வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, January 07, 2012

மாமி மாட்டுக்கறி சாப்பிடுவது தவறா?


கலைஞர் மீதும் வீரமணி மீதும் கோபத்தை திருப்பியிருக்கிறார். “இவங்க இரண்டு பெறும், என் கூட இருக்கிறவங்களை மயிலாப்பூர் மாஃபியான்னு பிரச்சாரம் பண்ணுறாங்க. அதாவது நான் மாமியாம்...என்கூட இருக்கிறவங்க மாமிகள் அதிகம் உள்ள மயிலாப்பூர் மாஃபியாயாவும். இந்த விமர்சனம் எம்ஜியார் காலத்திலேயே கட்சிக்குள்ளே வந்தது. அப்ப அவர் என்ன சொன்னார் தெரியுமா” என்று தன் முன்னே இருந்தவர்களை கேட்டுவிட்டு, அந்த சம்பவத்தை விளக்க ஆரம்பித்திருக்கிறார் ஜெ.

“நான் அரசியலுக்குள்ளே நுழைஞ்ச நேரம் அது. எம்ஜியார் என்னைக் கூப்பிட்டு, இனி தன்னால ஊர்ஊரா சுற்ற முடியாதுன்னும், கருணாநிதிக்கு போட்டியா ஜானகியை கொண்டுவர முடியாதுன்னும் சொல்லி, அம்முதான் சரியான ஆள்னு என்னைக் காட்டி, கட்சி நிர்வாகிகள்கிட்டே சொன்னார். அத்தோடு, கொள்கை பரப்பு செயலாளர் பதவியும் கொடுத்தார். கே.ஏ.கே, எஸ்.டி.எஸ் போன்றவங்க கடுமையா எதிர்த்தாங்க. அப்ப பொன்னையன் இருந்தாரு. அவரு, நம்ம கட்சியும் திராவிட இயக்கம்கிற அடையாளத்தோடு இருக்கு. இதனோட கொள்கையை பரப்ப ஒரு பிராமினை நியமிக்கிறது சரியா இருக்காதுன்னு சொன்னார். அப்ப எம்ஜியார். ‘நீங்க அம்முவை பிராமின்னு நினைக்கிறீங்களா? பிராமின்னா குழைஞ்சு குழைஞ்சு பேசி காரியம் சாதிப்பாங்க. அம்மு எதையும் பட்டுபட்டுன்னு நேரில் பேசிடும். அப்புறம், இங்க இருக்கிற நீங்க யாரும் மாட்டுக்கறி சாப்பிடிருக்க மாட்டீங்க. ஆனா, அம்மு ஸ்பென்சரிலிருந்து ஸ்பெஷல் பீஃப் வாங்கி எனக்கு சமைச்சி கொடுத்திருக்கு. நான்தான் பழக்கமில்லாததால அதை சாப்பிடலை. மாட்டுக்கறி சாப்பிடுற அம்முவை எப்படி பிராமின்னு நினைக்கிறீங்கன்னு சொன்னார். இன்னைக்கு கருணாநிதியும் வீரமணியும் நான் பிராமின்னும் என்கூட இருக்கிறவங்களை மயிலாப்பூர் மாஃபியான்னும் சொல்லறாங்க” என்றபடி சிரித்திருகிறார்.

மேற்கண்ட செய்தி ஜன 7 – 10 , 2012 நக்கீரன் இதழில், ஆட்டையில், “மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான்” விவரிக்கும் ஜெயலலிதா என்று வந்துள்ளது.

அதன்பின் அ.தி.மு.கவை சேர்ந்தவர்கள், நக்கீரன் அலுவலகத்தை தாக்கியிருகிறார்கள். ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது பத்திரிக்கைகள் தாக்கபடுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை என்றாலும், இப்போது எதற்காக தாக்கப்படுகிறது என்பதை கவனிக்கவேண்டியுள்ளது.

அந்த செய்தி, உண்மையா? கற்பனையா? என்பதற்கான ஆதாரங்கள் நம்மிடம் இல்லை. அதை சம்பந்தப்பட்டவர்கள் பார்த்துக்கொள்வார்கள். அதை ஒரு கற்பனை என்றே ஒரு வாதத்திற்கு எடுத்துக்கொண்டு, நாம் இந்த செய்தியில் உள்ள கருத்தை பார்ப்போம்.

மாட்டுக்கறி சாப்பிடுவது தவறா?

மாமிகள் மாட்டுக்கறி சாப்பிடுவது தவறா?

மாட்டுக்கறி சாப்பிடும் மிலேச்சர்களை நாட்டை விட்டு துரத்தவேண்டும் என்று சொல்லி, ஆஷ் துறையை கொன்ற இந்து வெறியன் வாஞ்சி அய்யரின் செயலுக்கும், நக்கீரன் அலுவலகம் தாக்கப்படுவதற்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா?

ஆர்.எஸ்.எஸ் மோடியுடனும் சோவுடனும் இருக்கும் நெருக்கம், மாட்டுக்கறி தின்பதை தவறென காட்டச் சொல்லுகிறதா?

நாம் இந்தியாவில் மாட்டுக்கறி சாப்பிடும் பழக்கம் குறித்து கொஞ்சம் பார்ப்போம், அதுவும் பார்ப்பனர்கள் சாப்பிடுவது குறித்து பார்ப்போம்.  

அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் தெளிவாக சொல்லுகிறார், படியுங்கள்.
“ திருமணத்திற்கு முதல்நாள் மதுவர்க்கம் எண்ணும் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியின்போது ஒருவன் கூவி வேண்டுகிறான். அவன் இப்படி கூவுவதற்கு காரணம் என்ன? அவர்கள் எதை வெட்டுகிறார்கள். “விவாஹே கௌஹீ...க்ருஹே கௌஹீ...” திருமணம் நடக்கும் வீட்டில் மாட்டைத்தான் வெட்டுகிறார்கள்.  திருமணத்தில் மாடு வெட்டுகிறார்களா? ஆமாம்...வேதம் வகுத்துத் தந்த திருமணத்தில் முக்கியமான அம்சம் கோமாமிசம்தான். மாப்பிள்ளை அழைப்பு என்ற திருமணத்திற்கு முதல்நாள் நிகழ்சியில் மதுவர்க்கம் என்றொரு சடங்கு. இதிலும்...மறுநாள் திருமணச் சடங்கிலும் ரிஷிகளுக்கும், கோமாமிசமும் அவஸ்யம் என்கிறது வேத விதி.

அடுத்து சுவாமி விவேகானந்தர் சொல்லியிருப்பதை படியுங்கள்.

“என் ஆசான் (ஸ்ரீ ராமகிருஷ்ன பரமஹம்சர்) காய்கறிகளையே உண்பவர். ஆயினும்,  அம்பிகைக்கு நிவேதித்த மாமிசத்தையும் உண்டுவந்தார். ஒரு உயிரை கொல்லுவது பாவந்தான். ஆனால், ரசாயன முறைப்படி மனிதனுக்கு மரக்கறி உணவு மட்டும் போதாது.

புத்தருடைய கொள்கைக்கு எதிராக, மாமிச உணவை உண்ணாதவனுக்கு மனுவானவர் மறுமையில் தண்டனையும் விதித்திருக்கிறார்.

“நியுக்தஸ்து யாதான்யாயம்
யோமாம்ஸம் நாதிமானவ:
ஸப்ரேத்ய பசுதாம்யாதி ஸய்பவா:
னேக் விம்சதீம்”

இதன் பொருள்: சிராத்த காலங்களில் வரிக்கப்பட்ட மனிதன் மாமிசத்தை உன்னாவிடின், இருபத்தொரு தடவை மிருகமாக பிறப்பான்.

மேலும் தேவதைகளுக்கு கள்ளும் ஊனுமே படைக்கவேண்டும்.
“ஜாமிவா ஏதத் யஞஸ்ய க்ரியதே
யஹன்வஞ் சௌபுரோடாசௌ”

அதாவது புரோடசம் மாத்திரம் உட்கொள்வதால், யஜ்ஞ புருஷனுக்கு வயிற்றுவலி உண்டாகிறது. அதை நிவர்த்திக்கும் பொருட்டு மத்தியில் வபா (உயிரினங்களில் உள்ள கொழுப்பு) ஹோமம் செய்யவேண்டும்.

மேலும்,

“மஹோஷம் லா மகாஜம்
வாஸ்ரோத்ரியாயோப கல்பயேத்
ஸத்க்ரியா சேவனம்
ஸ்வாது போஜனம் சூன்ருதம் வச்”

பொருள்: ஒரு பெரிய எருதையேனும் அது கிடைக்காதவிடத்தில் கொழுத்த வெள்ளாட்டையேனும் கொன்றும் சுரோத்ரிய (வேதமறிந்த பார்ப்பனன்)னுக்கு விருந்து செய்யவேண்டும். இன்சொற்களால் அவனை மகிழ்விக்கவேண்டும்.

இப்படி மாட்டுக்கறி தின்னும் வேதகால வழக்கத்தை சொல்லிக்கொண்டே போகலாம்.

இப்படி இருக்க, மாமிகள் மாட்டுக்கறியை சாப்பிட்டால் என்ன? சாப்பிடாவிட்டால் என்ன? சாமிகளே சாப்பிடலாம் எனும்போது இரண்டும் தவறல்ல.

அவர் சாப்பிடுவதாக வந்த செய்தி, அவரை மனதளவில் பாதிக்கிற செய்தியோ இல்லையோ, ஆனால் அவரை ஆதரிக்கும் ஆர்.எஸ்.எஸ் வகையறாவிற்கு நெருடலான செய்திதான்.

தாக்குதல் நடத்திய அ.தி.மு.க தோழர்கள் மாட்டுக்கறி சாப்பிடாதவர்களா?

அ.தி.மு.கவில், மாட்டுக்கறியை சாப்பிடும் வழக்கம் உள்ள, தாழத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, இசுலாமிய, கிருஸ்தவ சமூகத்தை சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இல்லையா?

அவர் மாட்டுக்கறியை சாப்பிடுவதாக வந்த செய்தியை பொறுக்கமுடியாமல் நடத்தப்பட்ட தாக்குதல் என்றால், மாட்டுக்கறி சாப்பிடுவது தவறு என்று சொல்ல வருகிறார்களா?
மாட்டு கறியைத்தானே சாப்பிட்டதாக செய்தி வெளியிட்டாங்க...
மாட்டு சாணியை சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட மாதிரி கோபப்படுவது....நியாயமா?

இந்த தாக்குதல் நக்கீரன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மட்டுமல்ல, பத்திரிக்கை சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மட்டுமல்ல, மனிதஉரிமை மீது நடத்தப்பட்ட தாக்குதல் மட்டுமல்ல, மாட்டுக்கறியை சாப்பிடும் வழக்கம் உள்ள, தாழத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, இசுலாமிய, கிருஸ்தவ சமூகத்தை சேர்ந்தவர்களின் உணவு கலாச்சாரத்தின் மீது நடத்தப்பட்டுள்ள இந்துத்துவாவின் தாக்குதல்.


திராவிடர்களே! இந்துத்துவா மெல்ல திராவிட இயக்கங்களின் உள்ளே, அதன் வீரியமிக்க விஷத்தை செலுத்த ஆரம்பித்துவிட்டது. உயிர் போகும் முன்னே விஷமுறிவு மருந்தை செலுத்தவேண்டும். கவனமாக செயல்படவேண்டிய நேரமிது. எதற்காக ஆதரிக்கிறோம்? எதற்காக போராடுகிறோம்? என்பதை தெரிந்து புரிந்து செயல்படுங்கள்.


--- முகநூளில் (facebook) திராவிடப்புரட்சி அவர்கள் எழுதியது


No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]