வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, March 17, 2012

பாசாங்கு பண்ணியவர் அல்ல பாவேந்தர் பாரதிதாசன்சிலர் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பற்றி நாம் எதாவது சொன்னால்....ஏங்க, அவரே பாரதியின் மீது பற்று வைத்து தானே தன் பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டார் என்று நம்மிடம் வினா எழுப்புகிறார்கள்...அவர் பாரதியின் கவிதை நடை மீது பற்றுகொண்டு தன் பேரைத்தான் மாற்றிக்கொண்டாரே ஒழிய....மற்றபடி பாரதியின் கருத்துக்கும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கருத்துக்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் உண்டு.....புரசிக்கவிஞர் பெரியாரின் மேடை பேச்சுகளை அப்படியே கவியாக வடித்த திராவிடர் கழகத்தின் தீரமிக்க தளபதியாவார்.....1933இல் சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலர் அவர்களால் சென்னையில் நடத்தப்பட்ட மாநாட்டுக்கு வருகை தந்த புரட்சிக் கவிஞர் நான் ஒரு நிரந்தரமான நாத்திகன் என்று கையொப்பமிட்டார்.....இதோ அவர் சுத்த அக்கமார்க் திராவிடர் கழகக்காரர் என்பதற்கு இதோ ஒரு மிக மிக மிக சிறிய சான்று....

கடவுள் இல்லை என்பான் யாரடா?
தில்லை கண்டு பாரடா!


என்று தண்டபாணி தேசிகர் பாடிய பாடலுக்குப் பதிலடியாக

இல்லை என்பேன் நானடா - அத்
தில்லை கண்டு தானடா!


என்று பாட்டுக்குப் பாட்டாகப் பதிலடி கொடுத்த பாவலன் பாரதிதாசன்.

எனவே பாரதி போல ஒரு இடத்தில் தான் "காளி" பக்தன் என்று சொல்லிக்கொண்டு இன்னொரு பக்கத்தில் சாதி ஒழிய வேண்டும் என்று பாசாங்கு பண்ணியவர் அல்ல பாவேந்தர்......சாதி ஒழிய கவிதை மட்டும் போதாது....சமுக களத்தில் நின்று களமாட வேண்டும்...அதனை பெரியார் வழியில் நின்று செம்மையாக செய்தவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.


No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]