வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, October 09, 2010

ஆர்.எஸ்.எஸ். என்பது ஒரு பிற்போக்கு அமைப்பு -ராகுல் காந்தி

ராகுல் காந்தி - ஒரு பார்வை -
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல்காந்தியின் செயல்பாடுகள் _ கூறிவரும் கருத்-துகள் பலவகைப்பட்டதாகும்.

இதுவரை அவர் கூறிவந்த கருத்துகள் எப்படி இருந்திருப்பினும், அண்மையில் அவர் தெரிவித்துள்ள கருத்துகள், அந்த இளைஞரைக் கொஞ்சம் அண்ணாந்து பார்க்கச் செய்துவிட்டன.
கருநாடக மாநிலம் பசுவனக்குடி கல்லூரி மாணவர்கள் மத்தியிலே அவர் தெரிவித்த கருத்துகள் - _ மாண-வர்களின் கேள்விகள் முக்கியத்துவம் வாய்ந்தவையே.
(டெக்கான் ஹெரால்டு _ 15.8.2010) இதுகுறித்து விளக்கமாகவே தெரி-விக்கிறது.
இந்திய மக்களிடையே மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று சமூகநீதி _ இடஒதுக்கீடு; இதுகுறித்து சூடான வாக்குவாதங்கள் நடைபெற்றுள்ளன.

எடுத்த எடுப்பிலேயே ஓர் உண்மையை வெடிகுண்டெனத் தூக்கிப்போட்டார். இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பாக இருப்பவர்கள் பெரும்-பாலும் கிராமப்புறங்களில் இருந்து-வந்தவர்கள் அல்லர் என்றார்.

பயிற்றுவிக்கும் திசையில் வளர்ச்சி ஏற்பட செய்யப்பட வேண்டியது என்ன? என்ற வினாவை ராகுல் தொடுத்த நேரத்தில் ஒரு மாணவி எழுந்திருந்து, முதலில் ஜாதி அடிப் படையிலான இடஒதுக்கீட்டைத் தடுத்து நிறுத்துங்கள்! என்று அக்னி துண்டை வீசினார். இடஒதுக்கீடு பேரால் தகுதி திறமை வாய்ந்தவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது; திறமை வாய்ந்த மாணவர்கள் விரக்தியடைந்துள்-ளனர்; என்றும் அவர் மேலும் கூறினார். மிகவும் அமைதியாக ராகுல் விடையளித்தார். நீண்ட காலமாக ஒடுக்கப்பட்ட மக்கள் புறக்கணிக்கப்-பட்டு வந்திருக்கின்றனர். தாழ்த்-தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்ட-வர்-களும் நாட்டில் எத்தனை விழுக்-காடு என்று உங்களுக்குத் தெரியுமா? கிட்டதட்ட அவர்கள் 70 விழுக்காடு ஆவார்கள்.

இந்த அரங்கத்துக்குள்ளே கூடியிருக்கும் உங்களில் எத்தனைப் பேர் தாழ்த்தப்பட்டவர்கள் _ பிற்படுத்தப்பட்டவர்கள்? கொஞ்சம் கைகளை உயர்த்துங்கள் என்று கேட்டார். தூக்கியவர்களின் எண்-ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்-தது. அடுத்து பொதுத் தொகுதியில் (Open Competition) போட்டியிடக் கூடியவர்கள் கைகளை உயர்த்-துங்கள் என்றார். பெரும்பாலோர் கைகளை உயர்த்தினர்.
அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்-படுத்தி நறுக்கென்று தைப்பதுபோல மண்டையில் ஒரு அடி அடித்தார் ராகுல்காந்தி. இடஒதுக்கீடு தேவை-யின் அவசியத்தை நீங்கள் உயர்த்திய கரங்களே _ எண்ணிக்கைப் பலமே நிரூபித்துவிட்டன என்றார்.

இன்னொரு மாணவி எழுந்தார். ஜாதி வாரியாக இடஒதுக்கீடு அளிப்பதற்குப் பதிலாக தாழ்த்தப்-பட்டோர் மற்றும் பிற்படுத்தப்-பட்டோரை தகுதி உடையவர்களாக ஆக்குவதற்கு முயற்சி செய்யக் கூடாதா? என்று வினாவைத் தூக்கி எறிந்தார். அதற்கான செயல் முறைகள் மேற்கொள்ளப்பட்டுதான் வருகின்றன என்று பதில் அளித்தார்.
சமூகநீதி, இடஒதுக்கீடுப் பிரச்-சினையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கக் கூடிய ஓர் இளைஞரின் கருத்து எதுவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு சமூகநீதிச் சிந்தனையாளர்களிடம் இருக்கவே செய்தது. அவர்களின் நெஞ்சில் எல்லாம் பால் வார்க்கும் வகையில் ராகுல் காந்தியின் கருத்து இருப்பது
நன்னம்பிக்கையை ஏற்படுத்துகிறது. பெரும்பாலும் உயர்ஜாதியினர் சூழ்ந்த அரங்கில் அவர் கேள்விகளை எதிர் கொண்ட விதம் பெருமிதமாக இருக்கிறது. அந்த இடத்திலேயே உயர் ஜாதிக்காரர்கள் எப்படி எல்லாம் ஆதிக்கம் செலுத்து-கிறார்கள் என்பதை ஒரு சோதனை வைத்து நிரூபித்தது, அவரின் சமயோசித அறிவுக்கும் சான்று பத்திரமாகும். அவர்களையே சோதனைச் சாலையாக்கி கைகளை உயர்த்தச் செய்து நிரூபித்தது நல்லதோர் அணுகுமுறையாகும். ராகுல் காந்தி சொன்னது வெறும் குத்து மதிப்பான தகவல்கள் அல்ல; உண்மையான _ புள்ளி விவரங்கள் அதைத்தான் பேசுகின்றன.

1999_ 2000 ஆம் ஆண்டுக்கான தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு நிறுவனம் (NSSO) என்ன கூறுகிறது?

2.24 லட்சம் பேர்களிடம் எடுக்கப்-பட்ட கணக்கெடுப்பு _ அது தொழில் நுட்பம் சாராத பட்டப் படிப்பு விவரம்:

பார்ப்பனர்கள் _ உயர்ஜாதியினர் 66 விழுக்காடு.
மருத்துவப் பட்டதாரிகளில் பார்ப்பனர்கள் 65 விழுக்காடு.

பொறியியல் மற்றும் தொழில் நுட்பப் பட்டதாரிகளில் பார்ப்பனர்-கள் 67 விழுக்காடு; விவசாயப் பட்டப் படிப்பில் பார்ப்பனர்கள் 62 விழுக்காடு.

டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக பொருளாதாரப் பேராசிரியர் மற்றும் பல்கலைக் கழக மான்யக் குழுவைச் சேர்ந்தவர்கள் எடுத்த புள்ளி விவரம் கூறுவது என்ன?

டாக்டர் சத்தியோ தோராத் (இந்து ஏடு 7.12.2006) 1.51 லட்சம் பேர்களிடம் எடுக்கப்பட்ட புள்ளி விவரம்.

பொறியியல் பட்டதாரிகள் 1359இல் பார்ப்பனர்கள் 908;

பிற்படுத்தப்பட்டோர் 202.
535 டாக்டர்களில் பார்ப்பனர்கள் 350; பிற்படுத்தப்பட்டோர் 56.
தொழில் நுட்பம் சாராத பட்ட-தாரிகள் 17,501இல் பார்ப்பனர்கள் 11,529; பிற்படுத்தப்பட்டோர் 2402.
உயர்கல்வி பெறுவோர் விழுக்காடு; தாழ்த்தப்பட்டோர் 5 சதவிகிதம்; பிற்படுத்தப்பட்டோர் 7 சதவிகிதம்; உயர் ஜாதியினர் 20 சதவிகிதம்.
பெண்கள்

உயர்கல்வியில் தாழ்த்தப்பட்டோர் 3.93 சதவிகிதம்; பிற்படுத்தப்பட்டோர் 4.70 சதவிகிதம்; உயர் ஜாதியினர் 16 சதவிகிதம்.

இதுபோன்ற ஏராளமான புள்ளி விவரங்கள் உண்டு. உண்மைக்கு மாறாகப் பார்ப்பனர்கள் பம்மாத்து அடிப்பதை ராகுல் காந்தி புரிந்து கொண்டு இருப்பது வரவேற்கத்தக்கது.
அவரைச் சுற்றியுள்ளவர்கள் உயர் தட்டு மக்களாக இருந்தும், அந்தச் சங்கிலியை அறுத்துக் கொண்டு உண்மையின் பக்கம் கண்களைத் திருப்பி உரத்துக் கூறியதற்கு மீண்டும் பாராட்டுகள்.

இரண்டாவதாக, ராகுல்காந்தி தெரிவித்த கருத்து பகுத்தறிவுச் சிந்தனையில் பாராட்டத்தக்கதாகும்.

மத்தியப்பிரதேசம் போபாலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி குறிப்பிடத்தகுந்ததாகும்.

வருங்கால பிரதமர் நீங்கள்தானே என்கிற வகையில் வினாக்கள் எல்லாம் வித்தாரம் பேசின -_ அவற்றிற்-கெல்லாம் சற்று வழுக்கிய மாதிரியே பதில் அளித்தார். டாக்டர் மன்மோகன்சிங் சிறந்த பிரதமர்தான் என்று சான்றுப் பத்திரம் வழங்கினார்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்து நேரடியாக இன்னொரு கேள்வியை செய்தியாளர்கள் விடுத்தனர்.

நீங்கள் பிரதமராவது என்பது உங்கள் தலைவிதியாக இருந்தால்.. என்று இழுத்தனர்.
மண்டையில் அடிகொடுத்தது போல பதிலடி கிடைத்தது ராகுல்காந்தியிடமிருந்து.
தலைவிதி என்பது பழைமைவாதி களின் நம்பிக்கை. உண்மையில் கடின உழைப்பில்தான் எனக்கு மிக நம்பிக்கை; கடின உழைப்புக்கு எவ்வித மாற்றும் கிடையாது. கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வினால் மட்டுமேதான் நம்மால் முன்னேற்றம் அடைய முடியும் என்று முத்தான பகுத்தறிவுச் சாட்டையடி கொடுத்து செய்தி-யாளர்களைத் திணற அடித்தார்.

இந்துப் பழைமைவாதிகளுக்கு சனாதனிகளுக்கு, சங்பரிவார்க் கும்பலுக்குச் சரியான சூட்டுக்கோலை இதன் மூலம் பழுக்கவே கொடுத்-துள்ளார்.

ராகுல் காந்தியின் நெற்றியில் சதா சிவப்புச் சின்னம் (குங்குமம்) பளிச்-சிடுகிறது.
ஏதோ ஒரு கட்டத்தில் அவரை இந்துத்துவா பக்கம் சாய்த்துவிடலாம் என்று வெற்றிலைப் பாக்கை போட்டுக் குதப்பிக் கொண்டு இருந்த வட்டாரத்துக்கு ராகுல்காந்தியின் இந்தப் பதில் அதிர்ச்சியைத்தான் கொடுத்திருக்கும் என்பதில் அய்யமில்லை.

எல்லாம் அவாள் அவாள் தலை எழுத்து, கர்மபலன், விதியின் விளையாட்டு என்று கூறி வித்தாரம் பேசியவர்கள், ஓர் இளம் தலைவர் இப்படி பேசுகிறாரே -_ இவரை எதிர்கால இந்தியாவின் பிரதமர் என்கிறார்களே- _ அப்படியென்றால், நம் எதிர் காலத்தின் நம் கெதி பூச்சியம் என்று பூச்சியர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த நிலைக்காக ராகுல்காந்தியின் சமூகநீதி குரலுக்காக, விதியை மட்டை ரெண்டு கீற்றாகக் கிழித்துக் காட்டியதற்காக சமூகநீதியாளர்-களும், பகுத்தறிவாளர்களும் பாராட்-டுகிறோம் _ பல படப் பாராட்டு-கிறோம்.

முஸ்லிம்களின் சிமி இயக்கத்தோடு ஆர்.எஸ்.எஸ் அமைப்பை ஒப்பிட்-டுப் பேசி விட்டாராம் ராகுல்காந்தி _ அது எப்படிப் பேசலாம் என்று அத்திரி பாட்சா கொழுக்கட்டை என்று தாவிக் குதிக்கிறார்கள் பா.ஜ.க. _ சங்பரிவார் வட்டாரங்கள்.
தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கம் சிமியுடன் ஆர்.எஸ்.எசை எப்படி ஒப்பிடலாம் என்று வினா தொடுக்கிறார் பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவகூர்.

இதைப் படிக்கும்பொழுது வாயால்சிரிக்க முடியவேயில்லை.

மூன்றுமுறை தடை செய்யப்பட்ட ஒரே இயக்கம் ஆர்.எஸ்.எஸ். இந்த யோக்கியதையில் தடை செய்யப்-பட்ட சிமி.யுடன் ஒப்பிடலாமா என்று ஒரு செய்தி தொடர்பாளர் கூறுகிறார் என்றால், அக்கட்சியின் பொது அறிவு எந்த மட்டத்தில் இருக்கிறது என்பதை எளிதில் புரிந்து கொள்ள லாமே!

ஆர்.எஸ்.எஸ். என்பது ஒரு பிற்போக்கு அமைப்பு என்று வெளிப்-படையாகச் சொன்னதற்காகவும் ஒருமுறை ராகுல்காந்தியைப் பாராட் டுவோம்.
கலி. பூங்குன்றன்
பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்
விடுதலை ஞாயிருமலர் (09 . 10 .2010)


4 comments:

ஒசை said...

தமிழ் இன படுகொலைக்கு துணை போன சோனியா, ராகுல் வகையறாகள் இன்று நல்லவர்கள் ஆகிட்டாங்க. ஆர்.எஸ்.எஸ்ஸை இங்க விமர்சிக்க ராகுல் தேவைபடுறாரு. வேற ஆள் கிடைக்கலயா.வெட்கமா இல்ல.

பரணீதரன் said...

உங்களை போன்றவர்கள் இருக்கும்போது நாங்கள் வெட்கப்பட்டு தான் ஆகவேண்டியுள்ளது.....ஆர்.எஸ்.எஸ் என்ற கொடிய நோய் இங்கு பரவாமல் இருக்க சமூகநீதிக்கு குரல் கொடுப்பவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவது திராவிடர் இயக்கத்தின் கொள்கை.

பொன் மாலை பொழுது said...

ஆர். எஸ். எஸ். ஒரு பிற்போக்கு அமைப்புதான் என்பதில் எங்களுக்கு சந்தேகம் இல்லை.
சிமியை நீங்கள் முற்போக்கனா அமைப்பாகவே கருதுகிறீர்கள் இல்லையா? ஏனனில் அவர்கள் இந்துக்களின் எதிரிகள்.
சிறுபான்மையினர் என்ற கேடயம் வேறு, "சிமியைப்போல ஆர். எஸ் .எஸ், ம் ஒரு பிற்போக்கு அமைப்பு " என்றுதான் ராகுல் சொன்னது. வசதியாக ஒன்றை மறைத்துவிட்டு மற்றதை மட்டும் கொண்டாவேண்டியது உங்களுக்கு உள்ள உரிமை . ஆனால் அது உண்மையாக இருக்க வேண்டியதில்லை. ராகுல் காந்தியின் கருத்துக்களால் பெருமை கொள்ள உங்களுக்கு ஒன்றுமில்லை.

ராஜ நடராஜன் said...

ஒரு இயக்கத்தின் சார்பில் நின்று கொண்டு பக்க பார்வை பார்க்காதீர்கள்.முழு இடுகையும் ராகுலின் ஆவர்த்தனம் மட்டுமே தெரிகிறது.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]