வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, August 06, 2011

பெண்களை இழிவுபடுத்துவதே பஃபூனாக இருக்கும் துக்ளக் சோவுக்கு வேலையாகிவிட்டது

கேள்வி:  பெண்களுக்கு ஏழு மணி நேரத் தூக்கம் அவசியம் என்று ஒரு ஆய்வு கூறுகிறதே?

பதில்: பெண்களுக்கு வேண்டாத வர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு ஆய்வை நடத்தி, இந்த முடிவை வெளியிட்டு இருக்கிறார்கள். நியாய மாகப் பார்த்தால், மூன்று வேளை சாப்பாட்டிற்கு சுமார் ஒன்றரை மணி நேரம், மேக்கப் பெய்து கொள்வதற்கு சுமார் இரண்டு மணி நேரம், வம்பு தும்புகளை  அறிந்து கொள்வதற்கு சுமார் ஒரு மணி நேரம், ஏதாவது வீட்டு வேலை இருந்தால், அதைக் கவனிக்க  அரை மணி நேரம் போக - 19 மணி நேரம் பெண்களுக்கு தூக்கம் அவ சியம் என்று ஒரு ஆய்வு கூறினால், அது ஏற்கத்தக்கதாக இருக்கும். ஆண் களுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்.   (துக்ளக் 3-.8.-2011)

இது மாதிரி எந்த வீட்டில் நடக் கிறதோ இல்லையோ துக்ளக் சோ ராமசாமி வீட்டில் இப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்கலாம் என்று தெரிகிறது. எல்லாம் அனுபவம்தானே!

19 மணி நேரம் அவாள் வீட்டில் பெண்கள் தூங்குவதால் பாத்திரங்கள் கழுவுவது, வீடு கூட்டுவது, துணிகளைத் துவைப்பது, சமைப்பது, இத்தியாதி காரியங்களை திருவாளர் சோ ராமசாமியே அவர் வீட்டில் செய்து அதன் மூலம் பெண்களுக்கு மரியாதை செய்து கொண்டிருக்கிறார் என்று நம்புவோமாக! போதும் போதாதற்கு அவர்களின் லோகக் குரு ஜெயேந்திர சரஸ்வதியாருடன் மணிக் கணக்கில் பேசும் பெண்களும் அக்ரகாரத்தில்தானே இருக்கிறார்கள்.

அவையெல்லாம் சோவுக்குத் தெரியாதா என்ன? சும்மா சொல்லக்கூடாது.

இவற்றையெல்லாம் நேரில் அறிந்து வைத்திருப்பதால்தான் அவரால் இப்படி எல்லாம் எழுத முடிகிறது

கேள்வி: தேர்தலில் தோல்வி என்பது சகஜம்; போட்டிருக்கும் சட்டை கிழிந்து விடுவது போல என்கிறாரே,  பேராசிரியர் அன்பழகன்?

பதில்: இந்த மாதிரியெல்லாம் தி.மு.க. தலைவர்கள் பேசினால் அவர் கள் சட்டையைக் கிழித்துக் கொண்டு நிற்பது போலத்தான் இருக்கும். ஒரு தேர்தல் தோல்விக்காகச் சட்டையைக் கிழித்துக் கொள்ளும் நிலைமைக்கு பகுத்தறிவுவாதிகள் தள்ளப்பட்டிருப்பது, அவர்களை பஃபூன்களின் அந்தஸ் திற்கு உயர்த்தி இருக்கிறது.

(இதுவும் துக்ளக்கில்தான் 3.-8.-2011)

சட்டை கிழிவது போல தேர்தலில் தோல்வி என்பதும் சகஜம்தான் என்ற தி.மு.க. பொதுச் செயலாளர் பேரா சிரியர் அவர்கள் கூறியதற்கு இப்படி வியாக்கியானம் செய்கிறார் சோ.

கிழிந்ததற்கும் கிழிப்பதற்கும் உள்ள வித்தியாசம்கூடத் தெரியாத கீழ்ப் பாக்கங்கள் ஏடுகளை நடத்திக் கொண்டு இருக்கின்றன.
தேர்தலில் தோற்றதால் அரசியலை விட்டு ஒதுங்கிக் கொள்கிறேன்,- இனி பொதுவாழ்வில் ஈடுபடமாட்டேன் என்று  பேராசிரியர் சொல்லவில்லையே!

1967 தேர்தலில் தமிழ்நாட்டில் தோற்றபோது, காலம் எல்லாம் பதவியில் ஒட்டிக் கொண்டு சுகம் அனுப வித்த திருவாளர் ஆர்.வெங்கட் ராமய்யர் என்ன சொன்னார்?

கட்சியை வளர்க்கப்போகிறேன் - களப்பணி ஆற்றப் போகிறேன் என்றா சொன்னார்? சங்கீதம் கேட்கப் போகிறேன் என்றுதானே சொன்னார். அந்த மாதிரி சொல்லவில்லையே தி.மு.க. பொதுச் செயலாளர்.

வாழ்நாளில் காங்கிரஸ் கட்சியில் ஈடுபட்டுப் பணியாற்றியதும் இல்லை; சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டது மில்லை. ஆனாலும் டாக்டர் இராதா கிருஷ்ணன் துணைக் குடியரசுத் தலை வராகவும், பிரமோஷனில் குடியரசுத் தலைவராகவும் ஆகவில்லையா?

பேராசிரியர் அன்பழகன் அப்படி அல்லவே! மாணவர் பருவத்தில் இருந்தே திராவிடர் கழகத்தில் ஈடுபட்டு பிரச்சார கராக விளங்கி, தி.மு.க.விலும் தொடக்க முதல் இருந்து உழைத்து போராட்டங்களைச் சந்தித்துச் சிறைச் சாலைத் தண்டனைகளையும் அனுப வித்தவராயிற்றே! 90 அகவையில், 70 ஆண்டுகளுக்கு மேலான பொதுப் பணிக்குச் சொந்தக்காரராயிற்றே! பதவி என்பது கிழிந்துபோன சட்டை என்று அவர் சொல்லுவது அவரின் சிறப்பைக் காட்டக் கூடியது தான்.

உண்மையிலேயே பஃபூனாக இருக்கக் கூடிய ஒரு ஆள் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரைப் பார்த்து பஃபூன் என்று எழுதுவது எல்லாம் அவாளின் யோக்கியதையைத்தான் புலப்படுத்தும்.

-----------விடுதலை (06-08-2011), ஞாயிறு மலர்


2 comments:

vijayan said...

மூத்த தலைவர் எப்போதும் இரண்டாம் இடத்திலே இருப்பதும் ,இரண்டாம்தாரமாக இளம்வயது பெண்ணை மணமுடிப்பதும் பகுத்தறிவு காட்டும் பாதையோ.

நம்பி said...

//vijayan said...

மூத்த தலைவர் எப்போதும் இரண்டாம் இடத்திலே இருப்பதும் ,இரண்டாம்தாரமாக இளம்வயது பெண்ணை மணமுடிப்பதும் பகுத்தறிவு காட்டும் பாதையோ.//

இரண்டாம் தாரமோ, மூன்றாம் தாரமோ முதல் தாரமோ முடிவு பண்ணவேண்டியது சம்பந்தபட்ட இருவர்கள் தான், இதை பகுத்தறிவுடன் பார்த்தால் இந்த "உரிமை மீறல்" தெரிந்திருக்கும்.

ஒரினச்சேர்க்கை என்ற விஷயத்திற்கே நீதிமன்றம் தலையிட மறுத்துவிட்டது. இதில் எப்படி மற்றவர் தலையிடமுடியும். எவருடைய விருப்பத்திற்கும், எவரும் தடை போட முடியாது.

முதலிடம், இரண்டாமிடம் என்ற பாகுபாட்டை எல்லாம் இயக்கத்திற்காக தன்னை அர்ப்பணித்து கொண்ட தலைவர்கள் பார்ப்பதில்லை. அதுமட்டுமில்லாமல் முதலிடம் தேடி வந்தால் கூட "அது எமக்கு வேண்டாம்" என்று மறுக்கவும் செய்வார்கள். மூத்தவர் என்ற காரணத்திலாயே ஒருவர் முதலிடத்திற்கு போய்விடவும் முடியாது......போகவும் விரும்பமாட்டார்கள்.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]