வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, February 27, 2010

வியர்த்து விறுவிறுத்துப் போய்விட்டார் சாய்பாபா..

இந்தியாவின் புகழ்பெற்ற தந்திரக்கலை (மேஜிக்) நிபுணர் பி.சி. சர்க்கார். அவருக்கு மத்திய அரசு சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டுப் பெரு-மைப்-படுத்தியிருக்கிறது. இதற்குமுன் பத்மசிறீ விருதும் வழங்கப்பட்டுள்ளது. அவர் மறைந்து எட்டாண்டு-களுக்-குப்பின் கொல்கத்தா நகராட்சி ஒரு தெருவுக்கு இவரின் பெயரைச் சூட்டிச் சிறப்பு செய்தது. 


இவர் செய்த தந்திரக் கலை என்பது மூட நம்பிக்-கை-களைச் சார்ந்ததல்ல; அறிவியல் பூர்வமாகவே நடத்தி வந்தார்.

இவரது நிகழ்ச்சி என்பது _ இசை, நடனம் உள்ளிட்ட பல கலை வண்ணங்கள் ஒளிரும் கலவையாகக் கண்-டோரை ஈர்க்கும் சிறப்புத்-தன்மை உடையது.

பணம் கொடுத்து அனு-மதிச் சீட்டு வாங்கி மக்கள் ஆர்வத்தோடு ஓடோடிப் பார்க்கும் ஒரு நிலையை ஏற்படுத்தினார். அத்தகைய தந்திரக்கலை மன்னருக்கு நடுவண் அரசு இத்தகைய சிறப்பு செய்தது பாராட்டத்-தக்கதாகும்.

கடவுள் சக்தியென்று கூறி, கையசைப்பில் பொருள்களை வரவழைப்பதாகக் கூறும் சாய்பாபாவை சந்திக்க பி.சி. சர்க்கார் விரும்பினார். ஒவ்-வொரு முறையும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தன்னை அசாம் வியாபாரி என்று கூறிக்கொண்டு, தனக்கு ஆஸ்துமா நோய் நெடுநாளாக இருப்பதாகவும், சாய்பாபா-விடம் குணப்படுத்திக் கொள்கிறேன் என்று கூறிக்-கொண்டு சாய்பாபா ஆசிர-மத்துக்குள் நுழைந்துவிட்டார் பி.சி. சர்க்கார். ஒவ்வொரு-வராகத் தரிசனத்துக்காக அழைத்தார் சாய்பாபா.

பி.சி. சர்க்காரும் அழைக்-கப்பட்டார். சாய்பாபாவைச் சுற்றி அவரைச் சேர்ந்த சீடர்கள் உட்கார்ந்திருந்தனர்.

அசாம் மொழி, இந்தி மொழி ஆகியவற்றைக் கலந்து பேசினார் சர்க்கார். சாய்-பாபா-வால் அதனைப் புரிந்து-கொள்ள முடியவில்லை. மொழி பெயர்ப்பாளரை அழைத்துக்கொண்டு வந்தனர் (அவர்தான் பகவான் ஆயிற்றே _ அசாம் மொழி தெரியாதது ஏனோ?)

உங்களுக்கு என்ன பிரச்சினை என்று கேட்டார் சாய்பாபா. ஆஸ்துமா வியாதி இருக்கிறது; அதைக் குணப்-படுத்திக்கொள்ளவே இங்கு வந்தேன் என்றார் சர்க்கார். மந்திரத்தால் விபூதி கொடுத்து ஆசீர்வதிக்குமாறு வேண்டி-னார். கைவசம் வைத்திருந்த விபூதி தீர்ந்துவிட்ட நிலையில், ஒரு நிமிடம் சாய்பாபா திகைத்தார்.

சூ போட்டு சந்தனம் கொடுத்து ஆசீர்வதித்தார். பி.சி. சர்க்காரே கடைந்-தெடுத்த தந்திரக்கலை நிபுணர் ஆயிற்றே _ நடந்தது என்ன என்பதை நுனிப்பொழுதில் தெரிந்துகொண்டார்.

பலகாரத் தட்டு ஒன்றை எடுத்து வந்து சாய்பாபாவின் சீடர் அதில் சந்தனத்தையும் போட்டார்; அதை சர்க்காரும் கவனித்துவிட்டார் (பாம்பின் கால் பாம்பறியும் அல்லவா!) அவ்வளவுதான் பி.சி. சர்க்கார் திடீரென்று சாய்பாபா செய்த அதே தந்திரத்தைக் கையாண்டு, ரசகுல்லா ஒன்றை வரவழைத்து சாய்-பாபாவிடம் கொடுத்தாரே பார்க்கலாம் (பக்கத்தில் பலகார தட்டு இருந்தது அல்லவா!).

அவ்வளவுதான் வியர்த்து விறுவிறுத்துப் போய்விட்டார் சாய்பாபா; சீடர்கள் கூச்சல் போட்டு என்ன பயன்? பக-வானின் வேடத்தைக் கலைத்-தெறிந்து கம்பீரமாக வெளியில் வந்தார் பி.சி. சர்க்கார் (ஆதாரம்: இம்பிரிண்ட், ஜூன் 1983) என்ன, பி.சி. சர்க்காருக்கு அஞ்சல் தலை வெளியிட்டது சரிதானே!

மயிலாடன் விடுதலை (27.02.10)

3 comments:

சசிகுமார் said...

நண்பா மிக மிக மிக மிக அருமை இதுவரை இந்த விஷயம் எனக்கும் தெரியாது. இப்படி கடவுள் பேரை சொல்லி ஏமாற்றி கொண்டிருக்கும் போலிகளை நம்பாதிர்கள். நல்ல பதிவு. தொடர்ந்து மேலும் பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Muthukumara Rajan said...

இதை விட பெரிய காமெடி என்னவென்றால் கிருத்துவ மத பிரச்சாரங்கள் .

இவர் தள்ளிய தொடுவாரம் பல வருடம் எருத நோய்கள் எல்லாம் குணம் ஆகுதாம்
இவர் தள்ளிய தொடுவாரம் பரிச்சையில் அதிக மதிப்பெண் எடுத்தார்களாம்
இவர் தள்ளிய தொடுவாரம் கடன் தொல்லை தொலைததாம்

என்னக்கு மனசு கனமாக இருந்தா இந்த காமெடி ஷோ பார்பேன் வாய்விட்டு சிரிக்கலாம் .. மனசு லாசா மாறிடும்

டவுசர் பாண்டி... said...

//(ஆதாரம்: இம்பிரிண்ட், ஜூன் 1983)//

இதன் இனைப்பினை இங்கே தர இயலுமா?

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]