தினமணி ஏடு இந்தத் தலைப்பில் நேற்று
(9.11.2010) ஒரு தலையங்கத்தைத் தீட்டியிருக்கிறது. மேற்கண்ட அய்ந்து
எழுத்துக்களும் தமிழில் ஏற்கனவே புகுந்து தொலைத்து விட்டன; நடை முறையில்
புழக்கத்திலும் இருக்கின்றன.
இப்போது ஒருங்குறி (ருஉடினந) ஒன்றின் மூலம் உலகளாவிய அளவில் எல்லோரும் படிக்க, எழுத ஒரு திட்டம் வகுக்கப்படுகிறது.
இதனை வேண்டாம் என்று யாரும் சொல்ல
வில்லை. அதே நேரத்தில் இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று கருதி சமஸ்கிருதக்
கூட்டத் தார்களான பார்ப்பனர்கள் தமிழில் மேலும் 26 சமஸ்கிருத
எழுத்துக்களைத் திணிக்கும் முயற்சி யில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழில் ஏற்கனவே சமஸ்கிருத
ஊடுருவலால் தமிழே பிளவுபட்டு, தெலுங்கு, கன்னடம், மலை யாளம், துளு என்று
திரிபுக்கு ஆளாகிவிட்டன என்பது வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி
(பரிதிமாற்கலைஞர்) போன்றவர்கள் அறுதியிட்டுக் கூறியுள்ளனர். இதில் மூல
மொழியான தமிழ் மட்டும் சமஸ்கிருத சூறாவளியைப் புறங்கண்டு, தன் தனித்
தன்மையை நிறுவியுள்ளது.
மற்ற மற்ற மொழிகளில் ஊடுருவி அந்த
மொழிகளின் தனித் தன்மைகளை அழித்த சமஸ் கிருதத்தின் கதி என்ன வென்றால், அது
வழக் கொழிந்து மரணக் குழியில் விழுந்து செத்த மொழி (னுநயன டுயபேரயபந) ஆகி
விட்டது. கெடுவான் கேடு நினைப்பான் என்பது சமஸ்கிருதத்தைப் பொறுத்த வரை
நூற்றுக்கு நூறு பொருந்தி விட்டது.
தன் மூக்கு அறுந்துவிட்டது; மற்றவர்களுக்கும் அது ஏன்
என்கிற தாராள மனப்பான்மையில் பார்ப் பனர்கள் தங்களுக்கே உரித்தான கேடு
கெட்ட புத்தியோடு கச்சை கட்டிக்கொண்டு காரியத்தில் இறங்கியுள்ளனர்.
இதில் ஒரு அண்டப் புளுகு, ஆகாசப்
புளுகு என்ன வென்றால், உண்மையில்லாத ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு வெட்ட
வெளியில் சிலம்பம் ஆட முயற்சித்துள்ளது தினமணி.
தினமணி குறிப்பிட்டுள்ள அந்த அய்ந்து
எழுத்துக்களைப் பற்றி இப்பொழுது பிரச்சினையே இல்லை. அப்படியிருக்கும்போது,
தினமணி ஏன் வீண் வம்புக்கு வருகிறது? அதன் பூணூல் ஏன் துடியாய்த்
துடிக்கிறது?
தாங்கள் மேற்கொண்ட புதிய திணிப்பு
எதிர்ப் பைச் சந்திக்கிறது என்ற நிலையில், அதற்கான நியாயமான காரணங்களைச்
சொல்லி நிறுவிட இயலாமையால், இல்லாத ஒன்றை - பிரச்சினைக்கு உட்படுத்தப்படாத
ஒன்றைக் கொண்டு வந்து நிறுத்தி அனுதாபத்தைத் தேடிக் கொள்ளலாம் என்று
முயற்சிப்பது - அவாளின் வடித்தெடுத்த கோழைத்தனத்தைத்தான் - அறிவு நாணயமற்ற
தன்மையைத்தான் வெளிச்சப்படுத்துகிறது.
எடுத்துக்காட்டுக்காக தினமணி
குறிப்பிடு வதைப் படித்தால் விலா நோக சிரிக்க வேண்டி யுள்ளது. பஸ் மோதி பசு
மரணம் என்று இருப்பதை, பசு மோதி பசு மரணம் என்று எழுதலாமா என்று
கேட்கிறது. இதை எழுதிவிட்டு அடுத்து பேருந்து மோதி பசு மரணம் என்று
எழுதலாம் என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறது.
பார்ப்பனர்களின் போக்கினைப்
பார்க்கும் பொழுது ஏற்கனவே தமிழில் புகுந்துள்ள அய்ந்து எழுத்துக்களைக் கூட
வெளியேற்றினால் கூட நல்லது என்று தோன்றுகிறது.
ஒருங்குறி பிரச்சினையில் தமிழில்
பார்ப்பன சமஸ்கிருத எழுத்துக்கள் ஊடுருவும் ஆபத்தினை தமிழர் தலைவர் மானமிகு
கி.வீரமணி அவர்கள் முதன் முதலாக விடுதலை அறிக்கையின் வாயிலாக (28.10.2010)
வெளிப்படுத்தினார்.
அந்த அறிக்கை மின்னல் வேகத்தில்
உலகம் முழுவதும் பரவிவிட்டது; உலகத் தமிழர்கள் மத்தி யில் கடும் எதிர்ப்பு
அலைகளை எழுப்பி விட்டது. முதலமைச்சர் தலையிட்டு இந்தப் பிரச்சினை மேலே
வளர்ந்துவிடாமல் தடுக்கப்பட்டதானது - உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும்
ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது.
திருவரங்கத்தில் (8.11.2010) நடைபெற்ற திராவிடர் எழுச்சி மாநாட்டில் கூட இது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தினமணி தலையங்கத்தைப் பார்க்கும் பொழுது - அதற்கு எதிரான நடவடிக்கை அவசியம் என் பதை எளிதில் தமிழர்கள் உணர்ந்து கொள்வார்கள்.
அடுத்த கட்டமாக முதல் அமைச்சர்
அவர்கள் தலையிட்டு, கிரந்த எழுத்துக்களின் ஊடுருவலை அறவே தடுத்து நிறுத்த
ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
---------- நன்றி விடுதலை தலையங்கம் (10.11.2010)
2 comments:
தங்களைப் போன்ற ஜாதிவெறியர்கள் தமிழகத்தை நாசம் செய்யாமல் விடமாட்டீர்கள் போலிருக்கிறதே. எனக்கு தமிழ், മലയാളമ്, संस्कृतम्, हिन्दी, English என்று சில மொழிகளாவது தெரியும் எது ஒசத்தி என்று சொல்ல. உங்களுக்கு எத்தனை மொழி தெரியும். ஆரியருக்கு ஒரு நியாயம், ஐரோப்பியருக்கு ஒரு நியாயம். வடமொழிக்கு ஒரு நியாயம், ஆங்கிலத்திற்கு ஒரு நியாயம். இந்துக்களுக்கு ஒரு நியாயம், கிறித்தவ, இஸ்லாமியருக்கு ஒரு நியாயம். இதுதானே தமிழ்பற்று. இதுதானே இனப்பற்று. இதுதானே பகுத்தறிவு. தமிழ்பற்று கூறி இனி தமிழரை ஏமாற்ற முடியாது. உங்கள் சாயம் வெளுத்துப்போனது. தமிழகம் விழித்துக்கொண்டது. பரந்த மனப்பான்மை கொள்ளுங்கள். இந்த கணினி உலகிலும் வள்ளுவரைக் பின்பற்றாமல் வீணரைப் பின்பற்றுகின்றீர்களே
/*இதுதானே இனப்பற்று. இதுதானே பகுத்தறிவு. தமிழ்பற்று கூறி இனி தமிழரை ஏமாற்ற முடியாது. உங்கள் சாயம் வெளுத்துப்போனது. தமிழகம் விழித்துக்கொண்டது. பரந்த மனப்பான்மை கொள்ளுங்கள். இந்த கணினி உலகிலும் வள்ளுவரைக் பின்பற்றாமல் வீணரைப் பின்பற்றுகின்றீர்களே */
உங்களின் பகுத்தறிவையும், இனபற்றையும் கண்டால் எங்களுக்கு புல்லரிகிறது.....இந்த கணினி யுகத்திலும் நீங்கள் இப்படி கண் மூடித்தனமாக இருந்து கொண்டு எது பற்று...எது வெறி என்று பிரித்தால தெரியல தெரியாமல்..பார்ப்பன அடிவருடியாக உள்ளீரே...என்ன சொல்ல?
Post a Comment