வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Monday, May 30, 2011

தாகூருக்கு விழா எடுத்தால் மட்டும் போதுமா?


இரவீந்திரநாத் தாகூர் அவர்களின் 150 ஆம் ஆண்டு விழா இந்திய அரசின் சார்பில் கொண்டாடப்படுகிறது.

அவர் எழுதிய கீதாஞ்சலிக்கு நோபெல் பரிசு கிடைக்கப் பெற்றது. அது போலவே அவர் தீட்டிய ஜனகணமன அதி நாயக ஜயகே என்ற பாடல் இந்தியத் துணைக் கண்டத்தின் தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியத் தாயே! மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற நீயே, எங் களுடைய மனத்திலும் ஆட்சி செய் கிறாய். நின் திருப்பெயர் பஞ்சாபையும், சிந்துவையும், கூர்ச்சரத்தையும், மராட் டியத்தையும், திராவிடத்தையும், ஒரிசாவையும், வங்காளத்தையும் உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது.

நின் திருப்பெயர் விந்திய, இமயமலைத் தொடர்களில் எதிரொலிக்கிறது. யமுனை, கங்கை ஆறுகளின் இன்னொலியில் ஒன்றுகிறது. இந்தியக் கடல் அலைகளால் வணங்கப்படுகிறது.

அவை நின்னருளை வேண்டுகின்றன. நின்புகழைப் பாராட்டுகின்றன.

இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே, உனக்கு வெற்றி!, வெற்றி!!, வெற்றி!!!

என்பதுதான் தாகூர் எழுதிய தேசிய கீதத்தின் திரண்ட பொருளாக்கமாகும்.

இந்தியாவில் இருக்கக்கூடிய பல மொழி, பல இனம், பண்பாடுகளையும், இயற்கை நதிகளையும் உயிரோட்டமாகப் படம் எடுத்துக் காட்டுகிறார். வேற்றுமை யில் இந்திய மக்கள் ஒற்றுமையாக கை கோத்து நிற்கும் நிலைமை அவர் கண் ணோட்டத்தில் தேசிய கீதத்தில் தேன் சொட்டச் சொட்டப் பாடியிருக்கிறார் தாகூர்.

தாகூரின் இந்தப் பாடலுக்குப் பதிலாக வங்க நாவலாசிரியர் பங்கிம் சந்திர சட்டர்ஜி அவர்களால் எழுதப்பட்ட ஆனந்தமடம் நாவலில் இடம் பெற்ற வந்தேமாதரம் என்ற பாடலை தேசிய கீதமாகக் கொண்டு வரப் பெருமுயற்சி நடந்ததுண்டு.

1937இல் சென்னை மாகாணத்தில் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) அவர்கள் பிரதமாக இருந்த போது வந்தேமாதரம் பாடலை தேசிய கீதமாகக் கொண்டு வர முயற்சிக்கப் பட்டது. அப்பொழுது சட்டப் பேரவையில் சபாநாயகராக இருந்தவர் புலுசு சாம்பமூர்த்தி என்ற ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்.

சட்டை அணியாத திருமேனி அவர்; இடுப்பில் ஒரு வேட்டி, தோளில் ஓர் அங்கவஸ்திரம் அவ்வளவுதான்.

சட்டமன்றம் தொடங்கப்படும்பொழுது வந்தேமாதரம் பாடல் முழங்க அனுமதித்தார்.

இந்து மதக் கடவுள்களைப் புகழ்ந்து பாடும் இப்பாடலுக்கு முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். வந்தே மாதரம் பாடலில் இந்து மதக் கடவுள்களான முப் பெரும் தேவியர்களான பார்வதி, இலட்சுமி, சரசுவதி ஆகியோர் துதிக்கப்படுகின்றனர்.

உருவ வழிபாடுகளை ஏற்றுக் கொள்ளாத முசுலிம்களால் இது எப்படி ஏற்றுக் கொள்ளப்பட முடியும்? பகுத்தறி வாளர்கள்தான் எப்படி ஆதரிக்க முடியும்? பிரதமர் ராஜாஜி அவருக்கே உரித்தான தந்திரப்படி மூக்கை உள்ளே நுழைத்தார்.

அவை தொடங்கும் காலை 11 மணிக்கு முன் இந்தப் பாடலைப் பாடி முடித்துவிடுவது; விரும்புகிறவர்கள். இந்தப் பாடல் நிகழ்ச்சியின் போது அவையில் இருக்கலாம். விரும்பாதவர்கள், இந்தப் பாடல் ஒலிபரப்பியதற்குப் பின் அவைக்கு வரலாம் என்று பாம்பும் நோகாமல், பாம்படித்த கொம்பும் நோகா மல் இருக்கும் வகையில் வெள்ளரிப் பழத் துக்குப் பூணூல் போட்டுக் கொடுத்தார்.

விவரம் அறிந்த சிறுபான்மை மக்களான முசுலிம்கள் அறவே கூடாது _ இந்தத் தெருப் புழுதிப் பாடல் என்று எதிர்க் குரல் கொடுத்தனர்.

பார்ப்பான்தான் கெஞ்சினால் மிஞ்ச வான்; மிஞ்சினால் கெஞ்சுவான் என்பது தான் உலகறிந்த உதாரணக் கருத்தா யிற்றே!

கடைசிக் கடைசியாக வந்தேமாதரம் (வந்து ஏமாத்துறோம் - என்று கூடப் பொருள் கொள்ளலாம்) பாடல் ஊற்றி மூடப்பட்டது. தாகூரின் ஜனகணமன பாடல் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப் பட்டு இன்று வரை நடைமுறையில் இருந்து வருகிறது.

பாரதீய ஜனதா ஆட்சி மத்தியில் வந்தது. அப்பொழுது என்ன செய் தார்கள்? சரஸ்வந்தனா என்ற பச்சையான இந்து மதக் கடவுளை முன்னிறுத்தி ஒரு பாடலை அறிமுகப்படுத்தத் துடியாய்த் துடித்தனர்.

1998 அக்டோபர் 22,23 ஆகிய இரு நாள்களில் புது டில்லியில் மாநிலக் கல்வி அமைச்சர்களின் மாநாட்டில் இந்த சரஸ் வதி வந்தனா அறிமுகப்படுத்தப்பட்டது.

பா.ஜ.க. அல்லாத மாநிலக் கல்வி அமைச்சர்கள் பல்லில் எல்லாம் நஞ்சை வைத்துப் பாடும் பாரதீய ஜனதாவின் இந்தச் சதிக் கூட்டை சுக்கல் நூறாக உடைத்தெறிந்து விட்டனர்.

தமிழ்நாட்டின் சார்பில் கல்வி அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் பங்கேற்று பா.ஜ.க. வின் சதியைக் கிழித்தெறிந்தார்.

சரஸ்வதி வந்தனா பாடலை முன்னிறுத்தியதன் பின்னணியில் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி இருந்தார். ஒன்றும் தெரியாததுபோல வாஜ்பேயியும் பதுங்கிக் கிடந்தார். இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது தாகூரின் பெருந் தன்மையையும், பொது நிலையையும் பாராட்டாமல் இருக்க முடியாது.

இந்தத் தகவல்களையெல்லாம் சலித்துப் பார்த்தால்தான் தாகூரின் அருமை புரியும். மாஸ்கோவில் பணியாற்றிய பேராசிரியர் பிரிட்டோ என்பவர் கவிஞர் தாகூருக்குக் கடிதம் ஒன்றை எழுதினார் (1929).

ருசியாவில் கைத் தொழில், விவசாயம், விஞ்ஞான ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள், பாடசாலைகள், கலை வளர்ச்சி இவை உயர்ந்த நிலையை அடைந்ததற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? அடுத்த அய்ந்து வருடங்களுக்கான உங்கள் நாட்டின் திட்டங்கள் என்ன? அந்த அவற்றுக்குத் தடை உண்டா? என்று கூறி மடலில் கேட்கப்பட்டு இருந் தது. இரவீந்திரநாத் தாகூர் அவர்கள் அதற்குப் பதிலும் அனுப்பினார்.

உங்கள் (ருசிய) நாட்டின் வெற்றிக்குக் காரணம் தனிப்பட்ட நபர்களிடம் இருந்த செல்வம், மானிட சமூகத்தினிடம் வந்து சேர்ந்ததேயாகும்.

நாங்கள் கீழ் நிலையில் இருப்பதற்கு, எங்களுக்குச் சமூகத் துறையிலும், அரசியல் துறையிலும் ஏற்பட்டுள்ள பயித்தியக்காரத் தன்மைகளும், வெறிப் பிடித்த தன்மைகளும் கல்வியில் முன் னேற்றம் அடையாததுதான் காரணம் (குடிஅரசு 29_11_-1931) என்று பதில் எழுதினார்.

தாகூர் வெறும் கவிஞர் மட்டுமல்ல. ஆழ்ந்த சமூகப் பார்வை அவரிடம் கோலோச்சிக் கொண்டிருந்தது என்பதை இதன் மூலம் அறிய முடியுமே!

பிறப்பின் அடிப்படையில் பேதம், முன்னேற வேண்டுமே என்கிற துடிப்பை - முன்ஜென்மப் பலன் என்ற கயிற்றைக் கழுத்தில் மாட்டிக் கீழே தள்ளும் சுரண் டல் முறை; எல்லாம் கடவுள் செயல் என்ற கவட்டிக்குள் தலையைச் செருகிக் கொள்ளும் பேதைமை; - சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுக்கவே கொடுக்காதே என்பதில் மிகக் கவனமாக இருந்த மனுதர்மச் சட்டத்தின் சூழ்ச்சி; - பெண்கள் என்றால் யோனியில் பிறந்தவர்கள் என்று ஏளனம் செய்யும் இழிநிலை; - இவற்றின் ஒட்டு மொத்தத்தின் கூட்டுத் தொகை, பெருக்கல் தொகையைத்தான் சுத்த பயித்தியக்காரத் தனம் என்ற சுள்ளென்று உறைக்கும் வார்த்தைப் பிரயோகத்தைப் பயன்படுத்தி யுள்ளார் தாகூர்.

இந்தியாவின் பின்னடைவுத் தன்மைக்கு என்ன காரணம் என்பது குறித்து அய்.நா. 2004 இல் ஒரு தகவலை வெளியிட்டது.

வேற்றுமை மலிந்த இன்றைய உலகில் கலாச்சாரச் சுதந்திரம் என்ற தலைப்பில் இந்த அறிக்கை வெளியானது. இந்திய அரசின் செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்த ஜெய்ப்பால் ரெட்டி அவர்கள் அதனை தலைநகரான புதுடில்லியிலேயே வெளியிட்டார்.

அந்த அறிக்கை என்ன கூறுகிறது?

உலகத் தரவரிசைப் பட்டியலில் இந்தியா 127 ஆவது இடத்தில் இருப்ப தற்கான காரணங்கள் என்ன?

இந்தியாவில் ஆரவாரத்துடன் செயல்படும் இந்துமத அமைப்புகள்தான் அமைதி, வளர்ச்சி, தனிமனித சுதந்திரம் ஆகியவற்றிற்கு அச்சுறுத்தலாக இந்திய மக்களிடையே அவநம்பிக்கையும், வெறுப்பும் வளர்ந்து கொண்டிருக்கின்றன.

பல்லாயிரம் பேரைக் கொன்று விட்டு, அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த மேலும் பல்லாயிரம் பேரை, தங்கள் வீடுகளைஅப்படியே விட்டு விட்டு, பிழைத்தால் போதும் என்று புலம் பெயர வைத்த கொடுமை குஜராத்தில் நடந்தது. இத்தனையையும் செய்துவிட்டு தங்களைக் கலாச்சார இணக்கத்துக்கான தூதுவர்கள் என்று அவர்களே பாராட்டிக் கொள் கிறார்கள் என்கிறது அய்.நா. அறிக்கை.

150 ஆண்டுகளுக்கு முந்தைய தாகூரின் கணிப்புக்கு அய்.நா.வின் இந்த அறிக்கை கட்டியம் கூறவில்லையா?

தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைக்கும், முடிவுகளுக்கும் இவை ஆதாரச் சுருதிகளாய் இருக்கவில்லையா?

தாகூருக்கு விழா எடுத்தால் மட்டும் போதாது; -இந்திய சமூகத்தின் ஆணி வேர்களைக் கவ்விப் பிடித்திருக்கும் தாகூர் சொன்ன -_ கணித்த - அந்தப் பயித்தியக்காரத் தன்மைகளை அறுவை சிகிச்சை மூலம் வெட்டி தூக்கி எறியும் துணிவு உண்டா என்பதுதான் இன்றைய கேள்வி! 

-------- விடுதலை ஞாயிறு மலர், 28-05-2011


No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]