வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, October 13, 2010

இடிஅமீன் ராஜபக்சேவுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பா?

தமிழர்களைக் கொன்று குவித்த இடிஅமீன்
காமன்வெல்த் போட்டி நிறைவு விழாவில் தலைமை விருந்தினரா?
இளிச்சவாயர்களல்ல தமிழர்கள் உணர்வுகள் உரிய நேரத்தில் வெளியாகும்
புரிந்துகொள்ளட்டும் டில்லி அரசு! தமிழர் தலைவரின் கண்டன அறிக்கை
டில்லியில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் விளை யாட்டுப் போட்டிகளின் நிறைவு விழாவில், ஈழத் தமிழர் களைக் கொன்று குவித்த இடிஅமீன் ராஜபக்சேயை தலைமை விருந்தினராக அழைத்திருப்பதைக் கண்டித்து, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இலங்கையில் ஈழத் தமிழர்களை - அவர்கள் அந்த நாட்டின் சொந்த குடிமக்கள் என்பதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல், இன ஒடுக்கல் என்ற அடிப்படையில், அன்றாடம் அழித்து ஒழித்ததோடு, அவர்களில் உயிருடன் வாழும் மக்களை, முள்வேலிக்குள் - பட்டி யில் அடைக்கும் மிருகங்களைப்போல அடைத்து வைத் துள்ள கொடுங்கோலன் - இலங்கை அதிபர் ராஜபக் சேவை, இந்திய அரசு காமன்வெல்த் விளையாட்டின் கடைசி நாள் தலைமை விருந்தினராக அழைப்பது - மிக மிகப் பெரிய தமிழின விரோதச் செயலாகும்!

இடிஅமீன் ராஜபக்சேவுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பா?

பல நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களை இலங்கைக்குத் தந்தும், தமிழர்களின் மீள்குடியேற்றம், மறுவாழ்வு, சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் உரிமை இன்னமும் ராஜபக்சே அரசால் தமிழர்களுக்கு வழங் கப்படாத நிலையில், டில்லி அந்தக் கொடுங்கோல னுக்கு, இடிஅமீனைவிட இழிவான ஒருவருக்கு இப்படி சிவப்புக் கம்பளம் விரித்து மரியாதை செலுத்துவது மனிதநேயம் படைத்த அனைவரது கண்டனத்திற்கும், வேதனைக்கும் உரிய ஒன்றாகும்!

மத்திய ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைப்பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படாமல், ஏதோ ஒப்புக்குப் பேசுவது போன்ற நாடகங்களையே அவ்வப்போது அரங்கேற்றுகிறார் கள். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் விலையைக் கொடுக்கவேண்டிய நிலை ஏற்படலாம்!

பா.ஜ.க. போன்ற மதவெறி அமைப்புகளின் மாற்றாக காங்கிரஸ் இருப்பதால், இது பலவீனமடையக் கூடாது என்று பொதுவில் நின்று சிந்திக்கிறவர்களின் ஆத ரவுகூட மத்திய அரசின் இத்தகைய முன்யோசனை யற்ற செயல்களால் இழக்கப்படக்கூடிய நிலையே உருவாகிறது!

30 ஆயிரம் தமிழர்கள் இன்னமும் முள்வேலி முகாம்களுக்குள் வாடி வதிந்து கொண்டுள்ள நிலை!

சாக்குப் போக்குகளை நம்பத் தயாராக இல்லை

இலங்கைக் கடற்படையால் - சிங்களவர்களால் - தமிழக மீனவர்கள் தங்களது வாழ்வாதாரமான மீன்பிடித் தொழிலைச் செய்ய இயலாமல், உயிரையும் பணயம் வைத்துப் பலியாகும் பரிதாபம் அன்றாடம் தொடரும் அவலமாகி வருகிறது.

இவ்வளவுக்கும் காரணமான கல்லுளிமங்கனுக்கு இப்படி ஒரு ராஜ மரியாதை தேவையா? ஏதோ சாக்குப் போக்குக் கூறுவதுபோல், அவரிடம் நேரில் மத்திய அரசு இனிமேல்தான் வற்புறுத்தப் போவதற்காக அவரை அழைத்துள்ளது போன்று ஒரு சமாதானம் சொல்லு வதை நம்புவதற்கு நாட்டு மக்கள் தயாராக இல்லை.

அய்.நா. பொதுச்செயலாளர் பான்-கி-மூன் போன்றவர்களுக்குள்ள நடுநிலை உணர்வு, நியாயத்திற்கு வாதாடும் தன்மை மத்திய அரசுக்கு இருக்கவேண்டாமா?

தப்புக் கணக்குப் போடவேண்டாம்!

தமிழர்களை இளிச்சவாயர்கள், ஏமாந்தவர்கள் என்று எண்ணி தப்புக் கணக்குப் போடவேண்டாம்!

தமிழர்கள் உணர்வு வெளிப்படுத்தப்படவேண்டிய நேரத்தில் வெளியாகும்! புரிந்துகொள்ளட்டும் டில்லி அரசு!

தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
13.10.2010

நன்றி விடுதலை (13-10-2010)


1 comment:

Unknown said...

இலங்கை அதிபரின் வரவை எதிர்த்து,தன்மான, இனமான சிங்கங்கள் ஏன் தில்லி சென்று போராடவில்லை? கறுப்புக் கொடி காட்டவில்லை? வாய் சொல்லில் வீரரோ?

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]