வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, April 09, 2011

சோ ராமசாமியின் தகிடுதத்தமான வழி முறை.....


பார்ப்பனர்களின் சாமர்த்தியம் யாருக்கு வரும்? தங்களின் பேனாக்களை எப்படி வேண்டுமானாலும் அவர்கள் சுழற்றுவார்கள். அதைப்பற்றியெல்லாம் பார்ப்பனர்களோ விமர்சகர்களோ கண்டு கொள்ளவே மாட்டார்கள்.

2006ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலிலும் சரி, நடக்கவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலிலும் சரி, தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் பல இலவசங்கள் அறிவிக்கப்பட்டன.

தி.மு.க. அறிவித்தது என்றவுடன் அ.தி.மு.க.வும் இலவசங்களைக் கடந்த தேர்தலிலேயே அறிவிக்க ஆரம்பித்து விட்டது. வரும் 2011 தேர்தலிலும் தி.மு.க. சில இலவசங்களை அறிவித்தது. அதனைக் காப்பி அடிப்பதுபோல அ.தி.மு.க.வும் தன் தேர்தல் அறிக்கை யிலே சில இலவசங்களை அட்டகாச மாக அறிவித்தது.

கலைஞர் அவர்கள் மிக்சி அல்லது கிரைண்டர் அளிக்கப்படும் என்று அறிவித்த நிலையில், அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையிலோ ஃபேன், மிக்சி, கிரைண் டர் மூன்றுமே இலவசமாக அளிக்கப் படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. தேர்தல் அறிக்கை வந்தவுடன் அவசர அவசரமாக துக்ளக் இதழ் (30-.3.2011) அட்டைப்படம் போட்டு கிண்டல் செய்யப்பட்டது. திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள இலவசங்கள் தொலைக்காட்சியில் வசந்த் அன்-_கோவின் விளம்பரம் என்று தன்னுடைய வித்தார ஒயிலைக் காட்டி னார் திருவாளர் சோ ராமசாமி அய்யர் வாள்.

அடுத்து அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை யிலும் தி.மு.க. தேர்தல் அறிக்கையைத் தாண்டி இலவசங்கள் மலிவாக வாரி இறைக்கப்பட்டு இருந்தனவே -_ என் செய்வது! உப்புக் கண்டம் பறி கொடுத்த பழைய பார்ப்பனத்தி போல பதறி விட்டார் மனுஷன்.

எப்படியும் ஜெயலலிதாவைக் காப்பாற்றித் தீரவே வேண்டும் என்ற தேள் கடியில் இருக்கிறாரே, - தனக்கே உரித்தான தகிடுதத்தமான வழி முறைகளைக் கையாண்டாவது அக்கிர காரத்து அம்மாவுக்கு வக்காலத்துப் போட்டு எழுத வேண்டுமே...

எல்லாவற்றிற்கும் அஞ்ஞானத்தைக் கட்டி அழும் அய்யர்வாள் இந்த முறை விஞ்ஞானத் தூரிகையைப் பிடித்து விட்டார்.

ஒரு வியாதி வராமல் தடுப்பதற் காகப் போடப்படுகிற தடுப்பு ஊசியில், அந்த நோய்க்கான கிருமிகளையே உள்ளே செலுத்தி, அந்த வியாதியைத் தடுப்பது மருத்துவப் பழக்கம். அந்த மாதிரி, தி.மு.க. ஆட்சி மீண்டும் வராமல் தடுக்க, தானும் இலவசங் களைத் தர வேண்டியதுதான் என்று அ.தி.மு.க. தீர்மானித்து விட்டது போலிருக்கிறது. (துக்ளக் 6.4.2011 பக்கம் 17) என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம்.

இலவசம் கொடுப்பது தவறு -_ குற்றம் _ என்பது திரு சோவின் அழுத்தமான கருத்தாக இருக்குமேயானால் அவர் என்ன எழுதியிருக்க வேண்டும்? யார் அறிவித்தாலும் இலவசம் என்பது தவறானதுதான்  என்று அடித்து எழுதி யிருப்பாரே -_ அது அல்லவே சோ அய்யர்வாளின் நோக்கம்.

திமு.க. அறிக்கையில் இலவசம் அறிவிக்கப்பட்டு இருப்பதால் அதை வைத்துக் கலைஞரை மட்டம் தட்ட வேண்டும் -_ கேலி செய்ய வேண்டும் என்பதுதானே அவரின் பரந்த நோக்கம்?

அ.தி.மு.க. அறிக்கை வரும் வரைகூட அவரால் காத்துக் கொண்டு இருக்க முடிய வில்லை - _ கார்ட்டூன் போட்டுக் கலை ஞரைக் காய்ச்சி எடுக்க வேண்டும்.

ஜெயலலிதா அம்மையாரோ கலைஞரையும் தாண்டி இலவசங்களை அறிவித்த நிலையில், அதனைக் கண்டிக்க முடியாத நிலையில், தன் மூக்கை தானே வெட்டிக் கொண்டாலும் பரவாயில்லை. அய்யங்கார் அம்மையாருக்கு ஹானி வந்து விடக் கூடாது என்பதிலே கவனம் செலுத்தி விட்டார் - _ அவ்வளவுதான்.

இதே சோ ராமசாமி ஜெயலலிதா வைப் பற்றி என்ன எழுதினார்?

குமுதம்: ஜெயலலிதாவுக்கும் பாரதீய ஜனதாவுக்கும் இருக்கிற மிரட்டலான உறவைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்!

சோ: ஜெயலலிதாவுக்குச் சம்பிரதாய மரியாதைகளை விழுந்து விழுந்து காட்டுகிறது பாரதீய ஜனதா. ஆனால் ஜெய லலிதாவின் கோரிக்கைகளை எடுத்துக்க மாட்டேங்குறாங்க. ஜெய லலிதாவின் கோபம் இதுதான்.. இப்போ துள்ள நிலையில், அவங்க எதிர்பார்க் கிற தமிழக ஆட்சிக் கலைப் புக்கு. (தி.மு.க. ஆட்சிக் கலைப்புக்கு) சாத்தியமில்லை. (குமுதம் 19.11.1998)

தி.மு.க. ஆட்சியைக் கலைக்க வேண் டும் என்று பி.ஜே.பி. யோடு கூட்டணி வைத்துக் கொண்டி ருந்த நிலையில், மத்திய பி.ஜே.பி. கூட்டணி ஆட்சியில்  அங்கம் வகித்த நிலையில், அழுத்தம் கொடுத்தார் ஜெய லலிதா என்பதை இதன்மூலம் சோ ஒப்புக் கொண்டுள்ளார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அய்ந்தாண்டு காலம் ஆட்சியில் அமர்த் தப்பட்ட ஒரு ஜனநாயக அமைப்பில் குறுக்கு வழியில் உள்ளே புகுந்து கொல்லைப்புறம் வழியாகக் கவிழ்க்க எத்தனிக்கும் ஜெயலலிதா ஒரு ஜனநாயகவாதிதானா?

ஒரு வகையில் மக்களைச் சந்தித்து வாக்குகளைப் பெற முடியாத ஒரு கோழைத்தனமும், அறிவு நாணயமற்ற தன்மையும் இது அல்லவா! (அ.தி.மு.க. வோடு கூட்டணி வைத்துக் கொண்டிருந்த போது தி.மு.க. ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று ஜெயலலிதா கொடுத்த தொல்லையைப்பற்றி முன்னாள் பிரதமர் வாஜ்பேயியின் பேட்டி  ஒன்றும் இதே குமுதத்தில் (20.9.1999) வெளிவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது)



ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாத இத்தகைய ஜெயலலிதாவைத் தான் மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வர வேண்டும் என்று சோ உள்ளிட்ட பார்ப்பனர்கள் ஊசி முனையில், ஒற்றைக் காலில் நின்று தவம் இருக்கிறார்கள் என்பதைப் பார்ப்பனர் அல்லாத மக்கள் கவனிக்க வேண்டும்.

இன்னொரு கேள்வி அதே குமுதத்தில் குமுதம்: ஜெயலலிதாவின் செல் வாக்கு இப்போது எப்படி இருக்கிறது?

சோ: அவர்களே அதைக் கெடுத்துக் கிறாங்கன்னு நினைக்கிறேன்..

அவர்களுக்கு ஓட்டுப் போட்ட வங்களே _- மறுபடி அதை மறுபரிசீலனை  பண்ணுவாங்கன்னு தான் நான் நினைக்கிறேன்; பாரதீய ஜனதா உறவை ரிவ்யூ பண்ணுகிற மாதிரி மக்கள் இவங்களுக்கு ஓட்டுப் போட்டதைப் பற்றி ரிவ்யூ பண்ணிக்கிட்டிருக்காங்க.
இதன்மூலம் சோ என்ன சொல்ல வருகிறார்?

ஜெயலலிதாவுக்கு ஒட்டுப் போட்ட வங்க - -_ இவங்களுக்கு ஏன் ஒட்டுப் போட்டோமுன்னு மறுபரிசீலனை பண்ணுவாங்க என்று சொல்லும் சோ அய்யர்வாள்தான் மீண்டும் ஜெய லலிதாவை முதல்வராகப் பார்க்க ஆசைப்படுகிறார்.

ஓட்டுப் போட்ட மக்களே வெறுக்கும் வகையில் நடந்து கொள்பவர்தான் ஜெயலலிதா என்பதற்கு சோவே சர்டிஃபிகேட் கொடுத்து  விட்டார்.

அதிலாவது அறிவு நாணயத்துடன் நடந்து கொள்ள வேண்டாமா? ஆட்சிக்கு லாயக்கற்ற ஒருவர் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைக்கலாமா? - _ இதுதான் அறிவு நாணயம் உடையோர் கேட்கும் கேள்வியாகும்.

இன்னொரு கேள்வியும் உண்டு - _ அதற்கு சோ அளித்த பதிலைப் படிக் கும் பொழுது -_ இவரா கலைஞரைப்பற்றி இப்படி சொல்லுகிறார் என்கிற ஆச்சரியம் ஏற்படாமல் போகாது.
குமுதம்: தி.மு.க.வின் எதிர் காலம் எப்படி இருக்கும்?

சோ: தி.மு.க. ஒன்றும் கலைஞ ருக்குப் பின்னால்  அழிந்து விடக் கூடிய கட்சி அல்ல; மாறன், அன்ப ழகன், ஸ்டாலின், யார் வேண்டுமா னாலும் கூட்டாக இயங்கலாம்.

குமுதம்: தற்போது தி.மு.க. ஆட்சி இயங்குகிறவிதம் எப்படி இருக்கிறது?

சோ: ஊழல் பெருமளவுக்குக்  குறைந்திருக்கு.. ஜெயலலிதா பீரியட் மாதிரி இல்லை.. கருணாநிதியின் கோப தாபங்கள் குறைந்த மாதிரி தான் தெரிகிறது. திரும்பவும் ராவணன் அது இதுன்னு பேசறதைப் பார்த்தால் பழைய லைனுக்கே போறாரோன்னு சந்தேகம் வருது.

இதுதான் சோ பேட்டி.

கலைஞருக்குப் பின்னால் தி.மு.க. நல்லபடி இயங்கும்; ஸ்டாலின் போன்றவர்கள் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக் கொண்ட சோ இப்பொழுது அந்தக் கருத்திலே இருக்கிறாரா?

ஜெயலலிதா ஊழல் ஆட்சி செய்யக் கூடியவர். அந்த அள வெல்லாம் தி.மு.க. ஆட்சியில் கிடை யாது என்று சொன்னவர்தான் இவர்.

கலைஞர் என்று வரும்போது சோவை இடறக் கூடிய இடம்  _ இனவுணர்வு அடிப்படையில் இராவணன் அது -_ இது என்ன பேசுவதுதான். கலைஞர் அவர்களை அவர் தலைமையிலான ஆட்சியை சோ கூட்டம் வெறுப்பதற்கும் எதிர்ப்ப தற்கும் உரிய இடம் இதுதான்.

கலைஞர் அவர்கள் அய்ந்தாம் முறையாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நிலையில் அவர் சாதித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந் தவை பார்ப்பன வட்டாரத்தில் நில நடுக்கத்தை ஏற்படுத்தி விட்டன.

1) அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான சட்டம் (2)  தமிழ் செம்மொழி அங்கீ காரம்

(3) சித்திரை முதல் நாள் அல்ல தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு - _ சமஸ் கிருத மொழியில் இருக்கும் 60 ஆண்டுகள் தமிழுக்கான ஆண்டுகள் அல்ல _ தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்பு என்று சட்ட ரீதியாக ஆக்கப்பட்டது.

4) தீண்டாமை -_ ஜாதி ஒழிப்புத் திசையில் மிக முக்கியமான ஆக்க ரீதியான உருவாக்கமாகிய பெரியார் நினைவு சமத்துவப்புரங்கள்.

5) தீட்சதர்ப் பார்ப்பனர்கள் ஆதிக்கத்தில் நீண்ட காலமாக இருந்து வந்த சிதம்பரம் நடராஜன் கோயிலை தமிழ்நாடு அரசின் இந்து அற நிலையத்துறையின் கீழ் கொண்டு வந்தது. வடலூர் வள்ள லாரின் சத்திய ஞானசபையிலிருந்து பார்ப்பனரை வெளியேற்றியது.

_ இத்தகு சமூக மாற்றத்துக்கான சட்டங்கள் தந்தை பெரியார் அவர்கள் கொள்கை அடிப்படையில் சட்ட ரீதியாக நிலை பெறச் செய்யப்பட்டு விட்டன.

இது பார்ப்பனீயத்தை ஆணி வேரோடு வீழ்த்தித் தூக்கி எறியக் கூடியவை என்பதுதான் சோ கூட்டத்துக்கு அடக்கப்பட முடியாத ஆத்திரச் சுனாமி.

அதே நேரத்தில் ஜெயலலிதா என்னதான் கேடு கெட்டவராக இருந்தாலும், மக்கள் விரோத மனப் பான்மை கொண்டவராக இருந் தாலும், லஞ்ச லாவண்யத்தில் உச்சியைத் தொடக் கூடியவர் என்று தெரிந்திருந்தாலும் அவர் ஆன்மிக வாதி -_ பார்ப்பனிய சடங்காச்சாரங் களில் மூழ்கிக் கிடப்பவர் _ கும்பகோணம் மகாமகத்துக்குச் சென்று வெளிப் படையாக முழக்குப் போடுபவர், தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதை ஏற்காதவர் - _ என் பதையெல்லாம் தெரிந்த தெளிந்த நிலையில், பழையன வற்றையெல்லாம் புறந்தள்ளி, மீண்டும் நம்மள வாளான அக்கிர காரத்து அய்யங்கார், அம்மை யாரை அரியணையில் ஏற்றியே தீர வேண்டும் என்பதிலே மிக ஆத் திரம் கொண்டு செயல்படுகின்றனர்.

தமிழ்நாட்டில் பார்ப்பனர் ஒருவர் _ ஜெயலலிதாவைத் தவிர வேறு ஒருவர் வரக்கூடும் என்பது கற்பனைக்கும் எட்டாத ஒன்றாகும்.

தேசிய இயக்கத்தால்கூட அது நடக்க முடியாத நிலையில், எப்படியோ திராவிட இயக்கத்தின் பேரால் ஒரு பார்ப்பனரை முதல் அமைச்சராகக் கொண்டுவர ஒரு வாய்ப்புக் கிட்டியிருக்கிறது _  அதனை நழுவ விடக் கூடாது என்று புத்திசாலித் தனமாக அவர்கள் நினைப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இதனை நம் தமிழர்கள் புரிந்து கொள்வதில்லையே! இனநலம் பேசும் பேர்வழிகளேகூட இந்தச் சூட்சமத்தை உணர்ந்து கொள்ள வில்லையே!

சில தமிழ் எழுத்தாளர்கள்கூட இந்த இடத்தில் வழுக்கி விழு கிறார்களே!

இன்னொன்றும் பார்ப்பனர்கள் அடிமனதில் பதுங்கியுள்ள விடயம். பா.ஜ.க. எப்படியும் தமிழ் மண்ணில் வேர்ப் பிடிக்கப் போவதில்லை.

பா.ஜ.க.. நேரிடையாக தமிழ் மண்ணில் தலை எடுக்கா விட்டா லும். பா.ஜ.க.வின் கொள்கையை உடைய ஒருவர் முதல் அமைச் சராக வர வாய்ப்பு இருக்கும் போது, அதனை ஏன் நாம் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்று கருது கின்றனர். அதுவும் திராவிட இயக் கத்தின் பேராலே அது நடக்கிற போது, அதைப் பயன் படுத்திக் கொள்ளாதது எவ்வளவுப் பெரிய படுமுட்டாள்தனம் என்று பார்ப் பனர்கள் கருதுகிறார்கள்.

தமிழ்நாட்டில் அ.தி.மு.க. வெற்றி பெற்றால் மத்தியில் பா.ஜ.க. அமைக்க அது பெரிதும் உதவும் என்பதும் சோ போன்றவர்களின் கணிப்பாகும்.

2009ஆம் ஆண்டில் நடை பெற்ற மக்களவைத் தேர்தலின்போது திருவாளர் சோ ராமசாமி துக்ளக் கில் (13.5.2009 பக்கம் 4) எழுதியதை நினைவு கூர்ந்தால் இதன் உண்மை விளங்கும்.

தமிழகத்தில் அ.தி.மு.க. பெறுகிற வெற்றிகள் நாளை மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமை யவும் உதவும். ஆனால் தமிழ கத்திலோ ஓரிரு தொகு திகளைத் தவிர மற்ற தொகுதிகளில் ஓட்டைப் பிளந்து தி.மு.க.விற்கு உதவக் கூடிய நிலையில்தான் பா.ஜ.க. இருக்கிறதே தவிர, மற்ற இடங்களில் பா.ஜ.க.விற்கு அளிக்கிற ஓட்டு, தி.மு.க.விற்கு உதவுகிற ஓட்டுதான் என்பதை யும் வாக்காளர்கள் மனதில் நிறுத்த வேண்டும் (துக்ளக் 13.5.2009 பக்கம் 4)

தமிழ்நாட்டில் அ.தி.மு.க. வெற்றி பெற்றால், அது மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைக்க உதவும் என்று சோ எழுதியிருப்பதைக் கவனிக்க வேண்டும்.

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி, மாநிலத்தில் அ.இ.அ.தி.மு.க. பெயரில் ஜெயலலிதா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி. இதுதான் பார்ப்பனர் களின் திட்டம்.

பார்ப்பனர் அல்லாத தமிழர்கள், பார்ப்பனர்களின் இந்த அரசியல் கண்ணிவெடியின் தன்மையை எப்பொழுதுதான் புரிந்து கொள்ளப் போகிறார்களோ தெரியவில்லை.

ஈரோட்டுக் கண்ணாடியை ஒழுங்காக அணிந்து கொள்பவர்கள் துல்லியமாகப் புரிந்து கொள்வார்கள். தேர்தல் புறக்கணிப்பு என்ற ஒன்றைக் கையில் எடுத்துக் கொள் பவர்கள்கூட ஆரியக் கண்ணி வெடிக்குப் பலியாகக் கூடிய வர்களே!

---------- நன்றி விடுதலை ஞாயிறு மலர் (09-04-2011)


1 comment:

Thamizhan said...

பார்ப்பனர்களின் ஒட்டு மொத்தக் கூக்குரலும் அம்மையாரை ஆதரிப்பது நன்றாகத் தெரிகிறது. பத்திரிக்கை தருமம், நடுநிலை செய்தி என்பதெல்லாம் காற்றில் பரந்து விட்டது.

காஞ்சி சங்கரனின் கைதையே மன்னிக்கப் பார்ப்பனீயம் தயாராகி விட்டது

.பார்ப்பனீயத்தின் காலில் விழும் தமிழர்களுக்குத்தான் புரியவில்லை. தமிழரை வைத்தே தமிழினத்தை அழிக்கப் போகும் சதிக்குள் விழ்த்துடிக்கும் பரிதாபம் புரியவில்லை.

கலைஞரை எதிரியாகக் கருதுபவர்கள் கூட ஓநாயைக் காவலாக வைத்துக் கொள்ளத்துடிக்கும் ஆடுகளாக இருப்பது அறியாமை.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]