வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, August 04, 2010

தினமணியின் வயிற்றெரிச்சல்........

 அண்ணன் எப்போ காலி யாவன் திண்ணை எப்ப கிடைக்கும் என்று இருந்திருக்கும்
போல தினமணி. அதான் அதன் பார்ப்பன பாணியிலேயே இன்றைக்கு(04.08.2010) ஒரு தலையங்கம் முதல் கலைஞர்...அவர்களை ஏன் கலைஞர் என்று அழைக்கவேண்டும் என்று தீட்டியுள்ளது.

அய்யா தந்தை பெரியார் சொன்னார், காமராஜரை கூப்பிடும் பொது கல்வி வள்ளல் காமராஜர் என்று கூப்பிடுங்கள், அண்ணாவை அறிஞர் அண்ணா என்றே சொல்லுங்கள். நம்மவர்களை நாம் புகழாமல் வேறு யார் புகழ்வார்கள்? என்று அய்யாவின் அடியொற்றி
பேசப்படுவதுதான். இதனை தினமணி பூணூல் பாணியிலேயே வெளி மாநில காரர்கள்
இகழ்கிறார்கள் என்று பெரிதும் கவலைகொண்டுள்ளது. ஒரு வேலை உள்நாட்டு
பார்ப்பனர்கள் வேண்டுமானால் வயிற்றெரிச்சல் படலாம். அந்த
வய்ற்றேரிச்ச்சலில் வெளிப்பாடு கூட இந்த தலையங்கமாக இருக்கலாம்.

இந்தத் தமிழனை உலகில் வசிக்கும் பெரும்பான்மையான தமிழர்கள் ஆசையுடன்
கலைஞர் என்று அழைப்பது கைபர் கணவாய் வழியாக வந்த சிலருக்கு பிடிக்காது.
திருக்குவளை கிராமத்தில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த இந்த
சாமான்யனுக்கு இவ்வளவு மரியாதையா என்று சில அறிவிலிகள் பொறுக்க முடியாமல்
புலம்புகிறார்கள். அவர்கள் யார் என்பது உனக்கு நன்றாகத் தெரியும். இந்த
நாட்டின் மிகப் பெரிய அரசியல் இயக்கத்தின் தலைவரே என்னை கடற்கரைக்
கூட்டத்தில் கலைஞர்ஜி என்று குறிப்பிட்டதை உனக்கு நான் நினைவு படுத்த
வேண்டியது இல்லை. 1969 ஆம் ஆண்டில் நமது இதயத்தில் நீங்காது இடம் பெற்ற
என் சுவாசக் காற்றாகிய பேரறிஞர் அண்ணாவே , அமெரிக்க நாட்டில் சிகிச்சை
பெற்று வந்த நிலையில், தம்பி உன்னை உலகம் என்றென்றும் கலைஞர் என்று தான்
அழைக்க வேண்டும் என்று தனது இறுதி விருப்பத்தை என்னிடம் கூறியது இப்போது
எனது நினைவிற்கு வருகிறது. அதே போன்று தந்தை பெரியார் அவர்களும் என்னிடம்
இறப்பதற்கு முன் "தம்பி உன்னை கலைஞர் என்று அழைக்காதவர்கள் அறிவிலிகள்,
தரம் கெட்டவர்கள், அவர்களைப் பற்றி கவலைப்படாதே.... (தினமணி இணையதளத்தில் ஒரு தோழரின் பின்னூட்டத்திலிருந்து..உதிர்த்தவை)

சுப்பிரமணியன் என்று கூறாமல் ஏன் சங்கரச்சாரி, ஜெயந்திரர் என்று
கூறவேண்டும். மகா பெரியவர் என்று கூறவேண்டும்? அப்புறம் லோக
குருவாம்..இந்த அடைமொழிகள் எல்லாம் எங்கே போய் சொல்லி முட்டிகொள்வது. இதனை பார்த்து தமிழ்நாட்டு தமிழர்களே காரி துப்ப வேண்டுமே. அனால் மற்ற
அடைமொழிகளை பார்த்து அண்டை நாட்டுக்காரன் கேலி செய்கிறானாம். என்ன கவலை
தினமணிக்கு. மருமகள் உடைத்தால் மண்குடம்...மாமியார் உடைத்தால் பொன்குடமா?


4 comments:

Thamizhan said...

Sir A T Panneerselvam Bar at Law said
"What is Mahatma to you is Periyar to us.Nothing more, Nothing less"உங்களுக்கு மகாத்மா என்னவோ அது தான் பெரியார் எங்களுக்கு. தந்தை பெரியார்,அறிஞர் அண்ணா,பாபா சாகேப் அம்பேத்கர்,கல்வி வள்ளல் காமராசர்,கலைஞர் என்று எழுதாத தமிழ்ப் பத்திரிக்கைகள்,பேசாத தமிழர்கள் ஜெகத்குரு, சங்கராச்சாரியார் என்று எழுதுவதும்,பேசுவதும் அவர்கள் தமிழர்கள் தானா என்ற கேள்வியை எழுப்புகின்றது.

அ.முத்து பிரகாஷ் said...

// சுப்பிரமணியன் என்று கூறாமல் ஏன் சங்கரச்சாரி, ஜெயந்திரர் என்று
கூறவேண்டும். மகா பெரியவர் என்று கூறவேண்டும்? அப்புறம் லோக
குருவாம்.. //

அவாள்களுக்கு அடைமொழிகள் கொடுக்காமல் தினமணி எழுத முன் வருமா ???

guna said...

bad article

ஒசை said...

இதற்கொரு விளக்கம் இங்கே.

http://oosssai.blogspot.com/2010/08/blog-post_06.html

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]