இந்த வார துக்ளக் இதழிலும் (26.1.2011) வழக்கம்போல அந்த வேலையைச் செய்துள்ளார்.
இவ்வளவுக்கும் நரேந்திரமோடி ஒன்றும் பார்ப்பனர்அல்லர். நரேந்திரமோடி பார்ப்பனர் அல்லாதாராக இருப்பது அவாளுக்கு ஒரு வசதியாகப் போய்விட்டது. ஒரு பார்ப்பனராக இருந்து குஜராத்தில் மதக் கலவரத்தைத் தூண்டியிருந்தால் அது பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் என்ற கலவரமாக திசை மாறியிருக்கும். குஜராத்தில் மட்டுமல்ல - குமரிமுனையில் உள்ள பார்ப்பான்கூட உதைபட்டு இருப்பான்.
பார்ப்பனர்கள் உதை படவும் கூடாது; அதே நேரத்தில் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த மக்கள் கொலை செய்யப்பட வேண்டும்; அவர்களின் வீடுகள் தீக்கு இரையாக வேண்டும்; வணிக நிறுவனங்கள் இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட வேண்டும் என்றால் பார்ப்பனர்களுக்கு ஒரு பார்ப்பனர் அல்லாத ஆசாமி சிக்க வேண்டும்.
அப்படிச் சிக்கிக் கொண்டவர்தான், தேவைப்பட்டவர்தான் இந்த நரேந்திரபாய் தாமோதரதாஸ் மோடி. இந்த இந்து மத வெறியன்மீது படிந்துள்ள பாசிச ரத்தக்கறையைக் கழுவுவதற்குப் பார்ப்பனர்கள் கண்டுபிடித்த பொய்ப் பிரச்சாரம்தான் - இந்தியாவிலேயே நரேந்திரமோடி ஆளும் குஜராத்துதான் பொருளாதாரத் திலே சிறந்து விளங்குகிறது.
அங்கு செல்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டுகிறது. வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிக்கப்பட்டு விட்டது என்று ஒரு பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளனர்.
இதோ ஒரு கேள்வி - பதில்:
கேள்வி: குஜராத்தில் ரூபாய் 10 ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம் தரும் டாஸ்மாக் துறை இல்லை; மக்கள் பிறர் கையை எதிர்பார்க்க வைக்கும் இலவசங்கள் இல்லை. ஆனால், அய்.நா. சபையே உலகத்தின் இரண்டாவது சிறந்த மாநிலம் என்று பாராட்டும் அளவுக்கு, மாநிலத்தின் வளர்ச்சி அபாரமாக உள்ளதே?
பதில்: அது மட்டுமல்ல. வெளிப்படையான நிருவாகம்; பொறுப்பு ஏற்கிற தன்மை; பொதுச் சேவையில் மக்கள் கருத்துக்கு மதிப்பு.... போன்றவற்றில் பெரும் முன்னேற்றம் கண்டிருப்பதற்காக, குஜராத் மாநிலத்துக்கு, அய்.நா. சபையின் பொதுச் சேவை பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.
நீங்கள் சொல்கிற மாதிரி, டாஸ்மாக் இல்லாமல், இலவசங்கள் இல்லாமல், எப்படி இது சாத்தியமாயிற்று என்றால் - ஒரே ஒரு காரணம்தான்; நேர்மை, பொதுப் பணம் திருட்டுப் போகவில்லை; மக்கள் நலனுக்காகப் பயன்படுகிறது. அதனால்தான் இது சாத்தியமாகிறது என்கிறார் சோ.
டாஸ்மாக் இல்லாத குஜராத் என்று பெருமையாகக் கூறப்படுகிற பா.ஜ.க., ஆளும் மோடி முதல்வராக உள்ள அந்த மாநிலத்தில் உண்மை நிலை என்ன?
போலி மது பானங்கள் காட்டாறாக ஓடும் மாநிலம் குஜராத்துதான். போலி மது குடித்து மாண்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.
2010 மார்ச்சு 21ஆம் தேதி ஏடுகளில் ஒரு செய்தி வெளிவந்தது. ஆள் இல்லாத ஒரு கார் நின்று கொண்டி ருந்தது. சந்தேகத்தின் பேரில் அதனை காவல்துறை சோதனையிட்டபோது, 31 பெட்டிகளில் 372 மதுபாட்டில்கள் இருந்தன.
காரின் முன்புறத்தில் டீசா எம்.எல்.ஏ., என்று எழுதப்பட்டு இருந்தது. அவர் ஆளும் கட்சி எம்.எல்.ஏ., ஆவார். ஆளும் கட்சி யினர் போலி மது பான தொழிலை ஒரு சாம்ராஜ்ஜியமாக நடத்திக் கொண்டிருக்கின்றனர் என்பதற்கு இது ஒரு சிறு அத்தாட்சி அவ்வளவுதான். ஆளும் கட்சிக்காரர்களே போலி மதுபானம் தயாரித்து விற்பனையில் ஈடுபட்டு வருவதால் காவல்துறை கண்டு கொள்வதில்லை.
துக்ளக் பெருமையடித்துக் கொள்ளும் டாஸ்மாக் இல்லாத குஜராத் மாநிலத்தின் இலட்சணம் இதுதான்.
வெளிப்படையான நிருவாகம் குஜராத்தில் நடக்கிற தாம். இதனைப் படிக்கும் பொழுது வாயால் சிரிக்க முடியவில்லை.
குஜராத்தில் அரச பயங்கரவாதம் தலைதூக்கி ஆயிரக்கணக்கான முசுலிம் சிறுபான்மை மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தக் கலவரங்கள் மீதான விசாரணை ஒழுங்காக நடைபெறவில்லை. உச்சநீதி மன்றமே புலனாய்வுக் குழு ஒன்றை நியமித்து விசாரிக்க ஆணை ஒன்றினைப் பிறப்பித்தது.
புலன் விசாரணைக் குழுவின் விசாரணையில் பல மோசடிகள் அம்பலமாயின. அதன் விளைவு குஜராத் மாநில காவல்துறைத் துணைத் தலைவர் வன்ஜாரா உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறைக்குள் தள்ளப்பட்டனர்.
மோடி ஆட்சியில் நிருவாகம் மிக வெளிப்படையானது என்று திருவாளர் சோ எழுதுகிறாரே, இதற்கு என்ன பதிலாம்?
இதைவிட உலகம் இதுவரை கேள்விப்பட்டிராத ஒரு பூகம்பப் பொய் ஒன்று இருக்கிறது. அதைத் தெரிந்து கொண்டால் சோ சொல்லும் அந்த வெளிப்படையான (?) மோடியின் நிருவாகத்தின்மீது காரித்தான் உமிழ் வார்கள்.
கோத்ரா ரயில் எரிப்புத் தொடர்பான வழக்கில் குற்றஞ்சாற்றப்பட்ட சிலரிடம் ஆயுதங்கள் இருந்தன என்றும், அவை பறிமுதல் செய்யப்பட்டன என்றும், அதற்குச் சாட்சியாக கோத்ரா அருகில் உள்ள பம்ப்ரோலி கிராமத்தைச் சேர்ந்த ஸ்மஷான் சாலையில் வாழும் மாலாஜி ஓடாஜி என்ற மார்வாடி என்பவர் சேர்க்கப்பட்டு இருந்தார்.
சாட்சியை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அந்தச் சாட்சிக்கு நீதிமன்றத்தால் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
ஆனால் அவரோ சாட்சி சொல்ல வரவில்லை. அவர் எப்படி வருவார்? கோத்ரா நிகழ்வுக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பாகவே இறந்தவர் ஆயிற்றே அவர்! அவர் எப்படி சாட்சிக் கூண்டு ஏறுவார்?
ஏழாண்டுகளுக்கு முன் செத்தவரை சாட்சியாகப் பதிவு செய்த நரேந்திரமோடிஆட்சியைப் போல வெளிப்படை யான நிருவாகத்தை எங்குப் போய்த் தேட முடியும்?
முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டும் முப்புரிக் கூட்டம் எந்த அளவுக்கும் பொய்ச் சொல்லத் தயங்காதே!
------- நன்றி விடுதலை தலையங்கம்,21-01-2011
4 comments:
வெறுப்பு மட்டுமே மனதில் இருந்தால் இப்படித்தான் எழுத தோன்றுமோ? வெறும் 31 பெட்டியை வைத்து மது பான தொழிற்சாலை இருக்கிறது என்று பெரிது படுத்தி காட்டும் நீங்கள் தமிழகத்தில் உண்மையாகவே சாராயம் ஆறாக ஓடுவதை எப்படி நியாப்படுத்த முடிகிறது?
சோ மோடியைத் தூக்கிப் பிடிக்கிறார் எனில், தி.க வினர் டாஸ்மேக் & இலவசங்கள் தரும் தி.மு.க வை, உயர்த்திப் பிடிக்கின்றனர்! இதில் சோ எதில் மோசம், நீவீர் எதில் உயர்த்தி? இரண்டுமே ஜால்ரா! ஒன்று பார்ப்பனம்! ஒன்று சூத்ரம்!
அங்கே அரசியல்வாதி கள்ளச் சாராயம் விற்கிறார்! இங்கே சாராய பேக்டரியே நடத்துகிறார்! எம்.ஜி.ஆர் இலவசம் கொடுத்தால் கிண்டல்! தான் இலவசம் கொடுத்தால் அது கம்யூனிஸம்!
bandhu,
இதெல்லாம் 'இவங்க' அரசியல்ல சாதரணமப்பா...
//ரம்மி said...
சோ மோடியைத் தூக்கிப் பிடிக்கிறார் எனில், தி.க வினர் டாஸ்மேக் & இலவசங்கள் தரும் தி.மு.க வை, உயர்த்திப் பிடிக்கின்றனர்! இதில் சோ எதில் மோசம், நீவீர் எதில் உயர்த்தி? இரண்டுமே ஜால்ரா! ஒன்று பார்ப்பனம்! ஒன்று சூத்ரம்!
அங்கே அரசியல்வாதி கள்ளச் சாராயம் விற்கிறார்! இங்கே சாராய பேக்டரியே நடத்துகிறார்! எம்.ஜி.ஆர் இலவசம் கொடுத்தால் கிண்டல்! தான் இலவசம் கொடுத்தால் அது கம்யூனிஸம்!
10:06 PM //
இது ரெண்டுத்தையும் சாடறமாதிரி நைசா வூடு கொளுத்தி வேலை வேளை பன்றது...அதாவது பார்ப்பனீயத்திற்கு வேலை பண்ணுவது...இல்லையென்றால் ''சூத்ரன்'' என்ற சொல்லாடலை வெளியிட முடியுமா...? இதுதான் பார்ப்பனர்கள் கண்டுபிடித்த நடுநிலை.... பார்ப்பனன் தான் வேசிமகன் அது வேற விஷயம்...சூத்ரன் என்ற பொருள் அதானே...பெரியாரும் இதைத்தானே சொன்னார். அவன் எப்பொழுதுமே நம்மளை குறிவைச்சே பொழப்பை ஓட்டுவான்.....ஏனென்றால் அவன் ஒரு சோம்பேறி...அடுத்தவ முதுகில ஏறி சவாரி செய்யத்தான் பிடிக்கும்....அவனை நம்பாதே..நம்பாதே! என்று...அது அப்படியே சரியா நிருபணம் ஆயிட்டே வரும்.
அப்புறம்..... ஜாதியை வெளிப்படுத்தாதீங்க என்று பவ்யமா கருத்தை வெளிப்படுத்தறது. நீ ஏன் காட்டிக்கிறே...? அதுவா பட்டவர்த்தனமா வெளியே வரும்...நாம ஒன்னுமே செய்யத் தேவையில்லை...
பார்ப்பு நெஞ்சம் முழுதும் கசப்பு...
நெஞ்சம் முழுதும் வஞ்சம்.
Post a Comment