வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, September 23, 2010

அயோத்தி பற்றி இல.கணேசன்களின் உரத்த சிந்தனையும்..நமது கருத்தும்

ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் வைத்தியநாதய்யர்  இந்த தினமணி பத்திரிக்கைக்கு பொறுப்பேற்றது போதும், அன்றைய நாளில் இருந்து தினமணி ஆர்.எஸ்.எஸ் கொள்கை பத்திரிக்கையாகவே வெளிவந்து கொண்டிருக்கிறது. அது பத்தாது என்று இன்று (23.09.2010) திரு.இல.கணேசன் எழுதிய "அயோத்திப் பிரச்னை - ஓர் உரத்த சிந்தனை!" என்ற கட்டுரையை வெளியிட்டு  வெளிப்படையாகவே அதனை நிருபித்துள்ளார் தினமணி ஆசிரியர். அதில் பாருங்கள் கட்டுரை ஆசிரியர் இல.கணேசன் எடுத்ததும் எப்படி ஆரம்பிக்கிறார் என்றால் நான் ஒரு பாரதிய ஜனதா கட்சிக்காரன். அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ்.காரன். இந்த பா.ஜ.க. என்றால் என்ன, ஆர்.எஸ்.எஸ். என்றால் என்ன என்பதை எத்தனை முஸ்லிம்கள் அறிந்திருப்பார்கள்?.இப்படித்தான் துவங்குகிறார். போதும் இல கணேசன் அவர்களே நீங்கள் ஒரு ஆர்.எஸ்.எஸ் காரர் என்பதை வெளிப்படையாக ஒப்புகொண்டமைக்கு நன்றி. பி.ஜே.பி வேறு ஆர்.எஸ்.எஸ் வேறு என்று விவாதம் செய்யும் தமிழர்களே தெரிந்து கொள்ளுங்கள் இல கணேசன் அவர்களின் கூற்று மூலம்.

மேலும் அந்த கட்டுரையில் என்ன சொல்லுகிறார் பாருங்கள் "சிலர் இது பாபரது கல்லறை எனத் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாபர் கட்டியதால் பாபர் மசூதி. ஹிந்து ஆலயத்தை இடித்து கட்டியதா அல்லது காலி மனையில் கட்டப்பட்டதா என்பது வழக்கு. 1950-லிருந்து நடைபெறும் வழக்கு, நாளை தீர்ப்பை எதிர்பார்த்து நிற்கிறது. இனி எவரும் பாபர் மசூதி கட்ட முடியாது. மன்மோகன் சிங் கட்டினால் அது மன்மோகன் மசூதி என்றே அழைக்கப்படும்.

பாபர் யார்? அவர் இந்தியரல்ல, அந்நியர். படையெடுத்து ஆக்கிரமிக்க வந்த அந்நியர். இரண்டாவது முறை அவர் தொடுத்த போரில் அவருக்கு வெற்றி கிடைத்தது. அந்த வெற்றியைக் கொண்டாட அவர் அமைத்த வெற்றிச் சின்னம்தான் ராமர் கோயிலை இடித்துக் கட்ட முயற்சித்த மசூதிக் கட்டடம்.

அன்னியனுக்கு வெற்றிச் சின்னம் என்றால் அடிமைப்பட்டவனுக்கு அடிமைச் சின்னம். ஆக்கிரமிப்பு அகன்ற உடனேயே மீண்டும் அடிமைச் சின்னத்தை மாற்றி அமைத்திருக்க வேண்டும்.

பாபர் எங்கள் மதத்தவன், அதனால் அந்தச் சின்னம் அடிமைச் சின்னமானாலும் அது போற்றுதலுக்குரியது எனக் கருதுவது தேசபக்தியின் வெளிப்பாடாக ஆகாது."

அவர் மேலே சொல்லி இருப்பது போல பாபர் மசூதி ஒரு அடிமை சின்னம் என்றால் (அதாவது பாபர் படையெடுத்து வெளிநாட்டில் இருந்து வந்தவராம்...என்ன அறிவு இல.கணேசன்களுக்கு....பக்தி வந்தால் புத்தி போய்விடும் என்று அய்யா சொன்னது மிக சரி )...அப்புறம் எதற்கு எக்மோர் ரயில்வே, ரிப்பன் பில்டிங், சென்ட்ரல் ஸ்டேஷன்...இப்படி வெள்ளை காரன் கட்டின அனைத்தும் அடிமை சின்னம் தானே? அப்புறம் எதற்கு இன்னும் இங்கே இருக்கு...அதனையும் இந்த ஆர்.எஸ்.எஸ் கும்பல் ஒரு வழி பண்ணவேண்டியது தானே?. கயவர் கும்பல்..யாரை வாய் ஜாலத்தால் ஏமாற்ற பார்க்கிறார் என்று தெரியவில்லை.

இந்த ஆரிய பார்ப்பனக் கூட்டமே வந்தேறிகள். இவர்கள் அடிமை சின்னம் பற்றி பேசுகிறார்கள். வந்தேறிகளாக வந்து குடியேறியதும் இல்லாமல் வாய் ஜாலம். முதலில் இந்த பார்ப்பனர்களுக்கு  மொழி உண்டா?,நாடு உண்டா?..இப்படி ஏதும் இல்லாமல் வரும் இடத்தில் யார் மொழி இருக்கிறதோ அதனை படித்து விட்டு அவர்களையே அடிமையாக்கும் கூட்டம் இந்த பார்ப்பனக் கூட்டம். இவா அடிமை சின்னம் பற்றி பேசலாமா? இந்த பார்ப்பனர்கள் எப்படி புத்த கோவில்களை இந்து கோவில்களாக மாற்றினார்கள் என்ற யோக்கிதை  இதோ விடுதலை நாளேடு மிகவும் அருமையாக படம் பிடித்து காட்டியுள்ளதே...விடுதலையில் மயிலாடன் அவர்கள் 23-2-2010 ஆதாரங்களுடன் எழுதியதை அப்படியே தருகிறேன்.

மயிலை சீனி. வேங்கடசாமி என்னும் ஆராய்ச்சியாளர் பவுத்தமும் தமிழும் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில் வெளி மதில்சுவரில் சில புத்த விக்கரகங்கள் பலவகை சிற்பமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மதிற்சுவர் விஜய நகர அரசனான கிருஷ்ண தேவராயரால் 1509 இல் கட்டப்பட்டது. பழைய புத்தர் கோயில்களை இடித்து, அந்தக் கற்களைக் கொண்டு இந்த மதிற்சுவர் கட்டியிருக்கவேண்டும். அதனால்தான் இப்புத்த விக்கரகங்கள் இச்சுவரில் காணப்படுகின்றன. காஞ்சி ஏகாம்பர ஈசுவரர் கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் கட்டடத்தில் ஒரு புத்த விக்ரகம் இருக்கிறது. இது பூமியைத் தோண்டியபோது கிடைத்தது. புத்தர் பரி நிர்வாணம் அடையும் நிலையில் உள்ளது போன்ற கற்சிலையொன்று ஏகாம்பர ஈசுவரர் கோயில் மதிற்சுவரின் கீழே வைத்துக் கட்டப்பட்டிருக்கிறது. (பவுத்தமும், தமிழும், பக்கம் 54).

ஏகாம்பர ஈசுவரர் கோயிலில்தான் இந்தக் கதையென்றால், காமாட்சியம்மன் கோயில் மட்டும் என்ன வாழ்கிறது?).

காமாட்சியம்மன் கோயில் ஆதியில் பவுத்தரின் தாராதேவி ஆலயம் இவ்வாலயத்தில் பல புத்த விக்கரகங்கள் இருந்தன. அவைகளில் ஆறு அடி உயரம் உள்ள நின்ற வண்ணமாக அமைக்கப்பட்ட சாஸ்தா (இது புத்தர் உருவம்) என்னும் உருவம் இப்பொழுது சென்னைப் பொருட்காட்சி சாலையில் இருக்கிறது. காமாட்சியம்மன் குளக்கரையில் இருந்த புத்தச் சிலைகள் இப்போது காணப்படவில்லை. இக்கோயிலில் இருந்த வேறு புத்த விக்கரகங்கள் (கருங்கல் சிலைகள்) சில ஆண்டுகளுக்கு முன் நன்னிலையில் இருந்ததைக் கண்டேன். ஆனால், அவை பிறகு துண்டு துண்டாக உடைக்கப்பட்டுக் கிடந்ததைக் கண்டேன். காமாட்சியம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு தோட்டத்தில் புத்த விக்கரகம் ஒன்று இப்போதும் நன்னிலையில் இருக்கிறது. இத்தோட்டத்தில் உள்ள மண்டபத்தைக் கட்டியபோது, அதன் அடியில் சில புத்த விக்கரகங்களைப் புதைத்து இருக்கிறார்களாம். (பவுத்தமும், தமிழும், பக்கம் 55).

புரிகிறதா? புத்தர் கோயில்களை எல்லாம் இந்துக் கோயில்களாக மாற்றியவர்கள் இப்பொழுது தொலைக்காட்சி வாயிலாகவும் இத்தகைய மாய்மாலங்களைச் செய்கிறார்கள் என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது. இந்த யோக்கியர்கள்தான் ராமன் கோயிலை இடித்துவிட்டு மசூதியைக் கட்டினார் பாபர் என்று கயிறு திரிக்கிறார்கள்.

இப்படி ஆண்ட புளுகு ஆகச புளுகு புளுகும் ஆர்.எஸ்.எஸ் க்கு இது புதிது அல்ல. அதில் இருக்கும் இல.கணேசன்களுக்கும், தினமணிகளுக்கும் இது புதிது அல்ல. எனவே இவர்கள் நினைவில் கொள்ள வேண்டியது இது பெரியார் மண். இங்கு மதத்திற்கு இடம் கிடையாது..மனிதனுக்கு தான் இடம். இதனை மறந்து ஆர்.எஸ்.எஸ். கூட்டம் ஆட்டம் போட்டால்....நினைவு படுத்த வேண்டிவரும்.எச்சரிக்கை!

குறிப்பு: இந்த கட்டுரை பற்றி போட்ட பின்னூட்டம் அனைத்து தினமணி இணையதளத்தில் அழித்து விட்டார்கள்.அவர்கள் கொள்கை பற்றி விமர்சனம் செய்து பின்னூட்டம் இருந்தால் அழிக்கும் தினமணியே உங்கள் சுயரூபம் தோலுரிக்கப்படும்.
                                                                                                     No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]