வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Tuesday, April 05, 2011

தமிழ்நாட்டில் உட்கார்ந்து கொண்டு மோடிக்கு துதி பாடும் யோக்கிய சிகாமணிகளுக்கு

/****************குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,

ஓட்டுக்கு பணம் கிடையாது.

டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்).

கரண்ட் கட் கிடையாது.

இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது****************/

எதுவுமே கிடையாதாம் குஜராத்துல மத்திய அரசில் அங்கோ பங்கோ கிடையாதாம்...என்ன கண்டு பிடிப்பு...இதனை சொல்ல வெட்கமா இல்லையே...காங்கிரஸ் உடன் எப்படி மோடி அங்கம் வகிப்பார்...மதவாதத்தின் மொத்த உருவம் மோடி...இந்த மோடி நீரோ மன்னன் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகளால் வர்நிக்கப்ட்டவர்...அப்படிப்பட்ட பேர்வழி நல்ல ஆட்சி கொடுக்கிறாராம்...

ஓட்டுக்கு பணம் கிடையாதாம்...டாஸ்மாக் கிடையாதாம்...யார் சொன்னது? போலி மது பானங்கள் கள்ள மார்க்கெட்டில் விற்கும் முதன்மை மாநிலம் குஜராத்...போலி மது பானங்கள் காட்டாறாக ஓடும் மாநிலம் குஜராத்துதான். போலி மது குடித்து மாண்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.

2010 மார்ச்சு 21ஆம் தேதி ஏடுகளில் ஒரு செய்தி வெளிவந்தது. ஆள் இல்லாத ஒரு கார் நின்று கொண்டி ருந்தது. சந்தேகத்தின் பேரில் அதனை காவல்துறை சோதனையிட்டபோது, 31 பெட்டிகளில் 372 மதுபாட்டில்கள் இருந்தன.

காரின் முன்புறத்தில் டீசா எம்.எல்.ஏ., என்று எழுதப்பட்டு இருந்தது. அவர் ஆளும் கட்சி எம்.எல்.ஏ., ஆவார். ஆளும் கட்சி யினர் போலி மது பான தொழிலை ஒரு சாம்ராஜ்ஜியமாக நடத்திக் கொண்டிருக்கின்றனர் என்பதற்கு இது ஒரு சிறு அத்தாட்சி அவ்வளவுதான். ஆளும் கட்சிக்காரர்களே போலி மதுபானம் தயாரித்து விற்பனையில் ஈடுபட்டு வருவதால் காவல்துறை கண்டு கொள்வதில்லை.


இப்பொழுது சொல்லுங்கள் மது ஒழிப்பு இருக்கிறதா குஜராத்தில்? மேலும் இந்த நீரோ மன்னன் மற்ற இன மக்களை வாழவிடாமல் கொன்று குவிப்பது மட்டுமே நல்ல ஆட்சியில் நடந்தேறுகிறது....உசார்! சோ பார்ப்பானோடு சேர்ந்து கொண்டு தமிழகத்தில் இருந்து கொண்டு மோடிக்கு வக்காலத்து வாங்க வேண்டாம் தோழர்களே...
 
****************

- மாநிலத்தின் அத்தனை பெண்களுக்கும் படிப்பறிவு கொடுக்கிறது.

-இந்தியாவின் 15% ஏற்றுமதி குஜராத்திலிருந்து செல்கிறது.
...
-இந்திய பங்குச்சந்தையின் 30% பங்குகள் குஜராத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

-TATA,Hyundai,Ford,Reliance,Honda இன்னும் பிற குஜராத்தில் உள்ளன. *************/

தமிழ்நாட்டில் உட்கார்ந்து கொண்டு மோடிக்கு பிரச்சாரம் செய்யும் பேர்வழிகளுக்கு தமிழகத்தின் நலம் கண்ணிருந்தால் தெரியும்...ரெண்டும் புண்ணாக இருந்தால் தமிழக அரசு செய்யும் நலன் எப்படி தெரியும்.....பெண்களுக்கு படிப்பறிவு கொடுக்குதாம் குஜராத் அரசு....... தமிழகத்தில் பெண்களுக்கு கல்வி அறிவு மட்டும் அல்ல......வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத சொத்துரிமையும் வழங்கி, மற்றும் பல அறிய திட்டங்கள் தந்து பெரியாரின் பெண்ணியத்தை நிலைநாட்டி உள்ளது...

இந்தியாவின் ஏற்றுமதி தமிழகத்தில் இருந்து 35 சதவீதம் செல்லுகிறது

இந்தியாவில் பங்கு சந்தையில் 45 சதவீத பங்குகள் தமிழகத்தில் முதலீடு...

TATA,Hyundai,Ford,Reliance,Honda மட்டும் அல்ல கோவை,திருப்பூர் மற்றும் ஈரோட்டில் ஒரு துறை..சேலம் இரும்பு...ஓசூர் மருந்து மற்று இதர தொழில்கள்...இவை அனைத்தும் 30 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு நடைபெற்று வருகிறது....மேலும் வளர்ச்சி அடைய பணிகள் மேற்கொண்டுள்ளது நம் தமிழக அரசு......இங்கு இந்த தொழில் பெருக்கத்தை மேலும் வலுப்படுத்த முயன்றால் விளைநிலம் போகும் என்று கூச்சல் போடுவார்கள்...குஜரத்தில் மோடி தத்தி முத்தி.....ஒரு சில தொழிற்ச்சாலை கொண்டுவந்தால் அது வளர்ச்சிக்கான முயர்ச்சியாம்......தமிழா இன உணர்வு கொள்...தமிழனாக இரு...
 
நல்லாட்சியோ ..நாடுமாறி ஆட்சியோ செய்யும்.. மோடி மஸ்த்தான் பற்றி மேலும் சில துளிகள்...

குஜராத்தில் அரச பயங்கரவாதம் தலைதூக்கி ஆயிரக்கணக்கான முசுலிம் சிறுபான்மை மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தக் கலவரங்கள் மீதான விசாரணை ஒழுங்காக நடைபெறவில்லை.... உச்சநீதி மன்றமே புலனாய்வுக் குழு ஒன்றை நியமித்து விசாரிக்க ஆணை ஒன்றினைப் பிறப்பித்தது.

புலன் விசாரணைக் குழுவின் விசாரணையில் பல மோசடிகள் அம்பலமாயின. அதன் விளைவு குஜராத் மாநில காவல்துறைத் துணைத் தலைவர் வன்ஜாரா உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறைக்குள் தள்ளப்பட்டனர்.

இதைவிட உலகம் இதுவரை கேள்விப்பட்டிராத ஒரு பூகம்பப் பொய் ஒன்று இருக்கிறது. அந்த வெளிப்படையான (?) மோடியின் நிருவாகத்தின்மீது காரித்தான் உமிழ் வார்கள்.

கோத்ரா ரயில் எரிப்புத் தொடர்பான வழக்கில் குற்றஞ்சாற்றப்பட்ட சிலரிடம் ஆயுதங்கள் இருந்தன என்றும், அவை பறிமுதல் செய்யப்பட்டன என்றும், அதற்குச் சாட்சியாக கோத்ரா அருகில் உள்ள பம்ப்ரோலி கிராமத்தைச் சேர்ந்த ஸ்மஷான் சாலையில் வாழும் மாலாஜி ஓடாஜி என்ற மார்வாடி என்பவர் சேர்க்கப்பட்டு இருந்தார்.

சாட்சியை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அந்தச் சாட்சிக்கு நீதிமன்றத்தால் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

ஆனால் அவரோ சாட்சி சொல்ல வரவில்லை. அவர் எப்படி வருவார்? கோத்ரா நிகழ்வுக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பாகவே இறந்தவர் ஆயிற்றே அவர்! அவர் எப்படி சாட்சிக் கூண்டு ஏறுவார்?

ஏழாண்டுகளுக்கு முன் செத்தவரை சாட்சியாகப் பதிவு செய்த நரேந்திரமோடிஆட்சியைப் போல வெளிப்படை யான நிருவாகத்தை எங்குப் போய்த் தேட முடியும்?

முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டும் முப்புரிக் கூட்டம் எந்த அளவுக்கும் பொய்ச் சொல்லத் தயங்காதே!
 
மேலே சொன்ன மோடிமஸ்தான் ஆட்சி தமிழகத்தில் வரவேண்டும் என்று நினைக்கும் கூட்டம்......பார்ப்பன அம்மையாரை தூக்கி வைத்து கொண்டு ஆடுகிறது ....உசார் தமிழர்களே...நிதானம் தேவை....சும்மா குடும்பம்...சொத்து,சொத்தது என்று சொல்லுவதை நம்பி மோசம் போகாதீர்கள்.....இன்னும் சொல்லப்போனால் குஜராத்தில் வேலை பார்க்கும் தமிழக பார்ப்பனர்கள் கூட அங்கு வீடு வாங்கி வசிக்காமல் தமிழகம் நோக்கி வீறுநடை போடுகிறார்கள்...நல்லாட்சி என்றால் அங்கேயே இருக்கவேண்டியது தானே......ஏன்னா மோடியே சென்னையில் வந்துதான் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கிறார் ..அய்யா வாங்க...அம்மா வாங்க  தொழில் தொடங்க..என்று.......தமிழ்நாட்டை பார்த்து அதில் ஒரு 15 சதவீதம் ஆவது குஜராத்தில் தொழில் வளர்ச்சி தொடக்கி தன் மீது படிந்துள்ள இந்துத்துவ கரையை மறைத்து...பார் பார் இதோ நானும் நல்லாட்சி செய்கிறேன் என்று  மோடி மஸ்தான் மார்தட்ட படும் பாடு...இங்கு உள்ள கலைஞர் எதிர்ப்பு ஒன்றையே குறிக்கோளாக கொண்டுள்ள யோக்கிய சிகாமணிகளுக்கு கண்ணை மறைக்கிறது..........திராவிடர் இன உணர்வு கொண்ட தமிழா விழித்துகொள்....
 


19 comments:

காதர் அலி said...

நறுக்குன்னு கேட்டிங்க,வாழ்த்துக்கள்.

சீனு said...

நான் மோடி கட்சி...

ராஜேஷ், திருச்சி said...

"டெவில்ஸ் அட்வகேட்" கரன் தப்பரின் கிடுக்கி பிடி கேள்விகளுக்கு மூச்சு திணறி, தண்ணி வேணும் நு கேட்டு குடித்துவிட்டு.. மூச்ச போய் ஓடிப்ப்போனவன் தானே இந்த "பேடி" மோடி .

தமிழகத்தில் இல்லாத தொழில்சாலையா? ஐ டி பூங்ககளை இந்த மண்டூக கிழம் மறந்து விட்டதா? சென்னை டைடல் பார்க் சாட்சி

அப்படி மோடி மேல் காதல் இருந்தால் ஓட வேண்டியது தானே குஜராத்துக்கு சோ கூட்டம்

Gokul said...

மோடியை மதவாதி அப்படின்னு சொல்லுங்க அது கரெக்ட். கோத்ரா ரயில் எரிப்பும் சரிதான் ஆனா ..காமராஜ் பண்ணியதை எல்லாம் கருணாநிதிக்கு அர்ப்பணம் பண்றீங்களே ஞாயமா ..

இன்றைய தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதார எண்ணிக்கைகள் சதவீதங்களுக்கு பெரும் காரணம் , கொங்கு மண்டல தொழில் வளர்ச்சியே அதற்கு காரணம் திரு.சி.சுப்பிரமணியம் . ஓசூர் தொழிற்பேட்டையில் இருந்து திருச்சி பெல் வரை அனைத்திற்கும் காரணம் காமராஜ், எத்தனை தொழிற்பேட்டைகள், அணைகள் ..

திராவிட ஆட்சி வந்து கட்டப்பட்ட அணைகள் எத்தனை?

மேலும் ஏற்கனவே காமராஜர் மூலம் கொண்டு வரப்பட்ட பரவலான கல்வி முறை மற்றும் +2 முறை (இது எம்.ஜி.ஆரால் கொண்டு வரப்பட்டது) மற்றும் இயற்கையிலேயே தமிழர்களுக்கு உள்ள கல்வி மீதான பற்றுதலே "உலகமயமாக்கம்" வந்த பிறகு பல வெளிநாட்டு தொழிற்சாலைகளை தமிழகத்திற்கு "அள்ளி" வர முடிந்தது. இதற்காக கருணாநிதி ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை.

"இந்தியாவில் பங்கு சந்தையில் 45 சதவீத பங்குகள் தமிழகத்தில் முதலீடு..."

இது என்ன புது கதையா இருக்கு?....எங்கே இருந்து அண்ணே புடிச்சிங்க?

பரணீதரன் said...

/***ஏற்கனவே காமராஜர் மூலம் கொண்டு வரப்பட்ட பரவலான கல்வி முறை மற்றும் +2 முறை (இது எம்.ஜி.ஆரால் கொண்டு வரப்பட்டது) மற்றும் இயற்கையிலேயே தமிழர்களுக்கு உள்ள கல்வி மீதான பற்றுதலே "உலகமயமாக்கம்" வந்த பிறகு பல வெளிநாட்டு தொழிற்சாலைகளை தமிழகத்திற்கு "அள்ளி" வர முடிந்தது. இதற்காக கருணாநிதி ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை.**/

மோடியின் கருத்து பற்றி கூறியமைக்கு மிக்க நன்றி தோழரே....ஒரு துரும்பையும் கில்லி போடாமலா, துணை முதல்வர் கடந்த ஐந்து ஆண்டுகளில் நோக்கியா,போர்ட்,ஹுண்டாய் மற்றும் பல நிறுவனங்களை தமிழகத்தில் கொண்டுவந்தார்கள்......திருச்சியில் விமான நிலையத்தை சர்வதேச விமானநிலையமாக மாற்றி தொழில் நுட்ப பூங்கா அமைத்தார்கள்......இப்படி அடுக்கி கொண்டே போகலாம்....தோழரே.....

அப்புறம் கல்வி, அய்யா காமராசர் கல்வி கண்திறந்தார்....மறுக்கவே இல்லை....அதனை காப்பாற்றி கொண்டு வந்து இன்று சமச்சீர் கல்வி வரை எட்டசெய்தது கலைஞர் தான்.....கல்வி துறையில் பள்ளிக்கல்வி, உயர்கல்வி என்று துறையை இரண்டாக பிரித்து கல்விக்கு முக்கிய துவம் கொடுத்தது கலைஞர் தான்.......குடும்பத்தில் முதல் பொறியியல் பட்டதாரி மாணவருக்கு அரசு கல்விச்செலவி ஏற்கும் என்று திட்டம் கொண்டுவந்தவர் கலைஞர் தான்....இதனையும் அடுக்கலாம்......

நீங்கள் இப்படி கொஞ்சம் உற்றுநோக்கி பேசுங்கள் தோழரே....

நம்பி said...

Gokul said..

//"உலகமயமாக்கம்" வந்த பிறகு பல வெளிநாட்டு தொழிற்சாலைகளை தமிழகத்திற்கு "அள்ளி" வர முடிந்தது. இதற்காக கருணாநிதி ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை.//

அப்படியென்றால், ஏன்? 1991-1996 மற்றும் 2001-2006 இந்த காலகட்டங்களில் தொழற்சாலைகள் எதுவும் வரமுடியவில்லையே...துரும்பைக்கூட கிள்ளி போடவேத் தேவையேயில்லையே? தானாக வந்திருக்க வேண்டுமே ஏன் வரவில்லை? அனைத்து மாநிலங்களிலும் இதே மாதிரி தொழிற்சாலைகள் வந்திருக்கவேண்டுமே ஏன் வரவில்லை??????...துரும்பையே கிள்ளிப் போடத் தேவையே இல்லையே? ஏன் வரவில்லை....???????? கருணாநிதி தான் இல்லையே! தாராளமாக வந்திருக்கலாமே! யார் தடுத்தது??????????????????

நம்பி said...

Gokul said...
//திராவிட ஆட்சி வந்து கட்டப்பட்ட அணைகள் எத்தனை?//

இதுவரை கட்டிய அணைகளில் எல்லாம் வருடம் முழுவதும் தவறாமல் நீர் நிரம்பி வழிகிறதா?

எங்கே? அணை கட்ட வேண்டிய இடம் உள்ளது? அதை எங்கே கண்ணும் காணாமல் விட்டு விட்டார்கள்? இங்கே எத்தனை ஜிவநதி பாய்கிறது?

பாய்கின்ற மாநிலத்திலேயே அணை கட்ட இந்து மதங்கள் தடுக்கின்றன. வாரணாசி....கங்கை...அங்கே அகோரி சாமியார்கள்...கும்பமேளா நடத்துபவர்கள் தடுக்கிறார்கள்...இங்கு அப்படி என்ன பெரிய ஜீவந்தி ஒடிக்கொண்டிருக்கிறது? கட்டாமல் விட்டுவிட்டோம். சொல்லலாமே? யார் இங்கே தடுக்கப்போகிறார்கள்?

Gokul said...

பிறகு விரிவாக பதில் எழுதுகிறேன்,
இப்போதைக்கு,
நான் இங்கே ஒப்பிடுவது பெருந்தலைவருக்கும் கருணாநிதிக்கும் , ஜெயலலிதாவிற்கும் கருணாநிதிக்கும் அல்ல .
//எங்கே? அணை கட்ட வேண்டிய இடம் உள்ளது? அதை எங்கே கண்ணும் காணாமல் விட்டு விட்டார்கள்? இங்கே எத்தனை ஜிவநதி பாய்கிறது?//
இங்கே ஜீவ நதி எங்கே ஓடுகிறது அணை கட்ட என்று காமராஜோ வெள்ளையரோ நினைத்திருந்தால் சாத்தனூர் அணை, பேச்சிபாறை அணை , பவானி சாகர், அமராவதி போன்றவை எப்படி வந்தது?

ராஜேஷ், திருச்சி said...

இங்கே அவர் ஜெயலலிதாவை இழுக்க காரணம் உங்களின் வரிகள் - கருணாநிதி எதுவும் செய்யல , அதுவா வளர்ச்சி அடைந்ததுனு நீங்க சொன்ன வரிகள் தான்..

டைடல் paark முதல் பல்வேறு தொழில் சாலைகள் தமிழகத்துக்கு வந்து கலைஞ்சர் ஆட்சியில்.. வந்த வாய்ப்புகளை விரட்டியவர் ஜெ / சசி.
போக்குவரத்து பாலங்கள் , நான்கு வழி , ஆறு வழி சாலைகள் எப்போ , யார் ஆட்சியில் வந்தது?

//காமராஜோ வெள்ளையரோ நினைத்திருந்தால் சாத்தனூர் அணை, பேச்சிபாறை அணை , பவானி சாகர், அமராவதி போன்றவை எப்படி வந்தது? //

இது எப்படி இருக்கு தெரியுமா? பெருந்தலைவர் காமராசர் ஏன் பாலங்கள் கட்டவில்லை என்று கேட்பது போல உள்ளது.. அந்த காலகட்டத்தில் அது தேவைப்படவில்லை ஆக அவர் அதில் கவனம் செலுத்தவில்லை.. இந்த கால கட்டத்தில் பெருகிய போக்குவரத்துக்கு பாலங்கள் தேவை.. கலைஞ்சர் அதை செய்தார்.. அணைகள் கட்ட அப்போது போதிய நதிகள் ஆறுகள் இருந்தது , தேவையும் இருந்தது , பெருந்தலைவர் செய்தார்.. அந்த அணையை காப்பது தான் இப்போதைய கடமையே தவிர.. எட்டிக்கி போட்டினு, சாத்தியம் இல்லாத இடத்தில் அனைபோடுவது இல்லை..

நம்பி said...

Gokul said...

//அணை கட்ட என்று காமராஜோ வெள்ளையரோ நினைத்திருந்தால் சாத்தனூர் அணை, பேச்சிபாறை அணை , பவானி சாகர், அமராவதி போன்றவை எப்படி வந்தது? //

அணையின் purpose தவறாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அணை காமராஜருக்கு முந்தியே ராஜா காலத்திலேயே கட்டப்பட்டுள்ளது. கல்லணை...

அணை எதற்காக...?

பாய்ந்தோடும் வெள்ள நீர் வீணாக வெளியேறி கடலில் கலப்பதை தடுத்து அதை பாசனத்துக்கா அதிக வீச்சுடன் திருப்புவதற்காக அந்த காலத்தில் கட்டப்பட்டது. வாய்க்காலில் தடுப்பு கட்டி வயலுக்கு நீர் பாய்ச்சுவதை கண்டிருக்கலாம். அதுவே பெரிய அளவில் பார்க்கும் பொழுது அணை....இதையும் அண்டை கட்டி நீர்பாய்ச்சுவது என்று கூறுவார்கள்.

இப்போது போதுமான அளவிற்கு அணை கட்டியாயிற்று...அது மட்டுமல்ல அன்று சென்னை மகாணம்...தமிழகம், கர்நாடகம், கேரளம், ஆந்திரா என அனைத்து மாநிலங்களும் உள்ளடக்கிய மாநிலம் இன்று அவைகள் தனித்தனி மாநிலங்கள்...

அந்த மாநிலங்களில் இருந்து தான் நமக்கே தண்ணீர் வரவேண்டும்...உண்மையில் பார்க்கப்போனால் கடலில் கலக்கவேண்டிய இடம் தமிழகம் கடலோரப்பகுதி...அவர்கள் பயன்படுத்திய உபரிநீர் தான் இங்கு வந்து நாம் கட்டியுள்ள அணைகளில் நிரம்புகிறது. அதாவது அவர்கள் பயன்படுத்திய மிச்ச மீதி நீர்...

இல்லையென்றால் அங்கே வெள்ளம் என்றால் வெளியேற்றப்படும் உபரி நீர் இங்கு வருகின்றன. இங்கு அணைகள் நிறம்புவதற்கு கூட ஆட்சியாளர்களின் ராசிகள் பார்க்கப்படுகின்றன. எப்படி?

இவருடைய ஆட்சி காலத்தில் (மேட்டூர் அணை)ஒரு முறை தான் அணை நிரம்பியது முழுக்கொள்ளளவை எட்டியது. இவருடைய ஆட்சிகாலத்தில் ஒரு முறை கூட கொள்ளளவை எட்டவில்லை...

அப்படியானால் அணை நிரம்புவதற்கே ராசிகள் என்னும் மூடநம்பிக்கைகள் தேவைப்படுகிறது. அந்த அளவுக்கு நீர் வரத்து குறைவு. பருவ மழை பொய்த்துபோனது.

இங்கு எதற்கு இன்னும் அணைகள் அப்படி ஏதாவது கோரிக்கைகளை வைக்கப்பட்டதா? அப்படி எந்த விவாசாயியும் கோரிக்கை வைத்ததாக செய்திகள் இல்லை.

நீர் மின்சாரத்திற்காக மட்டும் வேண்டுமானால் அணைகள் கட்டலாம் அதுதான் கட்டுப்பட்டுள்ளதே. அதற்கே நீர் வரத்து இல்லை..இங்கு கங்கையா? பிராவாகம் எடுத்து ஒடுகிறது. தண்ணீர் ஒட்டம் இல்லாமல் அணை கட்டி வீண் தான். அப்படி இருந்தால் அரசாங்கம் தாரளமாக கட்டும் காரணம் இங்கு மின்சாரப்பற்றாக் குறை அதிகம் உள்ளது.

அதை அண்டை மாநிலங்களில் இருந்து பெறுகிறோம். இங்கு அணை கட்டக்கூடிய அளவுக்கு நீர் வரத்து இருந்தால் உடனடியாக கட்டி அந்த மின்சாரத்தை இங்கு தயாரிக்கலாம்..விவசாய நிலங்களுக்கும் பயன்.

அப்படிப்பட்ட நிலை எங்காவது உள்ளதா? அது தான் கேள்வி?

மிஞ்சி மிஞ்சிப் போனால் வற்றிய ஆறுகளின் மேல் தான் அணைகள் கட்டவேண்டும். வெள்ளம் ஏற்பட்டால் தன் ஒரு மாதம் இரண்டு மாதத்திற்கு தண்ணீர் வரும். மீதி நேரம் அது வரண்ட ஆறுதான்.

அப்படியே கட்டினாலும் அது பாலம்.

மேம்பாலமே இங்கு போக்குவரத்திற்காக எக்கச்சக்கமாக ஒன்றின் மேல் ஒன்றாக கட்டும் பொழுது...(அப்பொழுதும் போக்குவரத்து நெரிசல் குறைந்த பாடில்லை..வாகன பெருக்கம் தான்) அணை கட்டுவதா பெரிய விஷயம்...அசால்ட்டா கட்டி விட்டுப் போகப்போகிறார்கள்.

இந்த நவீன தொழில்நுட்ப காலத்தில் இதுவா பெரிய விஷயம்?

அப்படி எந்த இடத்திலும் நீர் பெருக்கெடுத்து வீணாக ஒடி கடலில் கலக்கவில்லை..

பாசனத்திற்காகவோ நீர் மின்சாரம் தயாரிக்கும் அளவுக்கோ இங்கு நீர் வரத்து இல்லை..பற்றாக்குரைதான் உள்ளது.

அதற்காகத்தானை இங்கு அண்டை மாநிலத்திடம் கையேந்திக் கொண்டிருக்கின்றனர்.

எந்த நதியும் இங்கு உற்பத்தியாகவில்லை..எல்லாம் அண்டை மாநிலங்களில் தான். அவர்களே அங்கே மாறி மாறி அணை கட்டிக் கொண்டு விடுகின்றனர்.இன்னும் கட்டிக் கொண்டுவருவதாக கேள்வி...

அந்த மாநிலங்களே கூட சில பக்கத்து வட மாநிலங்களிடம் சண்டை போட்டு நீரை பங்கு போட்டுக்கொள்கின்றன... (சந்திரபாபு நாயுடு கைதானாது இதற்காகத்தான்)...இப்போது நாம் பங்கு போடுவது இவர்களிடம் தான்...அதாவது அவர்கள் அங்கிருந்து (வடநாட்டிலிருந்து) பங்கு போட்டு வாங்கிய நீரை அவர்கள் பயன்படுத்தியபின் மிச்சம் மீதி இருந்தால் விடுவதை கொஞ்சம் ஏத்திக்கொடு என்று சண்டைப்போட்டு கொண்டிருக்கிறோம்.


இந்த நிலையில் எங்கே? இதுவரை கட்டப்பட்ட அணைகளில் வெள்ளம் வழிந்தோடியது. அதன் பாசனப்படுதிகளின் தேவையையே அந்த அணைகளால் பூர்த்தி செய்யமுடியவில்லையே.

அதற்காகத்தான் ந்திகளை தேசியமயமாக்கவேண்டும்...அனைத்து ந்திநீர் இணைப்பு...என்ற கோரிக்கைகள் எழுந்து கொண்டிருக்கின்றன.



நம்பி said...

தொடர்ச்சி.....

நீங்கள் சொல்லுகின்ற அணைகளின் நீர் கொள்ளளவு எப்பொழுதெல்லாம் நீர் கொள்ளளவை எட்டுகிறது...எவ்வளவு? நீர் வருடம் முழுவதும் வெளியேறுகிறது...எவ்வளவு பாசனம் நடைபெறுகிறது? என்பதை கணக்கிட்டுப்பார்த்தாலே தெரியும். அணைப் பக்கம் போய் அங்கிருந்து வெளியேறும் நீரைப் பார்த்தாலே புரியும். அந்த தம்மாத்தூண்டு தண்ணியை வைச்சு இன்னொரு அணை எங்கிருந்து கட்டுவது. பக்கத்தில பக்கத்தில அணை கட்டி என்ன பன்றதுக்கு...? தண்ணீர் எப்படி சேரும்? புரியலை?...

Gokul said...

//இப்போது போதுமான அளவிற்கு அணை கட்டியாயிற்று...//

அப்படியா... இப்போதைக்கு போதுமான அளவு அணை கட்டி இருந்தால் ஏன் ஒவ்வொரு மழைக்கலதிற்கும் தமிழகம் மிதக்கிறது? எத்தனை மழை நீர் வீணாக கடலில் சேருகிறது? மழை காலத்தில் ஒவ்வொரு வருடமும் பயிர்கள் / குடிசைகள் நாசமாவதற்கு என்ன நிரந்தர தீர்வு, ஏதாவது இந்த தி.மு.க / அ.தி.மு.க ஆட்சியில் செய்து இருக்கிறார்கள்?
//அப்படியானால் அணை நிரம்புவதற்கே ராசிகள் என்னும் மூடநம்பிக்கைகள் தேவைப்படுகிறது//
அணைகள் நிரம்புவதற்கு ராசி தேவைபடுகிறதோ இல்லையோ சென்னையும் / தமிழகமும் நிரம்புவதற்கு ராசி எதுவும் தேவைப்படவில்லை, ஜெயலலிதா / கருணாநிதி .எம்.ஜி.ஆர் என எல்லா ஆட்சிகளிலும் வறட்சியும் வெள்ளமும் இருந்து கொண்டேதான் இருக்கிறது.
"இங்கு எதற்கு இன்னும் அணைகள் அப்படி ஏதாவது கோரிக்கைகளை வைக்கப்பட்டதா? " ஒவ்வொரு முறையும் வெள்ளத்தில் நாசமான பயிர்களுக்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்களே.. அதுதான் அவர்கள் செய்வார்கள் ..அணையோ / மற்ற நிரந்தர தீர்வோ ஆட்சியாளர்கள் தான் செய்ய வேண்டும். மக்கள் "இலவச டி.வி வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்களா?
//அண்டை மாநிலங்களில் தான். அவர்களே அங்கே மாறி மாறி அணை கட்டிக் கொண்டு விடுகின்றனர்//
காவிரி விஷயத்தில் இதற்கும் காரணம் கருணாநிதிதான். கர்நாடக கபினி, ஹேரங்கி, சொர்ணவதி போன்ற அணைகளை மத்திய அரசின் முறையான அனுமதியின்றி கட்டியபோது வாய் மூடி இருந்தவர் இவரே. பிறகு தாமதமாக போடப்பட்ட வழக்கையும் withdraw செய்தவரும் இதையே. இதற்கு இதுநாள் வரை அவர் பதில் சொல்லவேயில்லை. அணை கட்டுவதற்கே கர்நாடகவுக்கு பிரச்சினை குடுத்து இருந்தால் , பின் control அவர்களிடம் முழுமையாக இருந்து இருக்காது.

Gokul said...

ராஜேஷ்,
//இங்கே அவர் ஜெயலலிதாவை இழுக்க காரணம் உங்களின் வரிகள் - கருணாநிதி எதுவும் செய்யல , அதுவா வளர்ச்சி அடைந்ததுனு நீங்க சொன்ன வரிகள் தான்..//
நான் எங்கே ஜெயலலிதாவை குறிப்பிட்டேன். நான் என்னவோ "புரட்சி தலைவி வாழ்க' என்று கோஷம் போட்ட மாதிரி இருக்கிறது :-).

//அணைகள் கட்ட அப்போது போதிய நதிகள் ஆறுகள் இருந்தது// அதுதான் பிரச்சினை , மக்கள் தொகை பெருக்கமும் ஒரு காரணம் என்றாலும், இப்போது ஆறுகள் 'மறைந்து' போனது ஆட்சியாளர்களின் அலட்சியம் ஒரு காரணம்தான். பாலம் மட்டும் இப்போது தேவை அணைகள் தேவை இல்லை என்றால் (ஏனென்றால் ஆறுகளே இப்போது இல்லை மறைந்து போய்விட்டது) என்று சொன்னால் sorry...//எட்டிக்கி போட்டினு, சாத்தியம் இல்லாத இடத்தில் அனைபோடுவது இல்லை// சாத்தியமே இல்லாத நிலை உருவாகி விட்டது ஏன் என்பதுதான் என் ஆதங்கமே.

//டைடல் paark முதல் பல்வேறு தொழில் சாலைகள் தமிழகத்துக்கு வந்து கலைஞ்சர் ஆட்சியில்.. வந்த வாய்ப்புகளை விரட்டியவர் ஜெ / சசி.//

வந்த வாய்ப்புகளை விரட்டியவர் ஜெ/சசி என்பது சரி. ஆனால் நான் சொல்ல வருவது தமிழகத்திற்கு இத்தனை தொழிற்சாலைகள் வந்ததிற்கும் , மற்ற வேலை வாய்ப்பிற்கும் பலமான காரணங்கள் மூன்று.
1. காமராஜ் ஆட்சியில் பள்ளி கல்வியை பரவலாக்கியது.
2. எம்.ஜி.ஆர் ஆட்சியில் வந்த +2 கல்வி முறை மற்றும் தொழிற்கல்வி பரவலாக்கம்.
3. தமிழர்களுக்கு உள்ள தொழில் ஒழுக்கம் (discipline).

இந்த தூண்களின் மேலேதான் தொழிற்சாலைகளை / டைடல் பார்க்குகளை கொண்டு வர முடிந்தது. இதில் கருணாநிதி எந்த தொழிற்சாலையும் கொண்டு வரவில்லை என்று கூறவில்லை, அது relatively (கவனிக்க ஒப்பு நோக்க மட்டுமே) எளிதான விஷயம் (அதுவும் ஜெ செய்யவில்லை என்பதையும் நான் ஒப்புக்கொள்கிறேன்). ஆனால் தமிழகத்தில் கொண்டு வர கஷ்டமான விஷயங்களை (உ.த. ஏற்கனவே குறுகும் விவசாய நிலங்களை காப்பாற்றுதல், மணல் கொள்ளையை தடுக்காதது, குடிபழக்கத்தை மிதமிஞ்சி ஊக்குவிப்பது) செய்யாதது)

நம்பி said...

Gokul said...

//அப்படியா... இப்போதைக்கு போதுமான அளவு அணை கட்டி இருந்தால் ஏன் ஒவ்வொரு மழைக்கலதிற்கும் தமிழகம் மிதக்கிறது? எத்தனை மழை நீர் வீணாக கடலில் சேருகிறது? மழை காலத்தில் ஒவ்வொரு வருடமும் பயிர்கள் / குடிசைகள் நாசமாவதற்கு என்ன நிரந்தர தீர்வு, ஏதாவது இந்த தி.மு.க / அ.தி.மு.க ஆட்சியில் செய்து இருக்கிறார்கள்? //

கவலை அணைகளை பற்றியா? அல்லது மழை நீர் வடிகால் பற்றியா...? தெரியவில்லை...அதற்கு எதற்கு அணைகள் என்பதும் புரியவில்லை...?

மழைநீர் வடிகால்...மழைநீர் சேமிப்பு குளங்கள், ஏரிகள், கம்மாய்கள் தூர் வாரப்படுகின்றன..நமக்கு நாமே திட்டம் இருக்கிறது...ஜவகர் வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் வருடா வருடம் அந்தந்த பகுதி மக்களாலேயே சீர்படுத்தும் பணிகள் வருடந்தோறும் நடைபெறுகிறது.

தமிழகத்தில் மொத்தம் எத்தனை அணைகள் மற்றும் நிர்த்தேக்கங்கள் உள்ளன..அவைகள் எந்தெந்த? காலகட்டங்களில் கட்டப்பெற்றன...அவற்றில் ஏதெது? பாசனத்திற்காக கட்டப்பட்டது...எதெது? நீர் மின்சார உற்பத்திக்காக பயன்படுகின்றன?...

அவைகளின் கொள்ளளவு என எல்லாமும் படங்களுடன் வைக்கப்பட்டுள்ளது. தமிழில் நீர்ப்பாசனத்துறை பற்றியான அறிக்கையும் அரசால் வைக்கப்பட்டுள்ளது. செயல் திட்டங்களும் வைக்கப்பட்டுள்ளன. அதன்பிறகு ஏதாவது டவுட் இருந்தால் வைக்கவும்.


தமிழக அணைகள் (படங்களுடன்)...தமிழக அரசு

http://www.wrd.tn.gov.in/Dams.htm

அணைகள் சீரமைப்புத் திட்டப்பணிகள் 5 மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு தேர்வு செய்ப்பட்டமை குறித்த 2010 அறிக்கை (DRIP)
http://www.wrd.tn.gov.in/DRIP_details.pdf




எல்லாவற்றயும் இங்கு பார்த்துவிட்டு ஏதாவது அணை கட்ட கோரிக்கைகள் எந்த விவாசாயிகள் சங்கமாவது வைத்துள்ளதா? என்பதையெல்லாம் குறிப்பிடலாம். காமராஜர் காலத்து விவாசாயி சங்கமானாலும் சரி, கம்யூனிஸ்டு, திராவிட சங்கமானாலும் சரி யாராவது கோரிக்கை வைத்திருக்கிறார்களா எனப்தையும் வைக்கலாம். அப்படி வைத்து செய்யாமல் யாரும் விடவில்லை.

அணைகள் திமுக காலத்திலும் கட்டப்பட்டுள்ளன...அதே போல் எத்தனை? அணைகள் எந்தெந்த காலத்தில் கட்டப்பட்டுள்ளன...எத்தனை நீர்தேக்கங்கள் இருக்கின்றன...எத்தனை கி.மீ பாசன வசதி பெருகின்றன...என்னென்ன நடவடிக்கைகள் எந்தெந்த காலத்தில் நடைபெற்றன என்பதை எல்லாம் இங்கு போய் நன்கு ஆராயந்து விட்டு வந்து பதிவிட்டால் நலம்.

நம்பி said...

தொடர்ச்சி.....
தமிழ்நாடு நீர்வள ஆதாரத்துறை அறிக்கை
http://www.iamwarm.gov.in/Tamil%20pdf/WRD.pdf

நீர்வள நிலவளத்திட்டம் தமிழ்நாடு அரசு (தமிழ்)

http://www.iamwarm.gov.in/tamilmain.htm

நம்பி said...

திராவிட ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட அணைகள்
(திமுக, அதிமுக.....) சென்னை மண்டலம் மட்டும்

1 மணிமுக்தாந்தி அணை 1970
2 சின்னார் 1977
3 பாம்பார் 1983
4 தும்பளஹல்லி 1983
5 வாணியார் 1985
6 கேசர்குளிஹால்லா 1985
7 ஷூலகிரிசுண்ணார் 1986
8 தொப்பியார் 1986
9 நாகவதி 1986
10 கேளவர்பள்ளி 1993
11 ராஜதொப்பிகானார் 1997
12 மோர்தானா 2001
13 மிருகன்தந்தி 2005
14 செண்பகதோப் 2007
15 வர்ட்டார் வள்ளிமதுரை 2007
16 ஆண்டியப்பணூர் ஓடை 2007

அதற்கு முன் அணைகளாக, நீர்தேக்கங்களாக இருந்தவை பத்து மட்டுமே (சென்னை மண்டலம் மட்டும்) (1923-1965 வரை)

நம்பி said...

தொடர்ச்சி..2

மதுரையில் மட்டும் 25....திராவிட ஆட்சிகாலத்தில் கட்டப்பட்டவைகள்

மஞ்சளார் அணை...1967, சித்தார்1...1972....நாகரியார் சாஸ்தா கோயில் 2004 என மொத்தம் 25 மேலான அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள்.

நம்பி said...

தொடர்ச்சி...4
இன்னும் பொள்ளாச்சி மற்றும் திருச்சி மண்டலங்களை உள்ளடக்கிய அணைகள் மற்றும் நிர்த்தேக்கங்கள் மொத்தம் 27...அதற்கு முன் இவைகள் இரண்டு மூன்று அல்லது 5 இருக்கும்.

நம்பி said...

காங்கிரஸ் மற்றும் ஆங்கிலேயர், ராஜா (சோழர்) ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட மொத்த அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள்...எண்ணிக்கை மொத்தம் 16 மட்டுமே...(....1926...1966)

திராவிட ஆட்சிகாலத்தில் கட்டப்பட்ட மொத்த அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் எண்ணிக்கை 62. (1967-2010)

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]