வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Monday, April 04, 2011

பார்பனிய எதிர்ப்பு பேசினால் பார்பனர் பள்ளியில் படிக்க கூடாதா?

சில தோழர்களிடம் பெரியாரியம் மற்றும் திராவிடர் கழகத்தின் பிரதான கொள்கையான பார்ப்பனிய எதிர்ப்பு பற்றி விவாதிக்கும் போது, அந்த தோழர்கள் சுதாரிப்பாக கேள்வி கேட்பதாக நினைத்து கொண்டு...சில புரிதல் இல்லாத கேள்வியை தொடுக்கிறார்கள்...அவர்களுக்கு பதில் கொடுத்தாலும் புரியவில்லை...உதரனத்திற்க்கு ஒன்று....நான் என் மகளை சென்னையில் உள்ள ஒரு CBSE கல்வித்திட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் சேர்த்துள்ளேன்...அது பார்ப்பனர் நடத்தும் கல்வி கூடம்....இதனை அந்த தோழர் கேட்கிறார், பார்ப்பனிய எதிர்ப்பு பேசிவிட்டு நீங்களே பார்ப்பனர் நடத்தும் கல்வி கூடத்தில் சேர்ப்பது நீங்கள் உங்கள் கொள்கையில் உறுதியாக இல்லை என்று காண்பிக்கிறது என்றார்....

நான் கூறிய பதில், ஒருகாலத்தில் சூத்திரனுக்கு கல்வியை கொடுக்காதே என்று சொன்ன பார்ப்பனியம்...இப்பொழுது தாங்கள் நடத்தும் பள்ளியிலேயே எங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு இடம் கொடுக்கும் அளவுக்கு வந்து இருக்கிறது என்றால் யாருடைய உழைப்பு? யார் ஆட்சியில் இருப்பதால்?.... இப்படி கல்வி மறுக்கப்பட்ட எங்கள் வீட்டு பிள்ளைகளும் CBSE பள்ளியில் படிக்க வேண்டும் என்று போராடி போராடி பெற்ற உரிமை தான் இன்று என் மகள் பார்ப்பனர் நடத்தும் அந்த பள்ளியில் படிப்பது.......இப்படி எல்லா குழந்தைகளும் வரும் வரை உழைப்பது நம் கடமை இல்லையா?......இதனை சொன்னால் கொள்கையை விட்டு விலகிவிட்டேன் என்கிறார்......வாயால் சிரிக்க முடியவில்லை..





2 comments:

Unknown said...

திராவிட சமச்சீர் கல்வியின், தரத்தினை உணர்ந்து ,ஓடிப்போனதே அன்றி, நானொன்றும் அறியேன் பராபரமே!
பகுத்தறிவே ஜெயதே!
மற்றவனுக்கும், மாக்கானுக்குமே சமச்சீர் கல்வி! நமக்கு தேசியக் கல்வி!
பகுத்தறிவற்றவரின் மக்களுக்கே! சமச்சீர் கல்வி!

நம்பி said...

//பார்ப்பனிய எதிர்ப்பு பேசிவிட்டு நீங்களே பார்ப்பனர் நடத்தும் கல்வி கூடத்தில் சேர்ப்பது நீங்கள் உங்கள் கொள்கையில் உறுதியாக இல்லை என்று காண்பிக்கிறது என்றார்....//

பள்ளிகளை பார்ப்பனர்கள் நடத்தினாலும் சரி பார்ப்பனரல்லாதார் நடத்தினாலும் சரி அரசின் சலுகைகள் பெற்றுத்தான் பள்ளிகள் இயங்குகின்றன...பள்ளிக்கான நிலம், ஆய்வக வசதி, உபகரணங்கள், விளையாட்டுக் கல்வி, பள்ளி மாணவர்களின் போக்குவரத்து..கணினி, இணையம்...என அனைத்துமே அரசு சலுகை விலையில் மானியத்துடன் வழங்கப்படுகிறது. பல இலவசமாகவும் வழங்கப்படுகிறது.

இந்த மானியம் மற்றும் சலுகைகள் தனியார் பள்ளி அனைத்திற்கும் உண்டு. ஆகையால் எல்லாம் அரசின் சட்டதிட்டத்திற்கு கட்டுபட்டவையே...அரசின் கல்வி கொள்கைக்கு கட்டுபட்டவையே...இடவொதுக்கீட்டுக்கும் கட்டுப்பட்டவையே...

அரசினால் நாட்டு மக்களின் மொத்த எண்ணிக்கைக்கும் கல்வி வசதியை செய்து தரமுடியாது (தரமுடியாத சூழல் இப்பொழுது வரை இருப்பதால்...வரியை எவன் முறையாக் கட்டறான்?) என்ற காரணத்தினால் இது தனியாரிடமும் பள்ளிகள் நடத்த அனுமதி கொடுத்து பள்ளிகள் இயக்கப்படுகிறது..அவ்வளவே...!

இந்த மானியத்திற்கும் மக்களின் வரிப்பணம் செல்லுகிறது..ஆகையால் இதில் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்பதில்லை...

இதைப் பயன்படுத்திக்கொண்டு தனியார் பள்ளிகள் முறையற்று செயல்படுமேயானால் இப்பள்ளிகளை அரசே ஏற்று நடத்த தயங்காது, என்பதனையும் கருத்தில் கொள்ளவேண்டும்...அனுமதியையும் ரத்து செய்யும் அதிகாரம் அரசிற்கு உள்ளது. இதெல்லாம் ஊடகத்தின் வாயிலாக பல கல்வியாளர்கள் மக்களுக்காக தெரிவித்தவைகள் தான்.

எல்லா பள்ளிகளின் செயல்பாடுகளிலும் ஒட்டுமொத்த மக்களின் வரிப்பணம் அடங்கியிருக்கிறது. இதில் பார்ப்பனர் நடத்தும் பள்ளி என்று ஒருவர் உரிமை கொண்டாடினால் அந்த பள்ளிப் புகாருக்கு ஆளாகுவதில் இருந்து தப்பமுடியாது. அரசின் நடவடிக்கைகளிலிருந்தும் தப்ப முடியாது. மக்கள் போராட்டங்களிலிருந்தும் தப்ப முடியாது.

எப்படி? வங்கிகள் அனைத்தும் தேசியமயமாக்கப்பட்டதோ! அதே போன்று பள்ளிகளையும் தேசியமயமாக்கப்பட்டு விடும். அப்புறம் பள்ளி நடத்துபவர் சிங்கி தான் அடிக்கணும்.

என்ன தான் தனியார் பள்ளியில், என் சொந்த பணம் கட்டி படிக்கிறேன் என்றாலும் மக்களின் வரிப்பணம் அங்கேயும் ஏராளமாக செல்கிறது என்பதை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும். எல்லாம் மக்கள் பணம் தான். பணக்காரன் படித்தாலும் ஏழையின் பணம் அங்கே மானியமாக அடங்கியிருக்கிறது.

ஆகையால் எங்கு வேண்டுமானாலும் சேர்க்கலாம். கல்வி அரசாங்கத்தினுடையது தான்.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]