Thursday, January 05, 2012
பார்ப்பானை (பிராமணன்) தெரியுது....அவன் உன்னை கீழ்மகனாக சித்தரிக்கும் சூத்திர பட்டம்?
ஒரு நண்பர் கிட்ட பேசிகிட்டு இருக்கும்போது, கீதை பற்றி ரஷ்யாவில் நடந்த
பிரச்சனை பற்றி சொல்லிக்கொண்டு இருந்தேன்....அப்பொழுது, நான்கு வருணம் பற்றியும்
சொன்னேன்....அதற்க்கு அவர், சூத்திரன் என்றால் என்ன?
என்றார்...சரி, உங்கள் வாழ்க்கையில் நடந்த சிலவற்றை பற்றி நான் கேள்வி கேட்கிறேன்,
பதில் சொல்லுங்கள் என்றேன்....சரி என்றார்.
நான் கீழ்க்கண்ட கேள்விகளை எழுப்பினேன்.
என் கேள்வி: கல்யாணம் எப்படி பண்ணுனிங்க?
அவர் பதில்: பார்ப்பான்(அய்யர்) வந்து பண்ணினார்
என் கேள்வி: ரெண்டு
வீடு வாங்கினீர்களே அது திறப்பு விழா என்று ஏதும் செய்தீர்களா?
அவர் பதில்: ஆமாம், கிரகபிரவேசம் அய்யர் (பார்ப்பான்) வந்து ஓம குண்டம்
வளர்த்து உள்ளே போனோம்.
என் கேள்வி: கார்,பைக் வாங்கி இருக்கிங்களே, அதற்க்கு எதாவது?
அவர்
பதில்: அதற்க்கு (அய்யரை) பார்பானை அழைக்கவில்லை...நான் கோவிலுக்கு பொய் அவரிடம் சொல்லி
பூஜை போட்டு கொண்டுதான் வீட்டிற்கு எடுத்து வந்தேன்.
இப்படி இருப்பதால் தான் சூத்திரன் என்றால் என்ன என்று உங்களுக்கு
தெரியவில்லை....பார்ப்பானை (பிராமணன்) தெரியுது......அவன் உன்னை கீழ்மகனாக
சித்தரிக்கும் சூத்திர பட்டம் உங்களுக்கே தெரியவில்லை.....
இதனால் தான் அவன் இன்னும் குதியாட்டம் போட்டுகொண்டு திரியுறான்....என்று
சொன்னேன்.....இதனை சொன்ன பிறகு ஒரு நீளமான அமைதிதான் அவரது பதிலாக இருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment