அதெல்லாம் நீங்கதான் சொல்றீங்க. அரசியல்ல மட்டும்தான் அந்தப் புள்ளைங்க ஈடுபடணுமா? என் பையனை நான் நடிகனாக்க விரும்பலையா? டைரக்டர் ஆக்க விரும்பலையா?
எஸ்.ஏ.சந்திரசேகரனும், சிவகுமாரும் அவங்கவங்க பசங்களை நடிகர் ஆக்கலையா? சிவாஜி பையன் நடிக்க வரலையா? ராஜ்குமார் பையன் வரலையா? உங்க ஃபேமிலியில 10 பேரைக் கொண்டுவாங்க. போட்டி வரட்டும். நீங்க தோத்துட்டீங்க என்பதற்காக.... அவங்களைத் திட்டக்கூடாது. ஜெயிக்க முயற்சிக்கணும். கீப் ட்ரையிங்!
எனக்கு தமிழ்நாட்டில் கலைஞன் என்பதுதான் அடையாளம். சினிமாவில் விளையாட்டு காட்டினான், வித்தியாசமா கதை சொன்னான், உணர்ச்சிகளைக் குவிச்சான்னுதான் மக்கள் என்னை அங்கீகரிச்சிருக்காங்க. நான் அரசியல் ஞானம் உள்ளவன், உலகப் பொருளாதாரம் தெரிஞ்சவன், பூலோகம் தெரிஞ்சவன், மக்களுடைய வறுமை புரிஞ்சவன்னு எவனும் என்னை ஏத்துக்கிடலை.
தமிழ்நாட்டு மக்கள் இளிச்சவாயன்னு சிலருக்குத் தெரிஞ்சுபோச்சு, ஏன்னா, எந்த மொழிக்காரனும் வரலாம், இங்கே தலைவன் ஆகலாம், மந்திரி ஆகலாம். என் பாவப்பட்ட ஜென்மத்துக்கு இன்னும் அறிவு வரலை.
லஞ்சத்தை ஒழிப்போம், வறுமையை ஒழிப்போம், சாப்பாடு கொடுப்போம், சட்டை கொடுப்போம்னு மைக் பிடிச்சுச் சொல்லிடலாம். திட்டம் என்னன்னு என்னிக்காவது பிராக்டிக்கலா சொல்லி இருக்கியா? எங்கள் மக்களை ஏமாற்றியவன் எவனாக இருந்தாலும், என்றைக்கு இருந்தாலும், அவனுக்கு அடி விழுவது நிச்சயம்!
விஜய், அஜீத்தும் அரசியலுக்கு வருவாங்கன்னு பேச்சிருக்கே?
அதேதான் திரும்பவும் சொல்றேன். எனக்கு டான்ஸ் ஆடத் தெரியும், பாட்டுப் பாடத் தெரியும், குதிக்கத் தெரியும், சண்டை போடத் தெரியும். அதனால், எனக்கு அரசியலும் தெரியும்னு சொல்லி மக்களை ஏமாற்ற நினைத்தால், அதற்கு நான் பொறுப்பல்ல.
இயக்குநர் பாரதிராஜா பேட்டி ஆனந்தவிகடன் 12.1.2011
No comments:
Post a Comment