வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, October 31, 2009

பிரதோஷம்

பிரதோஷம் பிர-தோஷம் என்று ஆன்-மிகத்-தில் சொல்கிறார்களே, அது எத்தனைப் பக்தர்-களுக்குத் தெரியும்?

தேவர்களும், அசுரர்-களும் பாற்கடலைக் கடைந்-தார்களாம். (பால் கடல் எங்கிருக்கிறது புவி-யியல் படித்த மேதாவி-கள் கொஞ்சம் சொல்லக்-கூடாதா?).

பாற்கடலை எதைக் கொண்டு கடைந்தார்-களாம். மந்தாரமலையைக் கொண்டாம். அதற்குப் பயன்படுத்திய கயிறு வாசுகி என்னும் பாம்பாம்.

சிவபெருமான் அனு-மதி பெறாமல் கடைந்த-தால் பாம்பு விஷம் கக்கிற்றாம். முப்பத்து முக்கோடி தேவர்களும், விஷ்ணு, பிரம்மா உள்பட அனைவரும் சிவனை சரண் அடைந்தார்களாம். நந்தி பகவானை அழைத்து அந்த நஞ்சைக் கொண்டு வருமாறு சிவன் கட்டளை-யிட்டானாம்.

கொண்டு வரப்பட்ட அந்த நஞ்சை சிவன் லபக்கென்று விழுங்கினா-னாம். பார்வதி தேவியா-கிய சிவனின் பாரியாள், விஷம் கீழே இறங்காமல் இருக்க தொண்டையை லபக்கென்று பிடித்தா-ளாம். விஷம் இறங்கிய-தால் சிவன் நீலகண்டன் என்று பெயர் பெற்றா-னாம்.

விஷம் அருந்திய சிவன் மூர்ச்சையானா-னாம். (சிவன் சக்தி இவ்-வளவுதானா?) அப்-பொழுது நந்தீஸ்வரன் (காளை) சிவனைத் தொழுது மூர்ச்சை தெளிய வைத்தானாம்.

சிவன் விழித்த இந்தக் காலம்தான் பிரதோஷ காலமாம். அமாவாசை மற்-றும் பவுர்ணமிக்குப் பிறகு வரும் 13 ஆம் நாள்தான் பிரதோஷமாம். மாலை 4.30 மணிமுதல் 7.30 மணி-வரை உள்ள அந்த நேரத்-தில் சிவனைத் தொழு-தால் கடன், வறுமை, துர்-மரணம், செய்த பாவங்கள் எல்லாம் பறந்தோடி விடு-மாம். சிவனுக்கு உதவி புரிந்த நந்திக்கும் அபி-ஷே-கம் செய்யவேண்டுமாம்.

இந்த விரதத்தை சித்-திரை, வைகாசி, அய்ப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்-களில் சனிக்கிழமையன்று பிரதோஷ வேளையில் ஆரம்பிப்பது மிகச் சிறப்பாம்.

சிவதரிசனம் செய்த பிறகு உணவு உண்ண-வேண்டும். தொடர்ந்து 12 ஆண்டுகள் (300 தடவை) இந்தப் பூஜை செய்தால், ராஜாங்க சிம்மாசனப் பதவி கிடைக்குமாம். (அமைச்சர்கள் ஆக விரும்புபவர்கள் கவனிக்க).

இந்தக் கதை கடுகத்-தனை அளவாவது அறி-வுக்குப் பொருந்துகிறதா? சிவன் அனுமதி பெறாத-தால்தான் நஞ்சு வந்தது என்பதை, விஷ்ணு உள்-ளிட்டோர் சிவனை வேண்-டிக்கொண்டனர் என்-பதையும் வைஷ்ண-வர்கள் ஏற்றுக்கொள்-வார்களா?

எந்தப் பாவமும் நீங்-குமாம். தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பார்ப்பானுக்கு சிவன் மோட்சம் கொடுத்-தானாம். (திருவிளை-யா-டல் புராணம் _ மாபாதகம் தீர்த்த படலம்).

இந்தக் கேடுகெட்ட அருவருப்பான பக்தித் துர்நாற்றத்தை என்னென்று தான் சொல்லுவதோ! திரு-நீறு அணிந்தால் தாயைப் புணர்ந்த பாவமும் போகும் என்று சொல்லுவோரை லாடம் கட்டி அடிக்க-வேண்-டாமா? சிந்திப்பீர்

விடுதலை 31-10-2009

1 comment:

passerby said...

மதங்கள் பகுத்தறிவுக்கு அப்பால் பட்டவை. இப்படிப்பட்ட கதைகள் இல்லாமல் மதங்கள் இல்லை. பகுத்தறிவுக்கு ஒவ்வும் மதம் ஒன்று இருந்தால் மக்கள் அதையும் விட்டுவைக்கமாட்டார்கள். ஆனால், அது எந்தவித சுவாராசியமில்லாமல் இருக்க், கொஞ்சகாலத்தில் மக்கள் அதை விட்டு விலகிவிடுவர்.

இப்படிப்பட்ட கதைகளை வைத்து மக்க்ள் ஏமாற்றப்பட்டு ஒருசிலர் ஆதாயம் பண்ணுகிறார்களா? அப்படியெனில் அவர்கள் தாக்கத்துக்கு உள்ளாக்கப்படவேண்டும். சரியே.

வைணவர்கள் ஏற்றுகொள்வார்களா என்பது உங்கள் கேள்வி.

சிவனை முன்வைத்த கதைகளை வைணவர்கள் ஏற்றுக்கொள்ளுவதில்லை.

நண்பரே, ‘மானமுள்ள சுய்மரியாதைக்காரன்’ என அழைத்துகொள்கிறீர்கள்.

‘சுயமரியாதைக்காரன்’ என்றாலே தன்மானமுள்ளவன் என்றுதான் பொருள். ‘மானமுள்ள’ என்றால், ‘மானமில்லாத சுயமரியாதைக்காரன்’ உண்டு என்றல்லவா விபரீதப்பொருளாகிறது!

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]