வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, March 21, 2012

உன் சாதி பற்றி கேட்டால் ஏன் பொத்துக்கொண்டு வருது?


ஒரு நண்பர் ஒருவர் சொன்னார்...என்னாங்க வீடு வாடகைக்கு கேட்டு போனா...நீங்க என்ன சாதி என்று கேட்கிறாங்க.....நான் சொல்ல மறுத்த போது...நாங்க 'பிராமின்ஸ்' (பார்ப்பான்) க்கு மட்டும்தான் வீடு கொடுப்போம் என்று சொல்கிறார்கள்.....இன்னமும் இப்படி இருக்கா என்று சொல்லிகிட்டே தன் பர்சை திறந்து யாருக்கோ பணம் எடுத்து கொடுத்தார்........அப்படி பர்சை திறக்கும் போது, ஒரு பக்கம் கீதை கிருஷ்ணன் போட்டாவை வச்சு இருந்தார்........நான் கேட்டேன் இப்படி கிருஷ்ணன் போட்டவா நீங்க வச்சுகிட்டு அவர்களை தவறு என்று சொல்லுரிங்க என்று கேட்டேன்....சாதிக்கும், கிருஷ்ணனுக்கும் என்னாங்க தொடர்பு.....சும்மா போங்க என்று என்னிடம் விவாதம் செய்து சண்டைக்கு வருகிறார்.....இப்படித்தான் நிறைய பேரு திரிகிறார்கள்........சரி கீதை கிருஷ்ணன் யோகிதை என்ன? அவனின் கீதை உபதேசன் என்ன".....கீதையில் கீழ் சாதிக்காரர்களுக்கு கிருஷ்ணனின் உபதேசம் என்ன:

"நீ ஒரு சாதாரண செருப்புத் தைப்பவனாக இருந்தாலும், உனது மரணத்திற்கு பின் அடுத்த ஜென்மத்தில் நீ பெற விருப்பும் வாழ்வை உத்தேசித்து அதே செருப்பு தைக்கும் தொழிலைத்தான் செய்யவேண்டுமே தவிர, ஒரு வீரம் செறிந்த ராணுவ வீரனாகவோ, ஒரு சிறந்த கல்விமானகவோ வர விரும்பவே கூடாது. எவ்வளவு கீழான கேவலமானதாயினும் அந்த உன் சாதித் தொழிலிலிருந்து மாறாமல் நீ இருந்தாயானால், அடுத்த பிறவியில் உனக்கு விடிவு உண்டு" (ஆதாரம் நூல்: கீதை பற்றிய உண்மை, ஆசிரியர்:வீ.ஆர்.நார்லா, பக்கம்:169 )

இப்படி பட்ட கிருஷ்ணனுக்கு ஒரு பக்கம் பக்த்தனாக இருந்துகொண்டு...சாதி பற்றி இவரிடம் பார்ப்பான் கேட்டால் பொத்துக்கொண்டு வருதாம்...பார்ப்பான் அவனுடைய வருணாசிரமத்தை பாதுகாத்து கொண்டுதான் நம்மிடம் பேசுகிறான்....பார்ப்பான் கிருஷ்ணன் போட்டவ வச்சு இருக்கான் என்றால் அவனுக்கு சாதகமா பேசினவன் கிருஷ்ணன்.....நீ என்ன___க்கு அது வச்சுகிட்டு...உன் சாதி பற்றி கேட்ட கோபப்படுரே?...கிருஷ்ணன் கும்புடுற நீ உன் சாதிய சொல்லு.....சாதிய ஏற்றுக்கொண்டு உன் குலத்தொழிலை செய்....ஏன் பொத்துக்கொண்டு வருது?..நீங்கள் ஒழுங்கா இருந்த அவன் உன்னை இப்படி கேட்பான? பார்ப்பன பாரதி கூட கிருஷ்ணனை நம்பியவர் தானே.....ஆனா மறுபக்கம் "சாதிகள் இல்லையடி பாப்பா" என்று பாடுவது எந்த அர்த்தத்தில்? யாரை ஏமாற்ற? இப்படி சாதி ஒழிப்பு பற்றி பேசுபவர்கள் மரியாதையாக சாதி ஒழிப்பு பற்றி பேசுவதை நிறுத்தி கொள்ளவேண்டும்.


1 comment:

சங்கமித்திரன் said...

நீங்கள் கீதையின் உபதேசமாக காட்டியிருகின்ற மேற்கோள், கீதையின் எந்த சுலோகத்திலிருந்து எடுக்கப்பட்டது? எனக்கு தெரிந்து இப்படி ஒரு கருத்தை தெரிவிக்கும் சுலோகம் கீதையில் இல்லை /////
முதலில் நீங்கள் எனது பெயரில் வந்து பின்னூட்டம் போடுவதை நிறுத்திகொள்ளுங்கள் தோழர்...மத நம்பிக்கை உள்ளவர்கள் இப்படித்தான் அடுத்தவர் பெயரில் வந்து ஒளிந்துகொண்டு பின்னூட்டம் இடுவார்கள்......நீங்க கீதையை நன்றாக படியுங்கள்......திராவிட இயக்கத்தவர் அனைத்து புராண இதிகாச புரட்டுகளை கரைத்து குடித்து பதிலடி கொடுத்து ஆராய்ச்சி நூலும் எழுதியுள்ளனர்......கீதையின் மறுபக்கம் நூலுக்கு இன்று வரை ஒரு பார்ப்பானும் பதில் சொல்லவில்லை....இது கிருஷ்ணன் சொன்ன அந்த கேவலமான சிந்தனை....கிருஷ்ணனின் கீதை உபதேசம் மூன்றாவது அத்தியாயம்....சுலோகம் (4),சுலோகம் (7),சுலோகம் (8) என்பதில் உள்ளது....

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]