விடுதலைப்புலிகள் இயக்கம் சமாதியாகிவிட்டது; அதற்குக் கல்லறை எழுப்பி யாகிவிட்டது; இந்த நிலையில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியும், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வும் வீணாக அதுபற்றிக் கட்டி அழுகிறார்கள் என்பது இந்தக் கார்ட்டூனின் நோக்கம்.
ஈழத் தமிழர்களின் வாழ் வுரிமைக்காகக் குரல் கொடுக் கும் அமைப்புகளும், அதன் தலைவர்களும் கேட்கும் வினாவை ஏதோ ஒரு வகை யில் தினமலரும் வழிமொழி கிறது என்று கருதலாமே!
அவர்களின் கருத்துப் படியே சமாதி செய்யப்பட்டு விட்ட ஒரு இயக்கத்துக்கு ஏன் தடைகளை விதித்துக் கொண்டு இருக்கிறார்கள்?
இன்னொரு வகையிலே இதே கார்ட்டூனைக்கூட கொஞ்சம் மாற்றிப் போட லாமே தினமலர்... தமிழர் தலைவர் வீரமணி மற்றும் வைகோ ஆகியோரின் படங் களை எடுத்துவிட்டு, அந்த இடத்தில் பிரதமர் மன் மோகன்சிங் படத்தைப் போட்டு தடை விதிப்புமூலம் - கல்லறைக்குப் போன வர்களுக்கு உயிர் கொடுக் கிறார் என்று போடலாமே!
ஏன் போடவில்லை? விடுதலைப்புலிகள் என்ற பேச்சே இருக்கக்கூடாது. புலிகள் என்ற ஒரு வார்த்தை யைக் கேட்கும் மாத்திரத்தி லேயே சிங்களக் கூட்டமும், இந்தியாவில் உள்ள அவர் களின் இனத்தைச் சேர்ந்த வர்களுமான பார்ப்பனர் களும் சப்த நாடிகளும் ஒடுங்கி விடுகிறார்கள்.
சிங்களவர் ஆரிய இனத் தைச் சேர்ந்தவர்கள் என்பது வரலாற்று உண்மை. ஒருமுறை ஜெயவர்த்தனே கூட என் மூக்கும் இந்திரா காந்தியின் மூக்கும் ஒரே மாதிரியாக இருக்கும் - காரணம் நாங்கள் இருவரும் ஒரே ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்ல வில்லையா?
விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்படு கிறது என்ற போர்வையில், வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ள ஈழத் தமிழர் கள்மீது ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தவேண்டும்; ஈழத் தமிழ்- இளைஞர்கள் விடு தலைப்புலிகள் கண்ணோட் டத்தில் கண்காணிக்கப்பட வேண்டும் என்ற தீய நோக்கம்தானே இதில் பதுங்கி இருக்கிறது?
தமிழ்நாட்டிலும், இந்தியா விலும் ஈழத் தமிழர்கள் பற்றிப் பேசினாலோ, அதன் விடு தலைப்புலிகளுக்கு ஆதர வான பேச்சு - கருத்து என்று கூறி சம்பந்தப்பட்டவர்கள்மீது சட்டத்தை ஏவச் செய்யவேண் டும் என்ற கொடூர ஈனப் புத்திதானே இதன் பின்னணி யில் இறக்கை கட்டிப் பறக்கிறது.
சோவாக இருந்தாலும், குருமூர்த்தியாக இருந்தாலும், இந்து ராம் ஆனாலும், தினமலர் வகையறாக்கள் ஆனாலும் புலிகள் என்றாலே கிலி அடையக் காரணம் என்ன?
இனத் துவேஷம்! இனத் துவேஷம்!! இனத் துவேஷம் தான்!!!
ஆதிக்க இனம் இன் னொரு இனத்தை ஒடுக்க ஒடுக்கப் புலிகளும், சிங்கங் களும், சிறுத்தைகளும் தோன்றிக் கொண்டேதான் இருப்பார்கள் என்பதைத் தினமலர் கூட்டம் உண ரட்டும்!
1 comment:
விடுதலை புலிகள் வென்றிருந்தால் தமிழ்நாட்டு மற்றும் ஈழத்து தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தனித்தமிழ் நாடு உருவாக்கிவிடுவார்களோ என்ற பயத்தினால்தால்தான் அவர்கள் அடியோடு சாய்க்கப்பட்டனர் என்பது என் கருத்து. இதே பயத்தின் காரணமாகத்தான் தமிழர்களை அழிப்பதில் குறியாய் இருந்த நடுவன் அரசிற்கு இந்திய கேரள நாய்களும் கூஜா தூக்கியது. மற்றபடி சிங்களவர்கள் தாங்கள் ஆரிய இனத்தின் தூரத்து உறவினர் என்பதெல்லாம் இந்திய ஆரிய ஆளும் வர்க்கத்தை வசியப்படுத்த உருவாக்கிய கட்டுக்கதை என நினைக்கிறேன்.
எது அப்படியோ, எந்த சிங்களவர்களுக்கு இந்திய நடுவன் அரசு புலிகளை சாய்க்க உதவியதோ, அதே சிங்கள நன்றி கெட்ட துரோகி இனத்தால் தென் இந்தியா முழுவதிற்கும் இப்போது ஆபத்து உருவாகியிருப்பது தின்னம்.
Post a Comment