வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Sunday, December 06, 2009

திராவிடர் கழகமும்-வி.பி. சிங்கும்...ஒருவரலாற்றுப்பார்வை


இந்தியச் சமுதாயம் - பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்-படுத்தப்-பட்ட சமுதாயம் என்றென்றும் நினைவில் நிலைத்திருக்குமாறு கொள்ள வேண்டிய மறக்கக் கூடாத மகத்தான பெயர்; - மன்னர் குடும்பத்தில் பிறந்து மக்க-ளோடு, மக்களாக உழவர்களோடு உழவராக வாழ்ந்து உயர்ந்து, சமூக நீதிக்காக - இந்தியத் திருநாட்டின் உயர் பதவியாம் தலைமை அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு வெளியேறிய மாவீரர் வி.பி.சிங்.

அந்த மாவீரர் மறைந்து ஓராண்டு உருண்டோடி விட்டது. அவருக்கு- அவருடைய மறைவிற்கு - மறைந்த 26.10.2008 இல் தலைவர் கலைஞர், தமிழர் தலைவர் வீரமணி ஆகியோர் வீரவணக்கம் செலுத்தினர். அன்று மட்டுமில்லை. அவர் மறைந்த அடுத்த ஆண்டாம் இந்த ஆண்டிலும் வீர வணக்கம்- இனி எதிர்வரும் ஆண்டுகளிலும் வீர வணக்கம் செலுத்துவேன்.

எப்போதெல்லாம் சமூக அநீதி துடைக்கப் பெற்று சமூக நீதி எழுகிறதோ அப்போதெல்லாம் வீர வணக்கம். சமீபத்தில் நடைபெற்ற மருத்துவக் கல்லூரிச் சேர்க்கை-யில், 425 பேரில் 50 பேர் மட்டும் உயர் ஜாதியினர் என்று கேள்விப்படுகையில் நம் பிற்படுத்தப்பட்ட பெற்ற சமூகம் ஏற்றம் பெற்று வருகிறது என்று கேள்விப்-படுகையில், தந்தை பெரியாரை நினைக்கிறோம், பேரறிஞர் அண்ணாவை நினைக்கிறோம், தலைவர் கலைஞரை நினைக்கிறோம், தமிழர் தலைவர் வீரமணி அவர்களை நினைக்கிறோம்.

நம் நெஞ்ச நினைவுகள் எனும் தேரின் உருளைகள் அத்தோடு நின்று விடுவதில்லை. வி.பி.சிங் எனும் மாமனி-தரை_ வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு வழங்கியவர்_- கல்வியிலும் அதைத் தொடர முடியாமல் - அப்பாவி மாணவர்களைத் தூண்டி விட்டு ஆரியம் தடைக் கற்கள் பாவியதை எண்ணு-கையில் வி.பி.சிங்கின் வீர உரைகளை எண்ணுகிறோம்.

கடந்த ஆண்டு வீர வணக்க நாளில் தமிழர் தலை-வர் குறிப்பிட்டதை இங்கே மீண்டும் நினைவலை அடித்துச் சென்றுவிடாமல் வி.பி. சிங்கின் இந்த வீரவணக்கத்தில் சுட்டிக் காட்டுவோம்.

ஆயிரம் முறை பிரதமர் பதவியை இழக்கத் தயார்

இந்தக் காலத்திலே ஒரு சாதாரண பஞ்சாயத்து போர்டு பதவியைக் கூடப் பிறர் இழக்கத் தயாராக இல்லை. ஆனால் வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்த பொழுது இட ஒதுக்கீட்டுக்காக மண்டல் பரிந்துரையை அமல்படுத்துவேன் என்று அறிவித்ததற்காக ஒரு கொள்கைக்காகத் தம்முடைய பதவியை இழந்தவர் அவர். அது மட்டுமல்ல; அவர் சொன்னார், இந்த மண்டல் கமிசனுக்காக, சமூக நீதித் தத்துவத்திற்காக நான் ஒரு முறை அல்ல, ஆயிரம் முறை பதவியை இழக்கத் தயார் என்று அன்றைக்கு மாபெரும் அறிவிப்பைச் செய்து பதவியைத் துறந்த ஒரு கொள்கை வீரர் அவர்.

ஒரு நல்ல பொருளை வாங்கவேண்டுமா? அதற்கு ஒரு நல்ல விலை கொடுக்க வேண்டும். நான் நல்ல பொருளை வாங்குதற்காக நல்ல விலை கொடுத்-திருக்கிறேன் என்று துணிச்சலுடன் சொன்னார்.

டாக்டர் வி.பி. சிங்கிற்குத் திராவிடர் கழகம் பிடித்தது, தி.மு.கழகம் பிடித்தது, தலைவர் கலைஞர் அவர்களைப் பிடித்தது, தமிழர் தலைவர் வீரமணி அவர்களைப் பிடித்-தது. ஆனால் பிடிக்காத ஒருவராக விளங்கியவர் யார் தெரியுமா? சாட்சாத் ஜெயலலிதா அம்மையார்.

ஏன் துரோகக் கும்பலுக்குத் தலைமை வகித்து - சந்திரசேகர் அவர்களுடன் சேர்ந்து வி.பி.சிங் அரசுக்கு எதிராக வாக்களித்தாரே, அந்தத் துரோகம் - வி.பி.சிங்கிற்கு எதிரான துரோகம் என்பதால், அல்ல, மண்டல் கமிஷனுக்கு எதிரான துரோகம் என்பதால், - நல்லாட்சி புரிந்து பெண்களுக்குப் பரம்பரைச் சொத்தில் உரிமை பெறச் சட்டம் இயற்றிய நம் கலைஞர் அரசைக் கலைக்-கத் துரோகத் துணை போனதால்,- அம்மையார் வேம்-பாகக் கசந்தது அவருக்கு என்று கேள்வியுறுகையில் நாம் அவருக்கு வீர வணக்கம் தவறாமல் செலுத்தத்தான் வேண்டும்.

திராவிடர் கழகம் வி.பி.சிங் ஆற்றிய அரும் பணி-களை அகிலம் அறிந்திடச் செய்ய திராவிடர் கழகத்தின் சார்பிலே அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பதற்காக நம்முடைய முதல்வர், நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களை அழைத்து, வி.பி.சிங் என்று அவர் தமிழிலேயே கையெழுத்திட்ட படத்தினைத் திறந்து வைத்திடச் செய்தார் தமிழர் தலைவர் வீரமணி அவர்கள்.

வி.பி.சிங்கிற்கு வீரவணக்கம் என்று தந்தை பெரியாரைப் பார்க்காமலே தந்தை
பெரியாரின் கொள்கையைத் தம் கொள்கையாக ஏற்ற காரணத்தினால்.மண்டல் கமிஷன் பற்றி நாடாளுமன்றத்திலே வி.பி.சிங் பேசும்போது இட ஒதுக்கீட்டிற்காகப் பாடுபட்ட சமூக நீதித் தலைவர்களான தந்தை பெரியார் அவர்-களையும், அண்ணல் அம்பேத்கர் அவர்களையும், ராம்-மனோகர் லோகியா ஆகியோர்களுடைய பெருமை-களையும், அவர்களுடைய தொண்டுகளையும் பாராட்டிப் பதிவு செய்தார்கள். அப்படிப்பட்ட பெரும் புரட்சியாளர் என்பதால் அவருக்கு வீரவணக்கம்.

1980 இல் காங்கிரசுத் தலைமை அமைச்சரான இந்திரா காந்தியிடத்திலே அறிக்கை அளிக்கப்பட்டது என்றாலும் மண்டல் குழு பரிந்துரைகளை நடை-முறைப்படுத்தும் பணியிலே இறங்காமல் அதை ஓர் ஆண்டு, ஈராண்டு அல்ல பத்து ஆண்டுகள் கிடப்பிலே போட்டு வைத்தார்கள். 1990 ஆம் ஆண்டு வாக்கில் வி.பி.சிங் அவர்கள் மண்டல் குழுவின்பரிந்துரைகளை வெளியிட்டு ஆணை பிறப்பித்து இதை நாடு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியபோது எத்தனை கிளர்ச்சிகள் தூண்டுதலால் நடைபெற்றன, எத்தனை பேர் அறியாமையில் தீக்குளித்தார்கள்_- கலைஞர் அவர்கள் கூறியது போல், தீக்குளிக்க வைக்கப்பட்டார்கள். இந்த கிளர்ச்சிகளின் விளைவாகப் பதவியைத் துச்சமாகக் கருதி தூக்கி எறிந்துவிட்டு வெளியேற்றப்பட்ட வி.பி.-சிங்கிற்குச் சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுத்து அவரை வரவேற்று அன்றே வீரவணக்கம் செய்து-விட்டது தலைவர் கலைஞர் தலைமையில் அமைந்த திராவிடர் முன்னேற்றக் கழகம், திராவிட இயக்கம்.

தலைவர் கலைஞர் அவர்கள் சொன்னது போல் அவர் அதில் அடைந்த மகிழ்ச்சி இருக்கிறதே அது சாதாரணமானது அல்ல. அவர்கள் சென்னைக்கு விமானத்திலே வந்து இறங்கியபோதும் சரி, பிறகு தமிழ்நாடு முழுவதும் அவரோடு கழகத்தவர் இணைந்து தூத்துக்குடி வரையில், கன்னியாகுமரியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிகள் பாராட்டு நிகழ்ச்சிகள் தமிழகத்தின் மூலை முடுக்குகளிளெல்லாம் பட்டிதொட்டி பட்டணக்-கரையெல்லாம் நடத்தியபோது நெகிழ்ந்து போய்விட்டார்.

அதிகாலையில் மூன்று மணிக்குப் பொதுக் கூட்டம் _அதிலே பேசும்போது வி.பி.சிங் அவர்கள் சொன்-னார்கள். மண்டல் கமிஷன் ஆணை பிறப்பிக்கப்பட்டு அதனுடைய விளைவாக நான் பதவியை இழந்தபிறகு என்னோடு இருந்தவர்களை யெல்லாம் திரும்பிப் பார்க்கிறேன். யாரையும் காணவில்லை. ஆனால் என்னோடு இருந்தால் இப்படிப்பட்ட ஆபத்து வரும், ஆட்சிக்கு ஆபத்து வரும் என்று தெரிந்தும் என்னோடு இருப்பவர் கருணாநிதி ஒருவர்தான்.

அவர் சொன்னது போல் ஆபத்து வந்தது. ஆனால் அதைப் பற்றிக் கவலை கொள்ளாது மண்டல் கமிஷன்ஆணையைக் கலைஞர் ஆதரித்தார், கலைஞர் அரசு ஆதரித்தது - எங்களுக்குக் கோட்டையோ, கொலு-மண்டபமோ அல்ல - கோலோச்சுவது அல்ல பெரிது. கொள்கைதான் பெரிது என்று அண்ணா வழியிலே அண்ணாவின் அன்புத் தம்பியாம் கலைஞர் அறிவித்தார்.

அண்ணா அவர்கள் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் சொன்னார்கள் - அண்ணாதுரையின் ஆட்சிக்கு ஆபத்து என்று சொல்கிறார்கள். என்னுடைய அரசு நிறை-வேற்றியுள்ள சுயமரியதைத் திருமணம் செல்லும் எனும் சட்டம், தமிழகத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர், இந்தி ஆதிக்கத்தை நுழைய விடாது இருமொழிக் கொள்கை ஆகியவற்றை எந்தக் கொம்பனாலும் என்றும் மாற்ற முடியாது. அண்ணாதுரையின் ஆட்சி போனாலும் அண்ணாதுரை வாழ்வான். எவ்வளவு உறுதியான உயர்ந்த மொழிகள். இந்த மொழிகளின் சாயலைக் கலைஞரிடத்து மேலே கண்டோம். அதையேதான் வி.பி. சிங் அவர்களிடத்தும் கண்டோம்.

கவிஞன் வாக்குப் பொய்க்காது என்பார்கள். நம் தமிழினத் தலைவர் தமிழக முதல்வர் கவிஞர் ஆவார். அது போல் இந்தியத் தலைமை அமைச்சர் வி.பி.சிங்கும் கவிஞர்.அந்தக் கவிஞரை நம் கவிஞர் - முதல்வர், தம் கவிதை வரிகளால் அழகுற மாலை சூட்டி ஆராதிக்கிறார்.



தேடக்கிடைக்காத தெள்ளமுதாய்த்
தேமதுரக் கீத இசையாய்த்
தேன்பாகும் தினைமாவும் இணைந்ததொரு
தெவிட்டாத சுவை விருந்தாய்த்
திக்கற்ற மக்களுக்குத் திசை காட்டும் நிலவொளியாய்
வாய்த்திட்ட நற்பேறு
வாராது வந்த மாமணி வி.பி.சிங்
வகுப்புவாரி விகிதாச்சாரம் - பிற்படுத்தப்பட்டோர்
வாழ்வுக்கு ஒரு வரப்பிரசாதம்

என்று பாடிய கவிஞர் கலைஞர் கூற்று இவை:

ஆட்சி வரும் போகும்! நிலையன்று
அய்யா அண்ணா வகுத்த கொள்கை
போகாது வாழும்! நிலையாக! எனவே
ஆட்சியில் இருப்பினும் இல்லாதிருப்பினும்
தன்மானம் உயிரென மதிப்போம்!
தமிழர் இனமானம் என்றுமே காப்போம்!

வி.பி.சிங் அவர்கள் உத்தரப் பிரதேச மாநிலத்திலே பிறந்திருந்தாலும் கூட, அவர் தமிழ் நாட்டை, தமிழ் நாட்டு மக்களைத்தான் நேசித்தார். ஏன்?

வி.பி.சிங்கிற்கு - அவருடைய கொள்கைக்கு இங்கே பெரியாரின் இயக்கமும், பெரியாரின் இயக்க வழி ஆட்சி நடத்தும் கலைஞரும் ஆதரவு. ஏன் என்றால் அவர் இந்த நாட்டில் 80 விழுக்காடு பிற்படுத்தப்பட்ட மக்களைக் கைதூக்கி விட வந்த காவலர் என்பதை இந்தியத் திரு-நாட்டிலேயே தமிழ் நாட்டிலே வாழ்ந்த மக்கள்தான் உணர்ந்தனர்.

சிறுநீரகக் கோளாறினால் பத்து ஆண்டுகள் டயாலிசிசில் இருந்த அவருக்கு சிறுநீரகத்தைக் கொடை-யாக அளிக்க முன் வருபவர்கள் உள்ளனரா என்று தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் வேண்டுகோள் விடுத்தபோது நான், நீ என்று போட்டி போட்டுத் திராவிடர் கழகத் தொண்டர்கள் முன் வந்த போது உள்ளபடியே நெகிழ்ந்து போன அவர் தமிழ் மக்களை நேசித்த அவர் மேலும் மேலும் தமிழர் அன்பைத் தம் இதயச் சிறையில் பூட்டிக் கொண்டார்.

கவிஞர் வி.பி.சிங்கின் கவிதை உள்ளத்திற்குக் கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள், கவிஞர் தலைமை அமைச்சர் வி.பி.சிங்கிற்குக் கவிதை-யால் கண்ணீர் அஞ்சலி செலுத்தும் வரிகள் இவை:

பெரியாருக்குள்ள சிறப்பு - நேரில்
அறியாதவரையும் ஆட்கொள்வார்
காற்றுக்கு எல்லை ஏது?
பெரியார் கூற்றுக்குத்தான் தேசம் ஏது?
சரியானஎடுத்துக்காட்டு நீயன்றோ?
மன்னர் குடும்பத்தில் மலர்ந்தாய்
மண்குடிசை மக்களிடத்தே குடியிருந்தாய்
உன் சிறுநீரகம் பழுதடைந்து
கருஞ்சட்டைக் கண்மணிகள் ‘நான்’ ‘நீ’ என்று
தான் கொடுக்க முன் வந்தனரே
நீ நெகிழ்ந்து போனாய்; நினைத்தாலும்
நெக்குருகிப் போகின்றோமே
தன் குடும்பத்து இழப்பாகக்
கருஞ்சட்டையெல்லாம் கலங்குகின்றது
நாடே அழுகிறது எங்கள்
நாகம்மை இல்லமும் கதறுகிறது

கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களின் கவிதை வரிகள் காணும் நாடே அழுகிறது, எங்கள் நாகம்மை இல்லமும் கதறுகிறது என்பதில் ஒரு வரலாற்று உண்மை இருக்கிறது.

தமிழ்நாட்டு மக்களை நேசித்த வி.பி.சிங் சிறந்த கவிஞர், சிறந்த ஓவியர். அவர் எழுதிய கவிதை நூலினை - அப்படியே தமிழில் மொழி பெயர்த்து திருச்சி-யில், திராவிடர் கழகம் சார்பில் வெளியிட்டனர்.

அந்நூலின் பெயர்தான் ‘‘ஒரு துளி பூமி ஒரு துளி வானம்’’ அவர் கவிதையில் பகுத்தறிவுக் கருத்து-களும் மிளிர்கின்றன. அந்த நூலின் விற்பனையில் கிடைக்கும் தொகையை நாகம்மையார் சிறுவர் விடுதிக்கு வழங்கியவர் அவர்.

தம்முடைய நூலைச் சென்னைக்கு வந்து கலைஞர் அவர்களுடைய கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் சந்தித்து அவரிடம் வழங்கினார்.வி.பி.சிங் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களிடம் காட்டிய பேரன்பும், பெருமரியாதையும், திராவிடர் கழகத்திடமும் அது நடத்தும் கல்வி நிலையங்கள் மீதும், தமிழர் தலைவர் வீரமணி அவர்களிடமும் காட்டிய வற்றாத மதிப்பும், பாசமும் என்றும் மறக்கமுடியாதவை. டில்லி பெரியார் மய்யம் இடிக்கப்பட்டதைக் கேட்டு மருத்-துவமனையில் இருந்த அவர் துடியாய்த் துடித்த-தோடு சென்னையில் நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில், தந்தை பெரியாரை நேரில் பார்த்திராத, அவருடைய கொள்கையால் மட்டுமே ஈர்க்கப்பட்ட அந்த மாபெரும் தலைவர் இவ்வாறு முழங்கினார். ‘‘நான் அன்று அங்கிருந்திருந்தால் புல்டோசரின் முன்னே நின்று என் உயிரையும் தந்து தடுத்திருப்பேன் என்று கூறியதோடு அமையாமல், இன்றைக்கு டெல்லியிலே முதன்மையான இடத்திலே அமைந்து வடபுலத்திலும் பெரியாரின் நிலைத்த பெருமை கூறும் பெரியார் மய்யம் உருவாக வி.பி.சிங் அப்போதைய தலைமை அமைச்சர் வாஜ்-பேயிடம் பேசிப் பெற்றுத் தந்ததை திராவிடர்கள் மறக்க-முடியுமா?

காலமெல்லாம் ஊழலை ஒழிக்கப் போராடியஅவர் காலமானதையும் ஊடகங்கள் கண்டு கொள்ளவில்லை என்பதோடு, ஓராண்டு நிறைவு நாளைக் குறித்து ஒரு வரி கூடச் சொல்லாதது, நன்றி மறந்த சிலரின் செயல்கள் என்ற போதிலும், திராவிடர் கழகம் வி.பி.சிங்கிற்கு வீர வணக்கம் செலுத்தியது போற்றப்பெற வேண்டிய ஒன்று.

வி.பி.சிங் மண்டல் கமிஷன் சாதனையாளர் மட்டு-மல்லர். தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழினத் தலைவர் அவர்கள் தம் இரங்கலுரையில் குறிப்பிட்டது போல் வழங்கிய கொடைகள் வரலாற்றுச் சிறப்புடையவை.

கருநாடகத்தில் அவருடைய ஜனதாதளம் ஆட்சியில் இருந்த போதிலும், காவிரி நடுவர் மன்றம் அமைத்-ததையும் நன்றியோடு தமிழகம் நினைவு கூர வேண்டும்.

சென்னை மீனம்பாக்கத்திலுள்ள வெளிநாட்டு விமான தளத்திற்கு பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயரும், ஏழைப் பங்காளர் காமராஜர் பெயரும் சூட்ட வேண்டும் என்று தலைவர் கலைஞர் அவர்கள் வேண்டுகோள் விடுத்தார். அதனை விழா மேடையிலேயே வி.பி.சிங் சிவப்பு நாடா முறையோ, சாக்குப் போக்கோ சொல்லாமல் அறிவித்தார் என்பது மறக்கக் கூடியதா?

1989 இல் திராவிட முன்னேற்றக் கழகம் மூன்றாவது முறையாகத் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று 27.1.1989 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில், பதவிப் பிரமாண உறுதி மொழி எடுத்துக் கொண்ட மாபெரும் விழாவில் வி.பி.சிங் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அன்று மாலை சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்ற வாக்காளர் பெருமக்களுக்கு நன்றி தெரி-விக்கும் பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தில் கலந்து வாழ்த்தினார்.

வி.பி.சிங் தலைமை அமைச்சராகப் பதவிப் பொறுப்பை ஏற்றதற்குப் பின்னர், தலைவர் கலைஞரின் அழைப்பின் பேரில் சென்னைக்கு 1990 பிப்ரவரித் திங்கள் வந்தபோது, தமது நிகழ்ச்சி நிரலையே மாற்றி தலைவர் கலைஞரின் இல்லத்திற்கு வந்து தலைவர் கலைஞரைப் பெருமைப்படுத்தினார்.

கொட்டும் மழையிலும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் டில்லி சென்று வி.பி.சிங் உட-லுக்குக் கண்ணீர் மல்க மலர் வளையம் வைத்து அவ-ருடைய துணைவியார், மகன்களுக்கு ஆறுதல் கூறித் திரும்பி கழகம் தன் நன்றியறிதலை நன்கு பதிவு செய்தது.

வி.பி.சிங் அவர்களுக்கும், தலைவர் கலைஞர் அவர்களுக்கும் உள்ள தொடர்புகள், உறவுகள், நட்பின் ஆழம் ஆகியன உலகம் அறிந்ததே.

12.12.2008 இல் சென்னை பிட்டி தியாகராயர் கலை அரங்கில் வி.பி.சிங்கின் படத்தைத் திறந்து வைத்து தலைவர் கலைஞர் புகழுரை ஆற்றினார்.

இவ்விழாவிற்குத் தலைமை வகித்து உரையாற்றிய தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தம் உரையை நிறைவு செய்தபோது, வி.பி.சிங் அவர்களுக்கு ஒரு நினை-வுச் சின்னம், என்றென்றும் தமிழ்நாட்டு மக்க-ளுடைய நெஞ்சிலே நிலைக்கக் கூடிய சின்னம் அமைத்-திட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இதற்குப் பதில் அளித்த தலைவர் கலைஞர், ‘‘தந்தை பெரியாரின் வழி நின்று உழைக்கின்ற ஓர் அருமைத் தொண்டர். அவருடைய மாணவர், என்னுடைய நண்பர் என்பதால் மட்டுமல்ல, தந்தை பெரியாருக்கு, அவருடைய கொள்கைகளை, எண்ணங்களை இன்றைக்கும் காப்பாற்றி வருகின்ற அவருடைய உண்மையான வழித்தோன்றல் என்கிற முறையில் இந்த ஆணையை எனக்குப் பிறப்பித்திருக்கின்றார்’’ என்று குறிப்பிட்டார்.

மேலும் தலைவர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டது:

 ‘‘இதை நான் இங்கேயே அறிவிப்பது, என்னைப் பொறுத்த வரையில் ஒரு விளம்பரமாகத்தான் ஆகும் என்பதால் அல்ல. நம்முடைய தமிழர் தலைவர் வீரமணி அவர்களுடன் கலந்து பேசி, அந்த நினைவுச் சின்னம் எப்படி அமையவேண்டும், எங்கே அமைய வேண்டும், எத்தகைய நினைவுச் சின்னமாக அது இருத்தல் வேண்டும் என்பது பற்றி விரைவில் அறி-விப்பேன் என்பதை_- மன்னிக்கவும், விரைவில் அறிவிப்-போம் என்பதை இந்த நிகழ்ச்சியிலேயே நான் கூறிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.’’

கலைஞர் அரசின் கொள்கையே சொல்வதைச் செய்-வோம், செய்வதைச் சொல்வோம் என்பது மட்டுமல்லாது, சொல்லாத பயன்களையும் செய்பவர். அது போல் கலைஞர் அவர்கள் யாருக்கு எதை எப்படி வழங்க வேண்டும் என்பதை உணர்ந்து தெளிந்தவர் என்பதன் பயனாகத்தான் தமிழர் தலைவருக்கு முரசொலியிலிருந்து ‘தந்தை பெரியார் விருது’ வழங்கிச் சிறப்பித்தார்.

எனவே, தலைவர் கலைஞருக்கு யாரும் நினைவூட்ட வேண்டிய நிலையில் இல்லாத மாபெரும் தலைவர் அவர் என்பதை அறிவோம். கலைஞரின் மன உலையில் தயாராகிக் கொண்டிருக்கும் சமூக நீதிக் காவலர் வி.பி.சிங்கிற்குத் தக்க நினைவுச் சின்னம் நிச்சயம் காலம் காலமாக நினைத்துப் போற்றத்தக்கதாக அமையும்.

ஏன் என்றால், எவரையும் விட சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் அவர்களை உணர்ந்து தெளிந்து உள்ள நினைகளைப் போற்றுபவர். அதனாலேதான், அவரிடம் ஒரு முறை உங்களுக்குப் பிடித்த தலைமை அமைச்சர் யார் என்று வினா தொடுக்கப்பட்ட போது,

இந்தியாவின் முதல் தலைமை அமைச்சர் அமைதிப் புறா நேருவையோ, உறவுக்குக் கை கொடுப்போம் உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்று போற்றிய பெண் தலைமை அமைச்சர் இந்திராவையோ, ஜெய்கிசான் என்று முழங்கிய சாஸ்திரியையோ சுட்டிக் காட்டவில்லை. அப்பழுக்கில்லாத மனிதர் சமூக நீதிக் காவலர் என்ற சொற்றொடருக்குப் பொருத்தமானவர், ஜாதிமுறை திறமைக்கு எதிரானது. திறமை வெளிப்-படுவதற்கு உரிய இடத்தை அது சுருக்கி விடுகிறது. இந்த இடத்தை விரிவாக்கும்பொழுது நாடு முழு-மைக்கும் மறைந்துள்ள திறமை வெளிப்படுவதற்கான வாய்ப்பைத் திறந்து விட்டவர்கள் ஆகிறோம். மக்களில் 20 விழுக்காட்டினர் இந்தஅளவுக்கு சாதிக்க முடியும் என்றால் 100 விழுக்காட்டினர் பங்கேற்பதால் உருவாகும் வளர்ச்சியை எண்ணிப் பாருங்கள். இட ஒதுக்கீடு திறமைக்கு எதிரானது அல்ல. திறமையை வெளியில் கொண்டு வருவதற்கான ஒரு முயற்சிதான் அது (‘தி இந்து’, 15.7.2006) என்று பெரியார் வழியில் தகுதி, திறமைக்கு விளக்கம் அளித்திட்ட,

‘‘இந்த நாட்டிலே இருக்கக் கூடிய தாழ்த்தப்பட்ட மக்களை, சூத்திரன் என்று சொல்லப்படுகின்ற பிற்-படுத்தப்பட்ட மக்களை, வருணம் என்று சொல்லக் கூடிய சாத் என்கிற அமைப்பு அவர்களுடைய உள்ளங்-களிலே விலங்கை மாட்டி, அவர்களை வெறும் எந்திர மனிதர்களாக்கியது. அதனால்தான் தந்தை பெரியார், சுயமரியாதை என்ற ஆணியை, அந்த ஜாதி அமைப்பின் தலையைப் பார்த்து மிகச் சரியாக அடித்தார்கள்’’ என்று உரைத்திட்ட,

‘‘அரசியலிலேயே என்னுடைய தோழர் ராம் விலாஸ் பஸ்வானிடமிருந்து நான் உணர்ச்சியைப் பெறுகிறேன். அதே போல் சமுதாயப் பணியில் நண்பர் வீரமணி அவர்களே, உங்களிடமிருந்து நான் அந்த உணர்ச்சியைப் பெறுகிறேன்’’

என்று உரைத்திட்ட, அரசியல் உலகில் பண்பட்ட, மும்பையில் நடந்த கலவரத்தைக் கண்டிக்கும் வகையில் உண்மையாகவே தண்ணீர் கூட அருந்தாமல், சிறுநீரகப் பாதிப்புக்கு ஆளான,

வாரம் இரு முறை ரத்த சுத்திகரிப்பு செய்து கொண்டு அதே நேரத்தில் பொதுத் தொண்டையும் தொய்வின்றி மேற்கொண்டு வந்த,

அன்னை மணியம்மையார் சிலையைத் திறந்து வைத்த,
நடிகவேள் ராதா மன்றத்தைத் திறந்திட்ட,டில்லி பெரியார் மய்யம் இடிக்கப்பட்ட போது எதிர்த்து இடி முழக்கம் செய்திட்ட,மாண்புமிகு வி.பி.சிங்தான் தனக்குப் பிடித்த தலைமை அமைச்சர் என்று ஏழரை கோடி மக்களின் இதய நாயகர் கலைஞர் எடுத்துரைத்தார்.

தாம் போற்றிய, தாம் மதித்துப் போற்றிய, தாம் என்றும் தன் உள்ளத்தின் அடித்தளத்தில் வைத்தி-ருக்கும் மாபெரும் மனிதர் வி.பி. சிங் அவர்களைக் குறித்துப் பெருமை பொங்கக் கூறுவதை எடுத்துக் கூறி, வி.பி.சிங் அவர்களுக்கு நாமும் நம் வீர வணக்கத்தைச் செலுத்துவோம்.

சமூக நீதிக் காவலர் என்ற இந்தச் சொற்றொடர் இந்தியாவிலே இன்றைக்கு ஒருவருக்குப் பொருந்தும் என்றால், அவர் வி.பி.சிங் அவர்கள்தான். நான் அதைச் செல்வதற்குக் காரணம், அவர் ஒரு சாதாரண மனிதராக இருந்து பதவிப் பொறுப்புகளிலே இல்லாதவராக இருந்து, தன்னுடைய தியாகத்தால், உழைப்-பால், ஆற்றலால், சமூக நீதிக்குப் பாடுபட்டிருப்பாரே யானால், அது ஆச்சரியப்படத்தக்க ஒன்றல்ல; போற்றப்-படத்தக்க ஒன்றாக இருக்கலாம். ஆனால் இது ஆச்-சரியப்படத்தக்கதும், போற்றப்படத் தக்கதுமான இரண்டு காரணங்களுக்காக அவருக்கு மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது.      - தலைவர் கலைஞர் உரை 12.12.2008

-விடுதலை(06.12.2009) தொகுப்பு முனைவர் ந.க.மங்களமுருகேசன்.

சிறைப்பறவை சிரித்துக் கொண்டே பெல்லாரி சிறைக்-குச் சென்றது


‘1938 டிசம்பர் 5,6 ஆகிய நாள்கள் தமிழ்நாட்-டின் வரலாற்றில் குறிப்பிடத்-தகுந்த நாள்கள்! ஆம். இந்-நாளில்தான் தந்தை பெரியார் இந்தி எதிர்ப்-புக்காக நீதிமன்-றத்தில் தோன்றி வழக்கு-களைச் சந்தித்தார்.


நவம்பர் 13-_இல் சென்-னையில் பெண்கள் மாநாடு கூட்டி “பெரியார்” என்ற பட்-டத்தை வழங்கி _ வரலாற்-றில் இடம் பெற்றனர் மாதர் குல மாணிக்கங்கள். இந்தி எதிர்ப்-புக்களத்தில் பெண்-களை மறியல் செய்யத் தூண்டினார் என்ற குற்றச்-சாற்றின் பேரில் தந்தை பெரியார்மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.

1938டிசம்பர் 5,6 நாள்-களில் சென்னையில் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்கு நடை-பெற்றது. சர். ஏ.டி. பன்னீர்-செல்வம், ராஜா சர். முத்தையா செட்டியார் போன்ற வர்கள் எதிர் வழக்காட வேண்டும் என்று எவ்வளவோ கேட்டுக் கொண்டும் தந்தை பெரியார் மறுத்து விட்டார். எழுத்து மூலம் நீதிபதியிடம் ஓர் அறிக்கை கொடுத்ததோடு தமது கடமையை முடித்துக் கொண்டார். அது வாக்கு மூலமா? தண்டனையைக் கொடுக்-கச் சொல்லித் தூண்-டக்கூடிய சொற்றொடர்களா? இதோ தந்தை பெரியார் பேசுகிறார்.

“”இந்தக் கோர்ட் காங்-கிரஸ் மந்திரிகள் நிர்வாகத்-திற்கு உட்பட்டது.

நீதிபதியாகிய தாங்களும் பார்ப்பன வகுப்பைச் சேர்ந்-தவர்கள்; இவை தவிர, இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை ஒழிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் மந்திரிகள், அதி தீவிர உணர்ச்சி கொண்டி-ருக்-கிறார்கள். அது விஷயத்-தில் நியாயம், அநியாயம் பார்க்க வேண்டியதில்லை-யென்-றும், கையில் கிடைத்த ஆயுதத்தை எடுத்து உப-யோகித்து ஒழித்தாக வேண்-டுமென்றும், இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை திடீரென்று வந்து புகுந்த திருடர்களுக்கு ஒப்பிட்டு கனம் முதல் மந்திரியார் இந்தி எதிர்ப்பு விஷயமாய் மந்திரி-கள் எடுத்துக் கொள்ளும் நட-வடிக்கைகள் அடக்கு-முறையே என்பது எனது கருத்து. அடக்கு முறைக் காலத்தில் இம்மாதிரி கோர்ட்-டுகளில் நியாயத்தை எதிர்-பார்ப்பது பைத்தியக்காரத்-தனம்.

ஆகவே கோர்ட்டார் அவர்கள் தாங்கள் திருப்தி அடையும் வண்ணம் எவ்-வளவு அதிக தண்டனை கொடுக்க முடியுமோ, அவை-களையும், பழி வாங்கும் உணர்ச்சி திருப்தி அடையும் வரைக்கும், எவ்வளவு தாழ்ந்த வகுப்பு கொடுக்க உண்டோ அதையும் கொடுத்து, இவ்-வழக்கு விசாரணை நாட-கத்தை முடித்து வைக்கும்-படி வணக்கமாகக் கேட்டுக் கொள்-கிறேன். எவ்வளவு நியா-யமான லட்சியத்தை அடைய வேண்-டு-மானாலும் அதற்காகக் கஷ்ட நஷ்டங்-களடைதல் என்னும் விலை கொடுக்க வேண்டுமா-தலால் அவ்வளவு வேண்டிக் கொள்கிறேன்” என்றார். தந்தை பெரியார்.

நீதிமன்றத்தில் இப்படி-யெல்-லாம் கூறிய தலைவர் தந்தை பெரியாரன்றி வேறு ஒரு வரும் உண்டோ!

நீதிபதி தீர்ப்புக் கூறினார்:

செய்த குற்றங்கள் இரண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோராண்டு கடுங்காவல், ஒவ்வோராயிரம் ரூபாய் அபராதம், அபராதம் செலுத்-தாவிடில் மீண்டும் அவ்வாறு மாதம் தண்டனை; இரண்டு தண்டனைகளையும் தனித்-தனி காலத்தில் அடைய வேண்டும்.

சிறைப்பறவை சிரித்துக் கொண்டே பெல்லாரி சிறைக்-குச் சென்றது.

-விடுதலை  மயிலாடன் 06.12.09

Saturday, December 05, 2009

சமச்சீர் கல்வித் திட்டம்: இந்துத்துவா வெறியர்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தவேண்டாம்!

சமச்சீர் கல்வித் திட்டத்தில் இடம்பெறும் புதிய பாடப் பகுதிகளை எதிர்த்து இந்துத்துவா சக்திகள் கூச்சலிடுவதைக் கண்டித்தும், புதிய பாடத் திட்டத்தில் புராணங்களுக்கு இடம் இருக்கக் கூடாது என்று வலியுறுத்தியும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:


தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்து-வதற்கான அவசர சட்டத்தை ஆளுநர் பிறப்பித்-துள்-ளார். சமச்சீர் கல்வி வரும் 2010 ஆம் கல்வியாண்டில் முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளில் அறிமுகமாகிறது. 2011 இல் 2 ஆம் வகுப்பு மற்றும் 7 ஆம் வகுப்பிலும், 2012 இல் 10 ஆம் வகுப்புவரை சமச்சீர் கல்வி நடை-முறைக்கு வரும்.

மாநிலக் கல்வித் திட்டம், ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக்-குலேஷன், ஓரியண்டல் ஆகிய நான்கு வகை யான கல்வி முறைகளை ஒருங்கிணைத்து மாநிலப் பொதுப் பள்ளிக் கல்வி வாரியம் தொடங்கப்படும் என்றும், அதேபோல ஒரே மாதிரியான பொதுப் பாடத் திட்டமும் கொண்டுவரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பொதுப் பாடத் திட்ட வரைவு இணைய தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

வீண் கூச்சல் போடும் கூட்டம்

முழுமையான அளவு எதையும் தெரிந்துகொள்-ளாமல் அரைவேக்காட்டுத் தனத்துடன் இந்து முன்னணி இராம. கோபாலன் வகையறாக்கள் கூச்சல் போட ஆரம்பித்துவிட்டனர்.

‘‘ஈ.வெ.ராவின் இந்து விரோதக் கொள்கையைத் தூக்கிப் பிடிக்க முதல்வர் முயல்கிறார், நாத்திகத்தை மாணவர்களிடம், திணிக்க சதி நடக்கிறது, இந்து மதத்-தைக் கேவலப்படுத்தும் பாடங்கள் இடம்பெற்றுள்ளன.

மறுமலர்ச்சிப் பாடங்கள், விழிப்புணர்வுப் பாடங்கள், மூட நம்பிக்கை எதிர்ப்பு இவையெல்லாம் இடம் பெற்றுள்ளன. இவை எல்லாம்தான் சமச்சீர் கல்வியா? எந்தத் தைரியத்தில் இப்படி ஒரு வரைவுத் திட்டத்தை வைத்தார்கள்? அரசின் பிடியில் கல்வித் துறை சிக்கி சின்னா பின்னமாகிறது’’ என்றெல்லாம் திருவாளர் இராம.கோபாலன் ஒப்பாரி வைத்துள்ளார்!

கல்வி என்பது பழைமையின் குப்பைத் தொட்டியா?

மிக நீண்ட காலமாக நம் நாட்டுக் கல்வி என்பதில் பழைமையின் குப்பைத் தொட்டியாக, அரைத்த மாவையே அரைத்த பத்தாம் பசலித்தனமான, முரண்-பாடுகள் நிறைந்த பாடத் திட்டங்கள்தான் இடம்பெற்றி-ருந்தன. இவையெல்லாம் பெரும்பாலும் பார்ப்பனிய சிந்தனையின் தாக்கமாகவே நெடியேறிக் கிடந்தன.

கால வளர்ச்சிக்கு ஏற்றதாகவோ, மாணவர்களின் ஆற்றலை வெளிக் கொணரும் தன்மை உடைய-தாகவோ இருந்ததில்லை. பெரும்பாலும் மனப்பாடம், நெட்டுரு என்பதுதான் கல்விக்கான தகுதியாகவும், திறமையாகவும் கருதவும்பட்டன.

இதில் ஒரு மாற்றம் வரும்போது ஆதிக்கக்காரர்-களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மையாகும்.

விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கச் சொல்லுகிறது இந்திய அரசமைப்புச் சட்டம்; மந்திரங்களை அர்த்தம் புரியாமல் உருப்போட்டு ஒப்பித்த பரம்பரையல்லவா _ அதில் மாற்றம் என்றால் குமுறத்தான் செய்யும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கடமைகள் என்னும் பகுதியில் ‘51ஏ’ உள்பிரிவு ‘எச்’ என்ன கூறுகிறது?

மக்களிடையே விஞ்ஞான மனப்பான்மையைத் தூண்டிட வேண்டும், ஆய்வு மனப்பான்மை, மனிதாபி-மானம், சீர்திருத்த உணர்வுகள் ஊட்டப்பட வேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளதே!

இது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில், அதனைத் தொடக்கப் பள்ளியில் இருந்துதானே விதைத்து வளர்த்து மேலே கொண்டு வரவேண்டும், கல்வித் திட்டம் இந்தத் திசையில்தானே அமையவேண்டும்?

இதை விட்டுவிட்டு இன்னும் “பித்தா பிறைசூடி பெருமானே!’’ என்று செய்யுளை மனப்பாடம் செய்யச் சொன்னால், மாணவர்கள் மத்தியிலே எப்படி விஞ்ஞான மனப்பான்மை வளர முடியும்?

சந்திரயான் யுகத்தில் பித்தா பிறைசூடியா?

‘சந்திரயான்’ யுகத்திலே சிவபெருமானின் தலையில் சந்திரன் இருக்கிறான், பிறையைச் சூடிக் கொண்டி-ருக்கிறான் என்று சொல்லிக் கொடுக்கலாமா? மதச் சார்பற்ற அரசின் பாடத் திட்டத்தில் கடவுள் வாழ்த்துத் தேவையில்லைதான். அப்படியே வைத்தாலும் எந்த மதத்தைச் சார்ந்த வாழ்த்தை வைப்பது?

பள்ளிக்குச் செல்லுவது உண்மையையும், அறிவியலையும் கற்றுக் கொள்வதற்கா? மூடத்தனங்-களை மூளைக்குள் திணித்துக் கொள்வதற்கா? கல்வியில் மதம் கலக்கவே கூடாது; தேவையானால், தனியே படிக்கட்டும்!

பகுத்தறிவு என்றாலே ஒவ்வாமை என்று கருதும் கூட்டத்தின் கூக்குரலையெல்லாம் அரசு பொருட்படுத்தத் தேவையில்லை. எந்த ஒரு மாற்றத்தையும், வளர்ச்சியை-யும் விரும்பாத ஒரு கூட்டம் எப்பொழுதும் இருந்து-கொண்டுதானிருக்கும்.

பெரியாரைப்பற்றிச் சொல்லிக் கொடுக்காமல், சங்கராச்சாரியாரைப்பற்றியா சொல்லிக் கொடுக்க முடியும்? சமூகப் புரட்சி வரலாற்றில், சமூகநீதி வரலாற்றில் பெண்ணுரிமைப் பிரச்சினையில் தந்தை பெரியார் அவர்களைப்பற்றிச் சொல்லிக் கொடுக்காமல், ‘‘தீண்டாமை க்ஷேமகரமானது’’ என்று கூறும் சங்கராச்-சாரி-யார்களைப்பற்றியா பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க முடியும்?

தெரசாவைப்பற்றி பாடம் என்றால் உடனே ஒரு கூட்-டத்திற்கு நினைப்பெல்லாம், அவர் கிறிஸ்துவர் என்-பது-தான்; அவர் ஆற்றிய மனிதத் தொண்டறம்பற்றி-யெல்லாம் அவர்களின் கவனத்துக்கு வராது. அவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டபோதுகூட அது ஒரு கிறிஸ்துவ சதி என்று சொன்னவர்களிடம் வேறு எந்த விரிந்த பார்வையை எதிர்பார்க்க முடியும்?

பொதுவாக கல்வி வளர்ச்சி அடைவதில் பார்ப்-பனர்-களுக்கு எப்பொழுதுமே நல்ல எண்ணம் கிடையாது. சூத்-திர-னுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்-காதே என்பது தானே அவர்களின் மனுதர்மம்.

குலக்கல்வித் திட்டம்தான் வேண்டுமா?

சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் இரண்டு முறை ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ளார். 1937_39 இல் ஒரு-முறையும், 1952_54 இல் இன்னொரு முறையும்; அந்த இரண்டு முறையும்கூட இருந்த பள்ளிக் கூடங்களை இழுத்து மூடியவர்தானே அவர்? 1937 இல் 2500 ஆரம்பப் பள்ளிகளையும், 1952 இல் 6000 ஆரம்பப் பள்ளிகளையும் இழுத்து மூடிய ‘மகானா’யிற்றே!

1952 இல் குலக்கல்வித் திட்டம் கொண்டு வந்து அப்பன் தொழிலை மகனும் படிக்கவேண்டும் என்று சட்டம் போட்டவராயிற்றே!

தந்தை பெரியார் தலைமையில் வெகுண்டெழுந்த தமிழினம் ஆச்சாரியாரைப் பதவியை விட்டு ஓடச் செய்யவில்லையா?

இன்னும் அந்த மிச்ச சொச்சங்கள் நாட்டில் இருக்-கின்றன என்பதற்கு அடையாளம்தான் சமச்சீர் கல்விக்கு எதிரான கூச்சல்கள். இதற்கெல்லாம் தமிழக அரசு செவி கொடுக்கவேண்டிய அவசியமில்லை. இன்னும் சொல்லப்போனால், இத்தகையவர்களின் எதிர்ப்புதான் இந்தக் கல்வித் திட்டம் மிகச் சரியாகவே இருக்கிறது என்பதற்கான அளவுகோல்கூட!

வேத கணிதம் கற்கச் சொன்னவர்கள்தானே?

சமச்சீர் கல்வித் திட்டத்தைக் குறை கூறும் இவர்கள் யார்? பல்கலைக் கழகங்களில் வேத கணிதத்தையும், போலி விஞ்ஞானமான சோதிடத்தையும், புரோகித மந்-திரங்களையும் பாடத் திட்டங்களில் வைத்தவர்கள்-தானே? இந்திய வரலாற்றுக் கழகத்தில் கே.எம். பணிக்கர், சுமித் சர்க்கார் போன்ற புகழ்பெற்ற வரலாற்று ஆசி-ரியர்களையெல்லாம் நீக்கிவிட்டு அந்த இடங்களில் எல்-லாம் ஆர்.எஸ்.எஸ்.காரர்களாகத் தட்டிப் பார்த்து நிய-மனம் செய்தவர்கள்தானே!

உத்தரப்பிரதேசத்தில் இவர்கள் வகுத்த பாடத் திட்டங்கள் எல்லாம் என்ன?

“பாபர் மசூதியை இடிக்கும் முயற்சிகள் நடந்தபோது முலாயம் சிங் யாதவைச் சேர்ந்த ஆட்களின் துப்பாக்கிக் குண்டுகளால் எத்தனை இந்துக்கள் கொல்லப்பட்டனர்? (‘அவுட் லுக்’, 10.5.1999).

இந்த யோக்கியர்கள்தான் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தும் பாடத் திட்டங்களின் இந்து மத எதிர்ப்புக் கருத்துத் திணிக்கப்படுவதாகப் புலம்புகிறார்கள். ஒட்டகம் ஓணானைப் பார்த்துப் பாடம் படிப்பதா?

புராணங்கள் தேவையில்லை

நமது கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில்-கூட, திருவாசகம், தேவாரம், நாலாயிர திவ்விய பிரபந்தம், பெரிய புராணம் மற்றும் கம்ப இராமாயணம் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். புரா-ணங்கள் வரலாறு அல்ல _ மூடக் குப்பைகள்! அதுவே நமக்கு உடன்பாடில்லாதவைதான்.

இந்தப் பழங்குப்பைகள் எல்லாம் தேவையில்லை என்பது நமது அழுத்தமான கருத்தாகும். இவை ஜாதி உணர்வையும், மதமாச்சரியங்களையும், மூட நம்பிக்கைகளையும் தூண்டக் கூடியவை _ கட்டிக் காக்கக் கூடியவை!

மகனைக் கொன்று கறி சமைத்து சிவனடியார்க்கு விருந்தளித்த இயற்பகை நாயனாரின் கதைகள் (பெரிய புராணம்) தேவைதானா? மூடத்தனமும், கொலைப் பாதகமும் கொண்டதல்லவா இது?

வெறுப்போடு சமணர் முண்டர் என்று தொடங்கும் நாலாயிர திவ்விய பிரபந்தத்தின் பாடல் என்ன சொல்-லுகிறது? சமணர்களின் தலையை ஆங்கே அறுப்பதே தரு-மங்கண்டாய், அரங்கமா நகருள்ளானே என்பதெல்-லாம் தேவைதானா?

முதலையுண்ட பாலகனை மீட்டதெல்லாம் நம்பக்கூடியதுதானா?

தேவாரம் மட்டுமென்ன? அதிலும் சமண, பவுத்-தர்களின் அழகிய பெண்களைக் கற்பழிக்க அருள்-புரி-வாயாக என்று ஆண்டவனிடம் மனுப்போட-வில்லையா?

முதலையுண்ட பாலகனை உயிர்ப் பிழைக்க வைத்ததாகக் கூறுவதும், எலும்பாகி போன பெண்ணுக்கு உயிர் கொடுத்ததெல்லாம் நம்பத் தகுந்ததுதானா? அறிவுக்குப் பொருந்தக்கூடியவைதானா?

பகுத்தறிவுவாதிகளின் பார்வையில்...

நியாயமாக பகுத்தறிவுவாதிகள் எதிர்க்கவேண்டிய பகுதிகள் இருக்கின்றன என்பதுதான் உண்மை. மாறாக, ஒன்றிரண்டு முற்போக்கான புதிய பகுதிகள் இடம்பெறுகின்றன என்பதற்காக எதிர்ப்பது, மிரட்டுவது என்றால், அவற்றைச் சந்திக்க நாங்களும் தயார்தான்! அரசு தன் கடமையைச் செய்யட்டும்! இந்த உருட்டல், மிரட்டல் பேர்வழிகளைச் சந்திப்பதற்குப் பகுத்தறிவுப் பட்டாளம் தயாராகவே இருக்கிறது; ஏன், தமிழ் மக்களே இருக்கிறார்கள். கவலையில்லாமல் பயணம் தொடர்க! தமிழக அரசின் சமச்சீர் கல்வித் திட்டத்தை எக்காரணம் கொண்டும் பின்வாங்கக் கூடாது.

விடுதலை 05.12.2009

சாதி இழிவிற்குக் காரணம்......


பேசும் சக்தியோடும் கை, கால், கண், மூக்கு, வாய்களான பஞ்சேந்திரியங்களோடும் காணப்படும் மக்கள் யாவருமே மனிதர்கள்தான். இவர்களைக் கடவுள் என்றாலும், தேவர் என்றாலும், ராட்சதர் என்றாலும், மனிதர் என்றாலும், பேய் பிசாசு என்றாலும் மற்றும் வேறு எந்தப் பெயரால் அழைக்கப்பட்டாலும் இப்படிப்பட்ட எல்லோருமே மனிதர்கள்தான்; மனிதப் பிறவிதான்; மனிதச் சுபாவ கணம் உள்ளவர்கள் தான். இப்படிப்பட்ட இவர்களிடம் எந்தவித்ப பேதங்களும், உயர்வு தாழ்வுகளும் கிடையாது. கண்டிப்பாய்க் கிடையாது. இருக்கிற தென்றால் அது வேத, சாத்திர, புராண, இதிகாச கற்பனைப் புரட்டுகள் தான். இது வாய்மை, மெய்ம்மை, உண்மை, சத்தியம், தத்துவம் ஆகும். நம்புங்கள்!


சூத்திரன் நிலை

1. பிராமணன் கூலி கொடுத்தும் கூலி கொடுக்காமலும் சூத்திரனிடத்தில் வேலை வாங்கலாம். (மனு; அதி.8. விதி 43)

2. பிராமணனால் கூலி கொடுக்கப்படாவிட்டாலும் வேலையிலிருந்து நீக்கப்பட்டு விட்டாலும் சூத்திரன் தான் வேலை செய்ய வேண்டிய பொறுப்பிலிருந்து நீங்கியவனாக மாட்டான். (மனு ; அதி. 8. விதி 414)

3. சூத்திரன் பொருள்கள் எதுவாய் இருந்தாலும் அது பிராமணனுக்கே சொந்தமானதாகும். (மனு. அதி. 8. விதி 416)

4. சூத்திரனின் பொருள்கள் யாவற்றையும் பிராமணன் சிறிதும் தயக்கமின்றிப் பலாத்காரமாகக் கைப்பற்றிக் கொள்ளலாம். சூத்திரர்களுக்குத் தொண்டுதான் சொந்தமே ஒழிய பொருள்களுக்குக் கொஞ்சமும் அவன் உரிமைக்காரன் அல்ல (மனு அதி 8. விதி 417)

5. சூத்திரனைப் பிராமணனுக்கே தொண்டு செய்யும் படி அரசன் கட்டளையிட வேண்டும். (மனு. அதி 8 விதி 418)

பறையர்கள் என்ற பட்டம் மாறி. ஆதித் திராவிடர்கள் ஆகி இப்போது அரிசனங்கள் என்கின்ற பட்டம் வந்தது போல் வேறு ஏதாவது ஒரு பெயர் ஏற்படலாமே ஒழியக் குறையும் இழிவும் நீங்கிவிடாது. விபச்சாரிகளுக்கும், குச்சிக்காரிகளுக்கும், தேவதாசி, தேவ அடியாள் என்கின்ற பெயர்கள் இருப்பதால் அவர்களுக்குச் சமூகத்தில் இழிவு இல்லாமல் போய்விடவில்லை.

அரசனும் செல்வந்தனும் சாதி வித்தியாசத்தை ஆதரிக்க வேண்டியவர்களாகின்றார்கள். ஏனெனில், பிறவியில் உயர்வு தாழ்வு இல்லை என்றால் பணத்திலும் உயர்வு, தாழ்வு இல்லாமல் போய்விடுமே என்று பணக்காரன் பயப்படுகிறான்.

சாதி இருப்பதனால் தான் நீ இந்து; உன் மதம் இந்து மதம்; உனது சாத்திரம் மனுதர்மம், உஉபநிடதம் என்று இருக்கிறது. இவைகளை யெல்லாம் ஏற்றுக் கொண்டுவிட்டுப் பிறகு நான் எப்படிச் சூத்திரன் என்றால் உலகத்தார் சிரிக்க மாட்டார்களா? சூத்திரன் என்பதை உள்ளபடியே நீ வெறுப்பதானால் இந்து மதத்தைவிட்டு வெளியேற வேண்டாமா?

இந்தச் சாதி இழிவிற்குக் காரணம் கடவுள்தான் என்று உங்களுக்குத் தோன்றினால் அந்தக் கடவுளுக்கு உடனே நோட்டீசு கொடுங்கள். “கடவுளே, நாங்கள்தான் உனக்கும், உன்னைக் குளிப்பாட்டிவரும் உனது அர்ச்சகனுக்கும் அன்றாடம் படி அளந்து வருகிறோம். பாடுபடாத உன்னையும், பாடுபடுகிற என்னையும் ஏமாற்றுகிற அவனை உயர் சாதியாக்கி விட்டாய். ஆகவே ஒன்று இனி மக்களில் உயர்வு தாழ்வு இல்லை என்றாவது கூறு; அல்லது நீ யல்ல அதற்குக் காரணம் என்றாவது ஒப்புக் கொண்டுவிடு. இந்த நோட்டீசு விண்ணப்பத்தை அறிந்து இரண்டு வாரத்திற்குள் நீ ஏதாவது ஒரு முடிவான பதில் தெரிவிக்காவிட்டால் உன் கோயிலை இடித்துவிடுவோம்” என்று எச்சரிக்கை செய்யுங்கள். கடவுள் என்று ஒன்று அந்தக் குழவிக் கல்லில் அடைந்திருக்குமானால் அது வாய் திறந்து பேசட்டும்! இன்றேல் அதை உதறித் தள்ளுங்கள்.

தங்களுக்குள் சாதி பேதம் இல்லை என்று வாயில் சொல்லுவார்கள். கபிலர் சொன்ன வாக்கும், சித்தர்கள் - ஞானிகள் சொன்ன வாக்குகளும் பேச்சளவில் மாத்திரம் போற்றப்படுகின்றன. ஆனால் காரியத்தில் சிறிதுகூட லட்சியம் செய்யப்படுவதில்லை. இந்நிலையில் எப்படிச் சாதி ஒழியும் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள்.

உண்மைச் சுய ஆட்சி வரவில்லை; இன்று வந்திருப்பது இடைக்கால வர்ணாசிரம ராச்சியந்தான். உண்மைச் சுய ஆட்சியில் பிராமணன், சூத்திரன், பஞ்சமன் இருக்க முடியாது; இருப்பதைச் சுய ஆட்சி என்று கூற முடியுமா?

நாம் பிறக்கும் போது இந்துச் சம்பிரதாயப்படிக் கீழ்ச் சாதியாய்ப் பிறந்தது என்னமோ உண்மைதான். அந்த இழிவுக்கு நாம் பொறுப்பாளியல்ல. அதை மாற்றிக் கொண்டு பிறக்கவும் நம்மிடம் யாதொரு சக்தியும் இருந்ததில்லை. ஆனால், நாம் சாகும்போது இழிவான சாதியாய் இல்லாமலும் நம் பின்சந்ததி இழிவான பிறப்பாய்க் கருத்ப்படாமலும் இருக்கும்படியாக நடந்துகொள்ளத் தக்க சக்தி நம்மிடம் இருக்கிறது. அதை நாம் செய்யாவிட்டால் நாம் இழிவை நீக்கிக் கொள்ள ஆசைப்பட்டவர்களாவோமா?

உண்மையில் எனது தொண்டு சாதி ஒழிப்புத் தொண்டுதான் என்றாலும், அது நமது நாட்டைப் பொறுத்தவரையில் கடவுள், மதம், சாத்திரம், பார்ப்பனர் ஒழிப்புப் பிரச்சாரமாகத்தான் முடியும். இந்த நான்கும் ஒழிந்த இடம்தான் சாதி ஒழிந்த இடமாகும். இவற்றில் எது மீதி இருந்தாலும் சாதி உண்மையாலேயே ஒழிந்ததாக ஆகாது.

- பெரியாரின் சொற்பொழிவு தொகுப்பு (நன்றி: தந்தைபெரியார் இணையம்)

Friday, December 04, 2009

விடுதலைப்புலிகளை முதலில் அடையாளம் காட்டியவர் ஆசிரியர்!


திராவிடர் கழகத் தலைவரின் 77 ஆம் பிறந்த நாளினையொட்டி சென்னை, மந்தைவெளியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் தொல். திருமாவளவன் எம்.பி., சுப. வீரபாண்டியன் மற்றும் கவிஞர் கலி. பூங்குன்றன், வழக்கறிஞர் அருள்மொழி ஆகியோருக்கு விழாக்குழுவினர் நினைவுப் பரிசினை வழங்கினர் (2.12.2009).
தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களை அவரின் 77ஆம் ஆண்டு பிறந்தநாளில் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ளும் வாய்ப்பு இன்று கிடைக்கா-விட்டாலும் இந்த எழுச்சி மிக்க பொதுக்கூட்டத்தின் மூலம் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகள் நாட்டில் பரவிட, வெற்றி பெற தமிழ்த் தேசிய உணர்வு நாட்டில் செழித்-தோங்க தந்தை பெரியார் போல நோய் நொடி-யின்றி நீடு வாழ்க வாழ்க என விடுதலைச் சிறுத்தை-கள் அமைப்பின் சார்பில் வாழ்த்துகின்றோம்.

பெரியார் திடல்தான் நான் வளர்ந்த இடம்

எந்த மேடையிலும் நெஞ்சுயர்த்தி நான் சொல்-வேன். எனக்கு சமூக, அரசியல் மேடை போட்-டுக் கொடுத்த இடம் பெரியார் திடல்தான். எத்தனை எத்தனை மாநாடுகள், எத்-தனை எத்தனைக் கருத்-தரங்குகள், போராட்டங்-கள், பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் அறி-வார்ந்த உரைகள் _ இவை எல்லாம் என்னை வார்த்து வளர்த்து எடுத்தன. இதனை எத்தனை முறை வேண்டுமானாலும் எந்த இடத்திலும் சொல்வதில் பெருமைப்படுகிறேன்.

உலகில் எங்கு சென்றா-லும் நான் பெரியம்மாவின் பிள்ளை என்பது எப்படி உண்மையோ, அது போன்-றது தான் பொதுவாழ்வில் தன்மானக் கொள்கையில் நான் பெரியாரின் பிள்ளை ஆவேன்.

பெரியாரின் கொள்கை வாரிசு ஆசிரியர்

தந்தை பெரியாரின் கொள்கையால் அடை-காக்கப்பட்டு அவரின் கொள்கை வாரிசாக விளங்-குபவர் நம் ஆசிரியர்.

கொள்கை உறுதிப்-பாட்டுக்குச் சாட்சியாக விளங்குபவர் அவர். இடையில் எத்தனைக் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும், மானமிகு கலைஞர் அவர்களால் வாழ்த்தப்படுபவர், பாராட்-டப்படுபவர் வீர-மணி ஒருவர் தான்.

நான் வியந்து போகி-றேன் _ நமது தமிழர் தலை-வருக்கு வயது 77 என்-பதை என்னால் நம்பவே முடியவில்லை. ஒருநாள் கூட ஓய்வில்லாமல் தமிழ்-நாட்டைச்
சுற்றி சுற்றி வருகிறார். பெரியார் கருத்துகளைப் பரப்பி வருகிறார்.

நாட்டைச் சுற்றி வரு-வதிலும், உழைப்பதிலும் கூட தந்தை பெரியார் அவர்களுக்குச் சரியான வாரிசு இவர்.

எனக்கு ஊக்கம் அளித்த தலைவர்

எனக்கு இந்த 47 வய-திலேயே கசப்புணர்வும், சோர்வும் பல நேரங்களில் ஏற்படுவதுண்டு. குறிப்பாக இவ்வாண்டு மே 17ஆம் நாள் நான் அதிர்ந்தே போனேன். என்ன செய்-வது என்று திகைத்துப்-போனேன். ஈழத்தில் ஓர் இனம் அழிக்கப்பட்டு-விட்டது. பிரபாகரன் இல்லாமல் போய் விட்-டார் என்றெல்லாம் கொக்-கரித்தார்கள். என்னை அறியாமலேயே கூட தடுமாறினேன். சோர்ந்தி-ருந்த அந்த நேரத்தில் ஓர் இளைஞனைப் போல என்னைத் தட்டிக் கொடுத்து தடுமாற்றத்தி-லி-ருந்து என்னை மீட்டவர் ஆசிரியர் அவர்கள். சோர்ந்த போன என்னை தட்டிக்கொடுத்து, பொது வாழ்வில் போராட்டக் களத்தில் இவையெல்லாம் சகஜம் என்று ஆற்றுப்-படுத்தினார்.

விடுதலைப்புலிகள் விசயத்தில் எப்பொழுதும் உறுதியாக இருப்பவர் தமிழர் தலைவர். அவர் துடித்திருக்கின்றார், வேதனைப்பட்டிருக்கின்றார். நான் அறிவேன். என்றா-லும் ஒரு போதும் அவர் சோர்ந்து போய்விடு-வில்லை.

இன்றைக்கும் பிரபாக-ரனைப் பற்றியும், விடு-தலைப்புலிகள் பற்றியும் பலரும் உரிமை கொண்-டா-டலாம். யாரும் நினைத்துப் பார்க்காத கால கட்டத்திலே விடு-தலை புலிகளையும், அதன் நிகரற்ற தலைவர் மேதகு பிரபாகரனையும் நமக்-கெல்லாம், தமிழருக்கெல்-லாம் உறுதியாக அடை-யாளம் காட்டிய தலைவர் நமது ஆசிரியர் வீரமணி அவர்கள். நான் மாண-வனாக இருந்தபோதே அந்த உணர்வை என்னி-டம் விதைத்தவரும் ஆசி-ரியரே! (http://www.youtube.com/watch?v=fSHTC1ambno&feature=player_embedded#at=77)

எனது முக்கியமான நேரங்கள்

தேர்தல் நேரம்_பிரச்-சாரப் பணியில் என்னால் ஈடுபட முடியவில்லை. அந்த நேரத்தில்கூட ஆசிரியர் அவர்கள் எனக்கு தெம்பைக் கொடுத்தார். இந்த நேரத்தில் தேர்தலில் இறங்குவது என்று முடி-வாகிவிட்டது. இந்த நேரத்தில் வேறு சிந்தனை-களைக் கொண்டு பார்த்து குழப்பிக்கொள்ளக் கூடாது. தேர்தலும் ஒரு களம்தான் என்று ஆகி-விட்ட பிறகு அதில் தயக்-கம் கூடாது, வெற்றிக்காக உழைக்க வேண்டும், திட்ட-மிட வேண்டும் என்று என்னை வழிநடத்தினார். இவையெல்லாம் எனக்கு மிகவும் முக்கியமான நேரங்கள். ஒருமுறை முதலமைச்சர் கலைஞர் அவர்களை கோபால-புரத்தில் சந்தித்தேன். அப்பொழுது ஈழத்தில் மிகவும் நெருக்கடியான நேரம். பிரபாகரன் உயி-ருக்கு ஆபத்து நெருங்கு-கிறது. அவரைக் காப்-பாற்ற வேண்டும். ஏதா-வது செய்யுங்கள் என்று உணர்ச்சி வயப்பட்டு கேட்டுக்கொண்டேன். என் கண்கள் கலங்கின. முதலமைச்சரும் அந்த நிலைக்கு ஆளானார்.

சற்று சமாளித்துக்-கொண்டு கலைஞர் சொன்-னார், பிரபாகரன் மாவீரன். அவன் தோற்க மாட்டான். பிரபாகரன் உறுதியையும், வீரத்தையும் கண்டு ராஜீவ்காந்தியே வியந்து போனதை நான் அறிவேன் என்று கலை-ஞர் சொன்னார்.

கலைஞர் அவர்களும் சரி, நமது ஆசிரியர் ஆனாலும் சரி, எப்பொ-ழுதும் தைரியத்தை இழக்க மாட்டார்கள். அடிப்-படை சிந்தனை-யில் மாற்-றம் இல்லாத-வர்கள். அத-னால்தான் இடையிடையே சில நேரங்களில் உரசல்-கள் காணப்பட்டாலும், எப்-பொழுதும் நெருக்க-மாகவே அவர்கள் இருக்-கின்றார்கள் என்பதை புரிந்து கொண்டேன். நல்-லிணக்கத்தையும் பேணி வளர்ப்பது எப்படி என்-பதையும் அவர்கள் மூலம் தெரிந்து கொண்டிருக்-கிறேன்.

(சென்னை மந்தைவெளி தமிழர் தலைவர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன் 2.12.2009)
நன்றி: விடுதலை 04.12.09

ஈழத் தமிழர் பிரச்சினை....‘‘அம்மா’’வுக்குப் பயந்து முடிவுகளை மாற்றியவர்கள் யார்?



நானும் பா.ம.க., நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களும் சென்னையில் பெரியார் திடலில் ஆசிரியர் அவர்களைச் சந்தித்தோம். ஈழத் தமிழர்களுக்காக ஒரு பொது-வான இயக்கத்தை உருவாக்கலாம் என்று முடிவெடுத்தோம்.


சனவரி 10ஆம் தேதி (2009) பெரியார் திடலில் அதற்கான ஒரு கூட்டத்தைக் கூட்டிட ஆசிரியர் அவர்களே அனைவருக்கும் கடிதம் எழுதினார்.

அங்கு நடந்தால் சிறப்பாக இருக்கும் என்பது தான் எங்களின் எண்ணமாகவும் இருந்தது. ஆனால் பெரியார் திடலில் வேண்டாம் என்று சில தலைவர்கள் நினைத்தார்கள். பெரியார் திடலில் கூட்டம் நடத்துவதில் என்ன சிக்கல்? எல்லோருக்கும் பொதுவான இடம் பெரியார் திடல்தானே என்று மருத்துவரிடம் நான் கேட்டேன்.

சிலர் அப்படி நினைக்கிறார்கள்_ சரி, எங்கு நடந்தால் என்ன? நமக்குக் காரியம்தான் முக்கியம் என்றார்.

பெரியார் திடலில் கூட்டம் என்று அறிவித்துவிட்டு அதனை ரத்து செய்வது சங்கடமான ஒன்று. ஆசி-ரியரைச் சந்தித்து சமாதானம் சொல்-லுவோம் வாருங்கள் என்று டாக்டர் அவர்களை அழைத்துக் கொண்டு பெரியார் திடலுக்குச் சென்றோம்.


தமிழர் தலைவரின் பெருந்தன்மை

ஆசிரியர் அவர்கள் மிகவும் பெருந்-தன்மையாகவே நடந்து கொண்டார். அதே நேரத்தில் சகோதரர் வைகோ-வுக்கோ, தோழர் தா.பாண்டியனுக்கோ, நண்பர் நெடுமாறனுக்கோ பெரியார் திடலுக்கு வருவதற்கு என்ன சங்கடம் _ தயக்கம்? அவர்கள் எல்லாம் இங்கு வருபவர்கள்தானே என்ற கேள்வி-யைக் கேட்டார். நியாயமான கேள்வி அது என்பதில் அய்யமில்லை.


பெரியார் திடலில் நடத்தக்கூடாது என்பதற்குக் காரணம், அங்கு நடந்-தால் அம்மா கோபித்துக் கொள்வார் என்பதுதானாம். தமிழர்கள் ஒன்றுபட முடியாத சிக்கல் எங்கே இருக்கிறது என்று இதன்மூலம் தெரிகிறது.


12ஆம் தேதி வேறு ஓரிடத்தில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தக் கூட்டத்துக்கு நீங்கள் அவசியம் வரவேண்டும் என்று டாக்டர் அவர்களும், நானும் ஆசிரி-யரிடம் மிகவும் வற்புறுத்தினோம். ஈழத் தமிழர் நலன் கருதி ஆசிரியர் அவர்களும் மிகவும் பெருந்தன்மை-யோடு கூட்டத்தில் பங்கேற்க ஒப்புதல் தந்தார். பிரச்சினைமீது அக்கறை என்பதால் அந்தப் பெருந்-தன்மையை தமிழர் தலைவரிடம் காணமுடிந்தது.

முதலமைச்சருடன் சந்திப்பு

இதற்கிடையே ஆசிரியர் அவர்கள் ஒரு கருத்தினை எங்களிடம் கூறினார். ஈழப் பிரச்சினை என்பது எப்படியாக இருந்தாலும் அரசு மூலம் தீர்க்கப்பட வேண்டிய ஒன்று. நாம் வீதிகளில் என்னதான் கத்தினாலும், நாம் கோரிக்கை வைப்பதும் அரசிடத்தில்-தான். எனவே 12ஆம் தேதி கூட்-டத்துக்கு முன் முதலமைச்சரிடம் இதுகுறித்து பேசுவோம் என்றார் தமிழர் தலைவர். அது சரியாகத்தான் பட்டது. பா.ம.க. தலைவர் கோ.க.மணி முதல்வரைச் சந்திக்க நேரத்தையும் பெற்றார். அதன்படி 12 ஆம் தேதி காலை 9 மணிக்கு முதல-மைச்சர் அவர்களை சந்தித்தோம். நாற்பது நிமிடங்கள் பேசினோம். எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்தாகி விட்டது. வேண்டுமானால் நான் உண்ணாவிரதம் இருக்கிறேன் என்றார் முதலமைச்சர்.

உங்கள் வயதுக்கு உண்ணாவிரதம் என்பதெல்லாம் தவறு. அதுவும் கொள்கைக்கு முரண்பாடானது என்று கூறினார் ஆசிரியர்.


அம்மா வருத்தப்படுவார்களாம்!


அதன்பின் ஒரு தகவல் வருகிறது. அன்று மாலை நடக்க இருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது என்று அறிவித்தார்கள். என்ன காரணமாம்? மருத்துவர் ராமதாசு அவர்களைச் சந்தித்துக் கேட்டபோது அவர் கூறினார், முதலமைச்சரைச் சந்தித்து-விட்டு வந்தால் அம்மா வருத்தப்படு-வார்கள் என்கிறார்கள் என்று கூறினார்.




ஈழம் போய் இலங்கை வந்தது ஏன்?


சில நாள்கள் கழித்து தோழர் தா.பாண்டியன் அவர்கள் ஒரு கூட்டத்தைக் கூட்டினார். அது பொங்கு தமிழர் அறக்கட்டளை அலுவலகத்தில் நடக்க இருந்தது. எனக்கு அழைப்பு இல்லை. இருந்-தாலும் பிரச்சினையின் முக்கியத்-துவத்தைக் கருதி மருத்துவர் ராமதாசு அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டேன்.

சிறிது நேரம் கழித்துத் தொடர்பு கொள்வதாகக் கூறினார். பிறகு சரி, நீங்கள் கூட்டத்துக்கு வாருங்கள் என்றார். நானும் கூட்டத்துக்குச் சென்-றேன். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற ஒன்று உருவாக்கப்-பட்டது. ஈழம் போய் இலங்கை வந்தது எப்படி என்று கேட்டதற்கு கம்யூனிஸ்ட்களுக்கு ஈழம் என்பதில் உடன்பாடில்லையாம்.

இத்தனை லட்சம் ஈழத் தமிழர்கள் அழிக்கப்பட்ட பிறகு கம்யூனிஸ்ட்-களின் நிலைப்பாடு சிங்களர்களின் ஒற்றை ஆட்சியின் கீழ் தமிழர்களுக்-கான உரிமை என்பதுதானாம்.

ஈழத் தமிழர் பிரச்சினையில், ஈழத் தமிழர்களுக்கும், விடுதலைப்புலி-களுக்கும் எதிர்நிலையில் இருந்து வரும் செல்வி ஜெயலலிதா அம்மா-வின் விருப்பம் _ கோபதாபம் இவற்-றைப் பொறுத்து முடிவு எடுக்கும் நிலையில் யார் யார் இருந்தார்கள் என்பதை தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

என்னைப் பொறுத்தவரையில் திமுக கூட்டணியில் இருந்தாலும் ஈழத் தமிழர் பிரச்சினையைப் பொறுத்த வரையில் கலைஞர் அவர்-களுக்கு எதிரான அணியினரிடம் உறவு வைத்துக் கொண்டிருந்தேன்.

இந்தப் பிரச்சினைக்காக திமுக கூட்டணியிலிருந்து என்னை வெளி-யேற்றினாலும் சரி, அது பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு வரை கூட எதிர் அணியில் தானிருந்தேன்.

இரண்டு சீட்டுக்காக திருமாவள-வன் காங்கிரசுக்கு அடிமையாகி விட்டான் என்றெல்லாம் அவதூறு செய்தனர். எங்களைப் பொறுத்தவரை திமுகவோடு தான் கூட்டு என்பதில் தெளிவாகவேயிருந்தோம்.

கொள்கை ரீதியான கூட்டு

முதலமைச்சர் கலைஞரிடம் செய்-தியாளர்கள் கேட்டனர், விடுதலைச் சிறுத்தைகள் திமுக கூட்டணியில் இருக்கிறார்களா என்று கேட்டனர். விடுதலைச் சிறுத்தைகளுடன் திமு-வுக்கும் உள்ள உறவு வெறும் தேர்தல் கூட்டணி உறவல்ல _ கொள்கை உறவு _ பெரியாரியல் சிந்தனை என்ற அடிப்படையிலும், ஜாதி ஒழிப்புக் கொள்கை அடிப்படையிலும் உள்ள கொள்கை உணர்வு என முதல-மைச்சர் பதிலளித்தார்.

இது விடுதலைச் சிறுத்தைகளின் கொள்கைக்குக் கிடைத்த அங்கீகார-மாகும். தேர்தல் கூட்டணியைக் கொள்-கைக் கூட்டணி என்று அறிவித்தது விடுதலைச் சிறுத்தை-களுக்கு மட்டுமே என்பது பெருமைக்-குரிய ஒன்றாகும்.

ஈழத் தமிழர் பிரச்சினை போன்ற-வற்றில் திராவிடர் கழகத்தையோ, தமிழர் தலைவர் வீரமணி அவர்-களையோ முன்னிலைப்படுத்தாமல் வேறு யாரை முன்னிலைப்படுத்த முடியும்?

கலைஞர் அவர்களுடன் திராவிடர் கழகத்துக்கு நெருக்கமான உறவு இருந்தாலும், காங்கிரசைக் கண்டிப்-பதிலோ, எதிர்ப்பதிலோ, போராட்-டம் நடத்துவதிலோ தமிழர் தலைவர் பின்வாங்குவதில்லையே!

பொதுப் பிரச்சினையிலும், தமி-ழர்கள் மத்தியிலே ஏற்பட வேண்டிய நல்லிணக்கம் என்பதிலும் தமிழர் தலைவர் மேற்கொள்ளும் அணுகு-முறை என்பது மிகவும் சிறப்பான-தாகும்.

- சென்னை மந்தவெளி பொதுக் கூட்டத்தில் தொல்.திருமாவளவன், 2.12.2009

Thursday, December 03, 2009

சமூகநீதிக்குச் சாவுமணியா?



முனைவர் பட்டப் படிப்பில் (பிஎச்.டி.) அண்ணா பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீடு கிடையாது என்று ஓர் அறிவிப்பினைக் கொடுத்-துள்ளார் அப்பல்கலைக் கழகத் துணை-வேந்தர் மன்னர் ஜவஹர். அதே நாளில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டப் படிப்புச் சேர்க்கைக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார் துணைவேந்தர் முனைவர் திருவாசகம்.


பல்கலைக்கழக மானியக் குழு இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும் என்று கூறியிருக்-கிறது என்றாலும், அண்ணா பல்கலைக்-கழகத்தில் அதனைப் பின்பற்றப் போவதில்லை என்றும் அப்பல்கலைக் கழகத் துணைவேந்தர் கூறியுள்ளது, அதிர்ச்சி தரக்கூடியதாகும்.

அதுவும் அண்ணாவின் பெயரால் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில், சமூகநீதிக்குச் சாவுமணியா? என்ற கேள்வி இப்பொழுது எழுந்திருக்கிறது.


எல்லாப் பிரிவுகளிலும் இட ஒதுக்கீடு உண்டு; முனைவர் பட்டத்திற்கு மட்டும் கிடை-யாது என்று சொல்லுவது எந்த அடிப்படை-யில்? அந்தப் பகுதி மட்டும் நெய்யில் பொரிக்கப்பட்டுள்ளதா?

மத்திய அரசுக்கு உட்பட்ட கல்வி நிறு-வனங்களில்கூட (அய்.அய்.டி., அய்.அய்.எம்., எய்ம்ஸ் போன்றவற்றில்) இட ஒதுக்கீடு அளிக்கப்பட உள்ளது; மத்திய அரசு புதிய சட்டமே இயற்றியிருக்கிறது. பிற்படுத்தப்பட்ட-வர்களுக்கான 27 சதவிகித இட ஒதுக்கீடு ஆண்-டுக்கு 9 விழுக்காடு வீதம் மூன்று ஆண்டு-களில் நிறைவேற்றப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.

அத்தகையதோர் சூழ்நிலையில், தமிழ்நாடு அரசின் கொள்கை இட ஒதுக்கீட்டுப் பிரச்-சினையில் என்பதை நன்கு தெரிந்தவர்தான் அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர். இருந்தும் இப்படி ஓர் அறிவிப்பு என்பது கண்-டிக்கத்தக்கதாகும்.

முனைவர் பட்டம் பெற தாழ்த்தப்-பட்ட-வர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களும் தகுதியற்றவர்கள் என்று முடிவுக்கு வந்துவிட்டாரா, அப்-பல்கலைக்கழகத் துணைவேந்தர்?

இட ஒதுக்கீட்டில் தகுதி, திறமை போய்-விடும் என்று ஒரு கூட்டம் ஒரு பக்கத்தில் கூக்குரல் போட்டுக் கொண்டிருக்கிறது. அந்தக் குரலையெல்லாம் புறக்கணித்துவிட்டு, இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதால் என்ன தகுதி, திறமை போய்விட்டது?

இன்றைக்குப் பிரபல மருத்துவர்களாக, பொறியாளர்களாக, நிருவாகிகளாக, விஞ்-ஞானிகளாகப் பலரும் இட ஒதுக்கீடு பெற்ற-வர்கள் மத்தியிலிருந்து முகிழ்த்துக் கிளம்ப-வில்லையா? வாய்ப்புக் கொடுக்காமலேயே கதவடைத்து-விட்டு, தகுதி, திறமைபற்றி மதிப்பிடலாமா? ஓர் ஆராய்ச்சி நிறுவனம் ஏன் இத்தகைய ஆராய்ச்சியில் ஈடுபடவில்லை?

கரண்ட் சயின்ஸ் என்னும் இதழில் கீழ்க்-கண்ட புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது.

சிறந்த அறிவியலாளர் விருது வழங்கப்-பட்டதில் மேற்கு வங்காளத்தில் உள்ள 32 பேர்-களில் 26 பேர் கல்கத்தா நகரத்தைச் சேர்ந்த-வர்கள் என்றும், தமிழகத்தில் உள்ள 41 பேர்களில் 10 பேர்கள் மட்டுமே சென்-னையைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்-பிடப்பட்டுள்ளது. புறநகர்ப் பகுதிகளில் மேற்கு வங்கத்தில் 19 விழுக்காட்டினரும், தமிழ்நாட்-டில் 75 விழுக்காட்டினரும் விருது பெற்றுள்-ள-னர் என்ற தகவலையும் அந்த இதழ் தெரி-வித்துள்ளது.

இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ள தமிழ்-நாட்டின் நிலையையும், இட ஒதுக்கீடு அளிக்-கப்படாத மேற்கு வங்க நிலையையும் ஒப்-பிட்டுப் பார்த்தால் இட ஒதுக்கீட்டின் தாக்கமும், செல்வாக்கும் எத்தகையது என்பதை இதன்மூலம் எளிதிற் புரிந்துகொள்ளலாம்.

பல்கலைக்கழக மானியக் குழு அறி-வித்திருந்தும், அதனைப் பின்பற்றப் போவ-தில்லை என்று அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் அறிவித்திருப்பது முறை-யானது-தானா? இதுகுறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி அவர்கள் தலையிடுவார் என்று எதிர்பார்க்-கிறோம். சமூகநீதி, இட ஒதுக்கீடு பிரச்சினையில் அத்துபடியானவர் அவர் என்பதால், இந்தக் கோரிக்கையை
அவர் முன் வைக்கிறோம்.       --விடுதலை தலையங்கம் 3.12.2009

திருப்பதி ஏழுமலையான் என்னும் கல் முதலாளி.....

கையில் காசில்லாதவன் கடவுளேயானாலும் கதவை சாத்தடி என்ற ஒரு பாடல் வரி இந்த நேரத்தில் நினை-வுக்கு வந்து தொலைகிறது.

திருப்பதி ஏழுமலையான் என்னும் கல் முதலாளியை உடனடியாக தரிசிக்க வேண்டுமா? நீங்கள் கோடீஸ்வரராக இருக்க-வேண்டும். வெறும் கோடீசு-வரராக இருந்தும் பய-னில்லை. ஏழுமலையானுக்கு ரூ.100 கோடி நன்கொடை _ மன்னிக்கவேண்டும்; லஞ்சம் கொடுப்பவராக இருக்கவேண்டும்.
துண்டு துக்கடா _ கிச்சு கிச்சு மூட்டும் தகவல் இல்லை இது. திருப்பதி தேவஸ்தானம் அறிவித்-துள்ளது.
திருமலைக்குப் பக்தர்-கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நாள் கணக்கில் காத்திருந்துதான் ஏழுமலையானைத் தரிசிக்க முடிகிறது. இதனால் முக்கிய பிரமுகர்களுக்கு மகாதுவார தரிசன ஏற்பாடுகளை திருப்-பதி தேவஸ்தானம் செய்-துள்ளது.
இந்த வசதிமூலம் முக்கிய பிரமுகர்கள் எந்த ஒரு சிரமமும் இல்லாமல் மகாதுவாரம் வழியாக மிக அருகில் இருந்து தரிசனம் செய்யலாம். திருப்பதி ஏழு-மலையானுக்கு ரூ.100 கோடி நன்கொடை வழங்க முன்-வருபவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை (குடும்ப உறுப்-பினர் நான்கு பேர்களையும் சேர்த்து) அனுமதிக்கப்-படு-வார்கள்.
இந்தத் தரிசனத்தின்-போது ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படுகிற பட்டு வஸ்திரம் குடும்பத்தில் உள்ள ஆண்களுக்கும், பத்மாவதி தாயாருக்கு அணிவிக்கப்பட்ட பட்டு-சேலை அந்தக் குடும்பத்-தைச் சேர்ந்த பெண்களுக்-கும் அன்பளிப்பாக வழங்-கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்-துள்ளது.
அரசன் வருமானத்தைப் பெருக்கிக் கொள்வதற்குக் கோயில் கட்டவேண்டும் என்று அர்த்தசாஸ்திரம் எழுதிய கவுடில்யன் கூறி-யுள்ளான் _ அதனைக் கறா-ராக திருப்பதி தேவஸ்தானத்-தவர்கள் கடைபிடிக்கிறார்-கள் போலும்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், திருப்பதி தேவஸ்தானத்தில் இந்த ஏற்பாட்டை அர்ச்சகர்களும், பக்தர்களும் எதிர்க்கிறார்-களாம். இது ஆகம விதி-களுக்கு முரணானது என்று குரல் கொடுத்துள்ளனராம். ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தால் ஏழுமலையா-னைத் தொடுவதற்கு அனு-மதிப்பார்களோ என்றும் கேட்கிறார்களாம் _ பரவா-யில்லை, பக்தர்களுக்குக்கூட கொஞ்சம் பகுத்தறிவு வேலை செய்கிறது போலி-ருக்கிறது.

அறிஞர் அண்ணா அன்று எழுதினார்:

கள்ளக் கையொப்பக்-காரன் கரம் கூப்புகிறான். விபச்சாரி விசேஷ அபி-ஷேகம் செய்கிறாள். குடி-கெடுப்பவன் கும்பாபிஷேகம் செய்கிறான். கொள்ளை லாபம் அடித்தவன் வெள்ளி ரிஷபம் செய்து வைக்கி-றான். ஒழுக்கக் குறைவு உள்ளோர், அழுக்கு மனம் படைத்தோர், இழுக்கான வழி செய்பவர்கள் ஆல-யங்-களிலே நுழைய முடியாத தடை உண்டா? இல்லை. ஆனால், ஆதிதிராவிடர் மட்டும் ஆலயத்துக்கு வரக்-கூடாது என்று தடுக்கிறோம், நியாயமா? (நூல்: தீண்-டாமை, 1948).

இந்த நூறு கோடி ரூபாய் நன்கொடையாளர்கள் பட்டியலில் எத்தனைக் கள்ளமார்க்கெட்காரர்களோ!

இதற்கு மேலும் விளக்க-மும் தேவையோ!

- விடுதலை 03.12.09

Wednesday, December 02, 2009

ஆசிரியரின் பிறந்தநாள் அவரின் ஆசிரியருடன்.........


தமிழர் தலைவர் பிறந்த இதே நாளில் பிறந்தவர் அவரின் குருநாதரான ஆ. திராவிடமணி (1914).


சிறுவன் சாரங்கபாணி, வீரமணியானதற்கும், தலை-சிறந்த சொற்பொழிவாளராக உருப்பெற்றதற்கும் தந்தை பெரியார் அவர்களின் கரங்-களைப் பற்றியதற்கும், திரா-விடர் கழகப் பொதுச்செய-லாளராக, தலைவராக, தமிழர் தலைவராக பரிணாமம் பெற்றதற்கும் அடித்தளமிட்ட அவரின் ஆசிரியர் ஆ. திரா-விடமணி அவர்களுக்கு ஆயிரம் ஆயிரம் வணக்-கங்-களையும், நன்றியினை-யும் பெருமிதத்தோடு தெரி-வித்துக் கொள்வோம் இந்நாளில்.

அவரின் சொந்த ஊர் பொன்னேரியை அடுத்த ஆசான் புதூராகும். அந்தக் காலத்திலேயே பி.ஏ. பட்ட-தாரி என்பது சாதாரண-மானதல்ல. தொடக்கத்தில் கடலூரில் இஸ்லாமியர்களால் நடத்தப்-பட்ட இடைநிலைப் பள்ளியில் தலைமை ஆசி-ரியராகப் பணி-யாற்றி, அதன்பின் மணிலா மார்க்-கெட்டிங் சொசைட்டியில் அலுவலைத் தொடர்ந்தார். அப்போது அவரின் சக எழுத்தர்தான் பிற்காலத்தில் தமிழக அமைச்சராக வந்த திரு. ஏ. கோவிந்தசாமி ஆவார்கள்.

ஆசிரியர் திராவிடமணி தங்கியிருந்த இடம் இராம-லிங்க பக்த ஜனசபையாகும். மாலை நேரத்தில் மாணவர்-களுக்குத் தனியே பாடம் (டியூசன்) சொல்லிக் கொடுப்-பார். பள்ளிப் பாடங்களோடு, தந்தை பெரியார் அவர்-களின் பகுத்தறிவுக் கருத்து-களையும் குழைத்துக் கொடுப்பார். குடிஅரசு, திராவிட நாடு இதழ்களை-யும் கொடுத்துப் படிக்கச் செய்வார். அந்தப் பட்டறை-யில் தயாரிக்கப்பட்ட போர்-வாள்தான் நமது ஆசிரியர் கி. வீரமணி. அவ-ரின் இயற்பெயர் சுப்பிரமணி-யம் _ தன்னிடத்தில் பாடம் பயின்ற மாணவர்களின் பெயர்களையெல்லாம் நல்ல தமிழில் மாற்றம் செய்தார்.

ஆசிரியர் திராவிட-மணி என்னை ஒரு வளர்ப்புப் பிள்-ளைபோல கருதி பகுத்-தறிவையும், பாட அறிவையும், கல்வியையும் அளித்து வருகிறார் என்ப-தால், என் தந்தையார் அவ-ரிடமே, என்னை முழுமை-யாக ஒப்-படைத்ததுபோல் ஆக்கிவிட்-டார் என்று கூறு-கிறார் நமது ஆசிரியர் வீர-மணி அவர்கள். (ஆதாரம்: அய்யாவின் அடிச்சுவட்-டில் பக்கம் 29).

ஆசிரியர் திராவிட மணி-யைச் சுற்றி 20, 30 மாணவ சீடர்கள் எப்பொழு-தும் சூழ்ந்து கொண்டே இருப்பார்-கள். வாங்கும் சம்பளத்தில் பெரும்பகுதி கட்சிப் பணிக்கே!

குடும்பம் ஒரு பக்கம், இவர் இன்னொரு பக்கம்!

வெளியூர்ப் பேச்சாளர்-களை வரவழைப்பது, வழிச் செலவுக்குப் பணம் கொடுப்-பது, தங்க வைப்பது, உண-வளிப்பது எல்லாமே அவர் செலவுதானாம்!

அவர் எழுதிக் கொடுத்-ததை மனப்பாடம் செய்து மேசைமீது ஏற்றப்பட்டு பேச ஆரம்பித்தவர்தான் _ இன்-றைய நாடறிந்த தலைசிறந்த சொற்பொழிவாளரான நம் தலைவர் வீரமணி. அப்படி சிறுவன் வீரமணி பேசிய பேச்-சைக் கேட்டுத்தான் திராவிடர் கழகத்தின் திரு-ஞான சம்பந்தர் என்று அறி-ஞர் அண்ணா (29.7.1944, திருப்பாதிரிப்புலியூர்) பாராட்டினார். ஆ. திராவிட-மணி அவர்கள் திராவிடர் கழகத்தின் கூட்டுப் பொதுச்-செயலாளராகவும் பிற்-காலத்தில் இருந்திருக்கிறார் என்பது முக்கியமான வரலாற்றுக் குறிப்பாகும்.

ஆசான் திராவிடமணி-யை-யும், அவர்தம் சீடர் மான-மிகு வீரமணியையும் ஒரே பிறந்த தேதியில் சந்திப்பதும், சிந்திப்பதும் எவ்வளவுப் பொருத்தமானது, விசித்திர-மானது!

வாழ்க திராவிடமணி!

- மயிலாடன் விடுதலை (2.12.2009)

அய்யப்பனும் - அயோக்கியத்தனமும்!

அய்யப்பனுக்கு அபார சக்தியிருக்கிறது என்றும், அய்யப்பனுக்காக விரதம் இருந்து, இருமுடி கட்டி சபரிமலை சென்று வந்தால் தீராத நோய்-கள் எல்லாம் தீருமென்றும், தீவினைகள் எல்-லாம் அகலும் என்றும், சதா பிரச்சாரம் செய்தும் குறுந்தகடுகளை வெளியிட்டுக் கொண்டும் இருக்கின்றனர்.


ஆனால், நடப்பது என்ன? அய்யப்பப் பக்தர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகி மரணம் என்கிற பரிதாப செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. மாரடைப்பு ஏற்பட்டு பக்தர்கள் சபரிமலையிலேயே மரணம் என்றும் ஏடுகள் செய்திகளைப் போடுகின்றன. போதும் போதாதற்கு அய்யப்பன் கோயிலில், பிரத்தி-யேகமாக உள்ள மருத்துவர்கள் இப்பொழுது அறிக்கையினைக் கொடுத்துள்ளனர்.

இதய நோயாளிகள், ரத்த அழுத்தம், கொழுப்பு (கொலஸ்ட்ரால்) பாரம்பரிய இதய-நோய் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், 55 வயதுக்குமேல் ஆனவர்கள், சபரிமலை ஏறும்-போது தேவையான முன்னெச்சரிக்கை நட-வடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.

பயணத்திற்குமுன் மருத்துவரிடம் பரி-சோத-னை-கள் மேற்கொள்ளவேண்டும். இத-யத்--தின் செயல்பாட்டைத் தெரிந்து-கொண்ட பின்னரே பயணம்பற்றி முடிவெடுக்கவேண்டும்.

அவ்வாறு வரும்போது, வியாதிபற்றிய குறிப்பு--களும், சாப்பிடும் மருந்துபற்றிய குறிப்பு-களும் டைரியில் எழுதிக்கொண்டு வர-வேண்டும்.

மலை ஏறுவதற்கு முன்னர் பம்பையில் அதிக உணவு சாப்பிடக் கூடாது. லேசாக சாப்பிட்டு-விட்டு மலையேறவேண்டும். வயிறு நிறைய சாப்பிட்டால் இதயத்தின் வேலைப் பளு-வும் கூடும். மலை ஏறும்போது நெஞ்சு வலியோ, மூச்சுத் திணறலோ, அசாதாரண நிலையோ ஏற்பட்டால், உடனடியாக மலை ஏறு-வதை நிறுத்தி, மருத்துவர்களின் ஆலோ-சனைகளைப் பெற-வேண்டும். ஏறும்போது நாடித் துடிப்பு நிமிடத்துக்கு 140_க்குமேல் இருக்கக்கூடாது.

மலையேறும்போது அய்கோர்டின் மாத்தி-ரையை அதிகமாக நாக்குக்கு அடியில் வைப்ப--தால் ரத்த அழுத்தம் குறைந்து தலை சுற்றல் போன்றவை ஏற்படும்.

மேலும் வழக்கமாக மருந்து சாப்பிடுபவர்-கள் மலையேறும்போது ரத்தத்தில் சர்க்கரை குறைந்து உடல் தளர்ச்சி ஏற்படலாம். இதற்-காக அவர்கள் கையில் குளுகோஸ் வைத்துக் கொள்ள-வேண்டும்!

இவ்வாறு அய்யப்பன் கோயில் சன்னிதான மருத்துவர் ஹரீந்திரபாபு கூறியுள்ளதாக தினமலரே (1.12.2009) கூறியுள்ளது.

இது முழுக்க முழுக்க அய்யப்பன் சக்தியைக் கேலி செய்வதாக இல்லையா? தன்னை நாடிவரும் பக்தர்களின் உயிரைக் கூடக் காப்பாற்ற முடியாத கடவுள் அய்யப்பன், சக்தி வாய்ந்தவன் என்றும், பக்தர்களின் குறைகளை, கஷ்டங்களை, நோய் நொடிகளை, பாவங்களைப் போக்குபவன் என்றும் சொல்லுவதெல்லாம் பச்சையான பித்தலாட்டம் அல்லவா?

வில்லாளி வீரனே
வீரமணி கண்டனே,
தாங்கி விடப்பா
ஏந்தி விடப்பா
தூக்கி விடப்பா
ஏற்றி விடப்பா

என்று அய்யப்ப சரணம் பாடிச் செல்லும் பக்தர்-களைக் காப்பாற்றும் சக்தி அய்யப்பனுக்கு இல்லை என்பதைத்தானே சன்னிதான மருத்து-வரின் அறிக்கை தெளிவுபடுத்துகிறது.

எந்தப் பக்தராவது _ இது கடவுளை அவ-மதிக்கும் செயல் என்று சொல்லவில்லையே, ஏன்?

இவற்றையெல்லாம்விட மிகக் கேவலமானது _ அய்யப்பன் பெயரால் நடத்தும் மகரஜோதி பித்தலாட்டம்!

கேரள மின் வாரியத்தைச் சேர்ந்த ஊழியர்கள் செயற்கையாக சூடத்தைக் கொளுத்திக் காட்டு-கின்றனர் என்பதை கேரள மாநில முதலமைச்சர், இந்து அறநிலையத் துறை அமைச்சர், அறக்-கட்ட-ளைத் தலைவர், கோயில் தலைமை அர்ச்-சகர் வரை ஒப்புக்கொண்ட பிறகும் மகர-ஜோதியை அனுமதிப்பது எந்த வகையில் சரி?

பக்தியின் பெயரால் எந்தப் பித்தலாட்டத்தை-யும் அரசு அங்கீகாரத்தோடு அரங்கேற்றலாம் என்-றால், பக்தியின் யோக்கிய-தையையும், அரசின் தன்மையையும் தெரிந்துகொள்ளவேண்-டாமா?

கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன் என்று தந்தை பெரியார் ஏன் சொன்னார் என்பது இப்பொழுது விளங்குகிறதா?

விடுதலை தலையங்கம் 02.12.2009

Tuesday, December 01, 2009

கார்த்திகைத் தீபம்..சிந்தித்துப்பாருங்கள்!


கார்த்திகைத் தீபப்பண்டிகை ஒரு தெய்வீகம் பொருந்திய சிறந்த நாளாகக் கருதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. கார்த்திகை நட்சத்திரத் தினத்தை "சுப்பிரமணியன்" என்னும் சாமிக்கு உகந்த நாளாகக் கருதி, பக்தர்கள் என்பவர்கள் பூசைகளும், விரதங்களும் மேற்கொள்கின்றார்கள். இதில் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகையே மிகவும் சிறந்த பண்டிகையாகக் கொண்டாடப் படுகின்றது. இந்தச் சமயத்தில் சுப்பிரமணியனின் 6 வகையான ஊர்கள் என்று புராணம் கூறும் ஊர்களுக்கு மக்கள் பிரயாணம் செய்து, ரொக்கப்பணத்தைச் செலவு செய்வதோடு, காடு, மேடு, குப்பை கூளங் களில் எண்ணற்ற விளக்குகளை வைப்பதன் மூலம் ஆகும் எண்ணெய், நெய் செலவு, சொக்கப்பானை கட்டி நெருப்பு வைப்பதற்கு ஆகும் செலவு போன்றவற்றுடன், இதனால் மக்களுக்கு உண்டாகும் மூடநம்பிக்கையும், அதனால் உண்டாகும் மூடப் பழக்கவழக்கங்களும் பற்றி கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள்!


இந்த மூடப்பண்டிகைக்கு 2 கதைகள் உள்ளன. முதலாவது, ஒரு சமயம் அக்னிதேவன் என்னும் கடவுள் சப்த ரிஷிகளின் மனைவி மார்களைப் பார்த்து மோகங்கொண்டானாம். அதனை அறிந்து அவனது மனைவி சுவாகாதேவி என்பவள், அவர்களுடன் தன் கணவன் மோகங் கொண்டதால், சப்த ரிஷிகள் சபித்துவிடுவார்கள் என்று எண்ணிப் பயந்து, அதனால் தானே வசிஷ்டரின் மனைவி அருந்ததியை விட்டு விட்டு, மற்ற ஆறு ரிஷிகளின் மனைவி மார்களைப் போல் உருவம் கொண்டு, தன் கணவன் ஆவலை நிறைவேற்றினாளாம். இவ்வாறு சுவாகாதேவி கொண்ட ஆறு உருவத்திற்கும் கார்த்திகை என்று பெயராம். இவைகள் தாம் கார்த்திகை நட்சத்திரமாகக் காணப்படு பவையாம். இந்த நட்சத்திரப் பெண்கள் தான் சுப்பிரமணியன் என்ற கடவுள் குழந்தையாக இருந்த போது அதை எடுத்து வளர்த்தார்களாம்!

அடுத்து, இதன் மூலம் அறிவது, பிறர் மனைவிமேல் ஆசைப்படுவது, விபச்சாரம் செய்வது குற்றம் இல்லை. தன் கணவன் எந்தக் காரியத்தை விரும்பினாலும் அதைப் பூர்த்தி செய்து கொடுக்கும் அடிமைகளாக மனைவி இருக்க வேண்டும் என்பது.

இவ்வாறு நம் மக்களுக்கு கற்பிக்கும் மூடநம்பிக்கையைப் பாருங்கள் அடுத்த கதை.

ஒரு சமயம் பிரம்மா , விஷ்ணு ஆகிய இரண்டு கடவுள்கள் ஒவ்வொருவரும் முழுமுதற்கடவுள் தாம், தாமே என்று கூறிக் கொண்டதனால், இருவருக்கம் வாய்ச்சண்டை ஏற்பட்டு பிறகு அடி பிடிச்சண்டை ஆகிவிட்டதாம் . இதைக் கண்ட பரமசிவன் எனும் கடவுள், வானத்திற்கும் பூமிக்கும் ஆக ஒரு பெரிய ஜோதி உருவில் அவர்கள் இருவருக்கும் இடையில் நின்றானாம். சண்டை போட்டுக் கொண்டு இருந்த இருவரும் திகைத்து நிற்க உடனே பரமசிவன் தோன்றி பிஇந்த ஜோதியின் அடிமுடிகளை யார் முதலில் கண்டு வருகின்றார்களோ அவர் தான் பெரியவர்' என்றானாம்.

உடனே விஷ்ணு பன்றி உருவம் கொண்டு பூமிக்குள் துளைத்துக் கொண்டு வெகுதூரம் சென்று காணமுடியாமல் திரும்பிவிட்டானாம்.

பிரம்மன் அன்னப்பறவை வடிவம் கொண்டு ஜோதியின் முடியைக் காணாமல் மேலே பறந்து சென்று கொண்டு இருக்கையில், கீழ் நோக்கி ஒரு பிதாழம்பூ வந்துகொண்டு இருந்ததாம். அதைக் கண்டு பிரம்மன், பிதாழம்பூவே எங்கிருந்து எவ்வளவு காலமாய் வருகின்றாய்பி என்று கேட்கவும் பிநான் பரமசிவன் முடியில் இருந்து கோடிக்கணக்கான வருஷங்களாக வந்துகொண்டு இருக்கிறேன்பி என்றதாம். உடனே பிரம்மன். பிநான் சிவன் முடியைப் பார்த்து விட்டதாக சாட்சி கூறுகின்றாயா? என்று கெஞ்சினானாம் . அதற்குத் தாழம்பூ சம்மதித்ததாம். இதைக்கண்ட சிவன்கோபங்கொண்டு பிபொய்சொன்னதற்காக பிரம்மனுக்கு இவ்வுலகில் கோயில் இல்லாமல் போகக்கடவது' என்றும் சாபமிட்டாராம்.

உடனே பிரம்மாவும் விஷ்ணுவும் வருந்தி திருந்தி சிவன் தான் பெரியவன் என்பதை உணர்ந்து , மன்னிப்புக் கேட்டுக் கொண்டு தங்கள் வழக்கை தீர்த்து வைத்ததற்கு அடையாளமாக புஇம்மலையின் மேல் ஒரு ஜோதி உருவாகி இருக்க வேண்டும்பூ என்று கேட்க அதற்குச் சிவனும் சம்மதம் தெரிவித்து, மாதத்தில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை, கார்த்திகைப் பண்டிகையில் இந்த மலையில் ஜோதியாய்க் காணப்படுவேன் என்று சொன்னானாம் . இது தான் திருவண்ணாமலைப் புராணமாகிய அருணாசலப் புராணத்தில் கூறப்படும் கார்த்திகைத் தீபப்பண்டிகையாகும்.

இவ்வாறு முரண்பட்ட வேடிக்கையான இந்த இரண்டு கார்த்திகைப் பண்டிகைகளால் நமது மக்கள் மனத்தில் குருட்டுப் பக்தியும், மூடநம்பிக்கையும், முட்டாள்தனமும் அதிகப்படும் என்பதைத் தவிர, வேறு சந்தேகம் உண்டா? மேலும் நமது நாட்டில் பொருட்செலவும், வறுமையும், மூடநம்பிக்கையும், வீண்காலப் போக்கும் கொண்டவர்களுக்கு எடுத்துக்கூறத் தொடங்குபவர்களுக்கு உடனே பகுத்தறிவு அற்ற வைதீக மூடர்கள், தேசத்துரோகி , மதத் துரோகி வகுப்புவாதி, நாத்திகள் என்ற பட்டங்களைச் சூட்டி விடுகின்றார்கள் . சிறிதாவது பொறுமைகொண்டு , நாம் சொல்லும் பகுத்தறிவால் ஆராய்ந்து பார்ப்பவர்கள் இல்லை.


- கார்த்திகை தீபம் பற்றி தந்தை பெரியார் அவர்கள் கட்டுரை

Monday, November 30, 2009

பாபர் மசூதியை இடித்தவர்களை சிறையில் தள்ளுக!


பாபர் மசூதி இடிப்பு தொடர்பான நீதிபதி லிபரான் ஆணையத்தின் அறிக்கை வெளி-வருகின்ற நிலையில் இந்தியா முழுமையும் பேரலைகளை அது ஏற்படுத்தி விட்டது.


இந்தப் பிரச்சினை அவ்வளவுதான். ஆறிய கஞ்சி பழங்கஞ்சி தான் என்ற ஒரு பொதுக் கருத்தும் கூட உருவாக்கப்பட்டுவிட்டது.

எதை எதைப் பற்றி எல்லாருமே விட்டேனா பார்! என்று தோளை முறுக்கிக் கொண்டு பேனா வாலை யாட்டும் ஊடகங்கள் மதவெறி உணர்வுடனும், உயர்ஜாதி ஆதிக்கத் தன்மையிலும் பாபர் மசூதி இடிப்பு அநீதி பற்றியோ குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நியாயத்தைப் பற்றியோ எழுத ஒரு சொட்டு மையைச் செலவழிக்கத் தயாராக இல்லை.

ஆனால், கீழே தள்ளிய குதிரை குழியைப் பறித்தது போலவே இன்று வரை நடந்து கொண்டும் வருகின்றனர். இன்றைக்குக் கூட முன்னாள் பிரதமர் வாஜ்பேயியை பாபர் மசூதி இடிப்பில் சேர்த்துப் பேசக்கூடாது என்று கூறப்படும் செய்திகளை ஊடகங்கள் வெளியிடும் முறையைப் பார்த்தாலே அவர்களுக்கு உள்ளத்தில் பீறிட்டுக் கிடக்கும் உணர்வின் நிறம் என்ன என்பதை அறியலாம்.

68 பேர் குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெற்ற, பி.ஜே.பி. யின் முன்னாள் தலைவரும், மனித வள மேம்பாட்டுத் துறை முன்னாள் அமைச்சருமான முரளி மனோகர் ஜோஷி இது பற்றி என்ன கூறியுள்ளார் என்பது மிகவும் முக்கியமானதாகும்.

ராமரின் கோயிலைக் கட்ட வேண்டும் என்று சாமியார்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டபோது, வாஜ்பேயி உடனிருந்தார். எனினும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் அவர் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்குள் குத்திட்டு நிற்கும் சன்னமான உண்மையைக் கவனிக்க வேண்டும். சாமியார்-களின் கூட்டத்தில் ராமன் கோயிலைக் கட்டிடத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, வாஜ்பேயி உடனிருந்தார் என்று கூறியுள்ளாரே தவிர, அதனை எதிர்த்ததாகக் குறிப்பிடவில்லை என்பது கவனிக்கத் தக்கதாகும்.

அது போலவே விசுவ இந்து பரிஷத்தின் தலைவர் அசோக் சிங்கால் கூறியுள்ள கருத்தும் மிகவும் முக்கியமானதாகும்.

ராமன் கோயில் விவகாரம் தொடர்பாக வாஜ்பேயி லக்னோவில் கைது செய்யப்பட்டார். ராமன் கோயில் விவகாரத்தில் வாஜ்பேயிக்கு தொடர்பில்லை என்று கூறமாட்டேன் என அழுத்தம் திருத்தமாகவே கூறியுள்ளார்.

இந்த நிலையில் வாஜ்பேயி ஜென்டில்மேனாக இருந்தால், தன் நிலையை தெளிவு படுத்தியிருக்க வேண்டாமா? ஏன் வாயைத் திறக்கவில்லை?

பாபர் மசூதி இடிப்புப் பிரச்சினையில் அத்வானிக்கு ஒரு கருத்து, வாஜ்பேயிக்கு இன்னொரு கருத்து என்று இருக்க முடியுமா? இருந்தால் அது எப்படி கட்சியின் நிலைப்-பாட்டிற்கான மரியாதையைக் காப்பாற்றும்?

இப்பொழுது கூட அக்கட்சியின் பெரிய தலைவர்கள் என்று சொல்கிறவர்கள் பாபர் மசூதி இடிக்கப்பட்டஇடத்தில் ராமன் கோயில் கட்ட வேண்டும் என்றுதானே கூறுகிறார்கள். முரளி மனோகர் ஜோஷி மிகவும் வெளிப்படையாக வாரணாசியில் செய்தியாளர்களிடம் கூறி-யுள்ளாரே.

ராமன் கோயில் கட்டுவது எங்களின் நிகழ்ச்சி நிரலில் இருந்து இன்னமும் எடுக்கப்படவில்லை. இப்போதும் எங்களின் மய்யமான பிரச்சினை இதுதான் என்று வெளிப்படையாகக் கூறியிருக்-கிறார். அயோத்தியில் மட்டுமல்ல, மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி, காசியில் விசுவநாதர் ஆலயம் ஆகிய இடங்களிலும் முசுலிம்கள் தங்கள் கோரிக்கைகளைக் கைவிடவேண்டும் என்று விசுவ இந்து பரிஷத்தின் தலைவர் அசோக் சிங்கால் கூறியுள்ளார்.

இதற்கெல்லாம் முடிவு கட்டப்பட வேண்டு-மானால் பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்ட-னையை விரைவாகப் பெறச் செய்யவேண்டும். இல்லையெனின் இந்துத்வா வெறிக் கூட்டத்தின் வால் வாளாகச் சுழன்று தங்கள் நிகழ்ச்சி நிரலில் (அஜண்டா) உள்ள சிறுபான்மையினர் கோயிலின் மீது கை வைத்துதான் தீருவார்கள்.

ஒரு பக்கம் சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும். இன்னொரு பக்கத்தில் இந்தப் பிரச்-சினையை மதவெறியாக மாற்றி மக்களை ஈர்க்க முயலும் இந்தப் பிற்போக்குக் கூட்டத்தின் முகத் திரையைக் கிழிக்கும் வகையில் பிரச்சாரமும் நடை பெற்றாக வேண்டும். மதச்சார்பற்ற சக்திக்கு கூடுதல் கடமை உணர்வு உண்டு.

டிசம்பர் 3ஆம் தேதி மாவட்டத் தலை நகரங்-களில் திராவிடர் கழகம் நடத்தும் ஆர்ப்பாட்டம் இந்த வகையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தோழர்களே எழுச்சியுடன் ஆர்ப்பாட்டம் நடத்துவீர்! நடத்துவீர்!

விடுதலை தலையங்கம் 30.11.09

துக்ளக்.....பிறவிக்குணம்


முல்லை பெரியாறு பிரச்சினையிலே, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையே அலட்சியப்படுத்தி சட்டத் திருத்தம் கொண்டு வந்த கேரள முதல்வரின் துணிச்-சல் எனக்கு இல்லை. நீங்க என்ன நினைக்கி-றீங்க? என்று முதலமைச்-சர் கலைஞர் திராவிடர் கழகத் தலைவர் கி. வீர-மணி அவர்களிடம் கேட்-கி-றாராம்.

அதற்கு வீரமணி அவர்-கள் என்ன சொல்கிறாராம்?

அட விடுங்க, இந்த சின்ன விஷயத்துக்குப் போய் இப்படிப் பாராட் டறீங்களே, அய்ம்பது சதவிகிதத்துக்குமேலே இட ஒதுக்கீடு இருக்கக் கூடாதுன்னு சுப்ரீம் கோர்ட் உத்தரவு இருந் தும் எத்தனையோ வரு ஷமா 69 சதவிகிதம் கொடுத்துட்டு வர்றோமே! அதுவிடவா இது பெரிய துணிச்சல்?

_ துக்ளக் கார்ட்டூன் 2.12.2009

மொட்டைத் தலைக்-கும் முழங்காலுக்கும் முடிச்சு என்று சொல்லு-வார்களே, அது நூற்றுக்கு நூறு இதற்குத்தான் பொருந்தும். பொதுவாக சோவின் விவாத முறை என்பதே இந்தத் தன்மை வாய்ந்ததாகவே இருக்கும்.

முல்லை பெரியாறு விஷயத்தில் உச்சநீதி-மன்-றத்தின் தீர்ப்பை முடக்கும் வகையில் கேரள அரசு சட்டம் கொண்டு வந்ததை உச்சநீதிமன்றம் ஏற்றுக்-கொள்ளவில்லை.

அதேநேரத்தில், திராவி-டர் கழகத் தலை-வர் வீர-மணி அவர்கள் சொன்ன சட்ட ரீதியான யோச-னையை, கருத்துரையை ஏற்று அ.தி.மு.க. ஆட்சி-யில் கொண்டுவரப்பட்ட 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை, உச்சநீதிமன்றம் குற்றமுடையது என்று இதுவரை சொல்லவில்-லையே! 50 சதவிகித இட ஒதுக்கீட்டைத் தாண்டி வட கிழக்கு மாநிலங்-களில் தாழ்த்தப்பட்டோருக்கும், மலைவாழ் மக்களுக்கும் அளிக்கப்பட்டுக் கொண்டு-தானிருக்கிறதே!

உண்மை இவ்வாறு இருக்க, சோ இப்படிக் குழப்-புவது ஏன்? தமிழ்-நாட்டுக்கோ, தமிழர்க-ளுக்கோ நன்மை _ உரிமை கிடைக்கும் எதை-யும் கொச்சைப்படுத்து-வதும், குறுக்குச்சால் ஓட்-டுவதும்தான் பார்ப்பனர்-களின் பூணூல் தர்மமும், ரத்த ஓட்டமும் ஆகும்.

கொலை வழக்கில் சிக்-கிய சங்கராச்சாரியார்பற்றி எழுதும்போது, அவருக்கு அநீதி இழைக்கப்பட்-டுள்-ளது என்று கூசாமல் இந்தக் கூட்டத்தால் எழுத முடிகிறதே!

சிறுத்தை தன் புள்ளி-களை மாற்றிக்கொண்-டாலும், எதியோப்பியன் தன் நிறத்தை மாற்றிக்-கொண்டாலும் பார்ப்பான் தன் பிறவிப் புத்தியை மாற்றிக்கொள்ளவே மாட்-டான் என்ற டாக்டர் டி.எம்.-நாயரின் பொன்-மொழியை தமிழர்கள் கண்ணாடி சட்டம் போட்டு வீட்டில் மாட்டி வைத்துக் கொள்வார்-களாக!

-விடுதலை  30.11.09

Friday, November 27, 2009

இட ஒதுக்கீடு வேலை வாய்ப்பல்ல; அதிகாரப் பங்-கீடு


விசுவநாத் பிரதாப் சிங் (வி.பி. சிங்) வெறும் 11 மாத காலமே பிரதமராக இருந்-தவர். ஆனாலும், உண்மை-யான ஜனநாயகவாதியாக ஆட்சிப் பொறுப்பை நடத்-திக் காட்டிய மன்னர் குடும்-பத்தைச் சேர்ந்தவர் அவர்.


அவர் ஒரு சூத்திரத்தை, ஆட்சியின் இலக்கணத்தை உருவாக்கிக் கொடுத்தார்.

80 சதவிகித மக்களை ஜாதியின் பெயரால், சமூகத் தின் மய்ய நீரோட்டத்திலி ருந்து ஒதுக்கி வைத்திருப் பதைவிட மிகப்பெரிய திறமைக்கு எதிரான ஒரு செயல் இருக்க முடியுமா? என்ற வினாவை எழுப்பிய பெருமகன் அவர்.

இட ஒதுக்கீடு வேலை வாய்ப்பல்ல; அதிகாரப் பங்-கீடு என்ற உரிமைக் குரலை முழக்கிய கொள்கையாளர்.

பிரதமர் பதவிதான் தனக்கு முக்கியம் என்று அந்தச் சமூகநீதி சரித்திரம் நினைத்திருந்தால், பா.ஜ.க.-வுடன் சமரசமாகப் போயி-ருக்கலாம். மண்டல் குழுப் பரிந்துரையின் பக்கம் தலை வைத்துப் படுக்காமலும் இருந்திருக்கலாம். அதற்கு-முன் பத்தாண்டுகால ஆட்சி-யாளர்கள் அப்படித்தானே நடந்துகொண்டார்கள்.

பிற்படுத்தப்பட்ட மக்க-ளுக்கு வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்த ஒரே காரணத்தால், பாரதீய ஜனதா தன் ஆத-ரவை விலக்கி தன் முக-வரியைக்காட்டிக் கொண்டது. திராவிட இயக்கப் பாரம்-பரியம் என்று தங்களை சொல்-லிக் கொள்ளும் அ.தி.மு.க. உள்பட பா.ஜ.க., காங்கிரசோடு சேர்ந்து-கொண்டு வி.பி. சிங் ஆட்சி-யைக் கவிழ்த்தது. (விதி-விலக்கு, காங்கிரஸ் கூட்-டணியில் இருந்த ஏ.கே. அப்துல்சமது என்னும் பெருமகனார்) அப்போது-கூட அந்த உத்தரப்பிரதேச சிங்கம் எப்படி கர்ச்சித்தது தெரியுமா? சமூகநீதிக்காக நூறு பிரதமர் நாற்காலிகளை இழக்கத் தயார்! என்று சங்கநாதம் செய்தாரே, அவர் அல்லவோ மனிதகுல மாமனிதர்!

மும்பையில் வன்முறை-யைக் கண்டித்து ஒரு சொட்டு தண்ணீர்கூட அருந்-தாமல், உண்ணாவிரதம் இருந்தார். இரு சிறுநீரகங்-களையும் இழந்த நிலையில், அவருக்காக சிறுநீரகங்-களைத் தானமாகக் கொடுக்க திராவிடர் கழக இளைஞர-ணித் தோழர்கள் நீண்ட வரிசையில் நின்றனரே!

திராவிடர் கழகத் தோழர்-களிடத்திலும், தலைவரிடத்-திலும் அவர் வைத்திருந்த அன்புக்கு ஈடுஇணை எது-வும் கிடையாது. வீரமணி-யைப் பார்க்கும் பொழுதெல்-லாம் சமூகநீதி உணர்வைப் பெறுகிறேன் என்று நெகிழ்ச்சி ததும்பக் கூறிய அந்தச் சொற்களை இன்று நினைத்-தாலும் நம் கண்களில் நீர் கசிகிறது.

வி.பி. சிங் மறைவைக்-கூட இருட்டடித்தன _ உயர்ஜாதி ஊடகங்கள்! அந்த அளவுக்கு அவர் சமூகநீதியாளர் என்பதுதான் அதன் ஆழமான பொரு-ளாகும்.

வி.பி. சிங் மறைந்து இன்-றோடு ஓராண்டு ஆகிவிட்-டது. ஆனாலும், அவர் ஏற்றி வைத்த சமூகநீதிக் கொடியை இறக்கிட எந்தக் கொம்பனாலும் முடியாது_ முடியவே முடியாது! வாழ்க வி.பி. சிங்!!

-விடுதலை  மயிலாடன் 27.11.09

Wednesday, November 25, 2009

பெண்கள்


பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு _ சர்வ-தேச நாளாக இன்று கொண்-டாடப்படுகிறது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தை-கள் மேம்பாட்டு அமைச்சகம் டில்லியில் கருத்தரங்கம் ஒன்றினையும் ஏற்பாடு செய்துள்ளது.


இதுபோன்ற நாள்கள் அனுசரிக்கப்படுவதால் என்ன இலாபம் என்பதை-விட, பெண்களின் நிலை எந்த இடத்தில் இருக்கிறது என்கிற வரவு_செலவு பார்ப்பதற்கு நிச்சயமாகப் பயன்படும். அதன்மூலம் உரிமைக் குரலை ஓங்கி ஒலிக்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

இந்தியத் துணைக் கண்டத்தைப் பொருத்தவரை 2001 முதல் 2007 வரையி-லான ஒரு புள்ளி விவரம்:

பாலியல் வன்முறை (கற்பழிப்பு) _ 3,176
பாலியல் தொந்தரவு _ 10,006
கடத்தப்பட்டு துன்புறுத்-தப்பட்டோர் _ 4,482
வரதட்சணை சாவு _ 1,261
கணவனாலும், உறவினர்-களாலும் கொடுமைக்கு ஆளானோர் _ 8,549.

அரசுக்குத் தெரிந்த புள்ளி விவரங்கள் இவை. உண்மையில் இதைவிட அதிகமான துயரங்கள்தாம் பெண்களைக் குத்திக் குதறியிருக்கும்.

பரிதாபப் பள்ளத்தாக்கில் வீழ்ந்து கிடக்கும் இந்தப் பெண்களைக் கைதூக்கிவிட ஆண்கள் தோள் தூக்கி வரு-வார்கள் என்று எதிர்-பார்க்க முடியாது. பூனை-களால் எலிகளுக்கு உரிமை கிடைக்குமா என்ற தந்தை பெரியார் அவர்களின் வினாதான் இதற்குப் பதி-லாகும்.

சட்டப்பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் பெண்-களுக்கு 33 விழுக்காடு இடம் என்பது (நியாயமாக 50 விழுக்காடு தேவையே!) 1996 ஆம் ஆண்டுமுதல் நாடாளுமன்றத்தில் நிலு-வையில் உள்ளது. கட்சி-களைக் கடந்து ஆண்கள் இதில் எதிர்ப்பாக உள்ளனர் என்பது வெட்கப்படத்தக்க-தாகும்.

உலகில் இந்தப் பிரச்-சினையில் இந்தியா 104 ஆம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் மக்களவையில் பெண்களின் பிரதிநிதித்துவம் வெறும் 10.7 விழுக்காடுதான். பாகிஸ்தானில்கூட 21.3 விழுக்காடாகும். முதல் இடத்-தில் இருப்பது ருவாண்டா (48.8 விழுக்காடு).

பெண்களின் மக்கள் தொகையும் சரிந்து வரு-கிறது. இந்தியாவில் 1000 ஆண்களுக்குப் பெண்-களின் எண்ணிக்கை 933 ஆகும். சீனாவிலோ 100 ஆண்களுக்கு 117 பெண்கள் என்ற நிலை உள்ளது.

ஒரு நல்ல தகவல்_ இந்-தி-யாவில் ஆண்களின் சராசரி வயது 63.9. பெண்-களின் சராசரி வயதோ 66.9. இவ்வளவு இடர்ப்பாடு-களையும் கடந்து இந்த நிலை; காரணம், ஆண்-களைவிட பெண்களுக்கு எதிர்ப்புச் சக்தி அதிகமாம். இருந்தாலும் அவர்கள் தலையெடுக்க முடியாமல் இருப்பதற்குக் காரணம் ஆண்மை என்ற ஆண்-களின் அடக்குமுறை தத்-துவம்தான் என்பது தந்தை பெரியார் அவர்களின் கருத்தாகும். விழா எடுப்ப-வர்கள் இதுபற்றியெல்லாம் எங்கே சிந்திக்கப் போகி-றார்கள்?

- விடுதலை மயிலாடன் எழுதியது 25.11.09

Tuesday, November 24, 2009

நாட்டைப் பிடித்த அய்ந்து நோய்கள்

நாள்தோறும் நாட்டில் பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஒவ்-வொரு ஏடும், இதழும், பக்திச் செய்திகளைப் பரமார்த்தமாக வெளியிடு-கின்றன. ராசி பலன்களும் இடம்பெறும். மக்களை முட்டாள்களாகக் கட்டிப் போட்டால்தான் அவர்-களைச் சுரண்டிக் கொழுக்க முடியும் என்கிற பரந்த மனப்பான்மை பத்திரிகை முதலாளிகளுக்கு!


ஒரு இதழில் சிம்ம-ராசிக்-குப் பலன் இலாபம் என்றிருக்கும்; அதே நாளில் அதே ராசிக்கு இன்-னொரு பத்திரிகையில் பெருத்த நஷ்டம் என்றி-ருக்கும்.

இவற்றையெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கும் அளவுக்குப் புத்திசாலித்-தனமோ, பொறுமையோ யாருக்கு இருக்கிறது? இந்த மெத்தனம்தான் பத்திரிகை முதலாளிகளுக்-குப் பெருத்த இலாபகர-மான ஒன்றாகும்.

இவற்றையும் தாண்டி வேறு விதமான தகவல்-களும் வந்துகொண்டு-தானி-ருக்கின்றன. அய்ம்பொன் சாமி சிலைகள் எனக் கூறி பித்-தளை சிலைகளை விற்க முயன்ற பூசாரி உள்பட நான்கு பேர் கைது! (தேனி மாவட்டம்). அடுத்தடுத்து 6 குழந்-தைகள் கொலை; பெண் சாமியார் மற்றும் அவரது கணவர் மீது 200 பக்க குற்றப் பத்திரிகை நீதிமன்-றத்தில் தாக்கல்; 47 பேர் சாட்சிகள் (சேலம் ஆத்-தூர் அருகே).

இவை வெறும் செய்தி-கள் மட்டுமல்ல; மதம், பக்தியின் பெயரால் நாட்-டில் நடக்கும் கீழ்த்தர-மான செயல்பாடுகள் _ இவற்றின்மூலம் பக்தர்-களாக இருப்பவர்கள்கூட சிந்திக்கவேண்டிய கட்-டாயம் _ எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவ-சியம்.

காஞ்சிபுரம் கோயிலில் அர்ச்சகப் பார்ப்பான் தேவநாதன் _ கோயில் கர்ப்-பக் கிரகத்துக்குள்ளேயே பெண்களிடம் நடத்திய காம விளையாட்டுகள் _ இவற்றிற்குப் பிறகும் கோயில், பக்தி சமாச்சாரங்-கள்பற்றி மக்கள் மறுபரி-சீலனை செய்யாவிட்டால் அவர்களின் அறிவுச் சாளரங்கள் எந்த அள-வுக்கு அடைபட்டுப் போயி-ருக்கின்றன என்பதைக் கவனிக்கவேண்டும்.

ஒவ்வொரு கோயிலுக்-கும் தலப்புரணாங்களை எழுதி வைத்திருப்பதில் மட்டும் குறைச்சல் இல்லை. அந்தக் கோயில்களில்-தான் இவ்வளவுக் கேவ-லங்களும் அரங்கேறுகின்-றன. அப்படியானால் அந்தத் தலப் புராணங்-களின் மகிமை எல்லாம் வெறும் வெத்து வேட்டு-தானே _ பொய்யில் புழுத்த புழுக்கள்தானே!

பத்திரிகைக்காரர்கள் இந்தக் கண்ணோட்டத்தில் எல்லாம் எழுதமாட்டார்-கள், எழுதினால் பிழைப்-புப் போய்விடுமே!

நாட்டைப் பிடித்த அய்ந்து நோய்கள் என்று ஒரு பட்டியலிட்டார் தந்தை பெரியார். பார்ப்-பான், பத்திரிகை, அரசியல் கட்சிகள், தேர்தல், சினிமா என்பவைதான் அந்த அய்ந்தும். பொறுமையாகப் பொருத்திப் பாருங்கள், உண்மை புரியும்!

விடுதலை 25.11.09

Monday, November 23, 2009

தமிழ் தண்டால்தான் எடுக்கும் என்பதை மறந்துவிட-வேண்டாம்

உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் தமிழ் பாட வேளையில் ஆசிரியர்கள் பிற மொழிச் சொற்களைப் பயன்-படுத்-தக்-கூடாது; அவ்வாறு பயன்படுத்துவது தாய்-மொழி கற்பித்தலின் நோக்-கத்தை எட்ட இயலாத நிலையை ஏற்படுத்துகிறது.


முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளிகளை ஆய்வு செய்யும்போது தமிழ்ச் சொற்கள் மட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யவேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் பெருமாள்சாமி ஆணை பிறப்பித்துள்ளார்.

நியாயமான சுற்ற-றிக்கை இது. தமிழ் வகுப்-பில்கூட தமிழ் தாண்டவ-மாடாவிட்டால், வேறு எந்த வகுப்பில் அதற்-குரிய மதிப்பு காப்பாற்றப்-படும்?

தமிழன் வீட்டுத் திரு-மணத்தில் சமஸ்கிருதத்-திற்கு இடம் இல்லை என்று கூறி, தமிழன் தலைமை தாங்கி, தமிழி-லேயே அது நடத்தப்பட-வேண்டும் என்கிற உணர்ச்-சியின் வகைப்பட்டது இந்தச் சுற்றறிக்கை.

சென்னையில் ஆங்-கில வழிக் கல்வி நிறு-வ-னங்களில் படிக்கும் மாணவ, மாணவிகள் தப்பித் தவறி தமிழில் உரையாடிவிட்-டால், அவர்களுக்குத் தண்டனை, ஒறுப்புத் தொகை விதிக்கப்படு-கின்றன என்ற தகவல்கள் வெளிவரவில்லையா? அந்த உணர்வு தமிழர்-களிடத்தில் ஏற்படவேண்-டாமா?

பொதுவாக ஆங்கிலத்-தில் ஒரே ஒரு எழுத்துத் (ஷிஜீமீறீறீவீஸீரீ) தவறாக எழுதி-விட்டால், இமயமலை உச்சியில் ஏறிக் கூவத்தில் குதிப்பவர்கள் உண்டு. அப்படி எழுதுபவர்-களுக்கு முட்டாள் பட்ட முத்திரையைக்கூடப் பொறித்து விடுவார்கள். அறிவாளித்தன்மை என்-பது ஆங்கில எழுத்து-களில் குடிகொண்டிருக்-கிறது என்பது அவர்-களின் நினைப்பு!

அதே ஆசாமிகள் பருப்பை பறுப்பு என்று எழுதினால், அப்படி எழு-துவதே ஒரு மேதாவித்-தனம் _ மெத்த படித்தவர் _ அவருக்குத் தமிழ் எல்லாம் அவ்வளவாக வராது என்று சொல்லு-வதே-கூட ஒரு பெருமை-யாகப் போய்விட்டது _ அந்த அளவுக்குத் தாழ்வு மனப்பான்மை தமிழர்களி-டத்தில் ததும்பி வழிகிறது.

இன்னொன்று, கல்வித் துறை இயக்குநருக்கு: பதவி உயர்வு, ஊதிய உயர்வு (மிஸீநீக்ஷீமீனீமீஸீ) கிடைக்கிறது என்பதற்காக, உடற்பயிற்சி ஆசிரியர் உள்ளிட்டோர் அஞ்சல் வழியில் தமிழ் படித்து, கோனார் உரைகளை மட்டும் மேலோட்டமாகப் படித்துவிட்டு, தேர்வுக்-குரிய அளவில் மட்டும் மதிப்பெண் வாங்கி, புலவர் பட்டமும் பெற்று தமிழாசிரியராக ஆக்கப்-பட்டால், வகுப்பில் தமிழ் தண்டால்தான் எடுக்கும் என்பதை மறந்துவிட-வேண்டாம்.

- மயிலாடன் விடுதலை 23.11.09

Sunday, November 22, 2009

திருவண்ணாமலை தீபமும்-திகைப்பும்


1947இல் விடுதலையில் வெளியான (கார்த்திகை 7 விய ஆண்டு) தீபமும் திகைப்பும் என்னும் பேராசிரியரின் திருவண்ணாமலை தீபம் பற்றிய கட்டுரை.


தம்முடைய கட்டுரையில் திருவண்ணாமலையில் ஏற்பட்ட தாழம்பூப் பிரச்சினை புராண வரலாற்றினை எடுத்துக்கூறிச் செயற்கைத் தீபம் ஏன் ஏற்றவேண்டும் என்று வினா எழுப்பி, ஒளியே முக்கிய மென்றும் எனவே தான் கடவுள் பெயரால் இவ்விழா வெனின் நூதன மின்சார சக்தியினால் குறைந்த செலவில் தீபத்தைப் போல் பல மடங்கு ஓளியைத் தரக்கூடிய மின்சாரவிளக்கை ஒன்றாகவோ ஓராயிரத்து ஒன்றாகவோ போட்டு (அமைத்து) ஏழை மக்களுடைய பொருளுக்கு அழில்லாமல் செய்யட்டும் உற்சவ காலங்களில் தீவட்டிக்கு பதில் காஸ்லைட் உபயோகிப்பது முறையானால் இது மட்டும் எப்படித்தவறாகும்? அனல் விளக்குக்குப்பதில் மின்சாரத் தொடர் விளக்குகள் அமைத்து கார்த்திகை கொண்டாடும் போதும் தீபம் மட்டும் ஏன் மாற்றம் பெறக்கூடாது என்று தீபத்திருநாள் கொண்டாடுபவர்களுக்கு மாற்றுச் சிந்தனை அளிக்கிறார். தீபம் நமக்குத் திகைப்பாக இருக்கிறது. தீபத்தைப் போற்ற வேண்டாம் என்று முடிக்கிறார். கார்த்திகை நெருங்கி விட்டது! வீடுகளிலெல்லாம் அகல் விளக்குகளை வரிசை வரிசையாக ஏற்றி-வைப்பார்கள். இரவு முழுவதுங்கூட விளக்கு-களுக்கு எண்ணெய் ஊற்றியபடி இருப்பர், செல்வர்-கள் வீடுகளிலே பணியாட்களும் பிறரும். அந்-நாளிலே திருவண்ணாமலையிலே தீபம். மலை யுச்சியிலே பெருங்கொப்பரை, அது நிறையக் கற் பூரத்துடன் கலந்த நெய், மேலும் மேலும் நெய்யும் திரியும் கொட்டிய வண்ணம் பக்தர்களின் கூட்டம்! தமிழகத்தில் உள்ள பெருவாரியான கோவில்-களி லேயும் அந்தந்தக் கடவுள்களின் பொருள் நிலைக் கேற்ற வண்ணம் கார்த்திகை கொண்-டாடப்பட்டே வருகின்றது.


தீபத்திற்காக ஆயிரக்கணக்கான மணக்கும் நெய்யும் நூற்றுக்கணக்கான (கேஸ்) பெட்டி கற்பூர-மும், கட்டுக்கணக்கிலே திரி நூலும் எரிக்கப்படு-கின்றன. வீடுகளிலே ஏற்றப்படும் கோடிக்கணக்கான கை விளக்குகளால் ஆயிரக்கணக்கான குடங்கள் அளவுள்ள எண்ணெய் வீணாக எரின்கிறது. தீப தரிசனத்திற்காக திருவண்ணாமலைக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான மக்களால், அவர்களது போக்கு-வரத்துக்காக ரயிலுக்குச் செலவிடும் தொகையும், வெளியூர்களில் தங்குவதால் ஏற்படும் செலவுத் தொகையும் ஏராளம். அவர்களுக்கு ஏற்படும் பொருள் இழப்பும் ஏராளம்!



நாசப்பட்டியல்

இவ்வளவு பெருங்கூட்டமான மக்கள் ஆண்-டிலே ஓரிரண்டு நாட்கள் திருவண்ணா-மலையிலே வந்து குவிவதை முன்னிட்டு நூற்றுக்கணக்கிலே கட்டப்பட்டுள்ள சத்திரங்களும், மடங்களும், பாக்கி இருக்கும் முன்னூற்று அறுபத்து மூன்று நாட்களும் பயன்படாமல் வீணாகக் கிடப்பதால் (சில சோம்-பேறிகளுக்கு உறையுள் ஆவதைத் தவிர ) அதற்-காகக் செலவழிக்கப்பட்ட மூலதனம் பாழாகின்றது. இவ்வளவு பெருங்கூட்டமாக மக்கள் திரளுவதால் இலாபம் அடையும் (கொள்ளையடித்து வாழும்) கோயிற்-பூனைகள், செல்வம் மிக்க செட்டியார் இனத்-தாரையும், பிறதமிழரையும் தூண்டிவிட்டு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான ரூபாய் செலவில் வெள்ளியிலே வாகனம், நூதனரதம், அற்புத கல்யாண மண்டபம், ஈஸ்வரனுக்குப் பொன்-னிலே கவசம், அம்மனுக்கு வைர ஒட்டியாணம் புதிய கோபுரக் கும்பாபிஷேகம், வேத வியாகர்ண பாடசாலை என்பவைகளை அமைக்கச் செய்வ-தாலும், அவைகளின் விளம்பரத்தின் மூலம் ஏராள-மான மக்களை திரளச்செய்துஅந்த பெருங்-கூட்டத்தால் பெருங்கொள்ளை கொண்டு கவலை-யின்றி வாழ்வதற்கு வழிசெய்து கொள்ளுந்-தன்மையாலும், ஏற்படும் பொருள் இழப்பு ஏராளம். எவ்வகையானும் தமிழர் கோடிக் கணக்கிலே பொருளைக் கொட்டியழவும் தமிழரின் வளம் கெட்டழியவும் காரணமாகின்றது கார்த்திகை தீபம்.

பொருள் பாழாக்கப்படுவதைத்தவிர மக்களுக்க ஏற்படும் தொல்லையும், தொத்து நோயும், துயரும் பெருந்துன்பமும் அளவற்றவை என்பதோடு, அவர்-களுடைய அறிவு அழியுந்தன்மையே திகைப்பை விளைப்பதாம்!

இது பற்றிய புராணக்கதை யாவருக்கும் தெரிந்தே! இதன் படி மும்மூர்த்திகள் சந்திக்-கின்றனர். ஏன்? எங்கே? எப்பொழுது? யாருக்கும் தெரியாது. மும்மூர்த்திகளிலே ஒருவர் சிவன், அவரே முழுமுதற் கடவுள் என சைவ மதத்தினர் கூறுவர்! அவர் ஏன் மற்ற சாதாரணக் கடவுளரைச் சந்திக்க வேண்டும்? நமக்குத் தெரியாது! சந்திப்பது ஒப்புரிமை படைத்தவர்களிடத்திலேயே நிகழ்வது இயற்கை. முழுமுதற் கடவுளின் உயர்வை எடுத்துக்காட்ட வந்த இக்கதையில் சிவனைக்காண மற்றிருவரும் சென்ற போது இவை நிகழ்ந்த தாகவாவது கூறியிருக்கலாம். அவ்வாறும் இல்லை. சந்தித்த இடத்திலேயே யார் பெரியவன் என்ற விவாதம் ஏன் தோன்றவேண்டும்? எதிர்பாராமல் சந்திக்க நேர்ந்தபோது பிரம்மாவும் விஷ்ணுவும், அப்-பொழுதே யார் பெரியவன் என்ற சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள விரும்பியதின் விளைவா? மற்ற புராணங்களின்படி விஷ்ணுவின் மகன் பிரம்மா என்ற கதையிருக்க சந்தித்த போது திடீரென்று சந்தேகம் பிறப்பானேன், தந்தைக்கும் மகனுக்குமே? யார்பெரியவர், என்ற விவாதம் மூர்த்திகளிடையிலே நடப்பானேன்? முக்காலத்தையும் உணரும் மூர்த்தி-கள் ஒருவரையொருவர் சந்திக்கப் போவதையே உணர வில்லை! சந்தித்தால் சச்சரவு ஏற்படும் என்பதை மட்டும்தான் உணரவில்லையா? அன்றி இவைகளை எதிர்பார்த்தேதான் சந்தித்தார்களா? அப்-படியானால் முடிவும் அவர்கள் அறிந்ததேதானா? அதற்கு ஏன் ஒவ்வொரு புதுஉருவிலே தோன்ற வேண்டும்? நாமறியோம் என்பது மட்டுமல்ல; மும்-மூர்த்திகளேகூட யாரை,எங்கே, எப்பொழுது சந்திக்கவேண்டும் என்ற நிர்ணயமில்லாமலும், ஏன் சந்திக்கவேண்டும் என்ற சிந்தனை இல்லாமலும், என்ன விளையும் என்பதை அறியாமலுமே தான் இருந்திருக்கவேண்டும்!

இது நிற்க. யார் பெரியவர் என்று பிரம்மாவுக்கு விஷ்ணுவுக்கும் இடையிலே வாதம் ஏற்பட்டதே தவிர, கதையின்படி யார் பெரியவர் என்ற முடிவு காணப்படவில்லை. இடையிலே சிவனார் ஜோதியாகி வானளாவினார்! இருவருக்கும் பெரிய-வருமானார்! அவ்வளவுதான்!

பொய் மூர்த்திகள் இது கிடக்க. ஜோதியாய் நின்ற பெருமான் அடியையும், முடியையும் காணச் சொன்னபோது எப்படிப் பேசினாரோ? அந்த முகந்-தெரிந்தால் பிரம்மா - முடியைக் காண்பதும் கடினமாமோ? அசரீரியாகச் சொன்னதாக வைத்துக் கொள்வோம்! அடிமுடியைக் காண விரும்பிய இருவரும் பன்றியும் அன்னமுமாய் உருவெடுப்-பானேன்? பன்றியாக பலமுறை உருவெடுத்த பழக்கத்-தால் திருமால் தான் உடனே பன்றி வடி-வெடுத்-தார்! பிரம்மாவாவது ஏன் உயரப்பறக்கக்கூடிய கருடனாக உருவெடுக்கக் கூடாதோ? தெரியவில்லை யென்றோ முடியவில்லை என்றோ கருத முடியுமா? இருந்ததென்றால் இரு மூர்த்திகளும் தங்களின் இயற்கை உருவத்தைவிட இதற்கேற்ற புது வடிவெடுத்துங்கூட காணமுடியாத காரணமென்ன? ஜோதி யென்றால் அடிமுடி இல்லாதது என்றால் - முழுமுதற் கடவுளல்லவா? எனவே அடிமுடி இல்லாத ஜோதியாகி நின்றார் என்-றால் - இல்லாத அடியையும் முடியையும் காணும்-படி கூறியது பொய்யல்லவா? அடி முடி இருந்ததென்றால்- இருவரும் காணாததால் காண இயலாததால் -மூர்த்திகள், படைப்பவர், காப்பவர் என்று பேசப்படுவது முழுப்பொய்யல்லவா? பின் விஷ்ணுவிற்கு மட்டும் கோயில்களேன்? பிரம்மாவைவிட எக்காரணத்தாலே விஷ்ணு கடவுளென்று கருதப்படமுடியும்?

விஷ்ணுவுக்கோ, பிரம்மாவுக்கோ கொஞ்சம் புத்தியைப் பயன்படுத்தும் திறமை யிருந்தாலும் தாங்களும் ஜோதியாகி - (தீயாகி) ஜோதியிலே கலந்து அய்க்கியமாகி அடியையோ முடியையோ மட்டு-மல்ல; அடி முடி இரண்டையுமே கண்டு திரும்பி வெளிவந்திருக்கலாம். அப்படியானால் சிவன் பெருமை நிலைக்காதே என்றெண்ணிய புராணீகர், விஷ்ணுவை பன்றியாக்கி, பிரம்மாவை அன்னமாக்கி, அரன் பெருமையைத் தடுத்தாட் கொண்டார் போலும்! தாழம்பூ பிரச்னைஇனி பிரம்மா முடியைத் தேடச்சென்றபோது வந்த தாழம்பூ முடியிலிருந்து வந்ததென்றால், முடியிருந்ததென்றாகிறது! அப்படியானால் பிரம்மாவால் ஏன் அடையமுடியவில்லை? அவரால் அடைய முடியவில்லையென்றால் தாழம்பூவால் மட்டும் கீழ்நோக்கி அவ்வளவு தூரம் வர முடிந்தது? தாழம்பூ தானாகவர வில்லையென்றால் - அது அசேதனம், சேதனமென்று, தானாக இயங்குவதென்று இயற்கையின் தன்மைக் கேற்ப இயல்வது. எனவேதான் கீழே விழுந்தது என்றால் அன்னப்பறவையிடம் எப்படி பேசமுடிந்தது? பொய் சாட்சி கூறியதுதான் எப்படி ? அது கூற-வில்லை, அன்னப்-பறவை அடையாளமாகக் கொண்டு வந்த-தென்றால், தாழம்பூவைத் தண்டிப்பானேன்? தாழம்-பூவைச் சிவனார் தண்டித்ததினின்றும் அது தலை-மையிலே இருந்தது என்பதைச் சிவனார் ஒப்புக்-கொண்டதாகத் தானே பொருள்? அப்படி-யானால் ஜோதியின் முடியிலே தாழம்பூவோ தாழைச் செடியோ எப்படியிருக்க முடியும்? எரிந்து சாம்ப-லாய்ப் போயிருக்காதா? ஜோதியான போது இறை-வன் இவைகளை நீக்கிவிட்டாரா? பிறகு தாழை-யின் கதியென்ன? ஜோதியிலே கங்கை சந்-திரன் முதலானோர் தங்கி இருப்பதனால் ஒரு தாழம்பூ ஏன் விழவேண்டும்? இறைவன் தலை-யிலே சூட்டப்பட்டு விட்டால் பின் என்றும் அழி-யாது என்ற கூற்று பொய்ப்பதன்றோ? அதுவன்றி இறைவன் முடியினின்று விழும்போது தாழை பொய் சொல்லிற்றென்றால் சிவனின் மகத் துவந்தான் என்ன?


1 1/2 அடி உருவம் ஏன்

இறைவன் ஜோதியாய் நின்றதால்தான் அண்ணா-மலையே தேயுஸ்தலம் என்று கூறப்படு-வதை ஏற்றுக்கொண்டால் பின் ஏன் தீபம் ஏத்து-கின்றனர்? அரனுடைய அடிமுடிகளை அரியும் அயனுமே காணமுடியவில்லையென்றால், அடி முடி இரண்டையுமே எவரும் காணக்கூடிய வகையிலே தீபம் அமைப்பதன் அர்த்தமென்ன? அல்லது அத்தீபத்தைத் கண்டவுடனேயே, மக்கள் இறை-வனின் செந்தழல் மேனியையும் அடி-முடிகாண இயலா விண்ணுயர ஓங்கிய உயர்-வையும் உணர்கின்றனர் என்றால், தீப விழா நடை-பெறும் அதே இடத்தில் அருணாசலேஸ்வரருக்கு ஒன்றரை அடி உயரத்தில் சிலை (விக்ரகம்) எதற்காக? இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக தீபம் ஒளி விட்டும் சிவனாரின் இலிங்க வடிவமும், மூர்த்தி வடிவமும், ஒரு காலைத் தூக்கியருளும் நடராசரும், பொன்முடி தரித்த சுந்தரேசுவரரும் எதைக் காட்டுகின்றன? அடிமுடியற்ற கடவுளைக் காட்ட தீபம் என்றால் தாளம் தவறாமல் அடி-வைத்துச் சதிராடும் சாமிக்கும், இசை கேட்டுருகித் தலை (முடி) யசைக்கும் சாமிக்கும் சிலை எதற்-காக? தீபம் கண்ட மக்களுக்கு, தீபத்தின் தத்துவம் பேசும் தொண்டர்கட்கும் விக்ரகவணக்கந்தான் எதற்-காக? அண்ணாமலை தீபத்தைக் கண்டு ஜோதி வடிவைக் கொண்டு. அங்கெங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி அருளோடு நிறைந்-ததை மக்கள் உணர்ந்து கொண்டால் தீபந்தான் எற்றுக்கு? இவைகளை மக்கள் உணர்-தல் எளிதோ, ஞானிகளன்றோ உணரவல்லார் எனின், தீபத்தின் பெயரால் மக்களின் பொருள் பாழாக்கப்படுவானேன்?

அகல் விளக்கிலெல்லாம், மின்மினியின் ஒளியைக் காண்பதாகக் கூறும் பக்தர்கள் அண்ணா-மலைக்கே ஆண்டு தோறும் செல்வானேன்?

அறிவுடைமையாகுமா ?

அகில உலகையும் அதில் வாழும் மக்களையும் படைத்த முழுமுதற் கடவுள் ஜோதிவடிவினன் என்பதை உலகோருக்கு உணர்த்தவேண்டுமானால், உலகில் பகல் முழுவதும் விளங்கும் பகல-வரனையே அதற்கு ஒர் அடையாளமாக்கியிருக்-கலாம்! அகல் விலக்குக்கு எண்ணெய்யோ, தீபத்திற்கு நெய்யுந்திரியுமோ வீணாகாது. இவை வீணாவது பற்றிக் கவலையில்லை யென்றேகரு-தினாலும்,-அரியும் அயனும் அளவிட முடியாத அரன் என்று எடுத்-துக் -காட்ட எழுதப்பட்ட இறைவன், அவரவர்கள் பொருள் வலிவுக் கேற்பவும், சேர்ந்த நெய், சூடம், திரி இவைகளுக்கேற்பவும் அளவிடப்படுவது அறிவுடைமையாகுமோ?

அண்ணாமலையே ஜோதிவடிவென்றும், அதற்கு அடையாளமாகவே அதன் மேல் தீபமென்றும் கூறினால், ஜோதி வடிவு ஜோதியை ஏன் இழந்தது என்பதையும் முன்பொரு காலத்தில் ஜோதி-யாகத்தான் இருந்ததென்றால்,அதுவே நெருப்பாக நின்று மாறிவிட்ட பிறகு எதற்காக செயற்கைத் தீபம் என்பதையும் எண்ணிப்பாருங்கள்!

ஒளியே முக்கியமென்றும், எனவேதான் கடவுள் பெயரால் இவ்விழாவெனின் நூதன மின்சார சக்தியினால் குறைந்த செலவில் தீபத்தைப் போல் மின்சார விளக்கை ஒன்றாகவோ, ஓராயிரத்து ஒன்றாகவோ போட்டு (அமைத்து) ஏழை-மக்-களுடைய பொருளுக்கு அழிவில்லாமல் செய்யப்-படும் உற்சவகாலங்களில் தீவெட்டிக்குப்பதில் காஸ்லைட் உபயோகிப்பது முறையானால் அது மட்டும் எப்படித்தவறாகும்? அகல்விளக்குக்குப் பதில் மின்சாரத் தொடர்விளக்குகள் அமைத்து கார்த்திகை கொண்டாடும் போது தீபம் மட்டும் ஏன் மாற்றம் பெறக்கூடாது?

ஆனால், தீபமோ வழக்கம் போல் வந்து போகிறது! தமிழர் பொருளோ என்றைக்கும் எரிகிற நெருப்பிலே எண்ணெய்யாகிறது! தமிழர் வாழ்வோ இன்றளவும் அறியாமை இருளிலே அழிவுறுகின்றது! இந்நிலையை உணர்ந்ததாலேயே தீபம் நமக்குத் திகைப்பாக இருக்கிறது! தீபத்தைப் போற்ற-வேண்டாம்! திகைப்புற்றே கலங்கவேண்டாம்!

நன்றி விடுதலை 22.11.09

Saturday, November 21, 2009

ஜெயேந்திரர் முதல் தேவநாதன் வரை...


காஞ்சிபுரம் மூக்கைத் துளைக்கிறது; கசுமாலம் _ இப்படியும் ஒரு பக்தியா? ஜென்மங்களா? என்று நாக்கைப் பிடுங்க நாலு கேள்விகளைப் பெண்கள் நடு வீதியில் கேட்டுக் கொண்டுதானிருக்-கிறார்கள்.


மச்சேஸ்வரர் கோயிலாம் _ அந்தக் கோயில் அர்ச்சகன் தேவநாதனாம் _ கோயில் கருவறையிலே கரு உற்பத்தி பண்ணிக்கொண்டு கிடக்கிறானாம்.

பகவான் கர்ப்பக் கிரகத்தில் சரச-மாடினால் முதுமை வந்து முட்டாதாம் _ என்றும் இளமையில் சுகிக்கலாமாம்! அர்ச்சகன் தேவநாதனின் பசப்பு வார்த்தைகளில் மயங்கி பாவையர் பலர் அவன் மடியில் வீழ்ந்தனராம்.

ஒரு பக்கம் அர்ச்சனைத் தட்டில் காசு விழுமாம் _ இன்னொரு பக்கம் கர்ப்பக்-கிரகத்தில் காமச் சேட்டை பூஜைகள் நடக்குமாம்.

எவ்வளவு கொழுப்பும், வக்கிரமும் இருந்தால் இந்தக் கேவலத்தை கை தொலைபேசி மூலம் படம் பிடித்து வைத்து, பிறகு தனியே போட்டுப் பார்த்து ரசிப்பானாம்.

ஒரு பெண், இரு பெண் அல்ல; 15 பெண்கள் வரை பட்டியல் நீள்கிறது. விஷயம் வெளியுலகுக்கு வரவே, ஆசாமிதன் குடும்பத்தோடு தலைமறை-வாகி விட்டான்! இப்பொழுது நீதிமன்றத்தில் சரண் அடைந்து கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறான்.

காமகோடி பீடாதிபதியே இந்தத் தரத்தில் உள்ளவர் என்கிறபோது இந்தத் தேவநாதன்தான் எம்மாத்திரம்!

காஞ்சி சங்கரமடத்தில் நடக்காத-வைகளா இந்தக் கோயிலில் நடந்து விட்டது?

காமத்தையறுத்த மடாதிபதியே காமக் குளத்தில் விழுந்து நீச்சல் அடிக்-கிறார் என்றால், அவாள் சிஷ்யாள் _ அவாள் வயதுக்கு எவ்வளவு ஆட்டம் போடுவா?

ஒவ்வொரு நாளும் பிரம்மமுகூர்த்த நேரத்தில் விடியற்காலை நாலரை மணிக்கு திருவரங்கத்திலிருந்து உஷா என்ற பெண் ஜெயேந்திரரோடு சல்லாப மொழிகளில் உல்லாசப் பேச்சுகளைப் கைப்பேசியில் பேசுவார் என்ற தகவல் எல்லாம் ஊர் சிரிக்கவில்லையா? அனுராதா ரமணன் என்ற பிரபல பார்ப்பனப் பெண் எழுத்தாளர், சங்கராச்-சாரி வேங்கையிடமிருந்து எப்படி தப்பித்தார் என்பதை கண்ணீ-ரும் கம்பலை-யுமாக தொலைக்காட்சி-களில் குமுறினாரே கொட்டியழுது வேதனை-யின் சூட்டைத் தணித்துக் கொள்ள-வில்லையா? மைதிலி என்ற பெண்ணுடன் தன் எதிரிலேயே அந்த மடாதிபதி உறவு வைத்தார் என்று ஊருக்கும் உலகுக்கும் அறிவித்தாரே _ அதைப் பார்க்கும்-போது இந்த தேவநாதன் விஷயம் அற்-பமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

வடக்கே குஜராத் மாநிலம் தபோயில் உள்ள சவுமியநாராயண் கோயிலில் என்ன நடந்தது?

அர்ச்சகர்ப் பார்ப்பனர்களான சந்த், தேவ்வல்லப் கோயிலுக்குள் உள்ள குடிலிலேயே கூத்தும் குடியுமாகக் கும்மாளம் போட்ட காட்சிகள் எல்லாம் வீடியோ கோப்புகளாக வெளியில் வந்த,, காரித் துப்பினார்களே!

சபரி மலைக் கோயிலின் மூத்த தந்திரி-யான மோகனரு விபச்சாரிகளின் வீட்டில் கையும் களவுமாகப் பிடிபட வில்லையா?

இவையெல்லாம் இந்த அர்த்தமுள்ள இந்து மதத்தில் சர்வ சாதாரண-மாயிற்றே!

ஓம் என்பதற்கு அவர்கள் கூறும் தத்-துவம் என்ன? ஆண் -_ பெண் சேர்க்கை-யின் வடிவம் என்றுதானே விளக்கம் சொல்லுகிறார்கள்?

பெண்கள் நெற்றியில் திலகமிட்-டால், அது வீட்டு விலக்கான பெண்-ணின் குருதியின் அடையாளம் என்று தானே கூசாமல் சொல்லுகிறார்கள். நாமம் தரிக்கிறீர்களே, அது என்ன என்று கேட்டால் அதற்கும் ஒரு தத்து-வத்தைத் தயாராகவே வைத்துள்ளனரே!

வெள்ளைக் கோடுகள் இரண்டும், விஷ்ணுவின் தொடைகள் என்றும், நடுவில் உள்ள சிவப்புக் கோடு விஷ்ணு-வின் ஆண் குறி என்றும்... அடேயப்பா, எவ்வளவு அட்சரப்பிசகு இல்லாமல் சொல்லுகிறார்கள்.

இந்து மதத்தை எடுத்துக் கொண்-டால் மும்மூர்த்திகளும் சரி, அவர்களின் சீடகோடிகளும் சரி, தேவாதி தேவர்-களும் சரி _ கற்பழிப்புக் குற்றம் செய்யாத ஒரே ஒரு கடைக்குட்டி சாமியைக் காட்ட முடியுமா?

காஞ்சிபுரம் தேவநாதன் இப்படி-யென்றால் அந்தத் தேவநாதனாகிய இந்திரன் கவுதமமுனிவரின் மனைவி அகலிகையை மாறுவேடம் பூண்டு கற்பழிக்கவில்லையா! சரசுவதியையே பெண்டாண்டவன் தானே படைத்தல் கடவுளான பிரம்மா.

தாருகாவனத்தில் இருந்த ரிஷிப் பத்தினிகளின் கற்பைச் சூறையாடி தன் சிசுனத்தை இழந்தவன் தான் முழு-முதற் கடவுளான சிவன். மகாவிஷ்ணுவைப்பற்றி கேட்கவும் வேண்டுமா? அதற்கென்றே ஒரு அவ-தாரமே எடுத்து (கிருஷ்ணாவதாரம்) காம வேட்டை யாடியவன் ஆயிற்றே!

தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பார்ப்பானுக்கு மோட்சம் அளித்த _ மாபாதகம் தீர்த்த புராணங்-கள் இந்துமதத்தைத் தவிர வேறு எங்குண்டு?

கோயில்களைப் பாருங்கள் _ அங்கு கொக்கோகக் காட்சிகள்; தேர்களைப் பாருங்கள் _ தேவர்களின் லீலா வினோத காட்சிகள்; இந்து மதத்தின் எந்தப்பரப்பை நோக்கினாலும் இத்-தியாதி, இத்தியாதி காம சேட்டைகளின் களேபரக் காட்சிகள்தாம்.

அதற்காக வெட்கப்படுவதில்லை; இன்னும் சொல்லப் போனால் அந்தராத்மாவும் பரமாத்வாவும் ---ஆலிங்கனம் செய்கின்றன என்று அதற்குத் தத்துவ வார்த்தைகள் எல்லாம் தடபுடலாகவே உண்டு.

சாஸ்திர ரீதியாகவே அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வைத்துள்-ளனர்.

வேஸ்யாதர்சனம் புண்யம்
ஸ்பர்சிவனம் பாபநாஸம்
சம்பனம் சர்வ தீர்த்தானாம்
மைதுனம் மோக்ஷ சாதனம்

பொருளும் வேண்டுமா?

வேசிகளைப் பார்ப்பதே புண்ணியம்; அவர்களைத் தொட்டால் பாவங்கள் நாசமாகும்; முத்தம் கொடுத்தால் சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய-தற்குச் சமம்; உடலுறவு கொள்வது மோட்சத்தை அடையும் வழி என்று மோட்சத்திற்குக் குறுக்கு வழிகளைக் கண்டுபிடித்து வைத்துள்ளது இந்தக் குள்ளநரிக் கூட்டம்.

இந்தப் பார்ப்பனர்களின் யோக்-கியதையை அவாளின் செல்லப் பிள்-ளையான கம்பனே கூறி வைத்திருக்-கிறான்.

இராமன் வனவாசம் சென்றபோது உயிர்கள் எல்லாம் அழுதன; மரங்கள் கருகின. ஆனால் பார்ப்பனர்கள் ராமனி-டம் தங்களுக்கு இளம் பசுவும் கன்றும் தேவை என்று கேட்டுப் பெறுகின்றனர். ராமன் வனவாசம் முடிந்து நாடு திரும்பும்போது வாடிய பயிர்கள் துளிர்த்தன, உயிர்கள் மகிழ்ந்தன. மக்கள் கூடினார்கள். அப்பொழுது விலைமகள் வீடுகளில் இருந்த பார்ப்-பனர்கள் வேசியர்களின் புடவையைக் கட்டிக் கொண்டும், வேசியர்கள் வேட்டிகளை கட்டிக் கொண்டும் வெளியில் வந்தனர் என்கிறான் கம்பன்.

வேசியர் உடுத்த கூறை வேதியர் சுற்ற வெற்றிப் பாசிழை மகளிர் ஆடை யந்தணர் பறித்துச் சுற்ற வாசம், மென் கலவைச் சாந்து என்று இனையன மயக்கந் தன்னால் பூசினர்க்கு இரட்டி ஆனார் பூசலார் புகுந்துளோரும்

காளமேகப் புலவர் என்ற குடந்தை பார்ப்பான், தான் மோகம் கொண்ட தாசிப் பெண்ணுக்காக தான் வரித்துக் கொண்ட வைணவத்திலிருந்து விலகி சிவத்துக்கு தாண்டினான் என்பதெல்-லாம் காமக்குரோ தங்களுக்குமுன் கடவுளாவது கத்தரிக்காயாவது _ வேதங்களாவது வெண்டைக்காயாவது _ மதங்களாவது மண்ணாங் கட்டிகளா-வது _ சர்வம் சரணம் காம சுகப்பவது.

ஒன்றைக் கவனிக்க வேண்டும்; காஞ்சிக் கோயில் தேவநாதன் அர்ச்சகப் பார்ப்பானின் சமாச்சாரம்பற்றி திருவா-ளர் துக்ளக் மூச்சு விட்டதுண்டா? கல்கி கண்டு கொண்டதுண்டா? தினமணி தீண்டியதுண்டா?


பக்தி போதைத் தமிழர்கள் சிந்திக்க வேண்டிய நேரமும், இடமும் இது!
இந்துக்கள் மதத்தை ஆராய்ச்சி செய்யுமிடத்து சுவாசமிடும் நுரையீரல் எரிந்து விடும் என்று விவேகானந்தரி-டம் கூறினாராம் மாக்ஸ்முல்லர், எந்த அர்த்தத்தில் கூறினாரோ தெரிய-வில்லை _ இதயத்துக்கும், மூளைக்கும் பாயும் ரத்தம் கெட்டுப் போய்விடும் என்று மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.

விடுதலை 22.11.09

Friday, November 20, 2009

கடவுளுடன் மனிதன் ஏறுக்குமாறாய் நடந்து போட்டி போடுகின்றானா?


உலகத்தை எல்லாம் உண்டாக்கி, அதிலுள்ள எல்லாவற்றையும் நடத்தும் சர்வ சக்தியுள்ள கடவுள் ஒருவர் இருக்கிறார்; அவரால்தான் (அவர் இஷ்டப்படி) உலகம் இயங்கு (நடைபெறு)கின்றது என்று சொல்லப்படுமானால், அவரை நடுநிலைமையுடையவனென்று சொல்லுவதைவிட பாரபட்ச-முடைய-வரென்று சொல்லுவதற்கே ஏராளமான பிரத்தியட்ச உதாரணங்கள் இருக்கின்றன. அவரை நீதிவான் என்று சொல்லுவதைவிட அநீதிவான் என்று சொல்லுவதற்கே தாராளமான ஆதாரங்கள் அதிகமிருக்கின்றன. அவரால் உலகுக்கு நன்மை ஏற்படுகிறது என்று சொல்லுவதைவிட அவரால் அதிகத் தீமையே ஏற்படுகின்றது என்று சொல்லுவதற்குப் போதுமான ஆதாரமிருக்கின்றது. அவர் அறிவாளி என்று சொல்லுவதைவிட மூடர் என்று சொல்லுவதற்கே போதுமான ருஜூ இருக்கின்றது. (அதுவே முடிந்த முடிவானால்) அப்படிப்பட்டவரை யோக்கியர் என்று சொல்லுவதைவிட அயோக்கியர் என்று சொல்லுவதற்கே திருஷ்டாந்தங்கள் பல இருக்கின்றன.


அவர் ஜீவன்களுக்கு நன்மையே செய்கிறாரென்பதைவிட தீமையே செய்கின்றார் என்பதற்கு போதிய காரணங்கள் இருக்கின்றன. அவரால் நன்மை அடைந்தவர்களைவிட தீமையடைந்தவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்று சொல்லத் தகுந்த அத்தாட்சிகள் மிகுந்து கிடக்கின்றன. அவர் நாகரிகமுடையவர் என்று சொல்லுவதைவிட அவர் காட்டுமிராண்டி என்று சொல்லுவதற்கே அளவுக்கு மீறிய அனுபவங்கள் காணப்படுகின்றன. அவர் இருந்தால் நல்லது என்று சொல்லுவதைவிட அப்படிப்பட்டவர் ஒருவர் இல்லாமல் இருந்தால் நல்லது என்று ஆசைப்படுவதற்கு அநேக காரணங்கள் இருக்கின்றன.

அப்படி ஒருவர் இருக்கிறார் என்று எண்ணிக்கொண்டு வாழ்க்கையை நடத்துவதைவிட, அப்படி ஒருவர் இல்லை என்று வாழ்க்கையை நடத்துவதே மனித சுதந்திரத்திற்கு அதிகமான நன்மை பயக்கத்தக்கது என்று கருதுவதற்கு வேண்டிய அவசியங்கள் பல இருக்கின்றன.

அறிஞர்களே, ஆராய்ந்து பாருங்கள், சர்வ வல்லமையுள்ள கடவுள் ஒருவர் இருந்தால், மனிதனுடைய தேவைக்கும், ஆசைக்கும் தகுந்தபடி நடந்து-கொண்டிருப்பார். அல்லது கடவுளுக்கு இஷ்டமில்லாத விஷயங்களைப்பற்றி மனிதனுக்குத் தேவையில்லாமலாவது, ஆசையில்லாமலாவது அல்லது நினைப்புக்கே வராமலாவது செய்திருப்பார். உதாரணமாக, மனிதன் தனக்கு முகத்தில் மயிர் வேண்டியதில்லையென்று கருதித் தினம் சவரம் செய்துகொள்ளுவதைப் பார்க்கின்றோம். ஆனால், கடவுள் அனுக்கிரகத்தால் அது தினம் தவறாமல் முளைத்துக்-கொண்டே வருவதையும் பார்க்கின்றோம். இது என்ன, கடவுளுடன் மனிதன் ஏறுக்குமாறாய் நடந்து போட்டி போடுகின்றானா? அல்லது மனிதனுடன் கடவுள் ஏறுக்குமாறாய் நடந்து போட்டி போடுகின்றாரா? அல்லது ஒருவருக்-கொருவர் சம்பந்தமில்லாமல் அவரவர் காரியத்தை அவரவர்கள் பார்க்-கின்றார்களா?

சித்திரபுத்திரன் எனும் புனை பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை ("குடி அரசு", 6.12.1947). தொகுப்பு: விடுதலை 20.11.09

Wednesday, November 18, 2009

ஜாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு! ஏன்? எதற்காக?

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக சென்னையில் நேற்று (17.11.2009) அன்று மாலை சமூகநீதிக் கருத்தரங்கம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


1. பிற்படுத்தப்பட்ட மக்களை அடையாளம் காணவும், அந்த மக்களின் நலனுக்கான அரசின் திட்டங்கள் உரிய மக்களுக்கு சென்றடையவும், மேம்பாடு அடைந்த மக்களை பிற்படுத்தப்பட்-டோர் பட்டியலில் இருந்து நீக்கிடவும், ஜாதி வாரியான கணக்கெடுப்பு அவசியம் என நீதிமன்றங்கள் அறிவுறுத்தியதைக் கருத்தில் கொண்டு, வரும் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதி வாரியான கணக்கெடுப்பையும் நடத்திட உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக தொடங்கிடவேண்டும்.

2. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் நலத் திட்டங்கள் அந்த மக்-களுக்கு முறையாக சென்றடைவதைக் கண்-காணித்திட பிற்படுத்தப்பட்டோருக்கான நாடாளு-மன்றக் குழு மத்திய அரசு அமைத்திட-வேண்டும்.

3. தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்-திற்கு தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆணையத்திற்கு உள்ளதுபோன்று அதிகாரம் மத்திய அரசு அளித்திடவேண்டும்.

சமூகநீதிக் கண்ணோட்டத்திலும், பிற்படுத்தப்-பட்டோரின் இட ஒதுக்கீடு கண்ணோட்டத்திலும் இம்மூன்று தீர்மானங்களும் இக்காலகட்டத்தில் மிகவும் முத்தாய்ப்பானவை என்பதில் அய்ய-மில்லை.

பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. 1931_க்குப் பிறகு மக்கள் தொகைக் கணக்கெடுப்-போடு ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட-வில்லை.

இந்திய அரசமைப்புச் சட்ட ரீதியாக ஜாதி ஒழிக்கப்-படாத நிலையில், ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது மிகவும் அவசியமாகும்.

ஜாதி அமைப்பு வேரூன்றி நிற்கும் இந்திய சமூக அமைப்பில் தாழ்த்தப்பட்டவர்கள், மலை-வாழ் மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்பது சட்டப்படி நடைமுறைப்-படுத்தப்பட்டு வருகிறது.

அந்த இட ஒதுக்கீடு என்பது சமூக ரீதியாக-வும், கல்வி ரீதியாகவும் பின் தள்ளப்பட்டவர்-களுக்கு, ஒடுக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படு-கிறது. சமூகநீதி என்பதில் ஜாதிதான் முக்கிய அளவுகோலாகக் கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இட ஒதுக்கீடு எத்தனை விழுக்காடு என்பதை நிர்ணயம் செய்திட ஜாதி வாரியான கணக்கெடுப்பு என்பது அடிப்படையில் தேவையான புள்ளி விவரமாகும்.

நீதிமன்றங்களில் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் வரும்போதுகூட, நீதிபதிகள் தொடுக்-கும் வினா_ எந்த அடிப்படையில் இத்தனை சதவிகிதம் (சிக்ஷீவீtமீக்ஷீவீஷீஸீ) இட ஒதுக்கீடு என்பதே!

1931 ஆம் ஆண்டு ஜாதி வாரி கணக்-கெடுப்பை அரசு தரப்பில் சொல்லும்போது நீதிபதி-கள் அதில் குறை காண்கின்றனர். நீண்ட காலத்-திற்கு முன்னெடுக்கப்பட்ட புள்ளிவிவரக் கணக்கு தற்போது எப்படி பொருந்தும் என்று வினா எழுப்புகின்றனர்.

அப்படியிருக்கும்போது, 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதி வாரி புள்ளி விவரமும் இணைத்துக் கொள்ளப்படவேண்டும் என்று இந்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கறாராக ஏன் ஆணை பிறப்பிக்கக் கூடாது என்பதுதான் நமது முக்கிய வினாவாகும்.

இரண்டொரு வழக்குகளில் மறைமுகமான முறை-யில் இதற்கான அறிவுறுத்தலை உச்சநீதி-மன்ற-மும், சென்னை உயர்நீதிமன்றமும் காட்டி-யிருக்கின்றன என்று கருதப்பட்டாலும், இன்னும் தீர்க்கமாக அறுதியிட்டுக் கூறவேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பாகும்.

இட ஒதுக்கீடுக்கு மட்டுமல்ல; தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் பல்வேறு சமூக, பொருளாதார வளர்ச்சிகளுக்காக ஜாதிவாரி புள்ளி விவரம் என்பது மிகவும் தேவையானதே!

அதுவும், ஜாதியை சட்டப்படி ஒழிக்கும் காலம் வரைக்கும் இந்த விவரம் ஒவ்வொரு முறையும் திரட்டப்பட வேண்டியதே!

ஜாதி வாரி கணக்கெடுப்பால் ஜாதி உணர்ச்சி வளர்ந்துவிடும் என்பதெல்லாம், ஜாதி வாரி புள்ளி விவரம் எடுக்கப்படக்கூடாது என்று கருதுபவர்-களின் தந்திரப் பேச்சாகும்.

நன்றி விடுதலை தலையங்கம் 18.11.09

“பிராம-ணன் தியாகம்!’’ ‘‘சூத்திரன் தியாகம்’’


கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாள் இந்நாள் (1936).


சுதந்திரப் போராட்டம் என்று கூறப்படுகிறதே, அதில் வ.உ. சிதம்பரனார் செய்த தியாகத்திற்கான தராசு தட்டின் எதிர்த்தட்டில் நிறுத்தி வைக்க இன்னொ-ரு-வர் இந்தியாவில் பிறந்த-தில்லை.

ஆனாலும், வ.உ.சி. சூத்திரர்தானே _ அதனாலே அவரது தியாகம்கூட மலிவு சரக்காகிவிட்டது.

‘வெள்ளையனே வெளி-யேறு!’ என்ற தீரக் குரல் வெடித்துக் கிளம்பிய நேரத்தில், கட்சியை விட்டே வெளியேறியவர் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார், அவ-ருக்குத்தான் “வெற்றி-லைப் பாக்கு’’ வைத்து அழைத்து முதல் இந்தியன் கவர்னர் ஜென-ரல் என்ற மகுடம் சூட்டப்-பட்டது; என்ன செய்வது, காந்-தியா-ரின் சம்பந்தியாகவும் ஆகி-விட்டாரே!
இன்னொரு குறிப்பு “குங்குமம்’’ இதழ் பக்கம் 17 இல் (7.4.2000) வெளியானது.

1973_74 ஆம் ஆண்-டில் ஆச்சாரியாரின் பென்ஷன் முதலியன குறித்த கோப்பு-களைக் கண்ணுறும் வாய்ப்-புள்ள ஒருவர் கூறியது:

“ராஜாஜி அவர்கள் கவர்னர் ஜெனரலாக இருந்து ஓய்வு பெற்றார். தான் நெடுங்-காலம் வாழப் போவதாகவும், அக்காலம் முழுவதும் தனக்கு வரவேண்டிய பணி ஓய்வு காலத் தொகைகளைக் கணக்கிட்டால் கிண்டி ராஜ்-பவனத்தின் மதிப்பைவிடக் கூடுதலாக வரும் என்றும்; எனவே, அரசே கிண்டி ராஜ்-பவன் நிலம் முழுதும் தனக்-குக் கொடுத்துவிடவேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்தக் கோரிக்கையை அரசு நிரா-கரித்துவிட்டது’’ என்பதுதான் குங்குமம் வெளியிட்டிருந்த அந்தத் தகவல்!

ஆச்சாரியாரின் தியாகத்-தையும், சுதந்திரப் போராட்-டத்-துக்காக இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட வ.உ.சி. தமிழரின் தியாகத்-தையும் “மனச்சான்று’’ உள்ளபடியே உள்ளவர்கள் எடை போட்டுப் பார்க்கட்டும்!

தியாகத்தில்கூட “பிராம-ணன் தியாகம்!’’ ‘‘சூத்திரன் தியாகம்’’ என்கிற இரட்டை அளவுகோல் இருப்பதை எண்ணும்போது இதயத்தில் திடீர் தீ பிடித்தது போலவே தகிக்கிறது.

வ.உ.சி. அவர்கள், தந்தை பெரியார் அவர்களி-டத்திலும், சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சிகளின் நடவடிக்கைகளிலும் மிகுந்த மதிப்பும், ஈடுபாடும் கொண்ட மாந்தராகத் திகழ்ந்தார்கள்; பல நிகழ்ச்சிகளிலும் கலந்து-கொண்டு மடைதிறந்த தன் எண்ண நீரோட்டத்தையும் வெளிப்படுத்தியதுண்டு.

“நீதிக்கட்சி தோன்றிய பிறகுதான் தமிழர்களின் அந்தஸ்து உயர்ந்துள்ளது. உதாரணமாக முன்பெல்லாம் “இந்து’’ பத்திரிகை அலு-வலகத்திற்குச் சென்றபோது, திரு. கஸ்தூரி ரெங்க அய்-யங்கார் “வாடா சிதம்பரம்!’’ என்றழைத்துப் பேசுவார். ஆனால், நீதிக்கட்சி கொள்கை தமிழ்நாட்டில் கோலோச்சிய பிறகு ஒரு நாள் போனேன். “வாங்கோ சிதம்பரம்பிள்ளை, சவுக்கியமா?’’ என்றழைத்தார் என்கிறார் வ.உ.சி.

வ.உ.சி. நினைவு நாளில் இந்த வரலாற்றுக் குறிப்பு-களை அசை போடுவோமாக!

நன்றி விடுதலை 18.11.09

Tuesday, November 17, 2009

பால்தாக்-க-ரேயா _ நரேந்திர மோடியா?

சச்சின் டெண்டுல்கர் என்ற ஒரு விளையாட்டு வியாபாரி இருக்கிறார். பத்து ஆட்டங்களில் ஒழுங்காக ஆடமாட்டார்; ஒரு ஆட்டத்தில் நூறு ஓட்டங்களை எடுத்து-விட்டு, எல்லாப் புகழை-யும் அவர் மட்டுமே சம்பாதித்துக் கொள்வார். பதாகைகளை அவருக்-காகத் தூக்கிப் பிடிக்க பார்ப்பன ஊடகங்கள் ஆயத்தமாகவே எப்-பொழுதும் இருக்கும்.


மும்பையில் பெரிய ஓட்டலுக்கு உரிமையாளர். அப்படிப்பட்டவர் இப்-பொழுது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார். 20 ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடுகிறார் என்பதற்காக அவருக்கு ஒரு பாராட்டு விழா மும்பையில் நடை-பெற்றுள்ளது. அதில் அவர் உரையாற்றும்போது, “மராட்டியன் என்பதில் நான் மிகுந்த பெருமிதம் கொள்கிறேன். ஆனால், மும்பை என்பது இந்தி-யாவின் ஓர் அங்கம்தான். நான் இந்தியாவின் சார்-பில் விளையாடுவதில் பெருமை அடைகிறேன்’’ என்று பேசிவிட்டார்.

அவ்வளவுதான் _ விட்டு-விடுவாரா பால்தாக்-கரே? மும்பைக்கு மொத்த குத்தகைக்காரராயிற்றே! முஷ்டியைத் தூக்கிக்-கொண்டு கிளம்பிவிட்டார். ‘அடப் பொடிப்பையா, மும்-பையின் வரலாறு தெரி-யுமா? அதனை மராட்-டியத்தின் தலைநக-ராகத் தக்க வைக்க எவ்-வளவு பாடுபட்டு இருக்கி-றோம் தெரியுமா? அப்-பொழுதெல்லாம் நீ பிறந்தி-ருக்கவே மாட்டாய். விவ-ரம் தெரியாமல் ‘விளை-யா-டாதே!’ உன் விளை-யாட்டை கிரிக்கெட்டோடு வைத்துக்கொள். மற்றவற்-றில் மூக்கை நுழைக்காதே _ மூக்கை நுழைத்தால் விபரீதம் ஏற்படும் எச்-சரிக்கை!’ என்று தாக்க-ரேக்கு உரிய பாணியில் தாக்கி எழுதியுள்ளார்.

இதே காலகட்டத்தில் குஜராத் மாநிலத்தில் அக-மதாபாத்தில் உள்ள சர்தார் படேல் விளையாட்டு அரங்கில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் விளையாடச் சென்ற டெண்டுல்கரை முதல-மைச்சர் நரேந்திர மோடி ஓகோ என்று உச்சி குளிரப் பாராட்டுப் பனி மழையைப் பெய்து தள்ளிவிட்டார். தங்கத் தட்டையும் பரிசாகத் தந்திருக்கிறார்.

சபாஷ்! சரியான போட்டி, (கிரிக்கெட் போட்-டியல்ல!) பால்தாக்-க-ரேயா _ நரேந்திர மோடியா? இதில் வெல்லப் போகிற-வர்-கள் யார்? என்று தெரியவில்லை.

இதில் இன்னொரு கொசுரு. இந்தியக் கிரிக்-கெட் வாரியத் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, ‘பால்தாக்கரே அரசியல் விவ-காரத்தோடு நிற்கட்-டும் _ தேவையில்லாமல் கிரிக்கெட்டில் தலையிட-வேண்டாம் என்று எச்-சரித்துள்ளார்.

இது என்ன மும்-முனைப் போட்டியோ!

விடுதலை 18.11.09

Monday, November 16, 2009

“கலகம்’’ பிறந்தால்தானே ‘‘வழியும்’’ பிறக்கிறது

ரோஸ் நேரம்’ என்ற ஒரு பகுதி கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு-தோறும் இரவு 10 மணி முதல் 11 மணிவரை அரங்-கேறுகிறது. அதனை நடத்-தும் தோழியர் மிகச் சிறப்-பாகவே அதனைக் கையா-ளுகிறார்.


“பேய்’’ உண்டா? உண்-மையா? நிரூபிக்க முடி-யுமா?’’ என்ற காரசார விவாத மேடை சுவைக்கத்தக்கது மட்டுமல்ல; சிந்திக்கத்தக்-கதும் ஆகும்.

பேராசையும், அச்சமும் போட்டி போட்டுக்கொண்டு மக்களைத் துன்புறுத்தும் நிலையில், மக்கள் மூட நம்பிக்கைக் குழிக்குள் வீழ்ந்து மூச்சுத் திணறிக் கொண்டிருக்கின்றனர்.

அவர்களைக் கரை-யேற்றுவதுதான் கண்ணிய-மான மனிதத் தொண்டாக இருக்க முடியும். பாமர மக்களோடு மக்களாகக் கரைந்து அவர்களின் மூடத்தனத்தினை மேலும் உற்சாகப்படுத்தும் போக்கில் அவர்களின் முதுகைத் தட்டிக் கொடுத்துக் காசு பறிக்கும் முதலாளிகள் பெரும்பாலும் ஊடகங்களை நடத்திக் கொண்டிருக்-கிறார்கள்.

இராசி பலன் என்ற ‘பிள்ளையார் சுழிபோட்டு’ விடியற்காலைப் பொழு-தையே களங்கப்படுத்தப்-பட்ட குடிநீரில் மக்களைக் குளிப்பாட்டி, மக்களை வஞ்சிப்பதையே வாடிக்கை-யாகக் கொண்டு, வங்கிக் கணக்கை வளப்படுத்திக் கொள்ளும் நயவஞ்சகப் பிழைப்பு ஒரு பக்கத்தில் நடந்துகொண்டுதானிருக்கிறது.

அதே நேரத்தில், கலை-ஞர் தொலைக்காட்சியின் ‘‘ரோஸ் நேரத்தில்’’ ஓர் அறிவிப்பு; பேய் இருப்பதாக நிரூபித்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு என்பதுதான் அந்த அறிவிப்பு _ பாராட்-டத்தக்க ஒன்றே! அதனை ஏற்றுக்கொண்டு, இதோ நாங்கள் நிரூபிக்கிறோம் என்று கூறி ஒரு அணியி-னர்; பேயாவது, வெங்காய-மாவது! எங்கே இருக்கிறது பேய்? நிரூபிக்க முடியுமா? ‘என்மீது பேயை ஏவி நிரூபிக்கட்டும்; அவர்களுக்-குப் பத்து லட்சம் ரூபாய் தருகிறேன்’ என்று கூறி அதே இடத்தில் காசோலை-யைப் பூர்த்தி செய்து சவால் விட்டார் கருஞ்சட்டைத் தோழர் ம. திருநாவுக்கரசு. (தற்-போது தண்டையார்-பேட்டைவாசி _ சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம், சாலைக்கிராமம்).

எதிர்பாராத இந்தத் திருப்பத்தினை ஏற்படுத்தி ஒருங்கிணைப்பாளர் உள்பட எதிர்த்தரப்பினர் அனை-வரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கினார் நமது தோழர். அவர் சார்ந்த அணியி-னரோ உற்சாகப் பெருக்கில் திளைத்தனர்.

அதுதான் சந்தர்ப்பம் என்று கடவுள், மதம், ஜாதி, சம்பிரதாயம், பேய், பிசாசு, பூதம் என்ற பித்தலாட்டங்-களை எல்லாம் ஒரு பிடி-பிடித்தார் பாருங்கள் _ ‘பலே பலே’ என்று பாராட்டும்படி-யாக இருந்தது.

கழகத் தோழர், ஒருவர் இருந்தாலும் போதும், பிற்போக்குத்தனங்களுக்கு எதிராகக் ‘‘கலகக் கொடி-யைத்’’ தூக்கிப் பிடிப்பார் என்பதற்கு தோழர் ம. திரு-நாவுக்கரசே ஓர் எடுத்துக்-காட்டு!

அவரைப் பாராட்டு-வோம்.

இதுபோன்ற களங்-களைத் தவறவிடவேண்டாம் என்று கழகத் தோழர்-களை-யும் கேட்டுக்கொள்கிறோம்.

“கலகம்’’ பிறந்தால்தானே ‘‘வழியும்’’ பிறக்கிறது.

விடுதலை 17.11.09

Tamil 10 top sites [www.tamil10 .com ]