வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Monday, February 01, 2010

பார்ப்பனரைத் தாங்கிப்பிடிக்கும் பார்ப்பனர்கள்!

காஞ்சிபுரத்திலே வரதராஜ பெருமாள் கோயில்_ அதன் மேலாளர் ஆனந்த-சர்மா மகன் சங்கர்ராமன்.


இரவில் அல்ல, பட்டப் பகலிலேயே கொலை செய்யப்படுகிறார். ஊரே நடுங்குகிறது.

வரதராஜப் பெருமாள் கோயிலி-லேயே இப்படி ஓர் அபவாதமா? என்று பக்தர்கள் குமைந்தனர். ஊர் மக்கள் பொரிந்து தள்ளினர். ஏடுகள் எல்லாம் பக்கம் பக்கமாக எழுதின.

யார் இதைச் செய்திருப்பார்? ஆசாமி சாதுவாயிற்றே_ அவருக்குக் கூட எதிரிகள் உண்டா என்று கூடிக் கூடிப் பேசினார்கள்.

கடைசியில் பார்த்தால்... அங்கு சுற்றி இங்கு சுற்றி கடைசியாக சங்கர மடத்துக்கு மோப்ப நாய் வரவில்லை-தான் என்றாலும் _ கொலையாளி அந்த மடத்துக்குள் தான் இருக்கிறார் என்ற தகவல்கள் கசிந்தன.

ஜெகத் குரு வாம் _ சங்கராச்சாரி-யாராம் _ நானே கடவுள் என்று கூறிக் கொள்பவர்களாம். கொலையின் பீடம் அதுதான் என்று கண்டுபிடித்து ஒரு தீபாவளி நாளில் (11.11.2004) ஜெயந்திர சரஸ்வதி கைது செய்யப்பட்டார்.

ஆந்திரா சென்று அங்கிருந்து கம்பியை நீட்டி விடலாம் என்று திட்டம் போட்டிருந்தார் போலும்! காஞ்சிபுரம் கொண்டு வந்து, நீதிமன்றம் முன் நிறுத்தப்பட்டு 15 நாள் வேலூர் மத்திய சிறையில் தள்ளப்பட்டார்.

அவர் மீதுள்ள உள்ள குற்றச்-சாற்றுகளோ சாதாரணமானவை அல்ல. இ.பி.கோ. 302, 120 பி, 34,201 கொலை செய்யத் தூண்டுதல், கூட்டுசதி, பொய்யான சாட்சியங்கள் சமர்ப்பித்தல் கொலை _ வழக்குகளில் ஆசாமி சிக்கிக்கொண்டார், 61 நாள்கள் வேலூர் சிறையில் கம்பி எண்ணினார் ஜெகத் குரு. எங்கு சென்றாலும் ஜாமீன் கிடைக்காது என்று உச்ச நீதி மன்றம் சென்று பெற்றுக் கொண்டு வந்தார்.

சின்ன பெரியவாள் விஜயேந்திர சரஸ்வதியும் கைது செய்யப்பட்டு (10.01.2005) 31 நாள் கம்பி எண்-ணினார்.

நிபந்தனை ஜாமீன் கிடைத்தது. சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் மூன்று வாரம் நாள்தோறும் கையொப்பம் சாற்ற வேண்டும். கேடி லிஸ்டில் ஜூனியர் சங்கராச்சாரியார் இடம் பெற்றார்.

ஆடிட்டர் ராதா கிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கிலும் ஜெயேந்திர சரஸ்வதி கைது (23.11.2004). அக்கிரகாரத்தில் இடிவிழுந்தது மாதிரி ஆகிவிட்டது, வெளியில் தலைகாட்ட முடியாத பரிதாபம்!.

இந்த யோக்கியதை உள்ள ஆசாமி, கொஞ்சம் காலம் ஓடிவிட்டது என்கிற தைரியத்தில் துள்ளித் திரிகிறார்.

ஆங்காங்கே பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பு _ வரவேற்பு வைபவங்கள்! நாட்டுடைமை ஆக்கப்பட்ட வங்கி அதிகாரிகள் அவரை வரவழைத்து அவரை பெரிய மனிதராக ஆக்கிக் காட்டுகிறார்கள்.

அவர்மீது படிந்துள்ள அசிங்கங்-களை மறைக்க புதிய ஜோடனைகளை செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி என்பது தனியாரின் வங்கி அல்ல _ நாட்டுடை-மையாக்கப்பட்ட ஒன்று. சென்னை காஞ்சி காமகோடி சைல்ட்ஸ் டிரஸ்ட் மருத்துவமனைக்கு கருவிகள் வாங்க ரூபாய் 15 லட்சம் மதிப்புள்ள பொருள்களை இலவசமாக வழங்குகிறார்களாம்.

அந்த மருத்துவமனைக்கான சோதனை மய்யத்தை கொலை குற்றவாளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ள ஜெயந்திர சரஸ்வதி திறந்து வைக்கிறாராம். யார் வீட்டுப் பணத்தை யாருக்குக் தூக்கிக் கொடுப்பது? நாட்டில் காஞ்சி மடம் நடத்தும் ஒரே ஒரு மருத்துவ-மனைதான் இருக்கிறதா?

மற்ற மற்ற மருத்துவமனைக-ளெல்லாம் கண்களுக்கே தெரியாதா? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேல்மட்டமெல்லாம் ஒரே அக்கிரகார மயம். அவர்கள் நினைத்தால் எதுவேண்டு-மானாலும் செய்யலாம் என்ற தோரணையில் கொலை மடம் என்று பெயர் பெற்றுவிட்ட சங்கர மடத்தின் அதிபதியை அழைத்து வாரி வழங்கு-கின்றனர் என்றால், இதன் பொருள் என்ன?

இந்த இடத்தைத்தான் சூத்திரத் தமிழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கொலைக் குற்றவாளியாக இருந்-தாலும் தங்களவாள் என்றதும் கோபுரத்-திற்கு உயர்த்தும் அந்தக் குணப்-போக்கைக் கவனிக்க வேண்டாமா?

ஒரு நண்டு இன்னொரு நண்டின் காலை கவ்விப் பிடித்து இழுப்பது போல, ஒரு தமிழன் இன்னொரு தமிழன் காலை வாரிவிடுவதில்தானே கண்ணும் கருத்துமாக இருக்கிறான்?

அவர்களின் பீடத்திற்கு ஹானி ஏற்பட்டு விடக்கூடாது என்பதிலே எத்துணை உணர்வுகள் அக்கிரகாரத்-திடம் ?

கொலைக் குற்றம் மட்டுமா?

பெண்கள் விஷயத்தில் இந்தக் காமகோடி ஆடிய ஆட்டங்கள் சிரிப்பாய்ச் சிரிக்கவில்லையா?

அனுராதா ரமணன் என்ற அம்மை-யார் அக்கிரகாரப் பெண்மணிதானே!
கண்ணீரும் கம்பலையுமாக பேட்டி கொடுத்தாரே_ தொலைக்காட்சி ஒளிபரப்பியதே, -_ தன் கையைப் பிடித்து இழுத்தான் அந்தப் பெரிய மனுஷன் என்று குமுறினாரே!
நிர்வாணமாக நின்று என்னை பலவந்தப்படுத்தினார் என்று அந்தப் பார்ப்பனப் பெண் கதறினாரே_ தொலைக்காட்சிகள் அதனை ஒளிபரப்பினவே.
இப்படி ஒரு கழிசடை பேர்-வழியைத்தான் அரசுடைமையாக்கப்-பட்ட ஒரு வங்கி பூர்ணகும்பம் கொடுத்து வரவேற்பு கொடுக்கிறது.

தன் எதிரிலேயே ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டார் ஜெயேந்திரர் என்று வெட்கத்தை விட்டு அந்த எழுத்தாளர் குமுறினாரே!

வாரத்துக்கு அய்ந்து நாள்கள் சிறீரங்கத்தில் உள்ள உஷா என்ற பெண்-ணுடன், சங்கராச்சாரி ஜெயேந்-திரரும் காலை நேரத்தில் சரசலீலைகள் பேசியதை அந்தக் கைபேசிகள் மூலம் காவல்துறை உறுதிப்படுத்தியதே!

ஜெயேந்திரருக்கு பெண்களை சப்ளை செய்தேன் என்று ரவி சுப்-பிரமணியம் ஒப்புக்கொண்டிருக்-கிறாரே!

இப்படிப்பட்ட ஓர் அசிங்கமான மனிதருக்குத்தான் இந்தியன் வங்கி-யிலுள்ள தலைமைப்பீ()ட அக்கிர-காரத்தைச் சேர்ந்த அதிகாரிகள் அம்பாரி வைத்துப் பூஜை செய்-கிறார்கள்.

ஜெயேந்திரரை விட பிரேமானந்தா எங்கே கெட்டுப் போய்விட்டார்? பிரேமானந்தாவை அழைத்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் மரியாதை செய்வார்களா?

காஞ்சிபுரத்தில் ரயில்வேதுறை சம்பந்தப்பட்ட அரசு விழாவில் (25.11.1998) சங்கராச்சாரியார் கலந்து-கொண்டதைக் கண்டித்து திராவிடர் கழகம் மறியலில் ஈடுபட்டதே _ அதனைத் தொடர்ந்து காஞ்சி சங்கராச்சாரியார்கள் _ அவ்விழாவில் பங்கேற்கவில்லை. அப்போது அவர்மீது கொலை வழக்குக் கூட இல்லை.

ஓர் அரசு விழாவில் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த ஒருவர் எப்படி பங்கேற்கலாம் என்று போர்க் கொடி உயர்த்தியதே திராவிடர் கழகம்.

அப்படி இருக்கும்பொழுது அரசுக்-குச் சொந்தமான வங்கி இந்து மத மடத் தலைவரை அழைத்து எப்படி சிறப்பு செய்யலாம்? அதுவும் ஒரு கொலைக் குற்றத்தில் ஜாமீனில் வெளிவந்த நிலையில் எப்படி அழைக்கலாம்?

இதைப் பற்றி எந்த ஏடுகள் எழுதுகின்றன? எந்தத் தொலைக்காட்சி விமர்சனம் செய்கிறது? எந்தத் தலைவர்-கள் பிரச்சினை செய்கிறார்கள்?

பஞ்சமா பாதகம் செய்தாலும் தங்கள் இனத்தவரை பார்ப்பனர் எப்படி-யெல்லாம் கட்டிக் காக்கும் வேலையைச் செய்கிறார்கள்?

தமிழர்கள் சிந்தித்துப் பார்க்கட்டும்_ இனஉணர்வை வளர்த்துக் கொள்ளட்டும்!

- நன்றி விடுதலை (30 . 01 . 2010 )

4 comments:

ஜீவேந்திரன் said...

உங்கள் கட்டுரை மிகச் சிறப்பாக உள்ளது. உங்களைப்போன்றவர்கள் எழுதியாவது தமிழ் நாட்டிலுள்ள மூட நம்பிக்கை கொண்ட, கழிசடை சாமியார்களின் பின்னால் அலைகின்ற, பார்ப்பனர்களை சாமி என்று வணங்குகின்ற 'மாக்கள்' மன்னிக்கவும் மக்கள் மாறுவார்களா பார்க்கலாம்.

suve said...

உங்களை போன்றோர் இன்னும் நிறைய பேர் உருவாக வேண்டும் என்பதே எனது அவாவும், நன்றாய் சொன்னீர்கள் "தமிழர்கள் திருந்தி ஆகணும் இல்லை என்றால் வருந்தி ஆகணும்".

//இதைப் பற்றி எந்த ஏடுகள் எழுதுகின்றன? எந்தத் தொலைக்காட்சி விமர்சனம் செய்கிறது? எந்தத் தலைவர்-கள் பிரச்சினை செய்கிறார்கள்?

பஞ்சமா பாதகம் செய்தாலும் தங்கள் இனத்தவரை பார்ப்பனர் எப்படி-யெல்லாம் கட்டிக் காக்கும் வேலையைச் செய்கிறார்கள்?//

நன்றாய் உறைக்கும் படி கேட்டு இருக்கின்றீர்கள், தொடர்ந்து கேளுங்கள்..

Jawahar said...

இந்த வழக்கில் தமிழக அரசின் நிலைப்பாடு எப்படி இருந்தது என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஜாமீன் வழங்கி அளித்த தீர்ப்பில் சொல்லியிருந்ததையும் எழுதியிருந்தால் கட்டுரை முழுமையாக இருந்திருக்கும். சம்பந்தப்பட்ட டிஎஸ்பி யை தற்போதைய தமிழக அரசு டிஸ்மிஸ் செய்திருப்பதை எழுதியிருக்கலாம். அந்த டிஎஸ்பி யின் காரியர் ரெக்கார்ட் என்ன என்று எழுதி இருக்கலாம். குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்ய முடியாததால்தான் சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்க உத்தரவிட்டது என்பதை எழுதியிருக்கலாம்.

http://kgjawarlal.wordpress.com

Unknown said...

Manathil kururamum velil nallavarkal polum nadamadum manitharkalai thadukavea mudiyatha....?

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]