வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Sunday, August 15, 2010

இந்துத்துவ வெறியரான வேளுக்குடி கிருஷ்ணன் பேச்சும் பார்பனர்களின் குதி ஆட்டமும்...

சென்னையில் நடந்த போர்வாளும் பூவிதழும்என்ற நாட்டிய நாடக விழா மியூசிக் அகடமி அரங்கத்தில் ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் நடந்தது. இதில் இந்துத்துவ வெறியரான பார்ப்பனர் திரு.வேளுக்குடி கிருஷ்ணன் உரையாற்றினரோ இல்லையோ தமிழ் நாட்டுப் பார்பனர்கள் குதி ஆட்டம் போட ஆரம்பித்துவிட்டர்கள்.

தினமலரில் வெளிவந்துள்ள செய்தியின்படி “முதல்வர் விழாவில் வெளுத்துக்கட்டிய வேளுக்குடி கிருஷ்ணன்” என்று தினமலம் செய்தி வெளியிடுகிறது. மற்றும் சில பார்பனர்கள் அவர் பேசிய ஆடியோவை எல்லோரிடமும் கொடுத்து "தமிழை வளர்த்தவர்கள் பார்ப்பனர்கள்தான்" என்று புலன்காயிதம் பாடுகிறார்கள். பார்பனர்கள் என்றுமே வெட்கம் இல்லாதவர்கள் என்பதற்கு இது போன்ற பல நிகழ்சிகள் உதாரணமாக சொல்லலாம். பூணூல் கூட்டம் அடிக்கடி இப்படி ஆட்டம் போடுவது வழக்கம் தானே. சங்கர மடத்தினால் வீழ்ந்த மானத்தை என்ன பண்ணினாலும் தூக்கி நிறுத்த முடியாது என்பது மட்டும் ஏனோ பார்ப்பனியத்துக்கு புரியவே மாட்டேங்குது.

பார்பனர்கள் தமிழை வளர்த்த விதம் பற்றி தான் நமக்கு நன்றாக தெரியுமே..தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் கொண்டு வரும்போது முட்டுக்கட்டையாக இருந்தது யார்? பார்ப்பனர் ராஜாஜி. நாடு என்று வராமல் பார்த்துக்கொள்ளுங்களேன் என்று அறிவுரை வேறு. ஆரிய மாயை கண்ட அறிஞர் அண்ணாவிடம் பழிக்குமா...அய்யாவின் சீடர்.. நாடு கேட்டு இயக்கத்திற்கு வந்தவர்... தமிழனனின் தன்மானம் காத்து தமிழ்நாடு என்று பெயர் வைத்தார்...அங்கு தான் திராவிடத்தின் வெற்றி முதன் முதலில் தமிழுக்காக உன்றப்பட்டது....இதில் பார்ப்பான் எங்கே வந்தார்கள்.

பார்பனர்கள் தமிழை வாழவைத்த விதம் தான் தெரியுமே...தியாகய்யர், சியாமா சாஸ்திரி, முத்துசாமி தீட்சிதர் இவர்கள் தான் ஆதி மும்மூர்த்திகள் என்று பார்பனர்கள் சொல்லுவார்கள். ஆனால் உண்மை வரலாறு மறைக்கப்பட்ட வரலாறாக இருந்தது. முத்துத்-தாண்டவர், மாரிமுத்தா பிள்ளை, அருணாசல கவிராயர் ஆகிய தமிழிசை முன்னோடிகளின் வரலாறு வந்திருக்கிறதா? வரலாறு மறைந்தி-ருக்கிறதா? இதுதான் பார்ப்பான் தமிழை வளர்த்த லட்சணம்.இதோ பார்ப்பன பாரதி....சுதேசமித்திரனின் 1906ல் “எனது தாய்நாட்டின் முன்னாட் பெருமையும் இந்நாட் சிறுமையும்” என்ற தலைப்பில் தமிழை வளர்த்தம் விதம் பாருங்கள்,

“ஆரியர் வாழ்ந்து வரும் அற்புத நாடென்பது போய்ப்
பூரியர்கள் வாழும் புலைத்தேச மாயினதே

--- --- --- --- --------------------------
வேத உபநிடத மெய்நூல்களெல்லாம் போய்ப்
பேதக் கதைகள் பிதற்றுவாரிந் நாட்டினிலே” (2)

எனக் கூறி, இங்கு “ஆரியர்கள் வாழ்ந்த நாடு அற்புத நாடென்றும், அவர் எழுதிய வேத உபநிடதங்களெல்லாம் மறைந்து போயினவே” என்றும் மிகவும் வருத்தப்படுகிறார். பார்பனர்கள் தமிழ் வளர்த்த லட்சணம் இப்படித்தான். எங்கு போனாலும் தன் இனப்பற்று ஒன்றையே குறிக்கோளாக கொண்டுள்ள பார்பனர்கள்.. தமிழ், தமிழன் என்பது பிழைப்பு நடத்ததான் என்பதை நம்மவர்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.


“செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே

--- --- --- --- ---

வேதம் நிறைந்த தமிழ்நாடு-உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு”

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்கும் காணோம்” (6)

என்று தமிழ்நாட்டையும் தமிழ் மொழியையும் புகழ்ந்து பாடியுள்ளார் பாரதியார். இப்பாடல்களை இயல்பான தன்னுணர்ச்சியுடன் பாரதி பாடவிலை என்பதற்குச் சான்றுகள் உள்ளன.

1915இல் சுதேசமித்திரனில் ‘தமிழ், தமிழ்நாடு’ முதலியவற்றின் சிறப்பைக் குறித்து, எழுதும் சிறந்த கவிதைக்கு மதுரைத் தமிழ்ச்சங்கம் சார்பில் பரிசளிக்கப்படும் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. இதைப் பாரதியார் பார்த்தும் பார்க்காததுபோல் விட்டுவிட்டார். ஆனால் இதைப் பார்த்த பாரதியின் புதுவை நண்பரான வாத்தியார் சுப்பிரமணி அய்யரும் மற்றும் சில நண்பர்களும் விளம்பரத்தைக் கூறி, கவிதை எழுதும்படி வேண்டினர். அவர்களின் கட்டாயத்தின் பேரிலேயே இப்பாடல்களைப் பாரதியார் எழுதியதாக பாரதியின் நண்பர் எஸ்.ஜி.இராமானுஜலு நாயுடு கூறியுள்ளார். (7)

இதே கருத்தைப் பாரதிதாசன் அவர்களும் கூறியுள்ளார்.

“தமிழ்நாட்டைப் பற்றித் தமிழ்ப் பாக்கள் தந்தால்
அமைவான பாட்டுக் களிப்போம் பரிசென்று
சான்ற மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் உரைத்தார்
தேன்போற் கவியொன்று செப்புகநீர் என்றுபல
நண்பர் வந்து பாரதியாரை நலமாகக் கேட்டார்

--- --- --- --- ---

செந்தமிழ் நாடெனும் போதினிலே யின்பத்
தேன்வந்து பாயுது காதினிலே என்றெழுதித்
தமிழ்நாட்டை அப்படியே நெஞ்சால் எழுதி முடித்தார்” (8)

என புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கூறுகிறார். இவ்வாறாகப் பாரதி நண்பர்களுடைய வேண்டுதலாலும், கட்டாயத்தாலும் தான், “செந்தமிழ் நாடெனும் போதினிலே” என்ற பாடலையும், “யாமறிந்த மொழிகளிலே” என்ற பாடலையும் எழுதினார். இந்தப் பாடல்களுக்காக அவருக்கு மதுரைத் தமிழ்ச் சங்கம் பரிசாக ரூ.100 அளித்தது. (9) (பாரதியார் பற்றிய இந்த செய்தி உதவி கீற்று இணையத்தளம்)பார்ப்பன பாரதி இப்படி என்றால் வேளுக்குடி கிருஷ்ணன் என்ன வெண்டக்காய். செந்நாயின் நிறம் மாறினாலும் மாறுமே தவிர பார்ப்பனரின் பிறவி புத்தி மாறவே மாறாது என்று அறிஞர் அண்ணா சொன்னதை இங்கு நினைவு கூறவேண்டும்..


புதுவைக் குயில் பாவேந்தர் பாடிய வரிகள் தான் நினைவுக்கு வருகிறது 

வீட்டிலே தூத்தம் என்பார். 

வெளியிலே தண்ணீர் என்பார் பிழைப்புக்காக.
உன் போல் கிள்ளாய்!


அடடா! வைர வரிகள்; ஒவ்வொரு எழுத்தும் கோடி பெறும்...

அண்ணாவே சொன்னாரே - தமிழ் பேசுவோரெல்லாம் தமிழராக முடியாது!

சரி இது இப்படி என்றால் பார்ப்பனர்களின் தலைமை பீடமாகிய  காஞ்சி மடம் தமிழை எப்படி ஏசுகிறது. தமிழ் நீசபாசை என்று தானே சொல்லுகிறது. இதோ "இந்து மதம் எங்கே போகிறது" என்ற நூலில் ராமானுச தாத்தாச்சாரி என்ன சொல்லுகிறார் பாருங்கள்..


"அந்த நாளுக்கான மாலை நேர பூஜைக்கான மடம் தயாராகி கொண்டிருந்ததது. மகா பெரியவர் ஸ்நானம் முடித்திருந்தார். மதியம் சிறிது நேரம் தூங்கினால் கூட 'மடி' அதாவது ஆச்சாரம் போய் விடும். மறுபடியும் குளித்தாக வேண்டும். அந்த வகையில்..குளித்து முடித்துவிடிருந்தார் மகா பெரியவர்.
  
அந்த நேரமாய் பார்த்து ஒரு சில பக்தர்கள் அவரைப் பார்த்தே தீருவது, அருளாசி பெற்றே தீருவது என்ற முடிவில் காத்திருந்தார்கள். அவர்களில்..நாட்டுக்கோட்டை செட்டிநாட்டிலிருந்து வந்திருந்த அருணாச்சலம் என்ற பக்தர்..மகா பெரியவரை பார்த்து அவரிடம் அருள் மொழிகள் வாங்கி விட்டுதான் போவது என்ற உறுதியோடு இருந்தார்

அந்த நேரம் நானும் மடத்தில் இருந்ததால், அருணா சலத்திடம் சொன்னேன்... 'இதோ பாரப்பா, இன்றைக்கு நீ மகா பெரியவரை பார்க்க முடியாது. நாளை வாயேன்' என்றேன்.

'இல்லை சாமி இப்பவே அவரை பார்க்கணும்' - என்றார் பக்தர்

எங்கள் பேச்சு சத்தத்தை கேட்ட சிலர்..விஷயத்தை மகா பெரியவரிடம் சொல்ல அவர் என்னை உள்ளே அழைத்தார்

போனேன் கேட்டார்.சொன்னேன். 'இதோ பாரு தாத்தாச்சாரி அவரை பார்க்குறத்துக்கு நேக்கு ஒண்ணுமில்லை..பார்த்தால் எதாவது கேட்ப்பார், பதிலுக்கு நான் தமிழில் பேசவேண்டி வரும் நோக்குதான் தெரியுமே..தமிழ் பேசினால் எனக்கு தீட்டு. மறுபடியும் ஸ்நானம் பண்ணனும். பூஜைக்கு நேரமயிடுத்துல்லையோ..அதனால் நான் மௌனம் அனுச்டிக்கிறேன் என்று சொல்லி அனுப்பிச்சிடுங்கோ' 

என என்னோடு சம்ஸ்கிருத சம்பாசனை நிகழ்த்தினார் "


பார்த்தீர்களா பார்ப்பான் தமிழை வளர்த்த விதம். இதனை நான் சொல்லவில்லை எல்லா வேதங்களும் நன்கு படித்த, சங்கர மட மற்றும் மகா பெரியவர் என்று சொல்லுவார்களே அவருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த தாத்தாச்சாரியார் சொல்லுகிறார்.


இதுல வெங்காய வேளுக்குடி கிருஷ்ணன் என்ன வேறுபடவா போகிறார்?.


வேளுக்குடி கிருஷ்ணனோ வெங்காயமோ... சவால் விட்டு கேக்கிறோம் கீதையை புறந்த்தள்ளி திருக்குறளை பொது நூலாக ஏற்க தயாரா? பார்ப்பனக் காவிக் கூட்டம். அதுதான் தமிழை வளர்ப்பது. ஏதோ இந்து வெறியர் திரு. வேளுக்குடி கிருஷ்ணன் தமிழ் மொழி பற்றி பேசினாராம் அதனை எடுத்து போட்டுகொண்டு நாங்களும் தமிழர்.. நாங்களும் தமிழர்...(நானும் ரவுடிதான்.. நானும் ரவுடிதான்....பார்துகங்கோ) என்று கூச்சல் போட்டால் தமிழன் ஆகிவிட முடியுமா? இந்த பார்பனர்கள் விஷமம் புரிந்து தானே அறிவு ஆசான் அய்யா தந்தை பெரியார் அவர்கள் திராவிடர் என்று வைத்தார். பார்பனர்களே நீங்கள் என்ன குதி ஆட்டம் போட்டலும் உங்கள் விஷமம் பலிக்காது.

குறிப்பு: தேவைப்பட்டால் பார்ப்பான் தமிழ் வளர்த்த விதம் பற்றி மேலும் எழுத நேரிடும். சரக்கு நிறைய இருக்கு.                                                                                                                                                              

17 comments:

ராவணன் said...

இந்த ஆளை எதற்காக கருணாநிதி தம் புகழ்பாடும் மாநாட்டிற்கு அழைத்தார்?தவறு யார் மேல்?
கருணாநிதியும் தேவதாசி பரம்பரையில் வந்ததாக செய்தி நிலவுகிறதே?
தேவதாசி என்றால் யார் என்று தெரியாத கும்பலா நீங்கள்?

நல்லதந்தி said...

//பார்ப்பனர் ராஜாஜி. நாடு என்று வராமல் பார்த்துக்கொள்ளுங்களேன் என்று அறிவுரை வேறு.//

உங்களிடம் சுத்தமாக சரக்கு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. தமிழ் ஓவியாவைப் போல cut and paste மட்டும் செய்து கொண்டிருக்கலாம்.
சரி விஷயத்திற்கு வருகிறேன். இராஜாஜி தமிழ்நாடு என்று பெயர் மாற்றுவதை எதிர்க்கவில்லை. தமிழ்நாடு என்று வைத்தால் தமிழர்களைத்தவிர மற்றவர்கள் உச்சரிக்கும் போது சிரமப் படுவார்கள் என்றுதான் கூறினார். அதாவது Tamilnadu என்று கடைசியில் "U" சேர்க்காமல் Tamilnad என்று மாற்றுங்கள் என்றுதான் சொன்னார். மற்ற மாநிலத்தவர்கள் தமிழ்நாட் என்று உச்சரிக்க எளிதாக இருக்குமென நினைத்தார். இன்றும் நீங்கள் ஆங்கிலச் செய்திகளிலோ, அல்லது அன்னை சோனியா போன்றவர்களோ தமிழ்நாடு என்று சொல்லும் போது டமில்நாட்உஉ என்று அன்னியமாக உச்சரிப்பதைக் காணலாம். இந்த விஷயத்திலும் இராஜாஜி ஒரு தீர்க்கதரிசிதான்.

சங்கமித்திரன் said...

சரிங்க கெட்டதந்தி....உங்களிடம் இருக்கும் சரக்கு நன்னா இருக்கு ..அப்படியே பின்பற்றுங்க.........அப்படியே சங்கரமடத்துக்கும் கொடி பிடிங்க...தமிழ் நீசைபாசை என்று சொன்னது உச்சரிக்கு முடியாதுன்னு தான் ன்னு சொன்னிகன்னா ரொம்ப பேஷா இருக்குமோ என்ன...

Robin said...

/இராஜாஜி தமிழ்நாடு என்று பெயர் மாற்றுவதை எதிர்க்கவில்லை. தமிழ்நாடு என்று வைத்தால் தமிழர்களைத்தவிர மற்றவர்கள் உச்சரிக்கும் போது சிரமப் படுவார்கள் என்றுதான் கூறினார். //தமிழ்நாடு என்ற பெயர் இப்ப மட்டும் எப்படி மற்றவங்க வாயில நுழையுது?

muthukumar said...

ராபின் னுக்கு
நல்லதந்தி said
சோனியா போன்றவர்களோ தமிழ்நாடு என்று சொல்லும் போது டமில்நாட்உஉ என்று அன்னியமாக உச்சரிப்பதைக் காணலாம். இந்த விஷயத்திலும் இராஜாஜி ஒரு தீர்க்கதரிசிதான்.

உ வே சாமிநாத ஐயர் இல்ல என்றல் தமிழ் இல்லகியங்கள் பல அழிந்து இருக்கும் .

போயி எதாவது உருப்படியான வேலை எதாவது எருத போய் பாருங்க

சங்கமித்திரன் said...

/*உ வே சாமிநாத ஐயர் இல்ல என்றல் தமிழ் இல்லகியங்கள் பல அழிந்து இருக்கும் . */

உ.வே.சா. என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட உ.வே.சாமிநாத அய்யரை, தமிழ்த் தாத்தா என்றும் சுவடிகள் காத்த சுரங்கம் என்று உச்சி மீது வைத்து கொண்டாட தமிழகம் தயங்கியதே இல்லை. ஆனால் இப்பெரியவரின் மறுபக்கம் நம்மை திடுக்கிட வைக்கிறது. தமிழ், தமிழர் என்ற ...போர்வையில் தமிழ் இனமே வஞ்சிக்கப்பட்ட நடைமுறை நிகழ்வுகளைப் படிக்கும் போது நெஞ்சம் பதறுகிறது.
உ.வே.சா.வின் கையெழுத்துப் படிகளை சென்னை ஆனந்தபோதினி அச்சகத்தில் அச்சடிப்பது வழக்கம். இதன் உரிமையாளர் முனிசாமி முதலியார். நிர்வாகப் பொறுப்பு - ஜீவா என்று புனை பெயரில் அழைக்கப்பட்ட நாரண துரைக்கண்ணனிடம் இருந்தது. நாரண துரைக்கண்ணன் கள் இறக்கும்... மரபில் பிறந்தாலும் தமிழை விரும்பிக் கற்றார். மறைமலை அடிகள், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், திரு.வி.க. சீனி வேங்கடசாமி, பா.வே.மாணிக்கம், கா.நமச்சிவாயம் போன்ற அறிஞர் பெருமக்களிடம் உறவாடி தமிழ் பயின்றார்.

பிரசண்ட விகடன் என்ற இதழை ஆனந்த போதினி அச்சகத்தில் அச்சிட்டு, ஆசிரியராக இருந்து வெளியிட்டார். சிறுகதை, நாவல், நாடகங்கள், படைப்பதில் வல்லவர். இவரது உயிரோவியம் என்ற நாவல் அந்தக் காலத்தில் 60,000 படிகள் விற்று சாதனை படைத்தது. அடுப்பூதும் பெண்களுக்கு படிக்கும் பழக்கம் இவரால் ஏற்பட்டது; கல்கிக்கும் இவர் முந்தியவர்.
உ.வே.சா.வின் கையெழுத்துப் படிகள் என்றும் வழக்கம்போல் ஆனந்த போதினி அச்சகத்திற்கு அச்சுக் கோர்க்கப் போனது. அதில் இருந்த பாடலில் பிழைகண்ட நாரண துரைக்கண்ணன் அதைத்திருத்தியே அச்சடித்தார். தவறை காலதாமமாக உணர்ந்த உ.வே.சா. தன் உதவியாளர் இராசகோபால் அய்யங்காரை விரைந்து அனுப்பி, பிழை திருத்தி அச்சேற்றும்படி அனுப்பி வைத்தார். அதற்கு முன்பே படிகள் அச்சாகி விட்டன. ஆனால் பிழை திருத்தப்பட்டது கண்டு வியந்து போய் உதவியாளர் அய்யங்கார், நாரண துரைக்கண்ணனின் தமிழறிவை வெகுவாகப் பாராட்டியதுடன், அவர் சம்மதித்தால், உ.வே.சா.விடம் மேலும் தமிழ்ப்பாடம் பயின்று, அறிவை பட்டை தீட்ட ஏற்பாடு செய்வதாய் சொல்லிச் சென்றார்.

அதற்கு உ.வே.சா. ஒப்புதல் தரவில்லை. அதற்கு உ.வே.சா. சொன்ன காரணம் நம்மை சிலிர்க்கவும் வீறு கொண்டு எழவும் செய்கிறது.

நான் சூத்திரனுக்கு தமிழ் கற்பிக்க மாட்டேன் என மறுத்துவிட்டார்.ஆனால் அவர் தமிழ் கற்றது மட்டும் கும்பகோணத்தில் இருந்த திருசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் தான்.

இன்னொரு நிகழ்வு. திருவாவடுதுறை ஆதீனம் - சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழுக்கு ஒரு இருக்கை ஏற்படுத்தி நிதி உதவி செய்தார். ஆண்டு தோறும் வித்வான் படிப்பில் முதன்மையாகத் தேர்ந்தவர்களுக்கு ரூபாய் ஆயிரம் பரிசளிப்பதே அந்தத் திட்டத்தின் நோக்கம்.

1930இல் தெ.பொ.மீ. என்ற மீனாட்சி சுந்தரம் (பின்னை நாளில் மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் - ஓய்வு பெற்றபின் மேலமருவத்தூரில் ஆன்மிகப் பணி) முதலாவதாக தேறி இருக்க, அவரை ஒதுக்கி விட்டு தனக்கு நெருக்கமான மாணவன் கி.வா.ஜ என்ற ஜகன்நாதனுக்கு அப்பரிசை தந்தார்.
தமிழ்ப் பற்றாளராக இருப்பதைவிட தன் இனப் பற்றாளராக பார்ப்பனர் இருந்தனர் என்பதற்கு பல நடப்புகள் உண்டு.

muthukumar said...

உங்கள் கட்டுரை தமிழ் வளர்ச்சியில் பார்பனர்களின் பங்arகு . அதற்கு உவேசா ஒரு உதாரணம் .

மேலும் உங்கள் செய்தியின் ஆதாரம் எதாவது ஏறுதல் சொல்லுகள் .

சங்கமித்திரன் said...

உங்களுக்கு வரலாறும் தெரியவில்லை...யோசிக்கவும் முடியவில்லை ...நுனி புள் மேய்பவர்களே இப்படித்தான்.....என்ன செய்ய..

muthukumar said...

எல்லாம் அறிந்தவன் பைத்தியக்காரன் மட்டுமே ..
ஆதாரம் இருந்தால் இந்த புத்தகத்தில் இருக்கிறது என சொல்லிவிட்டுகள் . இல்லை ஆதாரம் இல்லை இது வாய்வழி செய்தி என சொல்லுகள்
ஆதாரம் கேட்ட கூட திராவிட பகுத்தறிவு அனுமதிகாதோ .

தமிழுடன்
முத்துக்குமார்

சங்கமித்திரன் said...

/******8ஆதாரம் இருந்தால் இந்த புத்தகத்தில் இருக்கிறது என சொல்லிவிட்டுகள் . இல்லை ஆதாரம் இல்லை இது வாய்வழி செய்தி என சொல்லுகள்
ஆதாரம் கேட்ட கூட திராவிட பகுத்தறிவு அனுமதிகாதோ.****/

"தமிழ் பேசுவோரெல்லாம் தமிழரா" என்று தலைப்பில் உண்மை இதழில் மே 2008 வெளிவந்தது....படியுங்கள் தெளிவு பெறுங்கள்....சொன்னால் மட்டும் புரியவா போகுது ...ஏதோ "பிரதிவாத பயங்கர" போல மறுப்பு சொல்ல ஆசை படுகீர்கள்...அனால் சொல்லும் விதம் தான் சரியில்லை ...உண்மை இதழ் என்றல் என்ன? ஒரு விளக்கம் தேவை ன்னு கேட்டாலும் அஆச்சரியம் இல்லை.....உங்கள் நிலைமை அவளவு மோசம்....வாய் புளித்த்தா மாங்காய் புளித்தத என்று தெரியாமல் பேசாதீர்கள்....

muthukumar said...

என்ன ஐயா, ஆதாரம் கேட்டா காமெடி பண்ணுரிங்க .

உண்மை அந்த திராவிட கழக இதழ் தான அது . பல வாரம் வடிவேலு காமெடி குறுந்தகடு இல்லை என்றால் அந்த புத்தகம் தான் வாங்குவேன் . அத விடுங்க . இதழ்களில் வந்து எல்லாம் உண்மை என தான் உங்க திராவிட கழக பகுத்தறிவு அம சொல்லுதா .
தமிழா ஆதாரம் என்ன என்பதை அறியவும் . உங்களுக்கு பகுத்தறிவு தான் இல்லை என நினைத்தேன் தமிழறிவும் இல்லையா
உங்களுக்கு தமிழ் வகுப்பு வேற எடுக்கணுமா .

எனக்கு நேரம் இல்ல . நேரம் இருக்கும் பொது தமிழ் வகுப்பும் எடுக்கிறேன்

தமிழுடன்
முத்துக்குமார்

சங்கமித்திரன் said...

எனக்கு நேரம் இல்ல . நேரம் இருக்கும் பகுத்தறிவு வகுப்பு எடுக்கிறேன்...

muthukumar said...

வாழ்க திராவிட கழக பகுத்தறிவு

தமிழுடன்
முத்துக்குமார்

சங்கமித்திரன் said...

திராவிட கழக இல்லை நண்பா.... திராவிடர் கழக.....ர் விட்டுவிட்டீரே? ஒரு 'ர்' எடுத்ததன் விளைவு...ஒரு பார்ப்பனர் திராவிட இயக்கத்தின் தலைவர் ஆகிவிட்டார்.......எனவே சொல்லும்போது....கொஞ்சம் பார்த்து சொல்லுங்கள் தோழா

நம்பி said...

நல்லதந்தி said...

//அதாவது Tamilnadu என்று கடைசியில் "U" சேர்க்காமல் Tamilnad என்று மாற்றுங்கள் என்றுதான் சொன்னார். மற்ற மாநிலத்தவர்கள் தமிழ்நாட் என்று உச்சரிக்க எளிதாக இருக்குமென நினைத்தார்.//

சரி இது உண்மையாகவே இருக்கட்டும். ஆனாலும் பித்தலாட்ட எண்ணமாகத்தானே இருக்கிறது. "தமிழ்" என்ற வார்த்தையில் உள்ள எழுத்துக்களே மாறிவிட்டபிறகு அப்புறம் என்ன?

"தமிழ்" "Tamil-டமில்" என்று தானே மாற்றி உச்சரிக்கப்படுகிறது. அதற்காக "தமிழ்" என்பதை மாற்றி "டமில்" என்று மாற்றுங்கள் என ராஜாஜி சொல்லுவாரோ? மற்றவர்கள் சொல்லுவதற்கு எளிமையாக இருக்கவேண்டும் அதற்காக "ழ்" சேர்க்காதீர்கள் வேண்டுமானால் "ல்" சேர்த்து "தமில்" என்று வைத்தால் நலம். "தமில்நாட்" என்று வைத்தால் தான் சரியாக இருக்கும்! என்று கூறுவாரோ? என்ன? முதலைமச்சர் ராஜாஜி இந்தளவுலதான் இருந்தாரா?

இதற்கு u போட்டதினால் என்ன? u வருகின்ற பெயர்களை எல்லாம் மாற்ற சொல்லியிருப்பாரோ?

மற்ற மாநிலத்தவர்களை எல்லாம் ராஜாஜி, தமிழ் மொழிக்காரர் கூப்பிடுவதற்கு கடினப்படுவார்கள், ஆகையால் வடமொழி மாநிலங்கள் பெயர்களை எல்லாம் மாற்ற சொல்லுவாரோ? என்ன இது பித்தலாட்டம்.

எல்லா நாடுகளும் அப்படியா? எல்லா நாட்டினரும் பிற நாட்டினர் உச்சரிப்பதற்கு ஏற்றார்போல் தான் பெயர்களை சூட்டியுள்ளனவா?.

அவர்கள் மொழியில் தான், உச்சரிப்பில் தான் பெயர்கள் வைக்கிறார்கள், அவர்கள் மொழியில் மற்ற நாட்டினர் கூப்பிடுவதற்கு கடினமாக இருந்தாலும் மாற்றாமல் வைக்கின்றனர்.

என்ன? ஜப்பான் காரர், கொரியா காரர், இன்னும் இதர நாட்டினர் எல்லாம் எல்லா நாட்டினரின் வசதிக்காகவுமா? பெயர்கள் சூட்டுகின்றனர்.

தமிழ் நாட்டில் வாழும் தமிழ் மொழியினருக்காகத்தான் இந்த பெயர். அவர்கள் வாழும் பகுதியை அடையாளப்படுத்துவதற்காகத்தான் இந்த பெயர். வட மொழிக்காரர்களுக்காக அல்ல.

Surya Vaishnav said...


பிராமணர்கள் தமிழர்களே கிடையாது, தமிழுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல பலர் பேசுகிறார்கள் ஆனால் தமிழ் வளர்த்த பிராமணர்கள் பற்றி கொஞ்சமேனும் நினைவு கொள்வது நம் வரலாற்றறிவுக்கு நல்லதல்லவா!
சங்ககாலம்

1. அகஸ்தியர்
2. தொல்காப்பியர் (காப்பியக்குடி என்னும் கபிகோத்திரத்தார்)
3. ஜயன் ஆரிதனார் (ஹரித கோத்திரத்தார்)
4. கபிலர்
5. கள்ளில் ஆத்திரையனார் (ஆத்ரேய கோத்திரத்தார்)
6. கோதமனார்
7. பாலைக் கெளதமனார்
8. ஆமூர்க் கெளதமன் சாதேவனார் (கெளதம கோத்திரம்)
9. பிரமனார்
10. மதுரை இளங்கண்ணிக் கெளசிகனார் (கெளசிக கோத்திரம்)
11. மதுரைக் கெளணியன் பூதத்தனார் (கெளண்டின்ய கோத்திரம்)
12. மாமூலனார்
13. மதுரைக் கணக்காயனார்
14. நக்கீரனார்
15. மார்க்கண்டேயனார்
16. வான்மீகனார்
17. கடியலூர் உருத்திரங் கண்ணனார் (பட்டினப்பாலை)
18. வேம்பற்றூர்க் குமரனார்
19. தாமப் பல்கண்ணனார்
20. குமட்டுர்க் கண்ணனார்

இடைக்காலம்

21. மாணிக்கவாசகர்
22. திருஞானசம்பந்தர்
23. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்
24. பெரியாழ்வார்
25. ஆண்டாள்
26. தொண்டரடிப்பொடியாழ்வார்
27. மதுரகவி
28. நச்சினார்க்கினியர் (பாரத்துவாசி)
29. பரிமேலழகர்
30. வில்லிபுத்தூரார்
31. அருணகிரிநாதர்
32. பிள்ளைப் பெருமாளையங்கார்
33. சிவாக்ரயோகி
34. காளமேகப் புலவர்

பிற்காலம்

35. பெருமாளையர்
36. வீரை ஆசுகவி (செளந்தர்யலகரி மொழி பெயர்த்தவர்)
37. வேம்பற்றூரார் (பழைய திரவிளையாடலாசிரியர்)
38. நாராயண தீக்ஷிதர் (மகரநெடுங்குழைக்காதர் பாமாலை)
39. கோபாலகிருஷ்ண பாரதியார்
40. கனம் கிருஷ்ணையர்
41. அரியலூர்ச் சடகோப ஐயங்கார்
42. கஸ்தூரி ஐங்கார் (கார்குடி)
43. சண்பகமன்னார்
44. திருவேங்கட பாரதி (பாரதி தீபம் நி கண்டு)
45. வையை இராமசாமி சிவன் (பெரியபுராணக் கீர்த்தனைகள்)
46. மகாமகோபாத்தியாய டாக்டர் சாமிநாதையர்
47. சுப்ரமண்ய பாரதியார்
48. பரிதிமாற் கலைஞர் (வி.கோ.சூ)
49. சுப்பராமையர் (பதம்)
50. முத்துசாமி ஐயங்கார் (சந்திரா லோகம்)
51. ரா.ராகவையங்கார்
52. பகழிக் கூத்தார்
53. வென்றிமாலைக் கவிராயர்
54. வேம்பத்தூர் பிச்சுவையர்
55. கல்போது பிச்சுவையர்
56. நவநீதகிருஷ்ண பாரதியார்
57. அனந்தகிருஷ்ணஐயங்கார்
58. திரு, நாராயணசாமிஐயர்
59. மு.ராகவையங்கார்
60. திரு. நா.அப்பணையங்கார்
61. வசிஷ்டபாரதி (அந்தகர்)
62. கவிராஜ பண்டித கனகராஜையர்
63. பின்னத்தூர் அ.நாராயணசாமிஐயர்
64. ம.கோபலகிருஷ்ணையர்
65. இவை.அனந்தராமையர்
66. நா.சேதுராமையர் (குசேல வெண்பா)
67. கோவிந்தையர் (மாணிக்கவாசகர் வெண்பா)
68. வ.வே.சு.ஐயர்
69. கி.வா.ஜகந்நாதையர்
70. அ.ஸ்ரீநிவாசராகவன்
71. ஸ்வாமி சாதுராம்
72. திராவிடகவிமணி வே.முத்துசாமி ஐயர்.

நன்றி : Unmai SudumBy: சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?

Bajji said...

poda vennai. Nee naasama povathu uruthi.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]