வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, February 10, 2010

மகா சிவராத்திரியின் மகா யோக்கியதை!!ஒரு வேடன். அவன் தன் உணவுக்குத் தினமும் பல பிராணிகளை வேட்டையாடி கொன்று தின்பது வழக்கம், அந்தப்படி ஒரு நாள் காட்டில் வேட்டையாடி இரை தேட சென்றதில் அவனுக்குக் கொல்ல ஒரு பிராணியும் கிடைக்கவில்லை. அவன் மனக் கலக்கமடைந்து சோர்ந்து திரிந்தான். அந்நேரத்தில் அந்தக் காட்டில் ஒரு புலி, அவன் கண்ணுக்குத் தென்பட்டது. நேரமும் சற்று இருட்டி விட்டது. என்றாலும் வேடன் புலியைக் கண்டு ஓடினான். புலி விரட்டிற்று. வேடன் உடனே அங்கு இருந்த ஒரு மரத்தின்மீது அவசரமாக ஏறிக் கொண்டான்.

புலி அவனைப் பார்த்த வண்ணமே மரத்தடியில் சிறிது நின்று கொண்டிருந்து படுத்துக் கொண்டது. வேடன் அந்தப் புலியை விரட்டுவதற்காக ஆக மரத்திலிருந்த சிறு கிளைகள் தழைகள் முதலியவற்றைப் பிடுங்கி கீழே எறிந்தான். அப்போது சிறு மழைத்தூரல் விழுந்து கொண்டு இருந்ததால் அத்தழைகள் சிறிது நனைந்து விழுந்தன. இப்படியே பயந்து கொண்டு இரவு முழுதும் தூங்காமல் செய்து கொண்டு இருந்தான். சிறிது வெளிச்சம் படும்படி வானம் வெளுக்க ஆரம்பித்தவுடன் புலி ஓடிவிட்டது. இந்த நிலையில் வேடன் கீழிறங்கி வீட்டிற்குப் போய்விட்டான். பிறகு அதேதொழிலாக இருந்து சில நாள் பொறுத்துச் செத்தான். சிவன் உடனே அவனுக்குக் கைலாயத்தில் இடம் கொடுத்துவிட்டார். காரணம் என்னவென்றால்,

அந்த வேடம் தினம் உயிர்களைக் கொன்று வதை செய்து சாப்பிடுபவனாகவும், விற்பவனாகவும் இருந்தாலும், அவன் அன்றிரவு தான் பறித்துப் போடுகின்ற தழை, வில்வத்தழை என்று அறியாதிருந்தாலும், அப்போது அந்த மரத்தடியில் இருந்த ஒரு சிவலிங்கத்தின் மீது விழுகிறது என்பது தெரியாமல் போட்டிருந்ததாலும், அவனுக்குச் சிவ பக்தி, ஒழுக்கம் என்பவை சிறிதும், இல்லாமல் இருந்தாலும், அவனுக்குத் தெரியாமல் வில்வத்தழை நீரில் நினைந்து சிவலிங்கத்தின் மீது பட்டிருப்பதால், அவனுக்குக் கைலாயத்தில் இடம் கொடுக்க வேண்டியது அவசியம் என்று சிவன் கருதி மோட்சம் கொடுத்தான் என்பது இதன் கருத்து.

எதற்கு ஆக இக்கதை கற்பிக்கப்பட்டது என்றால், எவ்வளவு அயோக்கியனானாலும் இந்த விரதத்தை கொண்டாடினால் மோட்சம் கிடைக்கும் என்று மக்கள் கருதி இந்த விரதம் அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்பதேயாகும். இதனால் நாம் அறியக்கிடப்பது என்னவென்றால், எவ்வளவு அயோக்கியனும் ஆரியமதத்தில் சேர்ந்தால் நன்மை அடைவான் என்கின்ற அளவுக்கு இது மதப்பிரசாரமாகும் என்பதுதான்.

இப்படியானால் ஆரிய (இந்து) மதம் காரணமாக எவனுக்காவது ஒழுக்கமேற்பட முடியுமா? எவனாவது ஒழுக்கத்தைப் பற்றிக் கவலைப்பட முடியுமா?

ஆரிய மதமும் ஒன்றே தான் என்பது அறியத்தக்கது. ஆதலால் திராவிட மக்கள், இந்த முட்டாள் தனமானதும் அயோக்கியத் தனமானதுமான இப்படிப்பட்ட மதம், சாஸ்திரம், கடவுள், பக்தி, விரதம், பூசை முதலியவற்றை நன்றாய் வெறு:கக வேண்டுமென்பது, இதனால் விளங்குகிறது.

- தந்தை பெரியார் (விடுதலை, 9.2.1953)

7 comments:

ஸ்ரீநி said...

தோழர்
பெரியார் எழுதியது, வரலாறு இவற்றையே படித்து கொஞ்சும் சலிப்பு தட்டுகிறது, தற்காலத்தில், இப்போதைக்கு நடக்கும் விஷயங்களைப் பற்றிய உங்கள் கருத்துக்கள் எப்போது எங்களுக்கு படிக்க கிடைக்கும்

Udhaya said...

பொதுவாக விரதம் என்பது ஒரு வகை உண்ணா நோன்பு போன்றதாகும்.
நம் உடல்
உறுப்புகளுக்கு நாமே ஒய்வு தரும் ஒரு முறை ஆகும்.
இயற்கை மருத்துவத்தில் கூட உண்ணா நோன்பு , வலியுறுத்த பட்டுள்ளது. இதை நேரடியாக சொன்னால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கடவுள் பெயரினை வைத்து சொன்னால் இதை மக்கள் கடை பிடிப்பார்கள் என்று நம் . மன்னிக்கவும்
எம் முன்னோர்கள்சொல்லியிருக்கலாம்.
செயல்களால் விளையும் நன்மை , தீமை பற்றி ஆராய்வதை விட குற்றம் குறை சொல்வது எளிதான ஒரு விஷயம் ஆகும். அதை யார் வேண்டுமானாலும் சொல்லலாம்.
உங்கள் கருத்துப்படி கடவுள் இல்லை என்று சொன்னால் கூட அதை ஏன்
இல்லை இல்லை என்று இல்லாத ஒன்றை பற்றி இவ்வளவு மறுத்து சொல்கிறீர்கள்.

உங்களைபொறுத்தவரை அவர் இல்லாதவராகவே இருந்தாலும் அதை பற்றி உங்களுக்கு ஏன் கவலை நண்பரே.
மனிதர்களில் பண்பாடு உள்ளவர் பண்பாடு அற்றவர் என்று இரு பிரிவுகளாக
பார்க்க பழகுங்கள். சாதி வேறுபாட்டில் அல்ல.
எல்லா மதங்களிலும் நல்ல கருத்துக்களும் உள்ளன.
குறிப்பாக
அன்பே சிவம்
வள்ளலாரின் சண் மார்க்கம். போன்றவை
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். எழுதுவது பெரிய விஷயமல்ல. ஒரு உண்மையை
இல்லை என்று சொல்வதற்கு முன்னால் அதை நன்றாக ஆராய வேண்டும்.
இப்படி என் மனதுக்கு பிடித்த மாதிரிதான் எழுதுவேன் என்றால்
எழுதிக்கொண்டே இருக்கலாம்.
என்ன ? படிக்கத்தான் யாரும் இருக்க மாட்டார்கள்.

எல்லா இனங்களிலும் நல்லவர்கள் கெட்டவர்கள் இருக்கதான் செய்கிறார்கள்.

muthukumar said...

நன்றி உதயா. அருமையான கருத்துகள்

இவர்கள் மாற மாட்டார்கள் என்னில் இந்த பேச்சு இவர்கள் தொழில் .

சங்கமித்திரன் said...

பார்பனிய தோழர்களே முதலில் உங்கள் பார்பன கொள்கைகளை மூட்டை கட்டுங்கள் நாங்களும் கருப்புச்சடைக்கு ஒய்வு கொடுத்து விடுகிறோம். மகரடிராவில் தாக்றேகள் போடும் போடை பார்த்தீர்களா....? அங்கு கேட்க ஆள் இல்லை..? அதனை தான் தோழர் உதயா படிக்க ஆள் இருக்க மட்டேன்குரர்கள் என்று கூறியிருப்பார் போல.

muthukumar said...

ஆமாம்
உங்க தலைவர் தனி தமிழ்நாடு கேட்டா தப்பு இல்ல
ரோட்ல்ல சும்மா போற பார்பனரை பூணுலை அறுத்து குடுமியை வெட்டினால் தப்பு இல்ல
தமிழ்நாடு தமிழருகனு பிரிவினை வாதம் பேசினா தப்பு இல்ல

கடந்த காலங்களில் நீங்கள் செய்ததை தற்போது தாக்றேகள் செய்கிறார்கள் .

அவளவே ..

நேர்மையுடன் ,
முத்துக்குமார்

சங்கமித்திரன் said...

முதலில் வரலாறு தெரிந்து கொள்ளுங்கள் தோழரே...நீங்கள் கேட்கும் கேள்விகள் மிகவும் நகைப்பாக இருக்கிறது. அதனால் தான் எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிக்க முடியவில்லை.


பெரியாரின் அறுபது ஆண்டு கால சாதி, மதம்,கடவுள் எதிர்ப்பில் ஒரு இடத்தில கூட பார்பனர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று தனது பேச்சிலோ அல்லது எழுத்திலோ கூறியதே கிடையாது. அவர் நினைத்து இருந்தால் தன ஆயிரம் ஆயிரம் தொண்டர்களை பார்பனர்களுக்கு எதிராக ஏவி விட்டிருக்க முடியும். அவர் ஒஉர் காலும் அப்படி நினது கிடையாது. அவர் கேட்டது எல்லாம் உங்களை போல எங்கள் மக்களும் வாழ வேண்டும் என்றுதான் போராடினார்கள். பெரியாரியல் தெரிந்து கொள்ளுங்கள் பிறகு கேள்விகளை தொடருகள்.

muthukumar said...

நண்பரே

மேலே கூறிய நிகழ்வு நடக்கவ இல்லை என சொல்கிர்களா

நேர்மையுடன்
முத்துக்குமார்

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]