வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, August 21, 2010

எதற்காக இந்தப் பூணூல்? அவர்கள் பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவர்களாம்

வரும் 24 ஆம் தேதி (ஆடி 8 அன்று) ஆவணி அவிட்டமாம். அந்த நாளில் பார்ப்பனர்கள் தங்களின் பழைய பூணூலைக் கழற்றி எறிந்து புதிய பூணூலைப் போட்டுக் கொள்வார்கள்; அதாவது பூணூலைப் புதுப்பித்துக் கொள்கிறார்கள்.

எதற்காக இந்தப் பூணூல்? அவர்கள் பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவர்களாம் உயர்ஜாதியாம். இந்தப் பூணூலைத் தரித்த பிறகுதான் துவி ஜாதியாம். அதாவது இரு பிறவியாளர்களாம்.

இந்த உலகத்தை பிரம்மா பிராமணர்களுக்காகவே படைத்ததாகவும், மற்றவர்கள் அவர்களுக்குத் தொண்டு செய்வதே தர்மம் என்றும், பார்ப்பனர்கள் சாத்திரங்கள் ரீதியாக ஏற்பாடு செய்து கொண்டுள்ளனர்.

அந்தப் பிரம்மா ஆனவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளினின்று உண்டான பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கும், மறு மைக்கும் உரிய உபயோகமான கருமங்களைத் தனித் தனியாகப் பகுத்தார் (மனுதர்மம் அத்தியாயம் 1, சுலோகம் 87).

பிராமணன் முதல் வருணத்தான் ஆனதினாலும், பிரம்மாவின் உயர்ந்த இடத்தில் (முகத்தில்) பிறந்த தனாலும் இந்த உலகத்தில் உண்டாகி இருக்கிற சகல வருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்க அவனே பிரபுவாகிறான். (மனுதர்மம் அத்தியாயம் 1: சுலோகம் 100).

தானம் அதாவது பிச்சை வாங்குகிறவன் பிரபு என்ற சீலத்தை உலகத்தில் எந்த மதத்திலாவது கேள்விப்பட்டதுண்டா?

இந்த உயர்ஜாதி ஆணவத்தைக் காட்டுவதற்காகத் தரிப்பதுதான் இந்தப் பூணூல்!

பூணூல் அணிவதிலும் மனுதர்மம் கட்டளையிட் டுள்ளது.

பிராமணனுக்கு மிஞ்சிப் புல்லினாலும், க்ஷத்திரி யனுக்கு வில்லின் நாணை ஒத்த முறுவற் புல்லினாலும், வைசியனுக்கு க்ஷணப்பன் நாரினாலும் மேடுபள்ள மில்லாமல் மெல்லியதாகப் பின்னி மூன்று வடமா மேலரை நாண் கட்டவேண்டியது (மனுதர்மம், அத்தியாயம் 2, சுலோகம் 42).

பார்ப்பனர்களைத் தவிர்த்த மற்ற இரு வர்ணத் தாரும் தருமங்களை சரியாக அனுஷ்டிக்காத கார ணத்தால் சூத்திரத்தன்மை அடைந்துவிட்டார்களாம்.

சரி, சூத்திரர்கள் சிலர் ஆசாரியார், பத்தர், செட்டியார் முதலியோர் பூணூல் தரித்துக் கொள்கி றார்களே ஆவணி அவிட்டத்தன்று பூணூல் புதுப் பித்துக் கொள்கிறார்களே என்ற சந்தேகம் வரலாம்.

சாஸ்திர சம்மதம் அவற்றிற்குக் கிடையவே கிடையாது. முதல் மூன்று வருணத்தாருக்குத்தான் பூணூல் தரிக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்பதுமேலே, எடுத்துக்காட்டப்பட்ட மனுதர்ம சுலோகம் கூறுகிறது.

மேலும் விளக்கமாக இன்னொரு சூத்திரத்தில் (மனு அத்தியாயம் 9 சுலோகம் 224) தெளிவுபடுத்தப் பட்டுள்ளது.

சூத்திரன் பிராமண ஜாதிக் குறியை பூணூல் முதலியதைத் தரித்தால் அரசர் அந்தச் சூத்திரனின் அங்கங்களை வெட்டிவிட வேண்டும். இந்த நிலையில், ஆசாரியாரோ, பத்தரோ, செட்டியாரோ பூணூல் தரித் தால் மனுநீதி சோழன்கள் ஆட்சியில் அங்கங்கள் வெட் டப்பட்ட முண்டங்களாகத்தான் இருந்திருப்பார்கள்.

இட ஒதுக்கீட்டுக்காக ஜாதி அளவுகோல் என்றால், இந்தக் காலத்தில் ஜாதியா? இட ஒதுக்கீடு ஜாதியை வளர்க்கிறது என்று துண்டைப் போட்டுத் தாண்டிக் குதிக்கும் பார்ப்பனர்கள் தவறாமல் இந்த ஆவணி அவிட்டத்தன்று பூணூலைப் புதுப்பித்துக் கொள் கிறார்கள் என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது. ஆபேடூபே சொன்னதுபோல பார்ப்பனர்கள் இரட்டை நாக்குக்காரர்கள் பல வேடக்காரர்கள் என்பதை உறுதியாக எண்ணவேண்டும்.

பூணூல் தரிப்பது தனி மனித உரிமையல்ல அவர்கள் பூணூல் தரிப்பதன்மூலம் பார்ப்பனர் அல் லாதாரை சூத்திரர்கள் என்று இழிவுபடுத்துகிறார்கள் பரிகாசம் செய்கிறார்கள் இதனை இந்த 2010லும் அனுமதிப்பது என்பது அவமானம் அல்லவா!

தந்தை பெரியார் அவர்கள் சென்னை தியாகராயர் நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் வாழ்நாளின் இறுதி உரையில் கூறியது என்ன தெரியுமா?

பார்ப்பானைக் கண்டால், வாப்பா தேவடியாள் மகனே! எப்ப வந்தே? என்று கேட்கவேண்டும்.

ஏண்டா அப்படிக் கேட்கிறாய்? என்றால்,

நீ எழுதி வைத்ததடா என்னைத் தேவடியாள் மகன் என்று! எனவே, உன்னைத் தேவடியாள் மகன் என்று கூப்பிடுகிறேன் என்றுசொல்லவேண்டும்! என்ன தப்பு? என்று கேட்டாரே, அந்த உணர்ச்சி தமிழர்களிடம் வலுத்துவிட்டால், கேட்கும் நிலை வீறிட் டால், பார்ப்பனர்கள் பூணூல் தரிக்கும், புதுப்பிக்கும் துணிவு வருமா? சிந்திப்பீர் சூத்திரத் தமிழர்களே!

--------- விடுதலை தலையங்கம் (21.08.2010)
                                                              

6 comments:

muthukumar said...

please read this

http://koottanchoru.wordpress.com/2009/12/03/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF/

சங்கமித்திரன் said...

என்னுடைய பதில் அய்யா சொன்னதுதான்......இதோ
பார்ப்பானைக் கண்டால், வாப்பா தேவடியாள் மகனே! எப்ப வந்தே? என்று கேட்கவேண்டும்.

ஏண்டா அப்படிக் கேட்கிறாய்? என்றால்,

நீ எழுதி வைத்ததடா என்னைத் தேவடியாள் மகன் என்று! எனவே, உன்னைத் தேவடியாள் மகன் என்று கூப்பிடுகிறேன் என்றுசொல்லவேண்டும்! என்ன தப்பு? என்று கேட்டாரே

சங்கமித்திரன் said...

பூணூல் பாசம் கொப்பளிக்குதோ தோழரே..........பூணூல் போடுவது ஒன்றும் தனிப்பட்ட விசயமல்ல...ஜட்டி போடுவது போன்று...புரியுதா? இந்த வித்தியாசம் தெரியாம....ஜட்டியும் ,பூணூலும் ஒன்னுகிரின்களே.? பூணூல் பாசம் உள்ளவர்களுக்கு புத்தி பேதளிப்பது ஒன்றும் புதிதல்லவே...

muthukumar said...

யார் என்ன போடணும் எப்படி போடணும் என உங்க தானை தலைவர் ( தமிழகத்தின் தலைவலி) மஞ்ச துண்டு கருணாநிதிய வெச்சு ஒரு சட்டம் போடுட வேண்டியது தானே ...

பதில் சொல்ல தெரியலனா இப்படி ஒரு பதில் .

வாழ்க திராவிட கழக பகுத்தறிவு

தமிழுடன்
முத்துக்குமார்

வேனு said...

பெரியார் பற்றி தவறாக பேசாதீர்.. அவர் விரும்பி இருந்தால் முதல்வராக மாறி , பணத்தை சுருட்டி இருக்கலாம் .. பதவி வந்த பின்னும் , சமுதாய மூட நம்பிக்கைக்காக இறைவனுக்கே மறுப்பு சொன்னவர் ...

நம்பி said...

//யார் என்ன போடணும் எப்படி போடணும் என உங்க தானை தலைவர் ( தமிழகத்தின் தலைவலி) மஞ்ச துண்டு கருணாநிதிய வெச்சு ஒரு சட்டம் போடுட வேண்டியது தானே ...//

சரி! திருகுவலி...வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி கூடத்தான் கட்டினார் அதற்கு மேல் மஞ்சள் துண்டு போட்டார்...பூணூல் போடலியே...அதை போட்டு எவரையும் ஜாதி பிரிக்கலியே....இதுக்குப்போய் பிரசவ வலியிலே துடிக்கிறியே!

ஏன்? மஞ்ச டி சர்ட் போட மாட்டே....மஞ்ச பூணூல் மட்டும் தான் போடுவியா...?

இதுக்கு ஏன் சட்டம் போடணும்? வரும் போது பார்த்துக்கலாம்...முதலில் சத்தம் போட்டு அனைவரும் பூணூல் போட்டவனை ஒதுக்கினாலே போதும்.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]