வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, October 28, 2010

கோயில்கள் ஏன் தோன்றின? எதற்குத் தோன்றின?

கோயில்கள் ஏன் தோன்றின? எதற்குத் தோன்றின? அதன் பின்னணி என்ன? என்பதற்குப் பெரிய ஆராய்ச்சிகள் எல்லாம் தேவையில்லை.

உத்தரப்பிரதேசத்திலே இங்கிலீசுக்குக் கோயில் தோன்றியுள்ளதே - திருச்சியில் நடிகை குஷ்புக்குக் கோயில் கட்டப்பட்டதே, ஈரோட்டில் காந்திக்குக் கோயில் கட்டப்பட்டுள்ளதே - இவற்றின்மூலம் உண்மை நிலையைத் தெரிந்து கொண்டுவிடலாம்.

கடவுளுக்கும் சக்தி, ஒவ்வொரு கோயிலக்கும் எழுதி வைக்கப்பட்டுள்ள தல புராணங்கள் எல்லாம் நெய்யில் பொரித்த பச்சைப் பொய் - கலப்படமற்ற பொய் என்பது அறிவைப் பயன்படுத்தும் எவரும் எளிதில் புரிந்துகொள்ளலாம்.

உண்மையில் கோயில்கள் ஏன் தோற்றுவிக் கப்பட்டன என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டு மானால் சாணக்கியன் எழுதிய அர்த்தசாஸ்திர நூலைப் படித்தால் தெரிந்துகொள்ளலாம்.

கோயில்கள் அரசன் வருவாய்க்காக ஏற் படுத்தப்படவேண்டும் என்பதுதான் சாணக்கியன் சொல்லிச் சென்ற தந்திரம்.

ஓர் இரவு ஒரு தெய்வத்தையோ, படத்தையோ ஏற்படுத்தவேண்டியது; அல்லது ஒரு கெட்ட சகுனத்தைப் போக்கிட (தீயவை நடக்காவண்ணம் தடுக்கும் பொருட்டு) திருவிழாக்களும், கூட்டங் களும் நடத்துவதாகப் பாசாங்கு செய்து பொது மக்களிடமிருந்து அரசனது செலவுக்குப் பணம் வசூலிக்கலாம்.

(சென்னை தியாகராயர் நகரில் திடீர் பிள்ளையார் தோன்றியதாகப் புரளி செய்து, உண்டியல் வசூல் செய்த நிலையில், தந்தை பெரியார் அவர்களின் கடுமையான எச்சரிக் கைக்குப் பிறகு - உண்டியலும், திடீர்ப் பிள்ளை யாரும் பறிமுதல் செய்யப்பட்டதே - அதனை இந்த இடத்தில் நினைவுபடுத்திக் கொள்க! - இந்தப் பித்தலாட்டங்களுக்கு காஞ்சிபுரம் சங்கராச்சாரி யார் சந்திரசேகரேந்திர சரசுவதி ஆமாம் போட்டார் என்பதையும் கவனத்தில் கொள்க!).

சாதாரணமாக மிக வெளிப்படையான தந்திரங்கள்தான் பலன் அளிக்கின்றன. கடவுள் தம்மூலம் பேசுவதாகப் பாசாங்கு செய்து, பணம் திரட்டும் வழி முன்காலத்தில் மற்ற நாட்டுப் புரோகிதர்களால் கையாளப்பட்டு வந்தது. ஆனால், இந்தியாவில் இன்னும் அவ்வழக்கம் ஓயவில்லை. இங்கு விக்ரகங்களே பேசுகின்றன. இவற்றை வழிபடுகிறவர்கள் மிகக் கவனமாகக் கேட்டுப் பரவசமடைகிறார்கள். ஆனால், கர்ப்பக் கிரகத்தின் உள்ளோ, பக்கத்திலோ வஞ்சகன் ஒருவன் மறைந்திருந்து விக்கிரகத்தின் வாய் வழியாகப் பேசுகிறான் என்பதை இவர்கள் அறிவதில்லை என்கிறார் ஆபேடூபே.
இத்தகைய கோயில்களில் பார்ப்பனர்கள் புகுந்து கொண்டு தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கு மார்க்கம் தேடிக் கொண்டுவிட்டனர்.

கோயில் என்றால், அதற்குள் அடித்து வைக்கப் பட்ட விக்ரகங்கள் என்றால் பொது மக்களிடம் பக்தியும், பயமும், மரியாதையும் திட்டமிட்டு வளர்க்கப்பட்ட சூழ்நிலையில், யாரையாவது பெருமைப்படுத்தவேண்டுமானால், அவர்களுக்குக் கோயில் கட்டுவது என்பது ஒரு வழமையாகி விட்டது.

ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்திட ஆங்கிலத் தேவி எனும் பெயரால், உத்தரப்பிரதேசம் கிரி மாவட்டத்தில் கோயில் எழுப்பப்பட்டு வருகிறதாம்.
மற்ற மற்ற கோயில்களில் எந்த முறையில் வழிபாடு நடத்தப்படுகிறதோ அந்த முறையில் இந்த ஆங்கிலத்தேவி கோயிலிலும் வழிபாடு நடத்தப் படுமாம்.
இன்னும் கொஞ்ச நாள்களில் இந்தத் தேவி பற்றி தல புராணங்கள் எழுதப்பட்டுவிடும். தேவி கனவில் வந்து சிலவற்றைக் கூறினாள் என்று அற்புதங்கள் அடங்கிய கதைகளைக் கட்டி விடுவார்கள்.

ஆண்டுதோறும் தேர்த்திருவிழா என்ற வைபவங்கள் வந்து சேரும்.
தொடர்ந்து இது கிறித்துவக் கோயிலா, இந்துக் கோயிலா என்ற ரகளையும் ஏற்படும்.
கோயில்கள் தோன்றியதற்குப் பின்னணியில் அற்புதமோ, அசைக்க முடியாத சக்தியோ எந்தப் புண்ணாக்கும் கிடையாது; எல்லாம் பொய்யும், புனை சுருட்டும், பிழைப்பதற்கு வழியும், பித்த லாட்டமும்தான் என்பதைக் கண்ணெதிரே நடை பெறும் இந்தப் புழுதிக் கூத்துக்களின் மூலமாக வாவது தெரிந்துகொள்வார்களாக!

--------- நன்றி விடுதலை தலையங்கம் (28-10-2010)

4 comments:

ADAM said...

GOOD ARTICAL

smart said...

//அதன் பின்னணி என்ன? என்பதற்குப் பெரிய ஆராய்ச்சிகள் எல்லாம் தேவையில்லை//
இந்த வரிகளைப் படித்தவுடனே தெரிந்துவிட்டது உங்கள் பதிவு கண்முடித்தனமானது என்று இதற்கு எந்த ஆராய்ச்சியும் தேவையில்லை.

குஷ்புக்கு கோவில் கட்டியது, கலைஞருக்கு கோவில் கட்டியதெல்லாம் கணக்கில் எடுத்துப் பார்ப்பது ஆகாம விதிகள் படிக் கட்டிய கோவில்களுக்குப் பொருந்தாது என்பது உங்களுக்குத் தெரியாதா?

Unknown said...

மனிதன் ஏன் தோன்றினான்?

Kartheesan said...

ஆங்கில தேவி பற்றி படிக்கும்போது குலுங்கி குலுங்கி சிரித்து விட்டேன். மக்களின் நம்பிக்கையை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்கள். வாழ்க!

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]