆதரவும், எதிர்ப்பும் இருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.

இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்களும் தமது கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

ராஜதந்திர நடவடிக்கை என்றோ, வேறு எந்த மண்ணாங்கட்டிக் காரணத்தையோ கூறிக் கொண்டு சிங்கள அரசிடம் நேசம் - பாசம் கொண்டு கசிந் துருகும் இந்திய அரசின் கண்கள் இதற்குப் பிறகும் கூடத் திறக்கவில்லையென்றால், அந்த நிலை மிகவும் பரிதாபமே.

ஆட்சி மொழி என்ற தகுதியிலிருந்து தமிழ் முன்பு நீக்கப்பட்டது. வாகனங்களில் எல்லாம் சிங்கள எழுத்துப் பொறிப்பது கட்டாயமாக்கப்பட்டது.

உலகப் புகழ்பெற்ற யாழ் நூலகம் எரித்துச் சாம்பலாக்கப்பட்டது. தமிழர்கள் வாழும் பகுதிகள் எல்லாம் சிங்கள மயம் ஆக்கப்பட்டு வருகின்றன. திட்டமிட்ட வகையில் தமிழின அழிப்பு என்பதை சகல அதிகாரங்களையும் பயன்படுத்தி செய்து வருகிறார் ராஜபக்சே.

லண்டனில் மட்டுமல்ல உலகில் வேறு எந்தப் பகுதிக்குச் சென்றாலும் ராஜபக்சேவுக்கு மொத்து என்பது கிடைத்துக் கொண்டேதான் இருக்கப் போகிறது. ஆனாலும், அந்த மனிதனுக்கு அது உறைக்கப் போவதில்லை.

போர்க் குற்றவாளியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அதற்குரிய தண்டனை அளிக்கப் படாத வரை - இதற்கு ஒரு தீர்வு காணப்படப் போவதில்லை.

இதில் அய்.நா. பொதுச்செயலாளர் பான்-கீ-மூன் மேற்கொண்ட முயற்சி ஒரு தேக்க நிலையில்தான் இருந்து வருகிறது. மனித உரிமையில் அக்கறை உள்ள நாடுகள் - ஒவ்வொரு நாட்டின் தேசிய இனம், தேசிய மொழி, அது தொடர்பான உரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும் என்பது அய்.நா.வில் ஒப்புக்கொள்ளப் பட்டவையாகும்.

இந்த வகையில் ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்கக் கூடுதல் காரணமும்  கிடைத்துள்ளது என்ற கண்ணோட்டத்தில் இந்தப் பிரச்சினை அணுகப்பட வேண்டும்.

சிங்களம், சிங்களவர்கள் ஆகியவற்றுக்கும், ஆரியர்களுக்கும், ஆரியத்திற்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. அதன் காரணமாக, சிங்களவர்களின் நடவடிக்கைகளுக்கு இங்குள்ள ஆரியப் பார்ப்பனர் களும், அவர்களின் ஊடகங்களும் பல்லக்குத் தூக்கிக் கொண்டு நிற்கின்றன.

இலங்கை அதிபர்களால் அளிக்கப்பட்ட சிங்கள ரத்னாக்கள் தமிழ்நாட்டில் திரிந்து கொண்டு இருக்கிறார்கள். மிக வெளிப்படையாகத் தமிழின அழிப்பை நியாயப்படுத்திக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் முதற்கட்டமாக இந்த இன எதிரிகள் அம்பலப்படுத்தப்படவேண்டும். சில புறக்கணிப்பு நடவடிக்கைகள்மூலம் பார்ப்பனர் - தமிழர் என்ற உத்திப் பிரிவு வெளிப்படையாக ஏற்பட்டால்தான் இந்தப் பார்ப்பனர்கள் சரிப்பட்டு வருவார்கள்.

இங்கு எரிவதை வெளியில் இழுத்தால் இந்தப் பார்ப்பனர்களின் கொழுப்பு - கொதிப்பு அடங்கிப் போய்விடும். இலங்கையிலும் அதன் பிரதிபலிப்பைக் காணமுடியும். இந்நிலையை தமிழ்நாட்டில் நாம் உருவாக்கியே தீரவேண்டும். தமிழ்நாட்டில் இருந்து கொண்டே தமிழில் ஏடுகள் நடத்திப் பிழைத்துக் கொண்டே, தமிழ் செம்மொழியானால், வீட்டுக்கு வீடு பிரியாணி கிடைக்குமா? என்று தைரியமாக எழுதக்கூடிய ஏடுகளும் இருக்கத்தானே செய்கின்றன.

பெங்களூருவில் திருவள்ளுவர் சிலையைத் திறந்துவிட்டாலே கருநாடகத்திலிருந்து தண்ணீர் பாய்ந்து தமிழ்நாட்டில் முப்போகம் விளையுமா? என்று கேலி செய்கின்ற பூணூல் இதழ்களைத் தமிழர்களே, காசு கொடுத்து வாங்கிக் கொண்டுதானே இருக்கிறார்கள்?

முதலில் இதற்கொரு முடிவு காணப்படவேண்டும்.

தமிழா இன உணர்வு கொள்!

தமிழா, தமிழனாக இரு!!

---------- விடுதலை தலையங்கம் (13-12-2010)

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]