வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, March 05, 2011

காங்கிரசின் பிடிவாதம்..தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கக் கூடாது என்பதற்காகவே!

தஞ்சை, மார்ச் 5- தி.மு.க., தலைவர் கலைஞர் அவர்களின் அறிக்கை நியாயமானது. காங்கிரசின் நிபந் தனைகளுக்கு உட்பட்டுதான் தேர் தலைச் சந்திக்க வேண்டும் என்கிற நிலையில் திமுக இல்லை. காங்கிரசின் நிபந்தனைகளுக்கு பணிந்து போக வேண்டிய அவசியமில்லை  என்பதை திமுக தலைவர் கலைஞர் அவர்களையும், திமுக உயர்நிலைக் குழுவினரை யும் கேட்டுக் கொள்கின்றோம். தி.மு.க. பெரு உருவெடுத்து (விஸ்வரூபம்) வெற்றி பெறும் என்பதில் எவ்வித அய்யமும் இல்லை என்று தாய்க் கழகத்தின் சார்பில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி அவர்கள் கனி வான வேண்டுகோள் விடுத்துள்ளார். அறிக்கை வருமாறு:
 
அனைவருக்கும் அதிர்ச்சி
இன்று காலை தி.மு.க. தலைவர் மானமிகு கலைஞர் அவர்களது அறிக்கை - நியாய உணர் வும் சுயமரியாதை உணர்வும் உடைய அனை வரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருப்பதை போன்றே நமக்கும் அதே எண்ணம் ஓடியது.

காங்கிரசின் பிடிவாதம்
தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் இடம் பெற காங்கிரஸ் கட்சி மிகவும் அதிகமான - நடைமுறைக்கு சாத்தியமற்ற - தொகுதிகளை பிடிவாதமாகக் கேட்பதும், கூட்டணி நெறிமுறை களிலேயே கேள்விப்படாத வகையில், தாங்கள்தான் அத்தொகுதிகளையும்கூட தேர்வு செய்வோம் என்று நிபந்தனை விதிப்பதும் என்ற நிலை காங்கிரஸ் கட்சி கொடுக்கும் இடத்தில் உள்ள கட்சியாகவும், தி.மு.க. அவர்கள் தொடுக்கும் நிபந்தனை ஏற்கும் ஒரு கட்சியாகவும் உள்ளது போன்ற ஒரு தோற்றத்தை மக்களிடையே ஏற்படுத்துகிறது.

தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கக் கூடாது என்பதற்காகவே!
தி.மு.க. தனித்த பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கக் கூடாது என்பதற்காக மறைமுகமாக அதற்கு போதிய அளவு போட்டியிட வாய்ப்பற்ற ஒரு நிலையை உருவாக்கவே இக்கோரிக்கை என்பது சற்று நிதானமாகச் சிந்திக்கும் எவருக்கும் - நடுநிலையாளருக்கும் தெளிவாகவே புரியும்.

தி.மு.க. இப்படிப்பட்ட நிபந்தனைகளுக்குட்பட்டு தேர்தலை சந்தித்துத்தான் ஆக வேண்டும் என்ற நிலையில் தி.மு.க. இருக்கவில்லை.

மக்களுடைய பேராதரவினைப் பெற்று பட்டி தொட்டியெல்லாம் கிளைகளுடன் கட்டுப்பாடு மிக்க தொண்டர்களை, தோழர்களைக் கொண்ட - பல்வேறு சோதனைகளைச் சந்தித்து கரையேறி வெற்றி கொண்ட இயக்கமாகும்.

நிபந்தனைகளுக்குப் பணியத் தேவையில்லை
எனவே, தமிழர்களின் இன உணர்வு, சுயமரியாதை காக்கவே தந்தை பெரியார் கொள்கை லட்சியப்படி அறிஞர் அண்ணா அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு, இன்று அந்தக் கொள்கைப் பாரம்பரியத்தை விடாமல் தொடரும் மானமிகு கலைஞர், இனமானப் பேராசிரியர் போன்றவர்களால் நடத்தப்பட்டு வரும் நிலையில் இதுபோன்ற நிபந்தனைகளுக்குப் பணிந்து போகாமல் பெரும்பான்மை வரும் அளவுக்கு தி.மு.க. செயல் வீரர் - வீராங்கனைகளுக்கு அவ்வாய்ப்பினை அளித்து கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காக்கும் இயக்கம் மீண்டும் பெரு உரு (விஸ்வரூபம்)க் கொள்ள வேண்டும்.
சுதந்திர முடிவெடுங்கள்!

சுதந்திரமாக, முடிவு எடுக்க வேண்டுமென சாதனைச் செம்மல் கலைஞர் அவர்களுக்கும், தி.மு.க.வின் உயர்நிலை, அரசியல் செயற்குழுத் தோழர்களுக்கும் தாய்க் கழகம் சார்பில் கனிவான வேண்டுகோளை முன் வைக்கிறது.

(source: http://viduthalai.in/new/e-paper/4783.html)
கி. வீரமணி
தலைவர்,
                                                                                                                                 திராவிடர் கழகம்


1 comment:

Unknown said...

உமது தலைவரின் எண்ணத்தை, எமது தலைவர் அறிவார்!
எப்படியாவது உசுப்பேற்றி, வெறியேற்றி, தனியாக நிற்க வைத்து,தொலைத்து கட்டிவிட்டு, அம்மா ஆட்சியைக் கொண்டு வர, வீரமணி முயல்வது - ராஜதந்திரியான கலைஞர், நன்கு அறிவார்!

இதுதான் அடுத்துக் கெடுப்பதென்பது!

உமது தலைவரின், எண்ணம் ஈடேறாது!

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]