தமிழில் கலந்த அரபு உருது சமற்கிருத சொற்கள் படிப்படியே நீங்கி மறைமலையடிகளாரின் தனித் தமிழ் இயக்கத்தால் செந்தமிழ் ஆகியது. ஜாஸ்தி, கச்சேரி, வக்கீல், ஜமீன், சர்க்கார், வாயிதா முதலிய அராபிய பாரசீக உருதுச் சொற்கள் நீங்கின. ஆனால் கலெக்டர், கவர்மென்ட், ஸ்கூல், எனப் பல சொற்கள் ஆங்கி லத்தில் இருந்து தமிழுக்குள் புகுந்து இயல்பான வழக்குச் சொற்களையும் அகற்றித் தமிழைத் தமிங்கலம் ஆக்கி வருகின்றன இந்நிலையில் மேலும் கிரந்த எழுத்துகளைச் சேர்த்து தமிழில் மிக அதிகமான சமற்கிருதச் சொற்கள் புகவேண்டும் என்றும் சிலர் விரும்பு கின்றனர்.
வேதங்கள் சமற்கிருதம் ஆரியம் இவையே உயர்ந்தன, தமிழும் தமிழ் இலக்கியங்களும் ஆரியத்துக்குக் கீழானவையே என்று ஆரிய பிரா மணர்களும் ஆரியக் கருத்து உடையோ ரும் பரப்பி வருகின்றனர். தமிழ் தாழ்ந்தது அல்ல சமற்கிருதத்திற்கு நிகரானது என்று கம்பரும் பின் வந்தோரும் அடிக்கடிக் கூறித் தமிழை உயர்த்திப் பிடிக்க முயன்றனர். ஆதி சிவன் சமற்கிருதத்தையும் தமிழையும் சமமாகப் படைத்ததாகப் பாரதி பாடினார்.
சிவனின் வலக்கண்ணும் இடக்கண்ணும் இவ்விரு மொழிகளும் என்று பாடி தமிழ் தாய்க்கு வாழ்த்தும் எழுதினார் மனோன்மணியம் சுந்தர னார். ஆயினும் ஆரிய பிராமணர்களும் அவர்களுடைய கருத்து மனதில் பதிந்துவிட்ட ஈசானதேசிகர், வையா புரிப் பிள்ளை முதலியோரும் வட மொழியையே உயர்த்திப் பேசினர்.
இன்றும் சிலர் பேசி வருகின்றனர். சமற்கிருதத்தில் பற்றும் தமிழைத் தாழ்வாகக் கருதும் மனப்பான்மையும் கொண்ட குலம் என்று மு.சி.பூரண லிங்கம் பிள்ளை கூறியது உண்மைதான். வணக்கம் என்று சொன்னவர்களிடம் நமஸ்காரம் என்று சொல்லுங்கள் என்றார் உ.வே.சா. சாப்பாடு ஆயிற்றா என்று கேட்கக்கூடாது போஜனம் ஆயிற்றா? என்றுதான் கேட்க வேண் டும் என்றார் அவர்.
மேலும் தமிழில் மெய்யெழுத்து தனித்து முதலில் வரக்கூடாது என்ற விதியை மீறி கையெழுத்து இடும் போது உ.வே.ச் என்று போட்டவர் அவர். ஓலைச் சுவடிகளை ஒப்புநோக்கிப் பதிப்பிக் கும்போது தமக்கேற்றவாறு மாற்றிப் பதிப்பிக்கக் கூடாது என்ற அறத்தைமீறி, குரவர் தப்பிய என்ற வரியைப் பார்ப் பார் தப்பிய என்று மாற்றி பதிப்பித்த உ.வே.சா.-வின் செயலைப் பார்ப்பனக் குசும்பு என்று மறைமலை அடிகளார் குறித்தார். வடமொழிப் பற்றாளர்களா கிய பிராமணர்கள் வடசொற்களைக் கலந்தே தமிழைப் பேசி வருகின்றனர்.
தமிழ்ச் சொற்களையும் கிரந்த எழுத்துகளைக் கலந்து வடமொழிச் சொல்போல் பேசுவது அவர்களது வழக்கம். சுரம், வேட்டி, கோட்டி, பூசை முதலிய தமிழ்ச் சொற்களை ஜுரம், வேஷ்டி, கோஷ்டி, பூஜை என்று ஒலிப்பார்கள். சோறு, குழம்பு, வீடு, நாள், அய்யா என்றுத் தமிழ்ச் சொற்களை பேசினால் அது இழிவு என்பதாகக் கூறி சாதம், சாம்பார், கிரகம், தினம், சாமி என்று வடசொற்களையே கூறு வது அவர்களது வழக்கம்.
தேவாரம், திருவாசகம், திருவாய்மொழி முதலிய இனிய, தூய தமிழ்ப் பாடல்களை வடமொழிபோல் ஒலிப்பதும் வடசொல் கலந்து மணிப்பிரவாள நடையில் உரை செய்வதும் இவையும் கூடப் பிடிக் காதவர்கள் சமற்கிருதத்தில் மட்டுமே பூசை செய்வதும் ஆரியர்களின் குண மாகும். முன்னரே தமிழில் இருந்த பல கலை அறிவியல் நுட்ப நூல்களைப் புராணங்களோடு சேர்த்து வட மொழியில் மொழிபெயர்த்துக் கொண்டு தமிழில் வழக்கற்றுப் போகும்படியாக வும், தவறியது ஏதேனும் இருந்தால் வடமொழியில்தான் முன்னர் தோன் றியது என்று கூறியும் ஆரியச் சார்பினர் கருத்து பரப்பி வந்தனர்.
தமிழர் களுடைய கோயிற் கட்டடக் கலை யையும் நடனக் கலையையும் இசைக் கலையையும் வழிபாட்டு முறையையும் கடவுட் பெயர்களையும் ஊர்ப் பெயர்களையும் வடமொழியாக்கி விட்டனர். பழந்தமிழ் இலக்கியங்களை அழிக்க ஆடிப் பதினெட்டாம் பெருக்கில் ஆற்றில் விடவேண்டும் என்றும் பொங்கலுக்கு முதல் நாள் தீயில் இட வேண்டும் என்றும் மக்க ளிடம் பரப்பி தமிழ்க் கலை இலக்கியச் செல்வங்களை அழித்தனர். சிவகாசி கோயில் கோபுரத்தில் வைக்கப்பட்டு இருந்த தமிழ் ஓலைச் சுவடிகளை அழிப்பதற்கு இலுப்பைக் கட்டை களைக் கொண்டு கொளுத்திவிட்டனர்.
இதனால் இன்றுவரை கோபுரம்கூட பிளந்துதான் நிற்கிறது. இலங்கையில் ஈழத்தமிழர்களை அழிக்கும் முயற்சியில் முதற்கட்டமாக பழந்தமிழ் இலக் கியங்களைக் கொண்டிருந்த யாழ்ப் பாணம் நூலகத்தைதான் சிங்களர்கள் கொளுத்தி விட்டனர். ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால் அம் மொழியை அழிக்க வேண்டும் என்பதை ஆரியர்கள் பின்பற்றினர்.
இவ்வாறு ஆரியச் சூழ்ச்சிகளாலும், சமற்கிருதமொழிக் கலப்பாலும் கிரந்த வருக்க எழுத்துக் கலப்பாலும் தமிழ் பலமொழிகளாக்க் கிளைத்துப் போய் விட்டது; தமிழ் மக்கள் தொகையாலும் நாட்டின் அளவாலும் சுருங்கினர். இன்றுவரை தமிழுக்கு எதிரான கருத்துகளைப் பார்ப்பனர்கள் சிலர் தங்கள் தமிழ்ப்பணிகளின் நடுவிலேயே தேனில் ஒருதுளி நஞ்சு போல் குழைத்துப் பரப்பி வருகின்றனர்.
அவர்க்குத் துணையாகத் தமிழர் சிலரும் அந்நஞ்சு கலந்த தேனே தமிழ் வளர்க் கும் நன்மருந்து என்று கூறித் தமிழ் அறிஞர்களையும் தமிழ் ஆர்வலர்களை யும் கடுமையாகத் தாக்கிப் பேசியும் எழுதியும் வருகிறார்கள்.