வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, March 02, 2011

திராவிடர் கழகத்திற்கு தன்னிலைத் திரிபு என்பது அதற்கு என்றுமே கிடையாது.

(தினமலர், 2.3.2011 பக்கம் 9) தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டாலும் வெளியிட்டார் (விடுதலை, 28.2.2011), தமிழ்நாட்டில் மட்டுமல்ல; இந்தியத் துணைக் கண்டத்தில் மட்டுமல்ல, உலகின் பல பகுதிகளில் இருந்தும் அருமையான எதிரொலியை ஏற்படுத்திவிட்டது.

எங்கள் உணர்வின் அலைகளை  உங்கள்  அறிக்கை  வழியாக வடிகாலுக்கு வழி செய்துவிட்டீர்கள் என்ற கருத்தை அனேகமாக அனைவருமே பிசிறு சிறிதும் இல்லாமல் ஒருமித்த முறையில் பாராட்டுகிறார்கள்.

தொலைப்பேசி வாயிலாகவும், குறுஞ்செய்தி வாயிலாகவும் தங்கள் உள்ளக் கண்ணாடியைத் திறந்து காட்டுகிறார்கள்.

டில்லியில் அதிர்ச்சி என்ற ஒரு ஏடு தம்  சொந்த சரக்கைக் கொட்டுகிறது.
இன்றைய தினமலர் ஏடோ மேற்கண்ட கார்ட்டூனை வெளியிட்டுள்ளது.
யார் யாருக்கு என்னென்ன தோன்றுகிறதோ, அவரவர்களும் அவரவர்கள் கண்ணோட்டத்தில் ஆலாபரனை செய்கிறார்கள்.

ஆனால் ஒன்று மட்டும் தெளிவு. திராவிடர் கழகத் தலைவர் வெளியிடும் ஒரு கருத்து, ஓர் அறிக்கை பல தளங்களிலும் அதிர்வை உண்டாக்கக் கூடியது என்பதுதான் அது.

தமிழர் தலைவர், தந்தை பெரியார் அல்லர் - அப்படிச் சொல்லுவதையும் ஏற்றுக் கொள்பவரும் அல்லர் - அதனைக் கண்டிக்கவும் செய்வார்.

அதே நேரத்தில் தந்தை பெரியார் இடத்தில் இருந்து, அய்யா அவர்களின் கண்ணோட்டத்தில், எந்தவித நிர்பந்தங்களும் தன்னிடம் கிட்டே நெருங்க முடியாது என்ற அளவுக்குத் தனித்த முறையில் கருத்தினைத் துணிவுடன் கூறும் தகைமையாளர் என்பது மட்டும் உலகறிந்த உண்மை

அந்த வகையில் வெளியிடப்பட்டதுதான் அந்தச் சுயம் பிரகாசமான அறிக்கை. தேர்தலில் ஈடுபடாத ஒரு இயக்கத் தின் தலைவர் என்பதால் தயக்கமின்றி, தன் மனதில் பட்டதை அழுத்தமாகக் கூறிட முடிகிறது. மானமிகு - மாண்புமிகு கலைஞர் அவர்களின் கருத்தும் அதுதான் என்று தினமலர் கருதுமேயானால் அதுகூட மகிழ்ச்சிக்கு உரியதுதான்.

மானமிகு சுயமரியாதைக்காரர்கள் ஒன்றாகவே சிந்திக்கக்கூடாதா?

கன்னியாகுமரிப் பார்ப்பானுக்குத் தேள் கொட்டினால், காஷ் மீரத்தில் உள்ள
பார்ப்பானுக்கு நெறி கட்டுகிறதே, அது எப்படி?
அந்த உணர்வு தமிழர்களிடத்தில் வரக்கூடாதா?

திராவிடர் கழகம் எந்தக் கட்சியை ஆதரித்தாலும், எதிர்த்தாலும் அதற்கென்று ஒரு தனித்தன்மை உண்டு. தன்னிலைத் திரிபு என்பது அதற்கு என்றுமே கிடையாது.

பி.ஜே.பி. எதிர்நிலையில், திராவிடர் கழகம் ஒரு முடிவு எடுத்தபோது மக்கள் தலைவர் மதிப்பிற்குரிய ஜி.கே.மூப்பனார், அவர்கள்கூட தமிழர் தலைவரைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, எங்கள் ராஜகுருவே! என்று விளித்ததுண்டே! இந்த நிலை என்றைக்குமே உண்டு கழகத்துக்கு.
 
பூனைக்கு மணி கட்டுவது யார் என்பதெல்லாம் கழகத்திற்கு ஒரு பிரச்சினையே அல்ல!

------- நன்றி விடுதலை, (02-03-2011)


No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]