வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Sunday, February 28, 2010

சோ ராமசாமி! அவசரத்தில் மறந்துபோய்ட்டாளோ!

நீங்கள் ஒரு பழைமைவாதியா என்ற கேள்வி ஒன்றுக்கு திருவாளர் சோ ராமசாமி இவ்வார துக்ளக்கில் கீழ்க்கண்டவாறு பதிலை எழுதியுள்ளார்.

ஆமாம், உண்மைதான். பல பழைய விஷயங்கள் திரும்பவேண்டும் என்று விரும்புகிறவன்தான் நான். ஊழல் இல்லாத நிலை; நீதித்துறை உள்பட எல்லாத் துறைகளிலும் நேர்மை; அரசு அதிகாரிகள் ஆளும் கட்சி ஊழியர்களாகவும், போலீஸார் ஆளும் கட்சியின் அடியாட்களாகவும் செயல்படாத நிலை; மாணவர்கள் ஒரு கட்டுப்பாட்டோடு நடந்துகொண்ட நிலை; ஆசிரியர்கள் பணியைப் புனிதமாகக் கருதிய நிலை.... இப்படி பல பழைய விஷயங்கள் திரும்பி வந்தால் எனக்கு மகிழ்ச்சிதான்.

(துக்ளக், 3.3.2010).



ஏன் அதோடு நிறுத்திவிட்டார் அக்கிரகாரத்தின் ஸ்வீகார புத்திரர்?

பழைய வர்ணாசிரமப்படி, மனுதர்ம சாஸ்திரப்படி சூத்திராள் படிக்கக் கூடாது; பிராமணாளுக்குத் தொண்டூழியம் செய்து கிடப்பதே அவாளின் மோட்சத்திற்கு மார்க்கம்.

ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படவேண்டும்.

பழைய சென்னை மவுண்ட் ரோடில் பிராமணாள் உணவு விடுதிகளில் தொங்கிய விளம்பர போர்டுகள் மறுபடியும் இடம்பெறவேண்டும்.

பஞ்சமர்கள், தொழுநோயாளிகள், நாய்கள் உள்ளே நுழையக்கூடாது என்ற அந்தப் பழைய வாசகங்கள் அதில் இடம்பெறவேண்டும்.

ரயில் நிலையங்களில் பிராமணாள், சூத்திரா ளுக்குத் தனித்தனி உணவுக்கான இடங்கள்.

உயர்ஜாதிக்காரர்கள் வீதியில் பஞ்சமர்கள் நடக்கக்கூடாது.

கல்லூரி விடுதிகளிலும், நீதிமன்றங்களிலும் பிராமணாள், சூத்திராளுக்குத் தனித்தனி தண்ணீர்ப் பானைகள் வைக்கப்படவேண்டும்.

மனைவியைப் புருஷன் அடிப்பது குற்றமல்ல என்று தீர்ப்பு சொன்னாரே நீதிபதி முத்துசாமி அய்யர் வாள் _ அதெல்லாம் சட்ட ரீதியாகக் கொண்டு வரப் படவேண்டும்.

தமது பிறந்த வயதைத் திருத்தி தலைமை நீதிபதியாக பதவியை நீட்டித்துக் கொண்டாரே ஜஸ்டிஸ் ராமச்சந்திர அய்யர் _ நீதித்துறைக்கு அத்தகைய வரைத்தான் எடுத்துக்காட்டாகக் கொள்ளவேண்டும்.

கொலைக்குற்றம் சாற்றப்பட்ட மட்டப்பாரை வெங்கட்ராமய்யர் மீதான வழக்கை ஆச்சாரியார் வாபஸ் வாங்கியதுபோல பார்ப்பனர்கள் எந்தக் குற்றம் செய்தாலும் அவர்கள்மீது வழக்கு _ கிழக்கு என்று போடப்படக்கூடாது.

சங்கராச்சாரியார் கொலை செய்திருந்தாலும், அவாளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று சொல்ல வேண்டும்.

ஆச்சாரியார் ஆட்சியில் (1937_39) அமைச்சர் டி.எஸ்.எஸ். ராஜன் அய்யங்கார் 200 மூட்டை நெல்லை வெளி ஜில்லாவுக்குக் கொண்டு போய் விற்பனை செய்தார். அதையும் அமுக்கினார். பிரதம அமைச்சர் ஆச்சாரியார்; நேர்மை என்றால், இப்படித்தான் இருக்க வேண்டும்.

முந்திரா ஊழல் போன்ற பெரிய பெரிய ஊழல் களில் அல்லவா அமைச்சர்கள் ஈடுபடவேண்டும். அதை விட்டுவிட்டு அற்ப சொற்ப ஊழல்களில் ஈடுபட லாமா?

அதனால்தான் பழைமை என்பது எப்பொழுதுமே நல்லது.

பழைமை விரும்பி என்று தம்மீது முத்திரை குத்திக் கொள்ளும் திருவாளர் சோ ராமசாமி இவற்றையெல் லாம் சேர்த்துக் கொள்ளவேண்டியது தானே _

அவசரத்தில் மறந்துபோய்ட்டாளோ!

- கருஞ்சட்டை விடுதலை (28 .02 .10 )

4 comments:

ELIYAVAN said...

Who is that Ramachandra Iyer (judge)?

பரணீதரன் said...

சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்தவர் ராமச்சந்திர அய்யர் என்ற பார்ப்பனர் அவர் தன் பதிவேட்டில் பிறந்த தேதியைத் திருத்தி பதவியை நீட்டித்துக்கொண்டார். தந்தை பெரியார் சென்னைக் கடற்கரைக் கூட்டத்தில் இந்தக் குட்டை உடைத்தவுடன், விடுப்பில் சென்று அப்பொழுது குடியரசுத் தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன் என்ற பார்ப்பனர் தயவால் எந்தவிதத் தண்டனைக்கும் ஆளாகாமல் சவுகரியமாகத் தப்பித்தார்.மேலும் 1964ல் ஒரு பைசா குறையாமல் ஓய்வு பலன்கள் அனைத்தையும் முழுச் சுளையாகப் பெற்றுச் சென்றார்.

Muthukumara Rajan said...

சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்தவர் ராமச்சந்திர அய்யர் பற்றி என்னக்கு தெரியாது ஆனால் பிறந்த தேதி ஒன்றும் பள்ளியில் சேர மற்றும் ஒரு தேதியும் தமிழ்நாட்டில் பரவலாக தரப்படுகிறது. அவேர்கள் எல்லோரும் தண்டனைக்கு உரியவர்களே

நேர்மையுடன்
முத்துக்குமார்

Kartheesan said...

ஏன் இவ்வளவு கடுமை வார்த்தைகளில், திரு. சோ அவர்கள் நாகரிகமாக தனது மனதில் பட்டதை சொல்லியிருக்கிறார். அவர் கூறிய கருத்துக்கள் போல நடந்தால் நீங்கள் வேண்டாம் என்று சொல்வீர்களா? குலகல்வி, குலதொழில் என்று சொல்லும், எதிர்க்கும் நீங்கள் குல அரசியலை மட்டும் கண்டும் காணாமல் விட்டு விடுவது ஏன்? சோ மனதில் நினைக்காததை, அவர் மனதில் இப்படிதான் நினைப்பார் என்று நீங்கள் எப்படி சொல்லலாம்? மற்றவர் மனதை படிக்கும் நபர் நீங்கள்தானோ?
Rgds \Kartheesan

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]