வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Monday, February 01, 2010

துக்ளக்குக்கு சோ பார்பானுக்கு ஒரு கடிதம்

துக்ளக் இதழிலும், ஜெயா தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சிகள் மூலம் சோ பெண்கள் அடிமைத் தனத்தையும் மூட வழக்கங்களையும் பிரசாரம் செய்து வருகிறார். பலமுறை விளக்கம் கொடுத்தும், வினா எழுப்பியும் எழுதிய கடிதங்களை பிரசுரிக்கவோ, தொலைக் காட்சியில் விளக்கம் அளிக்கவோ இல்லை. இத்துடன் துக்ளக் இதழுக்கு எழுதிய கடிதத்தின் நகலை அனுப்பியுள்ளேன். விடுதலை இதழில் பிரசுரிக்கும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.

_ப. தமிழ்மணி, திருநெல்வேலி- -_ 7.


இதோ அவரின் கடிதம் விடுதலையில் வெளிவந்தது.......என்ன அய்யோக்கியதன் மொட்டை சோவுக்கு....

ஜெயா டிவி_யில் சென்ற வாரம் எங்கே பிராமணன் நிகழ்ச்சியில்,

சுயமரியாதைத் திருமணம் நடத்துபவர்கள் அதை பதிவுத் திருமணமாக நடத்தினால் போதாதா ஏன் ஒரு விழாவாகக் கொண்டாட வேண்டும் என கேட்டீர்கள்.

திருமணத்தைப் பதிவு செய்தால் மட்டும் போதுமானதே.

விழாவாக உற்றார், உறவினர், நண்பர்கள் எல்லோரையும் அழைத்து நடத்துவதன் முக்கிய நோக்கம் சுயமரியாதைத் திருமணம் என்றால் என்ன? சம்பிரதாய திருமணத்தில் நமது சுயமரியாதை எப்படி கொடுக்கப்படு-கிறது, வடமொழியில் சொல்லும் மந்திரத்தின் பொருள் என்ன-? அக்னிக்கும், சோமனுக்கும் கந்தர்வனுக்-கும் மனைவியாக இருந்த இப்பெண் உனது மனைவியாகிறாள் போன்ற கருத்துக்களை விளக்கிக் கூறவும்.

சுயமரியாதைத் திருமணம் தந்தை பெரியாரால் அறிமுகம் செய்யப்பட்டு அறிஞர் அண்ணா ஆட்சியில் சட்ட வடிவம் பெற்றது, சட்ட பாதுகாப்பு உள்ள திருமணம் போன்ற கருத்துக்களை விளக்கவும்.

மணமக்களை உற்றார் உறவினர் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யவும், அவர்களுக்கு விருந்து படைக்கவும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்ளவே விழாவாக நடத்தப்படுகிறது.

அக்னி சாட்சியாக அய்யர் திருமணம் நடத்தி வைக்க அம்மி மிதித்து அருந்ததி பார்த்து ஏழு அடி எடுத்து வைத்து நடந்த திருமணங்கள் விவாகரத்து ஆகின்றனவே. அக்னி சாட்சி சொல்ல வருவதில்லையே அதை யாரும் எதிர்பார்ப்பதுமில்லை. அக்னி சாட்சியாக நடந்த திருமணத்தை ஏற்று வெளிநாடு செல்ல விசாகூட தருவதில்லையே. பதிவுத் திருமணம் செய்திருந்தால் அக்னி சாட்சி கூட தேவையில்லை விசா பெற்று விடலாமே. இந்தக் கருத்துகளை யெல்லாம் மக்களிடம் விளக்கவே விழாவாக நடத்தப்படுகிறது. பெண்கள் கூடியிருக்கும் நிகழ்ச்சியில் அவர்களுக்கும் இக் கருத்துக்கள் போய்ச் சேரும்.

சுமரியாதைத் திருமணம் செய்பவர்கள் சுயமரியாதை சாவு நடத்துகிறார்களா என வினவி உள்ளீர்கள்; அதுவும் நடைபெறுகிறதே இறந்தவர் வீட்டில் ம(ட)த சம்பந்தமான எந்த மூட நிகழ்ச்சிகளையும் செய்யாமல் குடம் உடைப்பது, கொள்ளி வைப்பது எதுவும் இல்லாமல் எரியூட்டப்படுகிறதே.!

சமீபத்தில் மரணமடைந்த மேற்கு வங்காள முன்னாள் முதல்வர் திரு. ஜோதிபாசு அவர்களுக்கு நடைபெற்றது சுயமரியாதை மரண நிகிழ்வுதானே. சொர்க்கத்திற்கு போக வேண்டி காரியங்கள் செய்யாமல் இறந்த உடம்பை மருத்துவ மாணவர்கள் பயன்படும்படி மருத்துவக் கல்லூரிக்குக் கொடுத்தார்களே!

கதையின் நாயகன் அசோக், கடவுள் படைத்த தரையில்தான் படுத்து தூங்குவேன்; மனிதன் படைத்த கட்டிலை பயன்படுத்த மாட்டேன் என கூறுகிறார். கடவுள் படைத்ததாக வைத்துக் கொண்டாலும் அவர் படைத்தது பஞ்சும் நெல்லும்தானே. அசோக் மனிதன் நெய்த ஆடையும் மனிதன் பக்குவம் செய்த சாதத்தையும் பயன்படுத்துவது அவர் வாதப்படி நியாயமாகுமா?

- ப. தமிழ்மணி, திருநெல்வேலி- -_ 7

4 comments:

ஸ்ரீநி said...

தோழர்
வணக்கம். சோ வை பற்றிய உங்கள் விமர்சனங்கள், கேள்விகள் பதில் அளிக்க வில்லை , அதை ஜனநாயக முறையில் எதிர்கிறேன்.

ஸ்ரீநி said...

1. சுய மரியாதை திருமணம் பெரியாரால் அறிமுகப் படுத்தப்பட்டன - சரி - அவருடைய ( இரண்டாம் ) திருமணம் அப்படி நடந்ததா ??.
2. ஜ்யோதி பாசு - ஒரு மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கூட அல்ல அவர் அவருடைய மரணம் சுய மரியாதை மரணம்தான். பெரியாருடைய உடல் என்ன செய்யப் பட்டது ???. அவருடைய சமாதி கோவில் போல் போற்றப் படுகிறதே, இறந்து போன பிணத்திற்கு என்ன மரியாதை ஏன் அழுகிறீர்கள் என்று கேட்டார் பெரியார்.அவருடைய சமாதியின் மேல் யாரேனும் அமர்ந்தால் சரியா இல்லையேல், அண்ணா சமாதியில் அதை செய்வோமா ?.

ஸ்ரீநி said...

அசோக் மனிதன் நெய்த ஆடையும் மனிதன் பக்குவம் செய்த சாதத்தையும் பயன்படுத்துவது அவர் வாதப்படி நியாயமாகுமா? - தோழர் சரியான கேள்வி..- உங்களுக்கு ஒரு சபாஷ்

Muthukumara Rajan said...

நாயகன் அசோக்,
உண்மையான பிராமணரை தேடுவதகவா கதை போக்கு உள்ளது .
தன்னை பிராமணராக சொல்லவில்லை
அதற்கான முயற்சியில் இருபதாகவா என் சிறு அறிவுக்கு தெரிகிறது .

ஒரு செயலில் இருப்பவரை விமர்சனம் செய்வது என்னை பொருத்தவரை தவறு நாடகமாக இருத்தாலும்

நேர்மையுடன்
முத்துக்குமார்

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]