5 ஆண்டுகளில் 12 புதிய அரசு பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு கல்லூரிகூட தொடங்கப்படவில்லை.
பொறியியல் கல்விக்கான நுழைவுத் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு சுமையான ஒரு விஷயமாகவும், வசதிகளும், வாய்ப்புகளும் இருப்பதால் நுழைவுத் தேர்வின் மதிப்பெண்கள் பெற்று நகர்ப்புற மாணவர்கள் அதிகம் பொறியியல் கல்லூரிகளில் இடம் பெற்றுவிடுகிறார்கள் என்பதால், 2007இல் நுழைவுத்தேர்வை ரத்து செய்தது தி.மு.க. அரசு. 2006இல் பொறியியல் படிக்கச் சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் 24,000 பேர்.
நுழைவுத் தேர்வு ரத்துக்குப் பின்னர் ஆண்டுதோறும் படிப்படியாக இந்த எண்ணிக்கை உயர்ந்து, கடந்த ஆண்டு 54,000-_அய் தொட்டிருக்கிறது. கிராமப்புற இளைஞர்களும், அவர்கள் பெற்றோர்களும் இந்த விஷயத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நுழைவுத்தேர்வு ரத்து செய்த பின்னர் பயின்ற முதல் பேட்ச் பொறியாளர்கள் இந்த ஆண்டு வெளிவரப்போகிறார்கள்.
சுயநிதிக் கல்லூரிகளில் அரசு அனுமதித்த கட்டணத்தில் சீட்டுகளை 50 சதவிகிதமாக உயர்த்தியதில் பல மத்திய தரக் குடும்ப இளைஞர்கள் பயன்பெற்றிருக்கின்றனர்.
பட்டதாரிகள் இல்லாத குடும்பத்திலிருந்து தொழிற்கல்வியில் சேர்பவர்களுக்கு முழு கட்டணச் சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது. இது இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத சலுகை.
கடந்த மூன்று ஆண்டுகளில் அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2500_க்கு மேல் ஆசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர். கல்வித் துறையை இரண்டாகப் பிரித்து இரண்டு அமைச்சர்களை நியமித்து, இளைஞர் களுக்குப் பயன்தரும் பல திட்டங்களை தி.மு.க. அரசு செய்திருக்கிறது.
இதன் பலன் தி.மு.கவுக்கு இளைஞர் களின் வோட்டாக மாறுமா? பொறுத் திருந்துதான் பார்க்கவேண்டும். -------கல்கி 3.4.2011
No comments:
Post a Comment