இப்படியெல்லாம் பழைய கதை-களைத் தோண்ட ஆரம்பித்தால், அது திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கே ஆபத்து வந்துவிடும். அதற்கு ஏராளமாக ஆதாரங்கள் உண்டு. ஆய்வு நூல்களும் வெளிவந்து இருக்கின்றனவே - _ வீணாகப் புதிய புயலை உண்டாக்-கலாமா அலகாபாத் உயர்நீதிமன்றம் என்று வினா எழுப்புவோர் உண்டு.
நமக்கு ஏன் இந்த வீண் வம்பு என்று பந்தை உச்சநீதிமன்றம் பக்கம் தள்ளி, தன் பொறுப்பைத் தட்டிக் கழித்து-விட்டது அலகாபாத் உயர்நீதிமன்றம் என்பது சிலரின் கணிப்பு. 1949 டிசம்பர் 23ஆம் தேதியன்று திருட்டுத்தனமாக பாபர் மசூதிக்குள் நுழைந்து பாபர் மசூதியின் மய்யப் பகுதிக்குள் _ அதுதான் ராமன் பிறந்த இடம் என்று கூறி ராமன் பொம்-மையை வைத்தார்களே, அந்த அத்து-மீறல் திருட்டுத்தனத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு விட்டதா? அப்படி-யென்றால் மதக்காரணத்தைக் காட்டி இதுபோன்ற சட்ட விரோதமான காரி-யங்களில் ஈடுபடுவது சரிதான் _- அது ஒன்றும் குற்றமில்லை என்று உயர்நீதி-மன்றம் கூறி விட்டதாகக் கருதலாமா?
ராமன் பிறந்த இடம் அந்த இடம்தான் என்று சொன்னதன் மூலம் ராம ஜென்ம பூமிக்காரர்களின் குரலுக்கு நியாய வண்ணத்தைத் தீட்டும் ஓவியர்-களாக நீதிபதிகள் மாறி விட்டார்களா?
புராணம் மற்றும் இதிகாசங்களில் புனையப்பட்ட கற்பனைப் பாத்திரங்கள் எல்லாம் வரலாற்று மாந்தர்களாக நினைப்பதை பொது அறிவு உடைய-வர்களும், வரலாற்று ஆசிரியர்களும் எப்படி எடுத்துக் கொள்ளப் போகி-றார்கள்? அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் அமர்வு இதன்மூலம் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகும் வாய்ப்பு இருக்கிறதா _ இல்லையா?
ராமன் பிறப்பு என்பதை ஏற்கும்போது, அதே இராமாயணத்தில் ராமன் எப்படிப் பிறந்தான் என்று வால்மீகி வரைந்து தள்ளியிருக்கிறாரே -_ குதிரையோடு தசரதனின் மனைவி-மார்கள் ஓர் இரவு முழுவதும் கட்டிப் புரண்டார்கள் என்பதையும் ஏற்றுக் கொண்டுதானே ஆக வேண்டும்? புரோகிதர்களிடம் தசரதனின் மனைவிமார்கள் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள்மூலம் அப்பெண்கள் கர்ப்பம் தரித்தார்கள் என்பதையும் கனம் நீதிபதிகள் கவனத்தில் கொள்ளாமலா இருந்திருப்பார்கள்?
சட்டம் எல்லாம் தேவையில்லை -_ இது மதசம்பந்தமான நம்பிக்கைப் பிரச்சினை _ இதில் நீதிமன்றம் குறுக்கிட முடியாது _ -கூடாது என்று சங்பரிவார்க் கூட்டம் உரக்கக் கூறிக் கொண்டு இருந்ததே -_ அந்தக் கூற்றுக்கு ஆமாம் சாமி போட்டு விட்டனரா நீதிபதிகள்?
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் விடுதலை அறிக்கையில் (1.10.2010) குறிப்பிட்டி-ருந்தபடி- _ பிற்காலத்தில் இது தவறான முன்னுதாரணம் ஆகிவிடாதா? சட்டத்தை நெட்டித் தள்ளிவிட்டு, நம்பிக்கை எனும் வெளிச்சத்தில்தான் இனி நீதிபதிகள் தீர்ப்புகளை தோண்டி எடுப்பார்களோ!
சாட்சியம், ஆதாரம், ஆவணங்கள் என்பவைகளை எல்லாம் குழி தோண்டிப் புதைத்துவிட்டு நம்பிக்கை என்னும் போலிக் கோபுரங்களை எழுப்பிடும் ஆபத்துக்கு அஸ்திவாரம் போட்டுக் கொடுத்து விட்டதோ அலகாபாத் உயர்நீதிமன்றம்!
இந்த நம்பிக்கை என்பது இந்து-மதக்காரர்களுக்கு மட்டுமே உள்ள ஏகக் குத்தகையா? அதே நம்பிக்கையைக் காட்டி கிறித்தவர்களோ, முஸ்லிம்-களோ, பவுத்த மார்க்கத்தவர்களோ பிரச்சினைகளைக் கிளப்பினால் நாட்டின் கெதி என்னாகும்?
விநாயகன் கோயில்கள் எல்லாம் ஒரு காலத்தில் புத்தர் விகார்கள் அல்லவா! புத்தருக்குத்தான் விநாயகன் - _ தலைவன் என்று பெயர் இருந்தது என்பதற்கு எதிர்க்க முடியாத ஆதாரங்கள் உண்டே!
சாஸ்தா என்றுகூட புத்தருக்குப் பெயருண்டு. அந்தப் பெயரைத் திருடி அய்யப்பனுக்கு வைத்துக் கோயில் எழுப்பி விட்டனரே _ அய்யப்பன் கோயில்களை மீண்டும் புத்தர் விகார்-களாக மாற்றிட அலகாபாத் உயர்நீதி-மன்றம் பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்துவிட்டது என்று நம்பலாமா?
பாபர் மசூதி இடிக்கப்பட்ட அந்த இடத்தில்தான் ராமன் பிறந்தான் என்று நீதிமன்றம் பச்சை மையால் கையொப்-பம் போட்டுக் கொடுத்து விட்ட பிறகு பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் நியாயவான்கள் ஆகிவிட்டார்களா? இந்தத் தீர்ப்பு வெளிவந்த அந்தக் கணமே அத்தனைக் குற்றவாளிகளும் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள் என்று பொருளா?
நிலுவையில் இருக்கும் அந்த வழக்கில் அலகாபாத் தீர்ப்பு முக்கிய இடம் பெற வாய்ப்பு _ இருக்குமோ!
ஏற்கெனவே ராம ராஜ்ஜியத்தை உண்டாக்குவோம் -_ இந்து சாம்ராஜ்யத்தை நிறுவப் போகிறோம் என்று இசுரேல் வரை சென்று திட்டம் தீட்டியவர்களுக்குப் பச்சைக் கொடி காட்டப்பட்டு விட்டது என்று அந்த வெறிபிடித்த காவிக் கொடி அனுமார்கள் பூமிக்கும் வானுக்கும் தாவிக் குதிக்க மாட்டார்களா? அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் பொறுப்பு ஏற்றுக் கொள்ளுமா?
அயோத்தியைத் தவிர காசி உள்பட ஆயிரக்கணக்கான மசூதிகளின் பட்டியல் எங்கள் கைகளில் இருக்கின்றன என்று கனல் கக்கிக் கொண்டிருந்தவர்களுக்குக் கைலாகு கொடுத்துவிட்டது நீதித்துறை என்று குற்றம் சொன்னால், அது தவறாகுமா?
உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட உள்ளது. அது என்ன குண்டைத் தூக்கிப் போடப் போகிறதோ!
வேலியே பயிரை மேயலாமா என்ற கேள்வியை இனியாரும் கேட்க முடியாது! மேய்கிறது! மேய்கிறது!! மேய்ந்துகொண்டே இருக்கிறது!!!
-------- விடுதலை ஞாயிறு மலர் (03-oct-2010)
1 comment:
உங்களுடைய வலைப்பூ படித்தேன்.....அயோத்தி பற்றி சொல்லி இருக்கும் பதிவுகள் அருமை......பகிர்ந்தமைக்கு நன்றி அய்யா
Post a Comment