வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, September 22, 2010

உனக்கு இந்தியா வேண்டுமா? இராமாயணம் வேண்டுமா?

 பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணியின் சார்பில் நேற்று (21.9.2010) சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் பெரியாரின் இலக்கியப் பார்வை - புதுவெள்ளம் - புதுநோக்கு என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 13.1.1936 அன்று திரு.வி.க. தலைமையில் தந்தை பெரியார் ஆற்றிய உரையை மய்யப்படுத்தி, அதன் சாராம்சத்தை எடுத்துக்காட்டிய விளக்கவுரையாக அது அமைந்திருந்தது.

பொதுவாக தந்தை பெரியார்பற்றி தமிழர்களில் புரியாதவர்களும், பார்ப்பனர்கள் திட்டமிட்டும் ஒரு பிரச்சாரத்தைச் செய்வதுண்டு. தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவர் பெரியார் என்பதுதான் அந்தப் பிரச்சாரம். வெறும் சொற்களின்மீதான பார்வையால் மட்டும் சொல்லப்படும் குற்றச்சாற்று இது. ஆனால், தமிழ் வளர்ச்சிக்காகவும், மேன்மைக்காகவும் தந்தை பெரியார் பாடுபட்டதுபோலவும், கருத்துகளைச் சொன்னதுபோலவும் - ஆக்க ரீதியாக இன்னொருவர் செய்தார்; சொன்னார் என்று கூறிட முடியாது.

தமிழ் மொழி, ஆங்கில மொழி இரண்டைப்பற்றிய என்னுடைய கருத்தைப் பலமுறை சொல்லியிருக்கின்றேன். ஆங்கிலம் வளர்ந்த மொழி என்பதும், தமிழ் வளர்ச்சி அடையாத பழங்கால மொழி என்பதும் என்னுடைய மதிப்பீடாகும். இதை நான் சொன்னதற்கான முக்கிய நோக்கம் தமிழ்மொழி - ஆங்கில மொழி அளவுக்கு விஞ்ஞான மொழியாகவும், பகுத்தறிவு மொழியாகவும் ஆகவில்லை என்பதுதானே தவிர, தமிழ்மீது எனக்குத் தனி வெறுப்பில்லை (விடுதலை, 1.12.1970) என்று தெளிவாகத் தம் கருத்தினை வெளிப்படுத்தியவர் தந்தை பெரியார்.

இதன் பொருள் ஆங்கிலத்திற்கு நிகராக தமிழும், விஞ்ஞான மொழியாக வளர்ச்சி பெறவேண்டும் என்பதுதானே தவிர, தமிழை அவமானப்படுத்தியதாகவோ, தரம் தாழ்த்தி சொன்னதாகவோ பொருளாகாது.

தமிழையும், மதத்தையும் தனியே பிரித்துவிடவேண்டும் என்று தந்தை பெரியார் கூறியதையும், மதச் சார்பற்றவர் களுக்குத் தமிழில் இருப்பது எது என்று தந்தை பெரியார் வினா எழுப்பியதையும் திராவிடர் கழகத் தலைவர் எடுத்துக்காட்டினார்.

தமிழ் மொழியிலிருந்து புராணங்களையும், இதிகாசங் களையும் கழித்துவிட்டால், எஞ்சி நிற்பது எதுவாக இருக்கும் என்பது அர்த்த வளமிக்க வினாவாகும்.

மதம் என்னும் சூளையில் தமிழ் நட்டால் முளையாது என்று புரட்சிக்கவிஞர் பாடியதும் இந்த அடிப்படையில்தான்.

நமது தமிழ்ப் புலவர்களுக்குப் புராண ஞானம் இருக்கும் அளவுக்கு பொது ஞானமோ, அறிவியல் ஞானமோ இருப்பதில்லையே என்று தந்தை பெரியார் கூறியதும், நமது புலவர்களின் அறிவு காலத்துக்கேற்ற அளவு மேம்படவேண்டும் என்ற எண்ணத்தில்தான்.

தமிழிலேயே வருணம் புகுத்தப்பட்டு இருப்பதுபற்றி தந்தை பெரியார் கேட்கிறார். மக்கள், தேவர், நாகர் உயர்திணை என்று தமிழ் இலக்கணத்திலேயே கூறப் பட்டுள்ளதே என்று தந்தை பெரியார் எழுப்பிய வினாவுக்கு அன்றைக்கு அய்யாவோடு இருந்த திரு.வி.க., நமசிவா யனார், கந்தையா போன்ற புலவர்கள்முதல் இன்றுவரை உள்ள புலவர்களும் விடையிறுத்ததில்லையே!

இந்த இடத்தில் இன்னொன்றும் முக்கியமாகச் சுட்டிக்காட்டத்தக்கது ஒன்றுண்டு. பாக்களில் சிறந்ததான வெண்பாவால் பார்ப்பனர்களை மட்டும் பாடவேண்டும்; அரசனுக்கு ஆசிரியப்பா, வைசியருக்கு கலிப்பா, சூத்தி ரருக்கு வஞ்சிப்பா என்று வருணப் பிரிவை இலக்கணத்தில் (வச்சணந்தி மாலை) திணிக்கப்பட்டுள்ளதே!

பாட்டியலில் பன்னீருயிரும், முதலாறு மெய்யும், பார்ப்பன வருணம் என்றும், அடுத்த ஆறு மெய்கள் அரச வருணம் (சத்திரியர்) என்றும், அடுத்த நான்கு மெய்கள் வைசிய வருணம் என்றும், பிற இரண்டும் சூத்திர வருணம் என்றும் இலக்கணம் கூறப்பட்டதற்கு என்ன சமாதானம்?

தந்தை பெரியார் ஒன்றைச் சுட்டிக்காட்டுகிறார்; ஒன்றின் மீது வினாவை எழுப்புகிறார் என்றால், அது நோய்நாடி, அதன் முதல் நாடுவதாகத்தான் இருக்கும்.

லென்ஸ் வைத்து தந்தை பெரியார் படித்ததுபற்றி கூறிய விடுதலை ஆசிரியர் அவர்கள், நமது இலக்கியங்களில், புராணங்களில் நெளியும் கிருமிகளைக் கண்டுபிடிக்கத் தான் என்று நயத்தோடும், அதேநேரத்தில் ஆழ்ந்த பொருளோடும் கூறினார்.

ஒரு வெள்ளைக்காரனைப் பார்த்து உனக்கு இங்கிலாந்து வேண்டுமா? ஷேக்ஸ்பியர் வேண்டுமா? என்று கேட்டால், எனக்கு இங்கிலாந்து வேண்டாம்; ஷேக்ஸ்பியர்தான் வேண்டும் என்று கூறுவான் என்று தந்தை பெரியார் பச்சையப்பன் கல்லூரியில் கூறியதை எடுத்துக்காட்டி, அடுத்து அதனைத் தொடர்ந்து தந்தை பெரியார் சொன்ன கருத்து அவையில் வெடிச்சிரிப்பையும், அத்தோடு விவேக அலையையும் எழுப்பியது.

உனக்கு இந்தியா வேண்டுமா? இராமாயணம் வேண்டுமா? என்று நம்மைப் பார்த்துக் கேட்டால், இந்த இரண்டு சனியனும் வேண்டாம் என்றுதானே சொல்ல முடியும் என்று தந்தை பெரியார் சொன்னதற்கு ஆமாம் போடுவதைத் தவிர வேறு வழி என்ன?

இலக்கியம் முதல் இனக் கோட்பாடுவரை எதைத் தொட்டாலும் தந்தை பெரியார் தன்னிகரற்ற சூரியனாகவே தகிக்கிறார் என்பதுதான் உண்மை! உண்மையிலும் பேருண்மை!!

----- விடுதலை தலையங்கம் (22.09.2010)

2 comments:

ஒசை said...

ராமாயணமும் வேண்டாம், இந்தியாவும் வேண்டாம் என்று சொன்னாலும் பரவாயில்லை. தொடர்ச்சியா, எனக்கு டாஸ்மாக் சரக்கு தான் வேணும் என்று கேட்கிற அளவுக்கு தமிழர்கள் வாழ்க்கைய சீரழிச்சு விட்டுட்ட திராவிட (முன்னேற்ற) கழகங்களை என்னன்னு சொல்றது.

நம்பி said...

ஒசை. said...

ராமாயணமும் வேண்டாம், இந்தியாவும் வேண்டாம் என்று சொன்னாலும் பரவாயில்லை. தொடர்ச்சியா, எனக்கு டாஸ்மாக் சரக்கு தான் வேணும் என்று கேட்கிற அளவுக்கு தமிழர்கள் வாழ்க்கைய சீரழிச்சு விட்டுட்ட திராவிட (முன்னேற்ற) கழகங்களை என்னன்னு சொல்றது.
10:11 PM

அதானே நீ பம்மறது இங்கேயே தெரிஞ்சு போச்சே...நல்ல திட்டங்களை விமர்சிக்கனும்னா பார்ப்பனனா இருக்கணும்னு அவசியமில்லை என்று...நீயே இப்படி வைத்திருக்கிறே...அப்புறம் இப்ப டாஸ்மார்க்கை விமர்சித்திருக்கிற அப்ப நீ பார்ப்பனன் தானே நீ எதுக்கு? இரட்டை காவடி தூக்குற...எதுக்கு தெரிஞ்சு போச்சா? அதுவா வந்து மாட்டிக்கும்.

இது தான் பார்ப்பனக் காவடி..... (எம் ஜி ஆர்.... தாய் மூகாம்பிகை பக்தர்....அதிமுக வை அப்போதே பார்ப்பன ஆதரவுக்கட்சியாக அப்போதே கருத்ப்பட்டது ...தி.க வில் இருந்த பெரும்பாலோர் திமுக வில் இருந்தனர். ஆனால் திமுகவில் இருந்தவர்கள் அனைவரும் திக வினர் அல்ல அதை முதலில் புறிந்து கொள்ளும்...அது தான் அரசியல் சமரசம்...அதற்கு உதாரணம் எம்.ஜி.ஆர்)



//ஒசை. said...

80கள்ல இந்த மதிய சத்துணவு திட்டம், புரட்சி தலைவரால் மிக சிறப்பா நடப்பதை கண்டு, பொறுக்காத கலைஞர், "அப்பனுக்கு சாராயக்கடை... பிள்ளைக்கு சத்துணவு" என்று கேலி பேசினார். அன்று அப்பனுக்கு மட்டுமான சாராயகடை இன்று மொத்த குடும்பத்துக்கானது வேற கதை.

ஒரு நல்ல திட்டத்தை விமர்சிக்கணும்னு முடிவு பண்ணிட்டா, அவன் பார்ப்பானா மட்டும் தான் இருக்கணுங்கிற அவசியம் இல்ல. பகுத்தறிவாளர்களாகவும் இருக்கலாம். அழுக்கு, பொறாமை ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நினைப்பவர்களிடமும் இருக்கும் தானே.
3:48 AM //

அது எப்படி மொத்த குடும்பத்துக்கானது என்பதை இது தெரிவிக்கிறதோ தெரியவில்லை...

என்ன? ஜெயலலிதா மிடாஸ் ஆலையை தனதாக்கி கொண்டது போல் ஏதாவது ஆலையை எடுத்துக்கொண்டாரா?

திமுக சார்பில் கூட எந்த கட்சியினரும் மதுக்கடை ஏலத்தில் பங்கேற்க கூடாது என்ற கட்டுப்பாடு கூட திமுக வில் அன்றைய காலகட்டத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது. ஒரு சிலர் மீறியிருக்கலாம்...


இதற்கு டாஸ்மார்க் வெளி நாட்டு மதுபானங்கள், கடா மார்க் சாராயம் இது பற்றிய வேறுபாடு அறியாமல் இதை அலச முடியாது....அன்று அவ்வளவு சீப்பாக அந்த சாராயம் விற்கப்பட்டன...? பர்மிட் கூட வழங்கப்பட்டது.......


அதே போன்று ஜெயலலிதாவும் மலிவு விலை மது என்று ஒன்றை அதே கடா மார்க்குடன் 100 மில்லியில் 15 ரூபாய்க்கு கொண்டு வந்தார் அதை குடித்து விட்டு பலர் கடையிலேயே ரத்த வாந்தி எடுத்தனர்...

இதை பற்றியும் இதற்கு கவலை இல்லை...இது திராவிடர்களின் வைரியாக தன்னை காட்டிக்கொண்டு அனல் கக்கிகொண்டிருக்கிறது.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]