இது தொடர்பாக கொழும்பிலிருந்து வெளிவரும் 'பிஸ்னஸ் ருடே' இதழுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் தெரிவித்த முக்கிய பகுதிகள் வருமாறு:
போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த போது நான் யாழ். மாவட்ட கட்டளைத்தளபதியாக இருந்தேன்.
போர் நிறுத்த காலகட்டத்தில் படையினருக்கான பயிற்சிகளை நான் அதிகரித்திருந்தேன். போரை நாம் எதிர்பார்த்தோம்.
இராணுவத்தளபதியாக நான் பதவி ஏற்றதும் துருப்புக்களுடன் தயாராக இருந்தேன். இராணுவத்தின் சிறப்பு அணிகள் பலவற்றை விடுதலைப் புலிகளின் பகுதிகளில் நடவடிக்கையில் ஈடுபடுத்தியிருந்தேன்.
எனது சிந்தனைகள் மரபு வழியிலானது அல்ல, அது வேறுபட்டதாகவே இருந்தது. இளநிலை அதிகாரிகளை களமுனை கட்டளை அதிகாரிகளாக நியமித்தேன்.
உதாரணமாக, ஐந்தாவது நிலையில் உள்ள மூத்த அதிகாரியையே யாழ். குடாநாட்டின் கட்டளை அதிகாரியாக நியமிப்பது வழக்கம்.
ஆனால், மூத்த அதிகாரிகளின் நிலையில் 15 ஆவது இடத்தில் இருந்தவர் யாழ். குடாநாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதனால் பல குழப்பங்கள் ஏற்பட்டன. ஆனால் அதன் பலா பலன்கள் அதிகம்.
அதனைப் போலவே 58 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் சவீந்தர் சில்வா மூப்பு அடிப்படையில் 45 ஆவது இடத்தில் இருப்பவர். அவர், தற்போது பூநகரியை கைப்பற்றியுள்ளார்.
இதற்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக்சவின் ஆதரவும் எனக்கு இருந்தது. நாம் இருவரும் இணைந்து தேவையான ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் கொள்வனவு செய்ததுடன், பயிற்சி மற்றும் உத்திகளையும் வடிவமைத்திருந்தோம்.
பதவிக்கு நாம் வந்த போது 40,000 சிப்பாய்களுக்கு தலைக்கவசம் கிடையாது, பலரிடம் ஒரு தொகுதி சீருடைகளும், ஒரு சோடி சப்பாத்துக்களுமே இருந்தன. 40,000 பேருக்கான அங்கிகளுக்கும் தட்டுப்பாடு காணப்பட்டது. எல்லாவற்றையும் நாம் சீர் செய்தோம்.
படையினரின் எண்ணிக்கையிலும் நாம் பலவீனமாக இருந்தோம், சில பற்றலியன்கள் சிதைவடைந்திருந்தன. ஐந்து டிவிசன்களை நான் உருவாக்கியுள்ளேன்.
முன்னர் ஒரு வருடத்திற்கு 3 ஆயிரம் பேரையே படையில் சேர்க்க முடிந்தது, தற்போது நாம் ஒரு மாதத்திற்கு அதனை எட்டி வருகின்றோம்.
கடந்த வருடம் 32 ஆயிரம் படையினரையும் இந்த வருடம் 34,000 ஆயிரம் படையினரையும் சேர்த்துள்ளோம்.
பதவிக்கு நான் வரும்போது இராணுவம் 1 லட்சத்து 16 ஆயிரம் பேரைக் கொண்டிருந்தது. தற்போது அது 1 லட்சத்து 70 ஆயிரம் பேரைக் கொண்டுள்ளது. நான் 50 பற்றலியன்களை உருவாக்கியுள்ளேன்.
தற்போதைய போரில் விடுதலைப் புலிகள் தம்மை தயார்படுத்தவில்லை. போர் ஆரம்பிக்கும் போது அவர்கள் 10 ஆயிரம் பேரை கொண்டிருந்தனர்.
பின்னர் மேற்கொண்ட படைச் சேர்ப்புக்களால் அவர்களின் பலம் 15 ஆயிரமாக உயர்ந்தது. ஆனால் அவர்களில் 12 ஆயிரம் பேர் தற்போது கொல்லப்பட்டு விட்டனர்.
எனவே, அவர்களில் தற்போது 2,500 பேரே எஞ்சியுள்ளனர். அவர்களுக்கு ஆட்பற்றாக்குறை உள்ளது.
எனினும், விடுதலைப் புலிகள் வசம் அனுபவமுள்ள படையணிகள் உள்ளன. எனவே தான் படைத்தரப்பு அதிகம் இழப்புக்களை சந்தித்து வருகின்றது.
மிதிவெடிகளில் சிக்கி 500 படையினர் கால்களை இழந்துள்ளனர். வன்னியில் ஒவ்வொரு அங்குல நிலமும் பொறிவெடிகளால் சூழப்பட்டுள்ளது. எனவே, அது இலகுவான நடவடிக்கை அல்ல என்றார் அவர்.
நன்றி: புதினம்
1 comment:
இப்போதுதான் இந்த வெறி நாய்க்குக்
கொஞ்சம் வலிக்க ஆரம்பித்துள்ளது.இவர் கூறும் 2500 புலிகள் இந்த நாயிடம் உள்ள சிங்கள ஏமாளிகளை என்ன பாடு படுத்தப் போகிறார்களோ,அப்போது தனது ஆத்ம இந்திய நண்பர்களிடம் வந்து கெஞ்சப் போகிறார்.
Post a Comment