வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Showing posts with label பெரியார்-பகுத்தறிவு-பார்ப்பனர்கள்-பூணூல்-புராணம். Show all posts
Showing posts with label பெரியார்-பகுத்தறிவு-பார்ப்பனர்கள்-பூணூல்-புராணம். Show all posts

Wednesday, June 09, 2010

பார்ப்பனர்களுக்கும் பகுத்தறிவுக்கும் தொடர்பு உண்டா?

பார்ப்பனர்களுக்கும் பகுத்தறிவுக்கும் சம்மந்தமே கிடையாதுன்னு பூணூல் கூட்டம் அடிக்கடி நிருபிக்கும். அதுபோலவே இப்பொழுது அய்யா ராகவன் பூணூலை ஒரு முறுக்கு முறுக்கி விவாதம் செய்ய வந்துள்ளார்.தருமி பற்றிய (விடுதலை மலரில் வெளிவந்தது) என்னுடைய வலைப்பதிவில் போட்ட இடுக்கையை விமர்சிப்பதாக சும்மா ஏதோ ஏதோ சம்பந்தம் இல்லாத கதையெல்லாம் போட்டு இருக்கிறார். மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதுதானே அவாளின் வழக்கம்.

பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலே மணம் உண்டோ இல்லையோ பார்ப்பானின் மணம் எல்லா புராண இதிகாசத்திலும் வீசுதா இல்லையா? என்பது பற்றிதான் அந்த கட்டுரை. அதனை மறைப்பதற்காக தன் பூணூலை முறுக்கி கொண்டு பகுத்தறிவு மறந்து விட்டதே என்ற கவலையோடு விவாதத்துக்கு வருகிறார். பார்பானின் பகுத்தறிவு எங்கே வேலை செய்யுது பார்த்தீர்களா?  அவர்கள் என்ன செய்வார்கள் பாவம் அவர்கள் படிக்கும் கீதை,ராமாயணம்,கந்தபுராணம் இன்னும் கண்ட கண்ட கருமம்.....எல்லாம் புத்தியை கொடுத்தால் தானே முறையாக பகுத்தறிவை பயன்படுத்த. அவைகள் அனைத்தும் பக்தியை கொடுத்து புத்தியை மழுங்கடிக்க இப்படி பட்ட பதிலில் ஒன்றும் வியப்பில்லை.அதனால் தான் தேவநாதன் பகுத்தறிவை கர்ப்பகிரகத்தில் பயன்படுத்தினான். லோக குரு பகுத்தறிவை தாம்பரம் லலிதாவிடம் பயன்படுத்தினர்.

கவிஞர் வாலி எவ்வளவு பகுத்தறிவு பேசி திராவிட இயக்க தலைவர்களுடன் தொடர்பு கொண்டு இருந்தாலும் கந்தபுராணத்தை புதுக்கவிதையில் தரவில்லையா....அதான் பூணூல் பாசம்....என்ன பகுத்தறிவு பேசினாலும் அது பூணூலில் மறைந்து கிடக்கும் பார்ப்பனியத்தை உயர்த்தி பிடிக்கவே. இது அய்யா ராகவனிடம் மட்டும் மாறுமா என்ன? இவர்தான் பகுத்தறிவை பற்றி கவலை படுகிறார். ஆடு நினையுதேன்னு ஓநாய் கவலை பட்டுச்சாம்.

மேலும் அய்யா ராகவன் கீழ்க்கண்டவாறு  சொல்லுகிறார்....
"அவர்கள் எல்லோருமே எல்லா இடங்களிலிருந்தும் பெரியார் சமீபத்தில் 1927 வாக்கில் பேசியதை எல்லாம் கட் அண்ட் பேஸ்ட் செய்வதில் பிசியாகி விட்டார்களோ என்னவோ யார் அறிவார்? "

சமீபத்தில் எழுதப்பட்ட கீதை,ராமாயணம்,கந்தபுராணம்,மகாபாரதம்.....இன்னும் என்ன என்ன எலவோ அதனையெல்லாம் அவாள் புதிப்பித்து  "எங்கே பிராமணன்?"  "எங்கே பிராமணன்?" என்று தேடி வருணாசிரமத்தையும்,பார்ப்பனியத்தையும் காப்பாற்றி பூணூலை புதுபித்து கொள்ளும் போது..நாங்களும் இன்னும் எத்தனை நூற்றாண்டு ஆனாலும் பொருந்த கூடிய அறிவு ஆசானின் கருத்தை கட் அண்ட் பேஸ்ட் செய்யவேண்டியே உள்ளது. உங்களுடைய கணிப்பு சரிதான்..அதில் தான் நாங்கள் பிசி. ஒரு பார்ப்பான் பூணூல் குடிமியுடன் இந்த பூமியில் வருணாசிரமம் பேசி திரியும் வரை பெரியார் கருத்து கட், பேஸ்ட் செய்யவேண்டியே வரும்.

கேள்விகளுக்கு பதில் அளிக்க கூடியவர்கள் தான் பெரியாரின் தொண்டர்கள்...புரட்டுகளுக்கு அல்ல? மொக்கையான விவாதம் புரிபவர்களுக்கு புரட்டு ஒன்றும் புதிதல்ல....
                                                                                                                                                                    


Tamil 10 top sites [www.tamil10 .com ]