Saturday, October 30, 2010
காமக் களி யாட்டப் புகழ் ஜெயேந்திரர்கள்தான் கர்ப்பக் கிரகம் செல்லத் தகுதி படைத்தவர்களா?
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதற்காகத் தந்தை பெரியார்
குரல் கொடுத்தார்; அதற்காகவே களம் கண்டார்; தந்தை பெரியார் அவர்களின்
உரிமைக் குரலுக்கு மதிப்பளித்து முதல்வர் கலைஞர் இருமுறை தமிழ்நாடு
சட்டப்பேரவையில் சட்டமும், தீர்மானமும் நிறைவேற்றியதுண்டு.
12 பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் சென்று அந்தச் சட்டத்தை முடக்கிவிட்டனர். காஞ்சி சங்கராச்சாரியார், ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) முதலியோர் இதன் பின்னணியில் இருந்தனர்.
2006 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று அய்ந் தாவது முறையாகப் பதவியேற்ற கலைஞர் அவர்கள் தேர் தலுக்கு முன்னதாக திராவிடர் கழகத்தின் நிபந்தனைக்கு மதிப்புக் கொடுத்தபடி, அமைச்சரவையின் முதல் கூட்டத் தில் முதல் தீர்மானமாக இதுகுறித்துத் தீர்மானம் நிறை வேற்றி, மீண்டும் சட்டப்பேரவையில் மசோதா புதுப்பிக்கப் பட்டது (22.8.2006).
69 விழுக்காடு இட ஒதுக்கீடுப்படி அர்ச்சகர் பயிற்சிக்கு விளம்பரம் செய்யப்பட்டது. சென்னை, திருவண்ணாமலை, திருச்சி, பழனி, மதுரை, திருச்செந்தூர் ஆகிய இடங்களில் பயிற்சியும் அளிக்கப்பட்டு, சான்றிதழ்களும் வழங்கப்பட்ட நிலையில், வழக்கம்போல பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் சென்று முட்டுக்கட்டை போட்டுள்ளனர். மதுரை அர்ச்சகர்களும், பட்டர்களும் இதில் ஈடுபட்டனர்.
வழக்கு உச்சநீதிமன்றத்தின் கிடப்பில் கிடக்கிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் வழக்கை விரைவுபடுத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த திரு. கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமை நீதிபதியாக வந்தார்; இதில் கருத்தூன்றுவார் என்று எதிர்பார்க்கப் பட்டது. வழக்கை ஒத்தி வைப்பதில்தான் மிகக் கவனமாக இருந்தார் என்பது வேதனைக்கு உரியதாகும்.
பயிற்சி பெற்ற 200-க்கும் மேற்பட்ட பல ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் வழக்கின் தீர்ப்பை எதிர்பார்த்துக் கொண் டுள்ளனர். திராவிடர் கழகம் இதுகுறித்து அரசின் கவனத் துக்கும், உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கும் கொண்டு செல்லும் வகையில் மாநாடுகளில் தீர்மானங்களை நிறைவேற்றியது.
இதற்கிடையில், திருவண்ணாமலையில் ஒரு நிகழ்வு - தமிழர்களைத் திடுக்கிட வைக்கக் கூடியதாகும். இவ் வாண்டு தந்தை பெரியார் 132 ஆம் ஆண்டு பிறந்த நாளன்று, அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் திரு. அரங்க நாதன் தலைமையில், தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
பார்ப்பனர்கள் பரபரப்பு அடைந்தனர். பெரியார் சிலைக்கு மாலையா? அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களா? இதனை எப்படி அனுமதிப்பது என்று ஆத்திரம் கொண் டனர். இந்து முன்னணிக்காரர்களைக் கிளப்பி விட்டனர். தந்தை பெரியார் சிலைக்கு மாலைஅணிவித்த - அர்ச்சகர் பயிற்சி பெற்ற பார்ப்பனர் அல்லாதவரான அரங்கநாதனை இந்து முன்னணியினர் தாக்கியுள்ளனர். காவல் நிலை யத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சரியான நடவடிக்கை இல்லை என்ற மனக்குறை தோழர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
இதே திருவண்ணாமலையில், அர்ச்சகர் பயிற்சி கொடுத்த ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டார் என்பது நினைவூட்டத்தக்கதாகும்.
இந்துக்களே ஒன்று சேர்வீர் என்று குரல் கொடுக்கும் இந்து முன்னணி வகையறாக்கள், அர்ச்சகர் பயிற்சி பெற்ற இன்னொரு இந்துவைத் தாக்குகிறார்கள் என்றால் இதன் பொருள் என்ன?
இந்து மதம் என்றால், அது பார்ப்பனர்களின் ஆதிக்கத் திற்கும், உயர்ஜாதித் தன்மையைக் காப்பதற்கு மட்டுமே உள்ளது. மற்றவர்கள் அவர்களுக்கு அடிமையாகக்கிடக்க வேண்டியவர்கள் என்ற இறுமாப்பும், எண்ணமும்தான் பார்ப்பனர்களை ஆட்டிப்படைக்கிறது என்பதுதானே இதன் பொருள்?
அர்ச்சகர் பயிற்சி பெற்ற தமிழர்களைத் தாக்குகிற அளவுக்குப் பார்ப்பனர்கள் வந்துள்ளனர் என்றால், பதிலுக்குப் பதில் தாக்குதலைத் தொடுக்க ஆரம்பித்தால் பார்ப்பனர்களின் கதி என்ன என்று சிந்திக்கவேண்டாமா? தந்தை பெரியார் மறைந்திருக்கலாம்; ஆனாலும், அவர் சிலைக்கு மாலை அணிவிக்கும் தமிழர்களைத் தாக்கு கிறார்கள் என்றால், பெரியார் ஒவ்வொரு நொடியும் பார்ப் பனர்களால் சீரணிக்கப்பட முடியாதவராகவே இருக்கிறார் என்பதுதான் முக்கியம் ஆகும்.
இவ்வளவுக்கும் அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் நாத்தி கர்களா? கடவுள் மறுப்பாளர்களா? இல்லையே - ஆன்மிக வாதிகள்தானே! பக்தியில் மூழ்கியிருக்கும் பார்ப்பனர் அல்லாதார் - தமிழர்கள் இதுகுறித்து ஆழமாகச் சிந்திக்க வேண்டாமா?
தேவநாதன் போன்ற பார்ப்பனர்கள்தான் அர்ச்சகர் களாக இருக்க உரிமை படைத்தவர்களா? காமக் களி யாட்டப் புகழ் ஜெயேந்திரர்கள்தான் கர்ப்பக் கிரகம் வரை உள்ளே செல்லத் தகுதி படைத்தவர்களா?
கோயிலுக்குள் இருக்கும் மூலக் கடவுள்கள் திருடு போவதற்குக் கோயில் அர்ச்சகர்களே உடந்தை என்று எத்தனை எத்தனை செய்திகள் வெளிவந்து கொண்டி ருக்கின்றன.
இந்த யோக்கியதையில் உள்ள பார்ப்பனர்கள், பார்ப்பனர் அல்லாதார் கருவறைக்குள் நுழைந்து அர்ச்சனை செய் தால் சாமி தீட்டுப்பட்டுவிடும். சம்ப்ரோட்சணம் செய்யவேண்டும் என்று சொல்லுகிறார்கள் என்றால், இதனை இன்னும் எத்தனைக் காலத்துக்கு அனுமதிப்பது?
பக்தித் தமிழனாக இருந்தாலும் சரி, பகுத்தறிவுத் தமிழனாக இருந்தாலும் சரி, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடலைத்தான் கவனத்தில் கொள்ளவேண்டும்.
பார்ப்பான் பால் படியாதீர்!
சொற்குக்கீழ்ப் படியாதீர்!
உம்மை ஏய்க்கப் பார்ப்பான்
...... ........... .............
பார்ப்பானின் கையை - எதிர்
பார்ப்பானையே பார்ப்பான்
தின்னப் பார்ப்பான்
தமிழர்கடன் பார்ப்பானைத்
தரைமட்டம் ஆக்குவதே
என்றுணர்வீர்!
------------------- விடுதலை தலையங்கம் (30-0ct-2010)

Thursday, October 28, 2010
ஒருங்குறி (யுனிகோட்) என்ற அமைப்புக்குள் பார்ப்பன சமஸ்கிருத ஊடுருவல்! ஊடுருவல்
முதல்வரின் முக்கிய கவனத்துக்கு...
ஒருங்குறி (யுனிகோட்) என்ற அமைப்புக்குள் பார்ப்பன சமஸ்கிருத ஊடுருவல்! ஊடுருவல்!!

தமிழர் தலைவர் சுட்டிக்காட்டும் ஆபத்து
தமிழ் ஒருங்குறியின் பயன்பாடு
ஆனால் ஒருங்குறியின் வரவினால் இணையத்தில் இருந்த இடர்ப்பாடு களையப்பட்டது. இதனால் தமிழ் இணைய தளங்கள் பெருகியதோடு, உலகம் முழுக்க தமிழர்கள் ஒரே குறியீட்டு முறையைப் பயன்படுத்தி, எண்ணற்ற படைப்புகளையும், தகவல்களையும் இணையத்தில் ஏற்றி வைத்துள்ளனர். இன்றைய தலைமுறையே கணினியைப் பெருமளவில் பயன்படுத்துகிறது என்றால், வளரும் தலைமுறை முழுக்க கணினியை அடிப்படையாகக் கொண்டே மொழியைக் கற்கும் சூழல் வரும்.
ஏற்கெனவே இத்தகைய உலகளாவிய ஒதுக்கீட்டில் தமிழ் எழுத்துகளுக்கு 128 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. அந்தக் குறுகிய அளவிற்குள்ளும் அனைத்துத் தமிழ் எழுத்துகளையும் ஒருவாறாக உள்ளே கொண்டு வந்துள்ளனர்.
அதை அதிகப்படுத்தினால் அனைத்துத் தமிழ் எழுத்துகளுக்கும் தனித்தனி இடம் ஒதுக்கி எளிமையான பயன்பாட்டை உருவாக்க முடியும் என தமிழ் கணினி வல்லுநர்கள் யுனிகோட் சேர்த்தியம் (Unicode Consortium)அமைப்பிடம் முறையிட்டு வருகின்றனர்.
பார்ப்பனர் சதி!
கிரந்தம் என்பது வடமொழியை (சமஸ்கிருதம்) எழுத தென்னாட்டில் பயன்படுத்தப்பட்டு வந்த எழுத்து முறையாகும். பல்லவர் காலத்திலும், பார்ப்பனர் ஆதிக்கம் அதிகமாக இருந்த காலத்திலும் சமஸ்கிருதத்திற்கான தேவநாகரி தவிர்த்த மற்றொரு லிபியாக கிரந்தத்தைப் பயன்படுத்தி வந்தனர். தமிழின் தனித்தன்மையை ஒழிக்க ஆரியர்கள் மேற்கொண்ட சூழ்ச்சிகள்தான் மணிப்பிரவாள நடையில் எழுதியதும் கிரந்த எழுத்துகளை பிரபலப்படுத்தியதும் ஆகும்!
தமிழும் - சமஸ்கிருதமும் ஒன்றல்ல!
இன்றும் புழக்கத்தில் இருக்கும், ஜ, ஷ, ஹ, ஸ ஸ்ரீ ஆகிய கிரந்த எழுத்துகள் தமிழ் எழுத்துகளிலும், யுனிகோட் முறையிலும் ஏற்கெனவே இடம் பெற்றுள்ளன. ஆனால் சிறீரமணசர்மா எனும் இந்தப் பார்ப்பனர் முன்வைத்துள்ள 26 கிரந்த எழுத்துகளை எந்தத் தமிழனும் படித்திருக்கவோ, பயன்படுத்தியிருக்கவோ முடியாது. காரணம் அடிவயிற்றிலிருந்து எழுப்பும்,g, gh, kh, chh, jh உள்ளிட்ட ஒலிகளை எக்காலத்திலும் தமிழர்கள் பயன்படுத்தியதே கிடையாது.
பச்சையான ஊடுருவல்!
யுனிகோட் குறியீட்டு முறையில் சமஸ்கிருதத்தின் தேவநாகரி எழுத்துக்கு முன்பே இடம் ஒதுக்கப்பட்டிருக் கிறது. அதில் கொண்டு போய் சேர்க்க வேண்டியதுதானே இந்த எழுத்துகளை! அல்லது கிரந்தத்திற்கென தனி ஒதுக்கீட்டைப் பெறவேண்டியது தானே! அது அவ்வளவு எளிதல்ல!
புதிதான ஒரு வரி வடிவத்தை சேர்க்க வேண்டுமா? என்று யுனிகோட் சேர்த்தியம் அமைப்பு கேட்கும் கேள் விக்கு, இல்லை, இது ஏற்கெனவே இருக்கும் தமிழ் வரி வடிவத்தை விரிவுபடுத்துவதற்கான பரிந்துரை என்று குறிப்பிட்டுள்ளார். இவை இம்மொழியில் இன்றும் பயன்பாட்டில் உள்ளனவா? என்ற கேள்விக்கு, ஆம். சில நேரங்களில் என்றும் சமஸ்கிருத எழுத்துகளை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்குப் பயன்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட தமிழ்
இவைதான் இன்னும் புழக்கத்தில் இருக்கின்றனவாம். இதை தமிழ் ஒதுக்கீட்டில் இணைத்து விரிவாக்கப்பட்ட தமிழ் (Extented Tamil) என்ற பெயரில் அங்கீகரிக்க வேண்டுமாம். அப்படி இவ்வெழுத்துகள் தமிழ் என்ற பெயரில் இணைக்கப்பட்டால், அது விரிவாக்கப்பட்ட தமிழாக இருக்காது. படுகொலை செய்யப்பட்ட தமிழாகத் தான் (Assassinated Tamil) இருக்க முடியும்.
காஞ்சி சங்கரமடத்தின் சூழ்ச்சி!
தமிழில் மேம்படுத்த சமஸ்கிருதப் பேராசிரியர் களிடம் கேட்பானேன்? வேலிக்கு ஓணான் சாட்சியா?
இணையத்தில் தமிழ் மிகச்சிறப்பாக வளர்ந்து வருகிறது. அடுத்தடுத்த தலைமுறையினர் தமிழ் கணினியில் பெரும் சாதனைகள் செய்கிறார்கள் என்ற பொறாமையில் நடத்தப்படும் திட்டமிட்ட பண்பாட்டுப் படையெடுப்பே இது! இச்செய்தியறிந்ததும் உலகத் தமிழர்கள் கடுமையாக தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.
தமிழக அரசு - முதல்வரின் கவனத்திற்கு...
பன்னாட்டுத் தமிழ் அறிஞர்களும், கணித் தமிழ்ச் சங்கம், உத்தமம் போன்ற அமைப்புகளும் இத்திணிப்பு முயற்சிக்கு தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்து, இது நடக்கக்கூடாது என்று யுனிகோட் அமைப்புக்கு முறையிட்டுள்ளன. கண்டனங்கள் வெடிக்கட்டும்!
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தப் பட்டுள்ள இந்தக் காலகட்டத்தில், பார்ப்பனர்கள் தங்களின் வழக்கமான ஊடுருவல் சதியில் ஈடுபட்டுவிட்டனர், எச்சரிக்கை! எச்சரிக்கை!!
மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் அவசர அவசரமாகத் தலையிடுவார்களாக!
தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் தலைவர் என்ற முறையில் (Tamil Virtual University Society) முனைவர் வா.செ. குழந்தைசாமி அவர்கள், ஒருங்குறி (யுனிகோட்) சேர்த்தியத்தின் தலைவர் டாக்டர் லிசா மூர் (யு.எஸ்.ஏ.) அவர்களுக்கு தமிழில் திணிக்கப்படும் கிரந்த எழுத்துகள்பற்றிய சதி குறித்து விரிவாக எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தமிழர்கள் இந்தப் பார்ப்பனச் சதியை முறியடிக்க அனல் கக்கும் குரலை எழுப்புவார்களாக!
தலைவர்,
திராவிடர் கழகம்.
28.10.2010
கோயில்கள் ஏன் தோன்றின? எதற்குத் தோன்றின?
கோயில்கள் ஏன் தோன்றின? எதற்குத் தோன்றின? அதன் பின்னணி என்ன? என்பதற்குப் பெரிய ஆராய்ச்சிகள் எல்லாம் தேவையில்லை.
உத்தரப்பிரதேசத்திலே இங்கிலீசுக்குக் கோயில் தோன்றியுள்ளதே - திருச்சியில் நடிகை குஷ்புக்குக் கோயில் கட்டப்பட்டதே, ஈரோட்டில் காந்திக்குக் கோயில் கட்டப்பட்டுள்ளதே - இவற்றின்மூலம் உண்மை நிலையைத் தெரிந்து கொண்டுவிடலாம்.
கடவுளுக்கும் சக்தி, ஒவ்வொரு கோயிலக்கும் எழுதி வைக்கப்பட்டுள்ள தல புராணங்கள் எல்லாம் நெய்யில் பொரித்த பச்சைப் பொய் - கலப்படமற்ற பொய் என்பது அறிவைப் பயன்படுத்தும் எவரும் எளிதில் புரிந்துகொள்ளலாம்.
உண்மையில் கோயில்கள் ஏன் தோற்றுவிக் கப்பட்டன என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டு மானால் சாணக்கியன் எழுதிய அர்த்தசாஸ்திர நூலைப் படித்தால் தெரிந்துகொள்ளலாம்.
கோயில்கள் அரசன் வருவாய்க்காக ஏற் படுத்தப்படவேண்டும் என்பதுதான் சாணக்கியன் சொல்லிச் சென்ற தந்திரம்.
ஓர் இரவு ஒரு தெய்வத்தையோ, படத்தையோ ஏற்படுத்தவேண்டியது; அல்லது ஒரு கெட்ட சகுனத்தைப் போக்கிட (தீயவை நடக்காவண்ணம் தடுக்கும் பொருட்டு) திருவிழாக்களும், கூட்டங் களும் நடத்துவதாகப் பாசாங்கு செய்து பொது மக்களிடமிருந்து அரசனது செலவுக்குப் பணம் வசூலிக்கலாம்.
(சென்னை தியாகராயர் நகரில் திடீர் பிள்ளையார் தோன்றியதாகப் புரளி செய்து, உண்டியல் வசூல் செய்த நிலையில், தந்தை பெரியார் அவர்களின் கடுமையான எச்சரிக் கைக்குப் பிறகு - உண்டியலும், திடீர்ப் பிள்ளை யாரும் பறிமுதல் செய்யப்பட்டதே - அதனை இந்த இடத்தில் நினைவுபடுத்திக் கொள்க! - இந்தப் பித்தலாட்டங்களுக்கு காஞ்சிபுரம் சங்கராச்சாரி யார் சந்திரசேகரேந்திர சரசுவதி ஆமாம் போட்டார் என்பதையும் கவனத்தில் கொள்க!).
சாதாரணமாக மிக வெளிப்படையான தந்திரங்கள்தான் பலன் அளிக்கின்றன. கடவுள் தம்மூலம் பேசுவதாகப் பாசாங்கு செய்து, பணம் திரட்டும் வழி முன்காலத்தில் மற்ற நாட்டுப் புரோகிதர்களால் கையாளப்பட்டு வந்தது. ஆனால், இந்தியாவில் இன்னும் அவ்வழக்கம் ஓயவில்லை. இங்கு விக்ரகங்களே பேசுகின்றன. இவற்றை வழிபடுகிறவர்கள் மிகக் கவனமாகக் கேட்டுப் பரவசமடைகிறார்கள். ஆனால், கர்ப்பக் கிரகத்தின் உள்ளோ, பக்கத்திலோ வஞ்சகன் ஒருவன் மறைந்திருந்து விக்கிரகத்தின் வாய் வழியாகப் பேசுகிறான் என்பதை இவர்கள் அறிவதில்லை என்கிறார் ஆபேடூபே.
இத்தகைய கோயில்களில் பார்ப்பனர்கள் புகுந்து கொண்டு தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கு மார்க்கம் தேடிக் கொண்டுவிட்டனர்.
கோயில் என்றால், அதற்குள் அடித்து வைக்கப் பட்ட விக்ரகங்கள் என்றால் பொது மக்களிடம் பக்தியும், பயமும், மரியாதையும் திட்டமிட்டு வளர்க்கப்பட்ட சூழ்நிலையில், யாரையாவது பெருமைப்படுத்தவேண்டுமானால், அவர்களுக்குக் கோயில் கட்டுவது என்பது ஒரு வழமையாகி விட்டது.
ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்திட ஆங்கிலத் தேவி எனும் பெயரால், உத்தரப்பிரதேசம் கிரி மாவட்டத்தில் கோயில் எழுப்பப்பட்டு வருகிறதாம்.
மற்ற மற்ற கோயில்களில் எந்த முறையில் வழிபாடு நடத்தப்படுகிறதோ அந்த முறையில் இந்த ஆங்கிலத்தேவி கோயிலிலும் வழிபாடு நடத்தப் படுமாம்.
இன்னும் கொஞ்ச நாள்களில் இந்தத் தேவி பற்றி தல புராணங்கள் எழுதப்பட்டுவிடும். தேவி கனவில் வந்து சிலவற்றைக் கூறினாள் என்று அற்புதங்கள் அடங்கிய கதைகளைக் கட்டி விடுவார்கள்.
ஆண்டுதோறும் தேர்த்திருவிழா என்ற வைபவங்கள் வந்து சேரும்.
தொடர்ந்து இது கிறித்துவக் கோயிலா, இந்துக் கோயிலா என்ற ரகளையும் ஏற்படும்.
கோயில்கள் தோன்றியதற்குப் பின்னணியில் அற்புதமோ, அசைக்க முடியாத சக்தியோ எந்தப் புண்ணாக்கும் கிடையாது; எல்லாம் பொய்யும், புனை சுருட்டும், பிழைப்பதற்கு வழியும், பித்த லாட்டமும்தான் என்பதைக் கண்ணெதிரே நடை பெறும் இந்தப் புழுதிக் கூத்துக்களின் மூலமாக வாவது தெரிந்துகொள்வார்களாக!
--------- நன்றி விடுதலை தலையங்கம் (28-10-2010)

Saturday, October 23, 2010
ஜெயேந்திர சரஸ்வதி ஏதோ காரியம் ஆற்றப் புறப்பட்டுள்ளாராமே.
பல்லிளிக்கும் பார்ப்பனீயம்
கேள்வி: அயோத்தி தீர்ப்பின்மீது அப்பீல் செய்யாமல் இரு தரப்பினரும் நேரடியாகப் பேசினால், நிலையான தீர்வு உருவாகும் என்று ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறியுள்ளாரே?
பதில்: தனது கருத்தைத் தெரிவிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் இஸ்லாம் வாரியத் தலைவரை மடத்துக்கு வரவழைத்துப் பேச முற்பட்டிருக்கிறார். பேச்சு வார்த்தை என்றால் ஒரு தரப்பு விட்டுக் கொடுக்க வேண்டும். இன்றைய சூழலில் இது புதிய சிக்கல்களை உருவாக்கக் கூடும். மக்கள் ஏற்றுள்ள தீர்ப்பை மேல் முறையீடின்றித் தலைவர்களும் ஏற்றுச் செயல்படுத்துவதே நல்லது. மதத் தலைவர்கள் விவாதங்களை நிறுத்தி விட்டு கைகோக்க வேண்டிய நேரம் இது.
அயோத்தி தீர்ப்புக்குப்பிறகு பார்ப்பனர்கள் ரொம்பத்தான் அமைதி விரும்புபவர்கள் போலவும், சமரச சன்மார்க்க ஜீவிகள் போலவும் பேச _ எழுத ஆரம்பித்து விட்டனர். இந்தத் தீர்ப்பு வேறு வகையில் அமைந் திருக்குமேயானால் சங்பரிவார்க் கும்பல் நாட்டை எந்த அளவுக்கு ரத்தக் களரியாக்கியிருக்கும் என்பதைக் கற்பனை செய்வதற்கே அச்சமாக உள்ளது.
சரி.. அது ஒருபுறம் இருக்கட்டும். இதில் காஞ்சி பெரியவாள் ஜெயேந்திர சரஸ்வதி ஏதோ காரியம் ஆற்றப் புறப்பட்டுள்ளாராமே.
அவருக்குச் சமுதாயத்தில் இன்றைய தினம் இருக்கிற யோக்கியதைக்கு இது போன்ற வேலைகளில் ஈடுபடும் தகுதி உள்ளவர்தானா? இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் தலையிடுவதற்குக் குறைந்த பட்சம் தகுதியும், ஒழுக்கமும் தேவைப்படுமே!
கொலை வழக்கிலும், காமக் கிறுக்கிலும் சிக்குண்டு கதை நாறிப் போய்க் கிடக்கும் ஒரு ஆசாமி, ஏதோ பெரிய மனுஷாள் போலத் தம்மைக் காட்டிக்கொள்வதற்கு இதனைப் பயன்படுத்திக் கொள்கிறார் என்றுதான் கருதப்பட முடியும்.
சமரசம் பேச விரும்புபவர் கொஞ்சம் வாயை அடக்கி வாசிக்க வேண்டும்; அதற்குரிய தகுதி உடையவராக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டாமா? தீர்ப்பு வந்தவுடன் என்ன சொன்னார்?
முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்ட மூன்றில் ஒரு பகுதி நிலத்தில் மசூதி கட்ட அனுமதிக்கப்படுமா என்ற கேள்விக்கு இதே ஜெயேந்திர சரஸ்வதி என்ன கூறினார்? அதை முஸ்லிம்களே விரும்ப மாட்டார்கள். முஸ்லிம்களுக்கு அயோத்தியில் ஏழு மசூதிகள் உள்ளன. அதனால் இன்னொரு மசூதியைக் கட்ட அவர்கள் விரும்பமாட்டார்கள். மேலும் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்கு என்று இன்னொரு மசூதி தேவை யில்லை. அவர்கள் எந்த இடத்தில் இருந்தாலும் மெக்காவை நோக்கி தொழுகை நடத்த முடியும். அதனால் அந்த இடத்தில்தான் மசூதி கட்ட வேண்டும் என்ற அவசியம்
முஸ்லிம் களுக்கு இல்லை (தினத்தந்தி 2.10.2010) இப்படிச் சொன்னவர்தான் இந்த ஜெயேந்திர சரஸ்வதி என்ற கொலை வழக்குக் குற்றவாளி!
முந்திரிக்கொட்டைத்தனமாக இப்படி உளறிக் கொட்டிவிட்டு, இஸ்லாம் வாரியத் தலைவரைப் பேச்சு நடத்திட மடத்துக்கு அழைக்கிறாராம்.
எப்படியிருக்கிறது? எந்த ஒரு முடிவையும் அவசரப்பட்டுச் சொல்லாமல் இருந்தால் சரி, ஏதோ அழைக்கிறார் _ என்னதான் சொல்கிறார் பார்ப்போம் என்ற மரியாதையாவது மிஞ்சும்.
நான் உமி கொண்டு வருகிறேன் _ நீ அரிசி கொண்டு வா, ஊதி ஊதித் தின்னலாம்! என்கிற மத்தியஸ்தத்தை எந்தக் கிறுக்கரால்தான் ஏற்றுக் கொள்ளப்பட முடியும்.
அவர் ஒரு நடுநிலையாளர் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டும்தானே இன்னொரு. தரப்பினர் அவரை மத்தியஸ்தராக ஏற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்படும்?
அயோத்திப் பிரச்சினையில் இதற்கு முன்பும்கூட தலையிட்டு மூக்கு உடைபட்டு வந்தவர்தான் இவர்.
நீ சைவன் _ ஸ்மார்த்தன் _ நீ யார் எங்கள் வைஷ்ணவ சம்பிரதாயத்தில், ராமன் விஷயத்தில் தலையிட? என்று ராமஜென்மபூமி நியாஸ் தலைவர் மூக்கறுக்கவில்லையா? மூக்கறுபட்டு டில்லியிலிருந்து காஞ்சிபுரத்துக்கு ஓடி வந்த கதையெல்லாம் ஏராளம் இருக்கின்றனவே!
பாபர் மசூதி இடிப்பு முடிந்து போன பிரச்சினை. அதைப்பற்றிப் பேசுவதோ, நினைவு நாளைக் கொண்டாடுவதோ தவறு. இப்பொழுது ராமர்தான் குடிசையில் வாழ்ந்து வருகிறார். குடிசையில் வாழும் ஏழை மக்களுக்கு எப்படி அரசுஅந்த இடத்தைப் பட்டா போட்டுக் கொடுக்கிறதோ, அதேபோல் தற்போது குடிசையில் இருக்கும் ராம-ருக்கு அந்த இடத்தைக் கொடுப்பது-தான் நியாயம் (தினத்தந்தி 8.12.1999) என்று சொன்ன இந்த ஆசாமி இஸ்-லாம் வாரியத் தலைவரை சமரசப் பேச்சுக்கு அழைக்கிறாராம்.
இதில் இன்னொன்றையும் கவனிக்கத் தவறக்கூடாது.
ராமன் என்றால் அடேயப்பா, எப்படி எப்படியெல்லாம் ஏற்றிப் போற்றுவார்கள்! அவரின் அம்பறாத் தூளியிலிருந்து புறப்பட்ட அம்பு எப்படி எப்படி எல்லாம் சென்று தாக்கும் என்று காகித அம்புகளை விடு வார்கள்.
அப்படிப்பட்ட ராமன்பற்றி ஜெயேந்திரர் எப்படி சொல்கிறார்? பாவம் ராமனாம் _ குடிசையில் வசிக்-கிறானாம். அரசு பார்த்து பட்டா கொடுக்க வேண்டிய ஏழையாம்! இதையே கலைஞர் சொல்லியிருந்தால் இந்தக் கூட்டம் கச்சையை இறுக்கிக் கட்டி சலாம்வரிசை ஆடியிருக்காதா? தங்-களுக்குக் காரியம் ஆக வேண்டு-மானால் காலைப் பிடித்துக் கெஞ்சத் தயங்காதவர்களாயிற்றே -_ அதனால்-தான் மகாவிஷ்ணுவின் அவதாரத்தை பாவம் ஏழைக் குடிசையில் கிடக்-கிறான், கொஞ்சம் கருணை காட்-டுங்கள் என்று காலைப் பிடிக்கிறார் சங்கராச்சாரியார்.
பாபர் மசூதி குற்றவாளிகளான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் பதவி விலக வேண்டும் என்ற பிரச்சினை வெடித்த-போது இதே ஜெயேந்திர சரஸ்வதி என்ன கூறினார்.
பாபர் மசூதி என்பது ஒரு கட்டடம். ஒரு கட்டடத்தை இடித்தது கிரிமினல் நடவடிக்கையாகாது, எனவே (தினமணி 27.11.2000) அவர்கள் பதவி விலகத் தேவையில்லை என்று சொல்லவில் லையா?
இந்த யோக்கிய சிகாமணிகள் சமரச வேலையில் ஈடுபடுகிறார்களாம் _ தூக்கி நிறுத்திப் பல்லக்கில் ஏற்றப் பார்க்கிறது கல்கி வகையறாக்கள்!
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியைவிட கீழே போவதற்கு, தரம் கெட்டுப் போனதற்கு, மக்கள் மத்தியில் சவுங்கை கெட்டுப் போனதற்கு இன்னொருவர் இனி-மேல்தான் பிறக்க வேண்டும். இந்த நிலையிலும் கல்கி சோ கூட்டம் அவரைப் பெரியவாள் என்று குறிப்-பிடுவதும், ஒரு பெரிய சமாச்சாரத்தின் சமரசப் பணியில் ஈடுபடுகிறார் என்றும் பாவனை காட்டுவதுமான சாமர்த் தியத்தை கவனிக்க வேண்டும்.
பார்ப்பனீயம் பார்ப்பனீயம் என்றால் என்ன என்று சிலர் கேட்கிறார்களே _ இதற்குப் பெயர்தான் பல்லிளிக்கும் பார்ப்பனீயம் என்பது!
--------விடுதலை ஞாயிறு மலர் (23.10.2010)

_ கல்கி (24.10.2010) வார இதழில் வெளிவந்த கேள்வி _ பதில்தான் இது.

Thursday, October 21, 2010
அகம்பாவம் பிடித்த ஆர்.எஸ்.எஸ். வட்டாரம் கலகலத்தது
சேற்றில் புதைந்த யானையின் கதை!
அயோத்திப் பிரச்சினையில் அலகாபாத் உயர் நீதிமன்ற அமர்வு கட்டப் பஞ்சாயத்து முறையில், மூட நம்பிக்கைக்கு நம்பிக்கை என்னும் முகமூடி அணிந்து மகுடம் சூட்டிவிட்டது.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் ராமன் பிறந்த இடம் என்று நீதிமன்றமே சொல்லிவிட்டது என்று கூறி பாபர் மசூதி இடிப்பை நியாயப்படுத்தும் வகையில் பேசித் திரிகின்றனர். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்ற வாளிகளின் பட்டியலில் உள்ளவர்கள் இப்பொழுதே விடுதலை அளிக்கப்பட்டதுபோல துள்ளிக் குதிக் கிறார்கள்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குக் காரணம் சொன்ன அடல் பிகாரி வாஜ்பேயி, அயோத்திப் பிரச் சினை தொடர்பாக நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் தீர்ப்பு தாமதம் ஆனதால்தான் பாபர் மசூதி இடிக் கப்பட்டது என்று இடிப்புக்கு நியாயம் கற்பித்தார். இவர் எல்லாம் ஒரு பிரதமர் - அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள மதச் சார்பின்மையைக் காப்பாற்ற அவதரித்தவர் என்று நாட்டு மக்கள் நம்பித் தொலையவேண்டும்.
அலகாபாத் தீர்ப்பு - பாபர் மசூதி இடிப்புக் குற்ற வாளிகளைக் குற்றவாளிகள் அல்ல என்று சொல்ல வில்லை என்று உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் சொன்னார் என்றவுடன் அவர்மீது பாய்ந்து பிராண்டு கிறார்கள்.
காவி பயங்கரவாதம் என்ற சொல்லாடலை எப்படி பயன்படுத்தலாம் என்று எகிறிக் குதிக்கின்றனர்.
முஸ்லிம் பயங்கரவாதம் என்று பார்ப்பன ஏடுகளும், சங் பரிவார்க் கும்பலும் பயன்படுத்தியபோது பாயாசம் சாப்பிட்டதுபோல இருந்தது - உள்துறை அமைச்சர் என்கிற முறையில் தகவல்களை அதிகாரப்பூர்வமாகக் கையில் வைத்துக்கொண்டுள்ளவர் காவிப் பயங்கர வாதம் என்று அடையாளம் காட்டும்போது ஆத்திரம் அலை புரள்கிறதே - ஏன்? உண்மையைச் சொன்னால் எரிச்சல்தானா?
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறைகள் ஆட்டம் போட்டபோது, குண்டுவெடித்தபோது - அவை எல்லாம் முசுலிம்கள் முதுகின்மீது ஏற்றி முஸ்லிம் தீவிரவாதம் என்ற முத்திரையும் குத்தப்பட்டது.
2006 ஜூலையில் மும்பை ரயில், 2007 பிப்ரவரியில் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயில், மே மாதத்தில் அய்தராபாத் மெக்கா மஸ்ஜித், அக்டோபரில் அஜ்மீர் தர்கா ஷெரீஃப், 2008 ஜூலையில் அகமதாபாத் 2008 செப்டம்பரில் மாலேகான் முதலிய இடங்களில் குண்டுவெடிப்புகள் நடந்தபோது அப்பாவி மக்கள் கொல்லப்பட்டபோது, இந்த வன்முறைகளின் பின்னணியில் முஸ்லிம் தீவிரவாத அமைப்புகள் குறிப்பாக சிமி என்ற முஸ்லிம் அமைப்புதான் இருக்கிறது என்று உறுதியாகத் தெரிவிக்கப்பட்டது.
பார்ப்பன ஊடகங்கள் பச்சைப் பொய்களை அவிழ்த்துவிட்டன. உளவுத் துறையும் கூட இப்பிரச் சினையில் தடுமாறிவிட்டது.
மாலேகான் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து மகா ராட்டிராவில் தீவிரவாத தடுப்புப் படை அதிகாரியாக (ATS) ஹேமந்த் கர்கரே பொறுப்பேற்ற நிலையில்தான், உண்மையில் இந்தக் குண்டுவெடிப்புகளின் பின்னணி யில் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார்கள் திட்ட மிட்ட வகையில் வட்டமாகச் சூழ்ந்துள்ளன என்பது ஆதாரப்பூர்வமாக வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
பெண் சாமியார் பிரக்யாசிங் சாத்வி, சங்கராச் சாரியார் தயானந்த பாண்டே, இராணுவத் துறையைச் சேர்ந்த புரோகித் உள்ளிட்டவர்களின் சதி வலைப் பின்னல் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டதே!
அகம்பாவம் பிடித்த ஆர்.எஸ்.எஸ். வட்டாரம் கலகலத்தது - வந்தது ஆபத்து என்று கவட்டிக்குள் தலை வைத்துக் கவிழ்ந்து படுத்தனர்.
இதற்கிடையே மும்பை தாஜ் ஓட்டல் பயங்கர வாதிகளால் தாக்கப்பட்டதைப் பயன்படுத்தி காவல் துறையில் நேர்மையான அதிகாரியாக செயல்பட்ட வரும், இந்தியாவின் தொடர் வன்முறைகளுக்குக் காரணமாக இருந்த சங் பரிவார் வட்டாரத்தை வெளி உலகுக்குக் காட்டியவருமான கர்கரே சந்தேகமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து மகாராட்டிர மாநிலக் காவல்துறை அய்.ஜி. எஸ்.எம். முஷ்ரீப் வெளிப்படையாகவே நூல் ஒன்றை வெளியிட்டார். மத்திய அமைச்சரான அந்துலே அவர்களேகூட காவல்துறை அதிகாரி கர்கரே கொல் லப்பட்டதில் சதி இருக்கிறது என்று கூறவில்லையா?
உண்மைகள் எல்லாம் இவ்வாறு இருக்க, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. தலைவர்கள் உத்தமபுத்திரர்கள் போல வன்முறை முத்திரையிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிப்பார்களேயானால் - அது, சேற்றில் புதைந்து கொண்டிருக்கும் யானை வெளியில் வர திமிரத் திமிர மேலும் மேலும் ஆழமாகப் புதைந்து போகும் நிலையைத்தான் ஏற்படுத்தும் என்று எச்சரிக்கின்றோம்!
--------- விடுதலை தலையங்கம் (21.10.2010)

Wednesday, October 13, 2010
இடிஅமீன் ராஜபக்சேவுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பா?
தமிழர்களைக் கொன்று குவித்த இடிஅமீன்
காமன்வெல்த் போட்டி நிறைவு விழாவில் தலைமை விருந்தினரா?
இளிச்சவாயர்களல்ல தமிழர்கள் உணர்வுகள் உரிய நேரத்தில் வெளியாகும்
புரிந்துகொள்ளட்டும் டில்லி அரசு! தமிழர் தலைவரின் கண்டன அறிக்கை

டில்லியில்
நடைபெற்றுவரும் காமன்வெல்த் விளை யாட்டுப் போட்டிகளின் நிறைவு விழாவில்,
ஈழத் தமிழர் களைக் கொன்று குவித்த இடிஅமீன் ராஜபக்சேயை தலைமை விருந்தினராக
அழைத்திருப்பதைக் கண்டித்து, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள்
விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இலங்கையில் ஈழத் தமிழர்களை - அவர்கள் அந்த நாட்டின் சொந்த குடிமக்கள் என்பதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல், இன ஒடுக்கல் என்ற அடிப்படையில், அன்றாடம் அழித்து ஒழித்ததோடு, அவர்களில் உயிருடன் வாழும் மக்களை, முள்வேலிக்குள் - பட்டி யில் அடைக்கும் மிருகங்களைப்போல அடைத்து வைத் துள்ள கொடுங்கோலன் - இலங்கை அதிபர் ராஜபக் சேவை, இந்திய அரசு காமன்வெல்த் விளையாட்டின் கடைசி நாள் தலைமை விருந்தினராக அழைப்பது - மிக மிகப் பெரிய தமிழின விரோதச் செயலாகும்!
பல நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களை இலங்கைக்குத் தந்தும், தமிழர்களின் மீள்குடியேற்றம், மறுவாழ்வு, சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் உரிமை இன்னமும் ராஜபக்சே அரசால் தமிழர்களுக்கு வழங் கப்படாத நிலையில், டில்லி அந்தக் கொடுங்கோல னுக்கு, இடிஅமீனைவிட இழிவான ஒருவருக்கு இப்படி சிவப்புக் கம்பளம் விரித்து மரியாதை செலுத்துவது மனிதநேயம் படைத்த அனைவரது கண்டனத்திற்கும், வேதனைக்கும் உரிய ஒன்றாகும்!
மத்திய ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைப்பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படாமல், ஏதோ ஒப்புக்குப் பேசுவது போன்ற நாடகங்களையே அவ்வப்போது அரங்கேற்றுகிறார் கள். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் விலையைக் கொடுக்கவேண்டிய நிலை ஏற்படலாம்!
பா.ஜ.க. போன்ற மதவெறி அமைப்புகளின் மாற்றாக காங்கிரஸ் இருப்பதால், இது பலவீனமடையக் கூடாது என்று பொதுவில் நின்று சிந்திக்கிறவர்களின் ஆத ரவுகூட மத்திய அரசின் இத்தகைய முன்யோசனை யற்ற செயல்களால் இழக்கப்படக்கூடிய நிலையே உருவாகிறது!
30 ஆயிரம் தமிழர்கள் இன்னமும் முள்வேலி முகாம்களுக்குள் வாடி வதிந்து கொண்டுள்ள நிலை!
இலங்கைக்
கடற்படையால் - சிங்களவர்களால் - தமிழக மீனவர்கள் தங்களது வாழ்வாதாரமான
மீன்பிடித் தொழிலைச் செய்ய இயலாமல், உயிரையும் பணயம் வைத்துப் பலியாகும்
பரிதாபம் அன்றாடம் தொடரும் அவலமாகி வருகிறது.
இவ்வளவுக்கும் காரணமான கல்லுளிமங்கனுக்கு இப்படி ஒரு ராஜ மரியாதை தேவையா? ஏதோ சாக்குப் போக்குக் கூறுவதுபோல், அவரிடம் நேரில் மத்திய அரசு இனிமேல்தான் வற்புறுத்தப் போவதற்காக அவரை அழைத்துள்ளது போன்று ஒரு சமாதானம் சொல்லு வதை நம்புவதற்கு நாட்டு மக்கள் தயாராக இல்லை.
அய்.நா. பொதுச்செயலாளர் பான்-கி-மூன் போன்றவர்களுக்குள்ள நடுநிலை உணர்வு, நியாயத்திற்கு வாதாடும் தன்மை மத்திய அரசுக்கு இருக்கவேண்டாமா?
தமிழர்களை இளிச்சவாயர்கள், ஏமாந்தவர்கள் என்று எண்ணி தப்புக் கணக்குப் போடவேண்டாம்!
தமிழர்கள் உணர்வு வெளிப்படுத்தப்படவேண்டிய நேரத்தில் வெளியாகும்! புரிந்துகொள்ளட்டும் டில்லி அரசு!
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
13.10.2010
நன்றி விடுதலை (13-10-2010)
இலங்கையில் ஈழத் தமிழர்களை - அவர்கள் அந்த நாட்டின் சொந்த குடிமக்கள் என்பதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல், இன ஒடுக்கல் என்ற அடிப்படையில், அன்றாடம் அழித்து ஒழித்ததோடு, அவர்களில் உயிருடன் வாழும் மக்களை, முள்வேலிக்குள் - பட்டி யில் அடைக்கும் மிருகங்களைப்போல அடைத்து வைத் துள்ள கொடுங்கோலன் - இலங்கை அதிபர் ராஜபக் சேவை, இந்திய அரசு காமன்வெல்த் விளையாட்டின் கடைசி நாள் தலைமை விருந்தினராக அழைப்பது - மிக மிகப் பெரிய தமிழின விரோதச் செயலாகும்!
இடிஅமீன் ராஜபக்சேவுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பா?
பல நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களை இலங்கைக்குத் தந்தும், தமிழர்களின் மீள்குடியேற்றம், மறுவாழ்வு, சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் உரிமை இன்னமும் ராஜபக்சே அரசால் தமிழர்களுக்கு வழங் கப்படாத நிலையில், டில்லி அந்தக் கொடுங்கோல னுக்கு, இடிஅமீனைவிட இழிவான ஒருவருக்கு இப்படி சிவப்புக் கம்பளம் விரித்து மரியாதை செலுத்துவது மனிதநேயம் படைத்த அனைவரது கண்டனத்திற்கும், வேதனைக்கும் உரிய ஒன்றாகும்!
மத்திய ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைப்பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படாமல், ஏதோ ஒப்புக்குப் பேசுவது போன்ற நாடகங்களையே அவ்வப்போது அரங்கேற்றுகிறார் கள். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் விலையைக் கொடுக்கவேண்டிய நிலை ஏற்படலாம்!
பா.ஜ.க. போன்ற மதவெறி அமைப்புகளின் மாற்றாக காங்கிரஸ் இருப்பதால், இது பலவீனமடையக் கூடாது என்று பொதுவில் நின்று சிந்திக்கிறவர்களின் ஆத ரவுகூட மத்திய அரசின் இத்தகைய முன்யோசனை யற்ற செயல்களால் இழக்கப்படக்கூடிய நிலையே உருவாகிறது!
30 ஆயிரம் தமிழர்கள் இன்னமும் முள்வேலி முகாம்களுக்குள் வாடி வதிந்து கொண்டுள்ள நிலை!
சாக்குப் போக்குகளை
நம்பத் தயாராக இல்லை
இவ்வளவுக்கும் காரணமான கல்லுளிமங்கனுக்கு இப்படி ஒரு ராஜ மரியாதை தேவையா? ஏதோ சாக்குப் போக்குக் கூறுவதுபோல், அவரிடம் நேரில் மத்திய அரசு இனிமேல்தான் வற்புறுத்தப் போவதற்காக அவரை அழைத்துள்ளது போன்று ஒரு சமாதானம் சொல்லு வதை நம்புவதற்கு நாட்டு மக்கள் தயாராக இல்லை.
அய்.நா. பொதுச்செயலாளர் பான்-கி-மூன் போன்றவர்களுக்குள்ள நடுநிலை உணர்வு, நியாயத்திற்கு வாதாடும் தன்மை மத்திய அரசுக்கு இருக்கவேண்டாமா?
தப்புக் கணக்குப் போடவேண்டாம்!
தமிழர்கள் உணர்வு வெளிப்படுத்தப்படவேண்டிய நேரத்தில் வெளியாகும்! புரிந்துகொள்ளட்டும் டில்லி அரசு!
தலைவர்,
திராவிடர் கழகம்.
13.10.2010
நன்றி விடுதலை (13-10-2010)
Saturday, October 09, 2010
ஆர்.எஸ்.எஸ். என்பது ஒரு பிற்போக்கு அமைப்பு -ராகுல் காந்தி
ராகுல் காந்தி - ஒரு பார்வை -
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல்காந்தியின் செயல்பாடுகள் _ கூறிவரும் கருத்-துகள் பலவகைப்பட்டதாகும்.இதுவரை அவர் கூறிவந்த கருத்துகள் எப்படி இருந்திருப்பினும், அண்மையில் அவர் தெரிவித்துள்ள கருத்துகள், அந்த இளைஞரைக் கொஞ்சம் அண்ணாந்து பார்க்கச் செய்துவிட்டன.
(டெக்கான் ஹெரால்டு _ 15.8.2010) இதுகுறித்து விளக்கமாகவே தெரி-விக்கிறது.
இந்திய மக்களிடையே மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று சமூகநீதி _ இடஒதுக்கீடு; இதுகுறித்து சூடான வாக்குவாதங்கள் நடைபெற்றுள்ளன.
எடுத்த எடுப்பிலேயே ஓர் உண்மையை வெடிகுண்டெனத் தூக்கிப்போட்டார். இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பாக இருப்பவர்கள் பெரும்-பாலும் கிராமப்புறங்களில் இருந்து-வந்தவர்கள் அல்லர் என்றார்.
பயிற்றுவிக்கும் திசையில் வளர்ச்சி ஏற்பட செய்யப்பட வேண்டியது என்ன? என்ற வினாவை ராகுல் தொடுத்த நேரத்தில் ஒரு மாணவி எழுந்திருந்து, முதலில் ஜாதி அடிப் படையிலான இடஒதுக்கீட்டைத் தடுத்து நிறுத்துங்கள்! என்று அக்னி துண்டை வீசினார். இடஒதுக்கீடு பேரால் தகுதி திறமை வாய்ந்தவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது; திறமை வாய்ந்த மாணவர்கள் விரக்தியடைந்துள்-ளனர்; என்றும் அவர் மேலும் கூறினார். மிகவும் அமைதியாக ராகுல் விடையளித்தார். நீண்ட காலமாக ஒடுக்கப்பட்ட மக்கள் புறக்கணிக்கப்-பட்டு வந்திருக்கின்றனர். தாழ்த்-தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்ட-வர்-களும் நாட்டில் எத்தனை விழுக்-காடு என்று உங்களுக்குத் தெரியுமா? கிட்டதட்ட அவர்கள் 70 விழுக்காடு ஆவார்கள்.
இந்த அரங்கத்துக்குள்ளே கூடியிருக்கும் உங்களில் எத்தனைப் பேர் தாழ்த்தப்பட்டவர்கள் _ பிற்படுத்தப்பட்டவர்கள்? கொஞ்சம் கைகளை உயர்த்துங்கள் என்று கேட்டார். தூக்கியவர்களின் எண்-ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்-தது. அடுத்து பொதுத் தொகுதியில் (Open Competition) போட்டியிடக் கூடியவர்கள் கைகளை உயர்த்-துங்கள் என்றார். பெரும்பாலோர் கைகளை உயர்த்தினர்.
இன்னொரு மாணவி எழுந்தார். ஜாதி வாரியாக இடஒதுக்கீடு அளிப்பதற்குப் பதிலாக தாழ்த்தப்-பட்டோர் மற்றும் பிற்படுத்தப்-பட்டோரை தகுதி உடையவர்களாக ஆக்குவதற்கு முயற்சி செய்யக் கூடாதா? என்று வினாவைத் தூக்கி எறிந்தார். அதற்கான செயல் முறைகள் மேற்கொள்ளப்பட்டுதான் வருகின்றன என்று பதில் அளித்தார்.
சமூகநீதி, இடஒதுக்கீடுப் பிரச்-சினையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கக் கூடிய ஓர் இளைஞரின் கருத்து எதுவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு சமூகநீதிச் சிந்தனையாளர்களிடம் இருக்கவே செய்தது. அவர்களின் நெஞ்சில் எல்லாம் பால் வார்க்கும் வகையில் ராகுல் காந்தியின் கருத்து இருப்பது
நன்னம்பிக்கையை ஏற்படுத்துகிறது. பெரும்பாலும் உயர்ஜாதியினர் சூழ்ந்த அரங்கில் அவர் கேள்விகளை எதிர் கொண்ட விதம் பெருமிதமாக இருக்கிறது. அந்த இடத்திலேயே உயர் ஜாதிக்காரர்கள் எப்படி எல்லாம் ஆதிக்கம் செலுத்து-கிறார்கள் என்பதை ஒரு சோதனை வைத்து நிரூபித்தது, அவரின் சமயோசித அறிவுக்கும் சான்று பத்திரமாகும். அவர்களையே சோதனைச் சாலையாக்கி கைகளை உயர்த்தச் செய்து நிரூபித்தது நல்லதோர் அணுகுமுறையாகும். ராகுல் காந்தி சொன்னது வெறும் குத்து மதிப்பான தகவல்கள் அல்ல; உண்மையான _ புள்ளி விவரங்கள் அதைத்தான் பேசுகின்றன.
1999_ 2000 ஆம் ஆண்டுக்கான தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு நிறுவனம் (NSSO) என்ன கூறுகிறது?
2.24 லட்சம் பேர்களிடம் எடுக்கப்-பட்ட கணக்கெடுப்பு _ அது தொழில் நுட்பம் சாராத பட்டப் படிப்பு விவரம்:
பார்ப்பனர்கள் _ உயர்ஜாதியினர் 66 விழுக்காடு.
மருத்துவப் பட்டதாரிகளில் பார்ப்பனர்கள் 65 விழுக்காடு.
பொறியியல் மற்றும் தொழில் நுட்பப் பட்டதாரிகளில் பார்ப்பனர்-கள் 67 விழுக்காடு; விவசாயப் பட்டப் படிப்பில் பார்ப்பனர்கள் 62 விழுக்காடு.
டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக பொருளாதாரப் பேராசிரியர் மற்றும் பல்கலைக் கழக மான்யக் குழுவைச் சேர்ந்தவர்கள் எடுத்த புள்ளி விவரம் கூறுவது என்ன?
டாக்டர் சத்தியோ தோராத் (இந்து ஏடு 7.12.2006) 1.51 லட்சம் பேர்களிடம் எடுக்கப்பட்ட புள்ளி விவரம்.
பொறியியல் பட்டதாரிகள் 1359இல் பார்ப்பனர்கள் 908;
பிற்படுத்தப்பட்டோர் 202.
535 டாக்டர்களில் பார்ப்பனர்கள் 350; பிற்படுத்தப்பட்டோர் 56.
தொழில் நுட்பம் சாராத பட்ட-தாரிகள் 17,501இல் பார்ப்பனர்கள் 11,529; பிற்படுத்தப்பட்டோர் 2402.
உயர்கல்வி பெறுவோர் விழுக்காடு; தாழ்த்தப்பட்டோர் 5 சதவிகிதம்; பிற்படுத்தப்பட்டோர் 7 சதவிகிதம்; உயர் ஜாதியினர் 20 சதவிகிதம்.
பெண்கள்
உயர்கல்வியில் தாழ்த்தப்பட்டோர் 3.93 சதவிகிதம்; பிற்படுத்தப்பட்டோர் 4.70 சதவிகிதம்; உயர் ஜாதியினர் 16 சதவிகிதம்.
இதுபோன்ற ஏராளமான புள்ளி விவரங்கள் உண்டு. உண்மைக்கு மாறாகப் பார்ப்பனர்கள் பம்மாத்து அடிப்பதை ராகுல் காந்தி புரிந்து கொண்டு இருப்பது வரவேற்கத்தக்கது.
அவரைச் சுற்றியுள்ளவர்கள் உயர் தட்டு மக்களாக இருந்தும், அந்தச் சங்கிலியை அறுத்துக் கொண்டு உண்மையின் பக்கம் கண்களைத் திருப்பி உரத்துக் கூறியதற்கு மீண்டும் பாராட்டுகள்.
இரண்டாவதாக, ராகுல்காந்தி தெரிவித்த கருத்து பகுத்தறிவுச் சிந்தனையில் பாராட்டத்தக்கதாகும்.
மத்தியப்பிரதேசம் போபாலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி குறிப்பிடத்தகுந்ததாகும்.
வருங்கால பிரதமர் நீங்கள்தானே என்கிற வகையில் வினாக்கள் எல்லாம் வித்தாரம் பேசின -_ அவற்றிற்-கெல்லாம் சற்று வழுக்கிய மாதிரியே பதில் அளித்தார். டாக்டர் மன்மோகன்சிங் சிறந்த பிரதமர்தான் என்று சான்றுப் பத்திரம் வழங்கினார்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்து நேரடியாக இன்னொரு கேள்வியை செய்தியாளர்கள் விடுத்தனர்.
நீங்கள் பிரதமராவது என்பது உங்கள் தலைவிதியாக இருந்தால்.. என்று இழுத்தனர்.
மண்டையில் அடிகொடுத்தது போல பதிலடி கிடைத்தது ராகுல்காந்தியிடமிருந்து.
தலைவிதி என்பது பழைமைவாதி களின் நம்பிக்கை. உண்மையில் கடின உழைப்பில்தான் எனக்கு மிக நம்பிக்கை; கடின உழைப்புக்கு எவ்வித மாற்றும் கிடையாது. கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வினால் மட்டுமேதான் நம்மால் முன்னேற்றம் அடைய முடியும் என்று முத்தான பகுத்தறிவுச் சாட்டையடி கொடுத்து செய்தி-யாளர்களைத் திணற அடித்தார்.
இந்துப் பழைமைவாதிகளுக்கு சனாதனிகளுக்கு, சங்பரிவார்க் கும்பலுக்குச் சரியான சூட்டுக்கோலை இதன் மூலம் பழுக்கவே கொடுத்-துள்ளார்.
ராகுல் காந்தியின் நெற்றியில் சதா சிவப்புச் சின்னம் (குங்குமம்) பளிச்-சிடுகிறது.
ஏதோ ஒரு கட்டத்தில் அவரை இந்துத்துவா பக்கம் சாய்த்துவிடலாம் என்று வெற்றிலைப் பாக்கை போட்டுக் குதப்பிக் கொண்டு இருந்த வட்டாரத்துக்கு ராகுல்காந்தியின் இந்தப் பதில் அதிர்ச்சியைத்தான் கொடுத்திருக்கும் என்பதில் அய்யமில்லை.
எல்லாம் அவாள் அவாள் தலை எழுத்து, கர்மபலன், விதியின் விளையாட்டு என்று கூறி வித்தாரம் பேசியவர்கள், ஓர் இளம் தலைவர் இப்படி பேசுகிறாரே -_ இவரை எதிர்கால இந்தியாவின் பிரதமர் என்கிறார்களே- _ அப்படியென்றால், நம் எதிர் காலத்தின் நம் கெதி பூச்சியம் என்று பூச்சியர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த நிலைக்காக ராகுல்காந்தியின் சமூகநீதி குரலுக்காக, விதியை மட்டை ரெண்டு கீற்றாகக் கிழித்துக் காட்டியதற்காக சமூகநீதியாளர்-களும், பகுத்தறிவாளர்களும் பாராட்-டுகிறோம் _ பல படப் பாராட்டு-கிறோம்.
முஸ்லிம்களின் சிமி இயக்கத்தோடு ஆர்.எஸ்.எஸ் அமைப்பை ஒப்பிட்-டுப் பேசி விட்டாராம் ராகுல்காந்தி _ அது எப்படிப் பேசலாம் என்று அத்திரி பாட்சா கொழுக்கட்டை என்று தாவிக் குதிக்கிறார்கள் பா.ஜ.க. _ சங்பரிவார் வட்டாரங்கள்.
தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கம் சிமியுடன் ஆர்.எஸ்.எசை எப்படி ஒப்பிடலாம் என்று வினா தொடுக்கிறார் பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவகூர்.
இதைப் படிக்கும்பொழுது வாயால்சிரிக்க முடியவேயில்லை.
மூன்றுமுறை தடை செய்யப்பட்ட ஒரே இயக்கம் ஆர்.எஸ்.எஸ். இந்த யோக்கியதையில் தடை செய்யப்-பட்ட சிமி.யுடன் ஒப்பிடலாமா என்று ஒரு செய்தி தொடர்பாளர் கூறுகிறார் என்றால், அக்கட்சியின் பொது அறிவு எந்த மட்டத்தில் இருக்கிறது என்பதை எளிதில் புரிந்து கொள்ள லாமே!
ஆர்.எஸ்.எஸ். என்பது ஒரு பிற்போக்கு அமைப்பு என்று வெளிப்-படையாகச் சொன்னதற்காகவும் ஒருமுறை ராகுல்காந்தியைப் பாராட் டுவோம்.
கலி. பூங்குன்றன்
பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்
பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்
விடுதலை ஞாயிருமலர் (09 . 10 .2010)
பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமன் பிறந் தான் என்று ஒரு நீதிபதி கூறலாமா?
புண்ணுக்குப் புனுகு பூசுவதா?
அலகாபாத் தீர்ப்பு குறித்து தமிழர் தலைவர்

சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் நேற்று (8.10.2010) இரவு 7 மணிக்கு நடைபெற்ற சிறப்புப் பொதுக்கூட்டத்தில் புதிய நீதி தேவன்களின் மயக்கம் எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் சாரப் பிழிவு.
தொடக்கத்திலேயே இவ்வாரம் வெளிவந்த அவுட் லுக் (11.10.2010) இதழினைக் கையில் எடுத்துக்கொண்டு தமது விவாதத்தினைத் தொடங்கினார்.
First or Last? எனும் தலைப்பில் வினோத் மேத்தா எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ள ஒரு பகுதியை எடுத்து விளக்கினார்.
ராமஜென்ம பூமியை வைத்துக்கொண்டு அரசியல் நடத்தலாம் என்ற நப்பாசையுடன் காய் களை நகர்த்திய சங் பரிவார்க் கூட்டத்துக்கு மக்கள் மத்தியில் ஆதரவு படிப்படியாகக் குறைந்தே வந்திருக்கிறது. அதன் ஆசையை பொதுமக்கள் நிராகரித்துவிட்டனர்.
1999 இல் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தபோது அது வாங்கிய வாக்குகள் 23 சதவிகிதம்; இதன் பொருள்- 77 சதவிகித மக்கள் ராமன் கோயில் பிரச்சினையில் எதிராக இருந்தனர் என்பதே! 2009 ஆம் ஆண்டில் பி.ஜே.பி. பெற்ற வாக்குகள் வெறும் 18 விழுக்காடுதான்; இதன் பொருள்- 82 விழுக்காடு மக்கள் ராமன் ஜென்மபூமிக்கு எதிராக வாக்களித்து விட்டனர்.
இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையி லான பிரச்சினை என்று பெரிதுபடுத்தி குளிர் காயலாம் என்று நினைத்தார்கள். உண்மையைச் சொல்லப்போனால், இது முஸ்லிம்களுக்கும், ஆர்.எஸ்.எசுக்கும் இடையே உள்ள பிரச்சினை தான் என்று அவுட்லுக் எழுதியுள்ளதை தமிழர் தலைவர் எடுத்துக்காட்டினார்.
(உண்மையைச் சொல்லப்போனால், பி.ஜே.பி.யோ, சங் பரிவார் வட்டாரமோ அனைத்து இந்துக்களுக்கும் பிரதிநிதிகள் என்று யார் சொன்னார்கள்? யார் ஏற்றுக் கொண்டனர்? கோடானு கோடி தாழ்த்தப்பட்டவர்களைத் தீண்டத்தகாதவர்களாக்கிவிட்டு, அவர் களுக்கும் சேர்த்து இவர்கள்தான் பிரதிநிதிகள் என்றால், ஏற்றுக்கொள்ளப்பட முடியுமா? இந்து என்று சொல்கிறார்களே, அதில்தான் எத்துணை எத்துணைப் பிரிவு! பாபர் மசூதிப் பிரச்சினையில் காஞ்சி சங்கராச்சாரியார் தலையிட்டு சமரசம் செய்யச் சென்றபோது நீ சைவப் பிரிவைச் சேர்ந்த ஆசாமி; ராமர், வைணவர் பற்றிய சமாச்சாரம் - உம் வேலையைப் பாரு! என்று ராம் ஜென்மபூமி நியாஸ் தலைவர் கூறவில்லையா? இந்த நிலையில், இந்துக்களின் பிரதிநிதிகள் என்று பி.ஜே.பி.யோ, சங் பரிவார்களோ எப்படி மார் தட்டிக்கொண்டு முன்வர முடியும்?)
ராமனைக் காட்டி அரசியல் நடத்தலாம் என்பது இனி நடக்காத காரியம். நீதிபதி களுக்குத்தான் மயக்கம்; சில அரசியல் தலை வர்களுக்கோ தயக்கம். ஆனால், மக்கள் தெளி வாகத்தான் இருக்கிறார்கள் - மக்களைத் தெளிவுபடுத்த எங்களைப் போன்ற இயக்கம் இருக்கிறது.
1992 இல் பாபர் மசூதியை இடித்துக் கலவரத்தை உண்டாக்கியதுபோல இப்பொழுதும் செய்யலாம் என்று நினைத்தால், அதில் தோல்வி நிச்சயம். அப்பொழுது இருந்ததைவிட இப் பொழுது மக்கள் முதிர்ச்சி பெற்று இருக்கிறார்கள் என்றார் தமிழர் தலைவர்.
உலகில் இந்தோனேசியாவுக்கு அடுத்து அதிக முஸ்லிம்கள் வாழும் நாடு இந்தியா - சகோ தரத்துவத்துடன் வாழ்கின்றனர். அதிலும் குறிப் பாகத் தமிழ்நாட்டில் ஒற்றுமையுடன் வாழ்ந்து கொண்டுள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டினார் திராவிடர் கழகத் தலைவர்.
அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் (Preamble) கூறப்பட்டுள்ள மதச் சார்பின்மைக்கு விரோதமா னது என்றும் சட்ட ரீதியாக எடுத்துக்காட்டினார்.
We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign socialist secular democratic republic என்று கூறப்பட்டுள்ளது.
இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பின்மை, ஜனநாயகம், குடியரசு இவை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டுமானமாகும். இதில் யாரும் கை வைக்க முடியாது.
ஆனால், அலகாபாத் நீதிபதிகளின் தீர்ப்பு இதனைத் தகர்க்கும் நிலையில் உள்ளது.
பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமன் பிறந் தான் என்று ஒரு நீதிபதி கூறலாமா? அதற்கான ஆதாரங்கள் காட்டப்பட்டனவா? சட்டப்படியான முறையில் தீர்ப்பு அளிப்பதற்கு ஆவணங்கள் காட்டப்பட்டனவா? சட்டப்படியான முறையில் (Court of Law) செயல்படவேண்டிய நீதிமன்றம் நம்பிக்கையின் அடிப்படையில் (Court of Faith) மத ரீதியில் ராமன் பிறந்த இடம் என்று கூறியிருப்பது கண்டிப்பாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதச் சார்பின்மைக்கு எதிரான செயலேயாகும் என்று வாதிட்டார் வழக்கறிஞரான தமிழர் தலைவர்.
8700 பக்கங்களைக் கொண்டது மூவரின் தீர்ப்பு. தீர்ப்புகள் அதிக பக்கங்களில் இருந்தாலே அதில் குழப்பங்கள் அதிகம் என்று பொருள் - தடுமாற்றங்களுக்கும் பஞ்சம் இருக்காது.
நீதிமன்ற தீர்ப்பு குறித்து தந்தை பெரியார் கூறிய கருத்தையும் எடுத்துக்காட்டத் தவற வில்லை தமிழர் தலைவர். நீதிமன்றங்கள் சட்ட கோர்ட்டுகளே தவிர, நியாயக் கோர்ட்டுகள் அல்ல என்பார். இப்பொழுது அந்த நிலைக்கும் ஆபத்து வந்து நீதிமன்றம் நம்பிக்கை அடிப்படை யானதாக ஆகிவிட்டது என்று தமிழர் தலைவர் சொன்னபோது அரங்கம் மிகவும் ரசித்தது.
பாபர் மசூதி பிரச்சினையாக்கப்பட்டு சிக்க லாக்கிய பின்னணி என்ன? அதற்குக் காரணம் யார் என்பதை சர்வபல்லி டாக்டர் கோபால் (மறைந்த குடியரசுத் தலைவர் டாக்டர் ராதா கிருஷ்ணன் அவர்களின் மகன்) ‘‘Anatomy of a Confrontation’’ (1990) என்ற நூலை ஆதாரப்படுத்தி அதிலிருந்து பல தகவல்களை எடுத்துக்காட்டினார் ஆசிரியர்.
1528 ஆம் ஆண்டிலேயே பிரச்சினை கிளப் பப்பட்டது (1853-இல் அயோத்தியில் முதன் முதல் வன்முறை வெடித்தது - 75 பேர் பலி!).
1949 இல் மிக மோசமான அத்துமீறல் என்பது பாபர் மசூதிக்குள் அவ்வாண்டு டிசம்பர் 22 இரவு நேரத்தில் குழந்தை ராமன் பொம்மையைக் கொண்டு போய் வைத்தது ஒரு கும்பல்.
பிரதமர் நேரு அதிர்ந்து போனார்; உடனடி யாக அந்தப் பொம்மைகளைத் தூக்கி எறியச் சொன்னார். அப்பொழுது துணைப் பிரதமராக சர்தார் பட்டேல், உ.பி. முதல் அமைச்சராக இருந்த கோவிந்த வல்லபாய் பந்த் அதற்கு ஒத்து ழைப்புக் கொடுக்கவில்லை. மாவட்ட மாஜிஸ்டி ரேட்டாக இருந்த நய்யார் என்பவர் ராமர் சிலையை எடுத்தால் பிரச்சினைகள் ஏற்படும், கலவரம் வெடிக்கும் என்று கூறினார். (ஆதாரம்: சர்வபல்லி டாக்டர் கோபால் நூல் - ஏ.ஜி. நூராணி கட்டுரை).
பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் தப்பும் வாய்ப்பு
அலகாபாத் தீர்ப்பின் காரணமாக பாபர் மசூதி இடிப்பில் குற்றவாளிகளானவர்கள் தண்டனையி லிருந்து தப்பித்து விடக்கூடிய ஆபத்து இருக் கிறது என்பதைத் தமிழர் தலைவர் சுட்டிக் காட்டினார்.
தாம் நடத்திய ர(த்)த யாத்திரையை அத்வானி நியாயப்படுத்திப் பேச ஆரம்பித்துவிட்டார்.
(லிபரான் ஆணையம், முன்னாள் பிரதமர் வாஜ்பேயி உள்பட 68 பேர்களை குற்றவாளிகள் பட்டியலில் இணைத்துள்ளது) நாடாளுமன்றத்தி லேயே பா.ஜ.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர், சுஷ்மா சுவராஜ் பகிரங்கமாக ஆமாம், நாங்கள் தான் இடித்தோம் - உங்களால் என்ன செய்ய முடியும் என்று பேசும் துணிவு ஏற்பட்டுவிட்டதே!
பாபர் மசூதி இருந்த இடம்தான் ராமன் பிறந்த இடம் என்று ஒரு நீதிபதி கூறியுள்ளார் என்றால் என்றால், அதனை ஆதாரமாகக் கொண்டு, பாபர் மசூதியை இடித்ததை நியாயப்படுத்த மாட்டார் களா குற்றவாளிகள்? இதற்கு இடம் அளித் துள்ளதா, இல்லையா அலகாபாத் உயர்நீதிமன் றம்? 1994 இல் உச்சநீதிமன்றம் என்ன சொன்னது?
It was an act of National shame தேசிய அவமானம் என்று சொல்லவில்லையா?
இதில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று என்னவென்றால், பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து எண்ணாயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங் களைக் கொண்ட தீர்ப்பில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் எடுத்துக்காட்டியபோது, அரங்கத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கானவர்கள் அப்படியே அதிர்ந்து போனார்கள்.
இதுபற்றி நான் மட்டுமல்ல, பிரபல வழக்கறி ஞர்கள் எல்லாம் சுட்டிக் காட்டியும் உள்ளார்கள்.
அத்துமீறி இரவோடு இரவாக இன்னொரு மத வழிபாட்டு இடத்தில் தமது கடவுள் சிலை களை வைப்பதும், அந்தக் குற்றத்தைக் கண்டு கொள்ளாமல், அப்படி வைக்கப்பட்ட சிலையை வழிபடுவதற்கு வழி செய்து கொடுப்பதும், அதற்குப் பின்னர் அந்த சிலை வைக்கப்பட்ட இடம்தான் அவர் பிறந்த இடம் என்று அடம் பிடிப்பதும் எந்த வகையில் சட்ட சம்மதமானது - நியாய வழிப்பட்டது என்பதைத் தமிழர் தலைவர் மிகவும் நேர்த்தியாக, கல்லும் உருகும் வண்ணம் எடுத்துக் கூறினார்.
பிரபல வரலாற்றுப் பேராசிரியர் ரொமீலா தாப்பர் இந்து ஏட்டில் எழுதியிருந்த கட்டுரை ஒன்றை முக்கியமாக எடுத்துக்காட்டினார்.
தொல்பொருள் ஆய்வுக் கழகம் (ஏ.எஸ்.ஏ) நடத்திய அகழ்வு ஆய்வுகளும், அதனுடைய முடிவுகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், பிற தொல்லியல் ஆய்வாளர்களும், வரலாற்று ஆசிரியர்களும் இதனைப் பலமாக மறுதலித்துள்ளனர் என்று ரொமீலா தாப்பர் கூறிய கருத்தினை எடுத்துக்காட்டினார்.
இந்த வரலாற்றுப் பேராசிரியர் குறிப்பிட்டுள்ள இன்னொரு முக்கிய கருத்தையும் கழகத் தலைவர் எடுத்துக் காட்டினார்.
அலகாபாத் தீர்ப்பு நீதிமன்றத்தில் ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறது. இது தங்களை ஒரு சமூகம் என்று கூறிக் கொள்ளும், ஒரு வணங்கப்படும் ஒரு புனிதமான அல்லது ஓரளவு புனிதமான ஒரு நபரின் பிறந்த இடம் என்று கூறி, அந்த நிலத்தின் மீது உரிமை கொண் டாடுவதற்கு ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்து கிறது. ஒரு பொருத்தமான சொத்து காணப் பட்டால், அல்லது தேவைப்படும் ஒரு தகராறை உருவாக்கும் இடங்களில் எல்லாம் இத்தகைய பல ஜென்ம பூமிகள் இப்பொழுது தோன்றும். வரலாற்று நினைவுச் சின்னங்களை திட்டமிட்டுத் தகர்ப்பது கண்டனம் செய்யப்படாததால், மேற்கொண்டு அத்தகையவற்றை தொடர்ந்து தகர்ப்பதை எது தடுத்து நிறுத்த முடியும்? என்று வரலாற்றாளர் ரொமீலா தாப்பர் கூறியது உண்மையிலும் உண்மையே!
இந்தத் தீர்ப்பின்மூலம் தமிழ்நாட்டுக்கு ஏற்பட உள்ள ஒரு பெரிய ஆபத்தையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் ராமன் பெயரைச் சொல்லி முடக்கப்பட்டுள்ளது. அலகாபாத் தீர்ப்புக்குப் பின் அதன் நிலை என்னவென்று சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். நீதிபதிகளே கடவுள்கள் தானாகத் தோன்றும் (சுயம்பு) என்று கூறும் நிலையில், சட்டத்துக்கும், ஆதாரங்களுக்கும் என்னதான் மரியாதை?
மசூதிக்குரிய இலக்கணத்தில் கட்டப்படவில்லை என்று ஒரு நீதிபதி சொல்கிறார் என்றால் என்ன பொருள்?
மெயின் வழக்கைத் தள்ளுபடி செய்தபின் நிலத்தைப் பங்கீடு செய்து கொடுப்பது எந்த வகையில் நியாயம்?
பிரபல எழுத்தாளர் ஏ.ஜி. நூராணி சொல்கிறார் - 17 ஆம் நூற்றாண்டுவரை எந்த இடத்திலும் ராமன் கோயில் கட்டப்படவில்லை என்று கூறியுள்ளார். அப்படியிருக்கும் பொழுது ராமர் ஜென்மபூமியில் கோயில் எங்கே இருந்து வந்து குதித்தது?
1993 இல் என்ன முடிவு எடுக்கப்பட்டது - ஏற்கெனவே எந்த நிலையில் வழிபாட்டு நிறுவனங்கள் இருந்தனவோ அதில் மாற்றம் கூடாது என்று எடுக்கப்பட்ட முடிவு என் னாயிற்று? அதைச் சரியாக மத்திய அரசு கடைபிடித்தி ருந்தால், இந்த நிலை ஏற்பட்டு இருக்குமா என்ற அர்த்தமிக்க வினாவை எழுப்பினார் தமிழர் தலைவர்.
இன்னொரு முக்கியமான தகவலை நினைவுபடுத்திப் பேசினார். பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிலையில், இந்திய அரசமைப்புச் சட்டம் 146 இன்படி குடியரசுத் தலைவரால் உச்சநீதிமன்ற நீதிபதிகளிடம் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிலைப்பாடுபற்றி கருத்துக் கேட்கப்பட்ட போது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்ன கூறினார்கள்? இது போன்ற பிரச்சினைகளில் உச்சநீதிமன்றம் கருத்துச் சொல்ல விரும்பவில்லை என்று பதில் அளிக்கப்பட்டதே. உச்சநீதிமன்றமே மறுத்துவிட்ட ஒன்றின்மீது ஒரு உயர் நீதிமன்றம் எப்படி தீர்ப்புச் சொல்லலாம் என்று ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் வினா எழுப்பினார் ஆசிரியர்.
அரசமைப்புச் சட்டம் 25 ஆவது பிரிவையும் தவறான முறையில் நீதிபதிகள் பயன்படுத்தியதையும் திராவிடர் கழகத் தலைவர் விளக்கினார். மொத்தத்தில் புண்ணுக்குப் புனுகு பூசும் வேலையைத்தான் அலகாபாத் உயர்நீதிமன்றம் செய்துள்ளது.
இறுதியாக தமிழர் தலைவர் கூறியது:
எந்த மதத்துக்காகவும் வக்காலத்து வாங்கி நாங்கள் பேச வரவில்லை. எந்த மதத்தையும் ஏற்காதவர்கள் நாங்கள். நாட்டின் நலன் கருதி ஒரு தீர்ப்பு, பிற்காலத்தில் புதிய அபாயம் ஏற்படும் வகையில் முன்னுதாரணமாக அமைந்துவிடக்கூடாது என்ற பொறுப்புணர்ச்சி யோடும்தான் பேச முன்வந்தோம். உச்சநீதிமன்றம் - ஏற்பட்டுள்ள ஒரு இறுக்கமான சூழ்நிலையிலிருந்து நாட்டை விடுவிக்கக் கடமைப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் அந்தக் கடமையைச் செய்யவேண்டும் என்று கூறி முடித்தார் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள்.
தொடக்கத்தில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றன் வரவேற்புரை ஆற்றினார். 1992 டிசம்பரில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நேரத்தில், மறுநாளே திராவிடர் கழகத் தலைவர் விடுத்த அறிக்கையையும், அலகாபாத் தீர்ப்பு வெளியானதற்கு மறு நாளே காலந் தாழ்த்தாது தமிழர் தலைவர் விடுத்த அறிக்கையையும் எடுத்துக்காட்டி விளக்கிப் பேசினார்.
பல துறைகளைச் சார்ந்த பெருமக்கள் ஏராளம் வந்திருந்தனர். நடிகவேள் ராதா மன்றமே நிறைந்து வழிந்தது.
------------------- நன்றி விடுதலை (09-10-2010)
Friday, October 08, 2010
திரிநூல் - தினமலர்
திரிநூல் - தினமலர் இன்று ஒரு கார்ட்டூனை வெளியிட்டுள்ளது. (தனியே காண்க).
விடுதலைப்புலிகள் இயக்கம் சமாதியாகிவிட்டது; அதற்குக் கல்லறை எழுப்பி யாகிவிட்டது; இந்த நிலையில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியும், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வும் வீணாக அதுபற்றிக் கட்டி அழுகிறார்கள் என்பது இந்தக் கார்ட்டூனின் நோக்கம்.
ஈழத் தமிழர்களின் வாழ் வுரிமைக்காகக் குரல் கொடுக் கும் அமைப்புகளும், அதன் தலைவர்களும் கேட்கும் வினாவை ஏதோ ஒரு வகை யில் தினமலரும் வழிமொழி கிறது என்று கருதலாமே!
அவர்களின் கருத்துப் படியே சமாதி செய்யப்பட்டு விட்ட ஒரு இயக்கத்துக்கு ஏன் தடைகளை விதித்துக் கொண்டு இருக்கிறார்கள்?
இன்னொரு வகையிலே இதே கார்ட்டூனைக்கூட கொஞ்சம் மாற்றிப் போட லாமே தினமலர்... தமிழர் தலைவர் வீரமணி மற்றும் வைகோ ஆகியோரின் படங் களை எடுத்துவிட்டு, அந்த இடத்தில் பிரதமர் மன் மோகன்சிங் படத்தைப் போட்டு தடை விதிப்புமூலம் - கல்லறைக்குப் போன வர்களுக்கு உயிர் கொடுக் கிறார் என்று போடலாமே!
ஏன் போடவில்லை? விடுதலைப்புலிகள் என்ற பேச்சே இருக்கக்கூடாது. புலிகள் என்ற ஒரு வார்த்தை யைக் கேட்கும் மாத்திரத்தி லேயே சிங்களக் கூட்டமும், இந்தியாவில் உள்ள அவர் களின் இனத்தைச் சேர்ந்த வர்களுமான பார்ப்பனர் களும் சப்த நாடிகளும் ஒடுங்கி விடுகிறார்கள்.
சிங்களவர் ஆரிய இனத் தைச் சேர்ந்தவர்கள் என்பது வரலாற்று உண்மை. ஒருமுறை ஜெயவர்த்தனே கூட என் மூக்கும் இந்திரா காந்தியின் மூக்கும் ஒரே மாதிரியாக இருக்கும் - காரணம் நாங்கள் இருவரும் ஒரே ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்ல வில்லையா?
விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்படு கிறது என்ற போர்வையில், வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ள ஈழத் தமிழர் கள்மீது ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தவேண்டும்; ஈழத் தமிழ்- இளைஞர்கள் விடு தலைப்புலிகள் கண்ணோட் டத்தில் கண்காணிக்கப்பட வேண்டும் என்ற தீய நோக்கம்தானே இதில் பதுங்கி இருக்கிறது?
தமிழ்நாட்டிலும், இந்தியா விலும் ஈழத் தமிழர்கள் பற்றிப் பேசினாலோ, அதன் விடு தலைப்புலிகளுக்கு ஆதர வான பேச்சு - கருத்து என்று கூறி சம்பந்தப்பட்டவர்கள்மீது சட்டத்தை ஏவச் செய்யவேண் டும் என்ற கொடூர ஈனப் புத்திதானே இதன் பின்னணி யில் இறக்கை கட்டிப் பறக்கிறது.
சோவாக இருந்தாலும், குருமூர்த்தியாக இருந்தாலும், இந்து ராம் ஆனாலும், தினமலர் வகையறாக்கள் ஆனாலும் புலிகள் என்றாலே கிலி அடையக் காரணம் என்ன?
இனத் துவேஷம்! இனத் துவேஷம்!! இனத் துவேஷம் தான்!!!
ஆதிக்க இனம் இன் னொரு இனத்தை ஒடுக்க ஒடுக்கப் புலிகளும், சிங்கங் களும், சிறுத்தைகளும் தோன்றிக் கொண்டேதான் இருப்பார்கள் என்பதைத் தினமலர் கூட்டம் உண ரட்டும்!

- விடுதலை மயிலாடன் (08.10.2010)
Wednesday, October 06, 2010
ஆயுத பூஜையாம் - அவற்றிற்குப் பூஜை போடவேண்டுமா?
இந்து மதத்தில் பொழுது விடிந்து பொழுது போனால், இந்த மதத் தொல்லைதான்; ஓயாப் பண்டிகைகள்தான், சடங்குக் குவியல்கள்தான். மனிதனின் அறிவு வேறு எந்த உருப்படியான செய லிலும் பாவக் கூடாது - இந்தச் சகதிகளுக்குள் முடங்கி முணுகிக் கிடப்பதுதான் மனித வாழ்வு என்று ஆக்கிவிட்டது இந்த இந்து மதம்.
ஒவ்வொரு மாதமும் பண்டிகை மட்டுமல்ல; ஒவ்வொரு வாரத்திலும்கூட விரதம், படையல் என்று பார்ப்பனப் பிடுங்கல் சுரண்டலுக்கு வழிவகுப்பவை யாகும்.
விநாயகர் சதுர்த்தி கழிந்தது என்றால், இம்மாதத்தில் நவராத்திரி - ஆயுத பூஜை வகையறாக்கள். நவராத்திரி என்ற சொல்லே தமிழ்ச் சொல் அல்ல - எல்லாம் ஆரிய வடமொழியின் இறக்குமதிச் சொற்கள்தாம்.
கருநாடக மாநிலத்தில் இதே பண்டிகை தசரா என்றும், வங்காளத்தில் துர்கா பூஜையாகவும் கொண்டாடப்படுகிறது.
ஒரு நாள் அல்ல, இரு நாள்கள் அல்ல, ஒன்பது நாள்கள் (நவ என்றால் ஒன்பது) கொண்டாடப் படுகின்றன.
ஒவ்வொரு நிமிடமும் மனித வாழ்வுக்கு இன்றியமையாத காலமாகும். காலத்தைக் கண்ணாகப் போற்றும் மனிதனும், நாடும்தான் முன்னேற்றப் பாதையில் முனைந்து ஓடும்.
தொடர்ச்சியாக ஒன்பது நாள்களை மதத்தின் பெயரால் பாழ்படுத்தும் ஒரு நாடு எப்படித்தான் முன்னேறித் தொலைய முடியும்?
ஒவ்வொன்றுக்கும் ஒரு வகையான கதையளப்பு! அறிவுக்குச் சற்றும் பொருந்தாத அழுக்கு மூட்டைகள் அவை.
கடவுள் உருவமற்றவர், கண்ணுக்குத் தெரியாதவர், விருப்பு வெறுப்பு அற்றவர் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, இன்னொரு பக்கத்தில் சூலாயுதத்துடனும், வேலாயுதத்துடனும், கபாலத்துடனும், சிங்கத்தின்மீதும், மூஞ்சூறு மீதும், புலியின் மீதும், காகத்தின் மீதும் சவாரி செய்வது போன்ற உருவங்கள் - வழிபாடுகள் - கோயில்கள் என்றால் இந்த முரண்பட்ட, வெட்கம் கெட்ட மூடத் தனத்தை எண்ணி எங்கு போய் முட்டிக்கொள்வது!
ஒவ்வொன்றுக்கும் ஸ்தல புராணக் குப்பைகள் வேறு - பராசக்தியே துர்க்கையாக இருந்து தீமை களை அழிக்கிறாளாம்; அவளே சரசுவதியாக இருந்து கல்வியையும், அறிவையும் கொடுக்கி றாளாம்; அவளே மகாலட்சுமியாக இருந்து செல்வத்தையும் வாரி வழங்குகிறாளாம்.
இவை உண்மையாக இருக்கும் பட்சத்தில் உலகத்திலேயே இந்து மதக்காரர்கள்தான் கல்வியிலும், செல்வத்திலும், ஆற்றலிலும் முத லிடத்தில் இருக்கவேண்டும்.
11 ஆவது அய்ந்தாண்டுத் திட்டம் போட்டும் இன்னும் தற்குறித்தனம் ஒழிக்கப்படவில்லை. இன்னும் 77 விழுக்காடு மக்களின் ஒரு நாள் வருமானம் ரூபாய் 20 தான். சீனாக்காரன் கையில் உள்ள இந்தியாவின் நிலப் பகுதிகள் இன்னும் மீட்கப்படவில்லை.
பூஜைகளுக்கும், புராணப் புளுகுகளுக்கும் ஏதாவது சம்பந்தா சம்பந்தம் இருக்கிறதா என்று எண்ணிப் பார்க்கவேண்டும். சரசுவதி பூஜை கொண்டாடாத நாட்டில் நூற்றுக்கு நூறு படித்திருக்கிறார்களே! முயற்சி வேண்டாம் - பக்தி போதும் என்று போதனை செய்து வளர்க்கப்பட்ட நாட்டிலே புத்தி எப்படி வளப்பம் பெறும் - முன்னேற்றம் எங்கே முளைகட்டும்?
ஆயுத பூஜையாம் - ஆயுதங்கள் மனிதனின் அறிவு வளர்ச்சிக்கேற்ப ஒவ்வொரு காலகட்டத் திலும் மாற்றம் பெறும். அவை மனிதனின் கருவி கள்தான் - அவற்றிற்குப் பூஜை போடவேண்டுமா?
அப்படிப் பார்த்தால் வீட்டைச் சுத்தம் செய்யப் படும் மிக முக்கியமான கருவி விளக்குமாறுதான் - அதற்குப் பூஜை உண்டா? நகர சுத்தித் தொழி லாளி எந்தக் கருவிகளுக்குப் பூஜை போடுவார்?
விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் பூஜைக்குரியவை எவை என்ற கேள்விகள் எழாதா?
குண்டூசி கூட கண்டுபிடிக்கத் தெரியாத நாட்டில் ஆயுத பூஜைக்கு மட்டும் குறைவு இல்லை. கடவுள்களின் கைகளில் இருக்கும் கருவிகள் எல்லாம் கொலைக்கருவிகளாகத்தான் இருக் கின்றன - அந்தக் கருவிகளைக் கொண்டு இந்து மதக் கடவுள்கள் சண்டை போட்டுள்ளன - கொலைகளைச் செய்துள்ளன - அதற்காகத்தான் பூஜை புனஷ்காரங்களா?
பூஜை, புத்தியைக் கொடுக்காது - துன்மார்க் கத்தைத்தான் கொடுக்கும் என்பதற்கு நவராத் திரிப் பண்டிகை ஒன்று போதாதா?
----------- நன்றி விடுதலை தலையங்கம் (06.10.2010)

Saturday, October 02, 2010
வேலியே பயிரை மேய்கிறது! மேய்கிறது!! மேய்ந்துகொண்டே இருக்கிறது!!!
பயிரை மேயும் வேலிகள்!
மின்சாரம்
இப்படியெல்லாம் பழைய கதை-களைத் தோண்ட ஆரம்பித்தால், அது திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கே ஆபத்து வந்துவிடும். அதற்கு ஏராளமாக ஆதாரங்கள் உண்டு. ஆய்வு நூல்களும் வெளிவந்து இருக்கின்றனவே - _ வீணாகப் புதிய புயலை உண்டாக்-கலாமா அலகாபாத் உயர்நீதிமன்றம் என்று வினா எழுப்புவோர் உண்டு.
நமக்கு ஏன் இந்த வீண் வம்பு என்று பந்தை உச்சநீதிமன்றம் பக்கம் தள்ளி, தன் பொறுப்பைத் தட்டிக் கழித்து-விட்டது அலகாபாத் உயர்நீதிமன்றம் என்பது சிலரின் கணிப்பு. 1949 டிசம்பர் 23ஆம் தேதியன்று திருட்டுத்தனமாக பாபர் மசூதிக்குள் நுழைந்து பாபர் மசூதியின் மய்யப் பகுதிக்குள் _ அதுதான் ராமன் பிறந்த இடம் என்று கூறி ராமன் பொம்-மையை வைத்தார்களே, அந்த அத்து-மீறல் திருட்டுத்தனத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு விட்டதா? அப்படி-யென்றால் மதக்காரணத்தைக் காட்டி இதுபோன்ற சட்ட விரோதமான காரி-யங்களில் ஈடுபடுவது சரிதான் _- அது ஒன்றும் குற்றமில்லை என்று உயர்நீதி-மன்றம் கூறி விட்டதாகக் கருதலாமா?
ராமன் பிறந்த இடம் அந்த இடம்தான் என்று சொன்னதன் மூலம் ராம ஜென்ம பூமிக்காரர்களின் குரலுக்கு நியாய வண்ணத்தைத் தீட்டும் ஓவியர்-களாக நீதிபதிகள் மாறி விட்டார்களா?
புராணம் மற்றும் இதிகாசங்களில் புனையப்பட்ட கற்பனைப் பாத்திரங்கள் எல்லாம் வரலாற்று மாந்தர்களாக நினைப்பதை பொது அறிவு உடைய-வர்களும், வரலாற்று ஆசிரியர்களும் எப்படி எடுத்துக் கொள்ளப் போகி-றார்கள்? அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் அமர்வு இதன்மூலம் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகும் வாய்ப்பு இருக்கிறதா _ இல்லையா?
ராமன் பிறப்பு என்பதை ஏற்கும்போது, அதே இராமாயணத்தில் ராமன் எப்படிப் பிறந்தான் என்று வால்மீகி வரைந்து தள்ளியிருக்கிறாரே -_ குதிரையோடு தசரதனின் மனைவி-மார்கள் ஓர் இரவு முழுவதும் கட்டிப் புரண்டார்கள் என்பதையும் ஏற்றுக் கொண்டுதானே ஆக வேண்டும்? புரோகிதர்களிடம் தசரதனின் மனைவிமார்கள் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள்மூலம் அப்பெண்கள் கர்ப்பம் தரித்தார்கள் என்பதையும் கனம் நீதிபதிகள் கவனத்தில் கொள்ளாமலா இருந்திருப்பார்கள்?
சட்டம் எல்லாம் தேவையில்லை -_ இது மதசம்பந்தமான நம்பிக்கைப் பிரச்சினை _ இதில் நீதிமன்றம் குறுக்கிட முடியாது _ -கூடாது என்று சங்பரிவார்க் கூட்டம் உரக்கக் கூறிக் கொண்டு இருந்ததே -_ அந்தக் கூற்றுக்கு ஆமாம் சாமி போட்டு விட்டனரா நீதிபதிகள்?
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் விடுதலை அறிக்கையில் (1.10.2010) குறிப்பிட்டி-ருந்தபடி- _ பிற்காலத்தில் இது தவறான முன்னுதாரணம் ஆகிவிடாதா? சட்டத்தை நெட்டித் தள்ளிவிட்டு, நம்பிக்கை எனும் வெளிச்சத்தில்தான் இனி நீதிபதிகள் தீர்ப்புகளை தோண்டி எடுப்பார்களோ!
சாட்சியம், ஆதாரம், ஆவணங்கள் என்பவைகளை எல்லாம் குழி தோண்டிப் புதைத்துவிட்டு நம்பிக்கை என்னும் போலிக் கோபுரங்களை எழுப்பிடும் ஆபத்துக்கு அஸ்திவாரம் போட்டுக் கொடுத்து விட்டதோ அலகாபாத் உயர்நீதிமன்றம்!
இந்த நம்பிக்கை என்பது இந்து-மதக்காரர்களுக்கு மட்டுமே உள்ள ஏகக் குத்தகையா? அதே நம்பிக்கையைக் காட்டி கிறித்தவர்களோ, முஸ்லிம்-களோ, பவுத்த மார்க்கத்தவர்களோ பிரச்சினைகளைக் கிளப்பினால் நாட்டின் கெதி என்னாகும்?
விநாயகன் கோயில்கள் எல்லாம் ஒரு காலத்தில் புத்தர் விகார்கள் அல்லவா! புத்தருக்குத்தான் விநாயகன் - _ தலைவன் என்று பெயர் இருந்தது என்பதற்கு எதிர்க்க முடியாத ஆதாரங்கள் உண்டே!
சாஸ்தா என்றுகூட புத்தருக்குப் பெயருண்டு. அந்தப் பெயரைத் திருடி அய்யப்பனுக்கு வைத்துக் கோயில் எழுப்பி விட்டனரே _ அய்யப்பன் கோயில்களை மீண்டும் புத்தர் விகார்-களாக மாற்றிட அலகாபாத் உயர்நீதி-மன்றம் பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்துவிட்டது என்று நம்பலாமா?
பாபர் மசூதி இடிக்கப்பட்ட அந்த இடத்தில்தான் ராமன் பிறந்தான் என்று நீதிமன்றம் பச்சை மையால் கையொப்-பம் போட்டுக் கொடுத்து விட்ட பிறகு பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் நியாயவான்கள் ஆகிவிட்டார்களா? இந்தத் தீர்ப்பு வெளிவந்த அந்தக் கணமே அத்தனைக் குற்றவாளிகளும் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள் என்று பொருளா?
நிலுவையில் இருக்கும் அந்த வழக்கில் அலகாபாத் தீர்ப்பு முக்கிய இடம் பெற வாய்ப்பு _ இருக்குமோ!
ஏற்கெனவே ராம ராஜ்ஜியத்தை உண்டாக்குவோம் -_ இந்து சாம்ராஜ்யத்தை நிறுவப் போகிறோம் என்று இசுரேல் வரை சென்று திட்டம் தீட்டியவர்களுக்குப் பச்சைக் கொடி காட்டப்பட்டு விட்டது என்று அந்த வெறிபிடித்த காவிக் கொடி அனுமார்கள் பூமிக்கும் வானுக்கும் தாவிக் குதிக்க மாட்டார்களா? அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் பொறுப்பு ஏற்றுக் கொள்ளுமா?
அயோத்தியைத் தவிர காசி உள்பட ஆயிரக்கணக்கான மசூதிகளின் பட்டியல் எங்கள் கைகளில் இருக்கின்றன என்று கனல் கக்கிக் கொண்டிருந்தவர்களுக்குக் கைலாகு கொடுத்துவிட்டது நீதித்துறை என்று குற்றம் சொன்னால், அது தவறாகுமா?
உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட உள்ளது. அது என்ன குண்டைத் தூக்கிப் போடப் போகிறதோ!
வேலியே பயிரை மேயலாமா என்ற கேள்வியை இனியாரும் கேட்க முடியாது! மேய்கிறது! மேய்கிறது!! மேய்ந்துகொண்டே இருக்கிறது!!!
-------- விடுதலை ஞாயிறு மலர் (03-oct-2010)
Friday, October 01, 2010
காந்தியை கொன்ற பார்ப்பனியம்...பெரியாரின் தாடி மயிரை கூட தொட முடியாமல் போனது
ராம ராம ஜெய ராஜாராம்
ராம ராம ஜெய சீதாராம்
ராம ராம ஜெய ராஜாராம்
ராம ராம ஜெய சீதாராம்
இப்படியே சொல்லி கொண்டு இருந்திருந்தால் வெட்கம் கெட்ட பார்ப்பனர்கள் உயிருடன் விட்டிருப்பார்கள்.... எனவே பார்ப்பானை எதிர்த்ததால் எவரும் உயிருடன் இருக்க முடியாது. அறிவு ஆசான் அய்யா தந்தை பெரியாரிடம் அவர்கள் விஷமம் பலிக்கவில்லை. பெரியாரின் தடி பார்ப்பனர்களின் மண்டையில் இடி போல விழுந்து சிதறடிக்கப்பட்ட ஒரே இடம் தமிழகம். பெரியாரியத்தை இதுவரை நேராக மோதமுடியாது தவிப்பவர்கள். அதனால் தான் பெரியாரின் தொண்டர்கள் தர்க்க ரீதியாக கேள்விகனைகளையும் பார்ப்பனிய சிந்தனைகளை விவாதிக்கும் போது சில பார்ப்பன பரதேசிகள் அவர்கள் வலைதளத்தில் கூட பெயரில்லாமல் வந்து பேச ஆரம்பிப்பார்கள். இது மட்டும் அல்ல தமிழனே தூண்டி விட்டு மோத விடுவார்கள். ஆனால் என்ன செய்தும் காந்தியம் போல பெரியாரியத்தை ஒழிக்க முடியவில்லை....ஏன் பார்ப்பனர்களால் பெரியாரின் தாடி மயிரை கூட தொட முடியவில்லை. 96 வயது வரை இருந்து தன் கொள்கை வெற்றிகளை கண்டு சென்றவர்.
சிலர் பார்ப்பான் செத்த பாம்பு என்கிறார்கள்....தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரயர் கி.வீரமணியின் அயராத பார்ப்பனிய வேரறுப்பின் காரணமாக பொட்டி பாம்பாக அடங்கி உள்ளார்கள்..அது எப்பொழுது வந்து தன் விசத்தை காந்தியின் மேல் கொட்டியது போல கொட்டும் என்று தெரியாது. அந்த பொட்டி பம்பை நசுக்க இன்று நம்மை போன்ற இளைங்கர்கள் ஆசிரியரின் கையை பலபடுத்த வேண்டும். வாருங்கள் திராவிடர் கழகம் நோக்கி..பெரியாரின் கொள்கை பரப்ப..
ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்திய அரசு நெடும் உறக்கத்தைவிட்டு எழுந்தருள் புரியவேண்டாமா?
இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்களை அறவே இல்லாமல் செய்வதற்கான ஒரு பணியில் அந்நாட்டு அரசாங்கம் செயல்பட்டு வருவதை உலகம் உணர்ந்து கொண்டு விட்டது. இந்திய அரசாங்கத்தைத் தவிர உலகில் உள்ள பெரும்பான்மையான நாடுகளுக்கு இந்நிலை மிகவும் நன்றாகவே புரிந்துகொண்டு இருக்கிறது.
இந்தியாவில் சிறுபான்மை மக்கள் இரண்டாம் தர மக்களாக வாழ ஒப்புக்கொள்ளவேண்டும் என்று இங்குள்ள சங் பரிவார்க் கூட்டம் சொல்லி வருவது போல இலங்கையிலே உள்ள அரசும், இனவெறியர் களும் (புத்த பிக்குகள் உள்பட) அங்கு சொல்லி வருகின்றனர்.
அழித்து முடிக்கப்பட்ட பல லட்சம் தமிழர்கள் போக எஞ்சிப் பிழைத்துள்ள தமிழர்களுக்கான வாழ்வுரி மைக்கு உத்தரவாதம் தேவை என்பதற்காகப் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியே இந்தத் திசையில் கருத்துத் தெரிவித்துள்ளார்; நியாயத்தை, உண்மையை உணருபவர்கள் இன்னும் இலங்கைத் தீவிலே ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று சொல்லிக் கொள்ள இது பயன்படக் கூடும்.
இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களின் இந்த அவல நிலை மாற்றப்படவேண்டும் என்ற குரல் உலகம் முழுவதும் அழுத்தமாக ஒலிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்கா, லண்டன் போன்ற இடங்களில் போராட்டக் குரல் வலுவாக ஒலித்திருக்கிறது. அய்.நா. மன்றத்தின் முன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பரித்து எழுந்துள்ளனர்.
தும்பை விட்டு வாலைப் பிடிப்பதுபோல அய்.நா. மன்றம் தூக்கத்திலிருந்து கொஞ்சம் விழித்து அரை குறையாக நியாயம் பேச ஆரம்பித்தது.
ஈழத் தமிழர்களின் இன்றைய நிலையை நேரில் கண்டுவர, அய்.நா. ஒரு தூதுக்குழுவை அனுப்பிட முடிவு செய்த நிலையில், இலங்கை அமைச்சரே போராட்டம் நடத்துகிறார் - அந்தக் குழுவை அனுமதிக்கமாட்டோம் என்று ஆணவத்துடன் குரல் கொடுக்கின்றனர் என்றால், இதன் தன்மையைப் புரிந்துகொள்ளவேண்டாமா? மடியில் கனமில்லை என்றால், வழியில் பயம் இருக்காது என்ற பழமொழி ஒன்று உண்டு.
இலங்கை அரசு - அய்.நா.வின் ஆய்வுக்குழுவை அனுமதிக்க மறுத்ததன்மூலம், அதன் மடியில் உள்ள கனம் எவ்வளவுப் பெரியது என்பதை எளிதிற் தெரிந்துகொள்ளலாம்.
அய்.நா.வின் குழுவை அனுமதிக்க மறுத்த நிலையில், அய்.நா.வே முன்வந்து உரிய நடவடிக் கைகளை மும்முரமாக எடுக்க முன்வந்திருக்க வேண்டும். ஏதோ ஒப்புக்காக அந்த நிலையை எடுத்தது - அதோடு சரி என்ற முடிவுக்குத்தான் வரவேண் டியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவை தலைமையிடமாகக் கொண்ட பன்னாட்டுச் சட்ட வல்லுநர் ஆணையம், முகத்தில் அறைந்ததுபோல் இலங்கை அரசின் உரிமை மீறலை - சட்ட மீறலை எடுத்துக் கூறியுள்ளது.
இந்த உலக அமைப்பில் 60 சட்ட வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளனர். இலங்கையில் சிறீலங்கா அரசின் நடவடிக்கைகளை நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் பார்ப்பன சக்திகள், பார்ப்பன ஊடகங்கள் ஈழத் தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் குரல் கொடுப்பவர் களை இனவெறியர்கள் என்று முத்திரை குத்துகின் றனவே - இந்த பன்னாட்டு சட்ட வல்லுநர்கள் திட்டவட்டமான வகையில், இலங்கை அரசின் சட்ட மீறலைப் பிசிறின்றி வெளிப்படுத்தியிருக்கிறார்களே - இதற்கு எந்த உள்நோக்கத்தைக் கற்பிக்கப் போகிறார்கள்?
சந்தேகத்தின் பேரில் 8000 பேர்களை இலங்கையில் சிறைகளில் அடைத்திருப்பது - உலகில் எங்கும் நடைபெறாத மிகப்பெரும் அளவிலான நிருவாகச் சிறைப்பிடிப்பு என்று உலகின் சட்ட வல்லுநர்கள் கூறிவிட்டனரே- இதற்குப் பிறகாவது இங்குள்ள ஆரிய வெறியர்கள் கண் திறந்து பார்க்கவேண்டாமா? இந்திய அரசு நெடும் உறக்கத்தைவிட்டு எழுந்தருள் புரியவேண்டாமா?
செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளுக்குக் கூட - சிறையில் இருக்கும் கைதிகளைக் காண்பதற்கு அனுமதி கொடுக்காததை பன்னாட்டு சட்ட மய்யம் சுட்டிக்காட்டிக் கண்டித்துள்ளதே!
திராவிடர் கழகம் தமது பொதுக்குழு, தலைமைச் செயற்குழு கூட்டங்களிலும், சீர்காழி வரை நடைபெற்ற மண்டல மாநாடுகளிலும் தொடர்ந்து நிறைவேற்றிக் கொடுத்த தீர்மானங்கள்தான் - இப்பொழுது பன்னாட்டுச் சட்ட வல்லுநர் ஆணையத்தின் எச்சரிக்கையாக வெளிவந்துள்ளன.
இத்தகு ஆணையங்களுக்கு எந்த அளவு சட்ட அங்கீகாரம் என்பது ஒரு பிரச்சினைதான் என்றாலும், இந்த அமைப்பு உலகில் பல முக்கிய நகரங்களில் கருத்துரு வாக்கத்தை உருவாக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுவது - அதன் மனிதநேயத்தை மேலும் உயர்த்திக் காட்டும் செயலாக இருக்க முடியும்.
----- நன்றி விடுதலை தலையங்கம், 01-10-2010

Subscribe to:
Posts (Atom)