வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Monday, September 27, 2010

இனிப் பார்ப்பனப் பருப்பு இங்கு வேகாது வேகவே வேகாது!

கேள்வி: பிராமணர்கள் தமிழகத்தில் விரும்பப்படவில்லை என்ற துக்ளக் ஆசிரியர் சோவின் கருத்துபற்றி...?

பதில்: பிராமணர்கள் உயர்ஜாதி-யினர் என்ற அகங்காரம் என்றோ மறைந்து விட்டது. சமுதாய நீரோட்-டத்தில் தங்களையும் அவர்கள் இணைத்-துக் கொண்ட நிலையில், அவர்களை ஒதுக்குவதும், ஒடுக்குவதும் வெகுவாகக் குறைந்து போய்விட்டது. இப்பொழுது தோன்றியிருப்பது சமுதாயத்தைப் பிரிக்கும் வேறுவித ஜாதிப்பிரிவினை ஆபத்து!

(கல்கி 19.9.2010 பக்கம் 30)

_ -இவ்வாறு கல்கி இதழில் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

28.8.2010 தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் பக்கம் எட்டில் தலைப்புச் செய்தியாக:

Ignored by Political Parties and Denied Welfare, Large Sections of a Traditionally Elite in Poverty
Brahmins on the margins, Fight for survival எனும் தலைப்பில் வெளி வந்தது.

இதில் சோ ராமசாமியின் கருத்தும் கேட்கப்பட்டுள்ளது.“Brahmins are not wanted in Tamilnadu, beyond that I do not want to comment’’ என்று கூறியுள்ளார்.

ஆதங்கத்தோடோ ஆத்திரத்-தோடோதான் அய்யர்வாளின் வாயிலி-ருந்து இச்சொற்கள் கொப்பளித்துக் கிளம்பியிருக்க வேண்டும்.

அவர் எந்தக் கண்ணோட்டத்தில் சொல்லியிருந்தாலும் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல பார்ப்பனர்கள் என்பவர்கள் எங்கும் தேவைப்படாதவர்கள்தான்.

மனிதர்களாக இருப்பவர்கள் தேவையானவர்களே! பிர்மாவின் நெற்றியிலிருந்து பிறந்தவர்கள் என்ற இறுமாப்புடன் - _ இன்றைக்கும் ஒவ்-வொரு ஆண்டும் அந்த ஜாதி ஆணவச் சின்னமான பூணூலைப் புதுப்பித்துக் கொள்பவர்கள், அக்கிரகாரத்துச் சிறுவர்களுக்குப் பூணூல் கல்யாணம் செய்து கொண்டு இருப்பவர்கள் மற்றவர்களை இதன்மூலம் இழிவு-படுத்தக் கூடியவர்கள் சமுதாயத்துக்குத் தேவையானவர்கள் அல்லவே.

ஆச்சரியமாகக்கூட இருக்கிறது. இப்பொழுது எழுந்திருக்கும் இதே கேள்வியை தந்தை பெரியார் கேட்டு, அதற்கு விடையும் சொல்லியிருக்கிறார்.

நாம் உழைக்கிறோம்; உழுகிறோம். நம்மால் தான் மக்களுக்கு உணவு அளிக்கப்படுகிறது. நாம் வேளாண்மை செய்யா விட்டால், இந்த நாட்டு மக்களுக்கு உணவு இல்லை. நாம்தான் நெசவு செய்கிறோம்; நம்மால்தான் அத்தனைப் பேருக்கும் உடை, துணி கிடைக்கிறது. நாம்தான் வீடு கட்டிக் கொடுக்கிறோம். ஆகவே நம்மால்தான் இந்த நாட்டு மக்களுக்கு இருக்கிற வசதிகளெல்லாம் செய்யப்பட்டு இருக்கின்றன. ஆகவே ஒரு நாட்டு மக்களுக்கு உணவு, உடை, வீடு முதலிய வசதிகள் அளிக்கும் நாம்தான் சூத்திரர்கள் என்று இழிவுபடுத்தப்பட்டு இருக்கிறோம்.

பார்ப்பனன் எவனாவது உழைக்கிறானா? எந்தப் பார்ப்பனத்தியாவது வீடு கட்டுகிறாளா? கல் உடைக்கிறாளா? ஏன்? இவைகள் எல்லாம் அவர்கள் செய்தால் பாவம் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். ஆகையால் இவைகள் எல்லாம் மாறி நாம் முன்னேற வேண்டு மென்றுதான் கேட்கிறோம் (விடுதலை 31.7.1951) என்று தந்தை பெரியார் இன்-றைக்கு ஏற்பட்டுள்ள பிரச்சி-னைக்கு எழுந்துள்ள வினாவுக்கு 60 ஆண்டு-களுக்கு முன்பே பதில் கூறியுள்-ளார்.

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியில் பார்ப்பனர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உழலுவதாகவும், புரோகிதர்களுக்கு மாத வருவாய் ஆயிரம் ரூபாய்க்கும் கீழ்தான் என்றும், அவர்களின் மனைவிமார்கள் சமையல் வேலை செய்கிறார்கள் என்றும், பிள்ளைகளை நல்ல கல்விக் கூடங்-களில் சேர்க்க முடியவில்லை என்றும் அந்த ஏடு மூக்கால் அழுதுள்ளது. மயி-லாப்பூர் திருவல்லிக்கேணி பகுதிகளில் பழைய வீடுகளில், ஒரு அறையை வாட-கைக்கு எடுத்து வாழும் அவலத்தில் உள்ளனர் என்றெல்லாம் பட்டியலிடப்-பட்டுள்ளது.

மயிலாப்பூர் சட்டப் பேரவை உறுப்-பினர் எஸ்.வி. சேகர் சொல்லியுள்ளதாக ஒரு புள்ளி விவரத்தையும் அந்த ஏடு கூறுகிறது. 50 சதவீதத்துக்கும் மேற்-பட்ட பார்ப்பனர்கள் அன்றாட வாழ்-வுக்கு வாய்க்கும் கைக்குமாக அல்லாடிக் கொண்டு இருப்பதாகக் கூறியிருக்கிறார்.

அவர்கள் கூறுவது எல்லாம் உண்மை எனின் வறுமைப் பிணி அவர்-களைப் பிய்த்துத் தின்பது உண்மை-யெனின், சகலவிதமான கூலி வேலை-களையும் செய்ய வேண்டியதுதானே?

தந்தை பெரியார் அன்று வினா எழுப்பியபோல கல் உடைக்கி-றார்களா? களை எடுக்கிறார்களா? ரிக்ஷா இழுக்கிறார்களா? துணி வெளுக்கி-றார்களா? சவரத் தொழில் செய்கி-றார்களா? ஏன் இவற்றைச் செய்வ-தில்லை? வறுமையிலும் வருணா-சிரமம் இருப்பது ஏன்? அறிவார்ந்த முறையில் ஆத்திரக் குரங்காகத் தாவிடாமல் பதில் சொல்லட்டுமே. அரசு வேலை கிடைப்பதில்லை என்று புலம்பு-கிறார்கள். அவர்களின் சதவிகி-தமான மூன்று சதவிகிதம் கிடைக்க-வில்லை என்று கூற வருகிறார்களா? அல்லது அதற்கு முன் நூற்றுக்குத் தொண்-ணூறு விழுக்காடு விழுங்கிக் கொண்டு கிடந்தார்களே -_ அந்த நிலை பறி போய்-விட்டது என்று பதறுகி-றார்களா? என்பதைத் தெரிந்து கொள்-ளவே நமக்கு ஆசை.

2001-ஆம் ஆண்டு முதல் இந்நாள்-வரை கடந்த 10 ஆண்டு காலமாகத் தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர்-கள் யார்?

பி. சங்கர், சுகவனேஸ்வரர், லட்சுமி-பிரனேஷ், நாராயணன், எல்.கே. திரிபாதி, கே.எஸ். ஸ்ரீபதி, மாலதி என்று வரிசையாக 7 பேர் தொடர்ந்து தமிழ்-நாட்டில் அரசின் தலைமைச் செய-லாளர்களாக பார்ப்பனர்களே இருந்து வருகின்றனரே! இதேபோல தாழ்த்தப்-பட்டவர்களோ, பிற்படுத்தப்-பட்டவர்-களோ, மிகவும் பிற்படுத்தப்-பட்டவர்-களோ தொடர்ந்து தலைமைச் செய-லாளராக இருக்கும் வாய்ப்பு உண்டா?

பார்ப்பனர்களின் ஆதிக்க மேலாண்மை இன்னும் தமிழ்நாட்டில் இருக்கத்தான் செய்கிறது என்பதற்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டு தேவைப்படுமா?

மத்திய அரசு துறைகளில் தாழ்த்-தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்ட-வர்களும் இன்னும் ஏழு சதவிகிதத்தைத் தாண்டவில்லையே! -_ சென்னை அய்.அய்.டி.யில் ஆசிரியர்கள் மொத்தம் 427 இதில் தாழ்த்தப்பட்டோர் இருவர், பிற்படுத்தப்பட்டோர் 20, முசுலிம்கள் பூஜ்ஜியம், மீதி அத்தனை இடங்களும் பார்ப்பனர் வயிற்றில்தானே அறுத்து வைக்கப்பட்டுள்ளன.

அரசுத் துறைகளும், பொதுத் துறைகளும் அருகி, தனியார்த் துறை-களும், பன்னாட்டு நிறுவனங்களும் நாளும் பெருகி வருகின்றன. அவற்றில் உச்சப் பதவிகளில், மேலாண்மைப் பதவிகளில் நங்கூரம் பாய்ச்சிக் கிடப்பவர்கள் 90 விழுக்காட்டுக்கு மேல் பார்ப்பனர்கள்தானே?

இந்த நிறுவனங்களுக்கு பணிய-மர்த்தம் செய்யும் பெரிய பொறுப்பில் இவர்கள்தானே இருக்கிறார்கள்? முதுகைத் தடவிப் பார்த்து, பூணூலை வருடிப் பார்த்துத்தானே பட்டுப்-பீதாம்பரம் கொடுத்துப் பணிகளில் அமர்த்துகின்றனர். மறுக்க முடியுமா? எடுத்துக்காட்டாக டைடல் பார்க்கில் ஒரு கணக்கெடுத்து (ஷிக்ஷீஸ்மீஹ்)ப் பார்க்கட்டும்; பார்ப்பனர்களின் பம்மாத்-தின் குட்டு உடைபட்டுப் போய் விடுமே!

தந்தை பெரியாரைப் பொறுத்தோ, திராவிடர் கழகத்தைப் பொறுத்தோ பார்ப்பனர்கள் வறுமைத் தீயில் புழுவாய்த் துடிக்க வேண்டும் என்று நினைக்கிற மனிதநேயமற்றவர்கள் அல்லர். அப்படித் துடித்தால் அது அவாள் அவாள் தலையெழுத்து என்று கர்மா தத்துவம் பேசுபவர்களும் அல்லர்.

அவர்கள் நன்றாகவே செழித்து வளரட்டும். மாட மாளிகையில், கூட கோபுரங்களில் சொகுசு மெத்தைகளில் உருண்டு புரளட்டும்.

இதுகுறித்து 64 ஆண்டுகளுக்கு முன்பே (குடிஅரசு 9.11.1946) பார்ப்பான் பணக்காரனானால் எனும் தலைப்பில் தம் எண்ணத்தைக் கல்லுப் பிள்ளை-யார் போல பதிவு செய்துள்ளாரே!

எனக்கு, எனது சுயமரியாதை, திராவிடர் கழகப் பிரசாரத்தின் கருத்து என்னவென்றால், ஒரு பார்ப்பான்கூட மேல் ஜாதியான் என்பதாக இருக்கக்கூடாது என்பதற்காகத்தானே தவிர, பார்ப்பான் பணக்காரனாகக் கூடாது, அவன் நல்வாழ்வு வாழக்-கூடாது, அவன் ஏழையாகவே இருக்க-வேண்டும் என்பது அல்ல. ஒவ்வொரு பார்ப்பானும் ராஜா சர் அண்ணாமலை செட்டியார், பொப்பிலி ராஜா, சர் ஷண்முகம் செட்டியார், சர்.ராமசாமி முதலியார் போன்றவராக, கோடீசுவ-ரனாகவும், இலட்சாதிபதியாகவும் ஆகிவிட்டாலும் சரியே; எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் எந்தப் பார்ப்பானும், மடாதிபதிகள் உள்பட எவரும், சிறிது கூட நமக்கு மேல்ஜாதியினன் என்பதாக இருக்கக் கூடாது என்பதுதான் என் நோக்கம். பணக்காரத்தன்மை ஒரு சமுகத்துக்குக் கேடானதல்ல, அந்த முறை தொல்-லையானது, _ சாந்தியற்றது என்று சொல்லலாம் என்றாலும், அது பணக்காரனுக்குத் தொல்லையைக் கொடுக்கக் கூடியதும், மனக்குறை உடையதும், இயற்கையில் மாறக்கூடிய-தும், எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றக்கூடியதுமாகும்.

ஆனால் இந்த மேல் ஜாதித் தன்மை என்பது இந்த நாட்டுக்குப் பெரும்-பாலான மனித சமுதாயத்துக்கு மிகமிகக் கேடானதும், மகா குற்றமுடையதுமாகும். அது முன்னேற்றத்தையும், மனிதத் தன்மையையும் சமஉரிமையையும் தடுப்பதுமாகும். அது ஒரு பெரிய மோசடியும், கிரிமினலுமாகும். ஆதலால் என்ன விலை கொடுத்தாவது மேல் ஜாதித் தன்மையை ஒழித்தாக வேண்டும் என்பது எனது பதிலாகும்.

(குடிஅரசு 9.11.1946)

பார்ப்பனர்களுக்காகப் பரிதாபப்-படுவோர் தந்தை பெரியார் அவர்களின் ஒவ்வொரு எழுத்துக்கும், சொல்லுக்கும் -_ நாணயம் இருந்தால் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் ஆவார்கள்.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்றால், அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லுபவர்கள் யார்?

ஆச்சாரியார் கை சாத்துக்கொடுத்து, பல்கி வாலாவை வக்கீலாக நியமித்து, உச்சநீதிமன்றத்தில் விவாதம் செய்ய வைத்து, சாதகமான தீர்ப்புகளைப் பெற்று வரும் முஸ்தீபுகளை எல்லாம் நாடறியுமே.

கோயில்களில் தமிழில் அர்ச்சனை என்றால் என்ன எழுதுகிறார் திருவா-ளர் சோ ராமசாமி? மொழி ஆர்வமா? மத துவேஷமா? என்று துக்ளக் தலை-யங்கம் தீட்டுகிறதே! (துக்ளக் 18.11.1998)

தமிழில் அர்ச்சனை செய்தால் அதன் பொருளைப் புரிந்து கொள்ள முடி-யுமேதவிர, அவற்றின் புனித சக்தியைப் பாதுகாக்க உதவாது என்று எழுதி-னாரே! அடேயப்பா, இப்பொழுது என்ன சொல்கிறார்? பார்ப்பனர்கள் தமிழ்-நாட்டுக்குத் தேவையில்லை _ இது குறித்து வேறு எதையும் சொல்ல விரும்ப-வில்லை என்று வியர்த்து விறுவிறுத்து போகிறாரே!

எவ்வளவுக்கெவ்வளவு உப்பு சாப்-பிட்டார்களோ அவ்வளவுக்கவ்வளவு தண்ணீர் குடித்துத்தானே தீரவேண்டும்.

பிராமணர்கள் உயர் ஜாதியினர் என்ற அகங்காரம் மறைந்து போய்-விட்டது என்று கல்கி பதில் சொல்-கிறதே (காலந்தாழ்ந்தாவது பார்ப்-பனர்கள் அகங்காரமாய் இருந்தனர் என்பதை ஒப்புக் கொண்டுள்ளது கல்கி என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது) அந்தக் கல்கிக்கு ஒன்றை நினைவூட்ட வேண்டும்.

தமிழ்நாடு பிராமணர் சங்கம் சென்னை அண்ணாநகர் டி.கே. ரெங்க-நாதய்யர் ஸ்ரீ கிருஷ்ணா தோட்டத்தில் வெள்ளி விழா மாநாடு நடத்தியதே, நினைவிருக்கிறதா? (டிசம்பர் 2005)

அந்த மாநாட்டில் பார்ப்பனர்கள் என்ன ஆட்டம் போட்டார்கள்? அரிவாளைத் தூக்கிக் கொண்டு சாமி ஆடவில்லையா?

2006ஆம் ஆண்டில் இந்த நாட்டின் தலையெழுத்தையே பிராமணர்கள்தான் நிர்ணயிப்பார்கள். நம்மைப் பார்த்தாலே எல்லாரும் பயப்படனும், நாம் நம்-முடைய நிலையை உணர்த்த ஆவணி அவிட்டம் அன்று வீட்டிற்குள் இருந்து பூணூல் மாற்றக் கூடாது. வீட்டை விட்டு வெளியே வந்து தெருவில் வந்து பூணூலைப் போட வேண்டும் என்று ஜாதி ஆணவத் திமிரேறி முறுக்கிப் பேசினார்களே -_ மறந்து விட்டீர்களா?

தமிழன் என்று சொல்லடா! தலை-நிமிர்ந்து நில்லடா - _ அது ஒரு சுலோகம்.

பிராமணன் என்று சொல்லடா! பெருமையுடன் நில்லடா _ இது நம்மசுலோகம் என்று கர்ச்சித்தார்களே _ இதுதான் பார்ப்பனர்களின் அகங்-காரம் ஆணவம் அடங்கி விட்டது என்பதற்கான அர்த்தமா?

பொறியாளரான சுஜாதா என்ற எழுத்தாளரே, அம்மாநாட்டில் பங்கு கொண்டு தன் பார்ப்பனத்தனத்தைப் பூரிப்போடு வெளிப்படுத்துகிறார் என்றால், யாரை நினைத்துத் தமிழர்கள் ஏமாறுவது?

பார்ப்பனர்களின் அமைப்பான சென்னை ராயப்பேட்டை லட்சுமிபுரம் யுவர்சங்கம் விடுத்த அழைப்பினைப் பெருந்தன்மையுடன் ஏற்று, அங்கு சென்று சில முக்கிய கருத்துகளைப் பொறுப்புடன் எடுத்துரைத்தவர் தந்தை பெரியார் அல்லவா?

பார்ப்பனர்கள் மட்டுமே நிறைந்த அந்த அவையிலே தந்தை பெரியார் பேசியது என்ன?

நம்மில் இரு தரப்பிலும் பல அறிஞர்களும், பொறுமைசாலிகளும் இருப்பதனாலேயே நிலைமை கசப்புக்கு இடம் இல்லாமல் இருந்து வருகிறது. இப்படியே என்றும் இருக்கும் என்று நினைக்க முடியாது. திராவிடர் கழகப் பின் சந்ததிகளும், பிராமணர்களின் பின் சந்ததிகளும் இந்தப்படியே நடந்து கொள்வார்கள் என்றும் கூற முடியாது. ஆதலால் அதிருப்திகளுக்குக் காரண மானவைகளை மாற்றிக் கொள்வது இருவருக்கும் நலம் - அதை நண்பர் ஸ்ரீனிவாசராகவன் அவர்களும் நன்றாய் விளக்கி இருக்கிறார் (லட்சுமிபுரம் யுவர் சங்கம் என்ற பார்ப்பன அமைப்பின் செயலாளர்) அதாவது பிராமணர்களும் கால தேச வர்த்த மானத்துக்குத் தக்கபடி தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சொன்னார். அதுதான் இப்போது இரு தரப்பினரும் கவனிக்க வேண்டியது (5.1.1953இல் பெரியார் உரை விடுதலை 8.1.1953).

அய்யா கூறி அரை நூற்றாண்டு ஆகி-விட்டது. ஆரிய பார்ப்பனர்கள் திருந்தினார்களா?

தமிழ் செம்மொழி ஆனால், வீட்-டுக்கு வீடு பிரியாணி பொட்டலம் கிடைக்-குமா என்று தானே தினமலர் கேள்வி கேட்கிறது?

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்-டாக அரசு அறிவிக்க முடியாது _ அதை யார் மதிக்கப் போகிறார்கள் என்று தானே சோராமசாமி சொல்கிறார்.

இந்த யோக்கியதையில் உள்ள பார்ப்பனர்கள், ஏதோ தாங்கள் திருந்தி விட்டது போலவும், ஆணவம் அடங்கி விட்டது போலவும் தமிழ் நாட்டில் பரிதாப நிலைக்கு ஆளாகி விட்டது போலவும் நரி நீலிக் கண்ணீர் வடிக்கிறது _ பெரியார் பிறப்பதற்கு முன் வேண்டுமானால் ஏமாந்திருக்-கலாம்; பெரியார் எங்கள் ஞானக் கண்களையல்லவா திறந்து விட்டி-ருக்கிறார் சுயமரியாதை உணர்வையல்-லவா சூடுபடுத்தி எட்டி எழுப்பியுள்-ளார் _ இனிப் பார்ப்பனப் பருப்பு இங்கு வேகாது  வேகவே வேகாது!

---- நன்றி விடுதலை (25-09-2010) ஞாயிறு மலர், அடங்கி விட்டதா அகங்காராம் எனும் தலைப்பில்  கவிஞர்  கலி.பூங்குன்றன் எழுதியது
                                                     

7 comments:

Udhaya said...

எந்த காலத்தில் இருக்கிறீர்் நண்பரே
இன்று சாதி பேதம் முக்கியமான விஷயமே அல்ல.
பிற்படுத்தப் பட்ட , தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வியிலும் , அறிவிலும் மிக முன்னணியில் வந்துகொண்டிருக்கிறார்கள். பார்ப்பன வாதம் எதிர்ப்பு என்பதை விட இன்றும் ஒருவேளை உணவுக்கே வழியற்ற பல மக்களை, இந்த நாடும் நாமும் கண்டு கொண்டிருக்கிறோம்.
வறுமை, இயலாமை, போன்றவற்றை அறவே அழிக்க யோசனைகளை உங்களை போன்றவர்கள் இந்த சமுதாயத்திற்கு அளிக்க வேண்டும்.

பார்ப்பனியம் என்ற செத்துப் போன பாம்பை எத்தனை முறை அழித்தாலும் அது ஏற்கனவே கால வெள்ளத்தில் காணாமல் போய் விட்டது.
கடவுள் நம்பிக்கை, பார்ப்பனீயம் என்ற இரண்டை பற்றி பேசுவதை விட, வறுமை என்ற துன்பத்தினை ஒழிக்க மக்களுக்கு வழிகாட்டி சுயமாக வாழச் செய்யுங்கள்.
அப்போது கடவுள் நம்பிக்கை, பார்ப்பனீயம் என்ற இரண்டுமே அதற்கு தேவைப் படாது.

aandon ganesh said...

good article sir

பரணீதரன் said...

செத்து போன பாம்பு ஏன் அனைத்து சாதியையும் அர்ச்சகர் என்ற உடன் உச்சநீதிமன்றம் ஓடுகிறது...தமிழ் செம்மொழி மாநாடு என்றதும்...எல்லோருக்கும் பிரியாணி கிடைக்கு என்கிறது.....தை முதல் நாள் தமிழரின் புத்தாண்டு என்றதும் குதி ஆட்டம் போடுகிறது...அவிட்டம் என்றதும் தன உயர்சாதி திமிரை காட்ட பூணூலை புதுபிக்கிறது...இன்னும் "பிராமின்ஸ் ஒன்லி" என்று வீடு வாடகைக்கு விடுகிறது... இதெல்லாம் பார்பனியம் செத்த பாம்பா? இல்ல உயிருடன் நெளியும் பாம்பா?

வறுமை ..பணக்கார தன்மை என்பது வரும் போகும்...ஆனா சாதி, சூத்திரபட்டம் அழியாது..அதனை அடியோடு ஒழிக்கும் வரை போராடியே ஆகவேண்டும் தோழரே..

ஒசை said...

இனி பார்ப்பனப் பருப்பு இங்கு வேகாது. வேகவே வேகாது. ஆனா வேக வேறு வேறு சாதி பருப்பெல்லாம் இருக்கு. அந்த பருப்பு வேகறதை பகுத்தறிவால் ஒன்றும் செய்ய முடியாது. ஏன்னா அந்த பருப்பு வேகறதுக்கு காரணமா இருப்பது, பகுத்தறிவு பேரை சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள். உத்தப்புரத்துக்கு போங்க. சமத்துவபுரமாக்குங்க.பார்ப்பான்னா பொங்குவீங்க. பிற சாதீன்னா பம்முவிங்க.

பரணீதரன் said...

பார்ப்பனியம் ஒன்று சாதி அல்ல ஓசை..முதலில் அதனை புரிந்துகொள்ளுங்கள்.....தமிழன் சிங்களவன் போராட்டம் எப்படியோ அதன்படி ஆரியர் திராவிடர் போரட்டம்...புரிந்துகொள்ளுங்கள்..அங்கு தேசிய தலைவர் ஆயுதத்துடன் சிங்களவனை எதிர்கொண்டார்....இங்கு பெரியார் தொண்டர்களுடன் ...பார்ப்பனிய பருப்பை ஒழித்தார்..அதில் வெற்றியும் கண்டார்.....மற்ற சதி மற்ற சாதி என்று பிதற்றாதீர்கள்.....உத்தபுரம் மற்றும் நாகர்கோவிலில் இன்றும் உள்ள இரட்டை தம்ளர் முறை அனைத்தையும் ஒழிக்கப்படும்..ஒழித்தாகிவிட்டது...

Muthukumara Rajan said...

உத்தபுரம் மற்றும் நாகர்கோவிலில் இன்றும் உள்ள இரட்டை தம்ளர் முறை அனைத்தையும் ஒழிக்கப்படும்..ஒழித்தாகிவிட்டது..

ஒழிக்கப்படும் - ஒழிக்க போகிர்கள்
ஒழித்தாகிவிட்டது - ஒழித்துவிட்டார்கள்

எதாவது ஒன்னு சொல்லுக நண்பரே .

நம்பி said...

//ஒசை. said...

இனி பார்ப்பனப் பருப்பு இங்கு வேகாது. வேகவே வேகாது. ஆனா வேக வேறு வேறு சாதி பருப்பெல்லாம் இருக்கு. அந்த பருப்பு வேகறதை பகுத்தறிவால் ஒன்றும் செய்ய முடியாது. ஏன்னா அந்த பருப்பு வேகறதுக்கு காரணமா இருப்பது, பகுத்தறிவு பேரை சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள். உத்தப்புரத்துக்கு போங்க. சமத்துவபுரமாக்குங்க.பார்ப்பான்னா பொங்குவீங்க. பிற சாதீன்னா பம்முவிங்க.
9:49 PM //

உனக்கு இதுல எல்லாம் அக்கறையே கிடையாது...பார்ப்பனனை பாதுகாக்கிற பம்மாத்து வேலை என்பது எமக்கு தெரியாதா...? மனச்சாட்சி தொட்டு சொல்லு பார்ப்போம்.

இதுல இருந்து வெளியே வரமுடியல அப்புறம் என்ன? பாப்பா என்னா பொங்குவீங்க...

பொங்காம இருந்தா உனக்கு படு குஷி அதுக்குத்தானே...

எல்லாத்துக்கும் காரணம் பாப்பாந்தான்...

என்ன? அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்....கோயில் உள்ளே நடந்துடுச்சா...?

யாரு? தடையாயிருக்கறது பிற சாதியினரா? பார்ப்பானா? எதுக்கு இந்த வூடு கொளுத்தி வேலை....?

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]