வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, May 14, 2011

தி(இ)ன மலரின் திரிநூல்தனம்

தினமலரான இனமலருக்குச் சதா திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களைப் பற்றித்தான் கவலை! 

அதுவும் சரிதானே, - பார்ப்பனர் களுக்குத் தங்களின் எதிரி யார் என்று சரியாகத் தெரிந்திருக்கிறது. பாழாய்ப் போன இந்தத் தமிழர்களுக்குத்தான் விவரம் போதவில்லை.
(1) ஏப்ரல் 25 ஆம் தேதி தினமலரில் தனபாலுக்கு இதோ ஒரு டவுட்.

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படவில்லையெனில், இனி காங்கிரஸ் கட்சி தமிழ் மண்ணை அறவே மறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டே தீரும்.

டவுட் தனபாலு: சட்டசபைத் தேர்தலில் 63 தொகுதிகளை அள்ளிக் கொடுத்து, காங்கிரஸ் பேரியக்கத்தை தமிழகத்தில் வளர்த்தே தீரணும்னு உங்க சகோதரர் கட்சி முடிவெடுத்து . . . அப்படி இருக்கும் போது, நீங்க சொல்றது எப்படி நிறைவேறும்னு புரியலையே
(தினமலர் 25--.4-.2011)

இதில் திராவிடர் கழகத்தின் நிலை என்ன என்பதை தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிக்கை வாயிலாகத் தெரிவித்திருக்கிறாரே (15.-3.-2011). நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு காங்கிரசுக்கு 63 இடங்களைக் கொடுக்கத் தேவையில்லை என்று அதில் கூறப் பட்டுள்ளதே.

உண்மை இவ்வாறு இருக்க ஒரு மாதம் 9 நாள்கள் கழித்து இப்படி தினமலர் எழுதுகிறதே - என்ன ஞான பிரகாசம்!

இனமலர் தனபாலுக்கு இன்னொரு டவுட்

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி:
வன்னிப் பகுதியில் இலங்கை அரசு அப்பாவி மக்களான ஈழத் தமிழர்களை ஆயுதங்கள் மூலம் கொன்றிருக்கிறது. சொந்த நாட்டு மக்கள் மீதே அந்த மண்ணுக்குரிய தமிழர்கள் மீது வன்முறைத் தாக்குதல் நடத்தியது.

டவுட் தனபாலு: அப்படியா?

ஈழத் தமிழர்கள் மீது இலங்கை அரசு கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தாது என்று உத்தரவாதம் கொடுத்திருக்கிறதா உங்க சேய்க் கழகத் தலைவர்தான் சொன் னாரு. அதன் அடிப்படையில்தானே அவர் உண்ணாவிரதத்தையே முடிச்சாரு. அப்படி அவர் சொன்னது உண்மை யில்லையா? (தினமலர் 8-.5.-2011)

உத்தரவாதம் கொடுத்தது உண்மை தான். அதன்படி நடந்து கொள்ளவில்லை என்பதும் அதைவிட உண்மைதான். அதனைத்தான் திராவிடர் கழகத் தலைவர் இடித்துக் காட்டிச் சொல்லி யிருக்கிறார்.

இப்படி உத்தரவாதம் கொடுத்ததற்கு மாறாக நடந்து கொண்ட ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக்கு என்று திராவிடர் கழகம் மற்றும் பல்வேறு கட்சிகளும் குரல் கொடுக்கின்றன.

அது சரி ராஜபக்சேவைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற வேண்டுமா- வேண் டாமா? இதில் தினமலரின் நிலை என்ன? அதனை வெளிப்படுத்த முடியுமா?

(3) திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: இலங்கையில் இப்படி ஒரு இனப்படுகொலை நடந்ததற்காக இந்தியா தான் முதன் முதலில் ராஜபக்சேவை கண்டித்திருக்க வேண்டும். ஆனால் இந்தியா அதனைச் செய்யவில்லை. இந்திய அரசின் போக்கை வரலாற்றிலே என்ன என்று நினைப்பர்?

டவுட் தனபாலு: தமிழகத்தில் இருந்த ஆட்சியாளர்களும், தலைவர்களும் மத்திய அரசை வலுவா வற்புறுத்துல. அதனால், மத்திய அரசு ஒண்ணும் செய்யலை _ ன்னு நினைப்பாங்க. வேற எப்படி நிணக்கச் சொல்றீங்க.

(தினமலர் 7-.5.-2011)

திராவிடர் கழகமோ, தி.மு.க.வோ மத்திய அரசை வற்புறுத்தலையாம் . . . தினமலர் பத்திரிகை தமிழ்நாட்டில் இருந்துதான் வெளியாகிறதா?

எத்தனைப் போராட்டங்களை திராவிடர் கழகம் நடத்தியிருக்கிறது. எத்தனை பேரணிகளை, மாநாடுகளை நடத்தி, தீர்மானங்கள் வாயிலாக திராவிடர் கழகம் மத்திய அரசை வலியுறுத்தியிருக்கிறது.

மதுரை, கரூர், பட்டுக்கோட்டை, திருவரங்கம், திருப்பத்தூர் என்று எத்தனை இடங்களில் மாநாடு கூட்டி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளோம்.

திராவிடர் கழகத்தின் இந்த நடவடிக்கையைப் பற்றி ஒரே ஒரு வரி செய்தி வெளியிட மனம் வராத பார்ப்பன ஏடு, மத்திய அரசுக்கு வக்காலத்து வாங்கி எழுதுகிறது என்றால், இதற்குப் பெயர்தான் பூணூல் புத்தி என்பது!

முதல் அமைச்சர் கலைஞரே உண்ணாவிரதம் இருந்து மத்திய அரசை வற்புறுத்தவில்லையா?

திருமாவளவன், பேரா. சுப.வீரபாண் டியன் போன்றவர்கள் வீராவேசமாகக் குரல் கொடுக்கவில்லையா? சகோதரர் வைகோ குரல் கொடுக்கவில்லையா?

இதற்கு மேல் மத்திய அரசை எப்படி வற்புறுத்த வேண்டும் என்று இனமலர் எதிர்பார்க்கிறது? அதனைச் சொல் லட்டுமே!

பேச நா இரண்டுடையாய் போற்றி என்று ஆரியர் பற்றி அறிஞர் அண்ணா அவர்கள் ஆரிய மாயை நூலில் அழகுற படம் பிடித்துக் காட்டினாரே. அதனை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

------- மின்சாரம், விடுதலை ஞாயிறு மலர் (14-05-2011)


1 comment:

Unknown said...

தமிழ் திரட்டிகளில் முதன்மை திரட்டியான-- தமிழ் திரட்டியில் -- தங்கள் பதிவை இணைத்து
அதிக வாசகர்களை பெற உங்களை அழைத்து மகிழ்கிறோம் தங்கள் பதிவை இணைக்க முகவரி

http://tamilthirati.corank.com/

தங்கள் வருகை இனிதாகுக

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]