வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, July 30, 2011

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! (4)



எல்லாவற்றிலும் பார்ப்பனமயம் என்ற கொடி ஆணவத்தோடு பறந்து கொண்டிருந்தது. நூற்றுக்குத் தொண்ணூற்றேழு சதவிகிதமான பார்ப்பனர் அல்லாத மக்கள் - மண்ணுக்குரிய மக்கள் கை பிசைந்து நின்றனர்.  எடுத்துக்காட்டாக ஒரு புள்ளி விவரம் (1912) நூற்றுக்கு மூன்று பேர்களாக இருந்த பார்ப் பனர்கள் டிப்டி கலெக்டர்களில் 55% சப் ஜட்ஜ்களில் 83%

மாவட்ட முன்சீப்புகளில் 72% என்ற நிலை.

அதே ஆண்டில் சென்னை மாநில சட்ட மன்றத்தில் இடம் பெற்றிருந்த வர்கள் யார் யார் தெரியுமா?

உள்ளாட்சித் துறைகளிலிருந்து வந்தவர்கள்

(1) தென் ஆர்க்காடு - செங்கற் பட்டுத் தொகுதி - வழக்கறிஞர் ஆர். சீனிவாச அய்யங்கார்.

(2) தஞ்சாவூர் _ திருச்சிராப்பள்ளி தொகுதி _ வி.கே. இராமானுஜ ஆச்சாரியார்

(3) மதுரை இராமநாதபுரம் தொகுதி _ கே. இராமையங்கார்.

(4) கோவை _ நீலகிரி தொகுதி _ சி. வெங்கட்ரமண அய்யங்கார்.

(5) சேலம் _ வடாற்காடு தொகுதி _ பி.வி. நரசிம்மய்யர்

(6) சென்னை நகரம் _ சி.பி. இராமசாமி அய்யர்

டில்லி மத்திய சட்டசபையில் இடம் பெற்றவர்கள் செங்கற்பட்டு மாவட்டம் எம்.கே.ஆச்சாரியார்! சென்னை: திவான் பகதூர் டி. ரங்காச்சாரி.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ். சுப்பிரமணிய அய்யர்! வி. கிருஷ்ண சாமி அய்யர், டி.வி. சேஷகிரி அய்யர், பி.ஆர். சுந்தரம் அய்யர்.

இத்தகு இறுக்கமான பார்ப்பன ஆதிபத்திய சூழலில்தான் நீதிக்கட்சி உதயமாயிற்று என்பதை மறக்கக் கூடாது.

துக்ளக் பார்ப்பன வகையறாக் களுக்கு மூக்கின்மேல் புடைத்துக் கொண்டு வருகிற ஆத்திரம் - இவ்வளவுப் பெரிய அக்கிரகார ஆதிக்கக் கோட்டையை உடைத்து விட்டார்களே இந்தப் ஜஸ்டீஸ் கட்சிப் பாவிகள் என்பதுதான்!

அந்தக் காலத்தில் கல்லூரிகள் சென்னை போன்ற இடங்களில்தான். வெளியூர்களிலிருந்து சென்னைக்குப் படிக்கவரும் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் தங்கிப் படிக்க விடுதி கள் கிடையாது. இருந்த விடுதிகள் எல்லாம் பார்ப்பனர்களுடையது. பார்ப்பனர் அல்லாதாருக்கு அங்கு இடம் கிடையாது. வேண்டுமானால் எடுப்புச் சாப்பாடு எடுத்துக் கொண்டு வரலாம். அங்கு தங்கி உணவருந்த முடியாது என்ற கொடுமை.

அந்தக் கால கட்டத்தில் பார்ப் பனர் அல்லாதார் தங்கிப் படிக்க சென்னையில் விடுதி ஒன்றை ஒருவர்  (டாக்டர் சி. நடேசனார்) ஏற்படுத் தினார் என்றால் அது என்ன சாதார ணமானதுதானா? பாலைவனத்தில் கிடைக்கப் பெற்ற சோலையல்லவா!

பார்ப்பனர் அல்லாதார் அரசியல் உள்பட எல்லா நிலைகளிலும் உரிய இடம் பெற்றாக வேண்டும் என்று கருதியது காலத்தின் கட்டாயம் தானே!

நீதிக்கட்சி தோன்றியதும், செயல் பட்டதும் இந்த அடிப்படையில்தான்!

நீதிக்கட்சி தோன்றி 95 ஆண்டு களுக்குப் பிறகும்கூட வரலாற்றின் நேர்மையான மய்ய ஓட்டத்தைப் புறந்தள்ள, கொச்சைப்படுத்த ஒரு கூட்டம் புறப்பட்டுள்ளது என்றால் அதனைப் புறமுதுகு காட்டி ஓடச் செய்யும்வரை நாம் ஓய்ந்து விட முடியுமா?

வெள்ளுடைவேந்தர் பிட்டி தியாகராயர் அவர்களால் 1916 டிசம்பர் 16ஆம் நாள் வெளியிடப் பட்ட பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கையில் அங்கொன் றும் இங்கொன்றுமாக வார்த்தை களைப் பிடுங்கி தம் வசதிக்கு ஏற்ப சேற்றைவாரி இறைக்கிறார் திருவா ளர் லட்சுமி நாராயண அய்யர்.

பார்ப்பனர்களின் உத்தியோக ஆதிக்க நிலை, கல்விநிலை, சமுதாய நிலை, பார்ப்பனர் அல்லாதார் பெற வேண்டிய சுயமரியாதை உணர்வை எல்லாம் விவரித்துள்ளார் அவ்வறிக் கையில். பார்ப்பனர் அல்லாதாருக்கு  ஓரியக்கம் தேவைப்படுவதன் அவசி யத்தையும் தெரிவித்துள்ளார்.

சமுதாயத்தில் உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்ற வேற்றுமைகள் மறையத் தொடங்கினால் மட்டுமே சுயாட்சி பெறுவதற்கான தகுதியை நாம் பெற்றவர் ஆவோம் என்ப தையும் பதிவு செய்துள்ளார்.

இறுதியாக அந்த அறிக்கையில் பின்வருமாறு முடித்துள்ளார்.

எங்களுடைய உறுதியான நம்பிக்கை என்னவென்றால், இன்னும் சிறிது காலத்திற்காவது ஒவ்வொரு வகுப்பாரும் தங்களுடைய வளர்ச் சியை முதன்மையாகக் கருத வேண் டும். பிற வகுப்பினர்களுடன் சேர்ந்து பணியாற்றும் பொழுது தான் தாழ்ந் தவன் என்று கருதாது சுயமரியாதை யுடன் சம உரிமை பெற்றவன் என்று எண்ண வேண்டும். சுயமரியாதை யுடன் சம நிலையிலிருந்து மற்றவர் களுடன் பணியாற்றுவதையே ஒவ் வொருவரும் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும்?  என்று கூறி அறிக்கையினை நிறைவு செய் துள்ளார்.
இத்தகைய சமத்துவமும், சகோ தரத்துவமும், சமூகநீதியும் பொங்கி மணம் வீசும் ஓர் அறிக்கையைப் பார்ப்பனீயத்துக்கே உரித்தான குறுக்குப் புத்தியுடன் - குதறுவது - அவர்களுக்கே உரித்தான கோணல் புத்தியைத்தான். நிர்வாணமாக வெளிப்படுத்தும் பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக் கையைப் படித்து அந்தக் கால கட்டத்திலேயே இந்து ஏட்டுக்கு உதறல் எடுத்ததுண்டு. It is With Much Pain and Surprise that we persued the document என்று எழுதியதே! மிகுந்த வலியுடனும், திகைப்புடனும் அந்த அறிக்கையைக் கவனித்ததாம்! இருக் காதா? அதுதானே அவாள் ஆதிக்கத் துக்கான ஆரம்ப அணுகுண்டு. இன்றுவரை அந்த உதறலைக் காண முடிகிறதே!

முதல் உலகப் போருக்குப் பிறகு இந்தியர்களுக்கும் ஆட்சி அமைப்பு முறையில் போதிய இடம் அளிப்பது என்ற முடிவினை பிரிட்டிஷ் அரசு சிறப்புக் கெசட்டில் வெளியிட்டது.

இதன்மீது மக்கள் கருத்து அறிய மாண்டேகு - செம்ஸ்போர்டு ஆகிய இருவர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழுவிடம் நீதிக்கட்சித் தலைவர் பிட்டி தியாகராயர், டாக்டர் நாயர் உள்ளிட்டோர் அறிக்கை ஒன்றினை அளித்தனர். வகுப்புவாரிப் பிரதிநிதித் துவம் அளிக்கப்பட்டாலொழிய பார்ப்பனர் அல்லாதார் கடைத்தேறு வது கடினம் என்பதை உறுதியாகத் தெரிவித்திருந்தனர்.

இந்திய மக்களின் கருத்துகளைத் தொகுத்துக் கொண்டு குழுவினர் லண்டன் சென்றனர்.

இதுகுறித்து நேரில் சாட்சியம் அளிக்க இந்தியத் தலைவர்கள் அழைக்கப்பட்டனர். பார்ப்பனர் அல்லாதார் அமைப்பின் சார்பில் டாக்டர் டி.எம். நாயர் லண்டன் சென்றார்.

மாண்டேகு - செம்ஸ்போர்டு அறிக்கை 1918 ஜூலை 2இல் லண்டனில் வெளியிடப்பட்டது. அதில் முசுலிம்களுக்கும், சீக்கியருக் கும் மட்டுமே பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் அமைந்திருந்தது. பார்ப்பனர்  அல்லாதாருக்கும் தாழ்த் தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக் கும் பிரதிநிதித்துவம் அளிக்கப் படவில்லை.

டாக்டர் நாயர் அப்பொழுது லண்டனில்தான் இருந்தார். இதுகுறித்து கருத்துத் தெரிவிக்க அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் அவர் முயற்சியைக் கைவிடவில்லை. நண்பர்கள் மூல மாகவும், ஏற்கெனவே இந்தியாவில் பணியாற்றியிருந்த ஆங்கிலேய அதிகாரிகள் மூலமும் கடுமையாக முயற்சித்தார். அதன் விளைவு - பிரபுக்கள் சபையில் நாயருக்கு ஆதரவாக வாதிட்டனர். முயற்சிக்கு வெற்றி கிட்டியது. பிரபுக்கள் சபை, காமன் சபை உறுப்பினர்கள்  அடங் கிய கூட்டத்தில் டாக்டர் டி.எம். நாயர் ஆங்கிலேயர்களே சொக்கக் கூடிய ஆங்கிலத்தில் புள்ளி விவரங் களை எடுத்து வைத்துப் பிளந்து தள்ளினார். பார்ப்பனர் அல்லாதா ருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் சட்டமன்றத்தில் தனித் தொகுதியின் தேவையை வெகுவாக வலியுறுத் தினார்.

இதுகுறித்துக் கருத்துகளைக் கூற இருவரைக் கொண்ட குழு ஒன்றை வெள்ளை அரசு நியமித்தது. அதற்கு சவுத்பரோ கமிட்டி (South Borough Franchise Committee  என்று பெயர்.

என்ன அநியாயம் என்றால். அந்தக் குழு உறுப்பினர்கள் இருவருமே பார்ப்பனர்கள்! வி.எஸ். சீனிவாச சாஸ்திரி, எஸ்.என். பானர்ஜி என்ற இரு நபர்கள்தான் அவர்கள். நண்டை சுட்டு நரியைக் காவல் வைத்த கதையாகி விட்டது. எதிர் பார்த்தபடியே அந்த இரு பார்ப் பனர்களும் வகுப்புரிமைக்கு எதி ராகக் கருத்துகளைத் தெரிவித்து விட்டனர்.

இந்தக் கமிட்டியை புறக்கணிக்கு மாறு மதுரையில் நடைபெற்ற பார்ப்பனர் அல்லாதார் மாநாடு (1918 அக்டோபர் 13) வேண்டுகோள் விடுத்தது.

நல்ல வாய்ப்பாக ஆங்கிலேயர் அரசு அந்த இரு நபர் குழுவின் அறிக் கையை ஏற்றுக் கொள்ளாமல் இரண் டாவது முறையாக ஒரு வாய்ப்பினை அளித்தது. அதற்கென நியமிக்கப் பட்ட நாடாளுமன்ற பொறுக்குக் குழு முன் தங்கள் வாக்கு மூலங்களை அளிக்க இங்கிலாந்துக்கு வர அழைப்புக் கொடுக்கப்பட்டது.

நீரிழிவு நோயாளியான டாக்டர் டி.எம். நாயர் லண்டன் சென்றார். அங்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத் துவமனையில் அனுமதிக்கப் பட்டார். கே.வி. ரெட்டி நாயுடு, ஆற்காடு இராமசாமி முதலியார் ஆகியோரும் லண்டன் சென்றிருந் தனர்.

மருத்துவமனையிலேயே அறிக்கை தயாரிக்கப்பட்டது. மருத்துவ மனையிலிருந்து குழுவைச் சந்திக்க நாயரால் முடியாத உடல் நிலையில், அந்தக் கமிஷன் உறுப்பினர்களே மருத்துவமனைக்குச் சென்று நாயரின் சாட்சியத்தைப் பெறுவதாக முடிவு செய்தனர். ஆனாலும் அந்தச் சாட்சி யத்தை அளிப்பதற்கு முன்பாகவே டாக்டர் நாயர் - தந்தை பெரியார் அவர்களால் தென்னாட்டு லெனின் என்று அழைக்கப்பட்ட அந்த வீரத் திருமகன் இறுதி மூச்சைத் துறந்தார். நாயர் மறைவு செய்தியைக் கேட்டு அக்ரகாரம் ஆனந்தக் கூத்தாடியது. சென்னை திருவல்லிக்கேணி பெரிய தெரு பிள்ளையார் கோயிலில் ஆயிரக் கணக்கான தேங்காய்களை உடைத் தனராம் அக்ரகாரத் திருமேனிகள்.

அதைவிட கொடுமை என்ன தெரி யுமா? பண்பாட்டுக்கே பிறந்தவர்கள் போல ஆனந்தப் பல்லவி பாடும் இந்தப் பார்ப்பனர்களின் யோக் கியதை என்ன? காங்கிரஸ் சார்பில் சாட்சியம் அளிக்க அப்பொழுது அங்குச் சென்றிருந்த சர். சி.பி. ராமசாமி அய்யர், சுரேந்திர நாத் பானர்ஜி, திலகர், கோகலே, சத்ய மூர்த்தி அய்யர், ஆகிய பார்ப்பனர்கள் ஒரு மனிதாபிமான அடிப்படை யில்கூட, பண்பாட்டின் அடிப் படையில்கூட மரண மடைந்த  நாயர் உடலுக்கு மரியாதை தெரிவிக்கச் செல்லவில்லை.

இந்த யோக்கியதையில் உள்ள பார்ப்பனர்கள்தான் மல்லுக்கட்டி பேனா பிடிக்க முன் வந்துள்ளனர். பார்ப்பனர்கள் தம் தலைவர்களின் யோக்கியதையே இந்தத் தரத்தில் இருக்கிறது என்றால் சோ போன்ற வர்களின் தரம் தகரடப்பாவாகத் தானே இருக்கும்!

வீரமகன் டாக்டர் டி.எம். நாயர் மறைந்து விட்டாலும், அங்கு சென்றி ருந்த கே.வி. ரெட்டி நாயுடு அவர்கள் டாக்டர் நாயர் நாள்குறிப்பிலிருந்து தகவல்களை தொகுத்து, பத்து நாட்கள் இரவு பகலாக உழைத்து 18 பக்கங்கள் கொண்ட அரிய அறிக் கையினைத் தயாரித்து நாடாளு மன்றக் குழுவின்முன் மெச்சத் தகுந்த முறையில் சாட்சியம் அளித்தார்.

இந்தியா என்பதை ஒரு நாடாகக் கருத இயலாது. குறிப்பாக தென்னிந்தியாவில் பார்ப்பனருக்கும், பார்ப்பனர் அல்லாதாருக்கும் அடிப்படையிலே இன வேறுபாடு உண்டு. முன்னவர் ஆரியர் இனத்தைச் சேர்ந்தவர்; பின்னவர் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்.

மதத்தின் பெயராலும், வர்ணா சிரம தர்மத்தின் பெயராலும் சிதறுண்டு திணறும் பார்ப்பனர் அல்லாத மாபெரும் சமுதாயமானது யானைப் பாகனிடம் அடங்கிப் போகப் பழக்கப்பட்ட யானைக்குச் சமமானது; சின்னஞ்சிறு குட்டிச் சமுதாயமான பார்ப்பனர் யானைப் பாகனைப் போல் பார்ப்பனர் அல்லாத பெரிய சமுதாயத்தைப் பன்னெடுங்காலமாக அடக்கி வைத்திருப்பதில் வல்லவர்கள், வஞ்சகர்கள். ஆனால், என்றெனும் ஒரு நாள் எதிர்த்து பாகனை விரட் டும் யானைபோல, பார்ப்பனர் அல் லாதார் எழுச்சிக்குப் பார்ப்பனர் கூடிப் பேசி முடிவு எடுக்க வேண்டும் என்றும், முடிவு ஏற்படா விட்டால் நடுவர் குழுவின் தீர்ப்புக்கு விட வேண்டும் என்றும் அந்த அறிக் கையிலே குறிப்பிட்டிருந்தார் கே.வி. ரெட்டி நாயுடு என்னதான் பிரிட் டீஷார் நல்லாட்சி நடத்தினாலும், அது எவ்வாறு இந்தியர்கள் தங் களைத் தாங்களே ஆண்டு கொள் ளும் சுயாட்சிக்குத் தகுந்த மாற்று ஆகாதோ, அதுபோலவே பிராம ணர்கள் என்னதான் நல்லாட்சி கொடுத்தாலும் அது பிராமண ரல்லாதாரின் சுயாட்சிக்குத் தகுந்த மாற்றாகாது என்னும் வைர வரிகளை அதில் பதித்திருந்தார்.

அதற்குப் பலனும் கிடைத்தது. சென்னை மாநில சட்டமன்றத்தில் ஒதுக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதி கள் 132; அதில் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட வேண்டிய தொகுதிகள் 98; இதில் 65 பொதுத் தொகுதிகள், 33 தொகுதிகள் சிறப்புத் தொகுதிகள்; இதில் 28 தொகுதிகள் பார்ப்பனர் அல்லாதாருக்கு என்று ஒதுக்கப் பட்டன. ஒதுக்கப்பட்ட தொகுதிகள் தவிர மீதித் தொகுதிகளிலும் பார்ப் பனர் அல்லாதார் போட்டியிடலாம் என்று நிருணயிக்கப்பட்டது.

1920 நவம்பர் 20இல் தேர்தல் நடைபெற்றது. நீதிக்கட்சிக்கும் ஹோம் ரூல் கட்சிக்கும்தான் போட்டி காங்கிரஸ் போட்டியிடவில்லையென் றாலும் காலித்தனத்தைக் கட்ட விழ்த்து விடும் பணியை மட்டும் தவறாமல் செய்தது.

கழுதைகளின் கழுத்தில் எனக்கு ஓட்டுப் போடு என்று எழுதிய அட் டைகளைக் கட்டி, அதன் வாலில் காலி டின்களைக் கட்டிக், கலாட்டா செய்வதிலும், காலித்தனத்தில் ஈடுபடுவதிலும் அலாதியான ஆனந்தம் அதற்கு.

சென்னை மாகாண சட்ட சபைக்கான 127 இடங்களில் நீதிக்கட்சி 63 இடங்களில் மகத்தான வெற்றியை ஈட்டியது. நியமன உறுப்பினர்கள் 18 பேர்களும் நீதிக்கட்சியின் ஆதரவாளர்களாகவே இருந்தனர்.

1920 முதல் கிட்டத்தட்ட 17 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த நீதிக்கட்சியின் சாதனைகள் சாதாரணமானவைகளா?

வாய்ப் புளித்ததோ மாங்காய்ப் புளித்ததோ என்று அக்கிரகார வாசிகள் பேனா பிடிக்கிறார்களே அவர்களுக்குப் பதில் சொல்லுவ தற்காக அல்ல _ பார்ப்பனர் அல்லாத மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நீதிக்கட்சி ஆட்சியின் சாதனைகள் பட்டியலைத் தெரிவிப் பது அவசியம்தானே!

பல்வேறு போதைகளில் சிக்கிச் சீரழிந்து வரும் பார்ப்பனர் அல்லாத இளைஞர் சமூகம் -_ தெரிந்து கொள்ள வேண்டியவை மிகப்பல.

பெயருக்குப் பின்னால் ஜாதிவால் ஒழிந்து, அதற்குப் பதிலாக படிப்புப் பட்டங்கள் பவனி வருகின்றனவே - இதற்கெல்லாம் அஸ்திவாரம் போட்டவர்கள் யார்? ஆணி வேராக இருந்து உழைத்தவர்கள் யார்?

எந்தச் சமூகநீதி நம்மை உயர்த்தியது? இவற்றைத் தெரிந்து கொண்டால் பல போதைகள் நம்மை விட்டு ஒழிந்துத் தொலையும், அவற்றையும் அடுத்துப் பார்ப்போம்.

--------விடுதலை,ஞாயிறு மலர் (30-07-2011)


குல்லுகப்பட்டரின் சீடர் சோ ராமசாமி இப்பொழுது அந்தர்பல்டி அடிப்பது ஏன்?


கடந்த வார துக்ளக்கில் சமச்சீர் கல்வி தொடர்பாக ஒரு வார்த்தைகூட எழுதாத திருவாளர் சோ ராமசாமி இந்த வார இதழில் (3.8.2011) தன் ஆற்றாமையை வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு புலம்பித் தீர்த்துள்ளார்.

கடைசியில் வேறு வழியில்லாமல் அ.தி.மு.க. அரசுக்கு ஊரோடு ஒத்துப் போகச் சொல்லியிருக்கிறார்.

சென்ற அரசின் சமச்சீர், சமத்தாழ்வுதான்; அதை நீதிமன்றம் ஏற்றது சரியல்ல; கொள்கை முடிவில் நீதிமன்ற குறுக்கீட்டாகத்தான் இது காட்சியளித்தது.

ஆனால் சரியோ, தவறோ, நீதிமன்றம் அதற்கு ஒப்புதல் அளித்தபோது - நிச்சயமற்ற தன்மை தொடர்வதால், மாணவர்களுக்கு ஏற்படுகிற பிரச்சினையை மனதில் கொண்ட புதிய அரசு, இந்த ஆண்டு அதையே அமல் செய்து, அடுத்த ஆண்டுக்கு மாற்றங்களுடன் கூடிய புதியமுறையை வகுத்திருக்கலாம். அப்படிச் செய்யாமல் அப்பீல்கள் செய்து, தமிழக அரசு மாணவர்களின் குழப்பத்தை நீட்டித்தது; இது தவிர்க்கப்பட்டி ருக்க வேண்டும் என்ற விமர்சனத்தில் நியாயம் இருக்கிறது என்று துக்ளக் தலையங்கம் கூறுகிறது.

தொடக்கம் முதல், கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வியைத் தாழ்கல்வி என்று தரக் குறைவாக விமர்சித்து தமிழக அரசின் செயல்பாட்டுக்கு ஜெ போட்டு வந்த திருவாளர் சோ ராமசாமி இப்பொழுது அந்தர்பல்டி அடிப்பது ஏன்?

இது போன்ற சந்தர்ப்பவாதிகளின் ஆலோசனையை நம்பினால் அது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்குச் சமம் என்பதை இது முதற் கொண்டாவது தமிழக முதல் அமைச்சர் உணர்வாராயின், அது நல்லதே!

இந்தப் பிரச்சினையில் அ.தி.மு.க. அரசு நீதிமன்றம் சென்றபோதே இந்த அறிவுரையைச் சொல்லியிருந்தால் அதில் அர்த்தம் இருந்திருக்கும். உயர்நீதிமன்றம், அதற்குப்பின் உச்சநீதிமன்றம், உச்சநீதிமன்ற ஆணையின்படி மறுபடியும் சென்னை உயர்நீதிமன்றம் - உயர்நீதிமன்றத்தின் கறாரான உத்தரவுக்குப்பின் மீண்டும் உச்சநீதிமன்றம் என்று சென்றதற்குப் பிறகு இந்த அப்பீல்களைக் குறைகூற ஒருவர் முன்வருகிறார் என்றால், அவர் எப்படிப்பட்ட அறிவாளி என்பதை எளிதில் தெரிந்து கொள்ள முடியும்.

இதில் இடுக்கோடு இடுக்காக நீதிமன்றத்தின் தீர்ப்பைக் குறை சொல்வதைக் கவனிக்க வேண்டும். அ.தி.மு.க. அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் குறுக்கிட்டுவிட்டதாம்! அப்படிப் பார்க்கப் போனால் மாநில அரசோ, மத்திய அரசோ தீர்மானிக்கும் எந்த ஒரு திட்டமும் அந்த அரசுகளின் கொள்கை முடிவுகள்தாம். அதில் எல்லாம் நீதிமன்றங்கள் குறுக்கிட்டபோது இந்தக் குல்லுகப்பட்டரின் சீடர் எழுதுகோலை எங்கே போய் ஒளித்து வைத்திருந்தார்?

இட ஒதுக்கீடு என்பதுகூட அரசுகளின் கொள்கை முடிவுதான் அதில் எல்லாம் நீதிமன்றங்கள் குறுக்கிட்டனவே - அப்பொழுது அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் குறுக்கிட்டது குற்றம் குற்றமே என்று நக்கீரன் பாணியில் எழுதியதுண்டா?

பாபர் மசூதி இடிப்புப் பிரச்சினையிலோ, குஜராத் நரேந்திரமோடி சம்பந்தப்பட்ட பிரச்சினையிலோ நீதிமன்றமோ, விசாரணை ஆணையமோ இரண்டொரு வார்த்தைகளில் சாதகமாகக் கருத்துத் தெரிவித்திருந்தால் அவற்றையே உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டு பார் பார் நீதிமன்றமே அடித்துக் கூறி விட்டது. விசாரணை ஆணையமே விண்டுரைத்துவிட்டது என்று வீராவேசத்துடன் எழுது கோல் கோலாட்டம் அடிப்பார். அதே நேரத்தில் நரேந்திர மோடியை நீரோ மன்னன் என்று உச்சநீதிமன்றம் சொன்னால் உப்புக்கண்டம் பறி கொடுத்த பழைய மொட்டைப் பார்ப்பனத்திபோல மூலையில் முடங்கிக் கொள்வார்.

பேச நா இரண்டுடையாய் போற்றி என்று - ஆபிடூபேயின் பார்ப்பனர்பற்றிய படப்படிப்பை அறிஞர் அண்ணா அவர்கள் ஆரிய மாயையில் அர்ச்சித்ததுதான் இப்பொழுது நினைவுக்கு வந்து தொலைகிறது.

விமர்சனத்தோடு விமர்சனமாக சன்னமான தனது நச்சுக் கொள்கையும் இதில் இந்த அய்யர் நீட்டியிருப்பதையும் கவனிக்கத் தவறக்கூடாது.

இந்த ஆண்டு அதையே (பழைய சமச்சீர் பாடத்தையே) அமல் செய்து, அடுத்த ஆண்டுக்கு மாற்றங்களுடன் கூடிய புதிய முறையை வகுக்கலாம் என்று விஷ(ம)யதானம் செய்துள்ளார்.

நான்கு ஆண்டுகாலம் தக்க கல்வியாளர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பாடத் திட்டத்தை ஒரே ஆண்டுக்குள் மாற்றி விட வேண்டுமாம். யார் வீட்டுப் பணம்? மக்கள் வரிப்பணம் நாசமாகப் போனால் பார்ப்பனர்களுக்கு என்ன வந்தது!

பெரியார் பற்றியும், அண்ணா பற்றியும், காமராசர் பற்றியும், வெள்ளுடை வேந்தர் பிட்டி. தியாகராயர்பற்றியும் தேவதாசி ஒழிப்பு மசோதா கொண்டு வந்து நிறைவேற்றி மனுதர்மத்தின் மண்டையில் அடித்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பற்றியும் பாடங்களில் இடம் பெற்றால், அவற்றை தொடர்ந்து படிக்க மாணவர்களை அனுமதிக்கலாமா?

திலகர் பற்றியும், குலக் கல்வித் திட்டம் கொண்டு வந்த ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வியில் கொள்ளி வைத்த ஆச்சாரியார் பற்றியும் (ராஜாஜி) சத்தியமூர்த்தி அய்யர் பற்றியும் சொல்லிக் கொடுத்தால் அதுதானே தரத்தில் உயர்ந்த கல்வி, மற்றவையெல்லாம் அவர்கள் பார்வையில் தாழ்கல்வியாயிற்றே!

2011ஆம் ஆண்டிலும் பார்ப்பனர்களைத் துல்லியமாகப் புரிந்து கொள்ள - தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வியை எதிர்ப்போர் வழி வகுத்துக் கொடுத்து விட்டனர்.

இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பார்ப்பனர்களின் மனுதர்மம், சம்பூகனைப் படுகொலை செய்த இராமன், ஏகலைவன் கட்டை விரலைக் காணிக்கையாக பெற்ற துரோணாச்சாரியார் பற்றியெல்லாம் மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்டி, பார்ப்பன எதிர்ப்புணர்வுப் பூகம்பத்தை கிளப்பினால்தான் சரி வரும். கெட்டதிலும் ஒரு நல்லது என்ற முறையில், இந்தப் பிரச்சாரத்துக்கு, இந்தச் சந்தர்ப்பம் பயன்படட்டும்! கொழுந்து விட்டு எரியட்டும் - குல்லுகப் பட்டர் கும்பலின் பாசிசத்துக்கு எதிரான பிரச்சாரம்!

-------------விடுதலை தலையங்கம் (30-07-2011)


Sunday, July 24, 2011

வரலாறு காட்டும் ஆரியர் நம்பிக்கைகள், சமயச் சடங்குகள், வழிபாட்டு முறைகள்

ஆரியர்கள்தாம் யாகங்கள், வேள்விகள் செய்தல், பலியிடுதல் முதலிய வழிபாட்டு முறைகளைத் தென்னாட்டில் சிறிது சிறிதாகப் புகுத்தியவர்கள்.

அந்தணர், முனிவர் எனப்பட்ட வர்களின் வாழ்க்கை முறை, கடமை முதலியவற்றைப் பற்றிய செய்திகள் திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, புறநானூறு முதலிய சங்க நூல்களில் உள்ளன.

அந்தணர் காலையிலே வேதம் ஓதுவர். அவர்கள் வேதம் ஓதி எழுப் புகின்ற ஓசை தாது உண் தும்பி போதைச் (மலர்) சுற்றியிருக்கும் ரீங் காரத்தை ஒத்திருக்கும் என்கிறது மதுரைக் காஞ்சி இவ்வாறு:

தாதுண்டும்பி போது முரன்றாய்
கோத அந்தணர் வேதம்பாட
(மது. 655_65)

என்கிறது மதுரைக் காஞ்சி. அவர் கள் வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளைத் தவறாது செய்து ஒழுகுவர் என்பதை மந்திர விதியின் மரபுளி வழாக்அ
வந்தணர் வேள்வி வேரார்க்கும்மே! என்கிறது திருமுருகாற்றுப்படை.

இவ்வாறு அவர்கள் தாம் வேதம் ஓதினர் என்பதையும், யாகங்கள் செய் தனர் என்பதையும் மதுரைக் காஞ்சி கூறுகிறது. அந்தணர் வேதத்தை நன்கு பயின்றவர் ஆதலால், அறம்புரி கொள்கை நான் மறை முதல்வர் (புறம் 93) அறுதொழிலந்தணர் (புறம் 397) என்று புறநானூறு கூறும். அந் தணர் அந்திக் காலத்திலே செய்தற் குரிய கடனாகிய முத்தீவளர்ப்பர் என்பதனை அந்தியந்தணரருங் கடனிறுக்கும் முத்தீ என்றும் கூறும். வேள்வி செய்ததற்கு அன்றைய நாளில் அரசர்கள் ஏமாந்திருக்கின்றனர். பார்ப்பனருக்கு அவர்களுடைய நனைந்த கை நிறையும்படியாக பொற்காசு, பொற்பூ ஆகியவற்றை நீரோடு அட்டிக் கொடுத்துள்ளனர். அதாவது தாரை வார்த்துக் கொடுத் துள்ளனர்.

இதையும் புறநானூறு ஆதாரங் காட்டுகிறது.

கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு
அருங்கல நீரோடு சிதறி (361)
ஏற்ற பார்ப்பார்க்கீர்ங்கை நிறையப்
பூவும் பொன்னும் புனல் படச் சொரிந்து
ஆரியர் யார், தமிழர் யார் என்பதனைத் திருமுருகாற்றுப்படைப் பாடல் கூறும் ஆதாரம் வழியாகவே அன்றே அறிந்து இருந்தனர்.

திருமுருகாற்றுப்படை
அந்தணர் என்றால் ஆறுதொழில் உடையவர். அந்தணர் என்றால் முப்புரி நூல் அணிபவர். அந்தணர் என்றால் முத்தீ வளர்ப்பவர். நாற்பத்து எட்டு ஆண்டுகள் நிறைந்த நல்லிளமையை விதிமுறையில் கழித்தவர், வேதங்களைத் தவறாமல் ஓதுபவர்.
நான்கிரட்டியளமை நல்லியாண்
டாறிளிர் கழிப்பில் வறளவி கொள்கை
மூன்று வகை குறித்த முத்தீச் செல்வத்
திருபிறப்பாளர்
பொழுதறிந்து நுவல ஒன்பது
கொண்ட மூன்று புரிநூண்ஞாண்
(திருமுருகாற்றுப்படை 176-187)
குறுந்தொகை,
செம்மையாகிய பூவையுடைய முருக்கின் நல்ல பட்டையை நீக்கி விட்டு அதன் தண்டோடு ஏந்திய தாழ்கின்ற கரகத்தையும், விரத உணவையுமுடைய பார்ப்பான்
எனும் பொருளில்

செம்பூமுருக்கினைன்னார் களைந்து
தண்டோடு பீடித்த தாழ் கமண்டலத்து படிவ உண்டிப் பார்ப்பன மகளே
(குறுந் 956) என்று கூறும்.

இந்தப் பார்ப்பனர்கள் இன்று அக்கிரகாரம் என்று தனித்து வாழ்கின்றார்களே அது போல் அன்றும் வாழ்ந்து இருக்கின்றனர் என்பதைக் குறுந்தொகை, பெரும் பாணாற்றுப்படை ஆகிய நூல்கள் வாயிலாக அறிகிறோம். குறுந்தொகை அந்தணர் வீடுகளில் நாய் இல்லாது அகன்ற வாயில் இருக்கும். அங்கே செந்நற்சோற்று அமலையும் மிளவெள்ளிய நெய்யும் கிடைக்கும் என்கிறது. (குறுந் 277)

பெரும்பாணாற்றுப்படை

பெரும்பாணாற்றுப் படை அந்தணர் குடியிருந்த ஊர் ஒன்றைப் பாடல் வாயிலாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. சிறிய மரத் தூண் களைக் கொண்ட குடில்களில் பசுக் கள் கட்டுப்பட்டுள்ளன. அவ்வூரி லுள்ள வீடுகள் சாணத்தினால் மெழு கப்பட்டுள்ளன. அவ்வீடுகளில் பல உருவங்கள் உண்டு. அவற்றைச் சுற்றியுள்ள இடங்களில் கோழிகளும், நாய்களும் காணப்பட்டன. வளைந்த வாய்களையுடைய கிளிகளும் மறை பயிற்றும் மரையவர் அவ்வீடுகளில் வாழ்வர் (பெரும்பாண் 297)

பார்ப்பனர்களின் ஆதிக்கம் நகரங்களில்தான் ஓங்கியிருந்துள்ளது. பட்டினப்பாலை காவிரிப் பூம்பட் டினத்து வணிகர், தெய்வங்களுக்கு அவி வழங்குவது, அமரரைப் பேணு வது, பகடு ஓம்புவது, பார்ப்பனர் பெருமை கூறுவது ஆகியன செய் தனர் என்று கூறுகிறது.
உலகத்தைக் குறித்த ஆரியத் தத்துவக் கருத்துகள் தமிழ்நாட்டில் புகுந்ததற்குப் பெரும் பாணாற்றுப் படையில் சான்று இருக்கிறது. உலகத்தைப் பெரும்பாணாற்றுப் படை நாவலந் தண்பொழில் என்று கூறுகிறது. அரசர்களில் சிலர் ஆரியர்க்கு அவர்தம் வேள்விக்கு அடிமையாகி விட்டுள்ளனர்.

எரிக்காட்டூர்த் தாயங்கண்ணனார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை,

அறுதொழில் அறம்புரிந்தெடுத்த
தீயொடு விளங்குநாடன் (புறம் 397)
அதாவது அவனுடைய நாட்டில் எங்கும் வேள்வி நிகழ்ந்தது எனக் கூறுகிறார். நெட்டிளமையார் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டியன் பல வேள்விகள் செய்தவன் எனக் கூறுகிறார். சோழன் கரிகால் பெருவளத்தான் பார்ப்பன வேள்விச் சடங்கிற்கு அடிமை யானதைக் கருங்குழலாதனார் என்ற புலவர் கூறும் புறநானூற்றுப்பாடல் வழி அறிகிறோம்.

வேள்விகள் எப்படி நடைபெற்றன?

அந்நாளில் வேள்விகள் எவ்வாறு நடைபெற்றன என்பதற்கு, அது தமிழர் சடங்கல்ல, ஆரியர் சடங்கு, ஆரியர் அதனைப் புகுத்தி முறைப்படுத்தினர் என்பதற்கும், சங்க காலப் பாடல்களில் புறநானுறு சான்றாக விளங்குகிறது. பூஞ்சாற்றுப் பார்ப்பான் கௌணியன் விண்ணத் தாயன் என்பவன் எவ்வாறு வேள்வி செய்தான் என்பதை ஆவூர் மூலங் கிழார் என்பவர் பாடிய பாடல் வழி யாக நன்கு அறிகிறோம். (புறம் 224)

விண்ணத்தாயன் தோல் உடையை அணிந்து அவன் தன் மனைவி யரோடு அவர்கள் துணை புரிய வேள்வி செய் தானாம். அவ்வேள்வி யில் நீர் நாணும்படி நெய்யை ஊற்றி னானாம். வேள்வியின் இறுதியில் பெரு விருந்து நிகழ்ந்துள்ளது. இவ் வாறு அவன் செய்த வேள்விகள் எண்ணில் அடங்காதவை.

இவ்வாறு ஆரியர் அங்கே தம் ஆதிக்கத்தைப் பரப்பிட அன்றும் அரசாள்வோர் ஆரியத்திற்கு அடிமை யாகி வேள்வி செய்தால் பெருமை என்று இறங்கியுள்ளனர்.

வேள்விக்கு அடிமையான சேரர்கள்

பாண்டியர், சோழர் போல் சேரரும் வேள்விக்கு அடிமையாயினர். பெருஞ்சேரல் இரும்பொறை யாகம் (வேள்வி) செய்வதற்குரிய விதிகளைக் கேட்டு, விரதம் மேற்கொண்டு தன் கற்புக்கரசியோடு வேள்வி செய்த தாகவும் இதன் பயனாக அவள் வயிற் றிலிருந்த குழந்தை கருவிலிருந்தே அரசுத் துறைக்கு வேண்டுவன எல்லாவற்றையும் பெற்ற நல்லறிவுடன் விளங்கியது என்றும் பதிற்றுப் பத்து கூறுகிறது.
ஆக வேள்விகள் பெருகப் பெருக அந்தணர் செல்வாக்கும் பெருகியது. அரசர்கள் அந்தணர் சொல்படி அரசாளத் தலைப்பட்டனர். ஆரிய ஆதிக்கம் பெருகியது. அந்தணருக்குப் பணிதலை அல்லாமல் பிறருக்குப் பணிதலை அறியாதவர்கள் ஆயினர் அரசர்கள் என்பதைப் பதிற்றுப் பத்து

பார்ப்பனர்க்கல்லது பணிவறியவையே என்றும் ஆறு புரிந்தொழுகும்
அறம் புரியந்தணர் வழி மொழித்
தொழுகி என்று கூறும்
நீடுழி வாழ்க எனப் பார்ப்பனர் வாழ்த்திடும் கையின் முன்னேயே அரசரின் முடி வணங்கியது என்று புறநானூறு கூறுகின்ற அளவிற்கு ஆரியச் செல்வாக்கு தலையெடுத்து விட்டது. காரி என்ற மன்னனுடைய நாடு வேள்வித் தீயைப் பாதுகாக்கும் அந்தணர்க்குரியது என்ற கொள்கை பரவியது.

இப்படி வேள்விகளின் பெருக்கம் மிகுதி மிகுதியாகப் பூணூல் அந் தணர் ஆதிக்கம் பரவியதோடு நின்று விடாமல் ஆரியக் கொள்கையான நிலையாமை என்னும் கொள்கை பரவியது.

இதனால் இயற்கை வாழ்வு வாழ்ந்த தமிழர் நிலையாமைக் கொள்கைக்கு ஆட்பட்டனர்.

இளந்திரையன் என்னும் அரசன் தன் வாழ்வு என்றும் நிலை பெற்று நில்லாது என்பதனை உட்கொண்டு தன் புகழை நிறுத்த விரும்பினான். மதுரைக் காஞ்சி என்ற புகழ் பெற்ற சங்க நூலே பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு நிலையாமையை உணர்த்த எழுந்த நூல். இந்நிலை யாமையை புலவர் நூலில் பல இடங் களில் அறிவுறுத்திச் செல்கிறார்.

மதுரைக்காஞ்சியில் ஓரிடத்தில் (205_-204) புலவர் இவ்வாறு கூறு கிறார்.

நல்வினை இயற்றுவதினால் வரும் புகழை நீ விரும்புகிறாய். புலன்களி னால் நுகரப்படும் பொருள்களிலே உனக்குப் பற்றுதல் இல்லை. போரைப் புரியச் செய்யும் உன் பொய் உணர்வு கெடுவதாக என்று அவனுடைய வீரத்தையே மழுங்கச் செய்கிறார்.

நிலவினைப் பார்க்கிறோம். நிலவின் அழகில் மயங்குகிறோம். நில வின் தன்மை நம்மைக் குளிர்விக் கிறது. இதெல்லாம் இயல்பாக எவருக்கும் ஏற்படும் உணர்வு. சோழன் நலங்கிள்ளியைப் பாடிய உரையூர் முதுக்கண்ணன் சாத்தனார் என்ற புலவருக்கு நிலவு நிலை யாமையை உணர்த்துகிறதாம்.

நிலவையும் விட்டுவைக்காத ஆரியம்
நிலவு கல்வியறிவில்லாத மட வோருக்குக் கூட நிலையாமையை அறிவுறுத்துகின்றது என்கிறார். உலகம் பொய், மனிதன் வாழ்வு பொய், எல்லாம் பொய் என்று போதிக்கும் ஆரியம் நிலவையும் விட்டு வைக்கவில்லை.
வளர்ந்த தொன்று பின் குறைதலும்
குறைந்ததொன்று பின் வளர்தலும்,
பிறந்ததொன்று பின் இறத்தலும்,
இறந்ததொன்று பின் பிறத்தலும்
உண்டு என்பதைக் கல்வி அறி வில்லாத மடையனும் அறியும்படி நிலவு காட்டுகிறது என்று கூறும் புலவர் பாடல் வரிகள் இவை:
தேய்தலுண்மையும் பெருகலுண்மையும்
மாய்தலுண்மையும் பிறத்தலுண்மையும்
அறியாதோரையு மறியக் காட்டித்
திங்கட புத்தேடிரி தருமுலகத்து (புறம் 27)
பிரமளார் என்ற புலவர் மற்றொரு புறநானூற்றுப் பாடலில் (357)

குன்றுகளோடு கூடிய மலை களைத் தன்னிடத்துப் பிணைத்துக் கட்டி நிற்கும் மண்ணுலகத்திலே, பொது வெனக் கருதப்பட்ட மூவேந் தருடைய நாடு மூன்றையும் பொது வாகக் கருதாது தமக்கே உரியன எனக் கொண்டு ஆண்ட வேந் தருக்கும் வாழ்நாட்கள் கழிந்தன. அவர் சேர்த்து வைத்த செல்வமும் அவருடைய உயிருக்குத் துணையாக விளங்கவில்லை என்று கூறுகிறார். விழாக் காலங்களில் ஆடும் கூத்தரது வேறுபட்ட கோலம் போல, முறை முறை தோன்றி இயங்கி மறை யும் தன்மையை உடையது உலகம் என்கிறது மற்றொரு புறநானூற்றுப் பாடல் (29)

இப்படி உலக வாழ்வு மாயை -_ மனை வாழ்க்கை பொய், மனைவி பொய், _ தவம்தான் சிறந்தது, வீடு பேறு அடைவதுதான் சிறந்தது என்று போதித்தனர். ஆரியர்.

தவம்தான் உயர்ந்ததாம்!

தவம்தான் உயர்ந்தது என்று கூடப் போதிக்கும் அளவிற்கு ஆரியச் செல்வாக்கு பரவிய நிலையைப் பார்க்கிறோம். துறவு, தவம்தான் நிலையானது எனும் ஆரியக் கருத்து பின்வரும் பாடலில் தலை தூக்கி நிற்கிறது.

பருதி சூழ்ந்த விதப் பயங்கெழு மாநிலம்
ஒரு பகலெழுவரெய்தியற்றே
வையமுந்தவமுந்தூக்கிற்ற வைத்துக்
கையவியனைத்துமாற்றாதாகலிந்
கைவிட்டனரே காதலரதனால்
விட்டோரை விடா அடிருவே
விடாதோரி வள்விடப்பட்டோரே (புறம்)
இப்பாடலின் பொருள் இது.

ஞாயிற்றினால் சூழப்பட்ட இப்பெரிய உலகம் ஒரு நாளில் ஏழு அரசர் தலைவராக வருவதற்குரிய அத்தகைய நிலையாமையை உடை யது. அதனால் உலகியலாகிய இல் லறத்தையும், அருட் பயிற்சியாகிய துறவறத்தையும் சீர்தூக்கிப் பார்த்தால், தவத்திற்கு உலகம் சிறு கடுகு அளவு கூட நிகர் உள்ளதாகத் தெரியவில்லை. அதனைத் தெரிந்தே வீடு பேற்றை அடைய விரும்பி யவர்கள் இல்வாழ்வில் பற்று விட் டனர். அவ்வாறு அவர்கள் கைவிட்டு நீங்கிய போதும் திரு அவர்களைக் கைவிடுவதில்லை. தன்னிடம் பற்று டையோரைத் திரு அதாவது செல்வமகள் இலட்சுமி நீங்குவார். ஆதலால் தவமே சிறந்தது, செய்யத் தக்கது எனச் சான்றோர் கண்டனர்.

தலைவிதி, ஊழ் என்னும் ஆரியக் கருத்துகள்

தலைவிதி, தலையெழுத்து, விதி, ஊழ்வினை ஆகியன எல்லாம் ஆரியக் கருத்துக்கள். கன்மம் என்பது வடசொல். சங்க நூல்கள் கன்மம் என்ற வட சொல்லை, ஊழ் என்னும் தமிழ்ச் சொல்லால் உணர்த்துகின்றன. ஊழ் போலவே மறு பிறப்பு நம்பிக்கையையும் ஆரியர் தமிழ்ச் சமுதாயத்தில் புகுத்திவிட் டனர் எனலாம்.

பொருநராற்றுப் படையில் பொருநனைப் பார்த்துப் புலவர் உன்னை நான் காணும்படி செய்தது உன்னுடைய நல்வினைப்பயனாகும் (ஆற்றெதிர்ப் படுதலு நோற்றதன் பயனே) என்று கூறுகிறார்.

குறிஞ்சிப் பாட்டில் தலைவ னுடன் ஏனையுலகத்தில் இயைவது தனக்கு உண்டெனத் தலைவி, தன்னைத் தேற்றிக் கொள்வதிலிருந்து அக்காலத்தில் மறு பிறப்பில் நம்பிக்கை இருந்ததென அறியலாம்.

இவ்வுலகில் வாழ்வதற்கென வரை யறுக்கப்பட்ட வாழ்நாள் முழுவதும் நன்றாக வாழ்தலே வேண்டப்படுவது, வாழ்வதற்கு ஏதுவாகிய நல்வினை யன்றி இறக்கும்பொழுது உயிர்க்குத் துணையாவது வேறு ஏதும் இல்லை என்ற கொள்கை பரவியது. உயிர்கள் அனைத்தும் தாம் தாம் செய்த வினைக்கேற்ப இன்பமும் துன்பமும் உயர்வும் தாழ்வும் செல்வமும் வறுமையும் எய்தும் என்ற கருத்துப் பரவியது.

உயர்ந்த விருப்பத்தை உடைய உயர்ந்தோக்குத் தாம் செய்த நல் வினையிடத்து அதனை அனுபவித் தல் உண்டாம். ஆதலால், அவர்க்கு இரு வினையும் செய்யப் படாத தேவ ருலகத்தின் கண் இன்பம் அனுபவித் தலும் கூடும். அவ்வுலகத்தின் கண் நுகர்ச்சி இல்லையாயின் மாறிப் பிறத் தலை உடைய பிறப்பின்கண் இன்மை எதுவும் கூடும் என்று புறநானூறு கூறும்.

போரைச் செய்யும் வலியினை யுடையோர் நீண்ட இலையை உடைய வேலாற் புண்ணுற்று வடுப்பட்ட உடம்போடு மேலுலகும் புகுவர் என்று பரணர் கூறுகிறார். சங்க நூல்களில் இவ்வாறு ஆரிய நம்பிக்கைகளும், சமயக் கோட்பாடு களும் கூறப்பட்டிருந்தாலும், மக்களின் அன்றாட வாழ்க்கையில் அவை இடம் பெறவில்லை. ஆனால் நகர வாழ்க்கையில் அவற்றின் செல்வாக்கு சிறிது சிறிதாகப் பெருகிக் கொண்டே வந்தது.

ஆரிய, தமிழ்ப் பண்பாடுகள்

முதலில் சங்க காலத் தமிழர் பண்பாடு குறித்துக் கண்ட நாம் இப் போது ஆரிய வழிபாட்டு முறை களைக் கண்டோம். எனவே இரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்த பின்னும் இன்றும்கூட நம்மால் ஆரியப்பண்பாடு எது என்று சுட்டிக் காட்ட முடிகிறது. ஆரியச் செல்வாக்கு உயர உயரத் தமிழ்ப் பண்பாடு பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. ஆரியம் உயர்ந்தது என்ற தவறான சிந்தனை, கருத்து ஆகியன புகுந்து விட்டன.
---------கட்டுரையாளர் ந.க.மங்களமுருகேசன், விடுதலை ஞாயிறு மலர்


துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! (3) ----வெள்ளைக்காரர்களை அண்டிப் பிழைத்த கூட்டம் எது?


இந்தியாவின் சுதந்திரத்துக்காக காங்கிரஸ் பாடு பட்டதாகவும், ஆனால் அதற்கு மாறாக ஆங்கிலேய ஆட்சியாளர்களின் கட்டளைப்படி நீதிக்கட்சி தொடங்கப் பட்டது என்றும் அவதூறு செய்கிறார் துக்ளக் கில் திரு.கே.சி. லட்சுமி நாராயணன்.

இதற்கு நாம் பதில் சொல்லத் தேவையில்லை. எதற்கெடுத்தாலும் ம.பொ.சி.யைத்தானே சாட்சிக்கு அழைக்கிறார்கள்? அவர் எழுதிய விடுதலைப் போரில் தமிழகம் என்ற நூலைத்தானே என்ற சாட்சிக்குக் கூப்பிடுகின்றனர்?

அந்த ம.பொ.சி.யே அந்த நூலிலே என்ன எழுதுகிறார்? அவர்கள் கொண்டு வந்த ஆயுதத்தைப் பறிமுதல் செய்து, அவர்களைத் தாக்குவது தானே சுவாரசியமானது.

காங்கிரசைத் தோற்றுவித்தவனே ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம் என்ற வெள்ளைக்காரன்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே.

முதல் மாநாடு 1885 டிசம்பர் 28,29, 30 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபை யின் முதல் மாநாட்டை ஹ்யூம் கூட்டினார். அதற்காக விடுத்த சுற்றறிக்கையில், வங்காளம், பம்பாய், சென்னை ஆகிய மாநிலங்களிலிருந்து ஆங்கில மொழியில் ஞானமுள்ள அரசியல் பிரமுகர்களைக் கொண்ட தாக மாநாடு இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆம், இந்திய தேசியத்தின் பெயரால் முதன் முதலாக ஒரு மாநாடு, இங்கிலீஷ்காரர் ஒருவரால், இங்கிலீஷ் படித்துப் பட்டம் பெற்ற வர்களைக் கொண்டதாகக் கூட்டப் பெற்றது. பம்பாய் கோகுல்தாஸ் தேஜ்பால் சமஸ்கிருதக் கல்லூரியில் மாநாடு நடந்தது என்று ம.பொ.சி. அதே நூலில் குறிப்பிட்டுள்ளாரே -இதற்கு என்ன பதில்?

வெள்ளைக்காரன் ஹ்யூமால் தோற்றுவிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சிக்கு ஓராண்டல்ல, ஈராண்டல்ல, 22 ஆண்டுகள் அகில இந்தியப் பொதுச் செயலாளராக இருந்திருக்கிறார் அவர். அடுத்தடுத்து வெள்ளையர்கள் தலைமை வகித்தும் மகாசபை கூடிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ராஜவாழ்த்துப் பாடப்பட்டதும், பிரிட்டீஷ் அரசுக்கு விசுவாசம் தெரிவித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் ஹ்யூம் காலத்தில்தான்.

சுருக்கமாகச் சொன்னால் எவ்வித எதிர்ப்புமின்றி படித்த இந்தியர்களுக்கு உயர் உத்தியோகங்களும் சலுகைகளும் தேடித் தரும் ஸ்தாபனமாகக் காங்கிரஸ் செயல்பட்டது ஹ்யூம் சகாப்தத்திலேயே! இது ஒன்றும் அவர்களுக்குக் குறைபாடோ, குற்றமோ அல்ல. காங்கிரசை அவர் தோற்றுவித்ததே இந்தக் காரியங்களுக்குத்தான். இவை எல்லாம் நமது சரக்கல்ல; அதே ம.பொ.சி. - அதே நூலில் காணக்கிடப்பவைதான்.

வெள்ளைக்காரனால் தொடங்கப்பட்டது
பதவிகளைப் பெறுவதற்காகத் தொடங்கப்பட்டது
அந்தப் பதவிகள் எல்லாம் பெரும்பாலும் பார்ப்பனர்களுக்கே! என் பதை இந்நூலில் ம.பொ.சி. வெளிப்படையாகவே கூறுகிறார்.

இந்த யோக்கியதையில் உள்ள பார்ப்பனர்கள் நீதிக் கட்சி வெள்ளைக்காரர்கள் கட்டளைக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தது - பதவிகளைத் தேடி அலைந்தது என்று சொல்லுகிறார்கள் என்றால் அவர்களின் யோக்கியதையை எடை போட்டுப் பார்க்க வேண்டும்.

மேலும் ம.பொ.சி. எழுதுகிறார் கேளுங்கள், கேளுங்கள்.

சென்னையில் கூடிய காங்கிரஸ் மகா சபையிலே பிரிட்டிஷ் அரசுக்கு வாழ்த்து பாடப்பட்டது. வெள்ளையரான சென்னை கவர்னர் கன்னிமரா விட மிருந்து வாழ்த்துச் செய்தியைப் பெற்று , அதை மிகுந்த பக்தி விசுவாசத்துடன் படித்த பிறகே நடவடிக்கை தொடங் கப்பட்டது. பிரிட்டிஷ் அரசியார், இந்தியாவின் சக்கரவர்த்தினியுமாகிய விக்டோரியாவுக்கு, அவர் அய்ம்பதாண்டு காலம் வெற்றிகரமாக பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை நடத்தியதற்காகப் பாராட்டு தெரிவித்து, அவரது ஆட்சி மேலும் நீடிக்க வேண்டும் எனவும் பிரார்த் தித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பெற்று, பேசியவர்கள் எல்லோரும் பிரிட்டிஷ் ஆட்சியைப் புகழ்ந்தனர்.

(ம.பொ.சி. அதே நூல் பக்கம் 133,134)

வெள்ளையர்களுக்கு சாதாரண விசு வாசத்தோடு அல்ல; பக்தி விசவாசத்தோடு பிரார்த்தித்து வாழ்த்துப் பாடியதாக ம.பொ.சி. எழுதி இருக்கிறாரே. இதற்கு என்ன பதில் லட்சுமி நாராயணரே?

திருவாளர் கே.வி. லட்சுமி நாராயணன் துணைக் கழைத்த ம.பொ.சி.தான் பிறழ் சாட்சியாகிவிட்டார். அவாளின் சுதேசமித்திரனாவது அவாளுக்குத் துணை போகிறாதா என்று பார்க்கலாம்.

காங்கிரஸ் தோற்றமே
பிரிட்டிஷாருக்கு பல்லக்கு தூக்கவே


இதோ ஆதாரம்: 1855 ம் வருடம் டிசம் பர் 28 ஆம் தேதி பகல் 12 மணிக்கு காங் கிரஸ் மாநாடு துவங்கப்பட்டது.

வங்கத்துக் கீர்த்தி மிகுந்த பாரிஸ்டர் உமேசசந்திர பானர்ஜி அந்த சபையிலே அக்கிராசனம் வகிக்க வேண்டும் என்று ஏ.ஓ. ஹியூம் பிரேரணை செய்ய, அதை காசிநாத தெலங்கரும் நீதிபதி மணி அய்யரும் ஆமோதித்தனர்.

நம்மை பிரிட்டிஷ் ராஜ்யத்துக்கு விரோ தமாகச் சூழ்ச்சிகள் செய்யும் ராஜ விரோதிகளின் கூட்டம் என்று சில கனவான்கள் ஞானக் குறைவினால் சொல்லி விட்டார்கள். பிரிட்டன் அரசு நமக்கு அனுகூலமாக எவ் வளவோ காரியங்களைச் செய்தி ருக்கிறது. அதன் பொருட்டு அதற்கு நாம் நன்றி செலுத்துவோம். அய்ரோப்பாவில் உள்ள ஜனங்கள் ஆட்சி முறையைப்பற்றி எவ்வித மான கொள்கைகள் உடையாரோ அதே விதமான கொள்கைப்படி இங்கும் ஆட்சி நடத்த விரும்பு கிறோம். இந்த விருப்பத்துக்கும் பிரிட்டிஷ் ராஜாங்கத்தினிடமுள்ள பூர்ண விசுவாசத்திற்கும் விரோதமே யில்லை.

(1835_ம் ஆண்டு டிசம்பர் 28 ம் தேதி நடைபெற்ற முதலாவது காங்கிரஸ் மாநாட்டில் உமேசசந்திர பானர்ஜி தலைமை வகித்துப் பேசியது.)

இங்கிலீஷ் ராஜ்யத்திடம் நாம் பூர்ணமான அன்பும் ஆதரவும் கொண்டிருக்கிறோம். அவர்கள் நமக்குச் செய்த நன்றிகளை எல்லாம் மறக்கமாட்டோம். அவர்கள் நமக்குக் கொடுத்த கல்வியினால் புதிய ஒளி பெற்றோம். ஆசியாவின் கொடுங் கோன்மையாகிய இருளுக்கிடையே ஆங்கிலேய நாகரீகத்தின் விடுதலை ஒளி நமக்குக் கிடைத்தது (கரகோஷம்)

- 1906 ம் வருடத்தில் கல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது காங்கிரஸ் மாநாட்டில் தாதாபாய் நவ்ரோஜி தலைமை வகித்துப் பேசியது.

மகாராணியின் அனுகூலமான, என்றும் மறப்பரிய கீர்த்தி மிக்க ஆட்சியில் அய்ம்பது வருஷம் முடிவு பெற்றதைக் குறித்து சக்ரவர்த்தினி யிடம் கடமைப்படி உண்மையான மகிழ்ச்சிகளைத் தெரிவிப்பதுடன் பாரத தேசத்தின் எல்லாப் பகுதிகளினின்றும் பிரதிநிதிகள் வந்து கூடிய இந்த ஜனசபை பிரிட்டிஷ் ராஜ்யத்தின் மீது அம்மகாராணி இன்னும் பல வருடம் ஆளவேண்டும் என்று வாழ்த்துகிறது.

- 1906 ம் வருடம் கல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானம்.

இந்த ஜனசபையை ஏற்படுத்தினோர் பிரிட்டிஷ் ராஜ்யத்திடம் மிகுந்த பற்றுதலுடையவர்கள். இதை விட்டு ருஷ்யாவினுடைய ஆட்சியின் கீழ்ப் புகுவதை அவர்கள் ஒரு நாளும் விரும்பமாட்டார்கள். இங்கி லீஷ் ராஜ்யம் நாகரீகமானது; ருஷ்ய ஆட்சியோ கொடுங் கோன்மை.

- 1889 டிசம்பர் 26 இல் பம்பாயில் நடைபெற்ற 5ஆவது காங்கிரஸ் மகா சபையில், வில்லியம் வெட்டர்பர்ன் என்ற ஆங்கிலேயர் தலைமை வகித்துப் பேசியது.

கருணை தங்கிய சக்கரவர்த்தினி யின் ஆட்சி பிரிட்டிஷ் சாம்ராஜ்யத் தின் சரித்திரத்தில் நீண்டதும், மிக உபகாரமானதும், மனித சந்தோஷத் தாலும், நாகரீகத்தாலும் மிக முக் கியமான அபிவிருத்திகளுடன் பிணைக்கப்பட்டது மாதலால், இந்த ஆட்சியில் அறுபதாண்டு முடிவு பெற்றமை கருதி அவருக்கு இந்த ஜன சபை வணக்கத்துடன் நன்றி தெரிவிக்கிறது.

- 1896ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி நடைபெற்ற 12 வது காங்கிரஸ் மகாசபையில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானம். சுதேசமித்திரன் வெளியிட்ட காங்கிரஸ் வரலாறு முதல் பாகத்திலிருந்து.

இதற்குப் பதவுரை, பொழிப்புரை தேவைப்படாதே! வெள்ளைக்காரர் களிடம் வேலைகள் பெறுவதற்காக மனு போட்டு அவர்களுக்கு ராஜ வாழ்த்துப்பாடி மண்டியிட்டுக் கிடந்த பரம்பரையா பெரியார் இயக்கம் பற்றிப் புழுதி வாரித் தூற்றுவது?

பெரியார் ஈரோட்டில் நடத்திய (10-5-1930) இளைஞர் மாநாட்டின் தீர்மானம் என்ன தெரியுமா?

எந்தப் பொதுக் கூட்டங்களிலும் ஆரம்பத்திலாவது, முடிவிலாவது ராஜவணக்கம், கடவுள் வணக்கம், தலைவர்கள் வணக்கம் ஆகியவைகள் செய்யும் காரியத்தை விட்டுவிட வேண்டும் என்று இம்மாநாடு தீர் மானிக்கிறது.

இந்த வரலாற்றையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் வெத்து வேட்டு வாணங்களை விட்டு வேடிக்கை காட்ட ஆசைப்பட வேண்டாம் அக்ரஹாரமே என்று எச்சரிக்கை செய்ய விரும்புகிறோம்.

சுதந்திரம் கேட்கவா காங்கிரஸ் தொடங்கப்பட்டது?

At that time was the foundation of the Indian National Congress laid not for Swaraj, nor Swadesh, no Swadhinta or Swadharma but for few crumbs that may fall from the table of the British - whose power in India had been established on firm foundation.

அந்த நேரத்தில் அகில இந்திய காங்கிரஸ் சுயராஜ்யத்திற்காகவோ, சுதேசிக்காகவோ, சுவாதீனத்திற்கா கவோ, சுயதர்மத்துக்காகவோ அமை யப் பட்டதல்ல. ஆனால் பிரிட்டி ஷார் மேஜையிலிருந்து விழுகிற எலும்புத் துண்டுகளுக்காகவும், அவர்களு(From sixty Years of Congress by Sajyapal and Praboth Chandra M.A.) போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா?

1885-இல் வெள்ளைக்காரரால் தோற்றுவிக்கப்பட்ட காங்கிரஸ் பூர்ண சுதந்திரம் கேட்டது 1929 லாகூர் மாநாட்டில்தானே!

1916 இல் நீதிக்கட்சி தோற்றுவிக் கப்பட்டது. அதன் முதல் குறிக்கோள் பார்ப்பன ஆதிக்கப் பிடியிலிருந்து பார்ப்பனர் அல்லாதார் விடுதலை பெறுவதே அதுவும் காங்கிரஸ்காரராக இருந்த பிட்டி தியாகராயர் டாக்டர் டி.எம். நாயர் ஆகியோர் டாக்டர் சி. நடே சனார் துணையோடு நீதிக் கட்சியை நிறுவினார்கள். 1925இல் காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் இருந்து வெளியேறிய தந்தை பெரியர் 1932 டிசம்பரில் வெளியிட்ட சுயமரியாதை இயக்கத் தின் அடிப்படை இலட்சியங்களும், சுயமரியாதை இயக்க சமதர்மக் கட்சியாரின் வேலைத் திட்டமும் என்பதில் முதல் திட்டமாகக் குறிப் பிடப்பட்டுள்ளது என்ன தெரியுமா?

பிரிட்டிஷ் முதலிய எவ்வித முதலாளித் தன்மை கொண்ட ஆட்சியிலிருந்து இந்தியாவைப் பூரண விடுதலை அடையச் செய்வது என்று திட்டம் கொடுத்தவர் அல்லவா ஈரோட்டுச் சிங்கம்.

1942 ஆம் ஆம் ஆண்டு ஆகஸ்டு 8ஆம் தேதி வெள்ளையனே வெளியேறு (Quit India) தீர்மானத்தை நிறைவேற்றியது காங்கிரஸ்.

(பார்ப்பனர்களின் குலதர்ம வீரரான சக்ரவர்த்தி ராஜகோபாலாச் சாரியார் எதிர்த்தார் - பின் வாங்கி னார். ஆகஸ்டு துரோகி என்று தூற் றப்பட்டார் என்பதையும் துக்ளக் கூட்டத்துக்கு இந்த இடத்தில் நினைவூட்டுகிறோம்.)

அதனைத் தொடர்ந்து தலைவர் கள் கைது செய்யப்பட்டனர். பிரிட்டிஷ் அரசு அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டது. எங்கும் கலவரம், கொலை, கொள்ளை, தீ வைப்பு இத்தியாதி, இத்தியாதி!

காந்தியார் கைது செய்யப்பட்டார். பின் விடுதலையானார். வெளி வந்த வேகத்தில் அவசரம் அவசரமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

சட்டமறுப்பு ஆரம்பிக்கும் நோக் கம் எனக்கில்லை. முன் நிகழ்ந்தது இனி நிகழாது. 1942 ஆம் வருடத்து நிலைமைக்கு இனிமேல் இட்டுச் செல்லமாட்டேன். சிவில் நிர்வாகத் தில் உள்ள தேசிய சர்க்கார் போதும். (சுதேசமித்திரன் 14_-7_-1944) என்று கூறிடவில்லையா?

அதே நேரத்தில் தந்தை பெரியார் அவர்களை ஒரு கணம் எண்ணிப் பார்க்கட்டும்.

இந்த ஆட்சி ஏன் ஒழிய வேண் டும்? என்று குடி அரசில் (29-12-1933) தலையங்கம் எழுதியதற்காக. வெள்ளைக்கார பிரிட்டிஷ் அரசாங்கம் 124 ஆ. அரசு வெறுப்புக் குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டு (30-_12_1933) சிறையில் அடைக்கப் பட்டாரே.

எதிர் வழக்குக் கூட ஆடாமல் வரலாற்று சிறப்பு மிக்க அறிக்கையினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தவர் அல்லவா பெரியார்? 9 மாத சிறைத் தண்டனை 300 ரூபாய் அபராதம். அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் ஒரு மாதம் தண்டனை என்று பிரிட்டிஷ் நீதிமன்றம் தண்டனை அளித்ததே - சிரித்த முகத்துடன் தண்டனைகளை ஏற்றுச் சிறை சென்றவர் அல்லவா வெண்தாடி வேந்தர்? தந்தை பெரி யாரின் தங்கை எஸ்.ஆர்.கண்ணம் மாளும் தண்டனைக்குள்ளானாரே?

ஆச்சாரியார் போல அண்டர் கிரவுண்ட் ஆனாரா? அப்படி அண் டர் கிரவுண்ட் ஆனவருக்குத்தானே இந்தியாவின் முதல் கவர்னர் ஜென ரல் என்ற லாட்டரி பரிசு அடித்தது _ பார்ப்பனர் சூழ்ச்சியாலும், ஆதிக்கத்தாலும்

துக்ளக் கூட்டமே! கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய வேண்டாம்!

--- கலி.பூங்குன்றன்,விடுதலை ஞாயிறு மலர்,24-07-2011
(இன்னும் இருக்கிறது)


Tuesday, July 19, 2011

ஆகமங்களும் மாறாதது அல்ல


அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்பது தமிழக மக்களின் நீண்டகால கோரிக்கையாகும். அக்கோரிக்கையை ஏற்று எவ் வாறு நடைமுறைப்படுத்துவது என்று வழி முறை கண்டு அர சுக்குப் பரிந்துரை செய்ய 2006 ஆம் ஆண்டு ஓர் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டது. அதன் தலை வராக நியமிக்கப்பட்டவர் நீதியர சர் ஏ.கே. ராஜன். அவர் தலைமை யில் அமைந்த குழு அளித்த அறிக்கை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அத்தோடு எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. தமிழக அரசு சட்டமியற்றிய போது, வழக்கம் போல் ஆதிக்கச் சக்திகள் உச்சநீதி மன்றத்திற்குப் போய் முயற்சியை முடக்கி வைத்திருக்கின்றன. வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் உயர்நிலைக் குழுவின் தலைவராக இருந்த நீதி யரசர் ஏ.கே. ராஜன், தான் சேக ரித்த தகவல்கள் மற்றும் அனு பவங்களின் அடிப்படையில் தமி ழுலகம் பயன் பெற இந்த நூலை எழுதியிருக்கிறார்.

கோயில்கள் பற்றியும் ஆகமங்கள் பற்றியும் தமிழில் சில நூல்கள் உண்டு என்றாலும், ஆகம உலகில் ஏற்பட்டுள்ள மாற் றங்கள் குறித்து சரியான, ஆதாரப் பூர்வமான, பல தேவையான தக வல்களை உள்ளடக்கிய நூல் என்று பார்க்கும்போது இதுவே முதல் நூலாக இருக்கலாம்.

தமிழ்நாட்டில் அதாவது வெள்ளையர் ஆட்சி காலத்தில் இருந்த சென்னை மாகாண பகுதி யில் அமைந்த கோயில்களில்தான் ஆகம நடைமுறை இருக்கிறது என்பதை ஆசிரியர் முதலில் சுட்டிக்காட்டுகிறார். ஆதிசங்கர ரின் அத்வைதத்தோடு தென்னிந் தியாவில் உள்ள அதாவது தமிழ் நாட்டில் சைவ சித்தாந்தத்தை ஆசிரியர் பொருத்திப் பார்த்து சைவ சித்தாந்த வாதிகளால் ஏற்க முடியாத கருத்தாகவே இருக்கும். ஆனால் அதேசமயம் தமிழ் நாட்டு சைவ சித்தாந்தம் ஒரு தனிப்பிரிவு என்று பார்க்கிறார். மேலும் ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் அவ்வாறு பார்க்க மறுத்ததை ஆசிரியர் ஏற்க வில்லை. அத்தீர்ப்பு மறுபரிசீ லனை செய்யப்பட வாய்ப்பு உள் ளது என்று கூறியிருக்கிறார். இது குறித்து ஆசிரியர் விரிவாக எழுதி யிருந்தால் தமிழ் உலகம் அவ ருக்கு நன்றி கூறும்.


நீதியரசர் ஏ.கே. ராஜன் ஆகம மாற்றங்கள் என்று எழுதியிருக் கும் பகுதி இந்த நூலின் உயிர் நாடியாகும். ஆகமங்கள் மாறாதவை, மாற்றப்பட முடி யாதவை, ஆகம மீறல் என்பது தெய்வக் குற்றம், காத்திரக் குற்றம் என்றெல்லாம் ஒரு கருத்தியலை மக்கள் மத்தியில் ஆதிக்க சக்திகள் பரப்பி வைத்திருக்கின்றன. அதற் குத் துணை போகும் சக்திகளும் ‘ஆமாம்’ போடுகின்றன. இந்தக் காலகட்டத்தில் ஆகமங்கள் மாறி வந்துள்ளன, மீறப்பட்டிருக்கின் றன என்ற உண்மைகள் வெளி வர வேண்டும். அப்பணியை இந்நூல் செய்கிறது.

ஆகமவழிச் சைவக் கோயில் களில் தெய்வ சிலையை வை ணவர் தொட்டாலோ அல்லது வைணவக் கோயில்களில் சைவர் தொட்டாலோ தெய்வச் சிலை யின் தெய்வத் தன்மை போய்வி டும் என்ற கூற்றை உச்சநீதிமன்றம் ஏற்று ஒரு வழக்கில் தீர்ப்பு வழங் கியுள்ளது. இத்தீர்ப்பு சரியல்ல என்று சரியாகவே ஆசிரியர் தன் கருத்தைப் பதிவு செய்கிறார். உருவ வழிபாட்டை ஏற்காத ஸ்மார்த்த பிராமணர்கள் சைவ, வைணவக் கோயில்களில் இன் றும் அர்ச்சனை செய்து வருகி றார்கள். இந்த உண்மை உச்சநீதி மன்றத்தின் பார்வைக்கு போகா மல் போய்விட்டது என்ற உண் மையை எதிர்காலம் கவனத்தில் கொள்ள வழிகாட்டுகிறார். ஸ்மார்த்க சமயப் பிரிவினருக்கு உருவ வழிபாடு, கோயில், ஆகமம் எதுவும் கிடையாது. ஆனால், அவர்களும் கோயிலில் எல்லாம் செய்கிறார்கள். (காஞ்சி சங்க ராச்சாரியார் ஸ்மார்த்த பிராம ணர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?)

பெண்களும் அர்ச்சகராக இருக்கலாம்; அதற்குத் தடை கிடையாது என்பதை எடுத்துக் காட்டுகிறார். ராமானுஜரின் கருத்தே இதுவாகத்தான் இருக்க முடியும் என்கிறார். தஞ்சைப் பெரிய கோயிலின் கல்வெட்டு ஒன்றும் பெண்கள் அர்ச்சனை செய்ததை உறுதிப் படுத்துகிறது என்கிறார். அர்ச்சகர்களே தங்கள் விருப்பத்திற்கு ஆகமங்களை மாற் றிக் கொள்கிறார்கள் என்பது குறித்து இவ்வாறு எழுதுகிறார் நீதியரசர் ஏ.கே. ராஜன்.

“நடைமுறைகளை, அதாவது ஆகமவிதிகளை, பூசை செய்யும் அர்ச்சகர்கள் தாங்களே, வேண் டும் போதெல்லாம் மாற்றிக் கொள்கிறார்கள். அதைப் பூசை செய்யும் எந்த அர்ச்சகரும் எதிர்த் துப் பேசுவதில்லை. அதனை ஆகமமீறல்கள் என்று எண்ணுவ தும் இல்லை. பக்தர்களுக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது என்பதால் அவர்களிடமிருந்து எதிர்ப்பு எதுவும் எழுவதில்லை. ஆசிரியர் இதைச் சொன்னதோடு நின்றிருக்கக் கூடாது. அறநிலையத் துறையையும், கோயில் தர்மகர்த் தாக்களையும் ஒரு ‘பிடி’ பிடித் திருக்க வேண் டும்.

ஆகமம் பற்றிய உண்மை நிலையை இன்னொரு அத்தி யாயத்தில் பட்டியலிடுகிறார். பல அதிர்ச்சி தரும் தகவல்கள், ஆனால் உண்மைத் தகவல்கள் இந்த நூலில் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப் பட்டு இருக்கிறது. சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள 41 அர்ச்சகர்களில் 4 அர்ச்சகர்களுக்கு மட்டுமே ஆகம விதிகள் தெரிந் துள்ளன. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள 116 அர்ச்சகர் களுள் ஆகமம் பயின்றவர்கள் 28 நபர்கள் மட்டுமே. 15 நாள் புத் தொளி பயிற்சி பயின்றவர்கள் 22 நபர்கள் மட்டுமே. மீதி 66 அர்ச்சகர் கள் தந்தை வழி ஆகமம் அறிந்தவர் கள். அதாவது முறையாக அறிந்த வர்கள் அல்ல. இப்படி இன்னும் பல செய்திகள் பரிமாறப்படு கின்றது.

தமிழில் அர்ச்சனை செய் வதற்கு உச்சநீதிமன்றம் தடை அல்ல என்பதைச் சுட்டும் ஆசிரி யர் வடமொழி அர்ச்சனை இல் லாத கோயில்களில் கூட வட மொழி ஆதிக்கம் ஏற்பட்ட நிகழ்ச்சி களையும் வாசகர் முன் வைக்கிறார்.

தமிழ் வழி அர்ச்சனை, அனைத்து சாதியினரும் அர்ச்சகராதல் போன்ற கோரிக்கைகளுக்கு வெறும் உணர்ச்சிப்பூர்வமாக, மேலோட்ட மாகக் குரல் கொடுக்காமல் ஆதாரப்பூர்வமாக, அறிவுப்பூர்வ மாகக் குரல் கொடுக்க இந்த நூல் ஒரு கைவாளாகவும், கேடயமாக வும் இருக்கும்.

“கோயில்கள் ஆகமங்கள் மாற்றங்கள்”

ஆசிரியர்: நீதியரசர் ஏ.கே. ராஜன்

சேது பப்ளிகேஷன்ஸ்

ளு-79, அண்ணாநகர்,

சென்னை - 600 040.

பக்கம்: 87, விலை ரூ. 40/-

-----------நன்றி: தீக்கதிர்


Monday, July 18, 2011

சமச்சீர்க்கல்வி பாடத்திட்டம், மாட்டுவண்டியா? சோ பார்ப்பானுக்கு பதில் நீதிமன்ற தீர்ப்பு

“ஏழை மற்றும் கிராமப்புற மாணவர் களைக் கேவலப்படுத்திவிட்டது தமிழக அரசின் சமச்சீர்க்கல்விக்கான ஆய்வுக் குழு” - ஆதங்கமும், வேதனையும் ஒரு சேரப் பொங்குகிறது மூத்த கல்வியாளரும் முன்னாள் துணைவேந்தருமான வசந்தி தேவியின் குரலில்!

சமச்சீர் கல்வி தொடர்பான விவா தங்கள் நீதிமன்றத்தில் அனல் பறக்கும் நேரத்தில், அவரை சந்தித்தோம். “நீதி மன்ற விசாரணை நடந்துகொண்டு இருக் கும்போதே, புத்தகங்களை அச்சடித்து நீதி மன்றத்தின் கண்டனத்துக்கு உள்ளாகி யிருக்கிறது தமிழக அரசு. இப்படி ஓர் அறிக்கையை அரசு நியமித்த குழுவினர் கொடுப்பார்கள் என்று நீதிமன்றமே எதிர் பார்க்கவில்லை. அரசு மீது நம்பிக்கை வைத்து, நீதிமன்றம் அரசையே ஒரு குழு அமைக்கச் சொன்னது. ஆனால், சமச்சீர்க் கல்வித்திட்டத்தை எதிர்த்தவர்களைக் கொண்டே குழு அமைத்தது அரசு. அத னால்தான், இப்படி ஒரு மோசமான அறிக் கையை அவர்கள் தாக்கல் செய்திருக் கிறார்கள்.

‘இந்தப் பாடத்திட்டத்தைக் கற்றுக் கொள்ள முடியாது. நகர்ப்புற, வசதியான மாணவர்களால் மட்டுமே முடியும்...’ என் றெல்லாம் அறிக்கையில் குறிப்பிட்டுள் ளார்கள். இன்று குறைந்த வசதிகளை மட் டுமே கொண்டு, 100 சதவிகிதம் தேர்ச்சி பெறும் கிராமப்புறப் பள்ளிகளை நான் காட்டவா? மொத்தத்தில் இது பாடத் திட்டம் தொடர்பான பிரச்சனையே இல்லை. கல்விக் கட்டணக்கொள்ளையடிக்கும் கும்பலுக்கும் - நியாயமான, சமச்சீரான கல்வி வேண்டும் என்பவர்களுக்குமான போராட்டம் என்பது தான் உண்மை!

மத்திய அரசின் கட்டாயக்கல்விச் சட் டம், ‘ஒவ்வொரு பள்ளியும் அருகில் இருக் கும் பகுதியைச் சேர்ந்த ஏழை, ஒடுக் கப்பட்ட மற்றும் பின்தங்கிய மாணவர் களுக்காக, பள்ளியில் 25 சதவிகிதம் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும்’ என்கிறது. இதைக் கடுமையாக எதிர்க்கின்றன மெட் ரிக்குலேசன் பள்ளிகள், சென்னையில் இருக்கிற ஒரு பள்ளி ஒருபடி மேலே போய், மிகவும் கண்டனத்துக்குரிய சர்க்குலர் ஒன்றை பெற்றோருக்கு அனுப்பி இருக் கிறது.

அதில், ‘மத்திய அரசு சட்டத்தின்படி

25 சதவிகிதம், ஏழை, பாமரக் குழந்தை களுக்கு இடஒதுக்கீடு செய்தால், உங்கள் குழந்தைகளின் கல்வி கற்கும் திறன் பாதிக் கும். அவர்களோடு இணைந்து உங்கள் குழந்தைகள் படித்தால், உங்கள் குழந்தை கள் பாழாகிவிடுவார்கள். தகுதியற்ற, ஒழுங் கீனமான குழந்தைகளை உங்கள் குழந் தைகளுடன் ஒன்றாகப் படிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதனால் எங்கள் ஆசிரியர்களின் நேரமும் வீணாகிறது. எனவே, இந்தச்சட்டத்தை எதிர்த்து நீங்கள் போராட்டம் நடத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளது. இந்தப் பள்ளியின் தாளா ளரைத்தான் சமச்சீர்க் கல்வி ஆய்வு கமிட் டியில் தமிழக அரசு நியமித்து உள்ளது. இவர்களிடம் இருந்து நியாயமான அறிக் கையை எப்படி எதிர்பார்க்க முடியும்?

முதலில், நீதிமன்றம் இந்தக்குழுவி னரிடம் சமச்சீர்க் கல்வித்திட்டம் வேண் டுமா.. வேண்டாமா? என்று கேட்கவில்லை. எந்தப் பாடத்திட்டம் தரமானது என்றுதான் கேட்டது. ஆனால் இவர்களாகவே, ‘சமச் சீர் கல்வித்திட்டம் வேண்டாம்’ என்கிறார் கள். அதைச் சொல்லவேண்டியது நீதிமன் றம் மட்டுமே!

தேசியக் கலைத் திட்டத்தில் உள்ள கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான குழுதான், தேசிய அளவில் பள்ளிக்கல்விக் கான பொதுவான வழிகாட்டுதல்களைக் கொடுக்கிறது. கேரளா மற்றும் இமாசலப் பிரதேசத்தில் இதனடிப்படையில் மிகத்தர மான கல்வித்திட்டத்தை போதிக்கிறார்கள். இந்தக் குழுவின் வழிகாட்டுதலைக் கொண்டு சமச்சீர்க் கல்வித் திட்டத்தை உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால்,அதில் உப்புச் சப்பு இல்லாத குறைகளைக் கண்டுபிடித் துள்ளது அரசின் ஆய்வுக்குழு. மெட்ரி குலேசன் பாடத்திட்டத்தில் ஆயிரம் குறை களையும் ஓட்டைகளையும் நான் கண்டு பிடித்து சுட்டிக்காட்டவா?

‘சமச்சீர்க்கல்விப் பாடத்திட்டம், குழந் தைகள் மீதான சுமையை அதிகப்படுத்து கிறது. வயதுக்குத் தகுந்த கல்வி இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளனர். மெட்ரிக்குலே சன் பள்ளிகள்தான் ‘நீயா... நானா?’ என்ற போட்டியில் குழந்தைகள் மீது அதிகமான சுமையை சுமத்துகின்றன. எட்டாம் வகுப் பில் கற்க வேண்டிய கல்வியை, ஐந்தாம் வகுப்பில் சொல்லிக்கொடுக்கிறார்கள். இப்படிச் சொல்லிக் கொடுப்பதுதான், தரமற்ற கல்வி; திணிக்கப்படுகிற கல்வி. நீங் கள்தான் வயதுக்குத் தகுந்த கல்வியைக் கொடுக்காமல் குழந்தைகளின் மூளைத் திறனை மழுங்கடிக்கிறீர்கள்.

பத்திரிகையாளர் சோ, ‘சமச்சீர்க்கல்வி திட்டத்தை மாட்டு வண்டியுடன் ஒப்பிட்டு’ எழுதியிருக்கிறார். அனைத்துத்துறை வல் லுநர்கள் இணைந்து உருவாக்கியதுதான் சமச்சீர்க்கல்வி. மெட்ரிக்குலேசன் தேர்வு களில் சாய்ஸ் நிறைய உண்டு. அதனால், அதைக் கற்பிக்கும் ஆசிரியர்களும், ‘குறிப்பிட்ட பகுதியை மட்டும் படி’ என்று மாணவர்களுக்கு அறிவுறுத்துகிறார்கள். அதை மட்டுமே படித்து தேர்வு எழுதுகிறான் மாணவன். ஆனால் சமச்சீர்க்கல்வியில் சாய்ஸ் கிடையாது. முழுப்புத்தகத்தையும் படித்து, மெத்த அறிவு பெறுகிறான் மாண வன். இப்போது சொல்லுங்கள், மெட்ரிக்கு லேசன் பாடத்திட்டம், மாட்டு வண்டியா? சமச்சீர்க்கல்வி பாடத்திட்டம், மாட்டுவண் டியா?” கேள்வியுடன் முடிக்கிறார் வசந்தி தேவி.

பதிலும் தீர்வும் நீதிமன்றத்தின் தீர்ப்பில் உள்ளது!

நன்றி : ஜூனியர் விகடன் (17.7.2011) தொகுப்பு: தீக்கதிர்

Sunday, July 17, 2011

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! போயும் போயும் ம.பொ.சி.தான் கிடைத்தாரா?

வடபுலத்தில் தேசிய காங்கிரஸ் மகாசபைக்கு எதிராக முஸ்லிம் லீக்கைத் தோற்றுவிப்பதிலே வெற்றி கண்டது போல, தென்புலத்தில் பிராமணரல்லாதார் கட்சியைத் தோற்றுவிப்பதிலே, இந்திய வைஸ் ராயும், சென்னை மாகாண கவர்ன ரும் வெற்றி கண்டனர் என்று சிலம் புச் செல்வர் ம.பொ.சிவஞானம் எழுதியுள்ளார். (துக்ளக் 6-7-2011) என்று திருவாளர் கே.சி. லட்சுமி நாராயண அய்யர்வாள் எடுத்துக் காட்டியுள்ளார்!

இவர்களுக்குப் போயும் போயும் ம.பொ.சி. தான் கைக் கருவியாகக் கிடைத்துள்ளாரா?

திராவிட இயக்கத்தைத் தேசத் துரோக அமைப்பு என்று  குற்றம் சாட்டும்போது, திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடுகளை நடத்திய ம.பொ.சி.யைத்தானே தேடிப் பிடிப்பார்கள்?

இதில் ஒரு பரிதாபம் என்ன தெரியுமா? காலம் பூராவும் திராவிட இக்கத்தைத் திட்டிக் காலம்  கழித்த ம.பொ.சி. அவர்கள் கடைசிக் காலத்தில் திராவிட இயக்கத்தினி டத்தில் தான் சரண் அடைந்தார் என்பதுதான் அந்தப் பரிதாபம்!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவு பெற்றவராக தி.மு.க. சின்னமான உதயசூரியன் சின்னத்தில் நின்றுதான் வெற்றி பெற்றார்!

காலம் காலமாக காங்கிரஸ்காரன் என்று தன்னைச் சொல்லிக் கொண்ட அவருக்குக் காங்கிரசில் எந்தப் பதவியும் கிட்டவில்லை. திராவிட இயக்க ஆட்சிக் காலத் தில்தான் எம்.எல்.ஏ. பதவியும், மேலவை உறுப்பினர் பதவியும், அதன் பின் மேலவைத் துணைத் தலைவர் பதவியும், கடைசிக் காலத் தில் மேலவைத் தலைவர் பதவியும் மேலவை கலைக்கப்பட்ட நிலையில் தமிழ் உயர் மட்டக் குழுத் தலைவர் பதவியும் கிடைத்தன என்பது சரித்திர உண்மை.

திராவிட இயக்கத்தைப் பற்றி அவர் என்ன சொல்லியிருந்தாலும், கொச்சைப்படுத்தியிருந்தாலும், ம.பொ.சி. நம்பும் வைதிக மொழியில் சொல்ல வேண்டுமானால் கடைசிக் காலத்தில் அதற்கான பாவ மன் னிப்பையும், பிராயச் சித்தத்தையும் திராவிட இயக்கத்தினிடம்தான் பெற்றார்.

அண்ணா முதல் அமைச்சர் ஆன நிலையில் எப்படியாவது ஓர் அமைச்சராக வேண்டும் என்பதற்காக அவர் பட்ட பாடு நகைப்புக்குரியது.

அமைச்சரவையில் இடம் கொடுத்தால் தனது தமிழரசுக் கழகத்தையே கலைத்துவிடுவதாகச் சொன்ன கட்சிக்காரர் அவர்.

மந்திரி பதவிக்காக அவர் ஆலாய்ப் பறந்த நேரத்தில் விடுதலை யில் தந்தை பெரியார் மூன்று அறிக்கைகளை வெளியிட்டார்.

எந்தக் கட்சியானாலும் தமிழர் கள் எல்லாம் ஒன்று சேரவேண்டும் என்கிற சமயத்தில் பார்ப்பன அடிமைகளை, பார்ப்பனீயத் தொண் டர்களை தமிழர்களுக்கு மந்திரி யாக்கி, தமிழர்களின் மூக்கை அறுப் பதா? என்ற வினாவை எழுப்பினார் தந்தை பெரியார். இது எதற்காக? இன்று மந்திரி சபையில் ராஜாஜி அவர்களுக்கு ஒரு ஒற்றர் வேண்டும். தி.மு.க. மந்திரி சபையில் ராஜாஜியின் குரல் ஒலிக் கப்படுவதற்கும் அவரது உதடுகள் வேண்டுமா? என்றும் கேட்ட தந்தை பெரியார்,  வேலியில் போகிற சுக்குட் டியை காதில் விட்டுக் கொண்டு குடையது குடையுது என்கிற கதை (விடுதலை 24.8.1967) என்று தந்தை பெரியார் எழுதியதன் விளைவாக அந்தக் கால கட்டத்தில் அவருக்குக் கிடைக்கவிருந்த அமைச்சர் பதவி பறி போனது.

ஆனந்தவிகடன் ஏடு (3-_9_-1967) அப்பொழுது ஒரு கார்ட்டூன் போட்டது. நாற்காலியைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ம.பொ.சி. அவர்கள் அண்ணா, அண்ணா! தம்பி வந்திருக்கேன்! என்று கேலி செய்யப் பட்டதே --_ துக்ளக் பார்ப்பன ஏட்டுக்கு ஆனந்தவிகடன் பார்ப்பன ஏட்டின் கார்ட்டூன்தான் பொருத்தமானது.

அதே ம.பொ.சி. பின்னொரு கால கட்டத்தில் பார்ப்பனர் மீது பாய்ந்து விழுந்த நிலையும் உண்டு; தனக்கென்று வந்தால்தானே தெரியும் தலைவலியும், வயிற்றுவலியும்!

1971 ஆம் ஆண்டு தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க. ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளராக உதய சூரியன் சின்னத்தில் ம.பொ.சி. நின்றார். அவரை எதிர்த்து ஸ்தாபன காங்கிரஸ் சார்பில் திருமதி அனந்தநாயகி போட்டியிட்டார்.

பரமபக்தரான ம.பொ.சி. மயிலை கபாலீசுவரர் கோயிலுக்குச் சென்று தன் பெயரில் அர்ச்சனை செய்யுமாறு அர்ச்சகரை வேண்டினார்.

அந்த அர்ச்சகப் பார்ப்பான் என்ன செய்தான் தெரியுமா? ம.பொ.சி.யிடம் அர்ச்சனைக்கான துட்டை வாங்கிக் கொண்டு அவரை எதிர்த்து நின்ற அனந்தநாயகி அம்மையார் பெயருக்கே அர்ச்சனை செய்துவிட்டார். அந்த அளவு 1971 ஆம் ஆண்டு தேர்தல் பார்ப்பனர்-பார்ப்பனர் அல்லாதார் போராட் டமாக உச்ச நிலையில் விளங்கியது.

அன்று மயிலாப்பூர் தொகுதி 97 ஆவது வட்டத்தில் பேசியபோது ம.பொ.சி. தனக்கு ஏற்பட்ட இந்த அவமரியாதையைக் குறித்து ஆவேசமாக அவருக்கே உரித்தான தொனியில், மீசையை இடது கையால் ஒரு தடவி தடவி ஆக்ரோஷமாக கர்சித்தார்.

பார்ப்பனர்களின் ஓட்டு மட்டும் சிண்டிகேட்டுக்குப் போதுமா? மயிலாப்பூரில் ஒரு லட்சத்துப் பதினாயிரம் ஓட்டுகள் இருக்கின்றன. இதில் பிராமணர்கள் ஓட்டு 17 ஆயிரத்து அய்நூற்றுச் சொச்சம்; இந்த ஓட்டுகள் மட்டும் கிடைக்கும் என்று வைத்துக் கொண்டாலும், அனந்தநாயகி அம்மையார் வெற்றி பெறுவாரா? என்று மூச்சு முட்ட முழங்கினார்.

துக்ளக் பார்ப்பனக் கூட்டமும், திராவிட இயக்கத்தைக் கொச்சைப் படுத்தி பார்ப்பன அம்சமாக பேனா பிடித்த எழுத்தாளரும், ம.பொ.சி.யை துணைக்கழைத்து கடைசியில் தங்கள் உள்ளி மூக்குகளை உடைத் துக் கொண்டதுதானே மிச்சம்!

இந்தியாவில் அடிமைத் தளையை நீக்குவதற்காக விடுதலைப் போரை காங்கிரஸ் மகாசபை முனைப்புடன் நடத்தியபோது, தங்களது பிரித் தாளும் கொள்கையை ஆங்கிலே யர்கள் இந்தியாவிலும் செயல்படுத் தினார்கள். அந்த வகையில் சிக்கிய வர்கள்தான் நீதிக்கட்சிக்காரர்கள், உண்டாக்கப்பட்டதுதான் பார்ப் பனர் அல்லாதார் கட்சி என்ற அபாண்ட பழியைப் போடுகிறார் லட்சுமி நாராயணன்.

அப்படியா சங்கதி? அவர்கள் சாட்சிக்கழைத்த அந்த ம.பொ.சி யையே அவர்கள் ஆதாரம் காட்டிய ம.பொ.சி. அவர்களின் அந்த ஆதார நூலான, விடுதலைப் போரில் தமி ழகம் எனும் நூலையே சாட்சிக் கூண்டில் ஏற்றலாமா? இதோ, சிலம் புச் செல்வர் ம.பொ.சி. எழுதுகிறார்:

சென்னை மாகாணத்தைப் பொருத்தவரையிலே மிதவாதிகளைக் கொண்ட பழைய கட்சியாரில் வக்கீல்களே அதிகம். ஆண்டுதோறும் கூடும் காங்கிரஸ் மகா சபைகளிலே, வைஸ்ராயின் நிர்வாக சபைக்கும், சென்னை மாநில கவர்னரின் நிர்வாக சபைக்கும் இந்தியர்களை நியமிக்க வேண்டுமென்றும்; உயர்நீதிமன்ற நியமனங்களிலே இந்தியர்களைக் கூடுதலாக நியமிக்க வேண்டு மென்றும் கோரித் தீர்மானம் கொண்டு வந்ததே இந்த மிதவாதக் கூட்டம்தான். இத்தகைய பதவி களைத் தாங்கள் அடைய முடியு மென்ற நம்பிக்கையின் பேரிலேயே சென்னை மாகாண வக்கீல்கள் காங் கிரஸ் கூடாரத்துக்குள்ளேயே குடி யிருந்தனர். காங்கிரஸ் மகாசபையில் ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்களே சேர முடியுமென்ற நிலை இருந்ததும், இந்த மிதவாதக் கூட்டம் அந்த மகாசபையிலே செல்வாக்குப் பெறு வதற்குச் சாதகமாக இருந்தது.

ஆங் கிலம் படித்தவர்களிலே பள்ளிகளி லும், கல்லூரிகளிலும்  ஆசிரியர்களாக இருப்பவர்களும், அரசாங்க உயர் அலுவலர்களும் காங்கிரசில் ஈடுபட இயலாதவர்களாக இருந்தனர். ஈடுபட்டாலும், பிரிட்டீஷ் பொருள் களைப் பகிஷ்கரிக்க வேண்டுமென்ற அளவுக்குச் செயல்பட முடியாதவர் களாகவும் இருந்தனர். இதனால், ஆங்கிலம் படித்தவர்களிலே சுதந்திர மாக செயல்படுவதற்கு அதிக அள வில் சந்தர்ப்பம் பெற்றிருந்தது வக்கீல் கூட்டம்தான்.

பிற்காலத்தில் சென்னை  மாகாணத்திலே ஜஸ்டிஸ் கட்சி தோன்றுவதற்குக் காரணமாக இருந்தது இந்த வக்கீல்களின் ஆதிக்கம்தான். இவர்களிலே மிகப் பெரும்பாலோர் பிராமணர்களாக இருந்தாலும் அரசாங்க நீதித்துறை, நிர்வாகத்துறை, பார்லிமெண்டரித் துறை ஆகியவற்றில் எல்லாம் இந்த பிராமண வக்கீல்களே நியமனம் பெற்றதாலும், இவர்களுடைய ஆதிக்கத்துக்கு வகுப்புவாத வண்ணம் பூச ஜஸ்டிஸ் கட்சியால் முடிந்தது. அந்நாளில் சட்டம் படித்த வக்கீல்களில் நூற்றுக்குத் தொண் ணூறு பேருக்கு அதிகமானோர் பிராமணர்களாகவே இருந்தனர். ஆகவே, அவர்கள் இந்தியன் என்ற பெயரால் அரசாங்கத் துறைகள் அனைத்திலும் நியமனம் பெறுவது இயற்கையாக இருந்தது என்று எழுதியுள்ளாரே.

(விடுதலைப் போரில் தமிழகம்- _ ம.பொ.சி. பக்கம் 173_-174)

ம.பொ.சி.யை துணைக்கழைத்தார் திருவாளர் கே.சி. லட்சுமிநாராயண; அந்த ம.பொ.சி.யே காங்கிரஸ் என்பது பார்ப்பனர்கள் பதவி தேடும் கூடாரம் ஆனதால், ஜஸ்டிஸ் கட்சி தோன்ற வேண்டிய அவசியம் ஏற் பட்டது என்று ஜஸ்டிஸ் கட்சியின் தோற்றத்திற்கு நியாயம் கற்பித்து விட்டாரே - துக்ளக் கூட்டம் எங்கே போய் முட்டிக் கொள்ளப் போகிறது?
அத்துடன் விட்டாரா ம.பொ.சி?.

இவர்கள் மயிலாப்பூர் வக்கீல்கள் என்றும் எழும்பூர் வக்கீல்கள் என்றும் இருவேறு பிரிவுகளாகப் பிரிந்து செயல் பட்டனர். முன்னவர் அனேகமாக பிராமணர்களாகவும், பின்னவர் அனேகமாக பிராமணரல் லதாராகவும் இருந்தனர். மயிலாப்பூர் வக்கீல்களுக்கு திரு.வி.கிருஷ்ணசாமி அய்யர் தலைவர் என்றால், எழும்பூர் வக்கீல்களுக்கு சர்சி.சங்கரன் நாயர் தலைவராக இருந்தார். டி.எம்.நாயரும் எழும்பூர் கூட்டத்தாருடன் சேர்ந் திருந்தார். (நூல் பக்கம் 222)

*****

காங்கிரசைப் பயன்படுத்தி சகலமும் பார்ப்பனர் மயம்; பதவிகள் எல்லாம் அவர்கள் மயம் என்றிருந்த நிலையில், பார்ப்பனர் அல்லாதார் களின் உரிமைக்காகக் குரல் கொடுக்க ஜஸ்டிஸ் கட்சி முன்வந்ததில் என்ன குற்றம்?

பார்ப்பனர்கள் திட்டமிட்டு பதவிகளை அபகரித்தால் அது தேச சேவை; நாட்டுப் பற்று - சுதந்திர தாகம்; - பார்ப்பனர் அல்லாதார் தங்கள் உரிமைக்காகக் குரல் கொடுத்தால் , பாடுபட்டால் அதற்கு உள் நோக்கமா? தேசத் துரோகமா?

பார்ப்பனர்கள் எந்தெந்தப் பதவிகளை எல்லாம் எப்படி எப்படி பெற்றார்கள் என்பதை - தங்களுக்குத் துணைக்கு அழைத்த ம.பொ.சி.யே வேறு வழியின்றிப் பட்டியல் போட்டுக் கொடுத்திருக்கிறாரே!

கொலைக் குற்றவாளியான ஜகத்குரு ஜெயேந்திர சரஸ்வதி வழக்கில் ஏற்பட்ட பிறழ் சாட்சியாக ம.பொ.சியை கருதுவார்களோ?

மும்பையில் நடைபெற்ற இரண்டாவது காங்கிரஸ் மாநாடு பற்றி க.சுப்பிரமணிய அய்யர் நூல் ஒன்றை எழுதி வெளியிட்டார்  (1888). அந்நூலின் பெயர் ஆரியஜன அய்க்கியம் அல்லது காங்கிரஸ் ஜன சபை என்பதே.

இப்படி காங்கிரஸ் என்றாலே ஆரிய ஜனத்திற்கானதே என்று ஆகி விட்ட பிறகு ஆரியரல்லாதாருக் கென்று ஒரு அமைப்பு வேண்டாமா? அதுதான் ஜஸ்டிஸ் கட்சி - காலத்தின் கட்டாயமாகத் தோன்றியது.

எல்லாம் எங்களுக்கே யென்று தங்கள் வயிற்றில் அறுத்துக் கட்டிக் கொண்ட கும்பல் அதற்கெதிரான பூகம்பம் புறப்படும்போது லாலி  பாடியா வரவேற்பர்? அந்த ஆத்திரத்தை நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் லட்சுமி நாராயணர்கள் உருவில் உறுமிக் காட்டுகிறார்கள்.
ஏதோ தென்னிந்திய நல உரிமைச் சங்கமான ஜஸ்டிஸ் கட்சிதான் பார்ப்பன எதிர்ப்பைத் தூக்கிப் பிடித்தது என்று கருதவேண்டாம்.

சென்னை மாகாணத்தில் காங்கிரசுக்குள்ளேயே பார்ப்பனர் அல்லாதாருக்கு அமைப்பு ஒன்றைத் தொடங்கும் நிலைக்குத் துரத்தப்பட் டதே! அதன் பெயர் சென்னை மாகாண சங்கம், தலைவர் கேசவப் பிள்ளை. துணைத் தலைவர்களில் ஒருவர் ஈ.வெ.ரா. பார்ப்பனர் அல்லா தாருக்கு  அனைத்துத் துறைகளிலும் 50 விழுக்காடு தருவது என்ற தீர் மானம் செய்யப்பட்டது. இவ்வமைப் பில் இடம் பெற்றவர்கள் அனை வரும் பார்ப்பனர் அல்லாதாரே! இதனைக் கண்டு வெகுண்ட சத்திய மூர்த்தி அய்யர் மாதவராவ் போன்ற பார்ப்பனர்கள் தேசிய வாதிகள் சங்கம் என்று காங்கிரசுக்குள்ளேயே இன்னொரு அமைப்பினை ஏற் படுத்தினர்.

விஜயராகவாச்சாரியார் தலைவ ராகத் தேர்வு செய்யப்பட்டார். கஸ்தூரி ரெங்க அய்யங்காரைத் துணைத் தலைவர் என்று ராஜாஜி முன்மொழிந்தார். ஈ.வெ.ரா. திரு.வி.க., டாக்டர் வரதராஜுலு நாயுடு ஆகியோர் வ.உ.சியைத் துணைத் தலைவராகக் கொண்டு வர வேண்டும் என்று வற்புறுத்தினர். கடைசியாக வ.உ.சி.யோடு கஸ்தூரி ரெங்க அய்யங்காரும் துணைத் தலைவர் களாக ஆக்கப்பட்டனர்.

பார்ப்பனர் அல்லாதாருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு அனைத் துத் துறைகளிலும் அளிக்க வேண்டும் என்கிற தீர்மானத்தை தேசியவாதிகள் சங்கத்திலும் நிறைவேற்றுமாறு ஈ.வெ.ரா. உள்ளிட்ட மூன்று தலை வர்களும் செய்துவிட்டனர். அதனைக் கண்ட ராஜாஜி அவர்கள் உங்களை விட தியாகராயச் செட்டி யாரே மேல் என்று கூறும் நிலை ஏற்பட்டதே!

பார்ப்பனர் அல்லாதாரின் உரி மைக்காக ஒரு அமைப்புத் தோன்று வதற்கு இவ்வளவு அழுத்தமான வரலாற்றுப் பின்னணிகள் இருக்க, இவற்றை எல்லாம் தார் கொண்டு அழித்துவிட்டு, பார்ப்பனர் அல் லாதார் இயக்கத்தைத் தேச துரோக அமைப்பு என்று பழி சுமத்துகின் றனர் பார்ப்பனர்கள் என்றால் அவர் களை  ஆபேடூபே சொன்ன அந்த அடை மொழிகளால் தான் அர்ச் சனை செய்ய வேண்டும்.

Avarice, Ambition, Cunning, Wily, Doube tongued, Servile, Insinuating, Injustice, Fraud, Dishonest, Oppression intrigue..

இதனை அறிஞர் அண்ணா பின்வருமாறு மொழி பெயர்க்கிறார்:

பேராசைப் பெருந்தகையே போற்றி!
பேசநா இரண்டுடையாய்ப் போற்றி!
தந்திர மூர்த்தி போற்றி!
தாசர்தம் தலைவா போற்றி!
வஞ்சக வேந்தே போற்றி!
வன்கணநாதா போற்றி!
கொடுமைக் குணாளா போற்றி!
கோழையே, போற்றி, போற்றி!
பயங்கொள்ளிப் பரமா போற்றி!
படு மோசம் புரிவாய் போற்றி!
சிண்டு முடிந்திடுவாய் போற்றி!
சிரித்திடு நரியே போற்றி!
ஓட்டு வித்தை கற்றோய் போற்றி!
உயர் அநீதி உணர்வோய் போற்றி!
எம் இனம் கெடுத்தோய் போற்றி!
ஈடில்லாக் கேடே போற்றி!
இறை, இதோ, போற்றி! போற்றி!
ஏத்தினேன் போற்றி! போற்றி!
இதுதான் அண்ணாவின் படப்பிடிப்பு!
குறிப்பு:  இறந்து போன வரை பார்ப் பனர்கள் சாட்சிக்கு அழைத்ததால் ம.பொ.சி. யைப் பற்றி நாமும் எழுத நேரிட்டு விட்டது!

(மீண்டும் சந்திப்போம்.)

------ ஞாயிறு மலர், கட்டுரையாளர் கலி.பூங்குன்றன்

Friday, July 15, 2011

நான் ஆரிய அடிவருடி எனக்கு பொத்துக்கொண்டு வரும்..

பார்ப்பனர்களை எதிர்க்க வேண்டும் என்றதும் உடனே சில அம்பிகள், ஏன் நீங்க அவர்கள் பள்ளிக்கு செல்கீறீர்கள் என்று அப்படியே  வீராதி வீரர் போல கேட்கவேண்டியது.....நீங்கள் எல்லாம் இப்படி சேர்ப்பதால் தான் இன்று அவர்கள் பள்ளிகளை நடத்திகொண்டிருக்கிரார்கள் என்று வியாக்கானம் வேறு...நாம் நம் பிள்ளைகளை சேர்க்கவில்லை என்றால் நல்லது நல்லது என்று குதி ஆட்டம் போடும் பார்ப்பன கும்பல்...தான் கொண்டுவந்த குலக்கல்வி வெற்றிபெறவில்லை என்று பதவில் இருந்து வெளியில் வந்தவர் தான் ராஜாஜி.....அந்த இனத்தில் இருக்கும் பார்ப்பனர்கள் நாம் கொண்டு சேர்க்கவில்லை என்றால் வருமானம் போய்விடும் என்று பள்ளியை மூடி விடுவார்களாம்..ஹி ஹி என்னத்த சொல்ல? இன்னும் சொல்லப்போனால்...வீடு வாடகைக்கே போகமால் வருமானம் வராமல் இருந்தாலும் பரவாஇல்லை.ஆனால் என் வீட்டுக்கு குடி வருபவன் பார்ப்பானாகத்தான்  இருக்க வேண்டும் என்று ஒரு வருடம் ஆனாலும் பிராமிஸ் ஒன்லி போர்டு தொங்கவிட்டு கொண்டிருக்கும் கூட்டம் தான் இந்த பார்ப்பனக்கூட்டம்...நம்மை போல பணத்தாசை,சொத்தாசை மட்டும் கொண்டு தன் இனத்தை மறக்கும் மடையர்கள் அல்ல பார்ப்பனர்கள்....அவாளுக்கு ஒரு வேட்டி ஒரு துண்டு போதும்....ஆனால் தான் உயர்ந்தவன் என்பதில் ஒரு சிறு கோளாறு வந்தாலும் தாங்கிகொல்லாத கூட்டம்.....எனவே இப்படி கேள்வி கேட்டுக்கும் அம்பிமார்கள் முதலில் இதனை அசை போடவேண்டும்.......

அப்படி பிராமின்ஸ் ஒன்லி போடும் கூட்டம் வெட்கம் கெட்டு வேறு வழியில்லாமல் இன்று  தாங்கள் நடத்தும் பள்ளியிலேயே நம் வீட்டு பிள்ளைகளுக்கு இடம் கொடுக்கும் அளவுக்கு வந்து இருக்கிறது என்றால் யாருடைய உழைப்பு? யார் ஆட்சியில் இருப்பதால்?.... இப்படி கல்வி மறுக்கப்பட்ட நமது வீட்டு பிள்ளைகளும் CBSE பள்ளியில் படிக்க வேண்டும் என்று போராடி போராடி பெற்ற உரிமை தான் இன்று நம் பிள்ளைகள் பார்ப்பனர் நடத்தும் பள்ளியில் படிப்பது.......

இன்றும் பல பள்ளிகள் அவர்கள் கட்டுப்பாட்டில் தான்....இப்படி இருப்பது கூட ஒரு ஆரோக்கியம் அல்ல....அதுவும் கூட நம்மவர்கள் சதவிகதத்துக்கு ஏற்ப நம் மக்கள் கைக்கும் வர வேண்டும்..... பார்ப்பனர்களை வீழ்த்த வேண்டும் என்றால் அவர்களை பொருளாதார ரீதியாக குறைப்பதோ..இல்லை அவர்களை கஷ்டப்படுத்தி அதில் குசி காண்பதுவோ நமது நோக்கம் அல்ல.....அவர்களையும் சக மனிதர்களுடன் ஒன்றாக இருக்க என்ன செய்யவேண்டுமோ அதனை செய்யவேண்டும்......  நிற்க..
 சாதியே இல்லன்னு சொல்லிட்டு
---பார்ப்பான் உபநயம் பண்ணி பூணூல் போட்டுக்கொள்ளலாம்...
--- தன் வீட்டை வாடகைக்கு விடும் பொது பிராமின்ஸ் ஒன்லி போர்டு தொங்கவிடலாம் (இதுல பாருங்கோ ஒரு வீட்டுக்கு இவா சொந்தக்காரர் என்றாலே பிராமின்ஸ் ஒன்லி போட்டு அவாளுக்கு மட்டும் இதே நாட்டுக்கு சொந்தக்காரர் என்றால் நாடே பிராமின்ஸ் ஒன்லி...எப்பா...இத கண்டிக்க கூடாது.....கயவர்கள்)
---எங்கே பிராமணன்னு தேடாலம்
---வெறுக்கத்தக்கதா பார்ப்பனியம் என்று கேட்கலாம்
---அனைத்து ஜாதியினரும் அர்ச்சகன் ஆகலாம் என்றால் அந்த சட்டத்துக்கு தடை ஆணை வாங்கலாம்
---ஆகம பள்ளியில் படித்து பயிற்சி பெற்ற பிற்படுத்தப்பட்ட/ தாழ்த்தப்பட்ட அர்ச்சகன் பிள்ளையாரை தொட்டு அபிசேகம் பண்ணினால் நான் பிராமணன் ....இனி அவர்கள் அபிசேகம் பண்ணின பிள்ளையாரை தொடமாட்டேன் என்று கூவலாம்....
----இந்து மகா சமுத்திரம் என்று தேடாலம்

இப்படி அடுக்கி கிட்டே போகலாம்........தங்களால் எதிர்க்க முடியவில்லை, தட்டி கேட்க முடியவில்லை என்றாலும் சுயநலம் இல்லாமல் தட்டி கேட்கும் கருப்பு மெழுகுவர்த்திகலாகிய எங்களுக்கு எதிர்ப்பு காட்டாமல் இருந்தால் நல்லது.....இல்லை நான் ஆரிய அடிவருடி எனக்கு பொத்துக்கொண்டு வரும் என்றால் நாம் ஒன்றும் செய்ய இயலாது..........


ஆர்.எஸ்.எஸ் என்பது எப்படி இந்துமத சனாதன, வருணாசிரம தர்மத்தை நிலைநாட்டி பிறப்பில் ஏற்றத்தாழ்வு உள்ளது என்று நிலைநாட்ட ஆரம்பிக்கப்பட்டதோ...அதே போல திராவிடர் கழகம் வருணாசிரம தர்மத்தை எதிர்த்து பிறப்பில் ஏற்றத்தாழ்வு இல்லை என்பதை உண்டு பண்ணவே ஆரம்பிக்கப்பட்ட இயக்கம்......எனவே திராவிடர் கழகத்தின் நோக்கம் வருணாசிரம தர்மத்தை வளர்க்க இன்னும் தன் பூணூலை பிடித்துகொண்டு அலையும் பார்ப்பானை எதிர்ப்பதும் அதன் கொள்கை.........

எப்படி ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடம் போய் நீங்கள் இந்துமதம், பகவத் கீதை, ராமன் கோவில் என்று பேசியே கூட்டம் சேர்க்க பார்க்கீறீர்கள் என்றால் எவளவு அபத்தமோ....அவளவு அபத்தம் திராவிடர் கழகம் பார்ப்பானையும் அவர்கள் தூக்கி பிடிக்கும் பிறப்பால் ஏற்றத்தாழ்வு எனும் கொள்கையையும் எதிர்த்து குரல் கொடுப்பதை கூட்டம் சேர்க்க என்று கூச்சல் போடுவது......நினைவில் கொள்ளுங்கள்...

கடைசியா அறிவு ஆசான் தந்தை பெரியார் பார்ப்பனர்கள் பற்றி கர்ச்சித்த சில வார்த்தைகள்....

வாயில் - நாக்கில் - குற்றம் இருந்தா லொழிய வேம்பு இனிக்காது; தேன் கசக்காது; இபறவியில் மாறுதல் இருந்தாலொழிய புலி புல்லைத் தின்னாது; ஆடு இறைச்சி உண்ணாது. அதுபோன்றதே பார்ப்பனர் தன்மை. தன் சுய இன நன்மை ஒன்றே அவர்கள் குறியாக இருக்கும்.

பார்ப்பான், பணக்காரன் என்ற இரண்டில், பணக்காரன் என்பது இயற்கையான பேதம் அல்ல; செயற்கையே யாகும். அதாவது எவனும் தான் பிறக்கும் போதே பணக்காரனாகவே பிறந்து பின் சாகும்போதும் பணக்காரனாகவே சாவான் என்பதில்லை. ஆனால், பார்ப்பான் பேதம் அப்படியில்லையே. அது அவன் அம்மா வயிற்றிலிருந்து வரும் போதே நான் பார்ப்பானாக வருகின்றேன் என்கின்றான்.

பார்ப்பானுடைய தர்மம் உடல் வியர்க்கப் பாடுபடல் கூடாது. பிச்சை எடுத்துப் புசிக்க வேண்டும். பார்ப்பான் கேட்டால் எந்தப் பொருளையும் உடனே கொடுக்க வேண்டியது நம்முடைய (சூத்திரம்) தர்மம். பார்ப்பான் யாரிடம் பிச்சை கேட்டாலும் தன் பொருளையே சொத்தையே வாங்கிக் கொள்கிறான். பூமி, பணம் எல்லாம் பார்ப்பானுடையது. அதைக் கொடுக்காவிட்டால் உதைத்து வாங்கலாம் என்பது பார்ப்பான் தர்மம். ஏர் கலப்பை, வட கயிற்றைப் பார்ப்பான் கையால் தொட்டாலே பாவம். நாம்தான் உழ வேண்டும்.

பார்ப்பனரின் நடத்தையும், கொடுமையும், அக்கிரமும்தான் நம்மைப் பார்ப்பானே வெளியேறு என்று கூறும் முடிவுக்கு வரச் செய்தது. பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டு மென்றால் அவர்களைக் கொண்று ஒழிப்பது என்பது அல்ல…. சாக்கடைக் கசுமாலமு ஒழிந்தால் எப்படி கொசு ஒழியுமோ அப்படி இந்த மதம், கடவுள், கோயில், புராணம் ஒழிந்தால் பார்ப்பனர் ஒழிந்து விடுவார்கள்.

சமுதாயத் துறையில் பார்ப்பனர்கள் அனுஷ்டிக்கிற உயர்வு, அவர்கள் அனுபவிக்கிற அளவுக்கு மேற்பட்ட விகிதம் ஆகியவைகளில் தான் எனக்கு வெறுப்பு இருக்கிறது. இது பார்ப்பனர்களிடம் மாத்திரமல்ல. இந்த நிலையில் உள்ள எல்லோரிட்த்திலுமே வெறுப்புக் கொள்கிறேன்.

பார்பானை  என்ன நாங்கள் இந்நாட்டில் இருக்க வேண்டாம் என்றா கூறுகிறோம்? தாராளமாக இருக்கட்டும் ஆனால் அவர்களு மனிதர்களாக இருக்கட்டும். தேர்களாக இருக்க வேண்டாம் என்றுதானே நாங்கள் கூறுகிறோம். எங்களுக்கும் மற்ற மதத்தவர்களுக்கும் இடையூறில்லாத எந்த உரிமையையும் பார்ப்பனர்க்கும் வழங்க நாங்கள் தயாராகத்தானே இருந்து வருகிறோம்.


Sunday, July 10, 2011

அக்கிரகாரம் அ.தி.மு.க வை திராவிட இயக்கத்தில் இருந்து பிரித்து மோதவிடுகிறது. அதன் நிலை என்ன?

பார்ப்பனர்களுக்குப் பதிலடி! பிரித்தாளும் நரியே,போற்றி!      
பார்ப்பனர்களுக்கு அதிகாரப் பூர்வமற்ற சதிகாரத் தலைவர் இப்பொழுது திருவாளர் சோ ராமசாமி அய்யர்தான். அவருடைய துக்ளக் இதழும் பார்ப்பன சங்கத்தின்  அதிகார பூர்வமற்ற வார இதழாக வெளி வந்து கொண்டிருக்கிறது.
தமிழக அந்தணர் வரலாறு என்னும் நூலை எழுதிய கே.சி. இலட்சுமிநாராயணன் என்ற பார்ப்பனர், தேசத் துரோக அமைப்பு எனும் தலைப்பில் நீதிக்கட்சியையும் திராவிட இயக்கத் தையும், அதன் ஒப்புயர்வற்ற தலைவர் களையும் கொச்சைப்படுத்தி எழுதும் தொடர் ஒன்றை துக்ளக்கில் (6.7.2011) தொடங்கியுள்ளார். எடுத்த எடுப் பிலேயே பார்ப்பனர்களுக்கே உரித்தான பிரித்தாளும் நரித் தந்திரம்!

திராவிட இயக்கத்தைப் பற்றித் தாக்க ஆரம்பித்தால், அண்ணா என்ற பெயரையும்,  திராவிட என்ற சொல்லை யும் தாங்கியுள்ள அண்ணா தி.மு.வையும் சேர்த்துத் தாக்குவதாக ஆகிவிடுமே -அது கூடாதே, - தங்கள் இனத்தைச் சேர்ந்த ஜெயலலிதா அம்மையாரைக் காப்பாற்ற வேண்டுமே, தூசு ஒன்று அவர் மேனியில் விழுந்துவிடலாமா என்பதில் சர்வ ஜாக்கிரதையாக இருக் கக் கூடியவர்களாயிற்றே! அதற்காக என்ன ஜாலம் தெரியுமா?

எம்.ஜி.ஆர்.நிறுவிய அ.இ.அ.தி.மு.க. வைத் திராவிடக் கட்சிகளில் ஒன்றாகக் கருதுவது சரியல்லவாம்.

ஹிட்லர் ஒரு பாவமும் அறியாத யூதர்களைக் கொலை செய்தைப் போல் குற்றமற்ற பிராமணர்களைத் துவேஷிப் பது திராவிடக் கட்சிகளின் தலையாய தீய குணாம்சங்களில் ஒன்று. இந்தக் குணம் எம்.ஜி.ஆரிடம் சிறிதுகூடக் கிடையாது.

தனித்திராவிட நாடு கோரிக்கையைக் கைவிடுவதாக 1963 ஆம் ஆண்டில் அறிவித்த பிறகும்  இன்று வரையில் தமிழ்நாட்டில் பிரிவினை இயக்கங் களுக்கு நேரிடையாகவும், மறைமுக மாகவும் ஆதரவு அளித்து வருவது திராவிடக் கட்சிகளின் மற்றொரு குணாம்சம். இந்தக் குணாம்சம் எம்.ஜி.ஆரிடம் காணப்பட்டதில்லை.

இவர்களின் பகுத்தறிவுக்குப் பொருந்தாதவை என்று சொல்லப்படும் இஸ்லாம், கிறிஸ்துவம் போன்ற மதங்களின் பண்டிகைகளையும், சம்பிர தாயங்களையும் தயக்கம் இல்லாமல் ஏற்றுக் கொண்டு, ஹிந்து சமயத்தின் சடங்குகள், விழாக்கள் போன்றவற்றை மட்டும் இகழ்வது திராவிடக் கட்சிகளின் இன்னொரு தீய குணாம்சம். இதனையும் எம்.ஜி.ஆர். ஒருபோதும் ஏற்றுக் கொண்டவர் அல்லர்.

எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசான ஜெயலலிதாவும், இந்தத் தீய குணங் களில் ஒன்று கூட இல்லாதவர். எனவேதான் அ.இ.அ.தி.மு.க.வை ஒரு திராவிடக் கட்சியாகக் கருதுவது பிழையானது என்று இந்தத் தொடரில் முதலில் தெளிவு படுத்த விரும்புகிறேன் என்ற பீடி கையுடன் தொடரைத் தொடங்கியுள்ளார்.
இதில் அ.இ.அ.தி.மு.கவை புகழ் கிறாரா? இகழ்கிறாரா? அ.இ.அ.தி.மு.க திராவிடக் கட்சி அல்ல என்று அய்யர்வாள் எழுதுவதை அ.இ.அ.தி.மு.க தலைமை ஏற்றுக் கொள்கிறதா?

ஏற்றுக் கொள்கிறது என்றால் முதலில் அண்ணாவின் பெயரையும், உருவத்தையும், திராவிட என்ற இனச் சுட்டுப் பெயரையும் கட்சியிலிருந்தும், கொடியிலிருந்தும் தூக்கி எறிய வேண்டுமே, செய்வார்களா?
இல்லை - இல்லை. அ.இ.அ.தி.மு.க. அசல் திராவிட இயக்கம்தான்;  அண்ணா எங்கள் வழிகாட்டிதான் என்று சொல்லுவார்களேயானால், துக்ளக்கில் வெளி வந்திருக்கும் இந்தத் தொடரை எதிர்த்து முதல் குரல்  கொடுத்திருக்க வேண்டும் - அவர்களின் அதிகாரபூர்வ நமது எம்.ஜி.ஆர்.  ஏட்டில் மறுப்பும் தெரிவித்திருக்க வேண்டுமே -_ இதுவரை செய்ய வில்லையே -_ ஏன்?

அ.இ.அ.தி.மு.க.வில் கொள்கை உள்ள ஒரே ஒரு தோழர் கூட இல்லாதபடி அற்றுப் போய்விட்டனர் என்பதுதான் பரிதாபகரமான பெரும் உண்மை!

சட்டமன்றத்திலேயே தன்னை ஒரு பாப்பாத்தி என்று பிரகடனப்படுத் தியவர் எப்படி திராவிட முத்திரையைக் குத்திக் கொள்ள ஆசைப்படுவார்?
எம்.ஜி.ஆரைப் புகழ்வது போல இகழும் இடக்கரடக்கலையும்  காணத் தவறக்கூடாது. தமிழ்நாட்டில் பிரிவினை இயக்கங்களுக்கு நேரடியாகவும், மறைமுக மாகவும் ஆதரவு அளித்து வருவது  திராவிடக் கட்சிகளின் மற்றொரு குணாம்சம். இந்தக் குணாம்சமும் எம்.ஜி.ஆரிடம் காணப்பட்டதில்லை என்று பேனா பிடிக்கிறாரே - அது உண்மைதானா?
மாநில சுயாட்சிக்காக இந்தியாவின் இராணுவத்தையும் சந்திக்கத் தயார் என்று சொன்னவர் எம்.ஜி.ஆர். அல்லவா? இதில் நேரிடையாக பிரி வினை வாதம் இருக்கிறதா அல்லது மறைமுகமாகப் பிரிவினை வாதம் கமழ்கிறதா என்பதை திருவாளர் லட்சுமி நாராயண அய்யர்வாளுக்கே விட்டுவிடுவோம். தன் கருத்தை இன்னொருவர் மீது சுமத்துவது என்பது நாலாந்தரமான குணாம்சமாகும்.

பெரும்பாலானவர்கள் தீர்ப்புப்படி மக்களாட்சி அமைகிறது. ஆனாலும் வடபுலம் அளிக்கிற ஒரு தீர்ப்புக்குத் தான் தென்னாடு கட்டுப்பட வேண்டி யிருக்கும் என்று அண்ணா கூறியது உண்மை என்று இப்பொழுது நிரூபிக்கப் பட்டுவிட்டது என்று பாளையங் கோட்டையில் பேசியவரும் இதே எம்.ஜி.ஆர்.தான் (9-_6_-1977).

இதில் நேர்முகமாக பிரிவினை வாடை வீசுகிறதா என்பதை முடிவு செய்வதையும் இந்த அய்யர்வாளுக்கே விட்டுவிடுவோமாக. இதே துக்ளக் இதழை வம்பில் இழுத்துவிடும் ஒரு வேலையை விவரம் தெரியாமல் லட்சுமி நாராயணன் செய்துள்ளார்.

ஹிந்து மதத்தின் சடங்குகள், விழாக்கள் போன்றவற்றை மட்டும் இகழ்வது திராவிடக் கட்சிகளின் இன் னொரு தீய குணாம்சம். இதனையும் எம்.ஜி.ஆர். ஒரு போதும் ஏற்றுக் கொண்டவர் அல்லர் என்று நீட்டி முழங்குகிறாரே _ அதற்கும் ஒரு ஆப்பு!

சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மாண்பு மிகு எம்.ஜி.ஆர். ஒரு சூடு கொடுத்தார் பாருங்கள்.
மருத்துவத்தால் குணமாகாத நோய்களைஅய்யப்பன் கோயில் திருநீறு குணமாக்கிவிடும் என்ற நம்பிக்கையை சிலர் பரப்பி வருகின்றனர். இந்த எண்ணம் வலுப் பெறுமானால், பிறகு மருத்துவமனைகளை இழுத்து மூடிவிட்டு, டாக்டர்களை விபூதி விற்பனையாளர்களாக நியமிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

கடவுள் நம்பிக்கை அறிவியல் துறையில் தலையிட்டு பாமர மக்களைக் கெடுத்துவிடக் கூடாது. படித்தவர்களே இப்படி நடந்து கொள்கிறார்கள் . இப்படி கோவிலுக்குச் செலவழிக்கும் பணத்தை மருத்துவமனைகளுக்குக் கொடுத்துதவினால் எத்தனையோ ஏழை நோயாளிகள் குணம் அடை வார்கள்.
டாக்டர்களின் திறமைக்கு உத்தர வாதம் வேண்டும்; அவர்களின் திற மையைக் கேவலப்படுத்தும் வகையில் திருநீறு குணமாக்கிவிடும் என்று சொல்பவர்களை என்ன சொல்லுவது? என்று பேசினாரே.

இது இந்துமதக் கடவுள் அய்யப் பனைப் பற்றியும், இந்து மதத்தின் திருநீறு குறித்தும் எம்.ஜி.ஆர். கேலி செய்வதாக ஆகாதா? என்ற கேள்வியும் அய்யர்வாளுக்கே அர்ப்பணம்!

இன்றைக்குத் துக்ளக்கில் எம்.ஜி.ஆரைத் தூக்கிப் பிடித்து, திராவிட இயக்கத்திலிருந்து அவரைத் தனிமைப்படுத்தி,  இந்து மத சம்பிர தாயங்களை ஏற்றுக் கொண்டவர் என்று  ஜிகினா வேலை செய்ய, படாத பாடு படுகிறாரே; இதே துக்ளக் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தெரிவித்த கருத்து குறித்து எவ்வளவு துள்ளு துள்ளியது தெரியுமா? ஒரு முதல்வர் இப்படிப் பேசலாமா? என்று எகிறிக் குதித்ததே. ஒரு படி மேலே போய் (துக்ளக் 1_2_-1979) எம்.ஜி.ஆர். தெரிவித்த கருத்துகளுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று துக்ளக் சிறப்புக் கட்டுரையும் எழுதியதே!
மக்கள் மறந்தாலும், கருஞ்சட்டைக் காரன் மறக்க மாட்டானே!

குற்றமற்ற பிராமணர்களைத் துவேஷிப்பது திராவிடக் கட்சிகளின் தலையாய தீயகுணங்களில் ஒன்று. இந்தக் குணம் எம்.ஜி.ஆரிடம் சிறிது கூடக் கிடையாது என்றும் கதைக்கிறார்.

பிராமணன் என்று சொல்லுவதே அடுத்தவர்களைத் துவேஷிப்பதுதானே! பிர்மாவின் நெற்றியில் பிறந்தவன் பிரா மணன்,காலில் பிறந்தவன் சூத்திரன்!  சூத்திரன் என்றால் வேசி மகன் என்பது (மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415) அடுத்தவர்களை இழிவுபடுத்துவது தானே!

உலகத்தின் எந்த நாட்டிலாவது, எந்த மதத்திலாவது தங்களைத் தவிர மற்றவர்களைப் பார்த்து பிறவியிலேயே வேசி மக்கள் என்று கூறுவதுண்டா? இந்த யோக்கியதை உள்ளவர்கள் குற்றமற்ற பிராமணர்களாம். இந்த இழிவைப் பொறுக்காது எதிர்த்துக் கேட்டால் அதற்குப் பெயர் துவேஷிப்பதாம்.
தென்னாட்டுப் பார்ப்பனர்கள் தாங்களே துவேஷிகளாக இருந்து கொண்டு மற்றவர்களைப் பார்த்து துவேஷிகள் என்று சொல்லுவார்கள் என்று லாலா லஜபதிராய் சொன் னாரே, அதுதான் நினைவுக்கு வருகிறது.

சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி என்னும் தன்மான இயக்கப் புயல் மய்யம் கொண்ட பிறகுதானே சூத்திரச்சி வேலைக்கு வந்தாளா? என்று கேட்கும் ஆணவத்தின் முது கெலும்பு முறிக்கப்பட்டது.

இன்றைக்குக் கூட தாழ்த்தப்பட்ட வர்கள் உட்பட இந்து மதத்தைச் சேர்ந்த அனைத்து ஜாதியினரும் உரிய பயிற்சி பெற்று அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் செய்தால் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை பார்ப்பனர்கள் சென்று தடை வாங்குகிறார்கள் என்றால் அவர்கள் உள்ளத்தில் தேக்கி வைத்திருக்கும் அந்தத் துவேஷ நஞ்சுதானே காரணம்?

இந்த வெட்கக்கேட்டில் குற்றமற்ற பிராமணர்கள் என்ற அடைமொழி வேறு. கண்ணற்றவருக்குக் கண்ணாயி ரம் என்று பெயர் வைப்பதில்லையா -_  அதுபோல்தான் இதுவும்.

கடவுளுக்கு மேலே பிராமணர்கள் என்று மார்தட்டும் அவர்களின் லோகக் குருகூட ஒழுக்கவாதியாக இருக்க முடியவில்லையே! கொலைக்குற்றம் - அத்து மீறிய பாலியல் குரூரம் என்ற கொச்சைத் தனத்தை மூட்டை கட்டிக் கொண்டு தோளில் போட்டுக் கொண்டு அல்லவா வெட்கமில்லாமல் திரிகிறார். ஜெயேந்திரர்! இவ்வளவு நடந்துள்ள போதிலும் இன்னும் அவர் சுவாமிகள் தானாம்!

இந்த யோக்கியதை உள்ளவர்களுக் குப் பேனா பிடிப்பு ஒரு கேடா?
சென்னை பாலர் அரங்கில் ஒரு ஜாதி மறுப்புத் திருமணம் (28-_6_-1970  ஞாயிறு). நரிக்குறவர் குடும்பத்தைச் சேர்ந்த எல். ஆறுமுகம் சிங் மகளுக்கும், வீரசைவ குடும்பத்தைச் சேர்ந்த ஏ.கே. ரகுபதிக்கும் ஜாதிமறுப்புத் திருமணம் எம்.ஜி.ஆர். தலைமையில் நடைபெற்றது. பிற்படுத் தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் என்.வி.நடராசன் அவர்களும் அவ் விழாவில் கலந்து கொண்டார்.
அப்பொழுது எம்.ஜி.ஆர்.பேசினார்.

இந்த மணவிழா அய்யா முன்னி லையில், அண்ணா வாழ்த்து வழங்கி நடைபெற வேண்டியதாகும். எவ்வளவு தான் சட்டம், கண்டிப்பு வந்தாலும் உள்ளத்தில் மாறுதல் ஏற்பட்டால்தான்  அது பயன்படும். தந்தை பெரியார் அவர்கள் இந்த சமுதாய சீர்திருத்தப் பணியை துவக்கிய காலம். பலத்த எதிர்ப்பும், ஏளனமும் மிகுந்த காலம். இன்று அவர்கள் வாழ் நாளிலேயே அவரது கொள்கைளின் வெற்றிகளைக் காணும் பெருமித நிலையில் உள்ளார் கள். சமூகத்தில் ஒரு சிலர் ஆதிக்கம் பெறத்தான் ஜாதி புகுத்தப்பட்டது.

 ஆதிக்கக்காரர்கள் எதிர்ப்பை சமா ளித்து இன்று அய்யா வெற்றி பெற்று இருக்கிறார். உள்ளத்தில் மாறுதல் ஏற் படுத்துவது என்பது பெருஞ்சாதனை யாகும். உயர்ஜாதிக்காரர்கள் என்றால் அவர்கள் ஒழுக்கவாதிகள் என்பதல்ல பொருள். வாழ்க்கையை அவர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதே முக்கியம்.
இந்த மணமக்கள் சமுதாய மாறுதலுக்குத் தக்க அடை யாளமாகத் திகழ்கிறார்கள். அய்யா அவர்களது தியாகத்திற்குத் தலை வணங்குவதுதான், மரியாதை செலுத்து வதுதான் இத்தகைய விழாவில் நம் கடமையாகும் என்று பேசியவர் எம்.ஜி.ஆர். இதில் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை, கோட் பாடுகளை எந்த அளவு உள்ளத்தில் தாங்கி இருந்தார் என்பது விளங்க வில்லையா?

உயர்ஜாதி ஆதிக்கம்பற்றியும், ஒழுக்கத்திற்கும் உயர் ஜாதிக்கும் சம்பந் தம் இல்லை என்றும் சொல்கிறாரே - அந்த உயர்ஜாதி என்று யாரைக் குறிப்பிடுகிறார். உயர்ஜாதி ஆதிக்கம் என்று அழுத்திச் சொல்லுகிறாரே - இதற்கு என்ன பொருள் என்று முடிவு கட்டுவதையும் திருவாளர் லட்சுமி நாராயண் அய்யர் வாளுக்கே சமர்ப் பணம்!

எம்.ஜி.ஆர். அவர்களை, திராவிட இயக்கத்திலிருந்து பிரித்து, நம்மோடு மோதவிடப் பார்க்கிறது அக்கிரகாரம். அதன் நிலை என்ன? அவர்கள் மனித உருவில் திரியும் நரிகள் என்று இப் பொழுது அம்பலப்பட்டதுதான் மிச்சம்.

http://viduthalai.in/new/page7/13415.html

-------(தொடரும்), கட்டுரையாளர் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கலி.பூங்குன்றன்

Sunday, July 03, 2011

நடிகர் ரஜினிக்கும் பொறுப்புண்டு...செய்திகள் மீதான விவாதங்கள்...

(உடல்நலம் பாதிக்கப்பட்டதைக் கூட பக்தியைப் பரப்புவதற்குப் பயன்படுத்தும் போக்கு. தமிழ்த் தேசியம் என்ற பெயரால் பார்ப்பன எதிர்ப்பு உணர்வின் அடித்தளத்தைத் தாக்கும் முயற்சிகள் இவற்றின் மீதான விமர்சனமே இக்கட்டுரை)
நடிகர் ரஜினிக்கும் பொறுப்புண்டு

நடிகர் ரஜினி நடிக்கிறார். பணம் சம்பாதிக்கிறார். இருக்கட்டும்; அதே நேரத்தில் மக்கள் மத்தியில் மூடநம் பிக்கையை விதைப்பது சமூகத்துக்குச் செய்யும் துரோகமும், பாதகமும் ஆகும். மூடநம்பிக்கை மனிதனின் தன்னம்பிக்கையைத் தகர்க்கிறது; - முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறது. மனித சமூகத்துக்கு மிகப் பெரிய கேடானதும் அறிவை முடக்கும், நாசமாக்கும் தீயக்குணமு மாகும் இது. திரைப்படம் மூலம் நடிகர் ரஜினி இதனைச் செய்து கொண்டிருக்கிறார்.

கயிறு கட்டுவது முதல் கழுத்தில் மாலை போடுவது வரையிலான மடத்தனங்கள் இளைஞர்களை மூழ்கடிக்கிறது.

கடவுளை அவர் நம்புவது உண்மையானது என்றால், ஏன் மருத்துவமனைகளை நாடு விட்டு நாடு தேடித் திரிய வேண்டும்?

நேராக தாம் நம்பும் பாபாக்களிடம் சரணடைய வேண்டியது தானே? இரண்டாயிரம் ஆண்டு களுக்கு மேல் உயிர் வாழும் மகா சித்தி பெற்ற மகான்கள்தான் அவ ருக்குப் பரிச்சியம் ஆயிற்றே?

ஏன் அதைச் செய்யவில்லை? ஊருக்குத்தான் உபதேசமா? மக்களை மடையர்களாக்கிவிட்டு, தாம் மட்டும் சொந்த விஷயத்தில் கடவுளை மறந்து மனிதனைத் தேடு கிறாரே - ஏன்?

உடல் குணமடைந்து நீண்ட காலம் அவர் வாழ வேண்டும் என் பதே மனித நேயர்களான எங்களின் அவா. அதில் ஒன்றும் நமக்கு மாறு பாடு கிடையாது. சங்கராச்சாரியார் போல நாத்திகனுக்கு வைத்தியம் பார்க்காதே (தெய்வத்தின் குரல் 3ஆம் பகுதி பக்கம் 734) என்று சொல்லக் கூடியவர்களல்லர் பகுத்தறிவு வாதிகள்.

ரஜினியின் உடல் நலப் பாதிப் பைப் பயன்படுத்தி பிரார்த்தனை என்றும், நேர்த்திக் கடன் என்றும் தொற்று நோயைப் பரப்புவது ஏன்?

விஞ்ஞானம் கண்டுபிடித்த விலை உயர்ந்த மருந்துகளை ஒரு பக்கம் சாப்பிட்டுக் கொண்டு - இன்னொரு பக்கம் பிரார்த்தனைகளை ஊக்கு விப்பது ஏன்? இது இரட்டை வேடம் அல்லவா?

சிங்கப்பூரில் இருந்து ரசிகர் களுக்குத் தெரிவிப்பதில் கூட இந்த விஞ்ஞான உலகத்தில் கூட எந்த விளையாட்டை விளையாடினாலும் காசை மேலே தூக்கிப் போட்டு யார் முதலில் ஆடுவது என முடிவு செய்றாங்க. காசை மேலே தூக்கிப் போடுவது மட்டும்தான் மனிதனின் வேலை. பூவா . . . தலையா என்று தீர்மானிப்பது ஆண்டவன் வேலை! என்று கூறியுள்ளார்.
(ஆனந்த விகடன் 29-6-2011 பக்கம் 6)
கடவுளுக்கு இதுதான் வேலையா? முதலில் தலை விழுந்ததாக வைத்துக் கொள்வோம். திருப்பி ஒரு தடவை போட்டால் அதே தலை மீண்டும் விழுமாறு ஆண்டவன் செய்வாரா? கடவுள்தான் ஒவ்வொன்றையும் முடிவு செய்கிறார் என்றால் ரஜினிக்கு நோய் வந்ததற்கும் கூட கடவுள்தான் மூலம் என்று ஆகாதா?

இதே ரஜினிகாந்த் முன்பு என்ன சொன்னார்?

எல்லாம் தெய்வச்செயல். கடவுள் எல்லாம் பார்த்திருப்பாருன்னு விட்டி ருந்தா நான் இன்னும் கண்டக்டராகவே இருந்திருப்பேன். அந்தச் சூழ்நிலையில் உத்தியோகத்தை விட்டு விட்டு, தைரிய மாகச் சென்னைக்கு வந்து, ஒரு வாசல்ல காத்திருந்தது என் முயற்சி தான்.
(ராணி வார இதழ் 20-7-2008)
சபாஷ்! இதுதான் புத்திசாலித் தனம். தன் முயற்சி, விடாமுயற்சிதான் ரஜினியின் வெற்றிக்குக் காரணமே! தெய்வச் செயல் என்று நம்பாது, தன் வாழ்க்கையை மட்டும் பத்திரப் படுத்திக் கொள்ளும் ரஜினி அடுத்த வர்களுக்கு மட்டும் ஆண்டவனைக் கைகாட்டுவது அறிவு நாணயமா?

தான் மீண்டு வந்ததற்கு மிக முக்கியக் காரணமாக ரஜினி கரு துவது டாக்டர்களைத்தான். தனக்குச் சிகிச்சை அளித்த டாக்டர்களை வீட்டுக்கு அழைத்து விருந்து வைக்கத் திட்டமிட்டிருக்கிறார் என்றும் அதே இதழில் ஆனந்தவிகடன் குறிப் பிட்டுள்ளது.

இதன் பொருள் என்ன? இவர் உயிர் பிழைத்ததற்குக் காரணம் டாக்டர்களே தவிர கடவுள் அல்ல என்பதுதானே இதன் பொருள்?

உங்களுக்கு ஒரு நீதி, -நியதி! மற்றவர்களுக்கு வேறு மாதிரியா? - மற்றவர்களை வஞ்சிக்க வேண்டாம், அவர்களையும் வாழவிடுங்கள் வைதீகர்களே என்பதுதான் நமது மனிதாபிமான வேண்டுகோள்.

இந்திய அரசமைப்புச் சட்டம் கூட விஞ்ஞான மனப்பான்மையை, சீர்திருத்த உணர்வை வளர்க்க வேண்டும். அது ஒவ்வொரு குடி மகனின் அடிப்படைக் கடமை என்று தானே சொல்கிறது. (நான் காம் கி1 பாகம் - அடிப்படைக் கடமைகள் 51 A-(h)

விஞ்ஞானக் கருவியான திரைப் படத்தைப் பயன்படுத்தி மக்கள் மத்தியில் அஞ்ஞான இருளைத் திணிப்பது நியாயம் ஆகுமா?

மக்களை மக்கள் எந்தக் காரியத் திற்கு வேண்டுமானாலும் மன்னிக்க லாம். ஆனால் அறிவைக் கெடுக்கும் காரியம் எவ்வளவு சிறிய தானாலும், அது மன்னிக்க முடியாததேயாகும். தமிழர்களையும் நான் வேண்டிக் கொள்வது என்ன வென்றால், எந்தக் காரியத்திற்கு இணங்கினாலும், அறிவைக் கெடுக்கும் காரியத்திற்கு மாத்திரம் கண்டிப்பாக ஒத்துழைக்கக் கூடாதென்றே வேண்டிக் கொள் கிறேன். (விடுதலை 4-4-1968) என்று ஒரு வேண்டுகோளை முன் வைக் கிறார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.

95 ஆண்டு வரை உடல் உபாதை களுக்கிடையே மக்களின் மாண் பினை உயர்த்த அயராது பாடுபட்டு, பகுத்தறிவு வெளிச்சத்தை மக் களுக்குத் தந்து, அவர்களின் முன்னேற்றத் திசைக்கு அடி எடுத்துக் கொடுத்துச் சென்றுள்ளார்.
மக்களின் பாமரத் தன்மையைப் பயன்படுத்தி அவர்களை மீண்டும் பாழ்பட்ட மூடநம்பிக்கை இருள் பள்ளத்தில் தள்ளி மூடிட வேண் டாம்.

காசு சம்பாதிப்பது மட்டும் ஒரு கலைஞனின் குறிக்கோளாக இருக்கக் கூடாது. சமுதாயப் பொறுப்பும் தேவை! கலையின் மூலம் மனிதனை கடைத் தேற்றும் முற்போக்குக் கருத்தும் இருக்க வேண்டும் அல் லவா? மக்களை முட்டாள் ஆக்குவது எளிது - அறிவாளியாக்குவதுதான் கடினம்! குயவனுக்குப் பல நாள் வேலை - தடியனுக்கோ ஒரு நொடி வேலை!

சமச்சீர் முறை கல்வி நீக்கம் சரியாகுமா?
பெரியாரைப் பற்றிப் பேசி கை தட்டு வாங்கி, பார்ப்பனர் - தமிழர் பற்றிப் பேசி விளம்பரம் பெற்று, அதன்பின் அவற்றை அடகு வைத்து பார்ப்பன ஊடகங்களால் ஆழ்வார் பட்டம் பெறுவது என்பதெல்லாம் தமிழ்நாட்டில் அதிசயம் இல்லை.
தமிழ்நாட்டு முதல் அமைச்சரைப் பாராட்டுவது, போற்றுவது அத்தகையவர்களுக்கு அவசியமாகவும், ஆதாயமாகவும் இருக்கலாம். அதில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது.
சமச்சீர் கல்வியைப் பற்றி கேள்வி கேட் டால் என்ன பதில் தெரியுமா?
சமச்சீர் கல்வி முறையை தமிழக அரசு ஏற்றுக் கொள்கிறது. அதில் கருத்து மாறுபாடு இல்லை. ஆனால் தரமான பாடத்திட்டம் இல்லாமல் எப்படி நடைமுறைப்படுத்துவது? எனவே இந்த வகையில் தமிழக அரசைக் குறை சொல்ல முடியாது- என்பதுதான் இயக்குநர் ஒருவரின் பதில்.
சீமான் வீட்டுப் பிள்ளையும், அன்னக்காவடி வீட்டுப் பிள்ளையும் ஒரே பாடத்தைப் படிப்பதா என்று பூணூலைக் கொடியாக்கித் தூக்கிப் பிடிப்போரின் பாதார விந்தங்களை நோக்கி அனுமார்கள் சரணடையும் படலம் இது.
நாரதனுக்கும், கிருஷ்ணனுக்கும் பிறந்த 60 பிள்ளைகள்தான் தமிழ் ஆண்டுகள் என்று புராணம் எழுதி வைத்த பார்ப்பனர்தம் குப்பையைத் தூக்கி எறிந்து, பார்ப்பனர்களின் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடித்து, தை முதல்நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதை வாழ்த்தி வரவேற்கும் பாடம் சமச்சீர் கல்வியில் இடம் பெறுவது அழிக்கப்பட்டு விட்டதே!

இதற்கு என்ன பதிலாம்?
ஒரு வரியில் இதெல்லாம் தரமான கல்விப் பாடத் திட்டம் அல்ல என்று இந்தத் தரமான மனிதர்கள் கருதி விட்டார்களோ!
மிகப் பெரிய விலை கொடுத்து, பார்ப்பனீய கோர நச்சுப் புழுதியிலிருந்து, பிடியிலிருந்து பார்ப்பனர் அல்லாத மக்களின் வாழ்வும், தன்மானமும் எடுத்துக் கட்டப்பட்டுள்ளன _- மீட்கப்பட்டுள்ளன!
புரிந்தோ, புரியாமலோ, தெரிந்தோ, தெரியாமலோ பார்ப்பன வலையில் சிக்கி முக்கால் நூற்றாண்டுக்கு மேற்பட்ட திராவிடர் இயக்கத்தின் பேருழைப்பை - தியாகங்களைக் கொச்சைப்படுத்தி, எதிரிகளிடம் விலை போக வேண்டாம் என்று எச்சரிப்பது நமது கடமை! தமிழ்த் தேசியம் என்ற பதாகையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு, பார்ப்பன எதிர்ப்பைப் புறந்தள்ளி, சமூக நீதியை கிடப்பில் போட்டு, ஜாதி ஒழிப்பை நெட்டித் தள்ளி, மூட நம்பிக்கை ஒழிப்பை ஓரங்கட்டி, பார்ப்பனிய ஆதிக்கப் பல்லக்கைத் தூக்கிச் சுமக்க தோள்களைத் தயார் செய்து கொண்டிருப்பவர்கள்தாம் இக்கால கட்டத்தில் ஆபத்தானவர்கள் - மிகமிக ஆபத்தானவர்கள்.

தமிழர்களே, எச்சரிக்கை! எச்சரிக்கை!!
நான் அரசியலில் பல மாறுதலில் ஈடுபட்டிருக்கலாம் என்றாலும் சமுதாயத் துறையில் பார்ப்பனிய வெறுப்புள்ளவன் நான். அதுதான் என்னைப் பகுத்தறிவுவாதியாக (நாத்திகனாக) ஆக்கியது.
- தந்தை பெரியார் (விடுதலை 5.3.1969)

 
மண்சோறு என்னாச்சு?
கேள்வி: முதல்வர் அம்மா இருக்கும் இடம்தான் எனக்குக் கோவில். எனவே அவர் ஆட்சி செய்யும் கோட்டையும் சரி, அ.தி.மு.க. தலைமைச் செயலகமானாலும் சரி, போயஸ் கார்டனாக இருந்தாலும் சரி, அங்கெல்லாம் நான் செருப்பு அணியமாட்டேன் என்று சபதம் எடுத்துக் கொண்ட செருப்பு அணியாமல் பவனி வரும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.வி. உதயகுமார் பற்றி?

பதில்: நல்ல வேளையாக முதல்வர் தலையிட்டு இந்தக் கோமாளித்தனத்தை நிறுத்தி இருக்கிறார். இம்மாதிரி செய்யக்கூடாது என்றும், தான் இருக்கும் இடத்தில் அவர் காலணி அணிந்து கொண்டுதான் வரவேண்டும் என்றும், அவரிடம் முதல்வர் கண்டிப்பாகக் கூறிவிட்டதாகச் செய்திகள் கூறுகின்றன. அதுவரை நல்லது.
(துக்ளக் - 15-6-2011)
சரிதான். அதோடு, அ.தி.மு.க. பக்தர்கள் அம்மாவுக்காக மண்சோறு தின்கிறார்களே. அது பற்றி ஒன்றும் அம்மா சொல்லமாட்டாரா? துக்ளக் அய்யர்வாளும் அதனைக் கண்டு கொள்ளத்தான் மாட்டாரா?

- மின்சாரம்,ஞாயிறு மலர் (02-07-2011)


Friday, July 01, 2011

சில சோம்பேறிகள் பிழைப்பதற்கு ஆக மக்கள் புத்தி எவ்வளவு கெடுறது?

பிரார்த்தனை என்பது இன்று உலகில் மக்கள் சமூகம் எல்லோரிடத்திலும், அதாவது கடவுளால் மக்கள் நடத்தப்படுகிறார்கள் என்று இருந்தும் எல்லோரிடத்திலும் இருந்து வருகிறது. இது எல்லா நாட்டிலும், எல்லா மதக்காரர்களிடத்திலும் இருந்து வருகிறது.

பிரார்த்தனை என்பதற்கு ஜபம், தபம், வணக்கம், பூசனை, தொழுகை முதலிய காரியங்களும், பெயர்களும் சொல்லுவதுண்டு.

 இவையெல்லாம் கடவுளை வணங்கி தங்களுக்கு நன்மை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுவதேயாகும்.

தனக்கு வேண்டியவற்றை எல்லாம், அதாவது இம்மையில் இவ்வுலகில் புத்தி யுத்தி, செல்வம்,  இன்பம், ஆயுள், புகழ் முதலியவையும், மறுமையில் மேல் உலகத்தில் பாவ மன்னிப்பு, மோட்சம், நல்ல ஜென்மம் முதலியவையும் கிடைக்க வேண்டும் என்கின்ற ஆசையே பிரார்த்தனையின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது.

இந்தப் பிரார்த்தனையின் அஸ்திவாரம் உலகத்தைப் படைத்துக் காத்து வரும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதும், அவர் சர்வ வல்லமையும், சர்வ வியாபகமும், சர்வமும் அறியும் ஞானமும் உடையவர் என்பதும், அப்படிப்பட்ட கடவுளை வணங்குவதால் ஒருவனுக்கு வேண்டிய சகல காரியத்திலும் சித்தி பெறலாம் என்பதுமானவைதான் பிரார்த்தனைக் காரர்களின் கருத்தாயிருக்கிறது. இப்படிப்பட்ட பிரார்த்தனைக்கு அக்கடவுளை வணங்குவது, தோத்திரம் செய்வது, புகழ்வது, பஜனை செய்வது முதலிய காரியங்கள் ஒருபுறமிருக்க, பொருள்களைக் கொண்டும் கடவுளைத் திருப்தி செய்து அவற்றால் பயன் பெறலாம் என்பதும் இந்தப் பிரார்த்தனையில் சேர்ந்ததாகும்.

அதாவது கடவுளுக்கு இன்னது செய்வதாக நேர்ந்து கொள்ளுவது, ஜீவபலி கொடுப்பது, கோயில் கட்டுவது, உற்சவம் செய்வது முதலிய காரியங்கள் செய்யப்படுவனவாகும். ஆகவே, இப்படிப்பட்ட பிரார்த்தனை என்பதற்கு வேறு வார்த்தையில் ஒரு மாற்றுப் பெயர் சொல்ல வேண்டுமானால், பேராசை என்றுதான் சொல்ல வேண்டும். பேராசை என்றால் தகுதிக்கு மேல் விரும்புவது; வேலை செய்யாமல் கூலி பெறுவது.

படித்து பாஸ் செய்ய வேண்டியவன் பிரார்த்தனையில் பாஸ் செய்வது என்றால், பணம் வேண்டியவன் பிரார்த்தனையில், பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால், மோட்சத்துக்குப் போக வேண்டும் என்றால், இவற்றுக்கெல்லாம் பேராசை என்று சொல்லுவதோடு வேலை செய்யாமல் கூலி கேட்கும் பெரும் சோம்பேறித் தனமும், மோசடியும் என்று சொல்லுவதும்தான் மிகப் பொருத்தமாகும்.

பேராசையும், சோம்பேறித்தனமும் ஏமாற்றும் தன்மையும் இல்லாவிட்டால், பிரார்த்தனைக்கு இடமே இல்லை.

சற்று முன் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஆக பிரார்த்தனை செய்வதும், பிரார்த்தனையில் அவற்றை அடையப் பார்ப்பதும் முன் குறிப்பிட்ட சர்வ வல்லமை, சர்வ வியாபகம் உள்ள கடவுளை சுத்த முட்டாள் என்று கருதி, கடவுளை ஏமாற்றச் செய்யும் சூழ்ச்சி என்று கூட சொல்லி ஆக வேண்டியிருக்கிறது.

எந்த மனிதனும் தகுதியானால் எதையும் அடையலாம். அதற்கு வேண்டிய காரியங்கள் செய்து, தகுதியாக்கிக் கொண்டு பலனடைய எதிர்பாராமல் காரியத்தைச் செய்யாது, பிரார்த்தனையில் பலன் அனுபவிக்க வேண்டும் என்று கருதினால், கடவுள், வேலை செய்யாமல் கூலி கொடுக்கும் ஒரு அறிவற்றவர் என்றும், தன்னைப் புகழ்வதாலேயே வேண்டியதைக் கொடுக்கும், ஒரு தற்புகழ்ச்சிக்காரர் என்றும் தானே சொல்ல வேண்டும்.

தவிர, இந்தப் பிரார்த்தனையின் தத்துவமானது மனிதனைச் சோம்பேறியாக்குவதோடு சகலவித அயோக்கியத்தனமான காரியங்களுக்கும் லைசன்சு, அனுமதிச் சீட்டுக் கொடுப்பது போலாகிறது. விதை நட்டு, தண்ணீர் பாய்ச்சாமல், அறுப்பு அறுக்க கத்தி எடுத்துக் கொண்டு போகிறவனுக்கும், யோக்கியமான காரியங்களைச் செய்யாமல் கடவுள் கருணையை எதிர்பார்ப்பவனுக்கும் என்ன வித்தியாசம் என்பது விளங்கவில்லை.

கடவுள் சகலத்தையும் உணர்ந்து அதற்குத் தகுந்தபடி கர்மபலன் கொடுக்கக் கூடிய சர்வசத்துவம் உள்ளவர் என்று ஒருவன் கருதியிருப்பானேயானால் அவன் கடவுளைப் பிரார்த்தனை செய்யும் வேலையில் ஈடுபடவோ, அதற்காக நேரத்தைச் செலவு செய்யவோ ஒரு பொழுதும் துணிய மாட்டான்.

ஏனென்றால், சகல காரியமும் கடவுளால்தான் ஆகும் என்று நினைத்துக் கொண்டு கடவுள் யாருடைய முயற்சியும், கோரிக்கையும் இல்லாமல் அவனவன் செய்கைக்கும், எண்ணத்துக்கும், தகுதிக்கும் தகுந்தபடி பலன் கொடுப்பதற்குத் தகுந்த ஏற்பாடும் செய்து விட்டார் என்றும் (அதாவது விதியின்படிதான் முடியும் என்றும் தெரிந்து இருந்த ஒருவன் அந்தத் தெளிவில் நம்பிக்கை இருந்தால்) பிரார்த்தனை செய்வானா என்று யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம்.

சாதாரணமாக மக்களில் 100-க்கு 90 பேர்களிடம் பிரார்த்தனை வெகு கேவலமான - அறிவற்ற வியாபாரத்தனமான முறையில் இருந்து வருகிறது. அதாவது, எனக்கு இன்ன பலன் ஏற்பட்டால் உனக்கு இன்ன காரியம் செய்கிறேன்; அல்லது உனக்கு நான் இன்ன காரியம் செய்கிறேன். அதற்குப் பதிலாக நீ இன்ன காரியம் எனக்குச் செய் என்கின்ற முறையிலே பிரார்த்தனை இருந்து வருகிறது.

இப்படியேதான், இதையேதான் பிரார்த்தனையைத் தூண்டும் ஆதாரங்களும், சாஸ்திரங்களும், கரும காண்டமும் கூறுகின்றன.

இதைப் பார்த்தால், இவர்கள் எல்லோரும் அதாவது இந்தப் பிரார்த்தனைக்காரர்கள் எல்லோரும் கடவுள் புத்திசாலி என்றோ, சர்வசக்தி உள்ளவன் என்றோ, பெரிய மனிதத் தன்மை உடையவன் என்றோ கருதவில்லை என்றுதான் சொல்லி ஆக வேண்டும்.

சிலர் சொல்லுகிறார்கள், மனிதன் பாவி, அவன் பாவ கர்மத்தைச் செய்துதான் தீருவான்; ஆதலால் மன்னிப்புக் கேட்டுத்தான் தீர வேண்டும் என்கிறார்கள்.
நான் பாவம் செய்துதான் தீருவேன்; நீ மன்னித்துத்தான் ஆகவேண்டுமென்று பிரார்த்திப்பதைக் கடவுள் ஏற்றுக் கொள்ளுவதானால் மனிதன் எந்தப் பாவத்தைச் செய்வதற்கும் ஏன் பயப்பட வேண்டும் என்பது நமக்குப் புலப்படவில்லை. பாவத்துக்கு எல்லாம் மன்னிப்பு இருக்குமானால் புண்ணியம் என்பதற்கு அர்த்தம்தான் என்ன?

ஆகவே, கடவுள் கற்பனையைவிட இந்தப் பிரார்த்தனைக் கற்பனையானது மிக மிக மோசமானது என்றுதான் சொல்ல வேண்டும்.

பிரார்த்தனைக் கற்பனை இல்லாவிட்டால் கடவுள் கற்பனை ஒரு பிரயோஜனத்தையும் கொடுக்காமல் போய்விடும்.

மனிதன் பூஜையும், பிரார்த்தனையும் செய்து லாபம் அடைவதற்குத்த    ன் கடவுள் ஏற்படுத்தப்பட்டதே ஒழிய, கடவுளுக்கு ஆக பூஜையும், பிரார்த்தனையும் ஏற்படுத்தப் படவில்லை.

குரு - (பாதிரி), புரோகிதன் (பார்ப்பான்) ஆகியோர் பிழைப்புக்கு ஆகவே பிரார்த்தனையும், கடவுள் மன்னிப்பும் ஏற்படுத்தப்பட வேண்டியதாய்விட்டது. இந்த இரண்டு காரியமும் இல்லாவிட்டால் பார்ப்பானுக்கோ, பாதிரிக்கோ, முல்லாவுக்கோ ஏதாவது வேலை உண்டா என்பதை யோசித்துப் பாருங்கள். ஆஸ்திகர்கள் கொள்கைப்படி மனிதனுடைய செய்கையும், எண்ணமும், சித்திரபுத்திரனுக்கோ, கடவுளுக்கோ தெரியாமல் இருக்கவே முடியாது. இதற்கு ஆக பலன் கொடுக்க தீர்ப்பு நாளும், எமதர்மராஜாவும் இருந்தே இருக்கிறான்.

மத்தியில் பிரார்த்தனை பூசனை என்பது, மேல்கண்ட இரண்டையும் ஏமாற்றவா? அல்லது குருவும், புரோகிதனும் பிழைக்கவா? என்பது யோசித்தால் விளங்காமற் போகாது.

பிரார்த்தனையில் செலவாகும் நேரத்தைப் போல, மனிதன் வீணாய் கழிக்கும் நேரம் வேறு இல்லை என்றே சொல்லுவோம்.

சில சோம்பேறிகள் பிழைப்பதற்கு ஆக மக்கள் புத்தி எவ்வளவு கெடுறது? மக்களுக்கு அயோக்கியத்தனம் செய்ய எவ்வளவு தைரியம் ஏற்பட்டுவிடுகிறது? பொருள்கள் எவ்வளவு நாசமாகிறது?
என்பவற்றையெல்லாம் யோசித்துப் பார்த்தால் பிரார்த்தனை என்பது ஒரு புரட்டான காரியம் என்றோ, பயனற்ற காரியம் என்றோ, அறிவீனமான காரியம் என்றோ விளங்காமற் போகாது.

[பூசைப் புரட்டு குறித்து பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை (விடுதலை 20.11.1953.)]
 
தொகுப்பு: உண்மை மாதம் இருமுறை இதழ், ஜூலை 2011


Tamil 10 top sites [www.tamil10 .com ]