திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: தமிழகத்தில் தெருவுக்குத் தெரு, மூலைக்கு மூலை, பெரும் பாலும் வீட்டுக்கு வீடு சாமிகளும், கடவுள்களுக்கு கோவில்களும் உள்ளன. திருவிழாக்களுக்குப் பஞ்ச மில்லை. குறைந்தபட்சம் மாதம் ஒரு முறையாவது, குறிப்பிட்ட ஊர்களில் பக்தி வியாபாரம், கடவுளின் பெயரால் சுரண்டல், பிசின்ஸ் செழிப்பாக நடக்கிறது.
டவுட் தனபாலு: ஐயாவுக்கு அதுல என்ன வருத்தமோ...! திரா விடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகப் பொதுக் கூட்டங்கள்ல உண்டி யல் வசூல், துண்டு வசூல் நடத்தியும் ஒண்ணும் தேற மாட்டேங்குது.. கோவில்கள்ல மட்டும் கோடி கோடியா நிறையதேங்கிற வயித்தெரிச்சலோ..!
இதுதான் தினமலரின் டவுட் - கப்சா.
தி.க.வும், தி.மு.க.வும் உண்டி யல் வசூல் பண்ணுவது கூட்டம் நடத்துவது என்பது மக்களிடத்தில் பிரச்சாரம் செய்யத்தான். அந்தப் பிரச்சாரங்கள்தான், சிதம்பரம் கோயில் நிருவாகத்திலிருந்து ஆதிக் கத்திலிருந்து தீட்சதர்ப் பார்ப்பனர் களை வெளியேற்றியது.
பார்ப்பனச் சுரண்டல்களை சந்தி சிரிக்க வைத்துக் கொண்டும் இருக் கிறது. ஆனால் தினமலரின் டவுட் தனபால் எடுத்துக் காட்டியுள்ள - திராவிடர் கழகத் தலைவர் சுட்டிக் காட்டிய அந்தக் கோயில் சமாச் சாரங்கள் என்ன?
சிதம்பரம் கோயில் தீட்சதப் பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இருந்தபோது கோயிலின் ஆண்டு வருமானம் ரூ.37,199 என்றும், செலவு ரூ.37 ஆயிரம் மீதி ரூ.199 என்றும் நீதிமன்றத்திலேயே கூறி னார்களா - இல்லையா?
அதே சிதம்பரம் கோயில், திமுக ஆட்சியில் இந்து அறநிலையத்துறை யின் கட்டுப்பாட்டின்கீழ் வந்துள்ள நிலையில் அக்கோயிலின் உண்டி யல் வசூல் மட்டும் என்ன தெரியுமா? 15 மாதங்களுக்கான வருமானம் ரூ.25 லட்சத்து 12 ஆயிரத்து 485 ரூபாய். அப்படியென்றால் எத்தனை நூற்றாண்டு காலமாக எவ்வளவுக் கொள்ளை அடித்திருக்கும் - இந்தத் தீட்சதப் பார்ப்பனக் கூட்டம்?
அது மட்டுமல்ல; இந்து அற நிலையத் துறையின் கட்டுப்பாட்டில் சிதம்பரம் கோயில் சென்று விட்ட நிலையில் கோயிலில் உள்ள உண்டியல்களில் நெய்யை ஊற்றி ரூபாய் நோட்டுகளை நாசப்படுத்தும் கைங்கரியத்தையும் செய்தவர்கள் இதே தீட்சதர்ப் பார்ப்பனர்கள் தாம்.
தங்களுக்குப் பயன்படாதது எதுவாக இருந்தாலும் அது நாசமாகப் போக வேண்டும் என்பதுதானே பார்ப்பனர்களின் கல்யாணக் குணங்களும், பரந்த உள்ளமும்!
பக்தி வியாபாரம் கடவுளின் பெயரால் சுரண்டல் பிசினஸ் செழிப்பாக நடக்கிறது என்று திரா விடர் கழகத் தலைவர் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை காலங் கடந்தாவது இப்பொழுதாவது தினமலர் அய்யருக்கு டவுட் தனபாலுக்குப் புரிந்தால் சரி!\
1 comment:
//சிதம்பரம் கோயில் தீட்சதப் பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இருந்தபோது கோயிலின் ஆண்டு வருமானம் ரூ.37,199 என்றும், செலவு ரூ.37 ஆயிரம் மீதி ரூ.199.
அதே சிதம்பரம் கோயில், திமுக ஆட்சியில் இந்து அறநிலையத்துறை யின் கட்டுப்பாட்டின்கீழ் வந்துள்ள நிலையில் அக்கோயிலின் உண்டி யல் வசூல் மட்டும் என்ன தெரியுமா? 15 மாதங்களுக்கான வருமானம் ரூ.25 லட்சத்து 12 ஆயிரத்து 485 ரூபாய்.//
பன்னாடைகள் அத்தனையும் சரியான திருட்டு கும்பல்தான்.
Post a Comment