வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, August 18, 2010

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் பயன்கள்


அனைத்து மக்களின் நலன்களையும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்கத் தேவையான ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு வல்லுநர் குழு விவாதங்களின் சுருக்கம்

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் பயன்கள்:

 1. ஜாதி பேதமற்ற சமத்துவம் நிறைந்த ஒரு சமுதாயத்தை நோக்கிச் செல்ல நமக்கு அது உதவுகிறது.

நமது சமூகத்தில் சலுகைகளை அளிப்பதையும், மறுப்பதையும் தொடர்ந்து ஜாதி அமைப்பு முறை பாதித்து வருகிறதா? - ஆம் என்றால், எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆய்ந்தறிய அனைத்து ஜாதி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நம்மை அனுமதிக்கும். சில குழுக்களுக்கு மட்டும் இந்த ஜாதி அமைப்பு முறை பயன்களை எவ்வாறு அளிக்கிறது என்பதைக் கண்டறியவேண்டியது, மற்ற குழுக்களுக்கு எவ்வாறு அது பயன்களை அளிக்க மறுக்கிறது என்பதை கண்காணிக்க மிகவும் இன்றியாமையாதது ஆகும். இது போன்ற புள்ளி விவரங்கள் 1931 க்குப் பின் நம்மிடம் இல்லை. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் தவிர மற்ற ஜாதியினர் கணக்கிடப் படாத நிலையில் ஜாதிகளிடையே சமத்துவமின்மை, ஜாதிய உணர்வு இரண்டும் அதிக அளவில் நிலவுவதால், ஜாதிபேதமற்ற, சமத்துவம் நிறைந்த ஒரு சமுதாயத்தை அடைவதற்கான மாற்றுப் பாதைகளை நாம் கண்டறிய வேண்டியது அவசியமாகிறது.

2. ஆதாரத்தின் அடிப்படையில் சமூகக் கொள்கைகளை உருவாக்க அது உதவுகிறது.

சரியான புள்ளி விவரங்கள் இல்லாதது, ஜாதி தொடர்பான கொள்கைகளை வடிவமைக்கும் விவாதங்களைப் பயனற்றதாகச் செய்துவிடுகிறது. ஜாதி மற்றும் சமூகப் பொருளாதார சூழ்நிலையிடையே உள்ள தொடர்பு போன்ற பிரச்சினைகளை அறிந்து கொள்ளத் தேவையான ஒரு நம்பத் தகுந்த ஒருங்கிணைந்த புள்ளிவிவர அடிப்படையை ஜாதிவாரிக் கணக்கெடுப்பு உருவாக்கும். மாதிரி ஆய்வு அல்லது குறிப்பிட்ட பிரச்சினைகள் பற்றி பின்னர் மேற்கொள்ளப்படும் ஆய்வு ஆகியவற்றுக்கும் கூட இத்தகைய ஓர் அடிப்படை மிகவும் இன்றியமையாதது.

3. ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நீதித்துறைக்கு மிகவும் தேவையானது.

நம்பத்தகுந்த புள்ளி விவரங்கள் இல்லாத நிலையில், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு போன்ற ஜாதி அடிப்படையிலான கொள்கைள் பற்றி தாக்கல் செய்யப்படும் மனுக்களின் மீது உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் எளிதாக முடிவெடுக்க முடியாத நிலையில் உள்ளன. இத்தகைய ஜாதிவாரி மக்கள் தொகைப் புள்ளி விவரங்கள் நீதித்துறையின் இத்தகைய முக்கியமான தேவைகளை நிறைவு செய்வதாக இருக்கும்.

4. பல்வேறுபட்ட ஜாதி சமூகங்களின் வாழ்க்கை நிலைகள் பற்றிய ஆய்வு மேற்கொள்ள அது உதவுகிறது.

பாலினம், வயது, இனப்பெருக்கு ஆற்றல், இறப்பு விகிதம், படிப்பறிவு, தொழில் மற்றும் வீட்டு சொத்துகள் போன்ற முக்கியமான புள்ளிவிவரங்களை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொகுக்கிறது. இதே புள்ளிவிவரங்களை ஜாதிவாரியாகத் தொகுப்பதன் மூலம் இந்த முக்கியமான விஷயங்களில் பல்வேறுபட்ட ஜாதி மக்களின் வாழ்க்கை நிலை எவ்வாறு உள்ளது என்ற மிகவும் தேவையான கொள்கை அளவிலான ஆய்வை மேற்கொள்ள அது உதவுகிறது.

5. இந்தியாவின் சமூகப் பன்முகத் தன்மையை, வேற்றுமைகளைப் பற்றிய தோற்றத்தை அளிக்க அது உதவுகிறது.

இந்திய சமூகத்தின் பன்முகத் தன்மையை, வேற்றுமைகளைப் பற்றிய ஒரு நம்பத்தகுந்த தோற்றத்தை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அளிக்கிறது. சமூகங்களின் பொருளாதார நிலை, அறிவியல் அடிப்படையிலான மக்கள் தொகை இயல், அவர்களின் கல்வி, பொருளாதார நிலை பற்றி அறிந்துகொள்ள ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நம்மை அனுமதிக்கிறது. தொடர்ந்து எடுக்கப்படும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புகள், இத்தகைய சமூகத் தோற்றங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணித்து நம்மை அறிந்து கொள்ளச் செய்கிறது.

6. பிற்படுத்தப்பட்டோர் சமூகப் பட்டியலில் சேர்ப்பது, நீக்குவது ஆகியவற்றிற்கான ஒரு கொள்கையை உருவாக்க அது அனுமதிக்கிறது.

தாங்களும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்படவேண்டும் என்று புதியதாக எழுப்பப்படும் கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து மதிப்பீடு செய்ய, அனைத்து ஜாதிகளின் ஒருங்கிணைந்த அடிப்படைப் புள்ளி விவரங்கள் அரசுக்கு உதவுகின்றன. மேலும், பின்னர் ஒரு சமூகம் அடைந்த பிற்படுத்தப்பட்ட தன்மை அல்லது முன்னேறிய தன்மை பற்றி முடிவெடுக்கவும் அவை உதவுகின்றன. 1993 ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட சமூக தேசிய ஆணைய சட்டத்தின் 11 ஆவது பிரிவு பிற்படுத்தப்பட்ட ஜாதி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அவசியத்தைப் பற்றி இவ்வாறு தெரிவிக்கிறது: மத்திய அரசினால் ஒவ்வொரு கால இடைவெளியிலும் பட்டியலை மாற்றியமைப்பது: எந்த நேரத்திலும், இந்த சட்டம் நடைமுறைக்கு வந்து பத்து ஆண்டுகள் கழிந்த பின்னும், அதன் பின் ஒவ்வொரு பத்தாண்டுகள் கழிந்த பின்னும், பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் பட்டியலை மாற்றியமைக்கும் பணியை அரசு மேற்கொள்ளலாம். பிற்படுத்தப்பட்ட தன்மையில் இருந்து முன்னேறியவர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து நீக்கவும், புதிய ஜாதியினரை இப் பட்டியலில் சேர்க்கவும் தகுந்த பரிசீலனைக்குப் பின் அரசு செய்யலாம்.

7. இந்திய அரசியல் நடைமுறையை மேலும் ஜனநாயகம் மிக்கதாக வளர்க்க அது உதவுகிறது.


அனைத்து ஜாதி மக்கள் தொகையைக் கணக்கெடுப்பது மற்றும் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையினருக்கும் ஓர் ஒருங்கிணைந்த ஜாதி வாரியாக சமூகக் கலாச்சாரப் புள்ளிவிவர ஆதாரத்தை உருவாக்குவது, இதுவரை அரசியல் களத்தில் கண்ணுக்குத் தெரியாமல் இருந்த சமூகங்கள் மற்றம் குழுக்களைக் கண்ணுக்குத் தெரியச் செய்வதுடன், அவற்றிற்கு பிரதிநிதித்துவம் அளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அரசுக்கு உதவுகிறது.

----------------- விடுதலை (18.08.2010)
                                                                                                                       

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]