வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, December 04, 2010

துக்ளக் துர்வாசர்களும் - ஜூனியர் விகடன் மணியன்களும்!

ஆ. இராசா பிரச்சினை ஆரிய திராவிடப் பிரச்சினையா? எதிலும் உங்களுக்கு இந்தக் கண்ணோட்டம் தானா? என்று ஜாதிக் கண்ணோட்டமே இல்லாத, இனப் பார்வையே இல்லாத (சத்தியமாய் நம்பித் தொலைக்க வேண்டும்)வர்கள் போல சிலர் எழுதுகோலைப் பிடித்து ஏர் உழுகிறார்கள்.

துக்ளக், தினமணி, ஆனந்தவிகடன், ஜூனியர் விகடன், தினமலர் வகையறாக்கள் துள்ளி விளையாடப் பார்க்கின்றன.துக்ளக்கில் துர்வாசர் என்ற புனைப் பெயரில் ஒருவர் ஒளிந்து கொண்டு இருமிக் கொண்டிருக்கிறார். தமிழன் என்றால் அவருக்கு வேப்பங்காயை மென்று விளக்கெண்ணெய்யைக் குடித்தது போலே.... துர்வாசர் என்றாலே கோபக்கார முனி என்றுதானே பொருள்!. ஆத்திரக்காரனுக்கு அறிவில்லை என்பது பால பாடமாயிற்றே! பார்ப்பனர் அல்லாதோர்மீது துவேஷம் துக்ளக் துர்வாசருக்கு எப்பொழுதுமே பொத்துக் கொண்டு கிளம்பும். தமிழ் மொழி என்றால் ஒரு கிண்டல்; தமிழன் என்றால் ஒரு ஏளனம் _ இவர் கைவசம் இருந்து கொண்டே இருக்கும் .இப்பொழுது ஆ. இராசா விஷயத்திலும் ஆரியத்தின் கொடுக்கு கொம்பு தீட்டிக்கொண்டு பாய்கிறது. சென்னை - தியாகராயர் அரங்கில் 24.11.2010 அன்று தமிழ் ஊடகப் பேரவை சார்பில் ஒரு கருத்தரங்கம்.

மத்திய அமைச்சர்மீது வேட்டையாடக் கிளம்பியிருக்கும் ஊடகங்களின் முகத்திரையைக் கிழித்தெறிந்து அந்தக் கூட்டம்! இதுபற்றி எழுத வந்த துர்வாசர் விடுதலை ஆசிரியர் கி. வீரமணி, பேராசிரியர் சுப.. வீரபாண்டியன் ஜெகத் கஸ்பார், ஏ.எஸ். பன்னீர்செல்வம், ரமேஷ் பிரபா ஆகியோர் பேசியதில் என்ன பொருள் குற்றம்? சொல் குற்றம்? என்று எதிர்த்து ஒருவரிகூட எழுத முடி யாத இந்த உஞ்சிவிருத்திக் கூட்டம் _ இவர்கள் எல்லாம் பெரிய பத்திரிகையாளர்களா? ஊடகத்துறை அறிஞர்களா? என்று எகத்தாளம் கொட்டுகிறது துக்ளக். பந்தை அடிக்க முடியாவிட்டால் காலை அடிப்பது என்கிற தப்பான ஆட்ட ரகத்தைச் சேர்ந்தது இந்த முப்புரிக் கூட்டம். அதனால்தான் அவர்கள் தெரிவித் துள்ள கருத்துகளுக்குள் உள்ள நுழைய முடியாத நிலையில், கழுத்தைக் கொடுத்தால் கில்லட்டின் காவுதான் என்பதை நன்றாகப் புரிந்துகொண்ட நிலையில்தான் இவர்கள் எல்லாம் பெரிய ஊடகக்காரர்களா என்று உதட்டைப் பிதுக்குகிறது. என்.டி.டி.வி. _ பிரணாராய், சி.என்.என். அய்.பி.என்னின் ராஜ்தீப் சர் தேசாய், அவுட் லுக் வினோத் மேத்தா, டெக்கான் கிரானிக்கிளின் ஆசிரியர் எம்.ஜே.அக்பர் போன்ற பழந்தின்று கொட்டை போட்டவர்களா இவர்கள் எல்லாம் என்று நையாண்டி மேளம் கொட்டுகிறார் துர்வாசர். எடுத்துக் காட்டப்படும் இந்த ஆசாமிகள் எல்லாம் நிஜப் புலிகளா? வைக்கோல் புலிகளா என்கிற கோதாவுக்குள் நுழைவது தேவையற்ற வேலை. நாம் கேட்பதெல்லாம் இதில் யார் யாரை மிஞ்சுபவர்கள் என்பதல்ல _ அது பிரச்சினையைத் திசை திருப்புவதாகும். நாம் வைக்கும் முதல்கேள்வி, துர்வாசர் கண்ணோட்டத்தில் _ பிரபலமில்லாதவர்கள் எழுப்பிய வினாக்களுக்கு ஒருவரிகூட பதில் சொல்ல முடியாத வக்கற்றவர்கள், சரக்கு இல்லாதவர்கள் சகட்டு மேனியாகத் தனி நபர் விமர்சனக் கோதாவில் குதிக்-கிறார்களே -_ இதன் பொருள் என்ன? ஆ. இராசா மீது அவதூறு சுமத் துவதுதான் அவாளின் நோக்கம்; இராசா தரப்பில் எழுப்பப்படும் அர்த்தமிக்க வினாக்களுக்கு விடை என்பது அவர்கள் கைவசம் கிடையாது என்பது இதன் மூலம் விளங்கிட-வில்லையா? இதில் இன்னொரு பார்ப்பனத் தந்திரத்தைக் கவனிக்க வேண்டும்.

தமிழ் ஊடகப் பேரவை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுள் ஏ.எஸ். பன்னீர்செல்வம் (செயல் இயக்குநர், பேனாஸ் சவுத் ஏசியா ஊடக அமைப்பு) அவர்களின் பெயரை விட்டுவிட்டு எழுதுவது ஏன்? ஒருக்கால் அவர் பிரபலமான ஆங்கில ஊடகத்தைச் சேர்ந்தவர்தான் _ அவரைப் பிரபலமற்றவர் பட்டியலில் சேர்க்க முடியாது என்ற உள் எண் ணத்தில் ஒதுக்கி விட்டதோ! (இதற்குப் பெயர்தான் பார்ப்பன நரித்தனம் என்பது!). ஏ.எஸ். பன்னீர்செல்வம் எழுப்பிய கேள்விகளுக்காவது பதில் சொல்ல முன்வர வேண்டியதுதானே! ஏன் முடியவில்லை? பதில் சொல்ல முடியவில்லை -_ அதனால் எழுத முன் வரவில்லை என்பதைத் தவிர வேறு இதில் என்ன இருக்கிறது? விடுதலை ஆசிரியர் இவர்கள் கண்ணோட்டத்தில் பத்திரிகையாளர் அல்ல; அப்படித்தானே? திராவிட இயக்கத்தைச் சேர்ந்த, 75 ஆண்டு காலம் வரலாறு படைத்த விடுதலையின் 48 ஆண்டு கால ஆசிரி-யர் அவர். ஆசிரியர் என்று தமிழ்நாட்-டில் சொன்னால் அது விடுதலை ஆசிரியர் வீரமணி அவர்களைத்தான் குறிக்கும் என்பது பூணூல்காரர்கள் உட்படத் தெரிந்த சேதிதான். துர்வாசர்தான் ஆத்திரக்காரரா-யிற்றே -_ அவரால் ஏற்றுக் கொள்ள முடியுமா? துக்ளக் தர்ப்பையில் பதுங்கியி-ருக்கும் துர்வாசரே, துர்வாசரே! உமக்கு வரலாறு தெரியுமா? இந்த விடுதலை ஏடுதான் உடம்பெல்லாம் மூளை உள்ளவர் என்று நீங்கள் தூக்கிக்கொண்டு ஆடும் ஆச்சாரியாரை 1938இல் ஒரு முறையும், 1954இல் ஒரு முறையும் முதல் அமைச்சர் பதவியிலிருந்து விரட்டியது என்பது உமக்குத் தெரியாதா?

உங்கள் ராமச்சந்திர அய்யர் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்து, பிறந்த தேதியைத் திருத்தி எழுதி (Fraud) பதவியில் நீடித்ததை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து விரட்டியடித்தது இந்த விடுதலைதான் _ இந்த விடுதலை ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள்தான் என்ற சரித்திரம் தெரியுமா உமக்கு?

1971இல் தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப் பேரவைப் பொதுத் தேர்தலில், இராமனை செருப்பாலடித்த திராவிடர் கழகம் ஆதரிக்கும் திமுகவுக்கா ஓட்டு என்று ஒப்பாரி வைத்து எழுதியதே துக்ளக் _ சிறப்பு இதழாகக் கூட துக்ளக் வெளிவந்ததே _ உங்கள் தினமணி திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று அய்யப்பனையும், விநாயகனையும் வேண்டி பெட்டிச் செய்திகளை வெளியிட்டதே, (சிவராமய்யர் தான் அப்பொழுது அதன் ஆசிரியர்) நினைவிருக்கிறதா? திராவிடர் இயக்கத்தின் வீர சிப்பாயாக இருந்து உங்கள் அஸ்திவா-ரத்தையும், பூணூல் அம்பறா தூணியி-லிருந்து புறப்பட்ட அம்புகளையும் இந்த விடுதலை தானே _ இந்த விடுதலை ஆசிரியர்தானே நொறுக்கித் தள்ளினார்.

ஒரு சேலம் நிகழ்ச்சியை முன்வைத்து தேர்தலை ஆரியர் -_ திராவிடர் போராட்-டமாகச் சித்திரித்தது உங்கள் கூட்டம்தானே? முடிவு என்ன ஆயிற்று? இராமனை செருப்பால் அடிப்பதற்கு முன்பு தி.மு.க. (1967 தேர்தலில்) பெற்ற இடம் 138. இராமனை செருப்பால் அடித்தபிறகு தி.முக.வுக்குத் தேர்தலில் (1971) கிடைத்த இடங்கள் 183 என்பதை மறந்துவிட வேண்டாம். துக்ளக், தினமணி ஹிந்து வகையறாக்களின் சிண்டுகள் அறுபட விரட்டியடித்தது இதே விடுதலை தான் _ விடுதலையின் ஆசிரியர்தான் என்-பதை வசதியாக மறந்து விட்டீர்களா?

பதில் அளிக்கத் துப்பு இல்லாத நிலையில் பெரியாரும், அண்ணாதுரை-யும் அவிழ்த்துவிட்ட ஆரிய - திராவிடக் கதை என்று மங்களம் கூறி கடைகட்டி விட்டது _ துக்ளக். ஆரியர் - திராவிடர் என்பது பெரியாரும், அண்ணாவும் கட்டிவிட்ட கதைகளா? உங்கள் ஆதி சங்கரர் திராவிட சிசு என்று சொன்னதை வசதியாக மறந்து-விட்டீர்களா? உங்கள் வேதங்களில் எத்தனை இடங்களில் திராவிடர்கள் இடம் பெற்றிருக்கிறது! தேசிய கீதத்தில் திராவிட வந்தது என்பதும் பெரியா-ராலும், அண்ணாவாலும்தானா? உங்கள் பிஜேபி ஆட்சியில் சிந்து சமவெளி நாகரிகம் ஆரிய நாகரிகம் என்று கூறி, கணினி தந்திரம் மூலம் எருதைக் குதிரையாக்கிக் காட்டினீர்-களே அப்பொழுது எங்கே மேயப் போனது உங்கள் புத்தி? தங்களுக்குத் தேவைப்படும் பொழுது ஆரியர் - திராவிடர் என்பது கண்-முன்னே வந்து நிற்கும். தமக்குச் சாதக-மாக இருக்காது என்ற நிலை ஏற்-பட்டால் ஆரியராவது - திராவிடராவது  எல்லாம் பெரியார், அண்ணாதுரை கைசரக்கு என்பதா? இராமன் செருப்படி பட்டும் உங்களுக்குப் புத்தி வரவில்லையே, என்ன செய்ய? மானமுள்ள ஆயிரம் பேருடன் போரிடலாம். ஆனால், மானமற்ற ஒருவனுடன் போராடுவது கடினம் என்றாரே தந்தை பெரியார் _ அதுதான் நினைவிற்கு வருகிறது.

ஏதோ விடுதலை ஆசிரியரை மடக்கியது போல ஒன்றைச் சொல்லி தன் பூணூலால் ஒருமுறை முதுகைச் சொறிந்து கொள்கிறது. இதே இனமானத் தலைவர் வீரமணிதான் முன்பு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அவரது ஆரிய பிராமணத் தலைமைக்கு, இடஒதுக்கீட்டை அதிகரித்ததற்காக (இதுவே பொய் -_ அதிகாரித்ததற்காக அல்ல _ ஏற்கனவே இருந்த 69 சதவிகித இடஒதுக்கீட்டைக் காப்பாற்றுவதற்காக) சமூகநீதி காத்த வீராங்கனை என்று ஜால்ராபோட்டார் என்று துர்வாசர் எழுதுகோல் பிடிக்கிறார்.

பொதுவாக இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போர்க் கொடி பிடிக்கும் பார்ப்பனர்களைப் பயன்படுத்தியே வீரமணி வெற்றி பெற்ற இடம் அது. முதல் அமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் பி.வி. நரசிம்மராவ், குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா என்ற மூன்று பார்ப்பனர்களையும் பயன்-படுத்தி 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை சட்ட ரீதியாக பாதுகாத்துக் கொடுத்தது எப்படித் தவறாகும்? தமிழர்கள் வென்ற இடத்தைக்கூட வேறுவிதமாகச் சித்திரிக்க முயலும் பேதமையை என்ன சொல்லி நகைப்பது!

அடே, வாருமய்யா.. தமிழருவியாரே! இன்னொரு பார்ப்பன ஏடான ஜூனியர் விடகனில் (24.11.2010) தமிழருவி மணியன் என்பார் ஒன்றை எழுதியிருக்கிறார்: ஆ இராசாவிடம் இருந்து மாண்-புமிகு பறி போனாலும் மானமிகு அடை மொழி பறி போகாது என்று வாய் மலர்ந்திருக்கிறார். குற்றம் செய்யாதவருக்கு ஜென்ம தண்ட-னையா? என்றும் குமுறியிருக்கிறார்? வீரமணியின் பகுத்தறிவு அகராதியில் மானம் என்ற சொல்லுக்கும், குற்றம் என்ற வார்த்தைக்கும் என்ன பொருள் என்று கொஞ்சம் விளக்கினால் நல்லது! என்று திருவாளர் தமிழருவி மணியன் நம்மை வேண்டிக் கொண்டிருக்கிறார். நெற்றியில் பட்டை போடாத, பக்திச் சகதியில் விழாத பகுத்தறிவாளராக இவர் இருந்திருந்தால் வீரமணியின் பகுத்தறிவு அகராதியில், மானம் குற்றம் என்பதற்கான பொருள் எளிமையாகவே புரிந்திருக்கும்.

இனிமேல் புதிதாக ஒரு கட்சிக்குப் போக முடியாத நிலையில், தனக்குத்-தானே கட்சியை உண்டாக்கிக் கொள்ளும் அளவுக்கு நமக்குப் பகுத்தறிவு இல்லைதான். ஹெக்டே கட்சி வரை சென்று வந்த தீராதி தீர பகுத்தறிவாளர் ஆயிற்றே! ஒரே கட்சி, ஒரே கொள்கை, ஒரே தலைவர், ஒரே கொடியின் கீழ் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்று-பவர்கள் பற்றிக் கருத்துச் சொல்லும் போது கொஞ்சம் கூடுதல் பொறுப்-புணர்ச்சியும், மரியாதையும் தேவைப்-படும். அது இல்லாதவர்கள் இப்படித்-தான் எழுத்தைத் தொழிலாக்குவார்கள். ஆச்சாரியாரால் கறுப்புக் காக்கை என்று அடையாளம் காட்டப்பட்ட காமராஜர் _ கல்கியால் பெரிய பதவி சின்ன புத்தி என்று கல்கியால் கார்ட்டூன் போடப்பட காமராசர் _ பெரியார் ஆதரவு என்கிற முக்கோணங்-களையும் தெரிந்து கொண்டவர்களுக்-குத்-தான் பகுத்தறிவு அகராதியில் மானம் குற்றம் என்பதற்கான பொருளை உணர முடியும். ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இலஞ்சம் வாங்கப்பட்டது என்று எந்த அமைப்பும் கூறவில்லை; தணிக்கைத் தலைமை அதிகாரிகூட, இது ஒரு யூகம்தான் என்று குறிப்பிட்-டுள்ளார். ஊகத்தால் நட்டம் என்பதுகூட பொது மக்களுக்குத்தான் அந்த லாபம் போய் சேர்ந்திருக்கிறது என்றெல்லாம் கருத்துக் கூறப்பட்டுள்ள நிலையில், ஆளாளுக்கு நீதிபதியாகித் தண்டனை வழங்குவது என்றால், ராஜா என்ன ஊருக்கு இளைத்தவரா? இது எங்கே போய் முடியும்? 2008இல் ஆ. இராசா பொறுப்-பேற்றபோது தொலைப்பேசி இணைப்-புகளின் எண்ணிக்கை 30 கோடிதான். அவர் பதவி விலகும்போது 73 கோடியாக உயர்ந்துள்ளதே, இதுபற்றி ஏன் பேனாவைத் திறக்கவில்லை இந்த அறிவு ஜீவிகள்? கொலைக் குற்றம் சாற்றப்பட்ட சங்கராச்சாரியார்மீது ஒரு தூசுகூட விழாமல் பார்த்துக் கொண்ட பார்ப்-பன ஊடகங்கள் ஆ. இராசா என்ற தாழ்த்தப்பட்ட சகோதரன்மீது யூகத்-தின் அடிப்படையில் புழுதி வாரித் தூற்றுவதைப் புரிந்து கொள்ள பச்சைத் தமிழர் காமராசரின் சீடராக இருப்பதாக நாம் நம்பும் தோழர் புரிந்து கொள்ளவில்லையே -_ அவர்களோடு சேர்ந்து கோரஸ்பாடும் கூட்டத்தோடு சேர்ந்து கொண்டாரே _ - இதனை வெட்கக்கேடு என்பதா? தமிழர்களின் சுபாவமே எதிரிகளிடம் ஆழ்வார் பட்டம் வாங்குவதுதானே _ இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்று சமாதானம் செய்து கொள்வதா? சங்கராச்சாரி பிரச்சனை குறித்து இவர் என்றாவது எழுதியிருப்பாரா? எழுதினால் ஜூ.வி. தான் வெளியிடுமா? ஊழலில் குளித்துத் திளைத்து மூழ்கும் பா.ஜ.க.வின் முதல்வர் _ அதைப்பற்றி இந்தப் பார்ப்பன ஏடுகள் எப்படி தளுக்காக எழுதுகின்றன _ இராசா விடயத்தில் எப்படித் துள்ளிக் குதிக்கின்றன என்பதைப் பார்த்தாவது புத்தி கொள்முதல் பெற வேண்டாமா? இனநலமும் - _ எதிரிகளின் குணமும் தெரிந்து கொள்ளப்பட முடியாத நிலையில் உள்ளவர்கள் ரொம்பப் பேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்; அவர்கள் ஏதோ ஒரு வகையில் விளம்-பரமும் பெற்று விடுகிறார்கள். ஆனால், இந்தக் கண்ணோட்டத்தில் ஒரே ஒரு பார்ப்பானைக் காண்பது அரிதினும் அரிதாயிற்றே! பெரியாரைப்பற்றிப் பேசினால் மட்டும் போதாது; காமராசரைப் பற்றி எழுதினால் மட்டும் போதாது. அவர்களின் சுவாசத்தைச் சுவாசிக்கக் கற்றுக் கொண்டதால்தான் தமிழர்-களுக்கு ஏதோ ஒரு வகையில் உதவி செய்பவர்கள் ஆவோம்! சிந்திப்பார்களாக!

----- மின்சாரம், விடுதலை  ஞாயிறு மலர் (04-11-2010)
                                                                                                                                                               


1 comment:

Muthukumara Rajan said...

வடிவேல் ஸ்டைல்ல சொல்லனும்னா எப்படி பேச ரூம் போட்டு யோசிசங்களா

தமிழுடன்
முத்துக்குமார்

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]