வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, February 24, 2010

பவளவிழா இந்த ஜென்மத்துக்கு ஒரு கேடாம்!

உலகத் தமிழ் செம்மொழி மாநாட் டிற்கு சமயச் சான்றோர்களையும், மடாதிபதிகளையும் அழைக்க வேண் டும்; ராம. கோபாலன் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.


ஹிந்து தர்மம் தீண்டாமையை ஆதரிக்கவில்லை.

அனைத்துப் பிரிவு மக்களும் தங் களுக்குள் ஜாதி பாகுபாடு பார்க்கக் கூடாது.
ஹிந்து தர்மத்தை நிலைநாட்ட சாத்வீகமான முறையில் நாம் முயற்சி செய்தாலே நம்மை தீவிரவாதிகள் என்கிறார்கள். தீவிரவாதிகளை நல்லவர்களாகப் பார்க்கிறார்கள் - இன்றைய அரசியல்வாதிகள்.- இவ்வளவையும் தம் திருவாயிலிருந்து (?) அருளியிருப்பவர் வேறு யாருமல்லர். இ.பி.கோ. 302, 120-_பி, 34, 201 ஆகிய குற்றப் பிரிவுகளில் கைதாகி, 61 நாள்கள் வேலூர் சிறையில் கம்பி எண்ணி, இப்பொழுது ஜாமீனில் வெளி வந்து திரிந்து கொண்டிருக்கும் சாட்சாத் மாஜி சங்கராச்சாரியார் திருவாளர் ஜெயேந்திர சரஸ்வதிதான். (பேட்டி காமகோடி பிப்ரவரி 2010)

கொலை வழக்கில் மட்டுமல்ல; - அரு-வருப் பான வகையில் பாலியல் சமாச்சாரங்-களிலும் கேவலமாகப் பேசப்பட்டவரும் இவரே!

பவளவிழா என்று சொல்லி ஊருக்கு ஊர் விழாவும். இந்த ஜென்மத்துக்கு ஒரு கேடாம்!

பெரிய அறிவாளி என்ற நினைப்பில் பேட்டி வேறு கொடுக்கிறார்.

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்குச் சமயச் சான்றோர்களையும், மடாதிபதிகளையும் அழைக்க வேண்டுமாம்.

இவர் கூற்றுப்படி தவத்திரு குன்றக்குடி அடிகளார் அழைக்கப்பட்டால் போதும்-தானே? ஏற்றுக்கொண்டு முடங்கிக் கிடக்க வேண்டியதுதானே?

தமிழ்ப் பற்று, தமிழில் புலமை, அருவி போல வெண்கல நாதத்தில் பேசும் திறன் உள்ள இவரை விட எந்த மடாதிபதி அழைக்கப்-படவேண்டும்?

கண்டிப்பாக காஞ்சி வகையறா சங்கராச்சாரி யார்களை அழைக்க முடியாது -_ கூடாது காரணம், பூஜை வேளையில் அவாள் தமிழ் பேசமாட்டார். காரணம் தமிழ் நீஷப்-பாஷையாம். அப்படி தமிழில் பேசிவிட்டால் ஒவ்வொரு முறையும் ஸ்நானம் செய்ய வேண்டும். அக்னிஹோத்திரம் தாத்தாச்சாரியார் இந்தக் குட்டைப் போட்டு உடைத்து-விட்டாரே!

2) ஹிந்து தர்மம் தீண்டாமையை ஆதரிக்க வில்லை என்று கூறியுள்ளார். இதாவது உண்மையா? தீண்டாமை க்ஷேமகரமானது என்று சொன்னவர் யார்? இவரின் மூத்தார் சாட்சாத் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ற மறைந்த சங்கராச்சாரியார்தானே?

(ஆதாரம்: சிறீ ஜெகத்குருவின் உபதேசங்கள் (2ஆம் பாகம்)

அவரை விட்டுத் தள்ளுவோம். தீண்டா-மைக்கு எதிராக காஞ்சிபுரத்துக்கும் கல்கத்தாவுக்கும் வாயை அகலத் திறக்கும் இதே ஆசாமி எப்படி நடந்து கொண்டிருக்கிறார்?

10.-11.2002அன்று மதுரை மாவட்டம் தும்பைப் பட்டிக்குச் சென்றார் ஜெயேந்திரர். அவ்வூர் முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்த ஊர். அவ்வூர் வீரகாளியம்மன் கோயிலில் வந்து இறங்கினார். அக் கோயில் பூசாரி தாழ்த்தப்-பட்ட சமூகத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவர். அவர் தீப ஆராதனை காட்டினார். அதனைக் கும்பிட்ட ஜெயேந்திரர் அவர் கொடுத்த பிரசாதத்தைப் பெற்றுக் கொள்ள-வில்லை. அவரை யாரும் நெருங்கிவிடாதபடி கவனித்துக் கொண்டனர் அவரின் பாது-காவலர்கள். சுவாமிகளை யாரும் தொட்டு-விடக்கூடாது என மைக்கில் திரும்பத் திரும்ப அறிவித்துக் கொண்டேயிருந்தனர். ஜெயேந்-திரரும் தன் தோளில் அணிந்திருந்த சால்-வையை எடுத்து தலித்துகள் தன்னைத் தீண்டி விடாதபடி கால்களை மறைத்துக் கொண்டார்.

கோயில் நிகழ்ச்சிக்குப் பின் கக்கன் நினைவு மண்டபத்துக்கு வந்து ஜெயேந்திரர் மாலை-யிடுவார் எனத் திட்டமிடப்பட்டு இருந்ததால், மக்களும் அங்கு காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அங்கு செல்லாமல் புறப்பட்டு-விட்டார். (நக்கீரன் 19-11-2002)

ஹிந்து மதத்தில் தீண்டாமைக்கு இடம் இல்லை என்பதற்காக இலட்சணம் இதுதானா?

ஜாதி பாகுபாடு பார்க்கக் கூடாது என்று பறைசாற்றுகிறாரே -_ பூணூல் என்பது ஜாதியின் சின்னம்தானே _ அந்த ஜாதியின் சின்னமான பூணூலை மூன்று கிலோ எடையுள்ள தங்-கத்தில் செய்து திருப்பதி ஏழுமலையானுக்கே அணிவித்த (கடவுளையே தம் ஜாதிக்குள் அடைத்த) மாபெரும் ஜாதி ஒழிப்பு வீரர் ஆயிற்றே இவர்?  (ஆதாரம் - மாலைமலர் 16-3-2002)

தீண்டாமை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பைப் பற்றி யார்தான் பேசுவது என்ற லஜ்ஜையே இல்லாமல் போய்விட்டதே!

(3) ஹிந்து தர்மத்தை நிலைநாட்ட சாத்வீகமான முறையில் நாம் முயற்சி செய்தாலே நம்மைத் தீவிர வாதிகள் என்கிறார்களே என்று மிகவும் தான் ஆதங்கப்படுவதாக அலட்டிக் கொள்கிறார். அடடா, இவர்களின் சாத்வீகம் பற்றி மக்களுக்குத் தெரியாதா?

1992 டிசம்பர் 6 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதே இந்த இந்துத்-துவாவாதிகளால் _ அதல்லவா சாத்-வீகத்துக்கான சாட்சாத் எடுத்துக்-காட்டு?

இந்தப் பெரிய மனுஷர் ஜெயேந்-திரர் என்ன சொன்னார் தெரியுமா? அயோத்தியில் கட்டடத்தை இடித்-தது கிரிமினல் நடவடிக்கை எனக் கூற முடியாது. இதற்காக மத்திய அமைச்சர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகி-யோர் பதவி விலகத் தேவையில்லை.  (தினமணி 27-11-2000)

அயோத்தியில் அயோக்கியர்கள் கூட்டம் இடித்தது முசுலிம் மக்களின் வழிபாட்டுத் தலம் அல்ல-வாம் _ வெறும் கட்டடம்தானாம்.

இப்படி சொல்பவர்கள்தான் சாத்வீக வாதிகளாம். அடேயப்பா, இவர்களின் வாயில் தப்பித் தவறிக்-கூட உண்மை என்பது பிரசவம் ஆகாதா?

21 ஆம் நூற்றாண்டின் பகுதியி-லும் மனித சமத்துவத்துக்கு எதிரான ஒரு கூட்டம் -_ அதற்கு ஒரு தலைவர் - அவருக்குப் பெயர் லோக குரு - _ அவர் கொலைக் குற்றவாளி என்ற பட்டியலிலும் இருப்பார் _ காம கே()டிகளாகவும் இருந்தாலும் பவளவிழா நாயகராக உலா வர முடிகிறது என்றால்,

இந்த ஆபாசத்தை என்ன சொல்ல? இந்தக் கூட்டத்தை என்ன பெயர் சொல்லி அழைக்க?

நன்றி: விடுதலை ஞாயிறு மலர் (20.02.10)

4 comments:

மதுரை சரவணன் said...

நல்ல பதிவு. புரியாது மக்களுக்கு.

Unknown said...

this is the truth! but unfortunately many of our people believe them only!

Muthukumara Rajan said...

தனக்கு டாக்டர் பட்டதை எதிர்த்த ஒரே காரணத்துக்காக ஒரு மாணவனை கொன்று , அவர் பெற்றவர்களே தன மகன் இல்லை என கூற வைத்த இந்தியன் வின் ஊழல் சக்கரவர்த்தி நாள் ஒரு
பிறந்த நாள் மற்றும் எல்லா விழா கொண்டாடலாம் அதற்கு தங்கள் இயக்கம் வாழ்த்து செய்தி அனுப்பும் .

தன்னுக்கு தண்டனை அளித்ததுக்கு கல்லூரி மாணவிகளை கொன்ற தலைவர்கள் பிறந்த நாள் கொண்டாடலாம்

நாடு அறிய பல பெண்களை கெடுத்தவர் பிறந்த நாள் கொண்டாடலாம்

ஓரு நகரையே ரவடிகள் நகரம் மாற்றியவர் தனக்கு எதிர்ராய் கருத்து கணிப்பு வெளியிட்ட நாளிதளின் அலுவலகத்தை தீயுட்டி அப்பாவி ஊழியர்களை கொன்ற தலைவர் பிறந்த நாள் கொண்டாடலாம்

மேல உள்ளவர்கள் பிறந்த நாள் கொண்டாடடுவது நாயம் என்றால் ஜெயேந்திர சரஸ்வதி பிறந்த நாள் கொண்டாடடுவது நாயம் தான்.

நண்பா ,
பெரியாரிடம் இருந்து மற்றவர்களை மதிக்க கற்று கொள்ளுகள் . அது இது என்றல்லாம் பெரியாரின் பெயரை சொல்லி கொண்டு சொல்லாதிர்கள் . பெரியார் எல்லா மக்களுக்கான தலைவர் . தயவு செய்து பெரியர்யாவது முழுமையாக படியுங்கள்

மேல குறிப்பிட்ட கருத்துகளை கொண்டு நான் ஜெயேந்திர சரஸ்வதி விசுவாசி என என்ன வேண்டாம் . நான் எந்த ஓரு கருத்து மற்றும் கொள்கைகோ பின்பற்றுவான் அல்ல .

நேர்மையுடன்,
முத்துக்குமார்

பரணீதரன் said...

நீங்க சொன்ன எல்லோரும் மனிதர்கள் என்று ஒப்புக்கொண்டு மக்களோடு மக்களாக வாழ்பவர்கள். மனிதன் குற்றம் செய்வது தண்டனை பெறுவது பிறகு திருந்தி நடப்பது எல்லாம் இயல்பு. அனால் நீங்கள் கூறம் மகா பெரியவக்கள் தன்னை என்ன என்று கூறி கொண்டு திரிகிறார்கள். இந்த பெரியவாகளிடம் சக்தி இருக்காம் மேலும் வேதம் சொல்லுது சாஸ்திரம் சொல்லுது ன்னு கூறி மக்களை ஏமாற்றி தாங்கள் தான் எல்லாம் என்று கூறு அயோக்கியர்கள். பக்தி என்ற பேரில் மக்களிடம் பார்ப்பனியத்தை வளர்க்கும் அயோக்கியர்கள். நீங்கள் சொல்லும் எல்லோரும் விமர்சனத்துக்கு உட்பட்டவர்கள். விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். அனால் இந்த அயோக்கியர்களை விமர்சனம் பண்ண பெரியார் தொண்டர்களை விட்டால் யாரும் கிடையாது. ஏன்னா இவுங்க சாமின்னு சொல்லி மக்களின் மூலையில் விளங்கு போட்டு வச்சுருக்கு பார்பனிய பாம்பு.

இத பற்றி சொன்னால் சொல்லி கொண்டே போகலாம் தோழரே........

உங்களுக்கு பெரியாரியல் புரியல நல்ல படிங்க தெளிவான வினா எழுப்புங்கள்....காமகோடிக்கு சப்போட்டு எடுத்து கழுவுற மீனில் நழுவுற மீனா பதில் கீழே கூறி உள்ளீர்கள்.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]