வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Tuesday, May 17, 2011

இக்காலத்திலும் மனுதர்மத்தை பற்றி பேசும் துக்ளக் சோ ராமசாமி

கரூர் மாநகரில் மனுதர்ம எரிப்புப் போராட்ட விளக்க மாநாடு திருச்சி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில்  வழக்குரைஞர் வீர.கே. சின்னப்பன் நினைவுப் பந்தலில் நடை பெற்றது. பாவலரேறு பெருஞ் சித்திரனார் தலைமை வகித்தார்.

மனுதர்ம சாத்திர எரிப்புப் போராட்டம் அப்பொழுது அறிவிக்கப்பட்டது.

ஜாதி ஒழிப்பிலும், சம வாய்ப்புச் சமூகத்தை உருவாக்கு வதிலும் ஆழ்ந்த நம்பிக்கை யுள்ள திராவிடர் கழகமானது தனது எதிர்ப்பையும், வெறுப் பையும் காட்டும் அறிகுறியாக மே 17ஆம் தேதியன்று (1981) நாடெங்கும் மனுதர்மத்தின் முக்கிய சுலோகங்களை உள்ள டக்கிய அச்சுத்தாளை திறந்த வெளியில் கொளுத்தி, நமது ஜாதி ஒழிப்பு உணர்வைப் பகிரங்கமாக வெளிப்படுத்துவது என்று அறிவிக்கப்பட்டது. தடை விதிக்கப்பட்டால் தடையை மீறிக் கொளுத்துவது என்றும் அறிவிக்கப்பட்டது.

அம்மாநாட்டில் மராட்டிய மாநில தாழ்த்தப்பட்டோர் விடு தலை இயக்கத் தலைவர் தலித் பந்தர் தலைவர் அருண்காம்ப்ளே கலந்து கொண்டு சங்கநாதம் செய்தார்.

தமிழ்நாடெங்கும் பெண் களே தலைமை வகித்துப் பல்லாயிரக்கணக்கானோர் மனுதர்ம எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானர்கள். சென் னையில் கழகப் பொதுச் செய லாளர் கி. வீரமணி அவர்கள் கைது செய்யப்பட்டார்.

மனுதர்ம எதிர்ப்புப் போராட் டத்தினை  வெறும் தடை மூலம் தடுத்து நிறுத்தலாம் என்று மனப்பால் குடித்த அன்றைய எம்.ஜி.ஆர். அரசு அதில் தோல்வி கண்டது.

ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று உண்மையிலே விரும்பும் எவரும் - அதற்கு மூல ஊற்றாக இருக்கக் கூடிய இந்துமத ஸ்மிருதிகளை, இராமாயணம் போன்ற இதிகாசங்களைக் கொளுத்தத்தானே வேண்டும்?

மனுவாதி ஒரு குலத்துக் கொரு நீதி என்று மனோன் மணீயம் சுந்தரனார் மிக அழகாகவே பாடினார்.

இன்றைக்கு யார் மனு தர்மத்தைத் தூக்கிப் பிடிக்கிறார் கள் - இதற்கான எதிர்ப் போராட்டம் எல்லாம் தேவையா என்று நுனிப்புல் மேயும் மனப்பான்மையில் போகிற போக்கில் கேட்போர் உண்டு.

பூனாவில் நடைபெற்ற (1981 டிசம்பர்) ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்பில் மனுதர்ம சாஸ்திர நூலை அலங்கரித்து எடுத்துச் சென்றார்களே!
இப்பொழுதுகூட திருவாளர் சோ ராமசாமி துக்ளக் இதழில் மனு தர்மத்தைத் தூக்கிப் பிடித்துத் தத்துவார்த்த முலாம் பூசிக் கொண்டு திரிகிறாரே!

பல்லாயிரம் வருடங் களுக்கு முன்பாக ஆழ்ந்த சிந்தனை (மனுதர்மம்) இங்கே இருந்திருக்கிறது என்பதைக் கண்டு மேல் நாட்டு அறிஞர்கள் கூட வியந்து பார்க்கின்றனர். நாம்தான், மனு ஸ்மிருதியை இகழ்ந்து பேசுவது பெருமை என்று நினைக்கிறோம் (துக்ளக் 24.11.2010) என்று இந்த கால கட்டத்திலும் துணிச்சலாக எழுதுகிறார் என்றால், அந்தத் தன்மையை நினைத்துப் பார்க்க வேண்டும்.

சூத்திரன் ஏழு வகைப் படுவான் என்றும், அதில் ஒன்று விபசாரி மகன் என்றும் (மனு தர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415) எழுதி வைத்திருக்கும் மனுதர்மம் மிக உயர்ந்தது என்றும் மேல்நாட்டவர்களும் பாராட்டுகிறார்கள் என்றும் ஒரு பார்ப்பனனால் இன்றைக்குக்கூட எழுத முடிகிறது என்றால் இதன் பொருள் என்ன?

நம்மைத் தேவடியாள் மகன் என்று சொல்வதிலே பெருமைப் படக் கூடிய ஆணவக்காரர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்று தானே கொள்ள வேண்டும்?

சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி! என்னும் முழக்கம் இந்தக் கால கட்டத்திலும் தேவைப்படுகிறது அல்லவா!

- மயிலாடன், விடுதலை (17-05-2011)


1 comment:

செந்திலான் said...

May be are you referring this?

415. There are slaves of seven kinds, (viz.) he who is made a captive under a standard, he who serves for his daily food, he who is born in the house, he who is bought and he who is given, he who is inherited from ancestors, and he who is enslaved by way of punishment.

he who is born in the house ??

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]