வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, February 20, 2010

சோ கூட்டம் சங்கராச்சாரியார் விஷயத்தில் என்ன எழுதுகிறது

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் படுகொலை வழக்கில் காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி, ஜூனியர் விஜயேந்திர சரஸ்வதி முக்கியக் குற்றவாளி பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.


இதில் 370 சாட்சிகள் விசாரிக்கப்பட வேண்டியுள்ளன. இதுவரை 59 சாட்சிகள் விசாரிக்கப்பட்டதில் 30 சாட்சிகள் பிறழ்-சாட்சி யாக -_ பல்டி அடித்துள்ளனர் என்பது அதிர்ச் சிக்குரியதாகும்.

மிக முக்கியமான வழக்கில், இந்தியா முழு-மையும் அறியப்பட்ட வழக்கு ஒன்றில் இத்-தனைப் பேர் பிறழ் சாட்சியாக அமைந்திருப்-பது இதுதான் முதல் தடவை என்று கூறப்படுகிறது.

அதுவும் படுகொலை செய்யப்பட்ட சங்கரராமன் துணைவியார் மற்றும் குடும்-பத்தினர் இந்தப் பிறழ்சாட்சிப் பட்டியலில் இடம் பெறுவது மேலும் அதிர்ச்சிக்குரிய-தாகும்.

தொடக்கத்தில் இவர்கள் ஜெயேந்திரர் மீது எத்தகைய குற்றச்சாற்றுகளை எல்லாம் பகிரங்கமாகத் தெரிவித்தனர் என்பது பொது மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

இந்தப் பல்டிகளுக்கான காரணங்கள் ஆரா-யப்பட வேண்டும். இல்லாவிட்டால் பரவ-லாக மக்களால் பேசப்படும் ஒரு வழக்குக்கே இந்தக் கதி என்றால், மற்ற மற்றவைபற்றி மக்கள் மத்தியில் எத்தகைய மதிப்பினைப் பெறும் என்பது மிகவும் முக்கியமாகும். பிறழ் சாட்சி சொன்னால் தண்டனையும் உண்டு; அந்தக் கண்ணோட்டத்திலும் இது அணுகப்பட வேண்டும். கொலை வழக்கு மட்டுமல்ல; பாலியல் தொடர்பான சமாச்-சாரங்களும் உண்டு; அவற்றின் மீதும் வழக்-குத் தொடுக்க அதிக வாய்ப்புகள் உண்டு. பாதிக்கப்பட்டவர்களே பட்டாங்கமாய் செதிர்-காயைப் போல உடைத்துக் காட்டியிருக்-கிறார்கள்.

பொது மக்கள் மத்தியில் இவ்வளவு அவமானப்பட்டும்கூட கொஞ்சமும் அதுபற்றி வெட்கப்படாமல் லோகக் குருக்கள் ராஜநடை போட்டுத் திரிகிறார்கள். இதில் பவள விழாவாம். பதாகைகள் ஊரெங்கும்.


ஊருக்கெல்லாம் உபதேசம் செய்யும் சோ கூட்டம் சங்கராச்சாரியார் விஷயத்தில் அநீதி இழைக்கப்பட்டு இருக்கிறது என்று எழுது-கிறது. பார்ப்பனப் பாசம் பட்டுத் தெறித்தது போல் பளிச் சென்று தெரியவில்லையா?

எவ்வளவுக் கேவலமாக நடந்து கொண்-டாலும், ஊர் சிரித்தாலும் தங்களவாளை எப்படியெல்லாம் பார்ப்பனர்கள் தூக்கி நிறுத்து-கிறார்கள் என்பதைப் பரிதாபத்துக்குரிய பார்ப்-பனர் அல்லாதார் புரிந்து கொள்வது எக்காலமோ!

விடுதலை ஞாயிறு மலர் (20.02.10)

7 comments:

ttpian said...

veeramany swamigal joined hands with karunanidhi swamigal and forgot to wipe out bramanism in tamilnadu...being the reaon,peopl e like cho will ask thse people to clean their toilet!

Thamizhan said...

பார்ப்பனர்கள் மாறிவிட்டார்கள்.குறை சொல்லிக்கொண்டே இருக்காதீர்கள் என்று கூறிவரும் அருமைத் தமிழர்களே.இது ஒரு காஞ்சி சுப்பிரமணியின் வழக்கல்ல.
சோமாரி,நரசிம்ம ராம்,பார்ப்பன அடிமைகளாகிவிட்ட
பிறப்பால் தமிழர்களாக இருக்கும் பத்திரிக்கையாளர்கள்
அனைவரும் சாட்சிகள்.
ஆழமானக் குழியைத் தோண்டிக் கொண்டுள்ளனர்.
வெட்கமில்லாமல் ஊரைச் சுற்றிவரும் கோவில் காளைக்கு வாழைப் பழம் கொடுக்கும் பக்த கோடிகள்
பாவம், பரிதாபத்திற்குரியவர்கள்.

Unknown said...

நீங்கள் சொல்லுவது சரிதான் ....இந்த நங்கநல்லூர் பார்பான்கள் அந்தே ஏரியா பக்கம் போனாலே பெரிய பெரிய சுவரொட்டிகள் அதில் இந்த மானம் கேட்ட சுப்ரிமனியன் போட்டா. அதில் வாசகம் என்ன வென்றால் மகா பெரியாவ என்று..மகா அயோக்கியனுக்கு பட்டம் மகா பெரியவா ....என்ன சொல்ல ... என்றுதான் நமவர்களுக்கு விளிபுனர்வுவந்து விழித்துக்கொள்ள போகிறார்களோ. வெட்கம் தான்.............

Unknown said...

மிக முக்கியமான வழக்கில், இந்தியா முழு-மையும் அறியப்பட்ட வழக்கு ஒன்றில் இத்-தனைப் பேர் பிறழ் சாட்சியாக அமைந்திருப்-பது இதுதான் முதல் தடவை என்று கூறப்படுகிறது.////
உண்மை தான். மதுரை தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டு, மூவரின் மரணத்திற்கு காரணமானவர்கள் விடுதலை செய்யப்பட்டுட்டாங்களே.

Muthukumara Rajan said...

ஒருவர் மேல் வழக்கு இருந்தா மட்டுமே அவர் குற்றவாளி என்பது பொருள் அல்ல

வழக்கு இருந்தால் அவர் குற்றவாளி என்றால் தமிழ் இன தலைவர் என தற்போது இருக்கும் தலைவர்கள் எல்லோரும் குற்றவாளி தான்.

உங்கள் அரசியல்வாதிகள் வழக்குகளில் சாட்சிகள் பல்டி அடித்து சாட்சி சொன்ன நிகழ்வுகளை
அழகாக மறைத்து விட்டு விட்டேர்கள்

வாழ்க பகுத்தறிவு

நேர்மையுடன்
முத்துக்குமார்

பரணீதரன் said...

நீங்க நக்கீரன் பதிப்பகம் வெளியுட்டுள்ள 'அவரும் நானும்' ரவிசுபிரமனியன் எழுதின நூலை படியுங்க...அப்புறம் இந்த மகா பெரியவா குற்றவாளியா இல்ல காம லிலை பண்ணினவர...இல்ல நில மோசடி செய்தவர...இல்ல கொலகாரண ..இப்படி பல உண்மை தெரியும் ...அப்புறம் தீர்மநிசுகங்கோ......

Muthukumara Rajan said...

என் இனிய நண்பரே

நான் மேல குரிய என்னது கூற்றில் ஜெயேந்திரர் நல்லவர் என சொல்லவில்லை
தாங்கள் ஜெயேந்திரர் மீது காட்டும் சமூக அக்கறையை என் பிற
மோசமான (ஜெயேந்திரர் வழக்கை விட ) , சமுகத்துக்கு தீங்கு விளைவிக்கின்ற வழக்குகளை பற்றி பேசுவது இல்லை .

lallu
இவர்கள் அந்த வழக்குகளை பற்றி எல்லாம் பேச மாட்டார்கள் . அதை செய்தது அவர்களின் பகுத்தறிவு பாசறையின் காவலர் அல்லவா ..

மேலும் தினகரன் அலுவகத்துக்கு நடந்தது போல் தங்களுக்கும் நிகழும்மோ என்ற பகுத்தறிவு

நேர்மையுடன்
முத்துக்குமார்

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]