வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Sunday, March 13, 2011

கணினியில் ஆரியச் சூழ்ச்சி...

தமிழில் மிக மிகுதியாக  வட மொழிச் சொற்களைக் கலப்பது மணிப் பிரவாளம் எனப்பட்டது.  சமற்கிரு தமே தெய்வமொழி மக்களுடைய  தாய்மொழி தாழ்ந்தது  என்று ஆரிய  பிராமணர்கள்  பரப்பிய கருத்து மணிப்பிரவாள நூல்கள் தோன்றக் காரணமாகும். மணிப்பிரவாளத்தில் சமண மதத்தின் சார்பில் தோன்றிய சீபுராணமும்  வைணவ மதத்தில் தோன்றிய ஈட்டுரைகளும் வெற்றிபெற முடியவில்லை. 

தமிழில் கலந்த  அரபு உருது சமற்கிருத சொற்கள் படிப்படியே நீங்கி மறைமலையடிகளாரின் தனித் தமிழ் இயக்கத்தால் செந்தமிழ் ஆகியது. ஜாஸ்தி, கச்சேரி, வக்கீல்,  ஜமீன், சர்க்கார்,  வாயிதா முதலிய அராபிய பாரசீக உருதுச்  சொற்கள் நீங்கின. ஆனால் கலெக்டர், கவர்மென்ட்,  ஸ்கூல், எனப் பல சொற்கள் ஆங்கி லத்தில் இருந்து தமிழுக்குள் புகுந்து இயல்பான  வழக்குச் சொற்களையும் அகற்றித் தமிழைத் தமிங்கலம் ஆக்கி வருகின்றன இந்நிலையில்  மேலும் கிரந்த எழுத்துகளைச் சேர்த்து தமிழில் மிக அதிகமான சமற்கிருதச் சொற்கள் புகவேண்டும் என்றும் சிலர் விரும்பு கின்றனர்.

வேதங்கள் சமற்கிருதம் ஆரியம் இவையே உயர்ந்தன,  தமிழும் தமிழ் இலக்கியங்களும் ஆரியத்துக்குக் கீழானவையே என்று  ஆரிய பிரா மணர்களும் ஆரியக் கருத்து உடையோ ரும் பரப்பி வருகின்றனர்.          தமிழ் தாழ்ந்தது அல்ல சமற்கிருதத்திற்கு  நிகரானது என்று கம்பரும் பின் வந்தோரும் அடிக்கடிக் கூறித் தமிழை உயர்த்திப் பிடிக்க முயன்றனர். ஆதி சிவன் சமற்கிருதத்தையும் தமிழையும் சமமாகப் படைத்ததாகப் பாரதி பாடினார். 

சிவனின் வலக்கண்ணும் இடக்கண்ணும் இவ்விரு மொழிகளும் என்று பாடி தமிழ் தாய்க்கு வாழ்த்தும் எழுதினார் மனோன்மணியம் சுந்தர னார். ஆயினும் ஆரிய பிராமணர்களும்  அவர்களுடைய கருத்து மனதில் பதிந்துவிட்ட  ஈசானதேசிகர், வையா புரிப் பிள்ளை முதலியோரும் வட மொழியையே உயர்த்திப் பேசினர். 

இன்றும் சிலர் பேசி வருகின்றனர். சமற்கிருதத்தில் பற்றும் தமிழைத் தாழ்வாகக் கருதும் மனப்பான்மையும் கொண்ட குலம் என்று  மு.சி.பூரண லிங்கம் பிள்ளை கூறியது உண்மைதான். வணக்கம் என்று சொன்னவர்களிடம்  நமஸ்காரம் என்று சொல்லுங்கள்  என்றார் உ.வே.சா. சாப்பாடு ஆயிற்றா என்று கேட்கக்கூடாது போஜனம் ஆயிற்றா? என்றுதான் கேட்க வேண் டும்  என்றார்  அவர்.

மேலும் தமிழில் மெய்யெழுத்து தனித்து முதலில் வரக்கூடாது என்ற விதியை மீறி கையெழுத்து இடும் போது  உ.வே.ச்  என்று போட்டவர் அவர். ஓலைச் சுவடிகளை ஒப்புநோக்கிப் பதிப்பிக் கும்போது தமக்கேற்றவாறு மாற்றிப் பதிப்பிக்கக் கூடாது என்ற அறத்தைமீறி,   குரவர் தப்பிய என்ற வரியைப் பார்ப் பார் தப்பிய  என்று மாற்றி பதிப்பித்த உ.வே.சா.-வின் செயலைப் பார்ப்பனக் குசும்பு என்று மறைமலை அடிகளார் குறித்தார். வடமொழிப் பற்றாளர்களா கிய பிராமணர்கள்  வடசொற்களைக் கலந்தே தமிழைப் பேசி வருகின்றனர்.

தமிழ்ச் சொற்களையும் கிரந்த எழுத்துகளைக் கலந்து வடமொழிச் சொல்போல் பேசுவது அவர்களது வழக்கம். சுரம், வேட்டி, கோட்டி, பூசை முதலிய தமிழ்ச் சொற்களை  ஜுரம், வேஷ்டி,  கோஷ்டி, பூஜை  என்று ஒலிப்பார்கள். சோறு, குழம்பு, வீடு, நாள், அய்யா என்றுத் தமிழ்ச் சொற்களை பேசினால் அது இழிவு என்பதாகக்  கூறி சாதம், சாம்பார், கிரகம், தினம், சாமி  என்று வடசொற்களையே கூறு வது அவர்களது வழக்கம்.

தேவாரம், திருவாசகம், திருவாய்மொழி முதலிய இனிய, தூய தமிழ்ப் பாடல்களை வடமொழிபோல் ஒலிப்பதும் வடசொல் கலந்து மணிப்பிரவாள நடையில் உரை செய்வதும் இவையும் கூடப் பிடிக் காதவர்கள் சமற்கிருதத்தில் மட்டுமே  பூசை செய்வதும் ஆரியர்களின் குண மாகும். முன்னரே தமிழில் இருந்த பல கலை அறிவியல் நுட்ப நூல்களைப் புராணங்களோடு சேர்த்து வட மொழியில் மொழிபெயர்த்துக் கொண்டு  தமிழில் வழக்கற்றுப் போகும்படியாக வும், தவறியது ஏதேனும் இருந்தால் வடமொழியில்தான் முன்னர் தோன் றியது என்று கூறியும் ஆரியச் சார்பினர் கருத்து பரப்பி வந்தனர்.

தமிழர் களுடைய கோயிற் கட்டடக் கலை யையும் நடனக் கலையையும் இசைக் கலையையும்  வழிபாட்டு முறையையும் கடவுட் பெயர்களையும் ஊர்ப் பெயர்களையும் வடமொழியாக்கி விட்டனர். பழந்தமிழ் இலக்கியங்களை அழிக்க ஆடிப் பதினெட்டாம் பெருக்கில் ஆற்றில் விடவேண்டும் என்றும்  பொங்கலுக்கு முதல் நாள் தீயில் இட வேண்டும் என்றும் மக்க ளிடம் பரப்பி தமிழ்க் கலை இலக்கியச் செல்வங்களை அழித்தனர். சிவகாசி கோயில் கோபுரத்தில் வைக்கப்பட்டு  இருந்த தமிழ் ஓலைச்  சுவடிகளை அழிப்பதற்கு இலுப்பைக் கட்டை களைக் கொண்டு கொளுத்திவிட்டனர்.

இதனால் இன்றுவரை கோபுரம்கூட பிளந்துதான் நிற்கிறது. இலங்கையில் ஈழத்தமிழர்களை அழிக்கும் முயற்சியில் முதற்கட்டமாக பழந்தமிழ் இலக் கியங்களைக் கொண்டிருந்த யாழ்ப் பாணம் நூலகத்தைதான் சிங்களர்கள் கொளுத்தி விட்டனர்.  ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால்  அம் மொழியை அழிக்க  வேண்டும் என்பதை ஆரியர்கள் பின்பற்றினர்.

இவ்வாறு ஆரியச் சூழ்ச்சிகளாலும், சமற்கிருதமொழிக் கலப்பாலும்  கிரந்த வருக்க எழுத்துக் கலப்பாலும் தமிழ் பலமொழிகளாக்க் கிளைத்துப் போய் விட்டது; தமிழ் மக்கள் தொகையாலும் நாட்டின் அளவாலும் சுருங்கினர். இன்றுவரை தமிழுக்கு எதிரான கருத்துகளைப் பார்ப்பனர்கள் சிலர் தங்கள் தமிழ்ப்பணிகளின் நடுவிலேயே தேனில் ஒருதுளி நஞ்சு போல் குழைத்துப் பரப்பி வருகின்றனர்.

அவர்க்குத் துணையாகத் தமிழர் சிலரும் அந்நஞ்சு கலந்த தேனே தமிழ் வளர்க் கும் நன்மருந்து என்று கூறித் தமிழ் அறிஞர்களையும் தமிழ் ஆர்வலர்களை யும் கடுமையாகத் தாக்கிப் பேசியும் எழுதியும் வருகிறார்கள்.

(தொடரும்), -----------விடுதலை, ஞாயிறு மலர் (12-03-2011)


1 comment:

நம்பி said...

ஜம்ஜ்கிருதம் (சமஸ்கிருதம்...நாவலர் அதை இப்படித்தான் அழைப்பார்) செத்துப்போன மொழி என்று நாவலர் சோமசுந்தர பாரதி கூறியது போல.....இன்னும் ஒரு படி மேலே போய் சொல்வோமேயானால் அது ஒரு செய்யப்பட்ட மொழி...தமிழைப்போல் கலப்பில்லாத தனித்துவமான மொழி அல்ல...பல மொழிகளில் உள்ள சொற்களை கடன்வாங்கி ஒன்று சேர்த்து செய்யப்பட்ட மொழி.....

அதை புரோகிதம் பண்ணுவதற்காக அதை ஆரியர்கள் கொண்டுவந்தனர்...ஆகையால அது மக்களின் பயன்பாட்டுக்கு வராத மொழி...அதை பயன்படுத்தும் பார்ப்பனர் பலருக்கே பொருள் தெரியாது. அது திராவிடர்களின் மொழி அல்ல. திரவிடர்கள் அதை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்.

தமிழில் அர்ச்சனை செய்யுங்கள்...தமிழ் முறையில் திருமணம் செய்யுங்கள். கன்னடம் தமிழில் இருந்து தோன்றிய மொழி ஒரு 1500 வருடங்களுக்கு முன் தோன்றியது...அதே போன்று தான் தெலுங்கு, மலையாளம்....பல வார்த்தைகள் அப்படியே தமிழில் உள்ளது போல் இருக்கும்.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]